பிள்ளைகளைச் சான்றோனாக்குதல் பெற்றோர் கடனே!

பிள்ளைகளைச் சான்றோனாக்குதல் பெற்றோர் கடனே!

நக்கீரன்

புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு அந்நிய  சமூக,  பொருளாதார,  பண்பாட்டு சூழலில் வாழ்கிறார்கள்.

ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம், கோயில், குளம், ஊர் கூடித் தேர் இழுத்தல் என்பதெல்லாம் புலம் பெயர் நாடுகளில் கிடையாது.  எல்லோரும் தனித் தனித் தீவுகளில் வாழ்கின்ற சூழ்நிலை இருக்கிறது. அடுத்த வீடு தமிழ் வீடாக இருந்தாலும் உறவு ஒரு புன்சிரிப்போடு நின்றுவிடுகிறது.

ஊரில் அனுபவித்த ஓய்வு இங்கு கிடையாது. பனி என்றாலும் வெயில் என்றாலும் ஓடி,  ஓடி உழைக்க வேண்டும். உழைப்பில் பாதி குடிக்கூலிக்குப் போகிறது.  சொந்த வீடென்றால் காப்பகத்துக்கு அடமானக் கொடுப்பனவாகப் போகிறது.

பெற்றோர்களுக்குப் பிள்ளைகளோடு பேசப் பொழுதில்லை. பிள்ளைகளுக்குப் பெற்றோரிடம் பேச நேரமில்லை. பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் பல்பண்பாட்டுச் சூழலில் படிக்கிறார்கள்.  இந்தப் பின்னணியில் பிள்ளைகளை சான்றோனாக வளர்த்தெடுப்பது எப்படி?

அன்று அரசர்கள் இருந்தார்கள். அரச அவையில் அமைச்சர்கள் இருந்தார்கள். தமிழ்ப் புலவர்கள் இருந்தார்கள். அமைச்சர்கள்  அரசர்கள் செங்கோல் வளையாது ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

குற்றமற்ற கோவலனை தீர ஆராயாது கொன்றுவிட்ட பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தன் பிழையை உணாந்ததும் “மன்பதைக் காக்கும் தென்புலக் காவல் என் முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள்” எனக் கூறி மயங்கி விழுந்து உயிரை விடுகிறான்.

தமிழ்ப் புலவர்கள் அரசர்கள் குடிமக்களை எப்படி ஆள வேண்டும் குடிமக்கள் எப்படி ஓழுக வேண்டும் என்பதை  நீதி நூல்கள் மூலம் எடுத்துரைத்தார்கள்.

சங்ககால அவ்வையார் நாட்டினது இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொறுத்தது என்ற கருத்தை ஒரு பாடலில் (புறம் 187)  குறிப்பிடுகிறார்.

நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

நிலமே! நீ நாடாகவோ, காடாகவோ, பள்ளமான இடமாகவோ அல்லது மேடான இடமாகவோ எப்படி இருந்தாலும் சரி.  அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய்.  நாட்டுக்குச் சொன்னது ஒரு சமூகத்துக்கும் பொருந்தும்.

பண்பாடு மாறக் கூடியது. ஒரு காலத்தில் சரியென ஒத்துக் கொண்டவை இன்னொரு காலத்தில் சரியென ஒத்துக் கொள்ளப்படவில்லை. பரத்தையர் உறவு, கள் குடித்தல் சங்க காலத்தில் ஒழுக்க ஈனமாகக் கொள்ளப்படவில்லை.  ஆனால் விழுமியங்கள் (Values) அப்படியில்லை. அவை என்றுமே மாறாதவை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஓர் உயர்ந்த விழுமியம். பொய் சொல்லலாகாது என்பது ஓரு சமூக விழுமியம். பொய் பெரும்பாலும் சொல்லப்படும் என்பது ஒரு சமூக உண்மை.//

பண்டைக்காலம் தொட்டே தமிழில் பல நீதி நூல்கள் எழுந்துள்ளன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக் கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டாலும், நீதி நூல் என்று கூறுமளவுக்குத் தனியான நூல் எதுவும் எழுதப்படவில்லை. சங்கம் மருவிய காலத்து நூல்களின் தொகுப்பான  பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள 18 நூல்களுள் 11 நீதி நூல்களாகக் காணப்படுகின்றன. இவற்றுள் புகழ் பெற்றதும், பரவலாக அறியப்பட்டதும், வெளிநாட்டு அறிஞர்களின் கவனத்தை ஈர்த்ததுமான நூல் திருக்குறளாகும்.

தமிழ்ச்  சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது.  திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ்  இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர்.  இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சமூகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு. அதனால் திருக்குறள் உலகப் பொதுமறை என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. தமிழிலக்கியப் பரப்பில் மிகக் கூடுதலாக பிறமொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட ஒரே ஒரு நூல் என்ற சிறப்பு திருக்குறளுக்கு உண்டு. திருக்குறளை அடுத்து நாலடியாரும் உடன் வைத்து எண்ணத்தக்க அளவு சிறப்படையது ஆகும். .

அறம் என்ற சொல் நல்வழி, ஒழுங்கு, நீதி, ஈகை போன்ற பொருளைக் குறிக்கின்றது.  மானுடகுலத்தை உருவாக்கும் சில மாறா அடிப்படைகள்தான் அறம் என்று சொல்லப்படுகின்றன. எளியோனை வலியோன் ஒறுத்தல் கூடாது என்ற அறத்தின் அடிப்படையில்தான் சமூகமே உள்ளது. தமிழர் சிந்தனைப்புலத்தில் அறம் ஒரு முக்கிய கருத்துருவாகும். ஒழுக்கம் என்பது அறத்தின் ஒரு கூறு.   அது அறத்தின் அடிப்படையில் அமைந்திருக்கையில் அது நல்லொழுக்கம் எனவும்  அறமீறலை உடைத்தாயின் அது  தீய ஒழுக்கம் எனவும் கூறப்பட்டது. 

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.   (அதிகாரம் ஒழுக்கம் உடைமை – குறள் 131)

என்ற குறள் ஒழுக்கத்தின் நோக்கத்தைச் சொல்கிறது. ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால்  அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் கருதப்படுகிறது.  ஒரு செயல்பாடு சிறப்பு அளிக்கும் என்றால் அது ஒழுக்கமே ஆகும். இதனை ஆங்கிலத்தில் “Propriety of conduct leads to eminence it should therefore be preserved more carefully than life”  எனச் சொல்லலாம்.

நீதி நூல்கள் பல தமிழில் காலந்தோறும் தோன்றி வந்துள்ளன. அகப்புறப் பாடல்கள், காப்பியம், சிற்றிலக்கியம் எல்லாமே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று  உறுதிப்பொருள் பற்றிப் பாடப்பட்டவை.  ஆனாலும் நீதியை மட்டும் போதிக்கும் வகையில் எழுந்த நூல்களை  தமிழ் இலக்கிய வரலாற்றில் தொடர்ச்சியாகவே காண்கிறோம்.

நீதி  நூல்கள் கொலை, களவு, கள், காமம், பொய்  போன்ற  பாவங்களை  நீக்குக என்கின்றன.  பிறரை ஏசாதே, புறங்கூறாதே, வன்சொல் சொல்லாதே, பிறரை எளியர் என்று எள்ளி நகையாடாதே, ஏதில் பெண் தழுவாதே, உயிர்கள் மாட்டு அன்பு கொள். மானம் போற்றுக; புலால் உண்ணற்க, பொருளாசை கொள்ளற்க; அருளொடு அறம் செய்க; சீற்றம் நீங்குக; தவம் செய்க; தேர்ந்து தெளிக, இளமையும் இன்பமும் செல்வமும் நில்லாது நீங்கும் கல்வியும் கைப்பொருளும் இல்லாதார் சொல் புல்லாய் மதிக்கப் பெறும் என்று முழுக்க முழுக்க, அறம் சொல்வதாகவே அமைகின்றன.  

அவ்வையார் என்ற பெயரில் தமிழகத்தில் குறைந்தது நான்கு பெண்பால் புலவர்கள் இருந்துள்ளனர்.  இதில்  ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி பாடியவர் இடைக்காலத்தில் வாழ்ந்த அவ்வையார்.  இந்த நூல்கள் பிள்ளைகள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தவை ஆகும்.

ஒரு அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வையார் அருளிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற நூல்கள்  பள்ளிக்கூடஙகளில்  பாடமாக வைத்துப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.   ஆத்திசூடி முதல் வாக்கியம்  ‘அறஞ்செய விரும்பு’ என்பதாகும்.  இங்கே அறம் என்றால் ஈகை என்று பொருள்.  தன்னிடம் உள்ளவற்றில் ஒரு பகுதியையாவது தேவையுள்ளவருக்கு கொடுக்க  வேண்டும் என்பது இதன் பொருள். இதனால், பிறருக்கு உதவும் குணம் உண்டாகிறது. ஈகை என்ற இந்தக் குணம், மிகவும் உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. இப்படி அவ்வையாரால் இயற்றப்பட்ட ஆத்திசூடியில் ‘அவ்வியம் பேசேல்’ என்ற ஒரு நீதியும் உள்ளது. அவ்வியம் என்றால் பொறாமை. பொறாமை கொண்ட மனிதன், பிறரைப் பற்றிப் பொய்யாக எதையாவது சொல்லுவான். பிறரை ஏளனம் செய்வான் அல்லது கடுமையான சொற்களால் தரக்குறைவாகப் பேசுவான் அல்லது பயனில்லாத சொற்களைச் சொல்லிக் கொண்டிருப்பான். இந்த நான்கும் நால்வகை குற்றங்களாகும். பிறருடைய செம்மையான வாழ்க்கையை கண்டு பொறாமைப்படாதே என்கிறார் அவ்வையார். 

எமது மூதாதையர் தங்கள் பிள்ளைகள் மற்றவர்களால் சான்றோன் எனப் புகழப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்கிறார் திருவள்ளுவர். அதாவது தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்ற காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்றவர்கள் சான்றோன் எனப் புகழுமாறு வளர்த்தல் வேண்டும். அதற்குத் திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, வெற்றிவேற்கை, மூதுரை, நன்னெறி போன்ற  நீதி நூல்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டில் சொல்லிக் கொடுக்க வேண்டும். எனது மகன் மருத்துவனாக, பொறியியலாளனாக வரவேண்டும் என்று ஆசைப்படுவதை விட அவனைச் சான்றோனாக வளர்க்க வேண்டும் என எண்ணல் வேண்டும். ஒழுக்கம் இல்லாத கல்வியாலும் செல்வத்தாலும் பயன் இல்லை.  இது உலக நீதி..


ஏ.பி. நாகராஜன் இயக்கிய சரஸ்வதி சபதம் எனும் இப்படத்தின் மையக்கருத்தை விளக்கும் இனிய பாடல்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மக்களுக்கு ஒழுக்க நீதிகளை அறிவுறுத்துவதற்காக எழுந்த நூல் நீதி நூல் எனப்படுகின்றது. பண்டைக்காலம் தொட்டே தமிழில் பல நீதி நூல்கள் எழுந்துள்ளன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக் கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டாலும், நீதி நூல் என்று கூறுமளவுக்குத் தனியான நூல் எதுவும் கிடைக்கவில்லை. சங்கம் மருவிய காலத்து நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள 18 நூல்களுள் 11 நீதி நூல்களாகக் காணப்படுகின்றன. இவற்றுள் புகழ் பெற்றதும், பரவலாக அறியப்பட்டதும், வெளிநாட்டு அறிஞர்களின் கவனத்தை ஈர்த்ததுமான நூல் திருக்குறளாகும்.

இவற்றையும் பார்க்கவும் ஆத்திசூடி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.

தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற பொருட்டு அவ்வையின் ஆத்தி சூடியைக் கொண்டு கற்பிப்பதை நல்லாசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.

பல பாலுறவுக்கான தேடல் என்பது மனித இயல்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஓர் உயர்ந்த விழுமியம். பொய் சொல்லலாகாது என்பது ஓரு சமூக விழுமியம். பொய் பெரும்பாலும் சொல்லப்படும் என்பது ஒரு சமூக உண்மை.

ஆகவே இப்போது பாலுறவு கட்டவிழ்ந்துள்ளது என்பது ஒரு மனப்பிரமை. உண்மையில் எல்லா காலகட்டத்திலும் இதே குரலை முந்தைய தலைமுறை எழுப்பியிருக்கிறது.

இன்னும் ஒன்று உண்டு. ஒழுக்கம் அனைவருக்கும் ஒன்றாக இங்கே எங்கும் இருக்கவில்லை. அறைக்குள் அடைக்கப்பட்ட பெண்ணுக்கும் வயலில் வேலைசெய்யும் பெண்ணுக்கும் ஒழுக்க நெறி வேறு வேறுதான். சாதிக்குச் சாதி இடத்துக்கு இடம் ஒழுக்கம் மாறுபடுகிறது.

அறம் வேறு ஒழுக்கம் வேறு என்ற புரிதல் நமக்குத்தேவை. மானுடகுலத்தை உருவாக்கும் சில மாறா அடிப்படைகள்தான் அறம் என்று சொல்லப்படுகின்றன. எளியோனை வலியோன் அழித்தல் கூடாது என்ற அறத்தின் அடிப்படையில்தான் சமூகமே உள்ளது. அதைப்போல பல அறங்கள் உள்ளன. உண்மை, கருணை, சமத்துவம் போன்று பல அறங்களால் ஆனது நம் வாழ்க்கை.

“கல்வியையும் செல்வத்தையும் அடக்கிவிட்டு வீரத்திற்கே முதலிடம் கொடுக்க நினைக்கும் சூராதி சூரனே, மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ? உன்னையறிந்தோ யாம் தமிழை ஓதினோம்” என்ற பாட்டைப் பாடி “எங்களுக்கெல்லாம் ஏற்கெனவே வழி காட்டியிருக்கிறான் ஒரு ஆசுகவி. உன்னைப் போல் அதிகார ஆணவம் படைத்த ஒரு அரசன் அலைகள் பாயும் கடலைக் காட்டி, தண்ணீரா, இவ்வாழியும் எனக்கடிமை என்றானாம், அதற்கு என்னைப் போல் ஒரு புலவன் உலகெலாம் உமக்கடிமை, நீரோ எமக்கடிமை என்றானாம். அம்மொழியே பொன்மொழியாகக் கொண்டு சூளுரைக்கிறேன், மண்ணும் விண்ணுமறியக் கூறுகிறேன், என் எண்ணும் எழுத்தும் அன்னை கலைவாணியைப் பாடுமேயல்லாது காக்கை கழுகு தின்னும் மனித சடலத்தைப் பாடவே பாடாது, கல்வி செல்வத்துக்கடங்காது, வீரத்திற்கடி பணியாது, உன் மிரட்டலும் நடக்காது, அப்படி மிரட்டினால் சுட்டெரிக்கும் என் சொல்லுக்கு உன் உயிரே தப்பாது”.

கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றில் எது உயர்ந்தது என ஒரு சமயம் கலைமகள், அலைமகள், மலைமகள் மூவருள்ளும் போட்டி ஏற்பட, அவர்கள் முறையே வித்யாபதி எனு்ம் ஒரு ஊமையைப் பேச வைத்துப் புலவனாக்கியும், ஒரு பிச்சைக்காரியை செல்வாம்பிகை எனும் பெயருடன் செல்வபுரம் எனும் நாட்டுக்கு அரசியாக ஆக்கியும், ஒரு கோழையை வீரனாக ஆக்கி, வீரமல்லன் எனும் பட்டம் பெறச் செய்து, செல்வபுரத்தின் தளபதியாக ஆக்கியும் இவர்கள் மூவரையும் மோதவிட்டுத் தமது அருள் பெற்றவரே பிற அனைவரிலும் உயர்ந்தவர் என சாதிக்க முயல்கின்றனர்.

இறுதிக்கட்டத்தில் வீரமல்லன் அனைவரையும் அடக்கியாளும் நிலை பெற்று செல்வாம்பிகையையும் வித்யாபதியையும் தண்டனைக்குள்ளாக்கும் காட்சியில் வித்யாபதியாக நடிக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும் வசனமே மேற்கண்டது.

ஏ.பி. நாகராஜன் இயக்கிய சரஸ்வதி சபதம் எனும் இப்படத்தின் மையக்கருத்தை விளக்கும் இனிய பாடல்:
கல்வியா செல்வமா வீரமா?

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? – இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? – இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!      புறநானூறு (பொன்முடியார்)

ஒரு பெண்ணுக்கு தலையாய கடமையாக குழந்தைப் பேறும், தந்தைக்கு தலையாய‌ கடமை தன் குழந்தையை சான்றோனாக்குதலும் அவனுக்கு வேல் வடித்து தருதல் கொல்லனுக்கு கடமையாகவும், அப்படித் தயாராகி நிற்கும் தீரமான‌ இளைஞனுக்கு செழுமை நிரம்பிய நிலப்பரப்பை அரசாளக் கொடுப்பது வேந்தனுக்கு தலைக் கடமையாகவும் சொல்கிறது புறநானூறு.அப்படி சான்றோன் என பேர் பெற்ற அந்த இளைஞனுக்கு தலையாய கடமை, போரில் களிறை(யானையை) வென்று தன் வீரத்தை நிலை நிறுத்துவதே என்கிறார் பொன்முடியார்.

இரண்டு வெவ்வேறு சூழல்களில் உருவாக்கப்பட்ட இரு சொற்கள் மட்டும்தான் அவை. கிட்டத்தட்ட ஒன்றையே குறிக்கின்றன. கல்ச்சர் என்ற சொல் கலாச்சாரம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டது. டி.கெ.சிதம்பரநாத முதலியார் அதே சொல்லை பண்பாடு என்று மொழியாக்கம் செய்தார்.

ஆனால் நடைமுறையில் நுட்பமான ஒரு வேறுபாடு உள்ளது. ஒரு கலாச்சாரத்தில் உள்ள நன்மை தீமை இரண்டையுமே குறிக்கும் சொல்லாக உள்ளது கலாச்சாரம். ஆயுதக்கலாச்சாரம், வெடிகுண்டுக் கலாச்சாரம் என்றெல்லாம் சொல்கிறோமே. கல்ச்சர் என்பது இருள் ஒளி இரண்டும் கலந்ததே என்ற புரிதல் இச்சொல்லுக்குப் பின்னால் உள்ளது. கலாச்சாரம் என்ற சொல்லுக்கு சரியான சொற்பொருள் கலை+ ஆசாரம் என்பது. ஆனால் நடைமுறையில் அந்த தளம் இல்லாமலாகிவிட்டிருக்கிறது.

பண்பாடு என்பது பண்படுதலை மட்டுமே குறிக்கிறது. எதிர்மறைப்பண்புகளுக்கு இடமில்லை. எந்த ஒரு சமூகமும் அதன் வளர்ச்சிப்போக்கில் பண்படவே செய்கிறது என்ற ஒரு இலட்சியவாத அணுகுமுறை இச்சொல்லின் பின்னால் உள்ளது. ஆகவே எங்கெல்லாம் மேம்படுதல், நுண்மையாதல் என்ற பொருள் உள்ளதோ அங்கே பண்பாடு என்ற சொல்லை கையாளலாம்.

ஆங்கிலத்தில் கல்ச்சர் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. முக்கியமாக இரண்டு. அமெரிக்கன் கல்சர் என்பது வேறு கல்சர்ட் பெர்ஸன் என்பது வேறு. நமக்கு இரு சொற்கள் உள்ளன. அமெரிக்கக் கலாச்சாரம் என்றும் பண்பாடுள்ளவர் என்றும் சொல்கிறோம்.

தமிழ்க் கலாச்சாரம் என்றால் தமிழ்நாட்டின் கறுப்பும் வெளுப்பும் கலந்த வாழ்க்கைமுறையைச் சொல்கிறது. தமிழ்ப்பண்பாடு என்றால் தமிழ் மரபு நம் கைகள் வரை கொண்டுவந்து சேர்த்துள்ள மேன்மைகளை மட்டுமே குறிக்கிறது.

தனிமனித வாழ்க்கை நெறிப்படும்பொழுது சமுதாயம் மேம்படும் என்பது அவர் நம்பிக்கை. இந்த நம்பிக்கையே, 1900ஆம் வருடம் செப்டம்பரில்,ஒழுக்கம், சிற்றிலஞ்சேராமை, அருளுடைமை, தவம், கள்ளாமை, நிலையாமை, திருக்குறள் முதலதிகார ஆராய்ச்சி ஆகிய தலைப்புகளில் சிறந்த சொற்பொழிவுகள் ஆற்றி பாராட்டுப் பெற்ற வ.உ.சி, சுப்பிரமணிய சிவா தொடங்கி வைத்த மேடைப்பேச்சை – அரசியல் சொற்பொழிவை

ஒழுக்கம். ஆறாவது அறிவின் படைப்பு என்று நான் கருதுகிறேன். மிருகங்களுக்கு இல்லாத ஒன்று இந்த ஆறாவது அறிவு. பெரியார் அதையே பகுத்தறிவு என்று சொன்னார். பெரியார் போன்றவர்கள் ஒழுக்கத்தை கடவுள்சக்தியின் பாற்பட்டதாக முன்வைத்திடவில்லை. கடவுள் இல்லாவிட்டாலும் பகுத்தறிவு ஒழுக்கத்தை உருவாக்கும், அதுவே மேலான ஒழுக்கம் என்றார் அவர். கடவுள்பெயரை சொல்லிக்கொண்டு ஒழுக்கமீறல்களைச் செய்வதையே பெரியார் கண்டித்தார். அடாத தன்மைகளைச் செய்வதற்கு கடவுளைத் தவறாகப் பயன்படுத்தாதே என்றுதான் பெரியார் சொன்னதாக நினைவு.

அதிகாரம் – மக்கட்பேறு

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் – இல்லறவியல் அதிகாரம் – மக்கட்பேறு – குறள் 62:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

கலைஞர் உரை:

பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

மு.வ உரை:

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

சாலமன் பாப்பையா உரை:

பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் சேரா.

அற/நீதி நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (மேலே பார்க்க)
நல்வழி
கொன்றைவேந்தன்
ஆத்திசூடி
நீதிவெண்பா
நீதிநெறிவிளக்கம்
உலகநீதி
நல்வழி வாக்குண்டாம் நீதிவெண்பா
நீதிநெறிவிளக்கம்
கல்வி ஒழுக்கம்
வாக்குண்டாம்/மூதுரை
நன்நெறி
சிறுபஞ்சமூலம்
பழமொழி நானூறு
ஆசாரக்கோவை
முதுமொழிக்காஞ்சி
ஆத்திசூடி – அவ்வையார்
கொன்றைவேந்தன் – அவ்வையார்
மூதுரை – அவ்வையார் (நீதி)
நல்வழி – அவ்வையார் (நீதி)
தமிழிலக்கிய வளர்ச்சிக்கு சமண பௌத்த அறிஞர்கள் ஆற்றிய பங்களிப்பு

தமிழிலக்கிய வளர்ச்சி சங்க காலத்திலிருந்து நோக்கப்படுகிறது. கி. பி. முதலாம் நூற்றாண்டு சங்க காலம் எனக் கொள்ளப்பட்டு அக்காலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் சங்க இலக்கியங்களாக கருதப்படுகின்றன. சங்க காலத்திற்கு பிற்பட்ட காலம் சங்க மருவிய காலமாக நோக்கப்படுகிறது. சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் வியந்து போற்றின.

சங்கப் பாடல்கள் சமய சார்பற்றவையாகக் காணப்பட்டன. திருமுருகாற்றுப்படை மட்டும் முருகனின் அற்புதத்தைக் கூறும் சமயப் பாடலாக விளங்குகிறது. கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ள சில பாடல்கள் பிற்காலத்தில் பெருந்தேவனார் என்பவரால் பாடப்பெற்றவையாகும்.

திருக்குறள் சமய சார்பற்ற நூலாகக் கருதப்படுகிறது. அதனால் தான் அனைத்து சமயத்தவரும் ஏற்றுக் கொள்ளும் இலக்கியமாக அது போற்றப்படுகிறது. சங்கமருவிய காலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் அறநெறிக் கருத்துக்களை எடுத்துக் கூறுபவையாகக் காணப்படுகின்றன. சங்கமருவிய கால இலக்கியங்கள் பலவும் சமண பெளத்த அறிஞர்களால் எழுதப்பட்டவை. கீழ்க்கணக்கு நூல்களுள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, ஏராதி, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணையெழுபது என்னும் நூல்களை எழுதியவர்கள் சமண அறிஞர்களேயாவர். அவர்கள் தம் சமயக் கருத்துக்களை தாம் எழுதிய இலக்கியங்களில் புகுத்தியுள்ளனர்.

சங்க காலத்தில் காதலும் போரும் என வாழ்ந்த மக்களுக்கு உலகியலில் மனச்சலிப்பு தோன்றியது. இந்த விரக்தி நிலையிலிருந்து விடுபடும் வகையில் சங்கமருவிய கால இலக்கியங்களின் தோற்றம் காணப்படுகிறது. கள்ளுண்டு களித்து காதலில் ஈடுபட்டு போர் புரிந்து வாழ்ந்த மக்கள் மனமாற்றத்தை வேண்டி நின்றனர். இப்படித்தான் வாழ வேண்டும் என அறக்கருத்துக்களை போதிப்பனவாக சங்கமருவிய காலத்து இலக்கியங்கள் விளங்கின. இதனால் இந்த இலக்கியங்களை எழுதிய சமண பெளத்த அறிஞர்கள் மீது அக்கால மக்கள் பெரும் மதிப்பை கொண்டிருந்தனர்.

சிலப்பதிகார நூலாசிரியராகிய இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர். அவர் படைத்த கோவலனும் அவர்களுக்குத் துணை வந்த கெளந்தி அடிகளும் சமண சமயத்தவராக சித்தரிக்கப்படுகிறார்கள். எனினும் ஏனைய தெய்வ வாழ்த்துப் பாடல்களும் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகார காப்பியத்தையொட்டிய கண்ணகி வழிபாடு தமிழகத்திலும் இலங்கையிலும் காணப்படுகிறது. இந்துக்களும் பெளத்தர்களும் கண்ணகியை பெண் தெய்வமாகப் போற்றி வழிபடுகின்றனர். நல்லை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருக்கு முற்பட்ட காலத்தில் வடபகுதியில் பல கண்ணகி அம்மன் ஆலயங்கள் காணப்பட்டன.

சமண சமயத்தைச் சேர்ந்த சீமாட்டிக்கு கோயில் கட்டி வழிபடுவது தவறு என நல்லை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலவர் வலியுறுத்தினார். வடபகுதியில் காணப்பட்ட பல கண்ணகி அம்மன் ஆலயங்கள் முத்துமாரி அம்மன் ஆலயங்களாக மாற்றம் பெற்றன. சைவ சமயத்தை நிறுவுவதில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆற்றிய பங்களிப்பு பிறிதாக நோக்கப்பட வேண்டியதொன்றாகும். ஆனாலும் இன்றளவும் தமிழ் மக்கள் மத்தியில் கண்ணகி வழிபாடு காணப்படுகிறது.

தமிழில் எழுந்த காவியங்கள் பெரும்பாலும் சமண சமயத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கின. சிந்தாமணி, வளையாபதி என்னும் பெருங் காப்பியங்களும், ஐஞ்சிறு காவியங்களும் சமண சார்புடையன. கொங்குவேளிர் ஒருவர் எழுதிய உதயணன் கதையும் சமண சமயத்தைச் சார்ந்ததாகும். இதற்கு பெருங்கதை என்ற பெயர் விளங்குகிறது. இது ஆசிரியப் பாவால் எழுதப்பட்டது.

இதுவும் சீவகன் கதையைப் போன்ற அமைப்பை உடையது. மேரு மந்தர புராணம் என்னும் காவியத்தை வாமனாச்சாரியார் என்பவர் இயற்றினார். இதுவும் சோழர் காலத்து எழுந்த நூலாகும். தமிழில் தோற்றம் பெற்ற புராணங்கள் அனைத்தும் காவியங்கள் எனக் கூறப்படுகின்றன. காவியங்களுக்கு புராணங்கள் எனப் பெயரிடுவது மரபாகிவிட்டது.

தமிழ் இலக்கண நூல்கள் பெரும்பாலும் சமணப் புலவர்களாலேயே எழுதப்பட்டன. நம்பி அகப்பொருள் எழுதிய நாற்கவிராச நம்பியும், யாப்பருங்கல விருத்தியும் காரிகையும் எழுதிய அமிதசாகரரும், நேமி நாதமும் வச்சணந்தி மாலையும் எழுதிய குணவீர பண்டிதரும் நன்னூல் எழுதிய பவனந்தியாரும், உரையாசிரியர்களுள் இளம்பூரணரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்களென்று கூறப்படுகிறது. இவர்கள் தாங்கள் இயற்றிய நூல்களில் கடவுள் வாழ்த்திலேனும் கருத்துரையிலேனும் தம் சமய சார்பைப் புலப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு இலக்கிய இலக்கணங்களை எழுதி சமணர்கள் பெரும் புலவர்களாகவும் பேராசிரியர்களாகவும் தமிழுக்கு தொண்டாற்றியுள்ளனர். பல்லவர் காலத்தில் வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரும் ஆரம்பத்தில் தருமசேனர் என்ற பெயரில் சமண சமய அறிஞராகவே மக்களால் அறியப்பட்டார். அந்த வகையில சமணர்கள் தமிழுக்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியுள்ளனர். சமண பெளத்த இலக்கியங்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் ஒழுக்க நெறியை எடுத்தியம்பும் நூல்கள் தமிழில் காணப்படவில்லை. அந்த வகையில் சங்கமருவிய காலத்தில் எழுதப்பட்ட சமண பெளத்த இலக்கியங்களே மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என ஒரு நெறி முறையை வகுத்தன.

கொல்லாமையை முதன் முதலில் வலியுறுத்திய சமயங்களாக சமண பெளத்த சமயங்களை குறிப்பிடலாம், சமண பெளத்த இலக்கியங்கள் உயிர்க்கொலையை வெறுத்தன. எல்லா உயிர்கள் மீதும் அன்பு கொள்ள வேண்டும் என்ற அறக் கருத்தை போதித்தன. பலியிடுவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிக்கு அபயம் அளித்தவர் புத்தபிரான். அந்த வகையில் பெளத்த இலக்கியங்கள் உயிர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதை அதிகம் வலியுறுத்தின. அவ்வாறே சமண இலக்கியங்களும் கொல்லாமையை வலியுறுத்தின.

அத்தோடு கள்ளுண்டு மகிழ்வது பாவம் என்பதையும் பெளத்த சமண இலக்கியங்கள் சுட்டிக்காட்டின. சமண பெளத்த கருத்துக்கள் அக்காலத்து மக்களை மிகவும் கவர்வதாக அமைந்தது. இந்து சமயத்தில் யாகங்களும் யாகங்களோடு இணைந்த உயிர்ப்பலியும் அதிகளவில் காணப்பட்டது. இதனால் மக்கள் சமண பெளத்த போதனைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டினர். சங்கமருவிய காலத்தில் சமணமும் பெளத்தமும் தளைத்தோங்கின.

தமிழர்களில் பெரும்பாலானவர்கள் சமண பெளத்த சமயத்தை சார்ந்தவர்களாக காணப்பட்டனர். வைதீக சமயங்களான சைவமும் வைணவமும் வீழ்ச்சியுற்று காணப்பட்டன. சங்கமருவிய காலத்துக்குப் பின்னரான பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும் தளைத்தோங்குவதற்காக சமண பெளத்த கருத்துக்கள் இந்த சமயங்களால் உள்வாங்கப்பட்டன. முக்கியமாக உயிர்க்கொலையை சைவ, வைணவ சமயங்கள் வெறுத்தன. உயிர்க்கொலை செய்வது பாவமென்று போதித்தன. அவ்வாறே மதுவருந்துவதும் கண்டிக்கத்தக்க செயலாக வைதீக சமயங்களால் கூறப்பட்டது. இது பல்லவர் காலத்தில் நிகழ்ந்த பக்தி இலக்கிய நெறியோடு நோக்கப்பட வேண்டியது.

இங்கே நாம் விவரிக்கும் விடயம் சங்கமருவிய காலத்து இலக்கிய வளர்ச்சியாகும். சங்கமருவிய காலத்து தமிழ் இலக்கிய செழுமைக்கு பெளத்தமும் சமணமும் பெரும் பங்காற்றின. பெளத்த நூல்களுள் தலைசிறந்த நூலாக சாத்தனார் இயற்றிய மணிமேகலை கருதப்படுகிறது. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாக மணிமேகலை போற்றப்படுகிறது. பெளத்த சமய நெறியை உணர்த்தவே இக்காவியம் இயற்றப்பட்டது. இது மணிமேகலையின் துறவை விளக்குவதோடு வாழ்வின் நிலையாமை, உயிர்களிடத்தில் அன்பைச் செலுத்துதல், பற்று அற்று இருத்தல் முதலிய பண்புகளை உணர்த்துகிறது. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் குண்டலகேசியும் பெளத்த சமய சார்பான நூலென்பது குறிப்பிடத்தக்கது.

சங்கம் மருவிய கால இலக்கியம்

கி.பி 300 இருந்து கி.பி 700 தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே பெளத்த தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி ஆகியவையும், சமண தமிழ் காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, மற்றும் ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றின.

தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.
தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட கூறுகளைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒர் இயங்கியல் பண்பாடே.

(வாக்கியப் பயன்பாடு)
ஒழுக்கம் என்பது கல்வியை விட முக்கியமானது ஆகும்.

முனைவர் செ.ம. மாரிமுத்து

மனுக்குறள்?

Posted on 02 November 2010. Categories: சர்ச்சை

திருக்குறளை உலகப்பொதுமறை என்றும், தமிழர் அனைவருமே சமயச்சார்பின்றிப் பின்பற்றக்கூடிய ஒப்பற்ற அறநூல் என்றும் சொல்கிறோம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் , இக்கருத்து எவ்வளவு பெரிய மாயை என்பது விளங்கும். குறள் பக்தி கொண்ட யாரையும் புண்படுத்தும் நோக்கில் இதைச் சொல்லவில்லை. காரணம் இருக்கிறது.

அன்வர் செரிபு என்று எனக்கொரு நண்பர். என்போலவே மார்க்ஸீய சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டு, மதம் என்னும் பேய் பிடிக்காத, மதம் கடந்து சிந்திக்கும் அகண்ட பார்வை கொண்டவர். தொழிற்சங்கத் தோழர். பல எதிர்ப்புகளை மீறித் தன் மகளுக்குக் கேரளப் புரட்சி வீராங்கனையான அஜிதாவின் பெயரை வைத்தவர். தமிழில் மிக நல்ல புலமை கொண்டவர். என் திருமண அழைப்பிதழில் திருக்குறளை அச்சிட்டிருப்பதைப் பார்த்து இவர் ஆச்சரியப்பட்டுவிட்டுச் சொன்னார்.

‘எதைப் படித்தாலும் முழுசாய்ப் படிக்க வேண்டும். ஆழ அகலப் படிக்க வேண்டும். இங்கே அங்கே ஒரு பாட்டை உருவிப் பார்த்தால் இப்படித்தான். திருக்குறள் இன்றைக்கு இந்துத்வாவாதிகள் பரப்பிவரும் பிற்போக்கு மனுவாதக் கருத்துகளுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூசகமாய் வித்திட்ட ஒரு நூல். எத்தனை பெரியார் வந்தாலும் மீட்கமுடியாத, தமிழர்களுடைய மூடநம்பிக்கைகளுக்கு ஆதாரமான நூல் இதுதான்’ என்றார்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆத்திரம் பொங்கிவர, ‘என்னப்பா இப்படிக் குண்டைத் தூக்கிப் போடுகிறாய்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவத்தைச் சொல்லும் திருக்குறள் எங்கே, பிறப்பால் பேதம் கற்பிக்கும் வர்ணாஸ்ரமத்தைத் தூக்கிப் படிக்கும் ஆரிய மனுவாத நூல்கள் எங்கே?’ என்றேன்.

‘முதல் அடியைச் சொல்லிவிட்டு அடுத்த அடியை விட்டுவிட்டால் எப்படி? சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்று தொழில்ரீதியாக மனிதர்களைப் பிரிப்பதே மனு தர்மம்தானே’ என்ற நண்பர், மேலும், ‘வள்ளுவர் பிறப்பிலேயே உயர்ந்த பிறப்பு, இழிபிறப்பு, (மேல்பிறந்தார், கீழ்ப்பிறந்தார்) பிறப்பொழுக்கம், குலவொழுக்கம் போன்ற ஆதாரமான வர்ணாஸ்ரம நம்பிக்கை கொண்டவர்தான்; ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரமே இதற்கு உதாரணம்; ஒழுக்கம் என்றால் நன்னடத்தை (டிஸிப்லின்) என்ற பொருளில் இங்கே சொல்லவில்லை, அவனவன் ‘குலதர்ம’ப்படி, சாதிவழக்கப்படி ஒழுகுவதையே இங்கே ஒழுக்கம் என்கிறார். ‘ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்’ என்ற குறளுக்கு அடுத்து, பார்ப்பானின் பிறப்பொழுக்கம் குன்றக்கூடாது என்று அவர் சொல்வதிலிருந்து உயர்ந்த பிறப்பு, இழிந்த பிறப்பு என்ற கேடுகெட்ட நம்பிக்கையைத் தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.

’இப்படி ஆரிய வேதநூலுக்கு விளக்கம் சொல்லவந்த தமிழ்நூலே திருக்குறள்’ என்றும் சொன்னார். அவர் என்னை மேலும் ஆழ்ந்து படிக்கச்சொன்ன பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர், பரிதியார் முதலிய பலர் எழுதிய உரைகளையும், தொடர்புடைய பல நூல்களையும் தேடிப் படித்தேன்.
படிக்கப்படிக்க எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

அந்தணர் (பிராமணர்), அரசர் (சத்திரியர்), வணிகர் (வைசியர்), வேளாளர் (சூத்திரர்) ஆகிய நான்கு வர்ணத்தார்க்கும் உரிய கடமைகளைப் புகழ்ந்துபாடி அவர்கள் அவற்றை விட்டுவிடாமல், தொடர்ந்து செய்வதுதான் உத்தமமான செயல் என்று தெள்ளத் தெளிவாய்ச் சொல்வதோடு, அவர்ணாக்கள் (குலமிலர், பஞ்சமர்) என்போரைக் ‘குடியிலார்’ என்றும், ‘கீழ்’ என்றும் சொல்லும் இந்த நூலா உலகப்பொதுமறை என்று இத்தனை காலம் சொல்லப்பட்டு வந்திருக்கிறது!

இதை ஓர் அபாண்டக் குற்றச்சாட்டாக பலர் நினைக்கலாம். ஆனால் ஆதாரங்கள் இருக்கிறதே.

மனுநூலின் தமிழ்வடிவே திருக்குறள்!
“எழுத்துமுதல இலக்கண வகையும்
வழுத்து வேதாகம வகையதன் பயனும்
தங்கிய குறட்பா தமிழ்மனுநூல்…” (பெருந்தொகை – 1543 )

அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்ததைச் செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.
அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.

வழக்காவது ஒரு பொருளைத் தனித்தனியே எனது என்று இருப்பார் அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன் கோடல் முதலிய பதினெட்டு பதத்ததாம்.

தண்டமாவது அவ்வொழுக்க நெறியினும், வழக்க நெறியினும் வழீஇயனாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்.
இவற்றுள் வழக்கமும் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதல்லது ஒழுக்கம் போல மக்கள் உயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பு இலவாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வு மிகுதியானும், தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதுதான் நால்வகை நிலைத்தாய் (நால்வகை நிலையாவன: பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நால்வகை ஆசிரமங்கள்) வருணந்தோறும் வேறுபாடு உடைமையாயின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலின் பெரும்பான்மையாகிய பொது இயல்பு பற்றி இல்லறம், துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது.

இது திருக்குறள் உரையின் முன்னுரையில் (உரைப்பாயிரம்) பரிமேலழகர் சொல்வது. திருவள்ளுவரின் இதயம் கண்டவர் என்று தமிழ்ப்புலவர்களால் வானளாவப் புகழப்படும் பரிமேலழகர், சுற்றிவளைத்து இங்கே குறள் சொல்லும் அறம் என்பது மனு தர்மமே என்றும், அதனைப் பொது இயல்பு பற்றிப் பெரும்பான்மைக்குத் திறம்பட திணித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்.

ஏதோ பரிமேலழகர் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார் என்று கருதவேண்டியதில்லை. அவர் இந்த முடிவுக்கு வந்ததன் ஆதாரங்களை வள்ளுவர் வாய்மொழி மூலமே பார்க்கலாம்.

பிராமண தர்மத்தைப் போற்றிச் சொல்வது:

பல குறள்கள் இருந்தாலும் முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

பரிமேலழகர் உரை:

ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தின் முன்னுரையிலேயே பரிமேலழகர் சொல்வது: அஃதாவது தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதல். (அதாவது அவரவர் வர்ணாஸ்ரம தர்மப்படி ஒழுகுவது)
ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின், பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.
மறந்தவழி இழிகுலத்தனாம் ஆதலின் மறக்கலாகாது என்னும் கருத்தான், மறப்பினும் என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.

பரிதியார் உரை:

பிராமணன் வேதம் ஓதி மறந்தாலும் பின்பு சந்தத்தை விட்டு ஓதிக்கொள்ளலாம். ஒழுக்கம் கெட்டால் பிராயச்சித்தம் பண்ணினாலும் போகாது; செய்த தோஷம் அநுபவிக்க வேண்டும்.

அதாவது மற்றவன் எப்படிக் கெட்டாலும், பிராமணன் குலத்தொழிலை விட்டுவிடக்கூடாது என்று பார்ப்பன ஜாதிய பீடங்கள் கவலைப்படுவதைவிட இது மோசமாக அல்லவா இருக்கிறது!
(நாளையும் தொடரும்)

21 Responses to “மனுக்குறள்?”
பிச்சைக்காரன் says:
Tuesday, November 2, 2010 at 8:10 am
படிப்புக்கும் , புரிதலுக்கும் தொடர்பு இருக்க தேவை இல்லை என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது..
பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லை ..உதாரணமாக பிராமண ஜாதி பெற்றோர்களுக்கு பிறந்த பையன் , ஒரு பிசினஸ்மேனாக இருந்தால், அவன் வைசியானாக கருதப்பட வேண்டும் என்றுதானே வள்ளுவம் சொல்கிறது… இதில் எங்கே ஜாதி இருக்கிரது..
சாதாரண தமிழ் அறிவு இருந்தாலே இது புரியுமே??
தமிழ் அறிவுடன், ஆழந்த புலமையும் இருந்தால் , இன்னும் பல நுணுக்கமான தகவல் கிடைக்குமே..
செய்தொழில் வேற்றுமை என்பது.. தொழிலும் கூட உயர்வு தாழ்வு என்பது கிடையாது… எப்படி ஒரு தொழிலை செய்கிறோம் என்பதை வைத்துதான் உயர் தாழ்வு என்கிறார் கலைஞர் தன் உரையில்..
அதாவது, குப்பை பொறுக்குவதை கூட சிறப்பாக செய்ய முடியும்.. எழுதுவது போன்ற உயர்ந்த வேலைகளை கூட தகுந்த புரிதலோ, உழைப்பொ இன்றி செய்ய முடியும்..
இந்த இருவரில் குப்பை பொறுக்குபவனே உயர்ந்தவன் என்பது வள்ளுவம்…
இதே கருத்துக்கள் வெளி நாட்டு மொழியில் வந்து இருந்தால், போற்றுவோம்.. தமிழில் இருப்பதால், ஒரு வித தாழ்வு மனப்பான்மையில் தூற்றுகிறோம்…
மற்ற ஒவ்வொரு குறள்களின் கூட ஆழ்ந்த கருத்துக்கள் உள்ள்ன. மேலோட்டமாக வாசித்து விட்டு , புழுதி வாரி தூற்றும் இத்தைகைய கருத்துக்களை அனுமதிப்பது, இந்த இணையதலத்தின் தரத்தை வெகுவாக பாதிக்கும்..
Reply
Rathnavelu says:
Tuesday, November 2, 2010 at 10:22 am
மாரிமுத்து அவர்களே,
முத்தமிழ் வித்தகர் கலைஞர் அவர்களின் குறளுரையைப் படித்தால் இதைப் போன்ற வீண்சந்தேகங்கள் எல்லாம் நீங்கியிருக்குமே.
இவண்,
இரத்தினவேலு
Reply
சின்னபையன் says:
Tuesday, November 2, 2010 at 10:23 am
முனைவரே!
வள்ளுவரை உணமையான ஹிந்து என்று இந்த அந்நிய கலாசார படை எடுப்புகளின் காலத்தில் நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் இந்துக்கள் இருப்பதால் தங்கள் கட்டுரையின் தொடர்ச்சியை நாளையும் படிக்க ஆவலாக உள்ளேன். திராவிடம் என்று நாத்திகத்தையும், மதசார்பின்மையையும் பேசுவோரின் பொய் முகங்களில் கருப்பு சாயம் பூச வாழ்த்துக்கள். நீங்க கம்யுனிச முகமுடி அணிந்து எழுதினாலும் அல்லது தங்களின் எண்ணம் எதுவாக இருப்பினும்,அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிகொள்ளும் அறிவு தமிழ் ஹிந்துக்களுக்கு நெறையவே உண்டு என்பதை நினைவில்கொண்டு நாளை எழுதவும்.

பிறப்பொழுக்கம், இரண்டுமுறை பிறந்தவருக்கும் பொருந்தும் தானே! தாயின் வயிற்றில் இருந்து பிறப்பது ஒருமுறை, இன்னொன்று குருவின் தயவால், தானாகவே பிறப்பது என்று எங்கேயோ படித்து புரிந்துகொண்ட ஞாபகம். இரண்டாவது முறை பிறப்பவரின் பிறப்பொழுக்கத்தை பற்றியே வள்ளுவர் பேசுவதாக இந்த சின்னபையன் கருதிக்கொண்டு இருக்கிறேன்! அய்யராவோ, அய்யன்காராவோ பிறந்துவிடுவதால் மட்டும் அவர் இரண்டாவதுமுறையும் பிறந்துவிடுகிறார் என்று கொள்ளமுடியாதில்லையா? இரண்டாவது முறை பிறப்பவரின் ஒழுக்கத்தை பற்றியே வள்ளுவர் சொன்னார் என்று எடுத்து கொண்டு இப்போ ஸ்கூலுக்கு போகிறேன்.டாட்டா!பை!பை!
Reply
செந்தமிழ்ச்செல்வன் says:
Tuesday, November 2, 2010 at 10:28 am
பிச்சைக்காரன்,
//உதாரணமாக பிராமண ஜாதி பெற்றோர்களுக்கு பிறந்த பையன் , ஒரு பிசினஸ்மேனாக இருந்தால், அவன் வைசியானாக கருதப்பட வேண்டும் என்றுதானே வள்ளுவம் சொல்கிறது//
நீங்கள் சொல்வதும் விதண்டாவாதமாய் இருக்கிறது. அப்போது வைசிய செட்டியார் ஜாதி பெற்றோருக்குப் பிறந்த பையன், ஒரு கோயில் கட்டி மந்திரம் சொல்லப்போனால், அவனைப் பார்ப்பனன் என்று வள்ளுவரைக் காட்டிச் சொல்வீர்களா?
Reply
robin says:
Tuesday, November 2, 2010 at 12:33 pm
அட இப்படி எல்லாம்கூட யோசிக்க முடியுமா? நானும் தமிழ் கற்றறிந்து, தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன் தான். வேற்று மதம் ஆனாலும், நான் திருக்குறளை தெய்வத்தின் மறை பொருளாகவே கருதுகிறேன். இப்படி தமிழில் பொருள் உரை காண வழிவகையும் உண்டு என்னும் பொழுது மனதுக்கு…??? தயவுசெய்து மத பித்து இல்லை என்று பொய்த்தோல் போர்த்தாதீர். இதற்குப் பெயர் மார்க்சியமா?
[திரு ராபின்: இனி ஆங்கில லிபியில் தமிழ் மறுமொழி எழுதாதீர்கள். உங்கள் மறுமொழியை அப்படியே தமிழில் மறு தட்டச்சு செய்து வெளியிட்டிருக்கிறோம். தமிழிலேயே எழுதப்படும் மறுமொழிகள் மட்டுமே இனி பிரசுரிக்கப்படும். ஆசிரியர்.]
Reply
பிச்சைக்காரன் says:
Tuesday, November 2, 2010 at 1:02 pm
“அப்போது வைசிய செட்டியார் ஜாதி பெற்றோருக்குப் பிறந்த பையன், ஒரு கோயில் கட்டி மந்திரம் சொல்லப்போனால், அவனைப் பார்ப்பனன் என்று வள்ளுவரைக் காட்டிச் சொல்வீர்களா?”
ஆம் நண்பரே..
வியாபாரிக்கு பிறந்த மகன் , வியாபாரம்தான் செய்ய வேண்டும் என்பதில்லை… அவனுக்கு கோயில் கட்டி மந்திரம் சொல்ல பிடித்து இருந்தால் , அதையும் செய்யலாம் ..பிறப்பு அதற்கு தடை இல்லை என அன்றே சட்டம் இயற்றி இருக்கிறார் வள்ளுவர்… அதாவது அவன் வைசியன் என்ற வகைப்பாட்டில் (பிறப்பின் அடிப்படையில்) வர மாட்டான். மந்திரம் சொல்லுபவர்கள் எந்த பெயரில் அழைக்கபடுகிரர்களோ ( பார்ப்பனன், பிராமணன் என எதோ ஒரு பெயர் ) அந்த வகைப்பாட்டில்  (அவன் செய்யும் தொழிலின் அடிப்படையில் ) வருவான் என்பதே தமிழ் மறை
அதை இன்றும் கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதை நினைவில் கொண்டால், வள்ளுவர் புரட்சிகரமாக சிந்தித்து இருப்பது புரியும்…
சரி… பிறப்பின் அடிப்படியில் உயர்வு தாழ்வு இல்லை… ஜாதியை அவர் ஏற்கவில்லை.. தொழிலின் உயர்வு தாழ்வை ஏற்கிறாரா என்றால் அதுவும் இல்லை… அதாவது சாப்ட்வேர் துறையில் இருப்பவன் உயர்ந்தவன், எழுத்தாளானாக இருப்பது அசிங்கம் என்றும் சொல்லவில்லை…
ஒரு தொழிலை எப்படி செய்கிறான் என்பதை வைத்தே அவன் சிறப்பு அமையும் என்பதே அவர் சொல்வது…
Reply
பிச்சைக்காரன் says:
Tuesday, November 2, 2010 at 1:18 pm
“சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்று தொழில்ரீதியாக மனிதர்களைப் பிரிப்பதே மனு தர்மம்தானே’”
ஏட்டு படிப்பு , யதார்த்த வாழ்வை புரிந்து கொள்ள உதவாது என்பதை மேற்கண்ட வரிகள் புரிய வைக்கின்றன..
பிறப்பு ரீதியாக மனிதனை பிரிப்பதுதான் ஜாதி கொடுமை…
அனுபவித்து பார்த்தல் புரியும்..
பெரிய வேலையில் இருந்தாலும் கூட , பிறப்பின் அடிப்படையில் மட்டம் தட்டப்படுவதை அனுபவித்தர்வர்களுக்குத்தான் அந்த வேதனை புரியும்…
என்ன தொழில் செய்தால் என்ன … பிறபின் அடிப்படையில் நீ தாழ்ந்தவன்தான் என மனு தர்மம் சொல்கிறது என்பதுதான் குற்றசாட்டு..
நடைமுறையிலும் அப்படித்தான் இருக்கிறது..
பிறப்பில் எல்லோரும் சமம் என்கிறார் வள்ளுவர்.. அதாவது மனு தர்மத்துக்கு எதிரான குரல்…
அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற இன்றைய சிந்தனைக்கு ஆதாரமான குரல்
எதிர் கருத்து கூடாது என்பது அல்ல… ஆனால் மனுதர்மம், திருக்குறள், நடைமுறை அவலம் எதுவும் புரியாமல் , அதற்கான உழைப்பு இல்லாமல் , சும்மா மேம்போக்காக , தின தந்தியை படித்து விட்டு அரசியல் பேசும் பாணியில், அவதூறை அள்ளி வீசும் கட்டுரையை அனுமதிப்பது, இந்த இணையதளத்தின் தரத்திற்கு உகந்தது அல்ல.
Reply
rajurajendran says:
Tuesday, November 2, 2010 at 2:29 pm
ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின், பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.
பிறப்பொழுக்கத்தைப் பற்றிப் பேசும் இந்தக்குறள் எனக்கும் உறுத்தும் ஒரு குறள்தான். கட்டுரை ஆசிரியர் சொல்லவருவதைச் சொல்லட்டும். அப்புறம் என் பதிலையும் எழுதுகிறேன். இங்கே கலைஞர் உரையை வைத்துக் கொண்டு தெளிவு தேடும் நபர்களை என்ன சொல்வது..
Reply
rajurajendran says:
Tuesday, November 2, 2010 at 2:32 pm
பிச்சைக்காரன்: நீங்கள் சொல்வது மறைமலை அடிகளார் கோஷ்டியைப்போல ஒரு புதிய வருணதர்மத்துக்கு இட்டுச் செல்லும்வழி. வடமொ(வ)ழிக்குப் பதில் தமிழ். அவ்வளவுதான் வித்தியாசம்.
Reply
கண்ணன் says:
Tuesday, November 2, 2010 at 3:15 pm
“முனைவர்” – ஆயுத பூஜையன்று பொரிகடலையும் சுண்டலும் கொடுப்பது போல இந்தப் பட்டத்தை வாரி வழங்குகிறார்களே செம்மொழித் தமிழ்நாட்டில்; ‘கல்வியில் சிறந்த தமிழ் நாடு’ என்று எவனோ சொன்னானாமே அவனை மீண்டும் பிறப்பித்துக் கழுவில் ஏற்றவேண்டும்.
-கண்ணன்,கும்பகோணம்
Reply
commie.basher says:
Tuesday, November 2, 2010 at 3:43 pm
இதைவிட திருக்குறளைப்பற்றி நல்ல புரிதலுடன் ம.க.இ.க வினவு தளத்தில் கூட நல்ல கட்டுரைகள் வரும். இது ஒரு கேவலமான கட்டுரை.
Reply
அருண்பிரபு says:
Tuesday, November 2, 2010 at 4:24 pm
//ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின், பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.//
அந்தணர் என்போர் அறவோர். வேதம் மறப்பினும் பிற்காலத்தில் ஓதிக் கொள்ளலாம். மந்திரங்களுக்கு முக்கியம் சந்தம், ஒலி, மாத்திரை. அது தவறலாகாது என்பது சான்றோர் வாக்கு. ஆகவே சந்தம் பிறழ்ந்தும் ஓதலாம் கேடில்லை, ஆனால் பிரம்மசரியம் முதலான தம் ஒழுக்கம் கெட்டால் அறவோர் என்கின்ற நிலையினின்றும் பிறழ்வர் அந்தணர். அது பின்னேது பரிகாரஞ் செய்யினும் ஈடுகட்டவியலாத வீழ்ச்சி.
அதுபோலவே எல்லோர்க்கும் என்பது பரிமேலழகர் உரை சொல்லும் விளக்கம்.
குலத்தொழில் முதலிய எது கெட்டாலும் பெருங்குற்றமில்லை, தன்னொழுக்கம் கெடாது ஒழுகுதல் தலையாயது என்பது குறளின் கருத்து.
ஒழுக்கங்கெட்டு வீழ்வோர் நிலை உயர ஏதுவாக ஏதுமில்லை என்பது உரை தரும் பொருள்.
சுய ஒழுக்கம் குறித்து ஓங்கச் சொல்லியிருக்கும் இந்தக் குறள் சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என்பது ஓரு நல்லெண்ணச் சைபீரியாவிலிருந்து புறப்பட்ட நோக்கு. உள்நோக்கம் என்னவென்று நோக்குங்கால் அதுவென்னவோ நெடுங்காலத்தியது தான். இந்துக்களை ஏகடியம் செய்வது. இடதுசார்ந்தோர் எங்கிருப்பினும் வேறெது செய்வர்?
Reply
பிச்சைக்காரன் says:
Tuesday, November 2, 2010 at 6:31 pm
“இங்கே கலைஞர் உரையை வைத்துக் கொண்டு தெளிவு தேடும் நபர்களை என்ன சொல்வது”
நண்பரே,, நாங்கள் பரிமேலழகர் உரையும் படித்து இருக்கிறோம்.. ஆனால் அதை மட்டும் வைத்து ஒரு கருத்தை சொல்ல கூடாது என்பதே எங்கள் வேண்டுகோள்…
கலைஞர், நாவலர் உள்ளிட்ட திராவிட இயக்கத்தினர் பார்வையையும் கருத்தில் கொள்வது அவசியம் (அவை மட்டும் போதும் என்றும் சொல்லவில்லை ..அதையும் பாருங்கள் ) . அதை தவிர மற்ற உரைகளையும் படித்து விட்டுதான் ஆராய்ச்சி கட்டுரை எழுத வேண்டும்..
திராவிட இயக்க உரையை ஏற்க மாட்டேன்… பரிமேலழகர் உரைமட்டுமே முக்கியம் என சொல்வதுதான் நவீன பார்ப்பனீயம்…
எதிர் கருத்தை சொன்னால் , அதை கேட்பவர்களுக்கு , அட இப்படி ஒரு கோணம் இருக்கிறதா என்ற ஆச்சர்யம் ஏற்பட வேண்டும்.. அதற்கு உழைப்பு தேவை..
சும்மா சர்ச் ஆப்ஷனை பயன்படுத்தி, பார்ப்பான், அந்தனன் , கீழ் என வரும் குறள்களை வரிசைப்படுத்தி காட்டுவதை சிறு குழந்தை கூட செய்யுமே !!
Reply
அருண்பிரபு says:
Tuesday, November 2, 2010 at 11:45 pm
//கலைஞர், நாவலர் உள்ளிட்ட திராவிட இயக்கத்தினர் பார்வையையும் கருத்தில் கொள்வது அவசியம் //
பிடியுங்கள் உரைகளை:
குறள் 134:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
கலைஞர் உரை:
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
மு.வ உரை:
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.
சாலமன் பாப்பையா உரை:
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
இக்குறளில் சாதியம் பேசப்படுகிறதா, ஒழுக்கம் உயர்த்தப்படுகிறதா என்பதை தமிழை நன்கறிந்த இம்மூவர் எழுதிய விளக்கங்களைப் படித்துத் தெளிக.
யார் வாயிலோ கேட்டதன் மெய்ப்பொருள் காணாமல் அப்படியே ஆங்காங்கே கக்குவது கற்றறிந்த பெருமக்கட்கு அழகல்ல. முனைவர்ர்ர் மாரிமுத்து எங்ஙனம் முனைந்து அப்பட்டத்தைப் பெற்றார் எனத் தெரிந்தால் நலம்.
Reply
மண்ணாங்கட்டி says:
Wednesday, November 3, 2010 at 1:13 am
முதலில் யாரிந்த மாரிமுத்து, இவர் எங்கிருந்து வருகிறார், முனைவர் என்கிறாரே
தமிழில் முனைவரா, எந்தப் பல்கலைக்கழகத்தில், வேறு என்ன நூல் இவர்
எழுதியுள்ளார், குறைந்தது ஒரு வலைப்பதிவரா. ஒன்றும் தெரியவில்லை.
ஏன் இவர் சமண சமய திருக்குறளை இந்து சமயம் பூசுகிறார். இவர் சொல்ல
வருவது இந்து சமயம் தீது என்றா, திருக்குறள் தீது என்றா, இரண்டையும் இணைக்க
வேண்டிய அவசியம் என்ன. திருக்குறளைப் பற்றி அன்வர் செரிப் என்னும் மார்கிசிய
முஸ்லிம் சொல்வது உண்மையா, அவரின் தனிப்பட்டு கருத்தை இவர் ஏன்
ஆமோதிக்க வேண்டும், இவர் சொல்வதை நாம் ஏன் ஆமோதிக்க வேண்டும். இவர்
சொல்வதை சரி என்று கேட்டால், திருவள்ளுவர் சொல்வது சரி தான் எனக் கேட்க
கூடாதா,
//‘எதைப் படித்தாலும் முழுசாய்ப் படிக்க வேண்டும். ஆழ அகலப் படிக்க வேண்டும்//
என்கிறாரே இதைத் தான் வள்ளுவரும் கற்க கசடறக் என அதிகாரம் 39ல் முதல்
குறளில் கூறுகிறார். அதாவது கற்பவையை குற்றமில்லாமல், ஆழமாக படி
என்கிறார்.
//தமிழர்களுடைய மூடநம்பிக்கைகளுக்கு ஆதாரமான நூல் இதுதான்//
திருக்குறள் மூடத்தனமான நூலா? அப்படி என்றால் தமிழில் மற்றவை எல்லாம்
அறிவுமிக்கவையா, இல்லை தமிழில் இருப்பது எல்லாம் மூடத்தனமானவையா?
வடமொழியில் இருப்பது மட்டும் அறிவார்ந்தவையா, அத்வைதம், வேதம்
அனைத்தும் முற்போக்கனவையா.
//எத்தனை பெரியார் வந்தாலும் மீட்கமுடியாத//
பெரியார் திருக்குறளை பிற்போக்குதனமான நூல் என்று கூறி உள்ளாரா? அப்படி
கூறியிருந்தால் அது என்னன்ன? இல்லை என்றால் ஏன் கூறவில்லை, அறிவார்ந்த
கருத்து உண்டல்லவா?
//பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். – குறள்- 972//
கலைஞர் உரை:
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில்
மட்டுமே வேறுபாடு காண முடியும்.
மு.வ உரை:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற
தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால்
மட்டுமே பெருமை வரும்.
All human beings agree as regards their birth but differ as regards their
characteristics, because of the different qualities of their actions.
திருவள்ளுவர் என்ன சொல்கிறார், பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. அவரவர்
செயலால் தான் வேறுபாடு என்கிறார். அதாவது சங்கராச்சாரியார் பிறப்பால்
பிராமணர் அதனால் அவருக்கு உயர்வு இல்லை
//இதை ஓர் அபாண்டக் குற்றச்சாட்டாக பலர் நினைக்கலாம். ஆனால் ஆதாரங்கள்
இருக்கிறதே.//
என்ன ஆதாரத்தை இந்த பிரகஸ்பதி முன் வைத்தார் பெருந்தொகைப் பாடலையா,
அப்பாடல் சொல்வதால் திருக்குறள் தவறானதா, அப்பாடல் என்று எப்போது
எழுதப்பட்டது. திருக்குறளைப் புகழும் பாடல்களை விட்டுவிட்டு இதனை மட்டும் ஏன்
ஆசிரியர் தூக்கிப் பிடிக்கிறார். பரிமேலழகர் உரையை மட்டும் ஏன் ஆசிரியர்
மேற்கோள் செய்கிறார். பரிமேலழகர் ஒரு பிராமண வைஷ்ண்வர் என்றும்
திருக்குறளுக்கு வைணவ சாயம் பூசியவர் என்று தமிழ் படித்த அனைவருக்குமே
தெரியுமே. வேறு உரைகள் மாரிமுத்துவிடம் இல்லையா என்ன?
//மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்//
கலைஞர் உரை:
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
மு.வ உரை:
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.
வள்ளுவர் பார்ப்பான் ( பிராமணருக்கு) வக்காலத்து வாங்கவில்லையே, வெளியே பார்ப்பான் போலக் காட்டிக் கொள்பவனின் ஒழுக்கம் தவறினால் அவனது குலத்துக்கே கேடு என்கிறார், வள்ளுவர் காலத்தில் மேலோங்கி இருந்த சமயங்கள் பௌத்தமும், சமணமுமே ஆகும். பார்ப்பான் என்பது பிராமணரை பிற்காலத்திலேயே குறிக்கின்றது, அந்தக் காலத்தில் பௌத்த பிக்குகளையும், சமணத் துறவிகளையுமே இது குறித்தது. அதாவது ஒரு பிக்கானவன் தான் கற்ற தம்மத்தையும் மறக்கலாம், ஆனால் அவனது ஒழுக்கம் கெட்டால் அனைத்து பிக்குகளுக்கும் அது கேடு என்பது இந்தக் குறளின் உள்ளர்த்தம். இன்றைய சூழலில் இதனை நித்தியானந்தாவுக்கும், திருச்சி பாதிரியார் இரத்தினம் இராஜரத்தினம் ஆகியோரும் பார்ப்பனரே அதாவது தாம் கற்றதை மக்களிடம் பரப்பும் சமய துறவுகள் பார்ப்பானே. அவர்கள் செய்த இழி செயலால் அவர்கள் சார்ந்த குலத்துக்கே இழிபெயர் தானே.
ஒத்து என்பது ஓதி, ஓதுவோர், பார்ப்பான், அந்தணன் என்பது தற்கால பிராமணர்களை மட்டுமில்லாமல் பௌத்த பிக்கு, சமணத் துறவி, கிறித்தவ பாதிரி, இஸ்லாமிய இமாம்களைக் கூடக் குறிக்கும். மாரிமுத்து அவர்கள் தமிழையும், படிக்கவில்லை, திருக்குறளையும் படிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஜடாயு says:
Wednesday, November 3, 2010 at 9:58 am
தேவையில்லாத ஒரு வீண்வம்புக் கட்டுரை.
இந்து ஞான மரபில் சுருதி (என்றைக்குமான அறங்களை எடுத்தோதும் நூல்), ஸ்மிருதி (ஒரு காலகட்டத்திற்கான சமூக விதிகளையும், சட்டங்களையும் சொல்லும் நூல்) என்று இரு பகுப்பு உண்டு.
திருக்குறளை ஒரு அப்பழுக்கற்ற இந்து தர்ம அறநூலாக, சுருதியாகவே நான் பார்க்கிறேன். அதுவே திருக்குறளுக்கு செய்யும் உண்மையான மரியாதையும் கூட.
அதை விடுத்து சில குறள்களை உருவி, அதிலிருக்கும் ஒரு சில ஸ்மிருதி அம்சங்களை ஊதிப் பெரிதாக்குகிறது இந்தக் கட்டுரை. இது திருக்குறளை அவமதிக்கும் செயல்.
கீதையின் தத்துவத் தேடல், ஞான உபதேசம், வாழ்க்கை நெறி எல்லாவற்றையும் புறமொதுக்கி, அதில் வர்னாசிரமம் பற்றி வரும் ஒன்றிரண்டு சுலோகங்களுக்கும் பொருளைத் திரித்து கீதையே ஒரு சாதிய நூல் என்று இந்து-விரோத இடதுசாரிகள் வாதிடுவார்கள். அதையே தான் செய்கிறார் இந்த ஆசாமி.

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply