தமிழர்களை இந்துக்கள் என்று அழைப்பது சரியா?

தமிழர்களை இந்துக்கள் என்று அழைப்பது சரியா?

14 பதில்கள்மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள், தமிழர்களின் சமய வரலாறை பல்லாண்டுகள் படித்து ஆராய்பவன்.1 வருடத்திற்கு முன் அன்று புதுப்பிக்கப்பட்டது · எழுத்தாளர் 520 பதில்களையும் 1.7மி பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்

தமிழர்களை இந்துக்கள் என்று அழைப்பது முற்றிலும் தவறு.

ஐயா உயர்திரு.சிவகுமார் பினாயூர் இராமகிருஷ்ணன் அவர்கள் “தமிழ்நாடு என்ற பெயரை 1969ல் தான் வைத்தோம். அதற்காக 1968 வரை பிறந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல என்று கூறலாமா? ” என்று வினவியுள்ளார்கள்.

இவ்வினாவுக்கு முதல் விடை : தமிழ்நாடு என்னும் ‘தமிழ் கூறும் நல்லுலக’த்தில் எல்லைகளை வரையறை செய்துள்ளது 3700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம்.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்”

என்று தொல்காப்பியர் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றுவரை, நம் கைகளில் கிடைத்துள்ள பழமையான தமிழ்நூல்களில் மிகவும் பழமையான தொல்காப்பியம்தான் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லை என்று கருதுகிறேன்.

தொல்காப்பியம் சொன்ன ‘தமிழ் நிலம்’ எல்லைகள் குறித்து எவருக்காவது இன்னும் ஐயம் உள்ளதா?

இன்றும் அந்த வரையறையின் பெரும்பகுதியைத்தானே தமிழ்நாடு என்று இந்தியக் குடியரசின்கீழ் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1969-ல் அறிவித்தார்.

ஆங்கிலேயரின் ஆட்சி இருந்த இடைக்காலத்தில் தமிழ் நிலத்துடன் இணைந்த ஆந்திர, கர்நாடகப் பகுதிகள் ‘மதராஸ் மாகாணம்’ என்ற பெயரில் இருந்தது.

வரலாற்றுக் காலத்துக்கு முன்பே எம் நிலம் ‘தமிழ் நிலம்’

என்று எம் தொல் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன!

“செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி”

“செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்”

எனத் தொல்காப்பியரும், பனம்பாரனாரும் கூறிய “செந்தமிழ் நிலம்” என்பது முதல்-இடைச் சங்கங்கள் இருந்த காலத்திலேயே தமிழ் நிலப்பகுதியாக இருந்துள்ளது என்பது வரலாற்று அறிஞர் மு.இராகவையங்காரின் நூலில் சொல்லப்பட்ட கருத்தாகும்.

எனவே, திரு.சிவகுமார் பினாயூர் இராமகிருஷ்ணன் அவர்கள் எழுப்பிய கேள்வி பொருளற்றதும், உள்ளீடு துளிகூட இல்லாததும் ஆகும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

திசைதிருப்பும் கருத்துக்களை தமிழர்கள் ஏற்க வேண்டியதில்லை, ஏற்கப்போவதில்லை என்றும் அன்போடு தெரிவிக்கிறோம்!

இன்னும் சிலர், ‘தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்ற கூற்று கிறித்துவ மிஷனரிகளின் வேலை’, என்று திரிக்கிறார்கள்.

ஏன், “தமிழர்கள் இந்துக்கள் அல்லர்” என்று எங்களுக்குத் தெரிந்த உண்மையை, உங்கள் இனத்தவனான மேலை ஆரியனும் சொல்கிறான், அவ்வளவுதானே?

கிறித்துவ மிஷனரிகள் ‘மேலை ஆரிய மிஷநரிகள்’ என்றும், மதமாற்றம் என்பதே அவர்கள் நோக்கம் என்றும் ‘உள்ளூர் ஆரிய மிஷநரிகள்’ கூவுகின்றனர்.

ஆரியர்கள் மேலைநாடோ, உள்ளூர் சரக்கோ, இருவரும் ஆன்மீக, அரசியல் அதிகார வெறிகொண்ட இனவாதிகள் என்பதில் தமிழர்களுக்கு ஐயம் இல்லை.

வேத ஆரியர்களும் பண்டைய தமிழர்களை ஏமாற்றி, வேதமதத்தைத் தமிழர் சமயங்களுடன் கலந்து மதமாற்ற அரசியல் செய்தார்கள். மேலை ஆரியர்களும் அதே வேலையைத் தொடர்கிறார்கள்.

தமிழர்கள் இரண்டு நரிகளிடமிருந்தும் விலகி பாதுகாப்பாக இருக்கவேண்டும். தமிழர் சமயங்கள் சிவனியம், திருமாலியம் என்ற இரண்டே இப்போது பெருவழக்கில் உள்ளவை. ஏனைய தொல்சமயங்களும் உள்ளன. வேதமதம் தமிழ் நாட்டில் பண்டே குடியேறிய வேத ஆரியர்கள் பின்பற்றுவது.

சமய நிலையில் தமிழர்களுக்கு சிவனிய சமயம், திருமாலிய சமயம் இரண்டும் தொல்சமயங்கள். ‘அறம் சார்ந்த மனிதம்’ போற்றும் சமண சமயம், ஆசீவக சமயம், புத்த சமயம் ஆகியன தமிழர்களின் சமயங்களாக கிமு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து, கிபி பத்தாம் நூற்றாண்டுகள் வரையில் கைக்கொள்ளப்பட்டிருந்தன. இவை மட்டுமே தமிழர்களின் தொல் சமயங்கள்.

ஆனால், தமிழனுக்கு எப்போதும் மதம் பிடித்ததில்லை! நல்ல வேளை! தமிழனுக்கு ஒருபோதும் ‘இந்துமதம்’ பிடித்ததில்லை!

‘துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டுக் கொல்லுங்கள்’ என்று கூவும் மத வெறி பிடித்த ‘இந்து மதம்’ பிடித்த மாக்களைக் கீழே காணும் காணொளியில் பாருங்கள். 17 வயது சிறுவன் ‘மதம்’ பிடித்துத் துப்பாக்கியால் சுடுவதைக் காணுங்கள்.

‘மதம்’ என்பது ‘கேள்வி கேட்காமல், கண்மூடித்தனமான நம்பிக்கைகள், பின்பற்றும் சடங்கியல்கள், இவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் கொலைகூடச் செய்யத் தூண்டும் வெறியூட்டும் மூளைச்சலவை முறை’.

‘மதம்’ பிடித்த யானையைவிடப் பயங்கரமான விலங்கு மனநிலையில் இருக்கும் இவர்கள் எப்போது, என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது.

இந்த வரையறைக்குள் வருவது சநாதன மதம் என்றும், வேதமதம் என்றும், என்று பீற்றிக்கொள்ளும் மனுதர்மம் பின்பற்றும் ஆரியர்களின் இந்துமதம்’!

‘ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்! அன்பே சிவம்!’ என்னும் ‘சைவ சமயத்தையும்’, ‘குலம் தரும் திருக்குலம் ஒன்றே குலம் என்று சொல்லும் திருமாலிய சமயத்தையும்’ ‘இந்து மதம்’ என்று அவமானப்படுத்தாதீர்கள் என்று அதனால்தான் சொல்கிறோம்.

சமயம் என்ற சொல் ‘சமை’ – என்ற சொல் மூலத்திலிருந்து வந்தது.

‘சமை’ என்றால் ‘பக்குவப்படுத்து’ என்பது பொருள்.

‘அரிசி’-யைச் சமைத்தால், வெந்து பக்குவப்பட்டு, உண்ணும் தகுதியில் ‘சோறு’ ஆகும்;

பச்சைக் கிழங்குகளை, காய்களைச் சமைத்தால், உண்ணும் வகையில் ‘தொடுகறி’ (அவியல்) ஆகும்;

சிறுமியாய் இருக்கும் குழந்தையின் உடலும், மனமும் வளர்ந்து பூப்பு அடையும்போது, ‘பெண் குழந்தை சமைந்து விட்டாள்’ என்று விழாக் கொண்டாடுகிறோம்.

‘சமூக விலங்கு’-ஆக இருக்கும் மனிதனை, மனிதம் என்னும் பண்பை உரமிட்டு வளர்த்து மனிதனாக்கி, ‘அன்பே சிவம்’ என்று சமைத்துப் பக்குவப்படுத்தி, தெய்வநிலைக்கு உயர்த்தும் வாழ்வியல் முறை சமயத்துக்குச் ‘சைவம்’ என்று பெயர். திருமாலிய சமயமும் மனிதம் போற்றும் உயர்ந்த சமயம்.

தமிழர்களின் சிவனிய, திருமாலிய சமயங்களை ஆரியப் பிராமணர்கள் எவ்வாறு ஊடுருவி, வேதமதக் கோட்பாடுகளைத் திணித்தனர் என்பதை அறிய ஆன்மீகச் சொற்பொழிவாளர் அறிஞர் சுகி சிவம் அவர்கள் அழகாக விளக்குவதைக் கீழ்க்கண்ட காணொளியில் காணுங்கள்.

தமிழ்க்கடவுள் முருகனை எப்படி ஆரியக் கடவுள் சுப்பிரமணியன் ஆக்கி, திருச்செந்தூர்க் கோயிலைக் ஆரியமயமாக்கிய கயமைத்தனத்தை இங்கு காணொளியில் காணுங்கள்!

‘தெய்வம் உன்னுது! மந்திரம் என்னுது!’ன்னு கோல்மால் சமன்பாடு செய்து தமிழர் சமயங்களையும் கோயில்களையும் ஆரிய வேதமயமாக்கி தங்கள் வசம் ஆக்கி உள்ளனர் என்பதை நாசூக்காக ஆன்மீகப் பேச்சாளர் அறிஞர் சுகி.சிவம் உரித்துத் தொங்கவிடுகிறார் கேளுங்கள்!

தமிழக எல்லையைத் தாண்டி, எங்காவது ஆரியர்கள் கட்டிய சிவாகம முறைப்படியான ஆகமக் கோயில்கள் உண்டா?

ஆரியர்கள் தமிழகத் தெய்வங்களையும், தமிழக சமயங்களையும், வேதச் சாயம் பூசிய முறை பின்வருமாறு:

தமிழ்க் கடவுள் முருகன் = (பிராமணர்களுக்கு சுகம் தருபவர் என்ற பொருளில் அமைந்த) சுப்பிரமண்யன்;

தமிழ்க் கடவுள் சிவபெருமான்/சேயோன்/கறைமிடற்றன் = ஆரிய வேதக் கடவுள் ருத்திரன்.

தமிழ்க் கடவுள் திருமால் = ஆரிய வேதக் கடவுள் விஷ்ணு, நாராயணன்.

பிறகு எப்படி ஆகமங்கள் சமஸ்கிருதத்தில் வந்தன என்று கேட்கலாம்!

தெலுங்கர்களான விஜயநகர மன்னர்கள், மராட்டிய சபோஜி மன்னர்கள் காலத்தில், தஞ்சை சரஸ்வதிமஹால் உள்ளிட்ட இடங்களில் வைத்து, சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டன தமிழர்களின் திருக்கோயில் ஆகமங்கள்!

மொழி பெயர்த்ததும் தமிழ் மூல நூலை அழித்தனர்.

ஆகமங்களை மட்டுமா தமிழ் மூலத்தில் அழித்தார்கள்?

  • தமிழ்க் கடவுளர்களின் பெயர்களையும்,
  • தமிழ்க் கடவுளரின் திருக்கோயில் தமிழ்ப் பெயர்களையும்,
  • ஊர்களின் தமிழ்ப் பெயர்களையுமல்லவா

ஒரு சேர அழித்தார்கள்? காட்டாக, பழமலைநாதர்-ஐ விருத்தகிரீஸ்வரர் ஆக்கினர்; ‘பழமலை’-என்ற ஊர்ப்பெயரை விருத்தாச்சலம் என்று மாற்றினர். திருமறைக்காடர்-ஐ வேதாரண்யீச்வரர் ஆக்கினர்; திருமறைக்காடு-என்ற ஊர்ப் பெயரை வேதாரண்யம் என்று மாற்றினர்.

இப்படியே, ஒவ்வொரு ஊரும், கோயிலும், தமிழ்ப் பெயர்களை இழந்தன.

தூய தமிழ்ப் பெயர்களால் தேவார, திருவாசகப் பாடல்பெற்ற தமிழகத்தின் சிவாலயங்கள் அனைத்தும் சமஸ்கிருதப் பெயர்மாற்றம் செய்ததற்குச் சான்று, தேவாரங்களிலும், திருவாசகத்திலும், ஏனைய பன்னிரு திருமுறைகளிலும் காணலாம்.

தமிழர்களின் தொல் சமய வழிபாடுகள் யாவை என்பன தொல்காப்பியத்திலேயே ஐந்திணைகளுக்கும் முறையாகப் பதிவிடப்பட்டுள்ளன.

முதற்பொருள்

உலகம் தோன்றிய காலம் முதல் இருக்கும் நிலமும், பொழுதும் (space and time) முதற்பொருள் ஆகும்.

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பென மொழிப இயல்பு உணர்ந்தோரே (4) – என்று தொல்காப்பிய நூற்பா கூறும்.

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்துவகைப்பாடான நிலத்து மக்களுக்கும், கடவுளர்கள் யாவர் என்று தெளிவாகச் சொல்லும் தொல்காப்பியச் சூத்திரம்:

நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார்.

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(அகத்.5)

என்றுரைக்கின்றார், தொல்காப்பியர்.

முல்லை நிலத்தை ‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்றார்.

காடும், காட்டைச் சார்ந்த இடமும் என்று கூறி, அக்காட்டிற்கு உரிய தெய்வமாகத் திருமாலை மாயோன் என்ற பெயரில் குறிப்பிடுகின்றார்.

தமிழர் மாலியம் சமயத்தை ஆரிய வேதமதம் Religion Conversion Formula: மாயோன் எனப்படும் திருமால் = ஆரிய விஷ்ணு என்பதாகும்.

குறிஞ்சி நிலத்தை மலையும், மலையைச் சார்ந்த இடமும் என்று கூறி, அம்மலைக்கு உரிய தெய்வமாக சேயோனை(சிவனை/முருகனைக்) கூறுகிறார்.

தமிழர் சிவனிய சமயத்தை ஆரிய வேதமதம் Religion Conversion Formula: சிவன் = ஆரிய ருத்திரன்; முருகன் = ஆரிய சுப்பிரமண்யன் என்பதாகும்.

‘வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ எனக் கூறுவது வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகிய மருத நிலத் தெய்வம் வேந்தன் எனப்பட்டான்.

ஆரியர்கள், இந்த வேந்தனை இந்திரனுக்கு ஒப்பாக்கி, இந்திரனே வயலும் வயலைச் சார்ந்த மருத நிலத்துக்குக் கடவுளாகும் என கதை கட்டினர்.

தமிழர் வேந்தன் வழிபாட்டை ஆரிய வேத இந்திரன் Conversion Formula: வேந்தன் = ஆரிய இந்திரன் என்பதாகும்.

‘வருணன் மேய பெருமணல் உலகமும்’ என்று கூறுவது மணல் மிகுந்திருக்கக் கூடிய கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். இந்த நிலத்திற்குக் கடவுளாக வருணன் உரைக்கப்படுகிறான்.

பாலைத் திணை என்பது பாலைவனப் பகுதியாகும். இதற்கான தெய்வத்தைத் தொல்காப்பியர் கூறவில்லை. தமிழ்நாட்டில் பாலைநிலம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

பாலை என்ற நிலம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் காலத்தால் சற்றுப் பிற்பட்ட சிலப்பதிகாரம் தான் சொல்கிறது.

முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை பொழியாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதை

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும் – சிலம்பு-காடுகாண் காதை, 64-66

கூறுகிறது. இப்பாலை நிலத்திற்குக் கடவுள் கொற்றவை எனத், தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் கூறுகிறார்.

மேற்கூறியவைகள் தாம் தமிழர் சமயங்களை ஆரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிய வரலாறு.

இவ்வாறு, எம் சமயங்களை ஆக்கிரமித்த ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள், தொல்காப்பியத்துக்குப் பிற்பட்ட சங்க இலக்கியப் பதிவுகளான, அகநானூறு புறநானூறு கலித்தொகை, பரிபாடல் ஆகிய சங்க இலக்கியங்களில் வரும் தமிழ்த் தெய்வங்களை

  • அவிர்சடைகணிச்சி மணிமிடற்றோன் = ஆரிய ருத்திரன்,
  • விறல்வெய்யோன் = ஆரிய விஷ்ணு,
  • பிணிமுகவூர்தி ஒண் செய்யோன் = ஆரிய சுப்ரமண்யன்

என்று மடைமாற்றம் செய்துவிட்டால், ஆரிய தெய்வங்கள் ஆகிவிட மாட்டார்கள்.

சிவலிங்க வழிபாட்டை ஆரிய வேதம் ‘சிசுன(ஆண்குறி)வழிபாடு’ என்று எள்ளி நகையாடியதே!

தமிழர்களின் ‘சிசுனவழிபாட்டை’ ஆரிய ‘லிங்கோற்சவர்’ ஆக்கி, சம்ஸ்கிருத மந்திரம் சொல்லி ‘இந்து-பொந்து’ என்று மூளைச்சலவை செய்ய சாதிப்பது வீண் முயற்சி.

ஏற்றுக்கொள்ளுகிறோம்! ‘மேலை ஆரியமோ, இந்திய ஆரியமோ, எதுவாயினும், ஆதிக்க சக்திகள்! பிரிவினை சக்திகள்! என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

என் தந்தைக்குத் தெரியாமல் என்னை ‘இந்து’ என்று பச்சை குத்திய அரசு இயந்திரம்!

என் தந்தையின் மதம் ‘சைவம்’ என்று 1937ம் ஆண்டு என்று எனது தந்தைக்குத் தரப்பட்ட ‘SSLC’ புத்தகம் சொல்கிறது; எனது மதம் ‘இந்து” என்று 1978ம் ஆண்டு எனக்குத் தரப்பட்ட ‘SSLC’ புத்தகம் சொல்லுகிறது. ஒரு இந்து-அல்லாத ‘சைவம்’ என்ற சமயத்தில் பிறந்த தகப்பனுக்குப் பிறந்த என்னை, என் தந்தைக்கும், எனக்கும் தெரியாமல் ‘இந்து’ மதம்-ஆக அடையாள மை மாற்றிவிட்டார்கள்! எங்குபோய் முட்டிக்கொள்ள?

வேத ஆரிய இந்துக்களே!

  • தமிழர்களாகிய நாங்கள், ‘கிறித்துவ / இசுலாமிய மதத்துக்கு’ மாற்றும் ஆபத்திலிருந்து, எங்களைப் பாதுகாத்துக் கொள்கிறோம்!
  • வேத ஆரிய இந்துமதத்துக்கும் நாங்கள் ஒருக்காலும் மாறமுடியாது என்பதையும் உறுதியாகத் தெரிவிக்கிறோம்!
  • நாங்கள் சிவனியர்கள்! திருமாலியர்கள்! நாட்டார் தெய்வங்களை வழிபடுபவர்கள்! பன்மைத்துவத்தைப் போற்றுபவர்கள்! எங்களை எங்களாக வாழவிடுங்கள்!
  • எங்கள் சமய, திருக்கோயில் விவகாரங்களிலிருந்து அன்பு கூர்ந்து ஒதுங்கி, விலகிப் போங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம்!
  • நீங்கள் எங்கள் நாட்டில் எப்போதும்போல, பாதுகாப்புடன் வாழலாம்!

ஆரியர்களின் குறிக்கோள் ‘ஆன்மிக அதிகாரம்’ என்பதும்,

  • ஆன்மிக அதிகாரத்தைப் பெற,
  • ஆரியர்களுக்கு உரியதாக இல்லாமல் இருந்தாலும்,
  • உரியதாக ஆக்கிக்கொண்டு, விழுங்கிச் செரிக்கும் கயமைத்தனம், அனைத்தையும் தமிழர்கள் நன்கு அறிந்துகொண்டுவிட்டனர்

என்று அறிந்த பின்னரும்

  • ‘அன்று தொட்டு இன்று வரை தமிழ்நாட்டில் பரவி இருந்தது இந்து மதமே என்பது திண்ணம்.’

என்று சாதிக்க முயலும் பிடிவாதம் எதுவும் இனி தமிழர்களிடம் ஒருக்காலும் செல்லாதைய்யா! செல்லாது!

தமிழர்கள் இந்துக்கள் அல்லர்!

தமிழர்கள் சங்கிகள் அல்லர்!

தமிழர்கள் சூத்திரர்கள் அல்லர்!

——————————————————————

பின்னூட்டமும் பதிலும்:

ஐயா பி. இரா. சிவகுமார் (P. R. Sivakumar)அவர்களின் பின்னூட்டம்:

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தொல்காப்பிய சான்றை தாங்கள் உரைக்கலாம். என்றும் உள்ள பழவறத்திற்கு அதே இலக்கிய சான்றுகளை நான் உரைத்தால் தவறா? .

மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் (Maayon (Krishnan) Nallaperumal) மூல எழுத்தாளர் · பதில்

அன்புள்ள ஐயா,

தமிழர்களின் சங்க இலக்கியச் சான்றுகள் காட்டும் தமிழர்களின் தத்துவ மரபு பன்மைத்துவமானது.

அழகு தமிழில், தாங்கள் ‘பழவறம்’ என்று குறிக்க விழைவது ‘சநாதனதர்மம்’ என்ற வேத மரபின் தருமம். வேதமரபையே ‘இந்துதருமம்’ என்ற பெயரில் நிலைநிறுத்த, பல்வேறு மரபுகளையும், அதற்குள் உள்வாங்கிச் செரித்துக் கட்டமைக்க ஏனையோர் முயல்வதில் எனக்கு வியப்பில்லை.

தமிழ் செவ்விலக்கியங்களை செம்மார்ந்து உணர்ந்த தாங்கள், வேதமரபில் பிறந்து, வேதமரபின் மனிதவிரோத போக்கைச் சாடிய பசவண்ணரைப் போல், உண்மையின் பக்கம் நிற்க வேண்டும்.

வேதமரபு பிறப்பினால், மனிதர்களை ‘மேல்-கீழ்; பிராமணர்-சூத்திரர்’ என்று படிமுறை சமூகத்தைக் கட்டமைக்கும் முயற்சி.தமிழரின் ‘அறம்’ என்ற நெறி அனைவருக்கும் பொதுவானது; பிறப்பினால் ஏற்றத்தாழ்வு காட்டாதது.

தங்கள் கட்டுரையில் காட்டிய சங்க இலக்கியச் சான்றுகள் தமிழர் மரபுகளான மாலியம், சிவனியம் சார்ந்தவை, வேத மரபுகள் அன்று என்பதால்தான் தங்கள் கருத்தை மறுக்கும் எனது கருத்தைப் பதிவு செய்திருந்தேன்.

சங்க இலக்கியங்களில் வேத மரபுகளின் தடங்களும் உண்டு.

காட்டாக,

  • பாண்டிய மன்னன் ஒருவன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்றும்,
  • சோழ மன்னன் ஒருவன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்றும்

பெருமையோடு, வேத வேள்வி வேட்ட பெருமையைத் தம் பெயரோடு சேர்த்தார்கள்.

நிறைய வேள்விகளைச் செய்து, வந்தோர்க்கு நிறையப் பரிசில்களை வழங்கிய பூஞ்சாற்றூர் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடிய புறநானூறு பாடல்,

நீர் நாண நெய் வழங்கியும்
எண் நாணப் பலவேட்டும்
மண் நாணப் புகழ் பரப்பியும்”

என்று புகழ்கின்றது.

நீரை விட அதிகமாக நெய் ஊற்றப்பட்டதால், நீர் நாணப்பட்டதாம்! செய்த வேள்விகளின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது என்ற கவலையில், எண் நாணப்பட்டதாம்! கௌணியனின் புகழ் கண்டு புவி நாணியதாம்! சங்க காலத்தில் வேள்வி மரபும் ஊடுருவியிருந்தது என்பதை எடுத்துக்காட்ட, இதை மேற்கோள் காட்டலாம்.

பிராமணர்களுக்கு ஊர்களைத் தாரைவார்க்கக் கைகளில் ஊற்றப்படுகின்ற நீர் கடல்போலப் பெருகட்டும் என்ற பொருளில்,

“கை பெய்த நீர் கடற்பரப்ப ஆம் இருந்த அடை நல்கி”

என்ற சிறுவெண்தேரையார் புறநானூறுப் பாடலைச் சான்று காட்டலாம்.

மன்னர்களைக் கையில் போட்டுக்கொண்டு, தமிழர்களின் ஊர்களை வேதவேள்வியினர் கைப்பற்றிக் கொண்டதை மேற்கண்ட பாடல் சான்று காட்டுகின்றது.

இப்படிப்பட்ட சான்றுகளே சங்ககால வேதமரபுகளின் தொல்லெச்சங்கள்.

ஆதித்தமிழரின் மரபுகள்!

“துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று

இந்நான்கு அல்லது குடியும் இல்லை”

என்று புறநானூறு புலவர் மாங்குடிகிழார் சொல்லும், வடபுலத்திலிருந்து வந்த வேத மரபுக்கு முந்தைய தமிழரின் ஆதி மரபு, மக்களுக்கான கடமைகளையும் வரையறுத்து வைத்திருக்கிறது.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

என்று ஆதிமரபின் இக உலகச் சிந்தனையைச சிறப்பித்துச் சொல்கிறார் பொன்முடியார் என்னும் புறநானூறுப புலவர்.

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே’

என்று நல்லொழுக்கம் கற்பிக்கும் பொறுப்பை வேந்தனுக்குக் கடமையாக விதித்துள்ளதே தவிர, அப்பொறுப்பைப் புரோகிதர் கையில் ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வுலகவாழ்வின் கடமைகளை பர உலக வாழ்வோடு இணைக்காத, ‘வீடுபேறு’ குறித்த சிந்தனை இல்லாத அந்த ஆதிமரபில், புரோகிதப்பிரிவு தேவையில்லாத ஒழுக்கவியல் பிரிவு வேந்தனை மையப்படுத்தி இருந்திருக்கிறது.

இறப்பு உண்மை; வெறும் மாயம் அன்று என்று இறப்பை இயல்பாக,

“காவுதோறு இழைத்த வெறியர் களத்து
இடம்கெடத் தொகுத்த விடையின்
மடங்கல் உண்மை மாயமோ அன்றே”

“வெறியாடல்” விருந்துக்கு வெட்டுவதற்காக ஒன்றை ஒன்று நெருக்கிக்கொண்டு நிறுத்தப்பட்டிருக்கும் ஆடுமாடுகள் வெட்டப்படப்போவது எவ்வளவு உண்மையோ அவ்வாறே, இறப்பு உண்மை, மாயம் அல்ல” என்று பாடுகிறார் மற்றொரு புறநானூறு புலவர் கோதமனார்.

வேத மறுப்பு மரபு:வேதமரபு மறுப்பாளர்கள் புறநானூறு சங்க காலத்திலேயே இருந்தார்கள் என்பதை

இம்மை செய்தது மறுமைக்காம் எனும்
அறவிலை வணிகன் ஆய் அலன்; பிறரும்
சான்றோர் சென்ற நெறி என
ஆங்குப் பட்டன்று அவன் கை வண்மை”

என்ற ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புறநானூறு பாடல் ஆசிரியரின் “அறவிலை வணிகன் ஆய் அலன்” என்ற சொல்லாடல் நம்மைப் புல்லரிக்க வைக்கின்றது.

அறச்செயல்கள் புரியும் புண்ணியம் மறுமைக்கு உதவும் என்று ‘அறத்தை விலைபேசி விற்கும்’ வைதிகர்களின் வணிகத்தை’ச் சாடுகிறார் முடமோசியார்.

இது வேதமறுப்பு சான்று. இவைபோல் பலவும் காணக் கிடைக்கின்றன.

இவை தவிர, சமணம், ஆசீவகம், பௌத்தம் போற சமயங்களின் தடங்களும் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன என்பதன் பொருள், சங்க கால மக்கள் பல்வேறு வகைப்பட்ட சமய நம்பிக்கைகளையும் கைக் கொண்டிருந்தனர் என்பதும், பன்மைத்துவமான கலாச்சாரமே தமிழர்களின் சங்கவாழ்வு என்பதும் தெளிவாகும்.3.6ஆ பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்பகிர்வுகளைப் பார்க்கவும்723தொடர்புடைய கேள்விகள்மேலும் அதிகமான பதில்கள் கீழேதமிழர்களை இந்துக்கள் என்று அழைப்பது ஏமாற்று வேலைதானே?தமிழர்கள் ஏன் மதம் மாறினார்கள்? எப்போது?தமிழர்கள் இந்து மதத்திற்கு முன் என்ன மதங்களை பின்பற்றி வந்தனர்?யூதருக்கும் தமிழருக்கும் ஏதாவது பிரச்சனை உள்ளதா?தமிழன் திராவிடனா, இந்துவா?ஸ்ரீராம் சந்திரசேகரன்1 வருடத்திற்கு முன் அன்று புதுப்பிக்கப்பட்டது · எழுத்தாளர் 105 பதில்களையும் 197.4ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்

உண்மையில் தமிழ் பேசுபவர்களை தமிழர்கள் என்று அழைப்பதே பெரிய தவறு.

கல் தோன்றி மண் தோன்றா காலம் முதல்…இந்திய சுதந்திரம் அடைந்து மொழி வழி மாநிலங்கள் பிரியும் வரை தங்களை தமிழர் என்று அழைத்து கொண்ட ஒரு குழுவோ, மக்களோ இருந்ததாக வரலாறு இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

சில சங்க புலவர்களும், பிற்கால பாரதி பாரதிதாசன் போன்ற கவிஞர்களும் தமிழர் எனும் மொழி சார் அடையாளத்தை தங்கள் பாடல்/ கவிதைகளில் பாடிவிட்டு போனார்கள், இது ‘சாதிகள் இல்லையடி பாபா’, எனும் வரிகள் போல் ஒரு கருத்தாய் மட்டுமே இருந்ததே ஒழிய, நிதர்ஸன வரலாறு இப்படி ஒரு மொழி வழி அடையாளத்தை தக்கவைக்க முடியவில்லை.

இந்த மக்கள் தங்களை சேர சோழ பாண்டியர் என்றே அடையாள படுத்தினர் என்பது தான் உண்மை. சொல்லப்போனால் தமிழ்நாடு என்று மொழி வழி நாடு இருந்ததும் கிடையாது.

ஐயா உயர்திரு மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் (Maayon (Krishnan) Nallaperumal)

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்”

என்ற தொல்காப்பிய வரிகளை எடுத்தாண்டு இதோ பார் தமிழ்நாடு எனும் தமிழ்சார் நாடு என்று நிறுவும் முயற்சியில் இடுபட்டுள்ளார். இது மிகவும் தவறான முடிவு. தொல்காப்பியர் சொன்னது தமிழ் எனும் மொழி பேசப்பட்ட நிலப்பரப்பு(Geographic region) எது என்பது தானே ஒழிய, இந்த வரிகள் இப்படி பட்ட மொழி சார் நாடு(Nation) இருந்தது என்று சொல்லவில்லை. இரண்டிற்கும் பெரிய வேறுபாடு உண்டு.

உதாரணத்திற்கு ஐரோப்பா கண்டதை மொழி வழியாய் காட்டும் வரைபடம் கீழே. இதை பார்த்தாலே உங்களுக்கு புரியும். ஜெர்மானிய மொழி பேசப்படும் பகுதிகள் 6 நாடுகளாய் இருக்கின்றன. அவை ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்ஸம்பர்க், லியேசெஸ்டின், ஸ்விட்ஸர்லாண்ட்.

தொல்காப்பியர் வரிகள் படி இவை அனைத்துமே ‘ஜெர்மனி கூறும் நல் உலகு’ தான். ஆனால் இங்கே உள்ள மக்கள்(ஜெர்மனி அல்லாத பிற நாட்டு மக்கள்) தங்களை ஜெர்மனியர்களாக பார்ப்பதில்லை என்பதே உண்மை. இதுவே தமிழ்நாடு மற்றும் தமிழுக்கு பொருந்தும்

ஆக தமிழ் கூறும் நல் உலகு, செந்தமிழ் நிலம் என்று சில புலவர்கள் பாடியதால் இப்படி மொழி சார் அடையாளம் ஏந்திய மக்கள் இருந்தார்கள் அல்லது மொழி சார் நாடு இருந்தது என்பது பொருளற்ற வாதம்.

ஆக தமிழர் என்று நாம் அடையாள படுத்தி கொள்ள ஆரம்பித்தது பிற்காலத்தில் அதுவும் மொழி வழி மாநிலங்கள் பிரிந்ததால் ஏற்பட்டது.

சேரன் பிள்ளைகள் இந்த தமிழர் என்று எல்லாம் எங்களை அழைக்காதீர்கள் என்று தனியாக போனதும் கண் முன்னே இருக்கும் உண்மை தானே!!

ஆக தமிழ் வேந்தர்கள் என்று மூன்று வேந்தர்களையும் வரலாற்றின் பெரும் பகுதியில் தமிழ் இணைக்கவில்லை. சொல்ல போனால் பாண்டியன் சிங்களர்களுடன் சேர்ந்து தமிழ் பேசிய சோழனை ஒழித்தது தான் வரலாறு.

இருப்பினும் இன்றைய சூழலில் நாம் நம்மை தமிழர் என்று அடையாள படுத்த காரணம், நாம் பல சிறு நாடுகளாய் – சோழ, பாண்டிய, தொண்டை, பல்லவ etc இருந்து நிர்வாக சிக்கலை மட்டுமே ஏற்படுத்தமுடியும். இதை செய்வானேன் என்று இனைந்து செயல்படுகிறோம். அவ்வளவே.


இதே போல் தான் சைவம், வைணவம், சாக்தியம், கௌமாரம் என்று பல தெய்வ வழிபாடுகள் இருந்தாலும் அவை அடிப்படையில் ஒரு சித்தந்த ஊற்றில் இருந்து தான் வருகிறது என்று உணர்ந்தே நாம் இந்துக்களாய் அறிய படுகிறோம்.

மேலும் தொல்காப்பியம் தொடங்கி திருக்குறள் வரை எல்லா தமிழ் இலக்கியங்களிலும் இந்து கடவுளர் வந்து கொண்டே தான் இருக்கின்றனர்!

ஏன், ஐயா உயர்திரு மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் (Maayon (Krishnan) Nallaperumal) கூறிய அதே பாடலில்,

அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம்
[1] நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

என்று நான்கு வேதங்கள் கற்றவர் மற்றும் ஐந்திரம் எனும் சமஸ்க்ருத இலக்கண உரை கற்றவர் தாம் என்று பாடுகிறார். தமிழ் ‘ஆர்வலர்கள்’ இந்த நான்மறை பற்றிய குறிப்பை மறக்காமல் மறந்துவிடுகின்றனர்.

இது போதாது என்று காரிக்கண்ணனார், புறநானூற்று பாடலில் சோழனையும் பாண்டியனையும் கிருஷ்னன் பலராமன் போல் ஒற்றுமையாய் இருந்து இந்த உலகை ஆளவேண்டும் என்கிறார்

பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமி யோனும்என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ?
[2]

இதை தவிர ஐந்திணை கடவுளரான முருகன், திருமால், வருணன், இந்திரன், கொற்றவை என்று அணைத்து தினை கடவுளரையும் இந்துக்கள் மட்டுமே இமயம் முதல் குமரி வரை வணங்குகின்றனர்!!

இப்போது சொல்லுங்கள், தமிழ் பேசுவதாலேயே பல நாடுகளாய் வரலாற்றில் இருந்த மக்கள் அதுவும் தமக்குள்ள பல போர்களை செய்து கொண்டவர்களை தமிழர் என்று ஒரு புது அடையாளம் பொருத்தி இணைத்து பார்க்கலாம் என்றால்…ஆதி காலம் முதல் இன்று வரை தமிழ் இலக்கியம் கூறும் கடவுளரை ஏற்கும் மக்களை ஒரே அடையாளம் கொண்டு இந்து என்று ஏன் அழைக்க கூடாது??

Note: என்னால் நான் சொன்ன தகவலுக்கான இணைப்பை சேர்க்க முடியவில்லை. என்ன technical பிரச்னை என்று தெரியவில்லை. ஆனால் நான் கூறிய அனைத்துமே google செய்து எளிதில் பார்க்க கூடியவை தான்

நன்றி.

அடிக்குறிப்புகள்[1] ஐந்திரம் (இலக்கண நூல்) – தமிழ் விக்கிப்பீடியா[2] 58. புலியும் கயலும்!1.9ஆ பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்பகிர்வுகளைப் பார்க்கவும்113பி. இரா. சிவகுமார், பன்னாட்டு கணினி மென்பொருள் நிறுவனம்-இல் இயக்குநர் (2015-தற்போது)1 வருடத்திற்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது · எழுத்தாளர் 957 பதில்களையும் 930.3ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்

கிறித்தவ, இசுலாமிய, சமண, பௌத்த போன்ற நெறிகளை (சமயங்களை) பின்பற்றாத தமிழர்களை இந்துக்கள் என்று தான் அழைக்க வேண்டும். இதில் மாற்று கருத்தே இல்லை. சிலர் “இந்து” மதம் என்ற சொல்லே 200 ஆண்டுகளுக்கு முன் இல்லை என்று கூறக்கூடும். அவர்களுக்கு நான் கூறும் விடை – “தமிழ்நாடு” என்ற பெயரை 1969ல் தான் வைத்தோம். அதற்காக 1968 வரை பிறந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல என்று கூறலாமா? அதே போலத்தான் இதுவும். பெயர்களை நமது வசதிக்காக மாற்றுவதால் நாம் பின்பற்றி வந்த அறவாழ்கை மாறிவிடாது. இன்றைக்கு நமக்கு கிடைத்துள்ள மிகப்பழமையான தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை வைத்து பார்க்கும் பொழுது, அன்று தொட்டு இன்று வரை தமிழ்நாட்டில் பரவி இருந்தது இந்து மதமே என்பது திண்ணம். சில மேற்கோள்களை இங்கே அளித்துள்ளேன். அனைத்து சங்க இலக்கியங்களும் மின் வடிவில் உள்ளன (தமிழ் இணையக் கல்விக்கழகம்). முழுமையாக படித்து பயன் பெறவும்.

1. அகநானூறு கடவுள் வாழ்த்துப் பாடல்:

ஊர்ந்தது ஏறே, சேர்ந்தோள் உமையே (பரமசிவனார்)

2. புறம் பாடல் 56

ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும் (பரமசிவனார்)

கடல்வளர் புரிவளை புரையு மேனி

அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும் (பலராமன்)

மண்ணுறு திருமணி புரையு மேனி

விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும் (திருமால்)

மணிமயி லுயரிய மாறா வென்றிப்

பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென (முருகன்)

3. பரிபாடல் பாடல் 1 முதல் 3

இப்பாடல்களில் திருமாலின் வருணனை இடம்பெற்றுள்ளது. மார்பில் (கௌஸ்துபம் என்று அறியப்படும்) மணியை அணிந்தவர் என்றும், திருமகளை தனது திருமார்பில் தாங்கியவர் என்றும் மற்றும் பல அவதாரங்களை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

4. கலித்தொகை

கலித்தொகையில் வாழ்த்துப் பாடல் சிவபெருமானின் கொடுகொட்டி, பண்டரங்கம், காபாலம் ஆகிய திருநடனங்களை பற்றி உரைக்கிறது. மேலும் முதல் கலியான பாலைக் காலையிலும் முக்கண்ணன் குறிப்பிடப்படுகிறார்.

சங்ககாலத்தை சற்றே தாண்டி பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உள்ளன (இவற்றை சங்க கால நூல்களாகக் கருதுவோரும் உண்டு).

5. பதினெண்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை முழுவதுமே கந்தவேளாம் முருகனைப் பற்றியதாகும். இதில் குறிப்பாக அடிகள் 89 முதல் 102 வரை முருகனது ஆறு முகங்களைப் பற்றிய விளக்கம் இடம்பெற்றுள்ளது.

6. நான்மணிக்கடிகையில் விளம்பி நாகனார் திருமாலின் சக்கரத்திற்கு ஞாயிறையும், அவரது திருமுகத்திற்கு திங்களை ஒப்பிட்டு, திருமால் தனது அடியால் மூவுலகைத் தாண்டியமை, குன்றெடுத்து ஆவினங்களையும் ஆயர்களையும் காத்தமை ஆகிய நிகழ்வுகளை தனது கடவுள் வாழ்த்தில் பதிகிறார்.

மேலும் திரிகடுகத்தில் வாமனன், கண்ணனின் வருணனை, பிற்காலத்தே வந்த சிலப்பதிகாரத்தில் ஆயர்குரவை என இன்னமும் கூறிக்கொண்டே போகலாம். ஆக, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த மேற்கோள்களைக் காணுங்கால், சங்க இலக்கியங்களில் சிவபெருமான், திருமால், முருகன் போன்ற கடவுளரின் வருணனைகள் கொட்டி கிடக்கின்றன.1.4ஆ பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்9கிஷோர் ரா சுதர்சன், Al-Sharhan Industries-இல் Production Controller (2019-தற்போது)1 வருடத்திற்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது · எழுத்தாளர் 538 பதில்களையும் 1.8மி பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்

நான் படித்தது தமிழ், என் தந்தை தாத்தா எல்லாம் படித்ததும் பேசியதும் தமிழ், தற்போது வீட்டில் பேசுவதும் தமிழ் எனவே நான் தமிழன் தானே.. அல்லது தமிழன் என்பதற்கு வேறு ஏதேனும் அளவுகோல்கள் இருக்கின்றதா என்று நானறியேன்.

நான் கிருத்தவனாகவோ முஸ்லிமாகவோ மதம் மாறிவிட்டால் நான் தமிழன் இல்லை என்று மாறிவிடுமோ.

மதம் மாறியவர் இருக்கலாம்.. மொழி மாறியவர் கோராவில் யாரேனும் உண்டா

மொழி என்பது பிறப்பால் உணர்வால் வருவது மதம் வழிபடும் முறைகளால் வருவது இரண்டும் எப்படி இணைக்கப்பட்டு இந்தக் கேள்வி எழுகிறது என்பதே புரியாத விஷயமாக இருக்கிறது.

அரேபியர்கள் அல்லாதவர் முஸ்லிம்கள் அல்ல, ஆங்கிலேயர் அல்லாதவர் கிறிஸ்தவர்கள் அல்ல என்பது போன்ற பொருத்தமற்ற வாக்கியம் தான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதும்.

‘கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை

வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு’

—புறா நானுறு..

உசாத்துணை :

சங்கப் பாடல்களில் இராமாயணம் – தமிழ் விக்கிப்பீடியா2.6ஆ பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்6தொடர்புடைய கேள்விகள்மேலும் அதிகமான பதில்கள் கீழேதமிழர்களின் வழிபாட்டு முறைக்கும் பார்ப்பன இந்து மத வழிபாட்டு முறைக்கும் உள்ள வேறுபாடு என்ன?அயோத்தியில் மசூதி கட்ட ராமர் கோவில் இடிக்கப்படும் போது, இந்துக்கள் செய்த போராட்டங்கள் என்ன?பிராமணரல்லாத இந்துக்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளதா?“தீபாவளி” இந்துக்கள் பண்டிகையா இல்லை தமிழர் பண்டிகையா?தமிழர்களின் மதம் ஆசீவகம் என்றால் இந்து மத கோயில்களில் எந்த மொழியில் பூஜை செய்தால் நமக்கு என்ன? பன்னிரு திருமுறைகளையும் தான் ஆராதனைக்கும் கல்வெட்டுகளிலும் பயன்படுத்துகிறார்களே?தமிழ், தமிழ் மற்றும் வரலாற்று மாணவன்2 வருடங்களுக்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது · எழுத்தாளர் 199 பதில்களையும் 803.4ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்முதலில் பதிலளிக்கப்பட்டது: தமிழர்களை இந்துக்கள் என்று அழைத்து ஏமாற்றுவது சரியா?

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply