பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி: சிபிஐ கோர்ட் தீர்ப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி: சிபிஐ கோர்ட் தீர்ப்பு

சண்டீகர்: தேரா சச்சா அமைப்பின் தலைவரான சாமியார் குருஜி ராம் ரஹீம் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் அவரை குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் லட்சக் கணக்கான ஆதரவாளர்களை கொண்டுள்ள அமைப்பு தேரா சச்சா சவுதா. இந்த அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரகீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கு சிபிஐ யால் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிக்கிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் பஞ்ச்குலா மற்றும் சிர்சாவில் உள்ள டேரா சச்சா சவுதா அலுவலகத்தின் முன்பு திரண்டனர். சண்டீகர் ஸ்டேடியம் சிறையாக்கப்பட்டு ஆதரவாளர்கள் சிறை வைக்கப்பட்டனர். இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனிடையே வானொலி மூலம் தமது ஆதரவாளர்களுக்கு அமைதி காக்கும்படி கோரிக்கை விடுத்த ராம் ரஹீம், தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும்படியும், தீர்ப்பை சட்டப்படி தாம் எதிர்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்.

இப்பிரச்சினையால் ஹரியானா, பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு செல்லும் பல ரயில்கள் ரத்தாகியுள்ளன. கிட்டதட்ட இரண்டு மாநிலங்களும் ஸ்தம்பித்து,இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. சிர்சா பகுதியில் சாமியார் பாதுகாப்புடன் காரில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அதை பார்த்த அவரின் ஆதரவாளர்கள் சிலர் மயக்கமுற்று கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மதியம் 2 மணிக்கு பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி 2 மணிக்கெல்லாம் சாமியார் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டார். 3 மணியளவில் தீர்ப்பு வெளியானது. முன்னதாக நீதிமன்றத்திலுள்ளோர் செல்போன்களை ஆப் செய்து வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி தனது தீர்ப்பில் ராம் ரஹிம் குற்றவாளி என அறிவித்தார். தண்டனை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்படுகிறது. சட்ட வல்லுநர்கள் கருத்துப்படி குறைந்தது 3 வருடம் முதல் அதிகபட்சம் 7 வருடம் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாம். இதனிடையே பஞ்சாப், ஹரியானாவில் போலீசார் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பு வெளியாகும் முன்பாக சாமியார் விடுதலை செய்யப்பட்டதாக பரவிய வதந்தியால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஆனால் அரை மணி நேரம் கழித்து தீர்ப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானபோது அவர்கள் சோர்ந்து போயினர்.


Read more at: http://tamil.oneindia.com/news/india/many-dera-followers-throng-as-verdict-on-gurmeet-ram-rahim-deliver-293835.html

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply