மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06)



மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06)

September 01, 2022

உண்மைகளும், வரலாற்று சான்றுகளும் 

மகாவம்சம் என்பது, இலங்கையில், தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலமான கி.மு 247-207  இல் பௌத்தம்  அறிமுகமாகி,  அதன் பின் அது  நிலைபெற்ற பின்னர், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட மகாவிகாரையில், பௌத்தத்துடன் வருகை தந்த வட இந்திய மொழியான பாளி (பிராகிருதம்) மொழியில் செய்யுள் வடிவில், கி.மு 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், கி.பி 361ம் ஆண்டு மகாசேனன் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளை காலவரிசையுடனும் மற்றும் பௌத்தம் இந்தியாவில் தோன்றி பரவிய வரலாற்றையும், அது இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டு நிலைபெற்ற வரலாற்றையும், கூடவே புத்தரையும், பௌத்த மதத்தையும், பௌத்தம் தோன்றி வளர்ந்த வட இந்தியாவுடன் இலங்கையை தொடர்புபடுத்தியும்,  எழுதப்பட்ட நூலாகும். அன்று மக்களிடையே பரவிய அல்லது பரப்பப்பட்ட செவிவழி  கதைகளையும், மற்றும் 4ஆம் நூறாண்டில் எழுதப்பட்ட  தீபவம்சத்தையும் அடியாகக் கொண்டும் 5ம், நூற்றாண்டில், மகாநாம தேரோ எனும் பௌத்த பிக்குவால் இது எழுதப்பட்டது.

பொதுவாக வரலாற்று நூலைப் படிக்கு முன் வரலாற்று ஆசிரியனைப் படி என்பது வரலாற்று மாணவர்களின் அடிச்சுவடி ஆகும். அதாவது இன, மத, மொழி, கலாசார, பண்பாட்டு இயல்புகளுக்குள் அல்லது வெறிக்குள் தொலைந்து போயிருக்கும் மனிதனிடமிருந்து உண்மை வரலாற்றை பிரித்துப் பார் என்பது அதன் பொருள் எனலாம். எனவே மகாவம்சத்தை வாசிக்கும் பொழுது இதையும் மனதில் கொள்ள வேண்டும் என்பதுடன், அது எழுதப் பட்ட சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள். 

மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை [‘Theravatha Buddhism’]  முற்று  முழுதாக  ஆதரிக்கும் ஒரு நூல். எனவே அது கட்டாயம் மகாயான பௌத்தத்தில் [‘Mahayana Buddhism’] இருந்து வேறுபட்டது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி முதல், பல்லவர் ஆட்சி ஏற்பட்ட காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரையிலான காலகட்டத்தில், சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கால் தமிழகத்தின் நிலைமை மெல்ல மெல்ல மாறுபட்டு, அங்கு மகாயான பௌத்தம் தலை தூக்க தொடங்கியது. என்றாலும் இந்து சமயமும் [சைவ சமயமும்] அங்கு இன்னும் வழமையில் இருந்து, இச் சமயங்களுடன் முட்டி மோதிக் கொண்டு இருந்த காலம் அது. எனவே 6ஆம் நூறாண்டில் [தேரவாத] மகாவம்சம் எழுதும் பொழுது தமிழர்கள் அவருக்கு ஒரு சவாலாகவே இருந்துள்ளார்கள் [In that period even tamils following Mahayana Buddism and Hindusiam which was big challenging Theravatha].

இதுவும் தமிழர்களை ஒரு அந்நியராக கருத நூல் ஆசிரியருக்கு ஒரு காரணமாக அன்று அமைந்து இருக்கலாம்? புத்தர் மரணித்து ஆயிரம் ஆண்டுகளின் பின் மகாவிகாரை துறவி, மகாநாம தேரர், தன்னை புத்தரின் தூதுவராக முன்னிலைப்படுத்தி, மகாவம்ச காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இந்த தொகுப்பு ” பௌத்தர்களது [பௌத்த பக்தர்களது] மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக தொகுக்கப்பட்டது” [“serene joy of the pious”], என்ற அறைகூவலை திருப்ப  திருப்ப பதித்து எழுதுகிறார்.

எது எப்படி இருப்பினும், இன்று கல்வெட்டுக்கள் உண்மையை எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக, இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்ட கிருஸ்துக்கு முற்பட்ட  கல்வெட்டுகளில், 50 மேற்படட இடத்தில் முக்கிய இடத்தை வகுத்த சொல் ‘பருமக’ [parumaka] ஆகும். இது தென் இந்தியாவில் காணப்பட்ட, தமிழ் சொல் பருமகன் அல்லது  பெருமகன் [perumakan] உடன் ஒன்றிப் போவதாக, ராசநாயகம், சி. பத்மநாதன், ப. புஸ்பரத்தினம் போன்ற அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். இதற்கு ராசநாயகம் , தலைவன், கோமான், மன்னன் [chief, lord, and king]  மற்றும்  பரணவிதான  [Paranavitana] இதற்கு அதே பொருள் பட, ஆனால் பொதுப் படையாக இல்லாமல், இந்தோ ஆரியன் தலைவர்கள் [Indo-Aryan chieftains]  என விளக்கி உள்ளார். ஆனால் கிருஸ்துக்கு பின் இந்த பெயர் மாற்றப் பட்டு அது மாபருமக [maparumaka / பெரும் பெருமகன்] என பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. அப்படியான கல்வெட்டு ஒன்று மட்டக்களப்பு, வெல்லாவெளி – தளவாய் என்ற இடத்தில் [Vellaveli Brahmi Inscription / The initial finding says that it is dated to approximately 2200 years] கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த பிராமிச் சாசனம் ‘பருமக நாவிக ஷமதய லெணே’ என்பதாகும். இதை ‘பருமக’ [பெருமகன்] என்ற பட்டத்திற்குரிய கப்பல் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை என பொருள் படுத்தப் படுகிறது. எனவே இந்த இடத்தில் கிருஸ்த்துக்கு முன், தமிழ் மொழியையும்  அல்லது வேறு மொழியையும் [பரணவிதான கூறியது போல் இந்தோ ஆரியன்] பேசியோர் வாழ்ந்து உள்ளனர் என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. எனவே விஜயன் வரும் பொழுது அவனுக்கும் அவன் தோழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பூர்வீக குடிமக்களில் இவர்களும் ஒருவராகும், எனவே இவர்களை நீங்கள் ஒதுக்க முடியாது, இவர்களும் இம் மண்ணின் மைந்தர்களே !! 

மகாவம்சத்தில் புதைந்துள்ள…..[/பகுதி 07]

Thursday, September 01, 2022nonfNo comments

 உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்.

இரண்டு நாக இளவரசர்களும் இடையில் [மாமா மருமகனுக்கு இடையில்] அரியணைக்காக நடக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர, புத்தரின் இரண்டாவது இலங்கை வருகை நடைபெற்றதாக மகாவம்சம் கூறுகிறது. அப்பொழுது அவரே அந்த அரியணையை பெற்றார் என்கிறது. இது அவரது குணாதிசயத்தின் மீதான அவமதிப்பு போல் தெரிகிறது [It is sacrilege on his character], ஏனென்றால், அவர் தனது உரிமையான அரியணையையே  துறந்தவர், அது மட்டும் அல்ல,  பிம்பிசாரன் [a contemporary king, Bimbisara] அரியணை கொடுத்த பொழுதும் ஏற்காதவர் என்பதால். இரு தரம் அரியணையை துறந்தவர், எப்படி இதற்கு உரிமைகோருவார்?. இதே நிகழ்வு, மகாவம்சத்துக்கு முந்திய  பண்டைய தமிழ் காப்பியம் மணிமேகலையிலும் வருகிறது. ஆனால் அது அரியணைக்கு அல்ல, புத்தர் போதிக்கும் பொழுது வழமையாக அமரும் இருக்கைக்கே [not for a throne but for a seat on which the Buddha used to sit and preach] என்பது குறிப்பிடத் தக்கது. மற்றும் ஒன்றையும் நான் குறிப்பிடவேண்டும். புத்தர் இலங்கைக்கு 500 பிக்குகளுடன், நாக அரசனின் [Naga (Serpent) king at Kalyani] அழைப்பை ஏற்று, தனது மூன்றாவது வருகையில், காற்றில் பறந்து வந்தார் என்று கூறுகிறது. எப்படி ஒரு நாக அரசன், 2500 ஆண்டுகளுக்கு முன்பு, 1500 மைலுக்கும் அப்பால் இருக்கும் புத்தருக்கு அழைப்பு விட்டார் என்பது, யாருக்காவது தெரியுமாயின் எனக்கும் சொல்லவும்? மேலும் இந்த பெரும் தூரத்தை 501 பேர், புத்தரையும் சேர்த்து, காற்றில் பறந்து இருந்தால், கட்டாயம் அது ஒரு கண்கவர் கட்சியாக இந்தியாவில் இருக்கும் பலருக்கு இருந்து இருக்கும். ஆனால், எந்த வரலாற்று குறிப்புகளிலோ, அது இந்தியர்களால் பதியப்படவில்லை. ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இராமாயண காப்பியத்தில், அனுமான் இலங்கைக்கு பறந்து சென்றதாக குறிக்கப்பட்டுள்ளது.

சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை பரப்பி தம் கட்டுப் பாட்டில் வைத்திருந்த, வைத்துக் கொண்டிருக்கிற தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் மிக தெளிவாக சொல்கிறார்: ‘கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும் பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்’ என்று அவர் போதித்ததுடன், மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் என்ன நடக்கிறது? காரணம் அந்த புத்தரின் புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப்  பிடிக்காததும் ஆகும். அப்படியான நடவடிக்கைகளுக்கு சார்பான, சாதகமான வழி அமைத்து கொடுத்ததில் பெரும் பங்கு மகாவம்சத்திற்கு உண்டு என்பது அதன் வடிவமைப்பிலும் கதை ஓட்டத்தில் இருந்தும் வெளிப்படும் உண்மையாகும்.  

[1] வாழ்க்கை துன்பமயமானது,

[2] அடக்க முடியாத ஆசையால் துக்கம் ஏற்படுகிறது,

[3] துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை அடையலாம், அதாவது, நாம் தேவையற்ற பேராசையை ஒழிக்கக் கற்றுக் கொண்டு, அமைதியற்ற தேவைகளை ஒழித்து அனுபவத்தால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பிரச்சனைகளை, அச்சமின்றிப் பொறுமையுடன், வெறுப் பின்றிக் கோபமின்றிப் பொறுத்துக் கொள்வோமானால், நாம் சுதந்திர மாகவும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அப்போது தான் நாம் உண்மையிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். என்றும் இதுவே நிர்வாண நிலை என்றும், உள்ளத்தால் ஏற்படும் துன்பங்களிலிருந்து எனவே நாம் இங்கு உண்மையில் விடுதலை பெறுகிறோம் என்றும்.

[4] நற் கருத்து, நல் நோக்கம், நற் பேச்சு, நன்னடத்தை, நல் தொழில் வகித்தல், நன் முயற்சி, நன் மனக் கவனம், நன் மன ஒருமைப்பாடு ஆகியன, துக்க நிவாரணத்திற்கான பாதையைக் காட்டும் எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை ஆகும்,

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-7216196109479802&output=html&h=280&adk=2056343490&adf=3518248396&pi=t.aa~a.2240134015~i.23~rp.4&w=646&fwrn=4&fwrnh=100&lmt=1673333621&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=7726557540&ad_type=text_image&format=646×280&url=http%3A%2F%2Fwww.ttamil.com%2F2022%2F08%2F07_01301753240.html&host=ca-host-pub-1556223355139109&fwr=0&pra=3&rh=162&rw=646&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&dt=1673375636061&bpp=2&bdt=463&idt=2&shv=r20230109&mjsv=m202212050104&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D6da5e43092020cd7-22b0d05e4eda00a4%3AT%3D1673067392%3ART%3D1673067392%3AS%3DALNI_MbYRoPpmM-Y9gM6BHgB3RQ5QX9HgA&gpic=UID%3D000008f6b8d54e65%3AT%3D1673067392%3ART%3D1673374700%3AS%3DALNI_MbNBKZ4ZROjsZl4JfCwNBKWY1QvNg&prev_fmts=0x0%2C321x250%2C321x250&nras=4&correlator=2953476609200&frm=20&pv=1&ga_vid=1501926388.1673375636&ga_sid=1673375636&ga_hid=1244790120&ga_fc=0&u_tz=-300&u_his=26&u_h=735&u_w=1307&u_ah=680&u_aw=1307&u_cd=24&u_sd=1.47&adx=159&ady=2521&biw=1291&bih=577&scr_x=0&scr_y=218&eid=44759876%2C44759927%2C44759837%2C31071364%2C31071387%2C44779793&oid=2&pvsid=464571662029204&tmod=226930635&uas=3&nvt=1&ref=http%3A%2F%2Fwww.ttamil.com%2F2022%2F09%2F08.html&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1307%2C0%2C1307%2C680%2C1307%2C577&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=23&ifi=2&uci=a!2&btvi=3&fsb=1&xpc=cfSWmL78Xv&p=http%3A//www.ttamil.com&dtd=36967

 என்றும் புத்தர் நான்கு பேருண்மைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். எனவே நாம் நற் கருத்து, நல் நோக்கம், நற் பேச்சு, நன்னடத்தை, நன் முயற்சிகள் எப்படி மகாவம்சத்தில் அடங்கி இருக்கின்றன என மேலும் விரிவாக, எம் அறிவிற்குள் எட்டிய வாறு, நடுநிலையாக, பக்கம் சாராமல், அலச உள்ளோம், குறைகள், பிழைகள் இருப்பின் சுட்டிக் கட்டவும். திறந்த மனத்தோடு வரவேற்கிறோம்.

உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால்  முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. இதையே திருவள்ளுவரும் குறள் 299 இல், “எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு” என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் மகாவம்சத்தின் “சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது  மனிதனின் முழு கடமை”  [“To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man.”] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் தொடர்கிறது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

——————————————————————————————————————–

மகாவம்சத்தில் புதைந்துள்ள…. (பகுதி 08)

Friday, September 02, 2022 nonf No comments

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

மேலும் சிகரம் வைத்தால் போல, துட்டகாமணி பற்றி எழுதும் பொழுது, இருபத்தி இரண்டாவது அத்தியாயம் காமனி ஜனனம் என்ற பகுதியில், [CHAPTEE XXII / THE BIRTH OF PRINCE GAMANI] துட்டகாமணியின் தாய், எல்லாளனுடைய வீரர்களில், முதல் வீரனுடைய கழுத்தை வெட்டிய கத்தியைக் கழுவ உதவிய நீரைக் குடிக்க வேண்டும் என்றும், அதுவும் வெட்டுண்ட தலையை மிதித்துக் கொண்டே, அதைக் குடிக்க வேண்டும் என்று  விரும்பினாள் என்றும்’ [and then she longed to drink the water that had served to cleanse the sword with which the head of the first warrior among king Elara’s warriors had been struck off, and she longed to drink it standing on this very head] ராணியின் மகன் தமிழர்களை அழித்து ஒன்று பட்ட அரசாட்சி அமைத்ததும் தர்மம் செழிக்கச் செய்வான்’ என்று குறி சொல்வோர் கூறினர் என்றும் [the king asked the soothsayers. When the soothsayers heard it they said : ‘The queen’s son, when he has vanquished the Damilas and built up a united kingdom, will make the doctrine to shine forth rightly’] பெருமையுடன் கூறுகிறார்? பின் சில காலங்களின் பின், தன் மகன் இருவரையும் ஒரு முறை சோதித்து பார்க்க விரும்பி, தாய் “நாங்கள் தமிழர்களோடு எக்காலத்திலும் போரிட மாட்டோம் என்ற எண்ணத்தோடு இந்த உணவைச் சாப்பிடுங்கள்” எனக் கூறி சாப்பாட்டை வழங்கிய பொழுது, தீசன் உணவைத் தன் கையினால் தட்டி விட்டான். காமனி அதை எடுத்துத் தூர எறிந்தான். பிறகு காமனி படுக்கையிற் சென்று உடலை முடக்கிக் கொண்டு படுத்தான். ராணி அங்கு வந்து காமனியைத் தேற்றினாள்.

மகனே! கைகால்களை நன்றாக விரித்துக் கொண்டு தாராளமாகப் படுப்பதற்கென்ன?’ என்று அவள் கேட்டாள். அதற்கு ‘கங்கைக்கு [மகாவலிக்கு] அப்பால் தமிழர்கள் இருக்கிறார்கள், இந்தப் பக்கம் கோத [பொல்லாத அல்லது சினம் கொண்ட அல்லது கட்டுக்கடங்காத] சமுத்திரம் இருக்கிறது. எப்படி கைகால்களை நான் நீட்டி உறங்கமுடியும்?’ என்றான் துட்டகாமினி [But when it was said to them :  Never will we fight with the Damilas ; with such thoughts eat ye this portion here, Tissa dashed the food away with his hand, but Gamani who had (in like manner) flung away the morsel of rice, went to his bed, and drawing in his hands and feet he lay upon his bed. The queen came, and caressing Gamani spoke thus: ‘ Why dost thou not lie easily upon thy bed with limbs stretched out, my son?’ ‘Over there beyond the Ganga are the Damilas,  here on this side is the Gotha-ocean, how can I lie with out- stretched limbs ?’ he answered].

இவைகள் புத்த சமயத்தை முன்னிலைப் படுத்தும் மகாவம்சத்தில் எழுதிய வசனம். நல்ல காலம் புத்தர் இதை படிக்கவில்லை? மேலும் மகாவலிக்கு வடக்கே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை  மெய்ப்பிப்பது போல, பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான “இலங்கைத் தமிழர் வரலாறு – கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300” என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் XIV), “இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கி விட்டனர் என்றும் சொல்லக் கூடிய காலம் வந்துள்ளது என்கிறார்.

மகாவம்சமே மேலும் இருபத்தைந்தாவது அத்தியாயம் துட்டகாமனியின் வெற்றி [CHAPTER XXV / THE VICTORY OF DUTTHAGAMANI] என்ற பகுதியில் ‘வணக்கத்துக்கு உரியவர்களே ! என்னால் அல்லவோ  இலட்சக்கணக்கானவர்கள் மடியும்படி நேரிட்டது‘ என காமினி கேட்க, ‘ஒன்றரை மனிதர்கள் மட்டுமே உன்னால் இங்கு கொல்லப்பட்டார்கள்மற்றவர்கள் எல்லாம் நமது மார்க்கத்தை நம்பாதவர்கள். எனவேதீய வாழ்வை மேற்கொண்டவர்கள்– [ஆகவேமிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள்ஆனால்  நீயோ புத்தருடைய போதனைகளுக்குப் பலவிதத்திலும் பெருமை தேடப் போகிறவன்எனவே உன் மனதிலிருந்து கவலையை அகற்று அரசனே !’ என்று போதிசத்துவர்கள் [அருகதர்கள்ஆறுதல் கூறினர் என்கிறது. [king said again to them : since by me was caused the slaughter of a great host numbering millions ? Only one and a half human beings have been slain here by thee, Unbelievers and men of evil life were the rest, not more to be esteemed than beasts. said Arhat. But as for thee, thou wilt bring glory to the doctrine of the Buddha in manifold ways’] என்றாலும் அதே நேரத்தில்தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சிக்காலம் நீதியானதாகவும்சிறப்பானதாகவும் அமைந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றதுஇவன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான்இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள்இவன் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினைதழுவியவன் எனவும் கூறப் பின் நிற்கவில்லைஇதுவேஇந்த சமய வெறியேஇவனையும் இவனின் தமிழ் சைவ போர் வீரர்களையும் கொல்ல தூண்டியது எனலாம் ?. அசோகனின் கொலை வெறியை தணித்த புத்தர் எங்கேமதத்தின் பெயரில் கொலை வெறியை தூண்டிய மகாநாம தேரர் எங்கே ?

துட்ட கைமுனுவின் தாய், களனியை ஆண்ட நாக அரசனின் மகளான விகாரமாதேவி என்பது குறிப்பிடத்தக்கது. இவனின் தந்தை மகாநாகனின் பூட்டனாகும். எனவே உண்மையில் மகாவம்சத்தின் கதைநாயகனான துட்ட கைமுனு (கிமு 101-77) தந்தை வழியிலும் தாய்வழியிலும் நாகர் இனத்தைச் சேர்ந்தவன் ஆவான் என்பதும் குறிப்பிடத் தக்கது. எனவே சுருக்கமாக சொன்னால், எல்லாளனும் இவனும் திராவிட அல்லது தமிழ் அல்லது இவை கலந்த ஒரு மொழியே பேசியுள்ளார்கள். எல்லாளன் வைதீக சமயத்தவன், துட்ட கைமுனு பௌத்த சமயத்தவன், இது ஒன்றே உண்மையில் அடிப்படை வேறுபாடு. உதாரணமாக போதிசத்துவர்கள் [‘போதிநிலையில் வாழ்பவர்’ அல்லது  ‘போதி நிலைபெற ஆயத்தமானவர்’] கூட, எல்லாளனும் அவனது படையினரும் புத்த மார்க்கத்தை நம்பாதவர்கள், எனவே கொலை செய்யலாம் என்கிறார்களே ஒழிய, அவர்கள் தமிழர்கள் எனவே கொலை செய்யலாம் என்று என்றும் கூறவில்லை. அது மட்டும் அல்ல, இந்த வெற்றிகளுக்குப் பின்னர் கைமுனு ‘இராச்சியங்களைப் பிடிக்க அல்ல, நான் போர் தொடுத்தது, புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே’ என்கிறான் என்பது இதை மெய்ப்பிக்கிறது. கைமுனு எல்லாளன் மீது போர்தொடுக்கப் போவதாகக் கூறிய பொழுது அவனது தந்தையான காகவர்ணதீசன் [அல்லது காவன் தீசன்]

மகா கங்கைக்கு அப்பால் உள்ள பெருநிலப் பரப்பை தமிழர்கள் [சைவர்கள்] ஆளட்டும். மகா கங்கைக்கு  இப்பால் உள்ள மாவட்டங்கள் நாங்கள் ஆளுவதற்குப் போதும்” என்கிறான் என்பதும் கவனிக்கத்தக்கது. சுருக்கமாக, துட்ட கைமுனு காலத்தில் சிங்களவர் என்ற இனம் இருக்கவில்லை. சிங்களம் என்ற மொழியும் இருக்கவில்லை. துட்ட கைமுனு சிங்களவனும் அல்ல என்பது கவனிக்கத் தக்கது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்] 

——————————————————————————————————————–

மகாவம்சத்தில் புதைந்துள்ள…..(பகுதி 09)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்
September 09, 2022

தேவநம்பிய தீசன் [Devanampiya Tissa] அரசராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து, பேரரசன் அசோகன் அவருக்கு பரிசுகள் அனுப்பியதுடன், இரண்டாவது முடிசூட்டு விழா நடத்தும் படியும் வேண்டுகிறார். எனவே தேவநம்பிய தீசன் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாவது முடிசூட்டு விழாவை முதலாவது நடந்து ஆறு மாதத்தால் நிறைவேற்றினார். இங்கு தான் நம்பகத்தன்மை இல்லாமல் போகிறது. அந்த காலத்தில் கடல் மார்க்கமான தூர இடத்து நாட்டுக்கு நாடு [அல்லது போக்குவரத்து] வியாபாரம் மிக குறைவு. மேலும் தாம்ரலிப்தா [port Tamralipti] துறை முகத்தில் இருந்து எதாவது ஒரு கப்பல் புறப்படுவதை காண்பதும் இன்னும் ஒரு பிரச்சனை. இது தற்காலத்தைய மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான தம்லக் எனுமிடத்தில் இருந்ததாக நம்பப் படுகிறது. அது மட்டும் அல்ல, அன்றைய காலத்தில் காற்றின் துணையுடன் தான் கப்பல்கள் நகர்ந்தன. எனவே போவதற்கு தென்மேற்கு பருவக்காற்றும், திரும்பி வருதலுக்கு வடகிழக்கு பருவக்காற்றும் தேவை. அது மட்டும் அல்ல, அவர்கள் ஏறத்தாழ 300 மைல்கள், மகத இராச்சியத்தின் தலைநகரம் பாடலிபுத்திரம் [Pataliputra] போக நடக்கவும் வேண்டும். இது ஒரு பக்க தூரமே. எனவே, எல்லா காலநிலையும் சரியாக இருந்தால், ஒரு சுற்று பயணத்தை முடிக்க ஒரு ஆண்டு ஆவது கழியும். அது மட்டும் அல்ல, தேவநம்பிய தீசன் அனுப்பிய பரிசு பொருட்களுடன் வந்த தூதுவர்கள், அங்கே, பாடலிபுத்திரத்தில் ஐந்து மாதம் நின்றதாகவும் குறிக்கப்பட்டுள்ளது. எனவே முதலாவது முடிசூட்டு விழாவின் பின் இலங்கையை விட்டு வந்தவர்கள், ஐந்து மாதம் தங்கிய பின், அசோகனின் செய்தியுடன் எப்படி ஆறு மாதத்துக்குள் திரும்பி போனார்கள் என்பது நம்பமுடியாத கற்பனையே!



பெயர் ‘திஸ்ஸ ‘ [Tissa] ஒரு பொதுவான புத்த நாடுகளில் உள்ள ஒரு சொல்லாகும். ஆனால் அதே பெயர் கொஞ்சம் நீளமாக, உதாரணமாக திசைநாயகம் / திஸ்ஸநாயகம் , திசைவீரசிங்கம் / திஸ்ஸவீரசிங்கம், [Tissanayagam, Tissaveerasingam, and Tissam etc ] போன்ற பெயர்கள் தமிழ் மக்களிடமும் உண்டு. அது மட்டும் அல்ல, இதை ஒப்புவிப்பது போல, 2014 / 2015 ஆண்டு, கீழடி தொல்பொருள் ஆய்வில், பெயர் திஸ்ஸ கண்டுபிடிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த தொல்பொருளின் காலம் ஏறத்தாழ கி மு 300 இல் இருந்து கி மு 400 என கணிக்கப்பட்டும் உள்ளது. தேவநம்பிய தீசனின் காலமும் கி மு 247 இல் இருந்து கி மு 207 என்பதும் குறிப்பிடத் தக்கது. அத்துடன், புத்த மதத்திற்கு மாறமுன், அவன் சிவனை வழிபடுபவனும் ஆவான். மேலும் கீழடி பானை ஓடுகளில் காணப்பட்ட பெயர்கள்: உத்திரன், ஆதன், சாத்தன், திஸ்ஸன், சுரமா [Uthiran, Aathan, Saathan, Tissan, Surama etc] போன்றவை ஆகும். இங்கு கடைசியில் உள்ள ‘ன்’ [‘N’] எடுக்கப்பட்டு திஸ்ஸ ஆக மாறி உள்ளது எனலாம். ஒரு காலத்தில் தமிழரும் புத்த மதத்தை தழுவி இருந்ததும் குறிப்பிடத் தக்கது





இன்னும் ஒரு ஒப்பீட்டையும் நான் சொல்லவேண்டும். தேவநம்பிய தீசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன். அதேபோல அசோகனும்

பிந்துசாரரின் (Bindusara) இரண்டாவது மகனாவார். தேவநம்பிய தீசன் 40 ஆண்டுகள் ஆண்டார் என இலங்கை நாளாகமம் [Ceylon chronicles] கூறுகிறது. இலங்கை நாளாகமத்தின் படி, அரியானை எறியபின் அசோகன் 37 ஆண்டுகள் ஆண்டதாக கூறினாலும், இந்தியா செய்திகளின் படி இது 36 ஆண்டுகளாக காணப்படுகிறது. அசோகன் முறையான முடிசூட்டு விழாவிற்கு நாலு ஆண்டுகள் முன்பே ஆள தொடங்கிவிட்டான். எனவே அவனும் 40 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகிறது. மேலும் இவ்விருவருக்கும் தேவநம்பிய என்றே அதே அடைமொழி [same epithet ‘Devanampiya’] காணப்படுகிறது. அப்படி என்றால் அசோகனுக்கு ஒத்ததாக இலங்கையில் ஒரு தேவநம்பிய தீசன் உண்டாக்கப் பட்டானா என்ற கேள்வியும் எழுகிறது [Is the author of the Dipavamsa created a Lanka counter part of Asoka with the same epithet?]? இதனால் போலும் தொல்பொருள் அல்லது கல்வெட்டு சான்று ஒன்றும் தேவநம்பிய தீசனுக்கு இலங்கையில் இல்லை போலும். ஆனால் அசோகனுக்கு அவை தாராளமாக உண்டு. புத்தரின் சமகால மன்னர் பிம்பிசாரன் மற்றும் அசோகனின் தந்தை பிந்துசாரர், இருவரும் வெவ்வேறு ஆட்களாகும். [Bimbisara, the contemporary king of the Buddha is different from the Bindusara, the father of Asoka]




மகாவம்சம் என்றால் “பெருங்குடியினர்” என்பது பொருளாகும். இது விஜயனின் வருகையோடு தான் இலங்கையின் வரலாறு தொடங்குகிறது என்பதில் பிடிவாதமாக உள்ளது. அதனை மெய்ப்பிக்க தெய்வீக மாமுனிவரான புத்தர் பரிநிர்வாணம் அடையும் முன்னர், தேவர்களது அரசன் இந்திரனை அழைத்து விஜயன் கூட்டாளிகளோடு லங்காவில் [இலங்கையில்] கரையிறங்கியுள்ளான். லங்காவில் எனது சமயம் நிலை நிறுத்தப்படும். எனவே அவனையும் அவனது பரிவாரத்தையும் லங்காவையும் கவனமாகக் பாதுகாப்பாயாக எனக் கட்டளை இட்டார் என்கிறது. என்றாலும் வெவேறு கப்பல்களில் ஏற்றப்பட்ட அவர்களின் மனைவிமார்கள், பிள்ளைகளைப் பற்றி புத்தரும் அக்கறை எடுக்கவில்லை, மற்றும் விஜயனும் அவனது கூட்டாளிகளும் அக்கறை எடுக்கவில்லை ?

அது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது ? ஏனென்றால் அவர்கள் நாடு கடத்தப்பட்டது, விஜயனும் கூட்டாளிகளும் செய்த பாவங்களாலேயே, மற்றும் படி அவர்கள் அப்பாவிகள், அப்படி என்றால் யாரை முதலில் அக்கறை செலுத்தவேண்டும். நீங்களே சொல்லுங்கள்? மேலும் இலங்கைத் தீவுக்கு, புத்த பெருமான் மும்முறை வந்ததாக மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது. தங்களுக்குள் மோதிக்கொண்ட இரண்டு இயக்கர் அரசர்களிடையே சமாதானத்தை நிலை நாட்டவும், வட இலங்கையில், நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்கும் மூன்றாவதாக, கல்யாணி (களனி) என்ற நாட்டின் நாக மன்னனின் வேண்டுதலை ஏற்றும் வருகை தந்ததாக கூறுகிறது. எனவே இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கர்களும் நாகர்களும் என்பது தெளிவாகிறது. இலங்கையை இயக்கர்குல மன்னனும், சிவ பக்தனுமான இராவணன் ஆண்டான் என, கி மு 5ஆம் நூறாண்டில் எழுதிய ராமாயணம் என்ற இதிகாச கதையும் கூறுகிறது. இது ஏறத்தாழ மகாவம்சத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்டது. அதேவேளை வரலாற்று ரீதியாக புத்தர் வட இந்திய புலத்தை விட்டு வேறெங்கும் போனார் என்பதற்கு ஒரு சான்றும் இல்லை. மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பௌத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும். இப்படி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கும் பௌத்த மத தேரர்கள் எப்படி காமினிக்கு புத்த மார்க்கத்தை நம்பாதவர்களை கொல்லலாம் என போதித்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது? இன்றும் இப்படியான மனப்போக்கை நாம் இன்னும் காண்கிறோம்.

மகாவம்சத்தில் புதைந்துள்ள…( பகுதி 19)

December 04, 2022 

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

பண்டித ஹிஸ்ஸெல்லே தம்மரத்தன மகா தேரர் [MahatheraPandit Hisselle Dhammaratana] தனது ‘தென் இந்தியாவில் புத்தமதம்’ [Buddhism in South India], என்ற புத்தகத்தில், புத்த மதகுரு மகிந்தன் அல்லது மகிந்தர் அல்லது மஹிந்த (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), அவர்களே தமிழ் நாட்டிலும் புத்த மதம் பரப்பியதற்கு சான்றுகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். மகாவம்சம், அவர் இயற்கையை கடந்த சக்தி மூலம் [supernatural powers] இலங்கையை அடைந்தார் என புராண கதைகள் போல் குறிப்பிட்டாலும், உண்மையில் அவர் கடல் மூலம் பயணித்ததாகவும், அப்படி இலங்கைக்கு போகும் வழியில், காவேரி பட்டணம் வந்து அங்கு முதலில் புத்த மதம் பரப்பியதாகவும் அறிஞர்கள் கருதுவதாக கூறுகிறார் [The Mahathera states “although the chronicles say he arrived through his supernatural powers, scholars are of the opinion that he travelled by sea and called at Kaveripattinam on the east coast of Tamil Nadu on his way to Sri Lanka”]. டாக்டர் ஷூ ஹிகோசகே [Dr Shu Hikosake Director Professor of Buddhism, Institute of Asian Studies in Madras] தனது ‘தமிழ் நாட்டில் புத்தமதம்’ [Buddhism in Tamil Nadu] என்ற புத்தகத்திலும் இந்த கருத்தையே கூறுகிறார்.

கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஹியுங் சாங் (Hiuen Tsang) எனும் நாடுகண் சீன பிக்கு [The Chinese 7th Century, Buddhist monk, scholar traveller], பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மஹிந்தரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞ்சிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist].

அசோகரின் கல்வெட்டுகள் தவிர அவரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள அவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புனைவுகளே நமக்கு உதவு கின்றன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு அசோகவதனம் (திவ்வியவதனத்தின் ஒரு பகுதியாகிய “அசோகரின் கதை”) மற்றும் கி பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு இலங்கை நூலாகிய மகாவம்சம் ஆகிய புனைவுகள் மட்டுமே இன்று உள்ளன.

கல்வெட்டுகளில் அசோக மன்னனின் மகன் திவாலா [‘திவாரா’] மட்டுமே, அவரது தாய் ராணியுடன் பதியப் பட்டுள்ளது [Tivala or Tivara ], the son of Ashoka and Karuvaki, is the only of Ashoka’s sons to be mentioned by name in the inscriptions along with his mother, in the Queen Edict / S. N. Sen (1999). Ancient Indian History And Civilization. New Age International. p. 151.]. வட இந்தியா பாரம்பரியம் படி, அசோகனுக்கு குணாலா [Kunala ] என்ற மகன் இருந்து உள்ளார்.

மேலும் இது, திவ்வியவதனம் அல்லது தெய்வீக வரலாறுகள் (Divyāvadāna or “Divine narratives”) என்ற சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்ட நூலில் குணாலா அவதானம் என்ற பகுதியில் குறிக்கப்பட்டு உள்ளது. இலங்கை மகாவம்சத்தில் மட்டுமே அசோகனின் மகனாக மஹிந்த கூறப்பட்டுள்ளது. என்றாலும் அசோகன் பிறந்த வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் ‘மஹிந்த’ கூறப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அதே போல மகாவம்சத்தில் கூறப்படட சங்கமித்தையும் வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. வரலாற்றாசிரியர்களின் ஒரு பகுதியினரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாக, இந்திய வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் (Romila Thapar) பல காரணங்களை சுட்டிக்காட்டி இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

“Journal Of The Ceylon Branch Of The Royal Asiatic Society 1922-24 Vol.29” இல், பக்கம் 243 இல், துட்ட காமனி பற்றி குறிப்பிடுகையில், ‘Like most Ceylon Kings he, (Dutugemunu), was more of a Hindu than a Buddhist. An ancient MS of Ridi Vihara, which he built and endowed, states that on the occasion of its consecration he was accompanied thither by 500 Bhikkus (Buddhist monks) and 1,500 Brahmins versed in the Veddas (Paper read at the R. A. S. Ceylon Branch in June 1923 on “Palm leaf MSS. in Ridi Vihara). Throughout Ceylon History the Court religion was Hinduism and its ritual and worship largely alloyed and affected the popular Buddhism and made it unlike the religion of Buddha’ என்று கூறப்படுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

அதாவது பெரும்பாலான இலங்கை அரசர்களை போல, துட்ட காமனியும் கூடுதலாக பௌத்தனாக இருப்பதிலும் பார்க்க ஒரு இந்துவாகவே இருந்தார் என்பதை, ரிதி விகாரையை (வெள்ளிக் கோயிலை / රිදී විහාරය), அனுராதபுரத்தின் மன்னனாக இருந்த துட்டகாமினி, தெய்வத்தைக் கோயிலில் வைக்கும் ஆகமச் சடங்கின் [பிரதிஷ்டை செய்யும்] பொழுது, 500 புத்த பிக்குகளும், ஆனால் 1,500 வேதத்தில் தேர்ச்சி பெற்ற இந்து பிராமணர்களும் ஒன்று கூட அந்த நிகழ்வை நடத்தியதில் இருந்து புரிகிறது என்கிறது.

சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் நடத்திய கண்ணகி சிலைத் திறப்பு விழா வுக்கு பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை ஏற்று வந்தவர் களில் ஒருவன் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்” — என்று மொழிகிறது சிலப்பதிகாரம். இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு ஆட்சி மகாவம்சம் 35 ஆம் அத்தியாயத்தில் உள்ளது. மேலும் சிங்களவரும் தமிழரும் இரத்தத் தொடர்புடையவர்கள் என்பது சிவன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் நாகன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் தெளிவாகிறது. எனவே இவைகளைப்பற்றி ஒரு விரிவான பக்கச்சார்பு அற்ற ஆய்வு கட்டாயம் தேவை என்று எண்ணுகிறேன்.

[கந்தையாதில்லைவிநாயகலிங்கம்/அத்தியடி/யாழ்ப்பாணம்]

http://www.ttamil.com/2022/11/19.html


மகாவம்சத்தில் புதைந்துள்ள…( பகுதி 22)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

Friday, December 09, 2022 

மகாவம்சத்தில் புதைந்துள்ள…( பகுதி 22)

Friday, December 09, 2022 

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, இங்கு வந்த, உயர்குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன் என்று [ A Damila of noble descent, named ELARA, who came hither from the Cola-country  to seize on the kingdom], அதாவது வெளியில் இருந்து வந்தான் என்று குறிப்பிட்டு கூறும் மகாவம்சம், அவனுக்கு முதல் ஆட்சி செய்த இரு தமிழரை அப்படி குறிப்பிட்டு கூறவில்லை, அவர்களை “குதிரைகளை இங்கு கொண்டு வந்து வாணிகம் செய்த ஒருவரது பிள்ளைகளான சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்கள் சூரதீசனை வெற்றி கொண்டார்கள். பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு, இந்த இருவரும் சேர்ந்து இருபத்திரண்டு வருட காலம், கி மு 237 இல் இருந்து கிமு  215  வரை   நீதி தவருமல் ஆட்சி செய்தனர் [Two Damilas, SENA and GUTTAKA, sons of a freighter who brought horses hither/ conquered the king Suratissa, at the head of a great army and reigned both (together) twenty-two years justly.] என்று மட்டும் கூறுகிறது.

மகாவம்சத்தின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், இலங்கையில் வாழும் சிங்களவர்கள் புத்தரால் தன் கொள்கைகளை பரப்ப தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் [chosen people] என்ற நம்பிக்கையே ஆகும். புத்தர் காலத்தில் உலகில் எங்கும் சிங்களவர் என்ற ஒரு இனமே இல்லை, சிங்களம் என்ற ஒரு மொழியும் இல்லை. அவர் இறந்து கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு தான், மகாவம்சம் கதையும் அத்துடன் சிங்கள இனம் ஒன்றும் தோன்றத் தொடங்கியது என்பது வரலாற்று உண்மையாகும். எனவே தான் சாதாரண சிங்கள மக்கள்  வரலாற்றை, கல்வெட்டு ஆதாரங்களை,  மரபணு ஆய்வுகளை மற்றும் சிங்கள மொழியில் ஏராளமாக காணப்படும் தமிழ் சொற்களை கவனத்தில் எடுக்காமல், இன்றைய தமிழர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற தப்பெண்ணம் கொண்டு உள்ளார்கள். 1956 இல் சிங்களம் மட்டும் [Sinhala only Act] என்ற சட்டம் கொண்டு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா [S.W.R.D. Bandaranaike] உண்மையில் அவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர் ஆகும்.

பதினாறாம் நூறாண்டில் தென் இந்தியாவில் இருந்து வந்த நீல பெருமாள் [Neela-Perumal], “சமன்” எனும் பௌத்தக் கடவுளின் [God Saman] பிரதம குருவாக நியமிக்கப்பட்டு ‘நாயக்க  பண்டாரம்’  [‘Nayaka Pandaram’ ] என்ற பெயரை 1454 இல் பெற்றார். அவர்களின் வாரிசே இவர் ஆவார். அதே போல, 1977, 1981,1983 இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் மற்றும் யாழ் நூலக எரிப்பு [anti-Tamil pogroms of 1977,1981 and 1983 , the burning of the Jaffna public Library] போன்றவற்றின் நாயகன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் [Junius Richard Jayewardene] முப் பாட்டனார் [great-grandfather was called Tambi Mudaliyar] தம்பி முதலியார் ஆகும். இவை சில உதாரணங்களே.

இவ்வாறு பிற்காலத்திலும் பல தென் இந்தியர்கள் பல பல சந்தர்ப்பங்களில் இங்கு அழைக்கப்பட்டு அல்லது வந்து சிங்களவர்களுடன் ஒன்றிணைந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது [Many South Indians, not just Tamils but also Telugus and Malayalis, migrated to southern Sri Lanka and assimilated with the Sinhalese]

உதாரணமாக, டச்சு [Dutch] அரசாங்கம் இலங்கையை ஆளும் பொழுது, புகையிலை சாகுபடிக்கு தமிழ் நாட்டில் இருந்து பெருவாரியான தமிழர்களை கொண்டுவந்து இலங்கையின் தென்மாகாணத்தில், மாத்தறையில் குடியேற்றினார்கள். அதே மாதிரி ஒரு 2017 அறிக்கையின் படி, 4,000 ஜிப்சிகள் தீவு முழுவதும் இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். கிட்டத்தட்ட அனைவரும் இப்போது சிங்கள மொழி பேசுபவர்களாக மாறி விட்டார்கள்.

[The Dutch brought South Indian people in large numbers for tobacco cultivation. They were settled mostly in Matara. According to a 2017 government report, Sri Lanka has nearly 4,000 gypsies scattered across the island. Many of their origins can be traced to south India. While almost all of them are now Sinhala speakers] 

விஜயனும் அவனது கூட்டாளிகளும் மதுரை பாண்டிய மகளிரை திருமணம் செய்ததுடன் ஆரம்பமாகிய தென் இந்தியர் மதம், இனம் மாற்றம்  கடைசியாக அண்மைய வரலாற்றில் வத்தளை, நீர்கொழும்பு முதல் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் “மதம் – இனம்” மாற்றம் வரை நடை பெற்றதை வரலாறு சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் முதலில் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப் பட்டார்கள். எனவே அவர்களது பிள்ளைகள் கத்தோலிக்க பாடசாலைகளில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும். 

வரலாற்றாசிரியர் ஒருவர் ஒரு நாட்டின் தற்கால வரலாற்றை எழுதுவதற்கும் அதன் புராதனகால வரலாற்றை எழுதுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. அச்சுயந்திரம் மற்றும் தொழில் நுட்பப்பயன்பாட்டினால், வரலாறு மற்றும் செய்திகள், இன்று முறையாக ஆவணப் படுத்தப்படுகின்றன. ஆனால், ஏட்டுச் சுவடிகளையும் புராணக் கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் ஓரளவு கிடைத்த சாசனங்களையுமே சேர்த்து, ஆயிரம் ஆண்டுகளின் பின், இலங்கையின் பூர்வீக வரலாற்றை எழுதியவர் தான் இந்த மகாநாம தேரர். ஆகவே தான் எமக்கு கிடைத்த வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிட்டு, இந்த மகாவம்சம் என்ற அறிவு வயலில் இருந்து களைகளை, தக்க காரணங்களை சான்றுகளுடன் காட்டி இன்று அகற்ற வேண்டியுள்ளது. 

——————————————————————————————————————–


மகாவம்சத்தில் புதைந்துள்ள…( பகுதி 24)
January 02, 2023
உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

அரசகுமாரி சிங்கத்துடன் புணர்ந்து ஒரு ஆண் ஒரு பெண் என இரு மானிட பிள்ளை களை பெற்று, பின் அந்த ஆண், தன் தந்தை சிங்கத்தை கொன்று, அதன் பின் தன் சகோதரி சிம்மசீவலியை மணந்து, அவர்களுக்கு பதினாறு முறை இரட்டைக் குழந்தைகளாக, அதுவும் எல்லாம் ஆண்பிள்ளைகளாக பிறந்தது என்பது கற்பனை கூட செய்யமுடியாத ஒரு நிகழ்வு ஆகும். அந்த முப்பத்திரண்டில் மூத்தவன் தான் விஜயன் ஆகும். இவனைத்தான் சிங்கள இனத்தின் முதல் குடிமகனாக மகாவம்சம் பெருமையுடன் கூறுகிறது. அதுவும் புத்த பெருமான் தேர்ந்து எடுத்த ஒருவன் என்று மகுடம் சூட்டுகிறது!

இப்ப என் மனதில் தோன்றுவது, புத்தருக்கு விஜயனிலும் அவனின் கூட்டாளிகளிடமும் ஒரு தனிப்பட்ட ஆர்வம் இருக்குது என்றால், ஏன் அவர்கள் இலங்கையில் அரசாட்சியை ஏற்படுத்திய பொழுது, புத்த மதத்தினராக இருக்கவில்லை? மற்றது, அவர்கள் இலங்கையை அடைந்த கையோடு, இயக்கர்களிடையே தான் அவர்களின் முதல் இலங்கை வாழ்வு தொடங்குகிறது. ஆனால் இந்த இயக்கர்களைத் தான் ஏற்கனவே புத்தர் தன் முதல் வருகையில் பயமுறுத்தி, இங்கு வாழ தகுதி அற்றவர்கள் என துரத்தி விட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. அப்படி தகுதி அற்றவர்களை மீண்டும் வரவழைத்து, தான் தேர்ந்து எடுத்த, பெருமைமிக்க விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளை சந்திக்க விடுவாரா? அதுமட்டும் அல்ல, புத்தருடன் மிகவும் நட்பாக ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நாகர்களை ஏன் விஜயனும் கூட்டாளிகளும் சந்திக்கவில்லை. நாகர்களின் வேண்டுகோளை ஏற்று இரண்டாம் தடவையாக நாகர்களை மூன்றாம் வருகையில் பிரத்தியேகமாக சந்தித்தது என்னவாச்சு? அவர்களை மறந்து விட்டாரா ? மற்றது மகாவம்சத்தின் பிந்திய அத்தியாயத்தில் தான், புத்த மதம், விஜயனின் அரசாட்சிக்கு [கி மு 543 – கி மு 505] பிறகு ஏழாவது மன்னனான தேவநம்பிய தீசன் அரசாட்சியில் [கி மு 307 – கி மு 267] இலங்கைக்கு, கிட்ட தட்ட இருநூற்று நாற்பது ஆண்டுகளின் பின், அசோகனின் மகனினுடாக அல்லது தூதுவருக்கூடாக இலங்கைக்கு அறிமுகம் செய்யப் பட்டது என்று கூறுகிறது? அது மட்டும் அல்ல, புத்தமதத்தை உலகெங்கும் பரப்பியதும் அசோகனே! சிங்களம் என்ற இனம் ஒன்று தொடங்குவதற்கு ஒரு ஆரம்ப புள்ளியாக இருந்தான் என்பதை தவிர, இதில் விஜயனின் பங்கு என்னவென்று புரியவில்லை?

அசோகனின் உற்ற நண்பனான தேவநம்பிய தீசன் அல்லது தீசன் இலங்கையை ஆளும் காலத்தில், புத்த சமயப்பரப்பாளர் குழுவொன்றை [Buddhist monk missionary] தன் மகனின் தலைமையில் அங்கு அனுப்பினான் என்கிறது மகாவம்சம். இந்த தீசன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது பல அற்புதங்கள் நிகழ்ந்தன என்றும், இவையனைத்தும் தீசனின் பெருமையால் நிகழ்ந்தவை என்றும், இவ்வற்றை கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து. ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ் விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதியுள்ளவர்கள் அல்ல. எனவே இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்’ என்றான் என்றும் பதினோராம் அத்தியாயம், ‘தேவநம்பிய தீசன் பட்டாபிஷேகம்’ [ Chapter XI / The Consecrating Of Devanampiyatissa] கூறுகிறது. மேலும் பதின்மூன்றாவது அத்தியாயம் ‘மஹிந்தர் வருகையில்’ [Chapter XIII / The Coming Of Mahinda], இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அதைத் தொடர்ந்து, பதிநான்காவது அத்தியாயம் ‘தலைநகர் புகுதலில்’ [Chapter XIV / The Entry Into The Capital], அரசனை [தீசனை] சோதிப்பதற்காக மஹிந்த தேரர் அவனை சூட்சுமமான கேள்வி கேட்டார். கேட்கக் கேட்க பல கேள்விகளுக்கும் அவன் பதிலளித்தான் என்கிறது.



இப்ப நான் உங்களைக் கேட்க விரும்புவது, புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட, விஜயன் வரும் பொழுது, அங்கு ஒரு அதிசயமும் நடைபெறவில்லை, மாறாக உயர்குலம் அற்ற இயக்கர் பெண்ணை மணக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுகிறான். பின் அவன் தன் மனைவியையும் பிள்ளைகளையும், துரத்திவிட்டு, உயர் குல பாண்டிய தமிழ் இளவரசியை இரண்டாம் தாரமாக அல்லது மூன்றாம் மணக்கிறான், என்றாலும் கடைசி தாரத்துக்கு பிள்ளைகள் இல்லாமல் அவன் சந்ததி இலங்கையை ஆளாமல், முற்றுப் பெறுகிறது. முதல் அல்லது குவேனி பிள்ளைகளை கூட அவன் கூப்பிட முயலவில்லை? சிங்க மிருகத்தின் பேரன் ஆளலாம் என்றால், அந்த பேரன் – விஜயன் மற்றும் யட்சினி அல்லது யட்சி (Yakshini) அரசி குவேனிக்கு பிறந்த பிள்ளைகளுக்கு என்ன குறை ? அப்படி என்றால் ஏன் அவனை புத்தர் தேர்ந்தெடுத்தார்?

இரண்டாவதாக, இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப் பட்டிருக்கும் என்கிறான். அப்படி என்றால் புத்தர் தன் முதல் தெரிவான விஜயனில் தடுமாறி, இரண்டாவது தெரிவை இருநூறுக்கு சற்று மேற்பட்ட ஆண்டுகளின் பின் காலம் தாழ்த்தி செய்தாரா ? மூன்றாவதாக, அசோகன் தீசனின் நட்பிலும், அவன் ஆளும் இலங்கையிலும் மிகவும் அக்கறை கொண்டு மஹிந்த தேரரை அனுப்பினார் என்கிறது, அப்படி என்றால், எதற்காக, மஹிந்தர் வந்து இலங்கையில் இறங்கும் பொழுது, தீசன் சோதிக்கப் பட்டான்? எவராவது இதை வாசிக்கும் பொழுது, அவர்களின் மனதில் கட்டாயம் அசோகன், தீசனின் நட்பிலும், மற்றும் ஒருவரை ஒருவர் எவ்வளவுதூரம் புரிந்து வைத்து இருந்தார்கள் என்பதிலும் ஒரு ஐயப்பாடு ஏற்படும் என்றும் தோன்றுகிறது? [When one reads this portion of the Mahavamsa, the question arises how far Asoka and Tissa could be friends and how much Asoka knew of Tissa]

——————————————————————————————————————–

மகாவம்சத்தில் புதைந்துள்ள ….[பகுதி 25]

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

January 02, 2023

போர்த்துகீசியர்கள் இலங்கையில் 1505 ஆம் ஆண்டு தரையிறங்கிய காலத்திலும் தமிழ் இலங்கையில் ஒரு பிரதான மொழியாக இருந்தது என்பதற்கு பல சான்றுகள் வரலாற்று ரீதியாக இருக்கின்றன. உதாரணமாக, கோட்டை அரசன் ஏழாம் புவனேகபாகு [the King of Kotte, Bhuvanehabahu VII / 1468 – 29 December 1550] போர்த்துகீசியர்களுடன் தமிழில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் கோட்டை அரசாட்சியில் நீதிமன்ற மொழியாக அன்று தமிழும் இருந்துள்ளது.[ Aiyangar, S. Krishnaswami; de Silva, Simon; M. Senaveratna, John (1921). “The Overlordship of Ceylon in the Thirteenth, Fourteenth and Fifteenth Centuries”] .

Kotte என்ற சொல்லே தமிழ் சொல்.  ‘கோட்டை’ யில் இருந்து பெறப்பட்டதாகும். [Somaratne, G.P.V. (1984). The Sri Lanka Archives, Volume 2. Department of National Archives. p. 1.]  அதே போல, அறிஞர் H L செனிவிரட்ன [H L Seneviratne] பல கண்டி தலைவர்கள் [Kandyan chieftains] 1815 ஆண்டு மாநாட்டு [1815 Convention / treaty with the British] உடன்படிக்கைகள் தமிழில் கையெழுத்திட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஊகங்கள் மற்றும் அனுமானங்களை தவிர்த்து, தொல்பொருள் சான்றுகள் அல்லது கல்வெட்டியல் சான்றுகள் மூலம் [archeological / epigraphic facts / evidence] சிங்கள மொழி கி பி 9ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததாக எந்த தகவலும் நான் அறிந்த வரையில் இல்லை.

சிங்கள மொழியில் ஏறக்குறைய 4000+ தமிழ் சொற்கள் இருப்பதை ஆதார பூர்வமாக எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் [Rev. S. Gnanapiragasam] சுட்டிக் கட்டி, எனவே சிங்கள மொழியில் இருந்து எல்லா தமிழ் சொற்களையும் கழற்றிவிட்டால், அங்கு சிங்கள மொழி என்று ஒன்றுமே இருக்காது என்கிறார். [If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language.] சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி (An Etymological and comparative Lexion of the Tamil Language), இவரால் 1938-இல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. 1815 இல் கண்டி இராச்சியம் காட்டிக்கொடுப்பினால் வீழ்த்தப்பட்டது. அதன் பின் “கண்டி ஒப்பந்தம்”  கண்டி அரச மாளிகையில்  02.03.1815 அன்று பி.ப. 4  மணிக்கு செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கண்டி திசாவைகள் மற்றும் அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.

அட்டவனை 10, அவர்களின்  கையொப்பத்தை காட்டுகிறது. இதில் ரத்வத்தையின் கையெழுத்து தமிழில் பூரணமாக வைக்கப்பட்டுள்ளது. மற்றும் பலரின் கையெழுத்து தமிழும் மற்றும் இன்னும் அப்பொழுது பரிணாமம் அடைந்து வரும் சிங்களமும் கலந்து இருக்கின்றன [Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphabets were used]

எல்லா இலங்கை காவியமும் [ehshfkKkநாளாகமமும் / chronicles], இலங்கையை புத்தர் தன் கொள்கைகளை பரப்ப தயாராக்கினார் என்றும் இலங்கைக்கு மூன்று தரம் அதற்காக வருகை தந்தார் என்றும் இன்று வரை கூறினாலும், புத்தர் இறக்கும் தருவாயில், புத்த மதத்தினர் கட்டாயம் வருகை தந்து வணங்க வேண்டிய நாலு இடங்களாக லும்பினி [புத்தர் பிறந்த இடம்], புத்தகயை அல்லது புத்த கயா [புத்தர் அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம்], சாரநாத் அல்லது இசிபதனம் [இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார்], குசிநகர் அல்லது குஷி நகர் [புத்தர் தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த நகரம்] [The four places are Lumbini, Buddhagaya, Sarnath and Kusinara.] என அடையாளம் காட்டி உள்ளார். ஆனால் புத்தர்  தான் பிரத்தியேகமாக தேர்ந்து எடுத்து, மூன்று தரம் வந்து, போதனை செய்து, கால் பதித்த இலங்கையை அடையாளப் படுத்தவில்லை ? ஏன் யாருக்காவது புரிகிறதா ??

மேலும் அசோகா காலத்திலும். அசோகன் இன்னும் நான்கு இடங்களை புனித இடங்களாக அடையாளப் படுத்தினான். அவை சவத்தா [சிராவஸ்தி / கௌதம புத்தர் சிராவஸ்தி நகரத்தின் ஜேடவனத்தில் இருபத்து நான்கு முறை சாதுர்மாஸ்ய விரதங்களை மேற்கொண்டார்], சங்கிசா அல்லது சங்காசியா [கௌதம புத்தர் சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே சங்காசியா], ராஜகிரகம் [மௌரியர் காலத்திய மகத நாட்டின் தலைநகராக இருந்தது]  மற்றும் வைசாலி [கௌதம புத்தர், தான் இறப்பிற்கு முன்னர், கி மு 483இல் தனது இறுதி உபதேசத்தை பிக்குகளுக்கு இந்நகரில் தான் மேற்கொண்டார்.]  [Savatthi, Sankasia, Rajagaha and Vesali.] ஆகும்.

இங்கும் அசோகன் இலங்கையை புனித புத்த பூமி என்று கருதவில்லை. இதில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது ? புத்தருக்கோ அல்லது அசோகனுக்கோ இலங்கை ஒரு பெரும் பொருட்டாக இருக்கவில்லை அல்லது இலங்கையை பற்றி எந்த அறிவும் இல்லை என்பதே உண்மையாகும்! இது மகாவம்சத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படை யாகவே உலகத்திற்கு காட்டுகிறது. இதில் நான் ஒன்றும் சொல்லவில்லை. உண்மை என்றும் வெல்லும்!!    

ஆகவே அந்த அடிப்படையில் நாம் ஆராயும் பொழுது, புத்தர் இலங்கைத் தீவுக்கு மூன்று முறை வந்ததாக மகாவம்சம் சொல்லும் கதை கற்பனை ஆகும் என்பது புலன்படுகிறது. புத்தர் வட இந்திய புலத்தை விட்டு வேறெங்கும் சென்றார் என்பது பாளி நியமன படைப்புகள் [canonical works] ஒன்றிலும் அல்லது வரலாற்று சான்றுகளிலும் காணப் படவில்லை. மற்றது மாயா ஜால வித்தைகள் மூலம் காற்றினூடாக வானத்தில் பயணித்தார் என மகாவம்சம் கூறுவதையும் கட்டாயம் ஏற்க முடியாது, ஏன் என்றால்; புத்தர் மந்திர தந்திர ஜாலங்கள் போன்றவற்றிற்கு எதிரானவரும் ஆவார். மேலும் புத்தர் நிர்வாணம் [enlightenment] அடைந்த நாளில் இருந்து, அவர் இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குசிநகரில் [Kusinagar or Kusinara] தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடையும் வரை, புத்தர், வெறும் காலுடன் புத்தகயாவில் [Buddha Gaya] இருந்து குசிநகர் வரை நடந்து சென்றார் என தெரிய வருகிறது.

பெலுவ [Beluva] என்ற ஒரு குக்கிராமத்தில், அவர் தனது சீடன் ஆனந்தாவை பார்த்து, “ஆனந்தா நான் இப்ப வயதாகி விட்டேன், உடலும் தளர்ந்து விட்டது, வாழ்க்கை பாதையை கடந்து விட்டேன், நான் வாழ்க்கை காலமான எண்பது வயதைக் கடந்து விட்டேன் [“Ananda, I am now old, worn out, one who has traversed life’s path, I have reached the term of life which is eighty.”] என்கிறார். எனவே புத்தர் காற்றில் பறந்து வந்தார் என்று மகாவம்சம் கூறுவது ஏற்புடையதாக இல்லை. மற்றும் அது புத்தரின் நம்பிக்கைக்கும் போதனைக்கும் எதிரானதும் ஆகும்.உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்.

http://www.ttamil.com/2022/12/22.html


மகாவம்சத்தில் புதைந்துள்ள ….[பகுதி 25]

January 02, 2023

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

போர்த்துகீசியர்கள் இலங்கையில் 1505 ஆம் ஆண்டு தரையிறங்கிய காலத்திலும் தமிழ் இலங்கையில் ஒரு பிரதான மொழியாக இருந்தது என்பதற்கு பல சான்றுகள் வரலாற்று ரீதியாக இருக்கின்றன. உதாரணமாக, கோட்டை அரசன் ஏழாம் புவனேகபாகு [the king of Kotte, Bhuvanehabahu VII / 1468 – 29 December 1550] போர்த்துகீசியர்களுடன் தமிழில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் கோட்டை அரசாட்சியில் நீதிமன்ற மொழியாக அன்று தமிழும் இருந்துள்ளது.[Aiyangar, S. Krishnaswami; de Silva, Simon; M. Senaveratna, John (1921). “The Overlordship of Ceylon in the Thirteenth, Fourteenth and Fifteenth Centuries”] . Kotte என்ற சொல்லே தமிழ் சொல் ‘கோட்டை’ யில் இருந்து பெறப்பட்டதாகும்.[Somaratne, G.P.V. (1984). The Sri Lanka Archives, Volume 2. Department of National Archives. p. 1.]  அதே போல, அறிஞர் H L செனிவிரட்ன [H L Seneviratne] பல கண்டி தலைவர்கள் [Kandyan chieftains] 1815 ஆண்டு மாநாட்டு [1815 Convention / treaty with the British]  உடன்படிக்கைகள் தமிழில் கையெழுத்திட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஊகங்கள் மற்றும் அனுமானங்களை தவிர்த்து, தொல்பொருள் சான்றுகள் அல்லது கல்வெட்டியல் சான்றுகள் மூலம் [archeological / epigraphic facts / evidence] சிங்கள மொழி கி பி 9ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததாக எந்த தகவலும் நான் அறிந்த வரையில் இல்லை. சிங்கள மொழியில் ஏறக்குறைய 4000+ தமிழ் சொற்கள் இருப்பதை ஆதார பூர்வமாக எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் [Rev. S. Gnanapiragasam] சுட்டிக் கட்டி, எனவே சிங்கள மொழியில் இருந்து எல்லா தமிழ் சொற்களையும் கழற்றிவிட்டால், அங்கு சிங்கள மொழி என்று ஒன்றுமே இருக்காது என்கிறார். [If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language.]  சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி (An Etymological and comparative Lexion of the Tamil Language), இவரால் 1938-இல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. 

1815 இல் கண்டி இராச்சியம் காட்டிக்கொடுப்பினால் வீழ்த்தப்பட்டது. அதன் பின் “கண்டி ஒப்பந்தம்”  கண்டி அரச மாளிகையில் 02.03.1815 அன்று பி.ப. 4  மணிக்கு செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கண்டி திசாவைகள் மற்றும் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். அட்டவனை 10, அவர்களின்  கையொப்பத்தை காட்டுகிறது. இதில் ரத்வத்தையின் கையெழுத்து தமிழில் பூரணமாக வைக்கப்பட்டுள்ளது. மற்றும் பலரின் கையெழுத்து தமிழும் மற்றும் இன்னும் அப்பொழுது பரிணாமம் அடைந்து வரும் சிங்களமும் கலந்து இருக்கின்றன [Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphabets were used]

எல்லா இலங்கை காவியமும் [நாளாகமமும் / chronicles], இலங்கையை புத்தர் தன் கொள்கைகளை பரப்ப தயாராக்கினார் என்றும் இலங்கைக்கு மூன்று தரம் அதற்காக வருகை தந்தார் என்றும் இன்று வரை கூறினாலும், புத்தர் இறக்கும் தருவாயில், புத்த மதத்தினர் கட்டாயம் வருகை தந்து வணங்க வேண்டிய நாலு இடங்களாக லும்பினி [புத்தர் பிறந்த இடம்], புத்தகயை அல்லது புத்த கயா [புத்தர் அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம்], சாரநாத் அல்லது இசிபதனம் [இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார்], குசிநகர் அல்லது குஷி நகர் [புத்தர் தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த நகரம்] [The four places are Lumbini, Buddhagaya, Sarnath and Kusinara.] என அடையாளம் காட்டி உள்ளார். ஆனால் புத்தர்  தான் பிரத்தியேகமாக தேர்ந்து எடுத்து, மூன்று தரம் வந்து, போதனை செய்து, கால் பதித்த இலங்கையை அடையாளப் படுத்தவில்லை ? ஏன் யாருக்காவது புரிகிறதா ??

மேலும் அசோகா காலத்திலும். அசோகன் இன்னும் நான்கு இடங்களை புனித இடங்களாக அடையாளப் படுத்தினான். அவை சவத்தா [சிராவஸ்தி / கௌதம புத்தர் சிராவஸ்தி நகரத்தின் ஜேடவனத்தில் இருபத்து நான்கு முறை சாதுர்மாஸ்ய விரதங்களை மேற்கொண்டார்], சங்கிசா அல்லது சங்காசியா [கௌதம புத்தர் சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே சங்காசியா], ராஜகிரகம் [மௌரியர் காலத்திய மகத நாட்டின் தலைநகராக இருந்தது]  மற்றும் வைசாலி [கௌதம புத்தர், தான் இறப்பிற்கு முன்னர், கி மு 483இல் தனது இறுதி உபதேசத்தை பிக்குகளுக்கு இந்நகரில் தான் மேற்கொண்டார்.]  [Savatthi, Sankasia, Rajagaha and Vesali.] ஆகும்.

இங்கும் அசோகன் இலங்கையை புனித புத்த பூமி என்று கருதவில்லை. இதில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது ? புத்தருக்கோ அல்லது அசோகனுக்கோ இலங்கை ஒரு பெரும் பொருட்டாக இருக்கவில்லை அல்லது இலங்கையை பற்றி எந்த அறிவும் இல்லை என்பதே உண்மையாகும்! இது மகாவம்சத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படையாகவே உலகத்திற்கு காட்டுகிறது. இதில் நான் ஒன்றும் சொல்லவில்லை. உண்மை என்றும் வெல்லும்!!    

ஆகவே அந்த அடிப்படையில் நாம் ஆராயும் பொழுது, புத்தர் இலங்கைத் தீவுக்கு மூன்று முறை வந்ததாக மகாவம்சம் சொல்லும் கதை கற்பனை ஆகும் என்பது புலன்படுகிறது. புத்தர் வட இந்திய புலத்தை விட்டு வேறெங்கும் சென்றார் என்பது பாளி நியமன படைப்புகள் [canonical works] ஒன்றிலும் அல்லது வரலாற்று சான்றுகளிலும் காணப் படவில்லை. மற்றது மாயா ஜால வித்தைகள் மூலம் காற்றினூடாக வானத்தில் பயணித்தார் என மகாவம்சம் கூறுவதையும் கட்டாயம் ஏற்க முடியாது, ஏன் என்றால்; புத்தர் மந்திர தந்திர ஜாலங்கள் போன்றவற்றிற்கு எதிரானவரும் ஆவார்.

மேலும் புத்தர் நிர்வாணம் [enlightenment] அடைந்த நாளில் இருந்து, அவர் இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குசிநகரில் [Kusinagar or Kusinara] தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடையும் வரை, புத்தர், வெறும் காலுடன் புத்தகயாவில் [Buddha Gaya] இருந்து குசிநகர் வரை நடந்து சென்றார் என தெரிய வருகிறது. பெலுவ [Beluva] என்ற ஒரு குக்கிராமத்தில், அவர் தனது சீடன் ஆனந்தாவை பார்த்து, “ஆனந்தா நான் இப்ப வயதாகி விட்டேன், உடலும் தளர்ந்து விட்டது, வாழ்க்கை பாதையை கடந்து விட்டேன், நான் வாழ்க்கை காலமான எண்பது வயதைக் கடந்து விட்டேன் [“Ananda, I am now old, worn out, one who has traversed life’s path, I have reached the term of life which is eighty.”] என்கிறார். எனவே புத்தர் காற்றில் பறந்து வந்தார் என்று மகாவம்சம் கூறுவது ஏற்புடையதாக இல்லை. மற்றும் அது புத்தரின் நம்பிக்கைக்கும் போதனைக்கும் எதிரானதும் ஆகும்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply