தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் – 1. ஐரோப்பிய மொழிகள், தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி – தமிழ். 2. 1578 – இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்ட இடம்–கோவா. 3. முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட ஆண்டு – 1709. 4. தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் வெளியிடப்பட்ட ஆண்டு – 1812. 5. தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்கள்: 1. சி.வை.தாமோதரனார்1832 – 1901 2. உ.வே. சாமிநாதர் 1855 – 1942 6. பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர் – சி.வை .தாமோதரனார். 7. சி.வை. தாமோதரனார் பதிப்பித்த நூல்கள்: 1. தொல்காப்பியம் , 2. வீரசோழியம், 3. இறையனார் அகப்பொருள், 4. இலக்கண விளக்கம் 5. கலித்தொகை , 6. சூளாமணி. 8. தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்– உ.வே. சாமிநாதர் 9. உ.வே. சாமிநாதர் பதிப்பித்த நூல்ல்கள்: 1. சீவக சிந்தாமணி – […]