மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06)
மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06) September 01, 2022 உண்மைகளும், வரலாற்று சான்றுகளும் மகாவம்சம் என்பது, இலங்கையில், தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலமான கி.மு 247-207 இல் பௌத்தம் அறிமுகமாகி, அதன் பின் அது நிலைபெற்ற பின்னர், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட மகாவிகாரையில், பௌத்தத்துடன் வருகை தந்த வட இந்திய மொழியான பாளி (பிராகிருதம்) மொழியில் செய்யுள் வடிவில், கி.மு 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், கி.பி 361ம் ஆண்டு மகாசேனன் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளை காலவரிசையுடனும் மற்றும் பௌத்தம் இந்தியாவில் தோன்றி பரவிய வரலாற்றையும், அது இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டு நிலைபெற்ற வரலாற்றையும், கூடவே புத்தரையும், பௌத்த மதத்தையும், பௌத்தம் தோன்றி வளர்ந்த வட இந்தியாவுடன் இலங்கையை தொடர்புபடுத்தியும், எழுதப்பட்ட நூலாகும். அன்று மக்களிடையே பரவிய அல்லது பரப்பப்பட்ட செவிவழி கதைகளையும், மற்றும் 4ஆம் நூறாண்டில் எழுதப்பட்ட தீபவம்சத்தையும் அடியாகக் கொண்டும் 5ம், நூற்றாண்டில், மகாநாம தேரோ எனும் பௌத்த பிக்குவால் இது எழுதப்பட்டது. பொதுவாக வரலாற்று நூலைப் படிக்கு முன் வரலாற்று ஆசிரியனைப் படி என்பது வரலாற்று மாணவர்களின் அடிச்சுவடி ஆகும். அதாவது இன, மத, மொழி, கலாசார, பண்பாட்டு இயல்புகளுக்குள் அல்லது வெறிக்குள் தொலைந்து போயிருக்கும் மனிதனிடமிருந்து உண்மை வரலாற்றை பிரித்துப் பார் என்பது அதன் பொருள் எனலாம். எனவே மகாவம்சத்தை வாசிக்கும் பொழுது இதையும் மனதில் கொள்ள வேண்டும் என்பதுடன், அது எழுதப் பட்ட சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள். மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை [‘Theravatha Buddhism’] […]