No Picture

அடுத்த பத்தாண்டுக்கு திமுக வை யாரும அசைக்க முடியாது

October 18, 2021 editor 0

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியை யாரும் அசைக்க முடியாது! கனடா நக்கீரன் கனடா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில்  ஐந்தாண்டுக்கு ஓருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மாகாண நாடாளுமன்றத்துக்கும் உள்ளாட்சி மன்றங்களுக்கும் நாலாண்டுக்கு  […]

No Picture

தமிழர்களை இந்துக்கள் என்று அழைப்பது சரியா?

September 30, 2021 editor 0

தமிழர்களை இந்துக்கள் என்று அழைப்பது சரியா? 14 பதில்கள்மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள், தமிழர்களின் சமய வரலாறை பல்லாண்டுகள் படித்து ஆராய்பவன்.1 வருடத்திற்கு முன் அன்று புதுப்பிக்கப்பட்டது · எழுத்தாளர் 520 பதில்களையும் 1.7மி பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார் தமிழர்களை இந்துக்கள் என்று அழைப்பது முற்றிலும் தவறு. ஐயா உயர்திரு.சிவகுமார் […]

No Picture

எது தமிழர்களின் மதம்?

September 29, 2021 editor 0

தமிழ் நெறி என்பது யாது? இது ஒரு பெரிய கேள்வி விளக்குவது கடினம் முயற்சி செய்கிறேன். இந்திய தமிழர்கள் பலர், இந்தியம் [இந்து + இந்தி + இந்தியா] என்ற மாயையை அவர்களை அறியாமல் கட்டிக்கொண்டு அழும் அடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். […]

No Picture

அமைதிப்படையை அனுப்பியது பெரிய தவறு – முன்னாள் தளபதி

September 15, 2021 editor 0

  அமைதிப்படையை அனுப்பியது பெரிய தவறு – முன்னாள் தளபதி 15 ஏப்ரல் 2015 இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது மிக உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று இந்திய இராணுவத்தின் […]

No Picture

ஸ்டாலின் அரசின் 100 நாள்களில் கருணாநிதி பெயரில் வந்த அறிவிப்புகள் – ஒரு பட்டியல்!

September 6, 2021 editor 0

ஸ்டாலின் அரசின் 100 நாள்களில் கருணாநிதி பெயரில் வந்த அறிவிப்புகள் – ஒரு பட்டியல்! துரைராஜ் குணசேகரன் கருணாநிதி பெயரில் வந்த அறிவிப்புகள் தமிழகத்தில் நடைபெற்றுவரும் தி.மு.க ஆட்சியில் தற்போதுவரை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் […]

No Picture

தாலிபன்கள் யார்? ஆப்கனில் இவர்கள் மீண்டும் எழுச்சி பெற்றது எப்படி?

August 23, 2021 editor 0

தாலிபன்கள் யார்? ஆப்கனில் இவர்கள் மீண்டும் எழுச்சி பெற்றது எப்படி? 6 ஜூலை 2021புதுப்பிக்கப்பட்டது 15 ஆகஸ்ட் 2021 ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட எல்லா இடங்களையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்கள், தலைநகர் காபூலில் அமைதி […]

No Picture

ஆப்கானித்தான்

August 23, 2021 editor 0

ஆப்கானித்தான் https://ta.wikipedia.org/s/byகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.Jump to navigationJump to search அப்கானித்தான் இசுலாமிய எமிரேட் கொடிசின்னம் குறிக்கோள்: கிடையாது நாட்டுப்பண்: Soroud-e-Melli தலைநகரம்மற்றும் பெரிய நகரம் காபூல்34°31′N 69°08′E ஆட்சி மொழி(கள்) பாஷ்தூ, தாரி மக்கள் ஆப்கானி அரசாங்கம் […]

No Picture

தமிழின் தொன்மை

August 17, 2021 editor 0

தமிழின் தொன்மை உலகில் முதல், முதல் மக்கள் தோன்றிய நாடு தமிழகமும், அதனையடுத்திருந்த கடல் கொண்ட தென்னாடுமே என நில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.காவிரிப்பூம்பட்டிணத்தில் நிலத்து நின்று வாழும் தமிழ் மக்களை “பதியெழ அறியாப் பழங்குடியினர்” என இளங்கோவடிகள் கூறுகிறார், இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார் “படைப்புக் காலந்தொட்டே வாழுங் குடியினர்” எனக் கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்”என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தையக மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும். தமிழ் மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை, ஏனெனில் அது ஓரு காலங்கடந்த மொழி, அதற்கு வரலாறு இல்லை. எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை. எனினும் காவியமும், ஓவியமும், காவிரியும், வைகையும், கட்டிடமும், சிற்பமும்,கல்வெட்டும், புதை பொருட்களும் ஓருவாறு தமிழ் மொழியின் தொன்மையை உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் “தமிழ் மொழியே உலகின் முதல் மொழி” எனக் கூறுவர். இன்னுஞ் சிலர் “இலத்தின்”, “கீரிக்” மொழிகளுக்கு முந்திய மொழி” எனக் கூறுவர். இவற்றில் எது உண்மையாகவிருப்பினும் அது தமிழின் தொன்மைச் சிறப்பைக் காட்டுவதாகவே இருக்கும். முற்காலத்திய சீன யாத்திரீகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்திய ஜி.யு.போப், கால்டுவெல் வரையுள்ள வேற்று நாட்டினர், வேற்று மதத்தினர் வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றி பாரட்டப்பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு பாரட்டைப் பெற்ற ஓரு மொழி உலகின் பழைய மொழிகளில் எதுவுமேயில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப் பெற்றுவந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே அதன் மொழியின் தொன்மைக்கு சான்று. 1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமை கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பறி ஆண்ட செய்தியையும் இலக்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்ற உண்மைகளாகும். இதனால் தமிழ் மொழியானதுஅக்காலத்திலுமே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரியும் ஓரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கின்றது என்பது தெரியவருகிறது.2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன 2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 2400 ஆஅண்டுகளூக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயேதமிழில் “நற்றிணை” என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது 2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமோன் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்நாட்டுக் கப்பல்களில்,தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ் நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக்கொண்டு சென்று தமிழ் மொழியிலேயே விலை பேசி விற்று வந்திருக்கின்றனர்.அப் பொருட்களுக்கு இன்னும் தமிழ்ச் சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன.அரிசி “ரைஸ்” எனவும், மயில் தோகை “டோ கை” எனவும், சந்தனம் “சாண்டல்” எனவும், தேக்கு “டீக்கு”, எனவும் கட்டுமரம் “கட்டமாரன்” எனவும் , இஞ்சி “ஜிஞ்சர்” எனவும், ஓலை “ஒல்லா” எனவும் கயிறு “காயர்” எனவும் ஆயின. காலப்போக்கில் இத் தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்ச், ஆங்கில அகராதிகளிலும் புகுந்து கொண்டு விட்டன. 3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் “தொல்காப்பியம்” ஓன்றே.அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றியிருக்கின்றன.இவ்வுண்மையை “தோலென மொழிப தொன்மொழிப் புலவர்” என தொல்காப்பியரே தமது நூலில் கூறியிருப்பதால் நன்கறியலாம். 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாகப் நம்பப் பெறுகிற நூல்களில்“அகத்தியம்” எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. இதை 5000 ஆண்டுகளுக்குமுற்பட்டது என்று கூறுவோறும் உண்டு.தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றி கடல் நீர் நாட்டிற்குள்புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும்,இது நடந்த காலம் 3000-ம், 5000-ம், 9000-ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது.மேலை நாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும்அவை 5000 ஆண்டுகளுக்கு முன்பும், 7000 ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர். தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்?? அதற்கு முன்னே உரைநடை தோன்றிய காலம்? அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்??அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது? என்பதை எவர் அறிந்து கூற இயலும்? ஏதெனும் கூற வேண்டுமானல் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும்.மேற்கண்ட சில சான்றுகளே தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்தும்.