காவலராக இருந்தவர் மதகுரு போலே பாபா ஆனது எப்படி?
காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றிய இவர், 1990-ல் தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். பின்னர் தனது பெயரை நாராயண் சாகர் ஹரி என்று மாற்றிக்கொண்டார்.
03 Jul 2024

நாராயண் சாகர் விஷ்வ ஹரி | Bhole Baba
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் அருகில் உள்ள கிராமத்தில், உள்ளூர் மத குரு ஒருவரை கெளரவிக்கும் விதமாக சத்சங் எனும் மதப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. எஃப்.ஐ.ஆர் படி, ‘சத்சங்’ அமைப்பாளர்கள் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையில், சத்சங்கத்தை ஏற்பாடு செய்த சாமியார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி குறித்த தகவல்களும் வெளியாகியிருக்கிறது.
யார் இந்த நாராயன் சாகர் விஷ்வ ஹரி:
உத்தரப்பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள பகதூர் நகரி கிராமத்தின் விவசாய தம்பதி நன்னே லால் – கட்டோரி தேவி ஆகியோருக்கு பிறந்தவர்தான் நாராயண் சாகர். இவரின் இயர்பெயர் சூரஜ் பால் சிங். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி, 1990-ல் தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். பின்னர் தனது பெயரை நாராயண் சாகர் ஹரி என்று மாற்றிக்கொண்டார்.
ஹரியின் சீடர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாராயண் சாகருக்கு மேற்கு உத்தரபிரதேசத்தில் கணிசமான ஆதரவாளர்கள் பெருகினர். அதனால், தன் கிராமத்திலேயே ஒரு ஆசிரமம் ஒன்றை அமைத்தார். அந்த ஆசிரமத்துக்கு பிற மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் கூட, பக்தர்கள் வருவார்கள்; அவர்களுக்கு ஆசிரமத்தில் தங்குமிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாராயண் சாகருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. காவல்துறையைவிட்டு வெளியேறி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவரை போலே பாபா என்று மக்களால் அழைக்கப்படுவதாகவும், அவரின் மனைவி மாதாஸ்ரீ என்று அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதற்கிடையில்,அவருக்கு எதிராக சதி நடப்பதாக சந்தேகித்த நாராயண் சாகர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தை விட்டு வெளியேறி ராஜஸ்தானில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு, மீண்டும் கிராமத்திற்குத் திரும்பிய அவர், தனது சொத்துக்களை தன் அறக்கட்டளையிடம் ஒப்படைத்து, மேலாளரை பணியில் அமர்த்தியிருக்கிறார். தற்போது, ஆசிரம விவகாரங்களை மேற்பார்வையிடுகிறார். தன்னை குருவாக அடையாளப்படுத்திகொள்ளும் நாராயண் சாகர், காவி உடைகளை அணியாமல், பெரும்பாலும் வெள்ளை நிற கோட் சூட், டை அணிந்திருக்கிறார்.
நாராயண் சாகர், தன் சொற்பொழிவுகளில், “ நான் புலனாய்வுத் துறையில் பணியாற்றினேன். அப்போதே எனக்கு ஆன்மீகம் மீது பெரும் காதல் ஏற்பட்டது. அதனால், என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சேவை செய்ய வந்துவிட்டேன். என் சொற்பொழிவுகளின் போது, வழங்கப்படும் நன்கொடைகளிலிருந்து எந்தத் தொகையையும் நான் சேமித்து வைப்பதில்லை. அதை எனது பக்தர்களுக்காக செலவிடுகிறேன்” எனக் தெரிவித்திருக்கிறார்.
கோயிலுக்குப் போனால், பாதயாத்திரை போனால் கவலைகள் தொலையும் பாவம் போகும் புண்ணியம் கிடைக்கும் செத்தபிறகு சிவலோகம், வைகுண்டம் போகலாம் என இந்தப் பக்தர்கள் நம்புகிறார்கள். கல்வியின்மை, பொருளின்மை போன்றவையே இதற்கு முக்கிய காரணகள்.
இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் அருகில் உள்ள கிராமத்தில், உள்ளூர் மத குரு ஒருவரை கெளரவிக்கும் விதமாக சத்சங் எனும் மதப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. எஃப்.ஐ.ஆர் படி, ‘சத்சங்’ அமைப்பாளர்கள் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் கலந்துகொண்டனர். இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்தது. இதற்கிடையில், சத்சங்கத்தை ஏற்பாடு செய்த சாமியார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி குறித்த தகவல்களும் வெளியாகியிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள பகதூர் நகரி கிராமத்தின் விவசாய தம்பதி நன்னே லால் – கட்டோரி தேவி ஆகியோருக்கு பிறந்தவர்தான் நாராயண் சாகர். இவரின் இயர்பெயர் சூரஜ் பால் சிங். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், காவல்துறையில் காவலராகப் பணியாற்றி, 1990 இல் தனது வேலையை இராஜினாமா செய்திருக்கிறார். பின்னர் தனது பெயரை நாராயண் சாகர் ஹரி என்று மாற்றிக்கொண்டார்.
ஹரியின் சீடர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாராயண் சாகருக்கு மேற்கு உத்தரபிரதேசத்தில் கணிசமான ஆதரவாளர்கள் பெருகினர். அதனால், தன் கிராமத்திலேயே ஒரு ஆசிரமம் ஒன்றை அமைத்தார். அந்த ஆசிரமத்துக்கு பிற மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் கூட, பக்தர்கள் வருவார்கள்; அவர்களுக்கு ஆசிரமத்தில் தங்குமிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாராயண் சாகருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. காவல்துறையைவிட்டு வெளியேறி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவரை போலே பாபா என்று மக்களால் அழைக்கப்படுவதாகவும், அவரின் மனைவி மாதாஸ்ரீ என்று அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தன்னை குருவாக அடையாளப்படுத்திகொள்ளும் நாராயண் சாகர், காவி உடைகளை அணியாமல், பெரும்பாலும் வெள்ளை நிற கோட் சூட், டை அணிந்திருக்கிறார்.
நாராயண் சாகர், தன் சொற்பொழிவுகளில், “ நான் புலனாய்வுத் துறையில் பணியாற்றினேன். அப்போதே எனக்கு ஆன்மீகம் மீது பெரும் காதல் ஏற்பட்டது. அதனால், என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சேவை செய்ய வந்துவிட்டேன். என் சொற்பொழிவுகளின் போது, வழங்கப்படும் நன்கொடைகளிலிருந்து எந்தத் தொகையையும் நான் சேமித்து வைப்பதில்லை. அதை எனது பக்தர்களுக்காக செலவிடுகிறேன்” எனக் தெரிவித்திருக்கிறார்.
பாமர இந்துக்கள் பல மூடப் பழக்க வழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் தாங்கள் தரகு வேலை பார்ப்பதாகச் சொல்லும் பிராமணர்கள் –
1, மொட்டை போட்டு கொள்வதில்லை
2,கடவுளின் பெயரால் அலகு குத்தி கொள்வதில்லை
3, தீ மிதிப்பதில்லை
4,காவடி தூக்குவதில்லை
5,சாதி சண்டைகளுக்கு போவதில்லை
6, சொந்த காசில் பாலபிஷேகமோ,பஞ்சாமிர்த அபிஷேகமோ செய்வதே இல்லை
7,விலை வாசி உயர்ந்தாலும்,பொருளாதாரம் சீரழிந்தாலும் கவலைப் படுவதில்லை
8,தங்களை வருத்தி கொள்கிற எந்த ஒரு நேர்த்தி கடன்களை செய்வதில்லை
9,நீங்கள் பல்லக்கை தூக்கிவர அதில் பவனி வருவார்கள் கல்லோடு கல்லாக!
பிராமணர்களைப் பொறுத்தவரை கடவுள் என்பது உடலுழைப்பற்ற காசு சம்பாதிக்க பயன்படும் கல்லாலும் ,உலோகத்தாலும் ஆன கருவி மட்டுமே !