இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 1

இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 1

 ராஜ் ஆனந்தன்

February 16, 2012  மட்டக்களப்புஅம்பாறைவன்முறைகுடிமக்கள்போர்இஸ்லாமியர்வெளியேற்றம் குடியேற்றம்தாக்குதல்மக்கள்இலங்கைநிலம்தமிழர்அபகரிப்புதமிழ்திருகோணமலை முஸ்லிம்

இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியான வடக்குகிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதொன்றாகும். மிகவும் செழிப்பு மிக்க இம்மாகாணத்தில் கடல் மற்றும் தரை வளங்கள் அதன் முதுகெலும்பாகக் காணப் படுகின்றது. “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்” என்ற வாசகம் கிழக்கு மாகாணத்திற்கும் பொருந்தும். அந்தளவுக்கு சகல வளங்களும் நிறைந்த மாகாணமாகவே அது விளங்குகிறது . இந்த மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது

கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம் பரியமான நிலங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப் பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்.

கிழக்கு மாகாணத்திற்கு வியாபார நடவடிக்கைக்காகச் சென்ற முஸ்லிம்கள் அப்பகுதியில் தற்காலிகமாகத் தங்கி வியாபாரத்தில் ஈடுபட்டனர். சிலர் நிலச் சுவாந்திரர்களான தமிழர்களிடம் அவர்களின் விவசாய செய்கைக்கு கூலிகளாகவும் இருந்து தொழில் செய்து வந்தனர். ஆனால் பின்னர் வியாபாரத்திற்குச் சென்றவர்களும் விவசாயத்திற்கு கூலிகளாக இருந்தவர்களும் எவ்வாறு அங்கு தமது இருப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதும் காணி நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகி அப்பகுதி தமது தாயகப் பகுதி என எவ்வாறு மாற்றிக் கொண்டார்கள் என்பதும் இன்று மறைக்கப்பட்ட வரலாறாகவே உள்ளது. இன்று முஸ்லிம் புத்தி ஜீவிகளும் அரசியல் வாதிகளும் இந்த வரலாற்றைத் திரித்துக் கூறி கிழக்கை மட்டுமல்ல வடக்கையும் தமது தாயகப் பகுதியாக உரிமை கொண்டாடி வருகின்றனர்.

முஸ்லிம்களின் வரலாறு இவ்வாறு இருக்கும்போது இன்று வடமாகாணத்தில் தமது பூர்வீக நிலத்தில் இருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். கிழக்கில் இருந்து முஸ்லிம்களின் நிலங்கள் தமிழர்களால் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர் என்றெல்லாம் புதுக்கதை சொல்லுகின்றனர்.

இந்த முஸ்லிம் இனத்தவர்கள் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தில் இருந்துவிட்டார்கள் அதுவும் சில பகுதிகளில் செறிவாகவும் சில பகுதிகளில் பரந்துபட்டும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இஸ்லாமியத் தமிழர்களாக இருப்பதால் குறிப்பிட்ட பகுதியில் அவர்கள்வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்ற நிலையே தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல் தலைவர்களிடமும் இருந்து வந்தது. ஆனால் பிற்பட்ட காலத்தில் குறிப்பாக எண்பதுக்கு பின்னரான காலத்தில் அவர்கள் வடக்குக் கிழக்கு தமது தாயகம் என்று கூறும் அளவிற்கும் வந்துவிட்டதுடன் அத்தமீறிய குடியேற்றங்கள் மூலமாகவும் மிரட்டல்கள் மூலமாக தமிழர்களின் காணிகளை குறைந்த விலையில் சுரண்டியெடுத்தல் மூலமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தனர். இதனால் தமிழர்கள் படிப்படியாக தமது நிலங்களை முஸ்லிம்களிடம் இழந்தனர்.

முஸ்லிம்களின் இந்த வரலாறு தெரியாமல் தற்போதைய காலகட்டத்தில் சில ஊடகங்களும் சில அறிவாளர்களும் தமிழர்களால் முஸ்லிம்கள் வடக்குக் கிழக்கில் விரட்டியடிக்கப்பட்டனர் என கூறிவருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது மாத்திரமல்ல மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதுஉண்மை.

கிழக்கில் எவ்வாறு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றதோ அதேபோன்று தாமும் சளைத்தவர்களல்ல என்ற வகையில் முஸ்லிம் குடியேற்றங்களும் தமிழர் நிலப்பறிப்புகளும் இடம் பெற்றுள்ளன என்பதை குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை மையப்படுத்தி எழுதியுள்ள “அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்” என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.ஜயானந்தமூர்த்தி அவர்கள் இதை எழுதியுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2004 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு ஊடகவியலாளராகவும் இருந்தார்.

அந்த வேளையில் அவர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்றும் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்தும் தொடர் கட்டுரையாக இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு எழுதியிருந்தார். கடந்த வருடம் முற்பகுதியில் இதை ஒரு ஆவணப்பதிப்பாக நூலுருவில் வெளியிட்டுள்ளார். இந்த நூலே கிழக்கில் முஸ்லிம்களின் அத்துமீறிய குடியேற்றங்களுக்குச் சிறந்த ஆதாரமாக உள்ளது. இந்த நூலில் எழுதப்படாத இன்னும் சில தமிழ் கிராமங்கள் பற்றியும் திருகோணமலையில் தமிழ் கிராமங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்பன பற்றியும் அவரின் மற்றொரு புத்தகத்தில் வெளிவரவுள்ளதாக நூலாசிரியரான எஸ்.ஜயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். எனினும் இக்கட்டுரையில் திருகோணமலையில் முஸ்லிம்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றியும் தொட்டுச் செல்லப்படுகின்றது.

சரி இனி கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் நடந்த அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம். முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த குடியேற்றங்கள் தமிழ் மக்களின் வெறியேற்றம் என்பன பற்றி ஆராய்வோம்.

மட்டக்களப்பு மாவட்டம் வடக்காக வெருகல் வாவி தொடக்கம் தெற்காக நீலாவணை வரை நீண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் பரந்து கிடக்கின்றது. மேற்கு எல்லையாக பொலனறுவை மற்றம் பதுளை மாவட்டங்களின் சிங்கள கிராமங்கள் அமைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் (கோறளைப்பற்று) அமைந்துள்ள அழகிய தமிழ் கிராமம் மிறாவேடை தமிழ் கிராமம். இது மிகவும் பழமை வாய்ந்த கிராமம். இங்கு சுமார் 460 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. பாடசாலை, பிள்ளையார். காளிஅம்மன், முருகன் ஆலயங்களும் இருந்தன. இதந்த தமிழ் கிராமத்திற்கு அருகில் மிறாவோடை (முஸ்லிம்)மற்றும் மாஞ்சோலை ஆகிய முஸ்லிம் கிராமங்கள் இருந்தன.

இந்த முஸ்லிம் கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு அருகில் இருந்த மிறாவேடை தமிழ் கிராமத்தின் மீது ஒரு கண் இருந்துகொண்டே வந்தது. அங்கிருந்து தமிழ் மக்களை விரட்;டியடித்துவிட்டு அதை அபகரிக்க வேண்டுமென்பதே இதற்குக் காரணம். அதனால் அக்கிராம மக்கள் மீது முஸ்லிம்கள் தொடர்ந்து முறுகல் நிலையை ஏற்படுத்தி வந்தனர். இந்த முறுகல் நிலை மெல்ல மெல்ல அதிகரித்து முதல் தடவையாக 1985 இல் காணித்தகராறு ஒன்று காரணமாக தமிழர்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தினார்கள். இது பின்னர் இனக்கலவரமாக மாறியது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக இராணுவத்தினர் பலமாக இருந்தனர் இராணுவத்தினரின் உதவியுடன் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன கொள்ளையடிக்கப்பட்டன. இதனால் அக்கிராம மக்கள் அச்சம் காரணமாக முதல் தடவையாக கிராமத்தைவிட்டு வெளியேறினர்.

சில மாதங்களின் பின்னர் சுமுகநிலை வந்ததை அடுத்து தமிழ் மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியிருந்தனர். எனினும் அச்சநிலையும் இரு இனங்களுக்கிடையே முறுகல் நிலையும் இருந்து கொண்டே வந்தன. சில வருடங்கள் இந்த நிலை இருந்தாலும் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல முஸ்லிம் இளைஞர்கள் இலங்கை படையின் ஒரு பிரிவான ஊர்காவல் படையிலும் பொலிசிலும் இணைந்தனர். இதன் பின்னர் நிலமை மிகவும் மோசமானது. இரண்டாவது தடவையாக முஸ்லிம்களும் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்படி தமிழ் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் வன்முறையை முஸ்லிம்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர். இந்த வன்முறை இக்கிராமத்து தமிழர்கள் மாத்திரமின்றி மாவட்டத்தில் இருந்த முஸ்லிம் கிராமங்களுக்கு அருகில் இருந்த அனேகமான தமிழ் கிராமங்களில் நடந்தேறின. இவ்வன்முறையினால் மிறாவோடை தமிழ் கிராமம் ஏறக்குறைய முற்றாக அழிக்கப்பட்டது. மக்கள் நிரந்தரமாக இடம் பெயர்ந்து அயலில் இருந்த தமிழ் கிராமங்களான கிண்ணையடி, சுங்கான்கேணி, வாழைச்சேனை, வினாயகபுரம் ஆகிய கிராமங்களுக்குச் சென்றனர். அதன் பின்னர் முஸ்லிம்கள் திட்டமிட்டவாறு பல நூறு ஏக்கர் காணிகளைச் சுவீகரித்துக் கொண்டனர். இதனால் அக்கிராமத்தின் அரைவாசிக்பகுதிக்கு மேல் அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்தும் பெரும் பகுதியை அபகரித்துக் கொண்டனர். பாடசாலை கோயில்கள் பொதுக் கட்டிடங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன.

வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருந்த மற்றொரு தமிழ் கிராமம் தியாவட்டவான். இக்கிராமமும் மிகவும் பழமைவாய்ந்த தமிழ் கிராமம். ஆனால் அது தற்போது முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இக்கிராமம் கொழும்பு- மட்டக்களப்பு வீதியில் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகில் காவத்தமுனை முஸ்லிம் கிராமமும் ஓட்டமாவடி முஸ்லிம் பகுதியின் எல்லையும் அமைந்திருந்தன. தியாவட்டவான் கிராமத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஆலயங்கள் என்பனவும் இருந்தன. அருகில் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இருந்ததால் இக்கிராமம் மிகவும் வளர்ச்சி கண்டிருந்தது. இதனால் இக்கிராமத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது, இந்த கடதாசி தொழிச்சாலையைப் பற்றிக் கூறுவதானால் இலங்கையில் ஒரேயொரு கடதாசித் தொழிச்சாலையாக இது இருந்தது. கொழும்பு நாரகென்பிட்டியவில் இதன் உபநிலையம் உள்ளது. எண்பது காலகட்டத்தில் இக்கடதாசி தொழிச்சாலையில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தனர். அதில் சுமார் பத்து வீதத்திற்கும் குறைந்தவர்களே முஸ்லிம் தொழிலாளர்கள். அதிலும் உயர் பதவிகளில் இருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். முஸ்லிம்கள் சாதாரண தொழிலாளர்களாகவே இருந்தனர். இக்கடதாசித் தொழிச்சாலையும் தற்போது முஸ்லிம்களின் கைகளுக்குச் சென்று விட்டது.

சரி தியாவட்டவான் கிராமம் பற்றி…

(தொடரும்)தொடர்புடைய பதிவுகள்

3 Replies to “இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 1”
  1.  ariyan says: November 12, 2013 at 10:27 pmசிங்கள போலீஸ் மற்றும் ஊர் காவல் படையில் முஸ்லிம் கும்பல் அதிகம் . தமிழர்கள் பகுதியில் , சிங்களவனுடன் இணைந்து வன்முறை மூலம் தமிழர்கள் விரட்டி அடிக்க படுவது , இங்கு இருக்கும் திராவிட கும்பலுக்கு தெரியும் . பேசினால் ஓட்டு மற்றும் மதசார்பு இன்மை , போய் விடுமே .
  2.  “HONEST MAN” says: November 13, 2013 at 8:10 amதிரு ஆரியன் அவர்களே! சிங்கள முஸ்லிம்கள் தமிழ் இந்துக்களை விரட்டி அடிப்பதை மகிழ்ச்சியோடு கொண்டாடத்தான் இங்கிருக்கும் “”சல்மான் குர்ஷித்”” இவ்வளவு எதிர்ப்புகள் தெரிவித்தும் இலங்கை போகிறார். அதை மறைக்க “மனித நேய மக்கள் கட்சிகாரர்கள்” தமிழர்களுக்கு ஆதரவு காட்டுவது போல நாடகம் ஆடுகிறார்கள்.RSS ஐ குறை கூறுகிறார்கள்.. ஆனால் கடந்த ஆண்டு (2012) “Seva international Lanka ” என்ற அமைப்பின் மூலம் 25 கிராமங்களை தத்தெடுத்து தேவையான பணிகளை செய்தது. இந்த ஆண்டும் (2013) 25 கிராமங்களை தேர்ந்தெடுத்து பணிகளை விளம்பரம் இல்லாமல் அமைதியாக RSS செய்துவருகிறதுமோடிக்கு வரலாறு தெரியவில்லை என்று ஒரு மதிய மந்திரி கூறுகிறார். மோடி வரலாறு தெரியாமல் ஐ நா சபையில் இப்படி பேசினால் இந்தியாவின் மானம் கப்பல் ஏறிவிடும். என்று கிண்டல் அடித்தார். சென்னையில் ஒரு பொது கூட்டத்தில் ராஜீவ் காந்தி “இலங்கை தமிழர்கள் “””அனைவரும்””” இந்திய வமிசாவழியினர்” என்று பேசினார். இதற்கு வைகோ அவர்கள் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் வரலாறு தெரியாமல் ராஜீவ் பேசுகிறார் என்று ஆதரத்தோடு குற்றம் சாட்டுகிறார். (Courtesy இமயம் டிவி நாள் 11-11-13) இதற்கு என்ன பதில் சொல்ல்வார்கள் இந்த காங்கிரஸ் கட்சியினர்?இங்கே ஒரு மசூதி இடித்ததை பற்றி பேசும் போலி மதச்சார்பின்மைவாதிகள் இலங்கையில் 256 கோவில்களை புத்த மதத்தினர் தரைமட்டமாக்கியதை ஏன் எவனும் கண்டிப்பதில்லை?
  3.  சரவணன் says:September 19, 2016 at 3:05 pmஇலங்கையில் தமிழர்கள் சுய ஆட்சி கேட்டு போரை ஆரம்பித்தபோது தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அவர்களுக்கு உறுதுணையாகக் களத்தில் இறங்கியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்குப் பெரிதாகியிருக்காது. ஆனால், அவர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளம் காணவில்லை. இஸ்லாமியராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டார்கள்..அவர்களின் வழக்கமே அதுதான். எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தை அவர்கள் நேசிக்க மாட்டார்கள். பன்றிக்கு என்னதான் அறுசுவை உணவை படைத்தாலும் அது மலத்தையே விரும்பி உண்பதுபோல் அவர்களுக்கு வேறு எந்த அடையாளத்தின் மூலம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர்கள் இஸ்லாம் என்ற ஒன்றுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள். இலங்கையிலும் அதையே செய்தார்கள். அதுதான் ஈழ விடுதலைப் போரை பலவீனப்படுத்தியது. யாழ்பாணத்தில் இருந்து 80,000 பேரை போட்டது போட்டபடி புறப்பட்டுப் போகச் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. துரோகிகளைப் பின் வேறு எப்படி நடத்த முடியும்?அவர்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்தப் பிரச்னை எப்பதோ சுமுகமாகத் தீர்ந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம். ஈழ தமிழருக்கு முஸ்லீம்கள் செய்த துரோகங்கள்;.https://m.facebook.com/story.php?story_fbid=297855633928404&id=297403353973632&_ft_=top_level_post_id.297855633928404%3Atl_objid.297855633928404%3Athid.297403353973632%3A306061129499414%3A3%3A0%3A1475305199%3A1822259410444863717&__tn__=%2A

 ——————————————————————————————————————–

அரசியல் நிகழ்வுகள் பயங்கரவாதம்

இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2

 ராஜ் ஆனந்தன் February 24, 2012  போர்இஸ்லாமியர்வெளியேற்றம்குடியேற்றம்தியாவட்டவான்தாக்குதல்ஓட்டமாவடிமக்கள்சிறிலங்காஇலங்கைநிலம்ஏறாவூர்தமிழர்அபகரிப்புதமிழ்திருகோணமலைமுஸ்லிம்மட்டக்களப்புஅம்பாறைவன்முறைகுடிமக்கள்

கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்.

வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருந்த மற்றொரு தமிழ் கிராமம் தியாவட்டவான். இக்கிராமமும் மிகவும் பழமைவாய்ந்த தமிழ் கிராமம். ஆனால் அது தற்போது முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இக்கிராமம் கொழும்பு- மட்டக்களப்பு வீதியில் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகில் காவத்தமுனை முஸ்லிம் கிராமமும் ஓட்டமாவடி முஸ்லிம் பகுதியின் எல்லையும் அமைந்திருந்தன.

தியாவட்டவான் கிராமத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஆலயங்கள் என்பனவும் இருந்தன. அருகில் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இருந்ததால் இக்கிராமம் மிகவும் வளர்ச்சி கண்டிருந்தது. இதனால் இக்கிராமத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது…

இனி…

தியாவட்டவான் கிராமத்தில் முதற்தடவையாக 1983 ஆகஸ்ட் மாதத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவும் முஸ்லிம் காடையர்களால் அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டிலும் மற்றொரு தாக்குதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் காரணமாக பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. சிலர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் காரணமாக தமிழ் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இத்தாக்குதல்களுக்குப் பின்னாலும் இலங்கை படையினரின் உதவி இருந்தது. இலங்கை இராணுவத்தில் முஸ்லிம் இளைஞர்களும் இருந்தது மாத்திரமின்றி முஸ்லிம்கள் தமது வியாபாரம்,மரக்கடத்தல் மற்றும் கஞ்சாக் கடத்தல் போன்ற சுயநலத்திற்காக இராணுவத்தினருக்கு உதவிகளை செய்வதும் வழக்கமாக இருந்தது. தியாவட்டவான் கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள் அயற்கிராமங்களிலேயே நீண்டகாலம் அகதிகளாக இருந்தனர். பின்னர் அவர்கள் 1988 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினரின் வருகைக்குப் பின்னர் சொந்த கிராமத்திற்குச் சென்றனர்.

ஆனால் அங்கு தமது பெரும்பாலான காணிகளிலும் வீடுகளிலும் முஸ்லிம்கள் அத்துமீறிக் குடியேறியிருந்தனர். அங்கிருந்த தமிழ் கலவன் பாடசாலை அரபா முஸ்லிம் பாடசாலையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தின் அடையாளமே தெரியாமல் குடியேற்றம் இடம் பெற்றிருந்தது. எனினும் மக்கள் எங்கு முறையிட்டாலும் உரிய பலன் கிடைக்கவில்லை. சில தமிழ் வீடுகள் எஞ்சியிருந்தன. அதில் குறைந்த குடும்பங்கள் குடியேறினர். எனினும் மீண்டும் அவர்கள் மீதும் 1990 ஐ{ன் மாதத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் அவர்களும் முற்று முழுமாக வெளியேற்றி விட்டனர். இதனால் தற்போது இத்தமிழ் கிராமம் முற்று முழுதாக முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. தற்போது கடதாசி தொழிச்சாலை குறைந்த ஊழியர்களுடன் இயங்கினாலும் 90சதவீதமானவர்கள் முஸ்லிம்களே.

ஓட்டமாவடி கிராமம் பற்றியும் கூறவேண்டும். இது ஒரு கலப்புக் கிராமம்தான். ஆனால் கிராமத்தின் அதிகாரமும் அதன் மையப்பகுதியும் தமிழர்களுடையது. ஓட்டமாவடியில் 60 வீதமானவர்கள் முஸ்லிம்களாகவும் ஏனையவர்கள் தமிழர்களும் வாழ்ந்தனர். ஓட்டமாவடி கிட்டத்தட்ட ஒரு உபநகரமாகவே இருந்தது. பல கடைகளும் பெரும் கல்வீடுகளும் நகரின் மையப்பகுதியில் தமிழர்களுடையதாகவே இருந்தன. தமிழர்களின் வழிநடத்தலிலே இக்கிராமம் இயங்கியது. இதன் மையப்பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்தது. அது தமிழர்களின் வழிபாட்டுத்தலம். முஸ்லிம்களுக்குச் சற்றுத் தொலைவில் பள்ளிவாசல் இருந்தது.தமிழர்களின் மயானமும் மையப்பகுதியில் ஒரு புறத்தில் அமைந்திருந்தது. இக்கிராமத்தில் வாழ்ந்தவர்கள் இரு இனத்தினரும் ஆரம்பகாலத்தில் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர். ஆனால் 83 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிருந்த தமிழர்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பமாகின.

இத்தாக்குதல்கள் மெல்ல மெல்ல அதிகரித்து 85, 90 ஆம் ஆண்டுப்பகுதியில் அங்காங்கு நடந்த தமிழர் மீதான தாக்குதல்கள் போன்றே ஓட்டமாவடி தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. பெரும் கடைகள் வீடுகள் என்பன அடித்து நொருக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இதனால் தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த முடியாமல் அப்பகுதியை விட்டு வெளியேறினர். வெளியேறிய தமிழர்கள் கறுவாக்கேணி கிராமத்தில் தற்போது நிரந்தரமாக வாழுகின்றனர். ஓட்டமாவடியில் இருந்த தமிழர்களின் பல காணிகள் வீடுகள் என்பன முஸ்லிம்களினால் அத்துமீறிப் பிடிக்கப்பட்டன. சில காணிகளை மனச்சாட்சியுள்ள சில முஸ்லிம்கள் தமிழர்களிடம் காசு கொடுத்து வாங்கிக் கொண்டனர். அங்கிருந்த பிள்ளையார் அலயம் உடைக்கப்பட்டு தற்போது அதில் மீன்சந்தை கட்டப்பட்டுள்ளது. மயானம் அழிக்கப்பட்டு தபாலகம், பிரதேச செயலகம் என்பன கட்டப்பட்டுள்ளன.

இந்த ஓட்டமாவடி பகுதி 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழைச்சேனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குள்ளேயே இருந்தது. ஆனால் 90 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் இனவன்முறைகள் காரணமாக அரசாங்கம் தற்காலிகமாக இந்த பகுதியை நிருவாக ரீதியாக ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவாக (முஸ்லிம்) மாற்றப்பட்டு தற்போது முழுமையான முஸ்லிம் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் இந்த வன்முறைகள் மற்றும் தனியான செயலக நிருவாக பிரிவுகள் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு நிறையவே பங்கிருந்தது. அத்துமீறிய குடியேற்றங்களையும் இவர்களே அதிகம் தூண்டி விட்டனர். முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தல் போன்றவற்றையும் இந்த அரசியல்வாதிகளே திட்டமிட்டும் செய்தனர்.

இதன் மூலம் தமிழர்களின் பலத்தை அழிப்பது மாத்திரமின்றி போராட்டத்தையும் சிதைப்பதும் அதன் மூலம் கிழக்கில் முஸ்லிம்களுக்கென தனியான மாகாண அலகுகளை ஏற்படுத்துவதும் நோக்கமாக இருந்தது. இந்த வகையில் இந்த அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் காடையர்களின் நோக்கங்களில் தனியான பிரதேச செயலகம் அமைத்தது முதற்படியாக வெற்றி பெற்றது.

இந்த திட்டமிட்ட நடவடிக்கைகளின் பின்னணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஸ்ரப், தற்போதைய கட்சித் தலைவர் ரவூப் கக்கீம், பசீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா உட்பட பலர் செயற்பட்டனர். உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 85 ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் பரந்துபட்டோ அல்லது பல இடங்களிலோ வாழவில்லை. அவர்கள் பிரதான நெடுஞ்சாலையை அண்டியதாக கொழும்பு-மட்டக்களப்பு வீதியில் ஓட்டமாவடி, ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய மூன்று இடங்களிலுமே வாழ்ந்தனர். இந்த இடங்களை ஒட்டியதாக ஒரு சில கிராமங்களும் இருந்தன. ஆனால் தற்போது நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம் போன்றனவற்றால் குறைந்தது ஐம்பது கிராமங்கவரை அமைத்துள்ளனர்.

ஏறாவூரில் லிபியா மீதான தாக்குதலை எதிர்க்கும் முஸ்லிம்கள்…

ஓட்டமாவடியில் தமிழர்களை விரட்டியடித்ததுபோலவே ஏறாவூர் தமிழ் கிராமத்தில் இருந்தும் தமிழர்கள் விரட்டடியக்கப்பட்டனர். இந்த சம்பவங்களும் 83, 85, மற்றும் 90 ஜூன் மாதத்திலும் இடம் பெற்றன. ஏறாவுர் தமிழ் கிராமம் மிகவும் செழிப்பான கிராமம். அங்குள்ளவர்களில் அதிகமானோர் பொற்கொல்லர்களாகவும் பெரும் வியாபாரிகளாகவும் இருந்தனர். இதனால் ஏறாவூர் நகர் மிகவும் பரபரப்பாகவே எப்போதும் இருக்கும். அது மாத்திரமின்றி அங்கு வாரச்சந்தை நடப்பதும் வழங்கம். இத்தமிழ் கிராமத்திற்கு அருகில் இருந்தது ஏறாவூர் முஸ்லிம் பகுதி. அது அப்போது பெரியளவில் அபிவிருத்தியடைந்து இருக்கவில்லை.

இதனால் தமிழ் பகுதியைப் பார்த்து ஆத்திரமும் வெறுப்பும் அடைந்திருந்த முஸ்லிம்கள் சந்தர்ப்பம் பார்த்திருந்து தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல்களில் 90 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த தாக்குதலே மிகவும் மோசமானதாக அமைந்திருந்தன. இத்தாக்குதலால் ஏறாவூர் தமிழ் கிராமம் முற்றாக அழிக்கப்பட்டன. தற்போதும் அந்த அழிவுகள் அப்படியே கிடப்பதைக் காணலாம். இந்த மக்கள் இன்னமும் மீளக் குடியமரவில்லை. ஆனால் இக்கிராமத்தின் எல்லைப்பகுதிகள் மற்றும் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமத்துள்ளனர். இதுதவிர அப்பகுதியில் இருந்த தமிழ் மக்களுக்கான பல ஏக்கர்கணக்கான தோட்டக்காணிகள் அரச நிலம் என்பனவற்றை ஆக்கிரமித்து ஐpன்னாநகர், மிச்நகர் என்று பல கிராமங்களை புதிதாக அமைத்துள்ளனர்.

முஸ்லிம்கள் பல தமிழ் கிராமங்களை அபகரித்தது மாத்திரமின்றி பல புதிய கிராமங்களையும் அத்துமீறி அமைத்துள்ளனர். அது மாத்திரமின்றி இன்னும் சில தமிழ் கிராமங்களை அரைகுறையாக அத்துமீறி அபகரித்துள்ளதுடன் மேலும் பல கிராமங்களை குற்றுயிராக்கியுமுள்ளனர்.

கொழும்பு வீதியில் புனாணை கிராமத்திற்கு எதிராக இருந்த தமிழர்களின் காணிகள் மற்றும் வன இலாகாவுக்கான காணிகளில் திட்டமிட்ட முஸ்லிம் குடியேற்றத்தை கிஸ்புல்லா 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சராக இருந்தபோது ஏற்படுத்தினார். தற்போது அது பெரும் நகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் இந்த பகுதியிலும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனாணை கிழக்கு பகுதியிலும் தமிழர்களின் பூர்வீகக் காணிகளைச் சுவீகரித்து அத்துமீறிய குடியேற்றங்களை முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். இதற்கு பின்னணியில் தற்போது இருப்பவர் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி.

இதுதவிர முஸ்லிம்களால் குற்றுயிராக்கப்பட்ட பல தமிழ் கிராமங்கள் உள்ளன. ஆறுமுகத்தான்குடியிருப்பு, வாழைச்சேனை தமிழ் கிராமம், நாவலடிச்சந்தி, ஆரையம்பதி எல்லைக்கிராமம், புதுக்குடியிருப்பு, செல்வாநகர் என கிராமங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லுகின்றது.

அம்பாறைமாவட்டம்

அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக தமிழ் பாரம்பரிய கிராமங்களைக் கொண்டதாகவும் அவர்களே பெரும்பான்மையினத்தவராகவும் இருந்ததுடன் ஆங்காங்கே முஸ்லிம்களும் சிங்களவர்களும் திட்டுத்திட்டாக வாழ்ந்தனர். ஆனால் 1956 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தமிழர்கள் சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டு பல குடியேற்றங்களை செய்தனர். இதே காலப்பகுதியில் முஸ்லிம்களும் பல இடங்களில் குடியேறியும் தமிழர்களின் நிலங்களை கொள்ளையடித்தும் அத்துமீறியும் தமது இருப்பைப் பலப்படுத்திக் கொண்டனர். எனினும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் கண்மூடித்தனமாகக் குடியேற்றங்களைச் செய்தனர். இன்று அந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அடுத்த படியாக சிங்களவர்களும் அதற்கடுத்ததாகவே தமிழர்களும் உள்ளனர்.

(தொடரும்…)

இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2 – தமிழ்ஹிந்து (tamilhindu.com)

தொடர்புடைய பதிவுகள்
3 Replies to “இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2”
  1.  க்ருஷ்ணகுமார் says:February 24, 2012 at 1:22 pmஅன்பர் ராஜ் ஆனந்தன்,தங்கள் வ்யாசத்தின் முதல் பகுதியையும் இப்பகுதியையும் கூர்ந்து வாசித்து வருகிறேன். அரசியல் ரீதியாக ஈழம் ஹிந்துஸ்தானத்தின் ஆளுமையில் இல்லையெனினும் உணர்வுபூர்வமாக முழு லங்காபுரியையும் ஹிந்துஸ்தானத்தின் ஒரு அங்கமாகவே கருதுகிறேன்.ஹிந்துஸ்தானத்தின் வடவெல்லையாம் காஷ்மீரத்தில் ஈழத்தில் நடந்தேறியது போன்றே அக்ரமங்கள் நடந்தேறியுள்ளன. பின்னிட்டும் பாரத அன்னையின் சிரமாம் காஷ்மீரத்திலும் பாதமாம் லங்காபுரியிலும் கொடுமையான ஒரு ஒற்றுமை.காஷ்மீரத்தின் ஹிந்து ஆலயங்கள் ஸ்வதந்த்ர ஹிந்துஸ்தானத்தில் அரசியல் ஷரத்து 370ன் போர்வையில் சிதைக்கப்பட்டும் ஆங்குள்ள ஹிந்துக்கள் முழுமுச்சூடாக காஷ்மீர ப்ராந்தியத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டும் ப்ரச்சினையை ஊடகங்களோ அரசியல்வாதிகளோ ஒரு ஹிந்து ப்ரச்சினை என்று முன் வைப்பதில்லை. காஷ்மீர பண்டிதர்களின் ப்ரச்சினை என்றே இந்த ப்ரச்சினை முன்வைக்கப்படுகிறது.ஈழத்து ப்ரச்சினையும் தமிழர்களின் ப்ரச்சினை என்று மட்டும் தான் ஹிந்துஸ்தானத்தில் குறிப்பாக தமிழகத்தின் கழகக் கண்மணிகளாலும் ஏனைய அரசியல் வாதிகளாலும் முன்வைக்கப்படுகிறது. பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களும் ப்ரச்சினையை ஈழத் தமிழர்களின் ப்ரச்சினை என்றே உலகெங்கிலும் முன்வைப்பதாகவே ஊடகங்கள் வாயிலாக வாசித்து வருகிறேன்.வாஸ்தவத்தில் ஈழத்தில் நிலைமை வேறானது என்பது தங்கள் வ்யாசத்தின் மூலம் தெளிவாகப் புலனாகிறது. ஈழத் தமிழ் ப்ரச்சினை என்பது நிதர்சனத்தில் ஈழத் தமிழ் ஹிந்துக்களின் ப்ரத்யேகமான ப்ரச்சினை என்பது சாம்பலால் மறைக்கப்பட்ட தீ போன்று தெரிகிறது.ஏறாவூரின் தமிழ் பேசும் முஸல்மான்கள் ஈழத்திலே தொலைதூரத்தில் இருக்கும் லிபியர்களுக்காக குரல் கொடுக்கிறார்களாம். ஆனால் பக்கத்து க்ராமத்தில் இருக்கும் தங்கள் தாய்மொழியாம் தமிழிலேயே பேசும் ஹிந்துக்களின் வீடுகளை சூரையாடி அவர்கள் வழிபாட்டு ஸ்தலங்களை இடித்து நொறுக்கி மீன்சந்தையாக மாற்றுவார்களாம். என்ன அக்ரமம்.தாங்கள் பதிவு செய்துள்ள ஏறாவூர் முஸல்மான்களின் லிபியர்களுக்கான போராட்டம் சம்பந்தமான புகைப்படமே நிலைமையை வெட்ட வெளிச்சமாக்குகிறதே. இவர்களும் தமிழர்கள் தான் என்பது இவர்கள் கஷ்கத்திலும் பின்னணியிலும் ஏந்தியுள்ள பதாகைகள் மூலம் தெரிய வருகிறது. இவர்களால் முன்னிறுத்தப்படும் பதாகை அரபியிலோ அல்லது உருதுவிலோ எழுதப்பட்ட பதாகை. தெளிவாக அடுத்த படி இவர்கள் காண்பிக்கும் பதாகை ஆங்க்ல பதாகை.ஈழத்தில் தமிழ் மொழி பேசுபவர்களில் ஹிந்துக்கள், முஸல்மான்கள் மற்றும் க்றைஸ்தவர்கள் இருந்தும் சொல்லொணா ஹிம்சைக்கும் சூரையாடல்களுக்கும் இரையாகும் நிலை தமிழ் மொழி பேசும் ஹிந்துக்களுக்கு மட்டும் என்று புரிபடுகிறது.அதுவும் தமிழ் பேசும் முஸல்மான்கள் சிங்கள் மொழி பேசும் ராணுவத்தினருடன் கூட்டு சேர்ந்து ஹிந்து க்ராமங்களை சுரையாடுதலும் ஹிந்து ஆலயங்களை இடித்து நொறுக்குவதும் ஒரு புறம் நடக்கையில் சிங்கள் மொழி பேசும் பௌத்த மதத்தினர் ஹிந்து ஆலயங்களிலும் வழிபடுதலும் ஊடகங்கள் வாயிலாக பார்க்கவும் வாசிக்கவும் முடிகிறது.ஹிந்து ஆலயங்களில் தரிசனம் செய்யும் இந்த மூட சஹோதர சிங்கள பௌத்தர்கள் இன்றைக்கு தமிழ் ஹிந்துக்களுக்கு தாங்கள் தமிழ் பேசும் முஸல்மான்களுடன் சேர்ந்து நிகழ்த்தும் அக்ரமம் நாளை தங்கள் பௌத்த ஆலயங்களுக்கும் நிகழ இயலும் என்பதை ஆஃப்கனிஸ்தானத்திலும் சில நாட்கள் முன்னர் மாலத்தீவுகளிலும் நிகழ்ந்த நிகழ்வுகள் மூலம் அறியவொண்ணாரோ. ஒன்று நிச்சயம்.மணலே கயிறாகத் திரிக்கப்பட்டாலும் தமிழ் பேசும் லங்காபுரியின் க்றைஸ்தவர்களோ முஸல்மான்களோ தமிழ் ஹிந்துக்களுடன் லங்காபுரியின் தமிழ்க் கோவில்களில் வழிபட மாட்டார்கள் என்பது திண்ணம்.போதாதென்று குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக தமிழ்ப்போராளிகளும் சிங்கள் அரசும் வாடிகனின் ஆசியைப் பெற்ற நார்வேயை மத்யஸ்தம் செய்ய ஒப்புக்கொண்டதும் நார்வே குரங்கு கூடியிருந்து குடி கெடுத்ததும் சரித்ரம். தமிழ் என்ற போர்வையில் ஈழத்தில் கூத்தாடும் ஆப்ரஹாமியர் லங்காபுரியில் நிறுவ முனைவது அராபிய அராஜகமா அல்லது வாடிகன் அராஜகமா என்பது தெளிவே.புரிய இயலா விஷயம். தமிழ் பேசும் ஹிந்துக்களின் கோவில்களில் வழிபாடு செய்யும் சிங்களம் பேசும் பௌத்தர்கள் ஒரு புறம் இருக்கையில் ஆப்ரஹாமியருடன் கூட்டு சேர்ந்து தமிழ் ஹிந்துக்களை சூரையாடும் சிங்களவர்களும் இருக்கிறார்கள் என்பது.மேலும் ஈழத்து ஆப்ரஹாமியர் நோக்கம் மிகத் தெளிவு. தெளிவு கிட்டாத விஷயம் சாட்சிக்காரன் போன்ற நிலையில் இருக்கும் தமிழ் பேசும் ஈழத்து ஆப்ரஹாமியருடன் சமரசத்தைக் காட்டிலும் சண்டைக்காரன் போன்ற நிலையில் இருக்கும் சிங்கள மொழி பேசும் ஹிந்துப் பாரம்பரியத்தைச் சார்ந்த பௌத்தருடனான சமரசம் ஈழத்து தமிழ் ஹிந்துக்களுக்கு சற்றாவது நன்மை பயக்க வல்லதா என்பது.
  2.  சிறிலங்கா இந்து says:February 28, 2012 at 5:42 amநண்பர் க்ருஷ்ணகுமார்,
    இலங்கை தமிழ் சிங்கள மக்களிடையில் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. சிங்கள மக்கள் இந்து மதத்தின் பிரிவான பௌத்தைத்தையே பின்பற்றுபவர்கள். பெளத்தமக்கள் மட்டுமல்ல பெளத்த மதகுருமாரும் இந்து தெய்வங்களை வணங்குகின்றனர். முஸ்லிம்கள் தமிழராக இருந்தாலும் பேரீச்சம் மரம் நட்டு தங்களை அரபிகளாக கற்பனை பண்ணி அரபிகளுக்கு சேவை செய்பவர்களாக மாறிவிட்டனர். இலங்கை தமிழ் சிங்கள மக்களின் முரண்பாடுகள் சுயலாபம் அடைவதற்காக இருபகுதி அரசியல்வாதிகளால் உருவாக்கபட்டவை. விடுதலை போராட்டம் ,புலி என்று தோன்றியவை தன் சொந்த மக்களையே கொன்று தாங்க முடியாத அவலத்தையும் அழிவையும் தமிழருக்கு தந்தன. தமிழ் சிங்கள மக்கள் இலங்கையில் ஒற்றுமையுடன் வாழவேண்டியது காலத்தின் கட்டாயம். பாதிரிகளின் திட்டங்களுக்கு துணைபோக கூடாது.http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/02/120227_vincentsaraswathi.shtml
    இலங்கை இந்து மாணிவிகளுக்கு பாராட்டுக்கள்
  3.  சிறிலங்கா இந்து says:March 6, 2012 at 4:25 amயாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்ட வகையில் முஸ்லிம் சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கோரி உள்ளது சுவிற்சலாந்தை தளமாக கொண்டு இயங்கி வருகின்ற இந்து – பௌத்த சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் லோகேஸ்வரன் விடுத்து உள்ள அறிக்கை வருமாறு:-
    இலங்கையில் கட்டாய மத மாற்ற நடவடிக்கை சட்டத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது. கட்டாய மத மாற்ற நடவடிக்கை தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.ஆனால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள் காலம் காலமாக கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மாற்று சமயத்தவர்களை குறிப்பாக இந்துக்கள் பௌத்தர்கள் ஆகியோரை சலுகைகளையும் உதவுகளையும் வழங்கி மத மாற்றம் செய்து விடுவது தொடர்கதையாகவே இடம்பெற்று வருகின்றது. இதை இந்து – பௌத்த சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
    யாழ்ப்பாணத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை இலக்கு வைத்து இஸ்லாமிய சக்திகளால் கட்டாய மத மாற்ற நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. யாழ்ப்பாண முஸ்லிம்களின் இணையத் தளத்தில் இது சம்பந்தப்பட்ட செய்தி ஒன்று பிரசுரமானது. தற்போது அச்செய்தி தளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
    நாம் முஸ்லிம்களுக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால் இம்மதத்தவர்களின் கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளை எம்மால் அனுமதிக்க முடியாது.
    முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் அவர்களின் மார்க்கத்தின்படி ஒழுகுகின்றமையை நாம் தடுக்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மீது சமயப் பிரசார நடவடிக்கைகளை முடுக்கி விடுகின்றமையை ஒருபோதும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இஸ்லாமிய மார்க்கத்தை ஏனைய சமயத்தவர்களுக்கு விளக்குகின்றமை நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்ற செயல் என்று இஸ்லாமியர்கள் நியாயம் கற்பிக்கக் கூடும். ஆனால் ஏனைய சமயத்தவர்களின் மத நிகழ்ச்சிகளில் இதே முஸ்லிம்கள் பங்குபற்றுவார்களா? ஏனெனில் ஏனைய மதத்தவர்களின் சமய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுகின்றமை முஸ்லிம்களால் பாவத்துக்கு உரிய செயலாகவே காணப்படுகின்றது.
    யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் அவர்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அபிவிருத்தி கலாசார வளர்ச்சி மறுமலர்ச்சி ஆகியன சார்ந்த நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கட்டும். மாற்று மதத்தவர்களை இலக்கு வைக்கின்ற செயல்பாடுகளில் இறங்க வேண்டாம்.
    இவ்வாறான கட்டாய மத மாற்ற நடவடிக்கைகள் தொடர்கின்ற பட்சத்தில் எமது அமைப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய முறையில் சட்ட நடவடிக்கை எடுத்தே தீரும்.
    -http://thesamnet.co.uk/?p=34719
  4. இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2 – தமிழ்ஹிந்து (tamilhindu.com)
  5. —————————————————————————————————————

பயங்கரவாதம் அரசியல் பிறமதங்கள் தொடர் நிகழ்வுகள்

இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 3

 ராஜ் ஆனந்தன் March 15, 2012  இலங்கைஓட்டமாவடிசிறிலங்காஏறாவூர்மீனோடைக்கட்டுஜிகாத்இசுலாமிய தீவிரவாதம்ஜிஹாதித் தீவிரவாதம்அபகரிப்புஅம்பாறைதீவிரவாதம்இஸ்லாமியர்

கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர்.  கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்.

1983ல் இலங்கை இனக்கலவரம் ஆரம்பித்தது. அதற்கும் முன்பே, இலங்கை வாழ் இந்துத் தமிழர்களை அழிக்க ஆரம்பித்தனர் அமைதி மார்க்க இஸ்லாமியர்.  உள்நாட்டுப் போரில் தமிழர்களின் ஆளுகைக்கு வந்த எந்தப் பகுதியிலும் இஸ்லாமிய, பௌத்த வழிபாட்டுத் தலங்களோ, பாடசாலைகளோ, வீடுகளோ இந்துத் தமிழர்களால் அழிக்கப்படவில்லை. ஆக்கிரமிக்கப்படவில்லை. மாறாக இலங்கை ராணுவத்திலும், அரசியலிலும் செல்வாக்குப் பெற்ற இஸ்லாமியர்கள் தமிழர் பகுதிகளை அழித்து ஆக்கிரமிக்கத் தயங்கவே இல்லை. அமைதி மார்க்க இஸ்லாமியர் அழித்த ஏனைய கிழக்கு மாகாண தமிழர் கிராமங்கள் பற்றிய இறுதிப் பகுதி.

மீனோடைக்கட்டு கிராமம் மிக நீண்டகாலத் தமிழ் கிராமம்.

ஆனால்,  தற்போது அது ஒரு முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்தன. இக்கிராமத்திற்கு அயற்கிராமங்களாக முஸ்லிம் கிராமங்கள் இருந்தன. ஆனால், 1978 ஆம் ஆண்டு தொடக்கமே இத்தமிழ்க் கிராமம் மீது முஸ்லிம்கள் தாக்குதல்களை நடத்தினர். இதனால் எல்லைப்பகுதியில் இருந்த மக்கள் படிப்படியாகத் தமது இடங்களை  விட்டு வெளியேறத் தொடங்கினர்.

இஸ்லாம் அழிக்கும் இலங்கை இந்துக் கிராமங்களில் ஒன்று

அதன் பின்னர் 1985.07.12 ஆம் திகதி இக்கிராமத்தின் மீது முஸ்லிம்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கோயில்கள்,  வீடுகள் என்பன முற்றாக அழிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் முற்றாக வெளியேறிவிட்டனர். அதன் பின்னர் அக்கிராமம் முழுமையான முஸ்லிம் கிராமமாக மாறியது.

இஸ்லாமியப் பள்ளிவாசல்கள் கட்ட இடிக்கப்படும் இந்துக்களின் பாடசாலைகள்

தற்போது அங்கு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை உள்ளது. மீனோடைக்கட்டு என்று கூறினால் தற்போது அது எல்லோருக்கும் முஸ்லிம் கிராமமாகவே தெரியும். அவ்வாறு அதன் வரலாறே மாற்றப்பட்டுள்ளது.

மீனோடைக்கட்டைப்போன்றே ஒலுவில், பாலமுனை ஆகிய இரு முஸ்லிம் கிராமங்களை எல்லையாகக் கொண்ட கிராமம் திராய்க்கேணி கிராமம். இக்கிராமத்தையும் அழிக்கும் வகையிலும் அதை முஸ்லிம் கிராமமாக்கும் வகையிலும் பல முயற்சிகள் நடந்தன.

இக்கிராமத்தில் 360 குடும்பங்கள் இருந்தன. இங்கு வாழ்ந்தத் தமிழர்கள் மீது முதல் தடவையாக 1985 இல் தான் தாக்குதல் நடந்தது. இதனால் வழக்கம்போல் மக்கள் இடம் பெயர்ந்தனர். பின்னர் ஒரிரு ஆண்டில் மீண்டும் மீளக்குடியமர்ந்தனர்.

எம். ஹெச்.எம். அஷ்ரஃப் – தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்

ஆனால், திராய்கேணியின் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து குடியேறியிருந்தனர். ஆனால்,  இவர்களை எழுப்புவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தடைப்பட்டன. இதற்குக் காரணமாக இருந்தவர் அமைச்சர் அஸ்ரப்.

அவரின் நோக்கமே மீனோடைக்கட்டு கிராமம் போன்று திராய்க்கேணி கிராமத்தையும் முஸ்லிம் கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே.

இதற்குப் பின்னர் 06.08.90 ஆம் ஆண்டில் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் முஸ்லிம் காடையர்கள் இணைந்து  இக்கிராமத்தைத் தாக்கினார்கள். இத்தாக்குதலின்போது 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பெரியதம்பிரான் ஆலயவளவுக்குள் புதைக்கப்பட்டனர்.

வீடுகள், ஆலயம், பாடசாலை என்பன முற்றாக அழிக்கப்பட்டன. தற்போது இக்கிராமத்தின் பெரும் பகுதியில் முஸ்லிம்களே வாழ்கின்றனர்.

கரவாகு கிராமம் மிகவும் தொன்மை மிக்கது. இதைச் சாய்ந்தமருது தமிழ் டிவிசன் என்றும் அழைப்பதுண்டு. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இக்கிராமம் 1965 ஆம் ஆண்டுக்கு முன்னரே பறிபோய்விட்டது.

இக்கிராமத்தில் 660 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இங்கு கரவாகு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கதிரேசபிள்ளையார் ஆலயம், விஸ்ணு ஆலயம் மற்றும் ஐயனார் ஆலயம் என்பனவும் தொன்று தொண்டு இருந்து வந்தன.

தமிழர் வயல்களை வன்முறையால் வயப்படுத்திய இஸ்லாமியத் தலைவர்

அவை  மாத்திரமின்றி இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயிகளாக இருந்ததுடன் கரவாகு வட்டை என்ற பகுதியில் ஆயிரக்காணக்கான பொன்கொழிக்கும் நெல்வயல்கள் இவர்களிடம் இருந்தது. ஆனால், இக்கிராமத்தை 1965 ஆம் ஆண்டு முஸ்லிம் காடையர்கள் தாக்கியதில் அதற்கு ஈடுகொடுக்க முடியாது கிராம மக்கள் வெளியேறினர். அதன் பின்னர் இக்கிராமம் தனி முஸ்லிம் கிராமமாக மாறியது. இதற்கு அப்போது அங்கு அரசியல்வாதியாக இருந்த எம்.எஸ்.காரியப்பர் பின்னணியில்  இருந்தார்.

தமிழ்ப் பாடசாலை 70 ஆம் ஆண்டில் அல்.அமீன் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. கோயில்கள் இருந்த இடத்தில் பள்ளிவாசல்களும் அமைக்கப்பட்டன. அவர்களின் வயல்காணிகள் அனைத்தும் முஸ்லிம்களின் உடமையானது.

வீரமுனை கிராமத்தையும் பல தடவைகள் முஸ்லிம்கள் இராணுவத்தினரின் உதவியுடன் அழித்தனர். அக்கிராமத்தின் பெரும் பகுதியில் அத்துமீறிக் குடியேறினார்கள். தற்போதும் முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளில் சுதந்திரமாக வாழ்ந்து அனுபவித்து  வருகின்றனர்.

இந்த வீரமுனைக்கிராமம் வரலாற்றைக் கொண்ட கிராமம். இங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது முதன் முதலில் 1954 இல் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் 1958 இல் தாக்குதல் நடத்நதது. இவையனைத்தும் முஸ்லிம்களினாலேயே நடத்தப்பட்டன. பின்னர் 12.081990 இல் தாக்கப்பட்டு பின்னர் முழுமையாக அழிக்கப்பட்டது. இத்தாக்குதலை விசேச  அதிரடிப்படையினரும் முஸ்லிம்களுமே செய்தனர்.

850 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வந்தன. ஆரம்பம் முதல் இறுதிவரையான இத்தாக்குதல்களின் போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். வீரமுனை கிராமம் தற்போதுவரை அதன் பழைய நிலையை அடையவில்லை.

இக்கிராமம் மாத்திரமின்றி அருகில் இருந்த தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களான சம்மாந்துறை தமிழ்ப்  பிரிவு, கோரக்கர்கோயில் கிராமம், மல்வத்தை புதுநகரம், கணபதிபுரம், வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரன்சோலை ஆகிய கிராமங்களும் அழிக்கப்பட்டதுடன் முஸ்லிம் குடியேற்றங்கள் செய்யப்பட்டன.

அழிக்கப்பட்ட இந்துக் கோயிலில் அலைபாயும் தமிழ் சிறார்

திருகோணமலை மாவட்டம் 

திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் தலைநகராக உள்ளது. இங்கு பல வளங்களும் உள்ளதுடன் இயற்கைத் துறைமுகமும் அமைந்துள்ளது.

இங்குள்ள வளங்கள் மற்றும் புவிசார் அமைப்பைக் காரணங்களாகக் கொண்டு சிங்களக் குடியேற்றங்கள் மிகவும் துரித கதியில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன; மாத்திரமின்றி, உலக நாடுகளும் இங்குத் தமது தளங்களை அமைத்துள்ளன. இந்த வகையில் முஸ்லிம்களும் தங்கள் இருப்பைப் பலப்படுத்தும் வகையில் பல அத்துமீறிய குடியேற்றங்களைத் தமிழ் பகுதிகளில் செய்துள்ளன.

பாழாக்கப்பட்ட பாலாலி கோவில்

பள்ளிக்குடியிருப்பு கிராமம் மிகவும் செழிப்பான தமிழர்களின் ஆதிக்கிராமம். இதற்கு அருகில் தோப்பூர் கலப்புக் கிராமம் உள்ளது. ஆனால், 1990 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்குடியிருப்புக் கிராமத்தின் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தத் தொடங்கினர். இதனால் அங்கிருந்த மக்கள் அச்சம் காரணமாக வெளியேறத் தொடங்கினர். எனினும், பல குடும்பங்கள் அச்சத்திற்கு மத்தியிலும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்குடியிருப்பு கிராமத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இக்பாலநகர் என்ற புதிய கிராமத்தை முஸ்லிம்கள் உருவாக்கியுள்ளனர். இக்கிராமம் தற்போது பரபரப்பான வளமுடைய கிராமமாக மாறியுள்ளது. ஆனால், ஆதிக்கிராமமான பள்ளிக்குடியிருப்பு தற்போது பின்தள்ளப்பட்டுத் தேய்ந்து போய்விட்டது.

உப்பாறு கிராமம் பல தடவைகளில் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்கானது. இக்கிராமம் கிண்ணியாவுக்கு அருகில் உள்ளது. கிண்ணியாவில் இரு இனத்தவரும் இரு வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இங்கும் அடிக்கடி கலவரங்களை முஸ்லிம்கள் ஏற்படுத்தினாலும், தமிழ் மக்கள் அந்நேரத்தில் இடம் பெயர்ந்தாலும், பின்னர் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி விடுவது வழக்கம். ஆதலால் உப்பாறு மக்கள் 1983, 1985 ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களின்போது இடம் பெயர்ந்தபோதிலும் பின்னர் நிலமை சீரானதும் மீளக்குடியேறினர். எனினும், முஸ்லிம் காடையர்களும் ஊர்காவல் படையினரும் தொடர்ந்து இக்கிராம மக்கள் மீது தாக்குதலை நடத்தியே வந்தனர். இறுதியில் 90 ஆம் ஆண்டு இக்கிராமத்தின் மீது பாரிய அளவு தாக்குதல் நடத்தியதால் தமிழர்களின் வீடுகள், பாடசாலை, ஆலயங்கள் சேதமாக்கப்பட்டன.

இந்நடவடிக்கைகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர்தௌபீக் மற்றம் அப்துல் மஜீத் போன்றோர் பின்னணியில் இருந்தனர். தற்போது உப்பாறு கிராமம் முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. அங்கிருந்த றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை தற்போது முஸ்லிம் வித்தியாலயமாக மாற்றப்பட்டுள்ளது.

சிவன்கோயில், பிள்ளையார் கோயில்கள் இருந்த இடங்களில் பள்ளிவாசல்களும் பொதுக் கட்டிடங்களும் அமைக்கப்பட்டுச் செறிவான குடியேற்றம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் கற்று வந்த றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலை அயற்கிராமத்திற்கு இடம் பெயர்ந்து இயங்கி வருகின்றது.

குரங்குபாஞ்சான் கிராமமும் அப்பகுதி நிலங்களும் தமிழர்களின் சொத்து. ஆனால், 90 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் இக்கிராமத்தின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்த முஸ்லிம்கள் தற்போது குடியேற்றத்தைச் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இறக்கக்கண்டி கிராமத்தின் பெரும் பகுதியும் தற்போது தமிழர்களிடமிருந்து பறிபோயுள்ளது. இங்கிருந்தும் தமிழர்களை விரட்டியடிப்பதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர்தௌபீக் காரணமாக இருந்தார். இவரின் பின்னணியில் முஸ்லிம்கள் மக்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கும் முஸ்லிம் குடியேற்றம் நடைபெற்றுள்ளது. தமிழர்கள் தற்போது சிறுபான்மையாகவே இக்கிராமத்தில் வாழுகின்றனர்.

மூதூர் திருகோணமலை மாவட்டத்தின் ஒரு உபநகரமாகவே இருந்தது. நீண்ட காலமாகத் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். சில முஸ்லிம்களும் வாழ்ந்தனர். நகரின் பெரும் வியாபார நிலையங்கள் அனைத்தும் தமிழர்களுடையதாகவே இருந்தன. ஆனால், இந்த நகரைத் தமது கையில் கொண்டுவர வேண்டுமென முஸ்லிம்கள் திட்டமிட்டனர். இந்த நிலையில் பல தடவைகளில் மூதூர் நகரமும் தமிழர்களின் சொத்துக்களும் எரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டங்களில் மூதூர் மக்கள் அயற்கிராமங்களுக்குப் பாதுகாப்புத்தேடிச் செல்வது வழக்கம். எனினும், தொடர்ந்து இத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இடங்களை முழுமையாக விட்டுவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், தற்போது அங்கு முஸ்லிம்களே அதிகம் வாழுகின்றனர். நகரின் பெரும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களாக முஸ்லிம்களே உள்ளனர். தற்போது 40 சதவீதத்திற்கும் குறைவான தமிழர்களே மூதூரில் நிரந்தரமாக வாழுகின்றனர்.

இதுபோன்று இன்னும் பல தமிழ் கிராமங்களின் சோக வரலாறும் கறைபடிந்த சம்பவங்களும் உள்ளன. குறிப்பாகப் பார்க்கப்போனால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் கிராமங்களே அழிக்கப்பட்டன; அத்துமீறிக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டன. இது பெரும்பான்மை சிங்களவர்களாலும் சிறுபான்மை முஸ்லிம்களினாலுமே இடம் பெற்றன.

இந்தியர் அறியாத இந்துத் தமிழர் துயர்

போர் நடைபெற்ற வேளைகளில் சில சிங்கள முஸ்லிம் கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின என்பது உண்மை. ஆனால், திட்டமிட்ட முறையில் எந்த இனத்தவருடைய கிராமங்களும் தமிழர்களினால் அழிக்கப்படவோ அல்லது ஆக்கிரமிக்கப்படவோ இல்லை. சிங்கள, முஸ்லிம் இனத்தவரின் வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் என்பன அழிக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லை. ஆனால் தமிழர்களின் பல வணக்கத்தலங்கள், பாடசாலைகள் என்பன முஸ்லிம்களினால் அழிக்கப்பட்டும் பின் தங்களின் இனத்திற்கென மாற்றப்பட்ட சம்பவங்களே வரலாறாக உள்ளன.

(இத்தொடர் முடிவுற்றது.  இஸ்லாமியத் தீவிரவாதம் முடியுமா ?)

இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 3 – தமிழ்ஹிந்து (tamilhindu.com)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply