ஆண்டுகள் 20 ஆனாலும் தத்தளிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு ஒரு எதிர்வினை
நக்கீரன்
உதயன் வார ஏட்டில் “ஆண்டுகள் 20 ஆனாலும் தத்தளிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு” என்ற தலைப்பில் சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் – லண்டன் எழுதிய நான்கு பகுதி கொண்ட (29-10-2021 தொடக்கம் 19-11-2021) ஒரு தொடர் கட்டுரை வெளிவந்தது.
இந்தத் தொடரை எழுத்துக் கூட்டிப் படித்துவிட்டுத்தான் எதிர்வினை செய்கிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கத்தக்கன. குறிப்பாக ஆக்க பூர்வமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தத் தொடரை விமரிசனம் என்பதை விட ஒரு வரலாற்றுப் பதிவாகவும் எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் காட்டாக ததேகூ வி. புலிகளால் உருவாக்கப்பட்டது என்ற ஒரு பிழையான கருத்து பலரிடம் இன்றும் உண்டு.
இந்தக் கட்ரையாளர் கூட “இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அக்டோபர் 2001 இல் நான்கு தமிழ்க் கட்சிகள், விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் – ஒரு கிச்சடி கூட்டணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதில் அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியோருடன் ஆயுதக் குழுவாக இருந்து அரசியல் கட்சியாக உருமாறிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ பி ஆர் எல் எஃப்) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகியவை இணைந்தன” என எழுதியிருக்கிறார். வரலாறு அப்படியல்ல.
வி.புலிகளுக்கும் ததேகூ இன் தொடக்கத்துக்கும் தொடர்பே இல்லை. அது மட்டுமல்ல அதன் உருவாக்கம் நான்கு கட்சித் தலைவர்களாலும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் தொடக்கப்பட்டது.
ததேகூ 2001 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20 ஆம் திகதி (சனிக்கிழமை) தொழிலதிபர் வடிவேற்கரசனின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டில் ஒப்பந்தம் (https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1547) கைச்சாத்தானது. தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சம்பந்தன், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் குமரகுருபரன், ஈபிஆர்எல்எப் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் சிறிகாந்தா ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். எனினும் புலிகளின் தலைப்பீடம் அது பற்றிவாயே திறக்கவில்லை. இவ்வாறான நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹொலிடேயின் ஹோட்டலில் வெளியிடப்பட்டது. மேற்படி நான்கு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டுமென்பதே முக்கிய அம்சமாகக் காணப்பட்டது.
2001 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட ததேகூ ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் உட்பட 15 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். தேர்தலில் ததேகூ பெற்ற வாக்குகள் 348,164 (3.89) ஆகும்.
2003 – 2004 காலப் பகுதியில்தான் வி.புலிகள் ததேகூ க்கு ஒப்புதல் கொடுத்தார்கள். 2004 இல் நடந்த தேர்தலில் வி.புலிகள் தாங்கள் தெரிவு செய்த சிலரை வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வைத்தார்கள். இதிலிருந்து மே 18, 2009 வரை ததேகூ வி.புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. “நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்” என வி.புலிகளால் அறிவுறுத்தப்பட்டது.
பிழை கண்டு பிடிப்பது எனது நோக்கமல்ல. வரலாற்றை காய்தல், உவத்தல் இன்றி பதிவு செய்யப்பட வேண்டும். வரலாற்றைத் திரிப்பது வருங்காலச் சந்ததிகளுக்கு செய்யும் இரண்டகமாகும். சிறு சிறு தவறுகளை விடுத்து கட்டுரையாளரின் மையக் கருத்துக்கள் பற்றி எனது எதிர்வினையை வைக்கலாம் என நினைக்கிறேன். கட்டுரையாளர் பின்வருமாறு எழுதுகிறார்-
“இதில் இரண்டு சனாதிபதி தேர்தல்களில் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. முதலாவது போர் முடிந்த பிறகு நடைபெற்ற சனாதிபதி தேர்தலில், மஹிந்த இராசபக்சவை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே இராணுவத்தின் முன்னாள் தளபதியான சரத்பொன்சேகாவை ஆதரித்தது. போர் முடிந்தவுடன் எழுந்து இன்னும் ஓயாத போர்க் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விடயத்தில் முன்னாள் மற்றும் இந்நாள் சனாதிபதிகளான மஹிந்த இராசபக்ச மற்றும் கோத்தாபய இராசபக்ச மீது எந்தளவுக்கு அந்த குற்றச்சாட்டு உள்ளதோ அதே அளவுக்கான குற்றச்சாட்டு இறுதிப் போருக்குத் தலைமையேற்று ‘விடுதலைப் புலிகளை அழித்தே தீருவேன்” என்று சூளுரைத்து அதை நிறைவேற்றிய சரத் பொன்சேகா மீதும் அந்த குற்றச்சாட்டு உண்டு.
அவரைக் கூட்டமைப்பு ஆதரிக்கப் போவதாகப் பேச்சுக்கள் எழுந்த போதே நான் கூட்டமைப்பில் இருந்த பலருடன் தொடர்பு கொண்ட போது யாரும் அந்த நிலைப்பாட்டிற்கான காரணத்தை நியாயப்படுத்தும் வகையில் கூறவில்லை. பொதுவாக அப்போது பேச்சாளராக இருந்து ஊடகங்களிடம் குறிப்பாக பிபிசி தமிழோசையிடம் பேசும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட இப்படி – அப்படி ஒரு பதிலையே கூறினார். ‘எம்மால் மஹிந்த இராசபக்சவை ஆதரிக்க முடியாது – அதை ஒரு போதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று சம்பந்தர் எனக்களித்த பேட்டியில் கூறினார். ஆனால் மஹிந்தவை ஆதரிக்க முடியாது அதனால் பொன்சேகாவை ஆதரிக்கிறோம் என்கிற நிலைப்பாடு ஏன் என்பதற்கான பதில் வழக்கம் போல ‘நன்றி…….வணக்கம்” என்பதே. அத்தேர்தலில் மஹிந்த இராசபக்ச வென்றார், கூட்டமைப்பு அரசியல் ரீதியாகத் தோல்வியடைந்தது.
சரி, அந்த தேர்தலில் ‘காலத்தின் கட்டாயம்” காரணமாக சரத்பொன்சேகாவை ஆதரிக்க வேண்டிய நிலைப்பாட்டை எடுத்த கூட்டமைப்பு அடுத்த தேர்தலில் அதே பிழையை மீண்டும் செய்தது. 2015 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே மஹிந்த எதிர்ப்பு நிலைப்பாடு என்று கூறி அவருடன் முதல்நாள் வரை இருந்த மைத்ரிபால சிறிசேனாவை ஆதரித்தது. அதுவும் போரின் இறுதி நாட்களில் மஹிந்த இராசபக்ச ஜோர்டான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனாவே இராணுவ அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார்.
அதாவது குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16, 17 ஆகிய நாட்களில் சிறிசேனாவே இராணுவ அமைச்சிற்கு தலைமையேற்றிருந்தார். நாட்டில் நல்லாட்சிக்கான ஒரு வாய்ப்பு, நாங்கள் மைத்ரி – ரணில் கூட்டணியை நம்புகிறோம், அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை அளிப்பார்கள், போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெறும் என்றெல்லாம் கூறி அந்த கூட்டணியை ஆதரித்ததை நியாயப்படுத்தினார்கள். இத்தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வென்றார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற கூட்டணியில் இருந்தும் தோல்வியடைந்தது.”
ததேகூ 2010 இல் நடந்த சனாதிபதி தேர்திலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தது ஏன்? 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் மயித்திரிபால சிறிசேனாவை ஆதரித்தது ஏன்? என்ற கேள்விகளுக்கு அவ்வப்போது விலாவாரியாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதரித்ததற்கான காரண காரியத்தை எமது மக்கள் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் ததேகூ சரத் பொன்சேகா மற்றும் மயித்திரிபால சிறிசேனா இருவரையும் ததேகூ ஆதரிக்கச் சொல்லாவிட்டாலும் தமிழ்மக்கள் அவர்களுக்கே வாக்களித்திருப்பார்கள். 2015 சனாதிபதி தேர்தலில் அதுதான் நடந்தது.
ஆங்கிலத்தில் இளவரசர் ஒட்ரோ வொன் பிஸ்மார்க் (Prince Otto von Bismarck) சொன்ன ஒரு பொன்மொழி உண்டு. அதுதான் அரசியல் என்பது சாத்தியமான கலை (Politics is the art of the possible) என்பது. ‘சாத்தியமான கலை’ என்பது வரலாற்று ரீதியாக உண்மையான அரசியலுடன் தொடர்புடைய ஒரு சொற்றொடர். இது ‘நாம் விரும்புவதை (பெரும்பாலும் சாத்தியமற்றது) விட, நம்மால் முடிந்ததை (சாத்தியமான) அடைவது’ என்று பொருள்படும். இந்த தந்திரோபத்தையே ததேகூ அரசியலில் கடைப்பிடிக்கிறது.
மேலும் மேலும் தனக்குத் துணை இல்லை; பகைவர்களோ இருவர்; தானோ ஒருவன்; இந்நிலையில்அவர்களுள் ஒருவரைத் தனது இனிய துணையாக ஆக்கிக் கொள்ளல் வேண்டும்.
தனக்கு உதவிசெய்ய துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்.
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்க அவற்றின் ஒன்று. (குறள் 875 அதிகாரம் 88 – பகைத்திறன் அறிதல்)
இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து இதே தந்திரோபயத்தை லெனின் தனது பொதுவுடமைக் கட்சி உறுப்பினர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். ஒன்றுக்கு மேற்பட்ட எதிரிகள் இருந்தால் அவர்களில் முக்கிய எதிரியைத் தனிமைப்படுத்துவதற்கு ஏனைய எதிரிகளோடு கைகோர்க்க வேண்டும் என்பது லெனினின் தத்துவம்.
இந்த தந்திரத்தைத்தான் ததேகூ கையாண்டது. இது கூட்டமைப்புக்க அரசியல் ரீதியாகத் தோல்வி என்பது அடிப்படையில்லாத குற்றச்சாட்டு. சிறிசேனா போரின் இறுதிக் கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் என்பது உண்மை. பொன்சேகா புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தினார் அதில் வெற்றியும் கண்டார் என்பது எமக்குத் தெரியும். ஆனால் பொது எதிரியான இராசபக்சாக்களை தோற்கடிக்க அவர்களது எதிரிகளோடு நாம் கைகோர்க்க வேண்டும்.
ததேகூ இன் நிலைப்பாட்டை தமிழ்மக்கள் ஏற்று வாக்களித்தார்கள் என்பதுதான் வரலாறு. தேர்தல் முடிவுகள் அதைத் துலாம்பரமாகச் சொல்லியது. அடுத்த வாரம் அந்தப் புள்ளி விபரங்களைப் பார்ப்போம். (தொடரும்)
————————————————————————-
ஆண்டுகள் 20 ஆனாலும் தத்தளிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு – ஒரு எதிர்வினை
(2)
‘சொல்லியுள்ளோம், செய்வார்கள், பேசினோம், பேசுவோம், நம்பிக்கையுள்ளது” போன்ற பல்லவிகளையே தொடர்ந்து கூறினார்கள். ஆனால் மஹிந்த மற்றும் மைத்ரி ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கூட்டமைப்பால் கூட்டமைப்பால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதே யதார்த்தம். மைத்திரி இரணில் மோதல் கூட்டமைப்பிற்குள் இருந்த மோதலுக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. அவர்கள் தமக்குள் இருந்த பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் திணறிய நிலையில், தமிழ் மக்களின் பிரச்சனைகளை கவனிக்க எங்கே நேரமிருந்தது? ஒரு முறை இருமுறை ஆயிற்று மூன்றாவது முறையாவது கூட்டமைப்பு சரியான முடிவை எடுத்ததா?
பாட்டெழுதி பரிசு வாங்குபவர்கள் இருக்கிறார்கள். எழுதிய பாடலில் பிழையிருக்கிறது என்று சுட்டிக்காட்டி பரிசுவாங்குபவர்களும் இருக்கிறார்கள். இதில் நீர் எந்த ரகம்?” என தருமி நக்கீரரைப் பார்த்துக் கேட்பார். அதே பாணியில்தான் இந்தக் கேள்வியும் இருக்கிறது.
ததேகூ எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும் பிழை கண்டு பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். அதில் இந்தக் கட்டுரை எழுதியவரும் ஒருவர்.
2010 இல் பொன்சேகாவை ஆதரித்தது போல 2015 இல் சிறிசேனாவை ததேகூ ஆதரித்தது முற்றிலும் சரியே. ததேகூ இன் முடிவு சரியென்பதை மக்கள் எண்பித்திருக்கிறார்கள்.
2010 தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்களில் விழுந்த வாக்குகளை கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது.
2010 சனாதிபதி தேர்தல்
மாவட்டம் | மாகாணம் | இராசபக்ச | % | பொன்சேகா | % | ஏனையோர் | % | வாக்களித்தோர் |
---|---|---|---|---|---|---|---|---|
யாழ்ப்பாணம் | வடக்கு | 44,154 | 24.75% | 113,877 | 63.84% | 20,338 | 11.40% | 25.66% |
வன்னி | வடக்கு | 28,740 | 27.31% | 70,367 | 66.86% | 6,145 | 5.84% | 40.33% |
மட்டக்களப்பு | கிழக்கு | 55,663 | 26.27% | 146,057 | 68.93% | 10,171 | 4.80% | 64.83% |
2015 சனாதிபதி தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்களில் விழுந்த வாக்குகளை கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது.
2015 சனாதிபதி தேர்தல்
தேர்தல் மாவட்டம் | மாகாணம் | இராசபக்ச | சிறிசேன | ஏனையோர் | பெற்ற வாக்குகள் | வாக்குவீதம் | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | |||
மட்டக்களப்பு | கிழக்கு | 41,631 | 16.22% | 209,422 | 81.62% | 5,533 | 2.16% | 256,586 | 100.00% | 70.97% |
யாழ்ப்பாணம் | வடக்கு | 74,454 | 21.85% | 253,574 | 74.42% | 12,723 | 3.73% | 340,751 | 100.00% | 66.28% |
வன்னி | வடக்கு | 34,377 | 19.07% | 141,417 | 78.47% | 4,431 | 2.46% | 180,225 | 100.00% |
2019 சனாதிபதி தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்களில் விழுந்த வாக்குகளை கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது.
தேர்தல் மாவட்டம் | மாகாணம் | ராசபக்ச | பிரேமதாச | ஏனையோர் | செல்லுபடி யானவை | நிராகரிக் கப்பட்டவை | மொத்த வாக்குகள் | பதிவான வாக்காளர்கள் | வாக்குவீதம் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | |||||||
மட்டக்களப்பு | கிழக்கு | 38,460 | 12.68% | 238,649 | 78.70% | 26,112 | 8.61% | 303,221 | 4,258 | 307,479 | 398,301 | 77.20% |
யாழ்ப்பாணம் | வடக்கு | 23,261 | 6.24% | 312,722 | 83.86% | 36,930 | 9.90% | 372,913 | 11,251 | 384,164 | 564,714 | 68.03% |
வன்னி | வடக்கு | 26,105 | 12.27% | 174,739 | 82.12% | 11,934 | 5.61% | 212,778 | 3,294 | 216,072 | 282,119 |
இந்தப் புள்ளிவிபரங்கள் ததேகூ எடுத்த முடிவு சாணக்கியமானது என்பதை எண்பித்துள்ளது. ததேகூ யாருக்கு வாக்களிப்பது என்று கேட்டிருக்கவிட்டாலும் பெரும்பான்மை தமிழ் வாக்காளர்கள் இப்படித்தான் வாக்களித்திருப்பார்கள்.
கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அரசியல் தீர்க்கதரிசனம் இல்லாது பல பின்னடைவுகளை சந்தித்தோம். 1931 இல் நடந்த சட்ட சபைத் தேர்தலை யாழ்ப்பாண மாணவர் புறக்கணித்தார்கள். விளைவு ஏக சிங்கள அமைச்சர் வாரியத்தை சிங்கள அரசியல்வாதிகள் உருவாக்கினார்கள். 1994 நாடாளுமன்றத் தேர்தலை வி.புலிகள் புறக்கணித்தார்கள். விளைவு டக்லஸ் தேவானந்தாவின் அரசியல் நுழைவுக்கு வழிகோலியது. 2005 இல் நடந்த சனாதிபதி தேர்தலை வி.புலிகள் உத்தியோகப்பற்றற்ற முறையில் புறக்கணித்தார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு வாக்குத்தான் விழுந்தது. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்களித்தவர்களின் விழுக்காடு வெறமனே 1.21% ஆகும். மகிந்த இராசபக்சாவின் பெரும்பான்மை 180786 வாக்குகள் மட்டுமே. விக்கிரமசிங்க வென்றிருந்தால் போரின் முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கும்.
சனாதிபதி தேர்தல் 2005
District | Province | Rajapaksa | percentage | Wickremesinghe | percentage | Others | percentage | Turnout |
---|---|---|---|---|---|---|---|---|
Jaffna | Northern | 1,967 | 25.00% | 5,523 | 70.20% | 1,034 | 4.8% | 1.21% |
Vanni | Northern | 17,197 | 20.36% | 65,798 | 77.89% | 2,879 | 1.75% | 34.30% |
Batticaloa | Eastern | 28,836 | 18.87% | 121,514 | 79.51% | 4,265 | 1.62% | 48.51% |
ததேகூ சிறிசேனா – இரணில் ஆட்சிக்காலத்தில் ஒன்றுமே செய்யவில்லை என்று பிலாக்கணம் பாடுபவர்கள் நெஞ்சாரப் பொய் சொல்கிறார்கள். எதிர்மறை பரப்புரை செய்கிறார்கள்.
இரணில் – சிறிசேனா ஆட்சியில் வடக்கு கிழக்கின் துரித அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வந்தது. தமக்குக் கிடைத்த வாய்ப்பை வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பயன்படுத்தி வந்ததுது.
சனவரி 2015 தொடக்கம் நொவெம்பர் 2019 வரை ததேகூயின் முயற்சியால் பின்வருன நிறைவேறியுள்ளன.
(1) வட மாகாணத்தில் வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்டன. இதற்காக 40,352 மில்லியன் ரூபாய் நிதி ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கொடுக்கப்பட்டது.
(2) காங்கேசன்துறை துறைமுகம் இந்திய அரசின் உதவியோடு மீள் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய அரசு கொடுத்து உதவியுள்ளதுது.
(3) உயர் பாதுகாப்பு வலையமாக இருந்த மயிலிட்டித் துறைமுகமும் அதனை அண்டிய 54 ஏக்கர் நிலமும் மக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலிட்டித் துறைமுகம் 205 மில்லியன் ரூபா முதலீட்டில் புனரமைக்கப்பட்டது. ஓகஸ்ட் 22, 2018 ஆம் திகதி சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தொடக்கி வைக்கப்பட்டது. ஓகஸ்ட் 15, 2019 முதல்கட்ட வேலைகள் முடிவுற்றது. அதனை பிரதமர் இரணில் மக்களிடம் கையளித்தார். ஆனாலும் முழுமையாகக் காணிகள் கையளிக்கப்படவில்லை என்பது உண்மையே. ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீள்குடியேற்றம் முற்றாக நின்றுவிட்டது.
(4) இரணில் – சிறிசேனா ஆட்சிக் காலத்தில் (2015 -2019) மொத்தம் 47,604 ஏக்கர் காணி (அரச காணி 41,677 ஏக்கர், தனியார் காணி 5,927 ஏக்கர்). இதில் வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட 3,000 ஏக்கர் காணி, சம்பூரில் கேட்வே இன்டஸ்றீஸ் (Sri Lanka Gateway Industries (pvt) ltd) என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு 818 ஏக்கர், கடற்படையினர் வசம் இருந்த 237 ஏக்கர் (617 குடும்பங்கள்) அடங்கும்.
(5) வலி வடக்கில் 3100 ஏககர் காணி 2018 இறுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது. மிகுதி 3,218. ஏக்கர் காணி விடுவிக்கப்படவில்லை.
(6) யாழ்ப்பாண பன்னாட்டு விமான நிலையம் பன்னாட்டு வர்த்தகப் பயணிகள் பயன்படுத்துவதற்கு வசதியாக அபிவிருத்திப் பணிகளை 1950 மில்லியன் ரூபா முதலீட்டுடன் அபிவிருத்திப் பணிகளை தொடக்கப்பட்டது. இந்தியா ரூபா 300 மில்லியனை முதலீடு செய்ய முன்வந்தது. இலங்கை விமானப் படையின் மூலம் துரிதமாக மேற்கொள்வதற்கும் முடிவு செய்யப்பட்டது. ஆட்சி மாற்றத்தின்பின் இந்தத் திட்டம் முடக்கப்பட்டுள்ளது.
(7) 2019 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்துக்கு கம்பெரலி திட்டத்தின் கீழ் 15 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 1,658 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (8) முன்னாள் நல்வாழ்வு அமைச்சர் மரு. ப. சத்தியலிங்கம் அவர்களது முயற்சியால் வடக்கில் 5 மாவட்டங்களில் உள்ள மருத்துவ மனைகளின் மேம்பாட்டுக்கு நெதலாந்து அரசு உருபா 12,000 மில்லியன் (60 மில்லியன் யூரோ) நன்கொடையாகக் கொடுத்து.
(8) ‘கம்பெரலிய’ என்ற கிராமிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மே 2019 வரை வடக்குக்கு Rs.37, 565.2 மில்லியன் உருபா ஒதுக்கப்பட்டுள்ளது.
(9) பின்தங்கிய மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு வீதிகள், குளங்கள், அணைக்கட்டுகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றின் சீரமைப்புக்கு மேலதிகமாக உரூபா 3,402 மில்லியன் ஒதுக்கப்பட்டது.
(10) போரினால் தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உருபா 10 பில்லியன் அரச நிதியுதவியுடன் 10,000 கல் வீடுகள் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கட்டிக் கொடுக்கப்பட்டன.
(11) கிளிநொச்சி மாவட்டத்தில் உரூபா 4474 மில்லியன் மதிப்பீட்டில் சகல வசதிகளுடனும் கூடிய பொது மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது. இதில் 1974 மில்லியன் நெதலாந்து அரசின் நிதி உதவியாகவும், மிகுதி 2500 மில்லியன் இலங்கை அரசின் பாதீட்டின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியாகவும் இருந்தது.
(12) 450 கோடி ரூபாயில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு புதிய கட்டிடத்தொகுதி. கிளிநொச்சியின் அபிவிருத்திக்கு உங்கள் கையால் அடிக்கல் நாட்டிவைப்பதே சிறந்ததென்று பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சிறீதரனிடம் கல்லைக்கொடுத்தார் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க. அத்தோடு 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வைத்திய உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்திக்கான தகவல் பேணும் வர்த்தக மையம் ஒன்றை அமைப்பதற்காக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தம் நேற்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் வைத்து, இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சின் செயலர் கொடிகாரவும் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் பிரதமர் இரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்படும் உதவிகளின் வரிசையில் இத்திட்டமும் ஒன்றாகும்.
இவ் வர்த்தக மையமானது வடமாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்சார் சேவைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் உதவும்.
இவை தவிர, இந்திய அரசினால் அபிவிருத்தி மற்றும் புனர்நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றத்தினை மேம்படுத்தும் முகமாக வடமாகாணத்தில் 46,000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்திய அரசின் நிதியுதவியினால் இம் மாகாணத்தில் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களான யாழ். கலாசார மையம், 27 பாடசாலைகளுக்கான கட்டடங்கள், 3000 மழை நீர் சேகரிப்பு தொகுதிகள், 600 வீடுகளைக் கொண்ட 25 மாதிரிக் கிராமங்கள் ஆகியன அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பில் நாடு முழுவதும் 70ற்கும் மேற்பட்ட மக்கள நலன் சார் அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் வரவுசெலவுத் திட்டத்தில் முதல் முறையாக வடக்குக்கு இன நல்லிணக்கம் என்ற பிரிவுக்காக 12 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் நான் பல தடவை வடக்குக்கு விசயம் செய்துள்ளேன். அத்துடன் திறைசேரியின் நிதி உதவி மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை கிரமமாக நேரடியாக பரிசீலித்து வந்திருக்கின்றேன் என்றார்.
2019 ஆம் ஆண்டு வாக்குப் பணகணக்கு ஒதுக்கீட்டில் 15 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,658 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 536 மில்லியன் யாழ்ப்பாணம், 200 மில்லியன் கிளிநொச்சி,143 மில்லியன்மன்னார், 121மில்லியன் முல்லைத்தீவு மற்றும் 86 மில்லியன் வவுனியா மாவட்டங்களுக்கு பல்வேறு உட்கட்டமைப்பு கருத்திட்டங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரியளவான நிதிஒதுக்கீடு கிராமியவீதிகள், பாலங்கள் உள்ளடங்கலாக உட்கட்மைப்பு வசதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ததேகூ விமர்ச்சிக்கும் பலர் சிங்கள – பவுத்த பேரினவாத அரசுக்கு முண்டு கொடுக்கும் டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி, அங்கயனின் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, சிவநேசதுரை சந்திரகாந்தனின் (.பிள்ளையான்) தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகளையோ அதன் தலைவர்களையோ விமர்ச்சிப்பதில்லை. அரசியல் யாப்ப்புக்கு கொண்டுவரப்பட்ட 20 ஆவது திருத்தத்துக்கு டக்லஸ், பிள்ளையான், அங்கயன், வியாழேந்திரன் எந்த வெட்கமோ துக்கமோ இன்றி இரண்டு கைகளாலும் வாக்களித்தார்கள். இந்த சட்டம் இலங்கையில் ஒரு சர்வாதிகார ஆட்சி அமைய வழிகோலியுள்ளது.
Add title

ததேகூ யை யாரும் விமர்ச்சிக்கக் கூடாது என யாரும் கூறவரவில்லை. ததேகூ தான் இன்று தமிழ்மக்களது இனச் சிக்கலை ஐநாமஉ பேரவையிலும் பூகோள அரசியலிலும் பேசு பொருளாக வைத்திருக்கிறது. ததேகூ தான் அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போனற நாடுகள் பேசுகின்றன. கண்ணிருந்தும் குருடர்களாக இருப்பவர்களே இந்த யதார்த்தத்தை மறுக்க முடியும். (உதயன் – நொவம்பர் 2021)

Leave a Reply
You must be logged in to post a comment.