தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்தார் ஜனாதிபதி; காணி விடுவிப்பு குறித்து இணக்கம்

மிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்தார் ஜனாதிபதி; காணி விடுவிப்பு குறித்து இணக்கம்

 2017-08-23

பாராளுமன்ற வளாகத்தில் 22-08-2017 செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜாவும், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்;டதோடு இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தலைமையில் முல்லைத்தீவு, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதிகளும் பங்கேற்றனர்.

இதன்போது முதலில் கேப்பாபுலவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் பொதுமக்களுக்கு சொந்தமான நிலத்திலிருந்து படையினர் வெளியேறுவதற்கு காணப்படும் தாமதங்கள் என்ன? என கூட்டமைப்பு எம்.பிக்கள் கேள்வி எழுப்பியதோடு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறித்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர், படைத்தரப்பினர், உள்ளிட்டவர்களுக்கு எழுதிய கடிதங்கள் அவற்றுக்கான பதில்கள் குறித்தும் சுட்டிக்காட்டினார்கள்.

இதன்போது பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கேப்பாபுலவில் 111ஏக்கர்களை விடுவிப்பதற்காக படையினருக்கு 148மில்லியன் ரூபாவை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே படையினர் மாற்று இடத்திற்கு விரைந்து செல்லும் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளனர் என்றார்.

அதனையடுத்து நாங்கள் இன்னும் ஒருசில மாதங்களில் மாற்று இடத்திற்கு செல்லவுள்ளோம். மக்களின் காணிகளை விரைவில் விடுவிப்போம் மேலும் கேப்பாபுலவில் ஏனைய 70ஏக்கர் நிலத்தினை விடுப்பதற்கான நடவடிக்ககைகளையும் முன்னெடுத்துள்ளதோடு பொது மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியையும் வழங்குகின்றோம் என படைத்தரப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சமயத்தில் அவ்வாறு மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கினாலும் அவர்கள் தொழில் புரிவதற்கான ஏது நிலைமைகள் எதுவும் இல்லை. அவர்களிடத்தில் உபகரணங்கள் இல்லை. அனைத்தையும் இழந்த நிலைமையில் தான் இருக்கின்றார்கள். ஆகவே அவர்களுக்கு வாழ்வதார உதவிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பு எம்.பிக்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் மயிலிட்டி துறைமுகப்பகுதி விடுவிக்கப்பட்டாலும் அங்கு மக்கள் தங்கியிருந்து தொழில் புரிவதற்கான நிலைமைகள் இல்லை. ஆகவே அதற்குரிய நடவடிக்கைகளையும் ஜனாதிபதி விரைந்து எடுப்பதோடு அந்தப்பகுதி மக்களுக்கான மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்ககைளையும் எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு எம்.பிக்கள் கோரினார்கள்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு கீழ் காணப்படும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைச்சின் ஊடாக நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாகவும் மயிலிட்டு உட்பட வடக்கில் ஏனைய பகுதிகளில் படைத்தரப்பினரிடத்தில் உள்ள காணிகளை படிப்படியாக விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து இரணைமடுவில் கடற்படையினர் தங்கியுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது குறித்தும் கூட்டமைப்பு எம்.பிக்களால் கேள்வி எழுப்பபட்டது. இச்சமயத்தில் கடற்படைத்தளபதி சமுமளித்திருக்காத நிலையில் அவருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள ராடரை மாற்று இடமொன்றுக்கு கொண்டு செல்வது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

 

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply