தமிழ்ப் பேரரசுகள்

தமிழ்ப் பேரரசுகள்

உலகிலே நீண்ட காலம் ஆட்சி செய்த பேரரசுகளின் பட்டியலில் முதல் நான்கில், மூன்று தமிழ் பேரரசு என்பதனை மாணவர்கள் கேட்டு அதிர்ந்தார்கள். அவர்களுக்குரிய பிரிட்டிஷ் பேரரசு நாற்பத்தி எட்டாவது இடத்தில் இருந்தது.

சேர ஆட்சிகாலம் – 430 கி.மு. – 1102 = 1532 ஆண்டுகள்

சோழ ஆட்சிகாலம் – 301 கி.மு. – 1279 = 1580 ஆண்டுகள்

பாண்டியர் ஆட்சிகாலம் – 580 கி.மு. -1345 = 1925 ஆண்டுகள்

❤️#பாண்டியர்கள்❤️

#முற்காலப்பாண்டியர்கள்

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

நிலந்தரு திருவிற் பாண்டியன்

முதுகுடுமிப்பெருவழுதி

பெரும்பெயர் வழுதி

#கடைச்சங்கப்பாண்டியர்கள்

முடத்திருமாறன்

மதிவாணன்

பசும்பூண் பாண்டியன்

பொற்கைப்பாண்டியன்

இளம் பெருவழுதி

அறிவுடை நம்பி

பூதப்பாண்டியன்

வெற்றிவேற் செழியன்

கூடக் காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

உக்கிரப்பெருவழுதி

மாறன் வழுதி

நல்வழுதி

குறுவழுதி

இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்

தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன்

வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி

நம்பி நெடுஞ்செழியன்

#இடைக்காலப்பாண்டியர்கள்

கடுங்கோன் → கி.பி. 575-600

அவனி சூளாமணி → கி.பி. 600-625

செழியன் சேந்தன் → கி.பி. 625-640

அரிகேசரி → கி.பி. 640-670

ரணதீரன் → கி.பி. 670-710

பராங்குசன் → கி.பி. 710-765

பராந்தகன் → கி.பி. 765-790

இரண்டாம் இராசசிம்மன் → கி.பி. 790-792

வரகுணன் → கி.பி. 792-835

சீவல்லபன் → கி.பி. 835-862

வரகுண வர்மன் → கி.பி. 862-880

பராந்தகப்பாண்டியன் → கி.பி. 880-900

#பிற்காலப்பாண்டியர்கள்

மூன்றாம் இராசசிம்மன் → கி.பி. 900-945

அமரப்புயங்கன் → கி.பி. 930-945

சீவல்லப பாண்டியன் → கி.பி. 945-955

வீரபாண்டியன் → கி.பி. 946-966

வீரகேசரி → கி.பி. 1065-1070

மாறவர்மன் சீவல்லபன் → கி.பி. 1132-1162

சடையவர்மன் சீவல்லபன் → கி.பி. 1145-1150

பராக்கிரம பாண்டியன் → கி.பி.1150-1160

சடையவர்மன் பராந்தக பாண்டியன் → கி.பி.1150-1162

சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1162-1175

சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1175-1180

விக்கிரம பாண்டியன் → கி.பி. 1180-1190

முதலாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1190-1218

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1216-1238

இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1238-1239

இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1239-1251

சடையவர்மன் விக்கிரமன் → கி.பி. 1241-1254

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1251-1271

இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1251-1281

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1268-1311

மாறவர்மன் விக்கிரம பாண்டியன் → கி.பி. 1268-1281

இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1276-1293

#தென்காசிப்பாண்டியர்கள்

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1422-1463

மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1429-1473

அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1473-1506

குலசேகர பாண்டியன் → கி.பி. 1479-1499

சடையவர்மன் சீவல்லப பாண்டியன் → கி.பி. 1534-1543

பராக்கிரம குலசேகரன் → கி.பி. 1543-1552

நெல்வேலி மாறன் → கி.பி. 1552-1564

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் → கி.பி. 1564-1604

வரதுங்கப்பாண்டியன் → கி.பி. 1588-1612

வரகுணராம பாண்டியன் → கி.பி. 1613-1618

கொல்லங்கொண்டான் → (தகவல் இல்லை)

❤️#சோழர்கள் ❤️

#முற்காலச்சோழர்கள்

செம்பியன்

எல்லாளன்

இளஞ்சேட்சென்னி

கரிகால் சோழன்

மாற்றார் இடையாட்சி

நெடுங்கிள்ளி

நலங்கிள்ளி

கிள்ளிவளவன்

கோப்பெருஞ்சோழன்

கோச்செங்கணான்

பெருநற்கிள்ளி

#இடைக்காலச்சோழர்கள்

விசயாலய சோழன் → கி.பி. 848–881

ஆதித்த சோழன் → கி.பி. 871–907

பராந்தக சோழன் I → கி.பி. 907–955

கண்டராதித்தர் → கி.பி. 955–962

அரிஞ்சய சோழன் → கி.பி. 962–963

சுந்தர சோழன் → கி.பி. 963–980

ஆதித்த கரிகாலன் → கி.பி. 966–971

உத்தம சோழன் → கி.பி. 971–987

இராசராச சோழன் I → கி.பி. 985–1014

இராசேந்திர சோழன் → கி.பி. 1012–1044

இராசாதிராச சோழன் → கி.பி. 1018–1054

இராசேந்திர சோழன் II → கி.பி. 1051–1063

வீரராஜேந்திர சோழன் → கி.பி. 1063–1070

அதிராஜேந்திர சோழன் → கி.பி. 1067–1070

#சாளுக்கியசோழர்கள்

குலோத்துங்க சோழன் I → கி.பி. 1070–1120

விக்கிரம சோழன் → கி.பி. 1118–1135

குலோத்துங்க சோழன் II → கி.பி. 1133–1150

இராசராச சோழன் II → கி.பி. 1146–1173

இராசாதிராச சோழன் II → கி.பி. 1166–1178

குலோத்துங்க சோழன் III → கி.பி. 1178–1218

இராசராச சோழன் III → கி.பி. 1216–1256

இராசேந்திர சோழன் III → கி.பி. 1246–1279

❤️#சேரர்கள் ❤️

பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் → கி.பி. 45-70

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் → கி.பி. 71-129

பல்யானைச்செல்கெழுகுட்டுவன் → கி.பி. 80-105

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் → கி.பி. 106-130

சேரன் செங்குட்டுவன் → கி.பி. 129-184

ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் → கி.பி. 130-167

அந்துவஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)

மாந்தரஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)

வாழியாதன் இரும்பொறை → கி.பி. 123-148

குட்டுவன் இரும்பொறை → (காலம் தெரியல)

பெருஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 148-165

இளஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 165-180

பெருஞ்சேரலாதன் → கி.பி. 180

கோப்பெருஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)

குட்டுவன் கோதை → கி.பி. 184-194

மாரிவெண்கோ → காலம் தெரியல

வஞ்சன் → காலம் தெரியல

மருதம் பாடிய இளங்கடுங்கோ → காலம் தெரியல

கணைக்கால் இரும்பொறை → காலம் தெரியல

கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை → காலம் தெரியல

பெருமாள் பாஸ்கர ரவிவர்மா → கி.பி. 8ஆம் நூற்றாண்டு

❤️#பல்லவப்பேரரசுகள் ❤️

#முற்காலப்பல்லவர்கள்

பப்பதேவன்

சிவகந்தவர்மன்

விசய கந்தவர்மன்

புத்தவர்மன்

விட்ணுகோபன் I

#இடைக்காலப்பல்லவர்கள்

குமாரவிட்ணு I

கந்தவர்மன் I

வீரவர்மன்

கந்தவர்மன் II II கி.பி. 400 – 436

சிம்மவர்மன் I II கி.பி. 436 – 477

கந்தவர்மன் III

நந்திவர்மன் I

#பிற்காலப்பல்லவர்கள்

சிம்மவர்மன் III

சிம்மவிஷ்ணு கி.பி. 556 – 590

மகேந்திரவர்மன் I கி.பி. 590 – 630

நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கி.பி. 630 – 668

மகேந்திரவர்மன் II கி.பி. 668 – 669

பரமேஸ்வரவர்மன் கி.பி. 669 – 690

நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கி.பி. 690 – 725

பரமேஸ்வரவர்மன் II கி.பி. 725 – 731

நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கி.பி. 731 – 796

தந்திவர்மன் கி.பி. 775 – 825

நந்திவர்மன் III கி.பி. 825 – 850

நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கி.பி. 850 – 882

கம்பவர்மன் (வட பகுதி) கி.பி. 850 – 882

அபராஜிதவர்மன் கி.பி. 882 – 901

இவண்

சோழன்.திரு.இங்கர்சால், நார்வே

வள்ளுவர் வள்ளலார் வட்டம்

நேற்றைய வகுப்பில் மாணவர்களிடம், நீங்கள் அறிந்த பேரரசுகள் Empire Dynasty பெயர்களைக் கூறுங்கள் என்ற கேள்விக்கு, அவர்கள் பிரிட்டிஷ் எம்பயர், பிரஞ்சு எம்பயர், ரோமன் எம்பயர் என்று உலக பேரரசு பெயர்களைக் கூறினார்களே தவிர, தமிழ் பேரரசின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாறு பயிற்றுவிக்கப்பட வில்லை. ஏன் நாங்கள் படித்த காலத்தில் கூட அப்படியொரு கல்வி இருந்ததாக நினைவிலில்லை. சேர சோழ பாண்டியர் எனும் சொல்லாடல் மூன்று மன்னர்கள் என்று குறுகிய புரிதலை அந்தக் காலத்தில் ஏற்படுத்தியிருந்தது.

இலக்கியங்களில் மன்னர்கள் பெயர்கள் வரும்போது, அதனை ஒரு பேரரசின் அங்கமாக நாம் பார்த்ததில்லை. இவற்றை உடைக்க முதலில் நம்மிடம் இருந்த பேரரசின் மன்னர்களின் பெயர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொன்னியின் செல்வன் கதையில் இருக்கும் 5 சோழப் பெயர்களைப் பொதுவாக எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் சேரப்பேரரசு, பாண்டியப்பேரரசு பெயர்களைக் கேட்டால், ஒன்று இரண்டு என்று திக்கித்திணறி நிற்கிறார்கள். இது மிகவும் வேதனைக்குரியது. இதனைக் கட்டுடைப்போம் அதற்காக நான் தொகுத்த பட்டியல் கீழ்வருமாறு. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துரையுங்கள், முடிந்தவரை பரப்புங்கள், நன்றி.

பதிவு ~ நாணல்

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply