எது தமிழர்களின் மதம்?

தமிழ் நெறி என்பது யாது?

இது ஒரு பெரிய கேள்வி விளக்குவது கடினம் முயற்சி செய்கிறேன்.

இந்திய தமிழர்கள் பலர், இந்தியம் [இந்து + இந்தி + இந்தியா] என்ற மாயையை அவர்களை அறியாமல் கட்டிக்கொண்டு அழும் அடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

முதன் முதலாக ஆங்கிலேயரின் காலத்தில் தான் 1787 ல் இந்தூயிசம் என்ற வார்த்தை ஒரு மதத்தை குறிக்கும் வார்த்தையாக எழுதப்பட்டது.

அப்பொழுது இருந்த இந்திய மக்கள் கூட்டத்தை கணக்கிடும் போது யார்

 1. பார்சி,
 2. கிறிஸ்தவன்,
 3. இஸ்லாமியன்.

இல்லையோ அவர்கள் அத்தனை பேரையும் வெள்ளைக்கார ராணி இந்து என சட்டம் இயற்றினார். அதனால்

 1. சைவர்கள்.
 2. சமணர்கள்.
 3. வைணவர்கள்.
 4. பௌத்தர்கள்.
 5. சீக்கியர்.

இவை அனைத்தும் இந்துக்களாக்கிவிட்டனர்தமிழ்நாட்டில் இருப்பது எல்லாம் சைவ மடங்கள். ஆனால் சட்டப்படி அவை அனைத்தும்  இந்து மடங்கள்.

 • சீனாவிலும்இலங்கையிலும் போய் நீங்கள் எல்லோரும் இந்துக்கள் என்றால் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்.

தமிழர் எல்லோரும் இந்துக்கள் அல்ல. தமிழனுக்கு தனியான சமயங்கள் உண்டு.

 1. சிவ வழிபாடு.
 2. வைணவ வழிபாடு.
 3. முன்னோர் வழிபாடு.
 4. முருகன் வழிபாடு.

இவைதான் தமிழனுடைய சமயங்கள் ஆகும்.

 • 150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த  வள்ளலாருக்கு  இந்து  என்கிற மதம் தெரியாது. வள்ளலார் சொல்கிறார் சமஸ்கிருதம் எனும் கடுமையான மொழியை விட இனிமையான தமிழை தெரிந்துகொண்டதற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறார்.
 • 150 ஆண்டுக்கு முன் தமிழை பாருங்கள். இந்து என்கிற சொல்லே இல்லை. வள்ளலார் சிவ மதம்தானே.
 • விவேகானந்தர் அமெரிக்காவிலே போய்  இந்து மதத்தை  பற்றிப் பேசி பல பாராட்டுகளை பெற்று வந்தவர்.  கேரளா திருவனந்தபுரத்தில் பேசும் போது நாம் எல்லாம் இந்துக்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு பார்வையாளராக வந்த மனோன்மணீயம் சுந்தரனார் உடனே நாங்கள் இந்துக்கள் இல்லைதிராவிடர்கள் என்று கூறி விளக்கம் அளித்துள்ளார். இதனை புரிந்துகொண்டு  இந்து மதத்தின்  பெருமையை பேசாமல் விவேகானந்தர் உரையை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார்.
 • ஆறுமுகம்  செட்டியார். அவர் அந்த காலத்தில் சிவமதம்  என்று பத்திரம் எழுதியிருக்கிறார். ஏன் அவர் இந்து என எழுதவில்லைகாரணம் அப்பொழுது இந்துமதமே இல்லை.
 • மொரிசியஸ் நாட்டுக்கு வேலைக்கு சென்றவர்களின் பதிவில் தமிழ் மதம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இலங்கையில் இந்துசமயம் என்று பள்ளிக்கூடங்களில் இன்றுவரைக்கும் கற்பிப்பது இல்லை. சைவநெறி என்ற பெயர் மூலமே இறைநம்பிக்கை ஊட்டப்படுகிறது.
 • ஐரோப்பிய நாடுகளிலும் சைவநெறி என்றுதான் கற்ப்பித்துக்கொடுக்கிறார்கள்.

சரி இந்து மதத்தை பற்றிய சில அரிய தகவல்கள் உங்களுக்காக.

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திரருடைய வாக்குமூலத்தின்படி :

இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்கிறோம். இதற்கு உண்மையில் இப்பெயர் கிடையாது. நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான்.
[தெய்வத்தின் குரல் பாகம்-1, பக்கம்-126]

வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ஹிந்து என்று பெயர் வைத்திருக்கா விட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக  நினைத்துக் கொண்டிருப்போம், என்கிறார்.
[தெய்வத்தின் குரல் பாகம்-1, பக்கம்-267]

2. பெரியார் :
இந்தியாவில் வாழும் அனைத்து மக்களின் தாய் மதம் ‘இந்து’ என்றால், ‘இந்து’ என்ற சொல் – வேதம், புராணம், சமஸ்கிருதம் உள்ளிட்ட – எந்த நூலிலும் இடம் பெறாதது ஏன்? இது 1927 ஆண்டிலேயே பெரியார் எழுப்பிய கேள்வி இதுவரை விடை கிடைக்காத கேள்வி.

3. இராஜாஜி
பார்ப்பனர்கள் தங்களின் ‘பிதாமகனாக’ கொண்டாடும் இராஜகோபாலாச்சாரி எனும் இராஜாஜி, “இந்து மதம் என்பது அண்மைக் காலத்திய புதிய பெயர்” என்கிறார்.

4. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி இராசமன்னார் :
இந்துமதம் தெளிவற்றது, வரையறை ஏதும் இல்லாதது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த நீதிபதி இராசமன்னார் ஒரு தீர்ப்பில் கூறினார். [மைக்கேல் எதிர் வெங்கடேசன் வழக்கு – 1952]

5. காந்தியார்
“இந்து என்ற சொல் வேதத்தில் சொல்லப்படவில்லை. மகா அலெக்சாண்டர் இந்தியா மீது படை எடுத்தபோது சிந்துவுக்கு கிழக்கே உள்ள மக்களை இந்துக்கள் என்று குறிப்பிட்டனர்” என்கிறார் காந்தியார் [‘அரிஜன்’ பத்திரிகை, 30.11.1947].

6. அம்பேத்கர்
இந்து சமூகம் என்பது ஒரு புனைவு” என்று கூறும் அம்பேத்கர், இந்து மதத்துக்கு ஒரு பொதுப் பெயர் இல்லாமல் போனதற்குக் காரணம், “இது ஒரு சமூகமாகவே உருவாகியது இல்லை, ஒரு சமூகமாக உணரப்படவும் இல்லை, எனவே அதற்கு பெயரே உருவாகாமல் போனது” என்று தெளிவாக விளக்குகிறார்.

இவ்வாறு பலர் இந்துமதத்தைப்பற்றி விளக்கியுள்ளனர்.

2ஆ பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்பகிர்வுகளைப் பார்க்கவும்113சீனிவாசன் சொக்கலிங்கம், Bachelor of Engineering Electrical and Electronics Engineering, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1963)1 வருடத்திற்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது·  எழுத்தாளர் 904 பதில்களையும் 451.5ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்

திரு சிவகுமார் பினாயூர் இராமகிருஷ்ணன் அவர்களின் சிறந்த விளக்கத்திற்கு மேல் சொல்வதற்கேதுமில்லை.

ஆயினும் நம்மிடையே “ஆன்மீகம், மதம், சமயம் ஆகிய மூன்று சொற்களைப்பற்றிய சரியான புரிதல் இல்லை; புரிதல் இல்லாமையால் தெளிவும் இல்லை.

தமிழர்கள் மதம் சார்ந்தவர்கள் அல்லர்; தமிழர்கள் சமையம் சார்ந்தவர்கள் ஆவர். மதம், சமையம் என்ற இரு சொற்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? சற்றே ஆழ்ந்து சிந்திப்போம்.

நாயன்மார்கள் அருளிச்செய்த தேவாரம், திருமுறைப் பனுவல்களிலும், ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்களிலும்  மதம் என்ற சொல் “செருக்கு, ”மயக்கம்” அல்லது ”யானயின் மத நீர்” என்று பொருளாகும் வகையில் மட்டுமே கையாளப்பட்டுள்ளது (உ-ம்: திருமுறை 4042:3, 4732:3, 6283:1, 4274:1). மதம் = Religion என்று பொருள் கொள்ளுவது நமது மரபல்ல.

சமண மதம், புத்த மதம், கிருத்தவ மதம், இஸ்லாமிய மதம் ஆகியவற்றைத் தொடர்ந்து “இந்து மதம்” என்ற சொல்லாடல், பிறமத ஆதிக்கங்களுக்குப் பின்னர் அண்மையில் உருவாக்கப்பட்டதாகும். ஆனால் இன்றைய சூழலில் எல்லோரும் “மதம்” பிடித்தவர்களாகிக் கொண்டிருக்கிறோம் என்பது மிகுந்த வருத்தத்திற்கும், கவலைக்குமுரியதாகும்.

அன்றையத் தமிழர்கள் பெரும்பாலும் சைவ சமையம், வைணவ சமையம் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். சக்தி, முருகன், விநாயகர், வழிபாடுகளும் சைவ சமையத்தில் அடங்கும். (ஆதி சங்கரர் ஒருங்கிணைத்த “ஷண்மத ஸதாபனத்திற்கு” முந்தையது சிவகுமார் அவர்களின் எடுத்துக்காட்டுக்களான சங்க இலக்கியச் சான்றுகள்).

சமையம் என்ற சொல் வியக்கத்தக்க பொருளுடைத்ததாகும். ”சமைதல்” என்றால் பக்குவப்படுதல் அல்லது பரிணாம வளர்ச்சிக்கான முதிர்ச்சி என்று பொருளாகும். எ-கா: உணவு சமைத்தல், பெண் சமைதல்.

செஞ்சொல் அடியார்களான தூயமரபுள்ள உண்மைத் தமிழர்கள் சைவத்தாலும், வைணவத்தாலும் சமைக்கப்பட்டவர்கள்…பக்குவப் படுத்தப்பட்டவர்கள்…பரிணாம வளர்ச்சியுற்றவர்கள்! 1.5ஆ பார்வைகள் ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்2Arulchelvan Arulanantham2 வருடங்களுக்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது

இந்து ( ஹந்து அல்ல ) என்பது தமிழ் சொல்

இந்து என்பது தமிழ்ச் சொல் (ஹிந்து என்று வார்த்தையே சமஸ்கிருத அகராதியில் காணப்படவில்லை )

இந்து என்பது தமிழ்ச் சொல்லாகும் இந்து என்றால் சந்திரன் என்று பொருள்.
பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர். சோழர்கள் சூரிய வம்சத்தினர். சேரர்கள் அக்னி வம்சத்தினர்.பாண்டியர் பாரத தேசம் முழுவதையும் ஆண்ட காரணத்தினால் பாரதம் இந்து தேசம் என்று அழைக்கப்பட்டது.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே (திருமந்திரம் விநாயகர் காப்பு)

இந்து = சந்திரன், எயிற்றன் = கொம்பினையுடையவன், நந்தி மகன் = விநாயகன், ஞானக்கொழுந்து = அறிவே வடிவானவன்) என்பது திருமந்திரத்தின் காப்புச் செய்யுள். கடவுள் வாழ்த்துப் பகுதி.

“அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில்
வந்து மூழ்கியம் மண்டபத் தேறியே
சந்தி யாதி தவமுடித் தீறிலா
இந்து சேகரன் றாணினைந் தேத்தியே“ (திருவிளையாடற் புராணம்)

பொருள் = அந்த வேலையில், அச்சிவ தீர்த்தத்தில் வந்து மூழ்கி, அம்மண்டபத்தில் ஏறி சந்தியா வந்தனம் முதலிய தவங்களை முடித்து, அழிவில்லாத இந்து (சந்திர) சேகரனாகிய இறைவனுடைய, தாள் நினைந்து ஏத்தியே.

இந்து என்ற தமிழ் சொல்லை தமிழர்களிடம் இருந்து பிரிப்பதற்கான சதியில் கடவுள் மறுப்பு கொள்கையை உடைய மதமான நாத்திக திராவிடங்கள் , அன்னிய மதங்கள் தமிழர்களை அவலநிலையில் வைத்திருப்பதற்காக கையாளுகின்ற ஒரு குள்ள நரிதந்திரம் இதனை அறிய முடியாத சிவஞான அறிவற்ற சில தமிழர் கூட்டங்கள் இந்து அன்னிய ஆதிக்கள் என்று ஊழையிடுகின்றாா்கள் இவர்கள் பாடசாலை சென்று தமிழ் படிப்பதுதான் நண்மை பயக்கும்.

அருளகம்1.5ஆ பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்பகிர்வுகளைப் பார்க்கவும்13M Arumugam2 வருடங்களுக்கு முன் அன்று புதுப்பிக்கப்பட்டது · எழுத்தாளர் 1.1ஆ பதில்களையும் 1.3மி பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்முதலில் பதிலளிக்கப்பட்டது: தமிழர்களை இந்துக்கள் என்று அழைத்து ஏமாற்றுவது சரியா?

இந்து மதம் என்ற ஒரு மதம் யாராலும் தோற்றுவிக்கப்டவில்லை.

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றாத அனைவரும் இந்துக்கள் என அழைக்கப்படுகிறார்கள். இதில், பிற மதங்களான சீக்கியம், பௌத்தம் போன்ற மதங்களும் அடங்கும். ஒரு மதத்திற்குள் எனைய மதங்களை சேர்ப்பது அதனை உட்பிரிவாக கருதப்படும். பௌத்தம் மற்றும் சீக்கிய மதங்கள் வழிபாடு தொடர்பில் இந்து மதம் என கருத்தபடும் தற்போதைய மதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

சைவம் மற்றும் வைணவமே மத நெறிகளாகும். கிருஸ்தவம், இஸ்லாம், சீக்கியம் போன்ற மதங்களில் வழிகாட்டியாக மதபுத்தகம் / வேதம் என்று இருக்கும். இது போல சைவ மற்றும வைணவத்தில் மட்டுமே வழிகாட்டி புத்தகங்கள் உள்ளன.

இந்து மதத்தில், தற்போதைய, வேதம் எனப்படுவதை இந்து என்று அழைக்கப்படும் அனைவரும் கற்று பின்பற்ற இயலாது. இவை வைதீக மதம் என அழைக்கப்படும ஆரியர் தொடர்பானதாகும். மேலும், தமிழ் இலக்கியம் குறிப்பிடும் நான்கு மறைகள் இவற்றை குறிப்பிடுவன அல்ல. தொடக்க காலத்தில் அதர்வண வேதம் வேகமாகவே கருதப்படவில்லை ”Atharvaveda” பகுதில் காண்க [1] . அத்துடன், ரிக் வேதத்தில் உள்ள பாடல்கள் பெரும்பான்மையாக கொண்டு சிறிதளவு கூடுதல் விவரங்கள் சேர்த்து புதிய வேதமென கொள்ளப்படுகிறது. உதரணமாக சாமவேதத்தில் 1549 மந்திரங்களில் 75 மந்திரங்கள் மட்டுமே புதியது எனவும் ஏனைய ரிக் வேதம்மந்திரம் என்வும் கூறப்படுகிறது. ”Samaveda” பகுதில் காண்க[2].

நடைமுறை

ஒரு மதம் நிலைத்திருக்க வேண்டும் எனில் அதனை பின்பற்றுவோர் அவசியம் ஆகும். பின்பற்றுவோர் இல்லை எனில் மதம் அழியும். இஸ்லாமிய கொள்கை படி ஒரு இஸ்லாமியர் பதிக்கப்பட்டால் மற்றொரு இஸ்லாமியர் பாதிப்புக்கு உள்ளாகும் இஸ்லாமியருக்கு உதவ வேண்டும், பாதிப்பை ஏற்படுத்தும் நபர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் கூட. இது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையாகும். இக்கொள்கை தான் இஸ்லாம் பிறமதத்தினரிடமிருந்து அழியாமல் காக்கிறது.

ஈழத்தில், பௌத்தம் மதத்தை பின் பற்றாதவர்கள் அல்லது இந்துகள் தமிழர்கள் மட்டுமே. தமிழர்கள் இந்துக்களாக இருந்தால் 1,76,000 தமிழர்கள் அங்கு கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். இதன் மூலம் தமிழர்கள் இந்துக்களாக கருதப்படவில்லை என்பது தெளிவாக நிறுபிக்கப்படுகிறது. கொல்லப்படவர்கள் தமிழர்கள் என்று மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டனர் இந்துக்களாக அல்ல. இம் முரண்பாட்டின் வெளிப்பாட்டை தடுக்கவே வன்முறை பயங்கரவாத பிரிவினைவாத முத்திரைகள் குத்தப்படுகின்றன.

அடிக்குறிப்புகள்[1] Vedas – Wikipedia[2] Vedas – Wikipedia772 பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்3Gokul, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா-இல் வசிக்கிறார்1 வருடத்திற்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது ·  எழுத்தாளர் 245 பதில்களையும் 220.3ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்

[படித்தது]

இந்தக்கேள்வியே உங்களில் இருக்கும் பெருமதம் X நாட்டார் மதம் (Theological Religion Vs Folk Religion) முரண்பாட்டின் மேலுள்ள அய்யத்தையே குறிக்கிறது. இது இங்குள்ள வழிபாட்டு முறைகளை ஆராய்வதற்கான ஒரு சமூகவியல் முறை , வெள்ளையர் உருவாக்கியது ஆனால் அதை வைத்து இந்து மதத்தை புரிந்துகொள்ள முடியாது. இங்குள்ள பெருந்தெய்வம் சற்று முன்னாள் நாட்டார் தெய்வமாக இருந்ததுதான் .

இந்து மதத்தின் இறையனுபவ முறைகள் 4. (இந்தியா முழுவதுமே இந்த நான்கில்தான் வருகிறது )

1. படையல் மற்றும் பலி

2. பூஜை மற்றும் ஆராதனை

3. வேத வேள்விகள்

4. தியானம் யோகம்

எந்த தமிழர் வழிபாடும் இந்த நான்கினக்குள்தான் இருக்கும். நீங்கள் தமிழர் மதத்தில் (அப்படி ஒன்று இருப்பதாக நீங்கள் நினைத்தால் ) இந்த நான்கினில் ஒன்றோ அல்லது மேற்பட்டோதான் செய்வீர்கள். அல்லது தொழுகை நடத்துவீர்களா அல்லது கூட்டு ஆராதனை செய்வீர்களா ? தீபமோ பந்தமோ ஏற்றி மலர் சூட்டி உணவை படையலிட்டு பின்பு அதை பிரசாதமாக உண்பீர்கள் …அப்போது அது இந்து வழிபாடு இல்லாமல் வேறு என்ன ?

தமிழர் இந்துக்கள் இல்லை என கூச்சலிடும் கட்சி தலைவர்கள் வெட்கமே இல்லாமல் நம் வழிபாட்டையே (சிறு தெய்வம் , பெருந்தெய்வம் என எல்லாம் சேர்த்தே சொல்கிறேன்) வேருடன் அழிக்கும் மதமாற்ற சக்திகளுடன் சேர்ந்துகொண்டு வெறியாட்டம் ஆடுகிறார்கள்.

தமிழர்கள் இந்துக்களே!!

ஸ்ரீநிவாஸராகவன் ஸ்ரீதரன், முதுநிலைப் பட்டம் நிதி, பட்டயக்கணக்கு கழகம் (1975)1 வருடத்திற்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது · எழுத்தாளர் 15.6ஆ பதில்களையும் 5.4மி பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்

இங்கு முதன்மை வினா, ஏன் அவ்வாறு அழைக்கவேண்டும் என்பதே!

ஓர் அடையாளத்திற்குத் தான் என்னும் விடை கிட்டினால், அது தான் தமிழர் என்னும் அடையாளம் உள்ளதே, இன்னொரு அடையாளம் ஏன் என்னும் மிகவும் நியாயமான வினா எழுப்பப்படும்.

இல்லையில்லை, ஒரு வழிபாட்டு அடையாளத்திற்காக எனக் கூறவியலாது. ஏனெனில், தமிழர்கள் வழிபாடு என்பது, அந்தந்த பகுதிக்கு உரிய பழக்கங்களை ஒட்டியே! வழிபாட்டில் ஒருமைப்பாடுடை மக்கள் எனத் தமிழர்களைக் கூறவியலாது!

ஓர் ஒற்றுமை மிக்க சமுதாயமாக ஒருங்கிணைக்க மதம் வேண்டாமா, என்றால், அது வேலியில் போகும் ஒணானை சட்டைப் பையில் போடுவதுபோல்தான்!

இது மதம் என்றால் என்ன என்னும் அளவுக்குக் கொண்டு வரும்.

எனவே நாம் உண்மையாகப் பார்த்தோமானால், நமது மொழியும் நாம் பொதுவாக மேற்கொள்ளும் பழக்க வழக்கங்கள் மட்டுமே நம்மை ஒரளவு ஒருங்கிணைக்கும்.

நமது மொழியின் பின்புலத்தில், நம்மை நேர்மையானவராகக் கொண்டால், அதுதான் நம்மை ஒருங்கிணைக்கும் சங்கிலி என்னும் விடை கிட்டும்!

இதன் காரணமாகத்தான் பாரத நிலப் பகுதியில் மதம் என்னும் மாயை வெகுகாலம் எழவில்லை!

ஆனால் அந்த இடத்தை சாதி என்னும் ஒரு பிசாசு பிடித்தது! அது மேற்கொள்ளும் தொழில் மூலம் என்பது ஓரளவு உண்மைதான் எனினும், ஏன் அது பிறப்பால் எனக் கொள்ளப்பட்டது என்னும் புதிர் புதிராகவே எனக்கு உள்ளது!

இனி நாம் தவறுகளைத் திருத்திக் கொள்ள, செய்யவேண்டியது என்ன என்பதைப் பார்க்கவேண்டியதுதான் அறிவுடைமையே தவிர, மீண்டும் குட்டையில் மூழ்கியிருப்பதே சுகம் என எண்ணக்கூடாது. இதில் எந்தப் பயனும் இல்லை!349 பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்Raj Kamesh, உயர்நிலை பள்ளி அனுபவம்-இல் படித்தார்1 வருடத்திற்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது · எழுத்தாளர் 153 பதில்களையும் 41.5ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்

சகோ.

“மனிதர்களாக நடந்து, மனிதர்களாக வாழ்ந்து, மனிதர்கள் என அழைக்கப்படுவதே உயர்வு”

என்னை பொருத்த வரை.154 பார்வைகள்பகிர்வுகளைப் பார்க்கவும்1Ramesh Krishnan, அமெரிக்கா-இல் பணிபுரிந்தார் 10 மாதங்களுக்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது · எழுத்தாளர் 729 பதில்களையும் 358ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்

தவறு. தமிழர் என்றால் தமிழ் பேசுபவர், தமிழ் நாட்டில் சில தலை முறைகளாக இருப்பவர்கள் என பொருள் கொள்க. வட நாட்டுக்காரர்கள் கூட தமிழ் நன்கு பேசி தமிழர்களுடன் ஒன்றிப்போயிருந்தால் தமிழர் எனக் கொள்ளலாம். மலையாளிகள், தெலுங்கினர், கன்னடத்தவர் ஒன்றிப்போக வாய்ப்புகள் அதிகம். வடநாட்டினரில் நூற்றில் ஒருவர்தான் நம்முடன் ஒன்றிப் போவார்கள்.

தமிழர்கள் அனைவரும் இந்துக்கள் அல்லர். தமிழர்களில் சுமார் நூற்றுக்கு 17 பேர்கள் மற்ற மதத்தினர். எனவே தமிழர் என்பதற்கும் இந்து என்பதற்கும் நேரடி சம்பந்தம் இல்லை. தமிழர்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக ஆகினர். இப்போது கிரித்துவர்களாகவும் முஸ்லிகளாகவும் சில தமிழர்கள் ஆகிறார்கள். அவ்வளவு தான்.96 பார்வைகள்தொடர்புடைய பதில்கள்தொடர்புடைய பதில்குமார், சுதந்திரப் பறவை-இல் மொழிபெயர்ப்பாளர் (2016-தற்போது)14 செப்டம்பர், 2021 அன்று புதுப்பிக்கப்பட்டதுதெலுங்கர்கள் தமிழர்களை “சாம்பார்” என அழைப்பதேன்? அதன் பின் உள்ள மர்மம் என்ன? தெலுங்கர்கள் தமிழர்களை “சாம்பார்” என எள்ளி நகையாடுவதை பற்றி நாம் ஒரு இந்தியனாக வருந்தவேண்டுமா?

நான் 2002 முதல் 2005 – ஆம் ஆண்டு வரை ஹைதராபாதில் பணி செய்து கொண்டிருந்தேன்.

அப்போது நீங்கள் சொல்வது போல என்னை ‘சாம்பார்’ என்று அழைத்தனர், அதற்கு அப்பாவித்தனமாக நான் எனக்குள்ளே கூறிக் கொள்வது :

ஜெமினி கணேசன் அவர்களை தான் நான் சிறு வயதாக இருக்கும்போது சாம்பார் என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன் (அதுவும் அவர் பிறந்த ஊரில்). ஒருவேளை அவர் தெலுங்குகாரியான சாவித்திரியை திருமணம் செய்து கொண்டதால், அது எல்லா தமிழர்களுக்கான பெயராகி விட்டதோ?!

சாம்பார் என்று மட்டுமல்ல, தமிழர்களை ‘அரவாடு’ என்றும் அழைப்பார்கள்.

“அரவாடு” என்றால் அரை வேக்காடு என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது.

(பிகு : இது ஒரு தெலுங்கானால் எனக்கு சொல்லப்பட்ட விளக்கம் )

ஆனால் இந்த விஷயத்தில் நாமும் குறைந்தவர்கள் அல்லர்: கோயமுத்தூர்காரர்கள் மலையாளிகளை ” கஞ்சி ” என்றும், தெலுங்கர்களை ” கொல்டி ” என்றும் அழைப்பார்கள்.

(கன்னடர்களுக்கு என்ன பட்ட பெயரோ தெரியாது)

மலையாளிகளை கஞ்சி என்று அழைப்பதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. எனக்கு தோன்றுவது அவர்கள் கஞ்சி அதிகம் குடிப்பார்கள் போலும்!

தெலுங்கர்கள் நம் நடைமுறைக்கு எதிரான விதத்தில் நடந்து கொள்வார்கள், உதாரணமாக: கோவிலில் வலமிருந்து இடமாக வலம் வருவார்கள். அவர்களின் அகரம் தமிழின் அகரத்தை எதிர் திசையில் எழுதியது போல இருக்கும். நாம் செய்வதற்கு எதிராக/ தலை கீழாக செய்வதால் அவர்களின் மொழிப் பெயரை தலைகீழாக மாற்றி மருவி வந்தது ‘ கொல்டி’.

(தெலுங்கு மொழியை தெலுங்கு மொழியில் தெலுகு என்று தான் சொல்வார்கள்.)

தெலுகு → குலுதெ → கொல்டி

கேள்வி கேட்டமைக்கு நன்றி.

(பிற் சேர்க்கை:

1. தெலுகு என்ற மொழியை தமிழில் தெலுங்கு என்று அழைப்பது போல, தமிழை தெலுங்கில் தமிளமு (ழகரம் தெலுங்கில் இல்லை ) அல்லது ‘அரவம்’ என்று அழைப்பர். இதன் காரணமாக தமிழனை, ‘அரவாடு’ என்றும் தமிழர்களை, ‘அரவாள்ளு’ என்றும் அழைப்பர். தமிழைப் போல் தெலுங்கில் குற்றியலுகரம் இல்லாத படியால் இறுதியில் வரும் உகர ஓசைகளை முழுமையாக வாசிக்கவும். )

(நன்றி: பல்வேறு கருத்தாளர்கள் )

)

2. தமிழ்நாட்டின் வடக்கு கூறாக ஒரு காலத்தில் அருவா வடதலை நாடு என்ற பகுதி இருந்தது தெலுங்கு நாட்டின் எல்லையில் இது இருந்தது. இதனால் தமிழர்களை அரவாடு என்றும் தமிழை அரவம் என்றும் அழைக்கினறனர். சோழர் படைகளைப் பார்த்து அவரவர் அரவர் என்று அஞ்சியபடி கலிங்கப் படைகள் தெறித்து ஓடியதாக கலிங்கத்துப்பரணியில் நீண்ட காலத்துக்கு முன் படித்து நினைவுக்கு வருகிறது

(நன்றி: Arularasan G )

3. இன்னும் பல்வேறு கருத்துக்கள் அளித்திருக்கும் பலருக்கும் நன்றி.30.5ஆ பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்பகிர்வுகளைப் பார்க்கவும்136தொடர்புடைய பதில்கிஷோர் ரா சுதர்சன், Al-Sharhan Industries-இல் Production Controller (2019-தற்போது)1 வருடத்திற்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது · எழுத்தாளர் 538 பதில்களையும் 1.8மி பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்எதற்காக தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டும் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று தங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். மற்ற இடங்களில் வசிக்கும் தமிழர்களை அந்த இடத்துக்காரர்கள் என்ன விரட்டியா விட்டார்கள்?

ஒரு எதிர்மறையான விஷயத்தை, நேர்மறையாக மாற்றும் சாமர்த்தியம் நம் தமிழகத்திற்கே சாத்தியம்.

அதில் ஒன்றுதான், இந்த வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.

இதில் மறைந்திருக்கும் செய்தியை நாம் கவனிக்க தவறுகிறோம்.

அதாவது,

தமிழகத்தை சேர்ந்த தமிழரை வாழ வைக்க மாட்டோம்..

அன்றைய அரசியல் தலைவர்களான.. காமராஜரை XXXX சங்க போஸ்டரில் போட்டாகி விட்டது. கக்கன் அவர்களின் சாதி பார்த்து தெரிந்து கொண்டோம்.

இன்றைய அரசியல் தலைவர்களான.. ராமதாஸ் என்ன சாதி.. திருமாவளவன் என்ன சாதி.. சீமான்-னை சைமன் என்றும் திருமுருகன் காந்தி – டேனியல் காந்தி என்றும் கிறிஸ்துவர்களாக அடையாளப் படுத்த முயல்கிறோம். ஏன், கிறிஸ்துவனாகவே இருந்துவிட்டு போகட்டுமே, அவர்கள் நல்லது செய்ய மாட்டார்களா…

தமிழகத்திலிருந்து ஒருவன் நல்லது செய்ய புறப்பட்டாலோ, ஒரு கலைஞன் சாதித்து விட்டாலோ அவனை சாதியிலோ மதத்திலோ அடக்கிவிட முயல்வான் தமிழன். இதை மறுக்க முடியுமா?

எம்.ஜி.ஆர்-க்கு சாதி இல்லை ஏனெனில் அவர் வெளியூர்க்காரர்.. நாம் தான் வந்தாரை வாழ வைப்போர்களாயிற்றே..

காமராஜருக்கு.. சாதி உண்டு.. ஏனெனில் அவர் தமிழர்..

ரஜினிகாந்த்-க்கு சாதி இல்லை ஏனெனில் அவர் வெளியூர்க்காரர்.. நாம் தான் வந்தாரை வாழ வைப்போர்களாயிற்றே..

கமலஹாசன்-க்கு.. சாதி உண்டு.. ஏனெனில் அவர் தமிழர்.. (பரமக்குடிக் காரர்னு தான் படிச்ச மாதிரி நிஞாபகம்).

பெரியாருக்கு சாதி இல்லை.. கலைஞருக்கு சாதி இல்லை..

ஆனால், 1000 வருடங்களாக தமிழனின் பெருமையை பறை சாற்றும் வண்ணம் கோயில் கட்டிய, சாம்ராஜ்யத்தின் மன்னனையே ஒடுக்கப்பட்ட சாதிக்கு எதிரானவர் என தொண்டை நரம்பு புடைக்க மேடையில் ராஜ ராஜ சோழனையும் சாதிக்குள் அடக்கி வைத்துவிடலாம்..

சுந்தர் பிச்சை கூகுள் CEO ஆனதும், நாம அவரு எந்த சாதின்னு தேடியவர்கள் தானே..

உள்ளூர் மாடு உள்ளூர்ல வெல போகாது என்று முடிவு செய்த தமிழர்கள் வெளியூருக்கோ.. வெளிநாட்டுக்கோ போய், படாத இன்னல்களை பட்டு, அவர்களுடைய சந்ததிகளை வளர்த்து, அந்த ஊர் குடிமகனா/ளாகவே பிறந்து வளர்ந்து அந்த ஊரில் பெரிய பதவிக்கோ அல்லது சாதனை புரிந்ததும்.. அந்த சாதனையை சொந்தம் கொண்டாட தமிழன் டா கெத்துடா.. என்று கிளம்புவர்.

கயானா ப்ரைம் மினிஸ்டர் யாரு தெரியும்ல.. மோசஸ் நாகமுத்து.. தமிழர்.. தமிழன்னா கெத்து டா..

சிங்கப்பூர் துணை பிரதமரா இருந்தவர் யார்னு தெரியும்ல.. தர்மன் சண்முகரத்தினம்.. தமிழர்.. தமிழன்னா கெத்துடா..

சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் யார்னு தெரியும்ல.. காசிவிசுவநாதன் சண்முகம்.. தமிழர்.. தமிழன்னா சும்மாவா..

மலேசியாவுல மூனாவது பெரிய பணக்காரரு யார்னு தெரியும்ல.. அனந்த கிருஷ்ணன்.. தமிழர்.. தமிழன்னா கெத்துடா.. ( இலங்கை தமிழர்)

மலேசியாவுல மனித வள துறை அமைச்சர் யார்னு தெரியும்ல. சரவணன் முதலியார் (அங்கயும்).. தமிழர்.. தமிழன்னா சும்மாவா..

இ மெயில் கண்டுபுடுச்சது யார்ன்னு தெரியும்ல.. சிவா ஐயாதுரை.. தமிழர்.. தமிழன்னா கெத்துடா..

தூத்துக்குடிய விட்டுட்டு ஷிவ் நாடார் யுனிவர்சிட்டிய உத்திர பிரதேசத்துல இருக்கும் தாத்ரி-யில் ஏன் நடத்த வேண்டும்.. தமிழகத்தில் இப்படி ஒருவர் தன் சொந்த காசை வைத்து கூட தன் பெயரில் பல்கலைக்கழகத்தை தொடங்க முடியாது என்ற நிலை.. யாரால்.. இங்கு நடத்தி இருந்தால், சாதி பெயரை எடுக்கும் வரை அவரை டார்சர் செய்திருக்கும் நம் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.

தமிழனை தமிழனாக மட்டுமே தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் வரை.. தமிழகத்திற்கு வருபவர்களெல்லாம் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள்..

உண்மை தமிழனாக இருந்தால்.. இதை ஷேர் செய்யவும்..

தற் குறிப்பு : என் பேர பாத்துட்டு வந்தேறி.. ஆரிய கைக்கூலின்னு மனசுல நினைச்சுக்காதிங்க மக்களே..

கிஷோர் குமார் எனும் பாடகர் பெற்றோருக்கு பிடிக்கும் என்பதால் இந்த பெயர் வைத்தார்களாம்..

என் அப்பா பேரு – சுதர்சன், தாத்தா பேரு – ராமமூர்த்தி, கொள்ளு தாத்தா பேரு – முனி கோவிந்தன்.. என் அம்மா பேரு விஜயலட்சுமி..

அய்யோ நான் தமிழன்…

அய்யய்யோ நான் தமிழன்…

அய்யய்யோ நான் தமிழங்கோ…12.7ஆ பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்பகிர்வுகளைப் பார்க்கவும்921தொடர்புடைய பதில்Cheran Pandian, பன்னாட்டு கணினி மென்பொருள் நிறுவனம்-இன் முன்னாள் கணினி வலைய பொறியாளர்2 வருடங்களுக்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டதுதமிழர்கள் இந்து மதத்திற்கு முன் என்ன மதங்களை பின்பற்றி வந்தனர்?

தமிழர்கள் இந்து மதத்திற்கு முன்பு பல மதங்களைப் பின்பற்றி உள்ளனர்.

ஆதித்தமிழர்கள் பண்டைய காலத்தில் இயற்கையையும் தங்கள் முன்னோர்களையும் வழிபடும் வழக்கத்தை உடையவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். முன்னோர்களில் சித்தர்களும் அடங்குவர். ஆண்டவன்/ஆண்டவா/ஆண்டவனே என அழைப்பதின் காரணமும் அது தான். தங்கள் குடியை ஆண்ட+அவன் = ஆண்டவன் என்று பொருள் பெரும். இன்றளவும் முன்னோர்களின் நடுகல்லை வணங்கும் காரணமும் அதுதான்.

இந்தியாவில் பல மதங்கள் தோன்றி இருக்கின்றன. அவற்றுள் நாம் அறியாமல் போன மதங்கள் எண்ணற்றவை. இந்தியாவில் தோன்றிய மதங்களில் தமிழர்களின் மெய்யியல் எனும் வாழ்வியலை மையமாகக் கொண்ட மதங்கள் தான் அதிகம். வேதங்களை தவிர அனைத்து பண்டைய மதங்களும் தமிழகத்தை மையமாக வைத்து தோன்றியவையே. பண்டைய தமிழகம் அறிவு ஊற்றாகவும் ஆன்மீகத்தின் களஞ்சியமாகவும் திகழ்ந்திருக்கிறது.

தமிழர்கள், மெய்யியல் எனப்படும் இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த அறிவியலை தான் வாழ்வியல் தத்துவமாக வகுத்துள்ளனர்.

“தமிழர் மெய்யியல்” (மெய்யறிவு) என்பது தமிழ்ச் சூழலில், தமிழ் மரபில், தமிழ் மொழியில் முதன்மையாக உருவான மெய்யியல் தத்துவ கோட்பாடு ஆகும். இந்த மெய்யியல் என்பது தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்கினார்கள், விளங்கிக் கொண்டார்கள் என்று அறிய உதவுகிறது. தமிழர் மெய்யியலை அறநூற்களில், இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழர் மெய்யியலும் மருவி வந்திருக்கிறது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு – திருக்குறள்

பண்டைய தமிழரின் வாழ்வியல் மரபு சித்தர்களால் உருவாக்கப்பட்டு ஓர் உயர் நிலையினை அடைந்த ஒன்றாகும். எந்த ஒரு துன்பம் துயர் வந்தாலும் நோய்வாய் பட்டாலும் தமிழர்கள் தங்கள் குல மூத்த சித்தர்களிடம் சென்று தத்தம் இன்னல்களைப் போக்கி வந்துள்ளனர். அந்த வாழ்வியல் மரபைப் பின்பற்றித் தான் பின்னர் மதங்கள் உருவாகி உள்ளன.

தமிழகத்தில் பண்டைய காலத்தில் இருந்த மதங்களை இங்கு பார்ப்போம்.

 1. ஆசீவகம் (Aajeevika or Ājīvika) – ஆசீவக மதம். ஒரு தமிழ் மெய்யியல் கொள்கை ஆகும். கடவுள் மறுப்புக் கொள்கை உடையது. ஆசீவக மதம் மற்கலியர் கோசாலரால் தோற்றுவிக்கப்பட்டது. மற்கலி கோசாலர், பூரணகாசியபர், பகுத கச்சானர் ஆகியோர் ஆசீவக கோட்பாடுகளை வகுத்துள்ளனர்.
 2. பௌத்தம் – புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதம். மெய்யியல் கொள்கை. கடவுள் மறுப்புக் கொள்கை உடையது. தமிழர் இடையே பௌத்தம் செல்வாக்கு பெற்று மெய்யியலில் முதன்மை பெற்றதாகத் திகழ்ந்திருக்கிறது.
 3. திகம்பர ஜைன(Jain) மதம் – நிகண்டவாதம். மெய்யியல் கொள்கை. கடவுள் மறுப்புக் கொள்கை உடைய மகாவீரரால் தோற்றுவிக்கப்பட்ட மதம்.
 4. சைவ சமயம் – சிவநெறி என்று அழைக்கப்படும் சைவ நெறி, சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். வேறு எந்தப் பிரிவுடனும் சேராமல் சைவம் தனிப்பெரும் மதமாக தனித்தியங்கிய காலகட்டம். தமிழர்கள் தங்களை வீர சைவர்கள் என கூறிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
 5. வைதிக மார்க்கம் – வைதிக மார்க்கம் பத்து அளவை நெறிகளைப் பின்பற்றுவது.
 6. வைசேடிகம் – கணாதர் பாகாஸ்ய என்பவரால் இயற்றப்பட்ட மதம். மற்ற மதங்களை விட சிறப்பானதாக அவர்கள் இதை கருதியதால் விசேடம் (அ) வைசேடிகம் என அழைக்கப்பட்டது.
 7. சாவகம் – பூதவாதம் (or) சார்வகம் என அழைக்கப்படும் உலகாயதம், தமிழகத்தில் தோன்றிய ஒரு மெய்யியல் கோட்பாடு. புலனறிவாதம் (empiricism), நிரூபணவாதம், அல்லது அனுபவவாதம் என்பது மெய்ப்பொருளை எப்படி அறியலாம் என்பதைப் பற்றிய அணுகுமுறை ஆகும்.
 8. சாங்கியம் – கபிலரால் இயற்றப்பட்ட தத்துவம். இயற்கையையும் மனிதனையும் மையமாகக் கொண்ட மதம். கடவுள் வெளியே இல்லை உனக்குள்ளே இருக்கிறான் எனும் தத்துவக்கொள்கை.
 9. பிரமவாதம் – பிரம்மனை மட்டுமே வணங்குவோர். உலகமெல்லாம் பிரம்மனிட்ட முட்டை தான் என்னும் மதக்கோட்பாடு.
 10. வேத மதம் – வேதங்களை மையமாக மட்டுமே கொண்ட மதத்தை சார்ந்தவர்கள். வேதங்கள் பொதுவாக இன்று அறியப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வண நூல்களின் மதம். வைணவத்தின் முன்னோடி எனவும் கூறலாம்.

மேற்கூறிய இந்த மதங்கள் தமிழகத்தில் நிலவியதின் சான்றாக தமிழின் ஐம்பெரும் காப்பியமான மணிமேகலையில், மணிமேகலை சேரநாட்டு வஞ்சிமாநகரில் ஒன்பது சமயக் கணக்கர்களைக் கண்டு அவர்தம் திறம் (கோட்பாடு) பற்றிக் கேட்டறிந்தாக கூறப்பட்டுள்ளது. மணிமேகலை பின்பற்றியது பௌத்த சமயம். ஆக, சங்க காலத்தில் தமிழகத்தில் நிலவிய சமயங்கள் பத்து எனத் தெரியவருகிறது.

வரலாற்றை சிறிது ஆராய்ந்து பார்த்தோமேயானால், புத்தன் தந்த புத்த மதமும், மகாவீரர் தந்த சைன மதமும் மற்கலியர் தந்த ஆசீவகமும் ஒரே காலக்கட்டத்தில் தான் உருவாகி இருக்கின்றன. மற்கலியரும் மகாவீரரும் ஆறு வருடங்கள் ஒன்றாகப் பயணித்திருக்கின்றனர். மற்கலியரும் மகாவீரரும் ஒன்றாகப் பயணித்தனர் என்றாலும் ஒரு காலத்தில் சில காரணங்களால் பிரிந்து வெவ்வேறாக சென்று தத்தம் மதங்களை நிறுவியிருக்கின்றனர். புத்த மதமும் மற்கலியரைப்பற்றியும் ஆசீவகத்தைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. மேலும் இம்மூன்று மதங்களும் ஒரு போன்ற கோட்பாடுடையவை. வேதங்களுக்கு எதிரானவை. கடவுள் மறுப்புக் கொள்கை உடையவை. இதிலிருந்தே இம்மூன்று பேரும் (புத்தர், மகாவீரர், மற்கலியர்) ஒத்த கோட்பாட்டு மெய்யியல் கொள்கையையுடைய ஒரு துறவு இயக்கத்தின் சீடர்களாக இருந்திருக்கலாம். ஒருமித்த கோட்பாடுடைய மூன்று மதங்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டில் ஒரே காலக்கட்டத்தில் தோன்றியிருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன? இவை ஒரு மூலத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். பழந்தமிழ் சித்தர்களின் மெய்யியல் (மெய்யறிவு) எனும் வாழ்வியல் கோட்பாடுகளை ஒத்து இவை இருப்பதால் தமிழகமே இம்மதங்களின் ஊற்றாக இருந்திருக்க வேண்டும். மேலும் புத்தர் தனது பதினாறாம் வயதில் அய்ந்திர தமிழிலக்கணம் பயின்றதற்கான சான்றுகளும் இருக்கின்றன.

இத்தமிழ் மெய்யியல் கோட்பாடு தான் தமிழகத்தில் முதன் முதலில் தோன்றிய வாழ்வியல் இயக்கம். அந்த வாழ்வியல் மரபைப் பின்பற்றித் தான் பின்னர் மதங்கள் உருவாகி உள்ளன.

ஆசீவகம் என்ன என்று தமிழர்கள் பெரும்பாலானோருக்கு இன்று தெரிய வாய்ப்பில்லை. எனவே அசீவகத்தை பற்றி ஒரு சில குறிப்புகளை இங்க கொடுக்கிறேன்.

ஆசீவகம் தமிழகத்தில் அதிக அளவில் தமிழர்களால் பின்பற்றப்பட்ட மதம் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் வாழ்வைச் செம்மைப்படுத்திய சமயம் ஆசீவகம். தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்திய சமய வரலாற்றிலும் இந்தச் சமயம் வழங்கிய கொடை மகத்தானது”. ஆசீவகத்தை உருவாக்கியவர் மற்கலி என்பதை தமிழ் இலக்கியம், பௌத்தம், ஜைனம் ஆகிய மூன்று மரபுகளும் உறுதிசெய்துள்ளன. ஆனால், ஆசீவகம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அனைவரும் பௌத்த, ஜைன மரபுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதால், அந்த ஆய்வு ஒருதலைச் சார்பாக அமைந்துவிட்டது. தமிழ் இலக்கிய, நாட்டார் மரபுகளையும் சேர்த்து ஆய்வாளர்கள் ஆராய்ந்தபோது, மற்கலிதான் தமிழ் மக்கள் வணங்குகிற ‘தர்ம சாஸ்தா’ (அய்யனார்களில் ஒருவர்) என்று உறுதிசெய்ய முடிந்திருக்கிறது . மகாவீரரும் மற்கலிகோசாலரும் ஒன்றாகப் பணியாற்றி, பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர் என்று ஜைன இலக்கியத்தில் குறிப்பு உள்ளது.

தமிழகத்தில் ஆசீவகத்தின் தாக்கம்:

மற்கலியின் ஆயுதம் செண்டாயுதம். நம் அய்யனார் கையில் இருப்பதுவும் அதுவே. பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்று தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்து உள்ளது.

தமிழர்கள், கடவுளை வணங்குவதை வேறாகவும், முன்னோர்களை வணங்குவதை வேறாகவும் கருதி இருக்கின்றனர். கடவுள் மறுப்புக் கொள்கை இருப்பினும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை சாமியாக வணங்கி இருக்கின்றனர். ஆசீவக நெறியும் சைன (ஜைனம்) நெறியும் புத்த நெறியும் கடவுள் எதிர்ப்பு கோட்பாட்டைக்கொண்டவை. புத்த மதம் கவுதம புத்தரை வணங்கியது. சைன மதம் மகாவீரரை வணங்கியது. ஆசீவகம் மற்கலியரை வணங்கியது. தமிழகத்தில் அய்யனார் வழிபாடு மற்கலியரைத்தான் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. மற்கலியர் அய்யனார்களில் ஒருவராக தமிழகத்தில் கருதப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஊருக்கு ஊர் அய்யனார் கோயில்கள் நிரம்பி வழிவது ஆசீவகம் இருந்ததற்கான அடையாளமே. தமிழகத்தில் இன்றளவும் யாரேனும் இடர் படும் நேரத்தில் “அய்யோ” என்றழைப்பது இயற்கையான ஒன்று. இது அய்யனை (அ) அய்யனாரை அழைத்து நாம் பழகியதால் வந்த வழக்கம் ஆகும்.

மேலும், ஆசிவகத்தில் சித்தர்களை அண்ணர்/ அண்ணல் என்று அழைத்திருந்தார்கள். அதுவே பின்னாளில் அண்ணன் என்ற சொல் தமிழில் வரக்காரணம். அண்ணல்/அண்ணர் என்றால் உயரிய மதிப்பிற்குரியவர் என்று பொருள். தமிழில் மூத்தவனை தமையன் என்றே அழைப்பர். எனினும், சமண/அமண மத தாக்கமே அண்ணன் என்ற சொல்லின் பயன்பாட்டிற்கு காரணம். சித்தர் + அண்ணர் + வாயில் = சித்தன்னவாயில், திரு + அண்ணர் + மலை = திருவண்ணாமலை போன்ற பெயர்கள் ஆசீவக தாக்கமே.

நடுகல் வழிபாடு:

தமிழர்கள் எந்த மதத்தை பின்பற்றி இருந்தாலும் தங்கள் முன்னோர்களுக்கு நடுகல் வைத்து வணங்கி உள்ளனர். நம் பண்டைய தமிழர்கள் வெட்சி கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டு வந்தால் உண்டாட்டு என்பதை நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்டகற்களைப் பற்றிய தாகவே உள்ளன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டுக்கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

மேலே உள்ள படம்: தமிழ் வட்டெழுத்துடன் கூடிய நடுகல்

நடுகற்களுக்கு நாள்தோறும் தீபதூபம் காட்டிப் பூசைசெய்யும் வழக்கமும் ஏற்பட்டது. இதனை புறநானூறு,சிலப்பதிகாரம், மலைபடுகடாம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. நடுகல்லைச் சுற்றிலும் கல் அடுக்கி அதனைப் பதுக்கை ஆக்குவர். இந்த நடுகற்களுக்கு ‘வல்லாண் பதுக்கைக் கடவுள்’ என்று பெயர். நடுகல்லோடு சேர்த்து மயிற்பீலிகளைக் கட்டுவர். உடுக்கு அடிப்பர். தோப்பி என்னும் கள் வைத்துப் படைப்பர். உயிரினங்களைப் பலியிடுவர். இந்தப் பதுக்கைக் கோயில்கள் வழிப்பாதைகள் கூடுமிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

இல்லடுகள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலியூட்டி
நன்னீராட்டி நெய்நறை கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்’

இல்லங்களில் காய்ச்சப்படும் கள்ளையுடைய சிலவாகிய குடிகள் வாழும் சிற்றூரின் பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு விடியற்காலையில் நன்னீராட்டி நெய்விளக்கேற்றிப் படையலைப் படைத்தனர் . நெய் விளக்கு ஏற்றியதால் உண்டானபுகை மேகம் போல் எழுந்து தெருவில் மணக்கும் என்று, நடுகல் வணங்கப்பட்ட செய்தியைப் புறநானூறு கூறுகிறது. ‘நடுகல்லுக்குப் பீலி சூட்டி வணங்கும் போது கள்ளும் படைத்து வணங்கினர்” என்று புறநானூறு கூறுகிறது..

“நடுகற் பீலிசூட்டி நாரரி சிறுகலத்து குப்பவும்” என்று அதியமான் நெடுமானஞ்சியின் நடுகல்லுக்குக் கள்ளும் படைக்கப்பட்டது குறித்து ஔவையார் கூறுகிறார்.

அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்து உள்ளது. அதே போல பழங்காலத் தமிழர் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில் தான் மதங்கள் தோன்றியிருக்கின்றன.

நடுகல் வழிபாடும் பண்டைய தமிழர் பண்பாட்டின் அடையாளமே. முன்னோர்களுக்கு நடுகல் நட்டு காலம்காலமாக அதை குலசாமியாக வழிபடுவதும் நம் முன்மரபே. நாம் அனைவரும் சனாதன தர்மம் என்ற ஒரு குடைக்குள் கொண்டுவரப்பட்டாலும் இன்றளவும் நம்மவர்கள் குலசாமி கோயிலுக்கு சென்று கடா வெட்டி கள்ளும் சாராயமும் படைத்து கொடை வைப்பதும் பண்டைய மரபே. கள்ளு படையல் சங்க காலத்தில் சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதுமக்கள் தாழிகள் எனப்படும் தாழிகள் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 3000 ஆண்டுகள் பழமையான ஆதிச்சநல்லூர் தாழிகள் குறிப்பிடத்தக்கவை. இது பண்டைய தமிழர்கள் இறந்தவர்களை இடுகாட்டில் புதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இறந்தவர்களை சுடுகாட்டில் எரிக்கும் பழக்கம் ஆரிய வருகைக்குப் பின்னரே துவங்கியுள்ளன.

தமிழகத்தில் புத்த மதத்தின் தாக்கம்:

புத்த மத ஆன்மீக வழக்கப்படி பௌத்தர்கள் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொள்வது வழக்கம். அந்த வழக்கம் இன்றளவும் தமிழகத்தில் பல கோயில்களில் மொட்டை அடித்துக்கொள்வதை காண முடிகிறது. திருப்பதி கோவில் மொட்டை, பழனி கோவில் மொட்டை, வேளாங்கண்ணி மாதா கோயில் மொட்டை, நாகூர் தர்கா மொட்டை என எல்லா மதத்தினரும் மொட்டை போட்டுக் கொள்வது பண்டைய தமிழரின் புத்த மத தாக்கமே ஆகும். (குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டம் பண்டைய காலத்தில் புத்த மதத்தின் கோட்டை எனவே சொல்லலாம். ராசராசன் புத்த மதத்தினருக்கு நாகையில் புத்தப்பள்ளி கட்டிக் கொடுத்தது வரலாற்றில் பதிவாகி உள்ளது)

சனாதன தர்மத்தில் தந்தை உயிரோடு இருக்கும் போது மொட்டை அடித்துக் கொள்வது செய்யக்கூடாத ஒன்று ஆகும். இருந்தாலும் இன்றளவும் பல கோயில்களில் மொட்டை போட்டுக் கொள்வது பண்டைய தமிழகத்தின் புத்த மத தாக்கமே ஆகும்.

எந்த மதத்தை பின்பற்றினாலும் தமிழ் பண்பாடுதளை தமிழன் அவனுடன் எடுத்து சென்றிருக்கிறான்.

எடுத்துக்காட்டாக முருகப்பெருமான். குறிப்பாக எந்தவொரு மதத்தையும் பின்பற்றாத காலத்திலிருந்தே முருகன் குறிஞ்சி நில கடவுளாக (ஆண்டவனாக), பொதினி மலையை ஆண்டவனாக, சேயோன் என வழிபட்டிருக்கின்றனர். முருகன் ஒரு இளம் போர் வீரன் (young warrior God) என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் புத்த மதத்தினை தழுவிய பொழுது முருகனை கந்தன் என்ற பெயரில் வழிபட்டிருக்கின்றனர். பௌத்த மதத்தில் போதி சத்தவர் எனவும் கூறுவர். தமிழக பௌத்தர்கள் எந்த ஊருக்கு சென்றாலும் கந்தனையும் கொண்டே சென்றிருப்பதையும் காண முடிகிறது. முருகனின் கோவிலில் மொட்டை அடித்துக் கொள்வது புத்த மதத்தினரால் துவங்கப்பட்ட வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று உலக அளவில் முருகப்பெருமான், காக்கும் கடவுளாக புத்த மதத்தினரால் வணங்கப்படுவது எத்தனை பேருக்கு தெரியும்? வடமொழியில் ஸ்கந்தன் எனவும், இலங்கை பௌத்தர்கள் கந்தனை கதிர் காமர் எனவும் வணங்குகின்றனர். சீன பௌத்தர்கள் கந்தனைக் காக்கும் கடவுளாக அவர்களின் மொழியில் அழைக்கிறார்கள்.

452

மேலே உள்ள படம்: கிழக்காசிய நாடுகளில் மயிலுடன் அய்யன் முருகன் – புத்த மதத்தில்

மேலே உள்ள படம்: சீனாவில் வுயூ எனுமிடத்தில் புத்த கோயிலில் மயிலின் மேலமர்ந்திருக்கும் அப்பன் முருகன் .

தமிழர்கள், புத்த மதத்தை எல்லா தென்கிழக்கு ஆசியா நாடுகளிலும் பரப்பி இருக்கிறார்கள். தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் கந்தனை உள்ளூர் பெயரும், உருவமும் கொடுத்து வணங்குகின்றனர். கொரியாவில் முருகனுக்கு சேயோன் ( Wita Cheon) என்ற பெயர் இருப்பதையும் காணலாம்.

Skanda (Buddhism) – Wikipedia

அது போல கண்ணகியையும் தமிழக புத்த மதத்தினர் தெய்வமாக வழிபட்டு இருந்திருக்கின்றனர். சேர நாட்டில் பௌத்தர்கள் கண்ணகியை கொடுங்கல்லூர் பகவதியம்மன் ஆகவும் ஆற்றுக்கால் பகவதியம்மன் ஆகவும் இன்றளவும் வணங்குகின்றனர். இலங்கை பௌத்த மதத்தினர் கண்ணகியை பத்தினி தேவி என்று காக்கும் கடவுளாக இன்றளவும் வணங்குகின்றனர்.

இலங்கையில் கண்ணகி, புத்த மதத்தின் காக்கும் கடவுள் “பத்தினி தேவியாக” கையில் சிலம்புடன் காட்சி தருகிறாள்.

இலங்கையில் கண்ணகி >>>> Pattini – Wikipedia

இன்று தமிழில் பிச்சைக்காரன் என்ற சொல் இருக்கிறது. இது புத்த மதத்தில் இருந்து வந்த சொல் ஆகும். புத்த மதத்துறவிகளை புத்த பிட்சுகள் ( பாலி மொழியில் பிக்ஷு, தமிழில் பிக்கு) என்றழைப்பர். புத்த மத வழக்கப்படி துறவிகள் கந்தலான உடை அணிந்து எளிமையான முறையில் வாழவேண்டும் என்பதும் வீடுவீடாக சென்று கையேந்நியே உணவு உண்ணவேண்டும் என்பதும் கொள்கை. புந்தரும் கையேந்தியே உணவை உண்டார். இவ்வாறு புத்த பிட்சுகளுக்கு (பிக்ஷுகளுக்கு) வழங்கும் உணவு பிட்சை ஆனது. அது திரிந்து பிச்சை ஆனது. பண்டைய காலத்தில் பிச்சை என்பது புனிதமான ஒரு செயல். இன்று இழிவாக கருதப்படுகிறது. (கையேந்துதல் என்ற தமிழ் சொல் புத்த மத தாக்கத்தால் பிச்சை எடுத்தல் என்றாயிற்று)

தமிழகத்தில் ஜைன மதத்தின் தாக்கம்:

தமிழகம் இந்தியாவில் அதிக கோயில்களை கொண்ட ஒரே மாநிலம். அதிலும் பிரம்மாண்டமான கற்கோயில்கள் கட்டுவதில் தமிழர்கள் வல்லவர்கள். இவற்றிற்க்கு வித்திடவர்கள் தமிழக ஜைன மதத்தினரே. குடைவரை கோயில்கள் கட்டுவதில் வல்லுனர்கள். தமிழகத்தில் முப்பதிற்க்கும் மேற்ப்பட்ட குடைவரை கோயில்கள் உள்ளன. ஜைன துறவிகள் கற்படுக்கைகள் அமைத்து குடைவரை கோயில்களில் (பள்ளிகள்) வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்களின் கற்படுக்கைகள் இருக்குமிடம் பள்ளி என்று அழைக்கப்படுள்ளன. பள்ளி என்றால் தூங்கும் இடம் என்று பொருள். பண்டைய காலத்தில் தமிழ் மாணவர்கள் ஜைன துறவிகள் இருக்கும் பள்ளியில் சென்று கல்வி கற்பர். அங்கு வாழ்வியல் தத்துவங்கள் மருத்துவம் போன்றவற்றை அனுபவம் மிக்க துறவிகளிடம் இருந்து கற்றுக்கொண்டார்கள். இவ்வாறு சமணப்பள்ளிகள் மாணாக்கர்கள் கூடும் இடமாகக் கொண்டதால், பள்ளிக்கூடம் என்ற பெயர் உருவாயிற்று. அதையே இன்றளவும் நாம் கல்வி கற்க்கும் இடத்தை பள்ளிக்கூடம் என்று அழைக்கின்றோம்.

சங்ககாலம் முதலே சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஜைன மதத்தை தழுவிய மன்னர்களாக இருந்திருக்கின்றனர். மன்னர்கள் சமண துறவிகளுக்கு கற்படுக்கைகள் அமைத்து கொடுத்ததைக் கூறும் கல்வெட்டுகள் தமிழகத்தில் ஏராளம். எடுத்துக்காட்டாக கி.மு மூன்றாம் நூற்றாண்டின் மாங்குளம் கல்வெட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் சமண முனிவருக்கு கற்படுக்கை அமைத்து கொடுத்ததை கூறுகிறது.

மாங்குளம் கல்வெட்டுகள் – தமிழ் விக்கிப்பீடியா

பௌத்தமும் சமணமும் தங்களின் வழிபாட்டுத் தலங்களை பள்ளிகள் என்றும் பெரும்பள்ளிகள் என்றும் அழைத்திருக்கிறார்கள். அவை இருந்த ஊர்களும் அந்தப் பள்ளியின் பெயரிலேயே அழைக்கப்பட்டன. இன்றளவும் தமிழகத்திலும் பண்டைய சேர நாடான இன்றைய கேரளாவிலும் பள்ளி என்ற பெயரில் நிறைவுபெறும் ஊர்கள் ஏராளம். எடுத்துக்காட்டாக திருச்சிராப்பள்ளி, கருநாகப்பள்ளி என நிறைய ஊர்களைக் கூறலாம்.

மேலும், ஐம்பெரும் காப்பியங்களை இயற்றிய தமிழ் பெருமக்கள் அனைவரும் பௌத்த மதத்தையும் சமண ஜைன மதத்தையும் சார்ந்தவர்கள் ஆவர்.

1. சிலப்பதிகாரம் – இயற்றியவர் – இளங்கோவடிகள் : சமண மதம்

2. மணிமேகலை – இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்: பௌத்த மதம்

3. வளையாபதி – இயற்றியவர் அறியப்படவில்லை: சமண மத நூல்

4. குண்டலகேசி – இயற்றியவர் நாதகுத்தனார்: பௌத்த மதம்.

5. சீவக சிந்தாமணி – இயற்றியவர் திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவர் – சமண மதம்

மேலும் பல தமிழ்ப்பெருங்குடி மக்கள் பல மதத்தினராக இருந்து கொண்டு தமிழுக்கு தொண்டாற்றி உள்ளனர்.

தமிழகத்தில் பல மதங்கள் இருந்திருந்தாலும், தமிழர்கள் பல மதங்களை பின்பற்றி இருந்தாலும், தமிழும், தமிழர்களும், தமிழகமும் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். உலகிற்கு பொது மறை தந்து, பல மொழிகள் உருவாக தன் மொழியை தந்து, பல மதங்கள் உருவாக தன கோட்பாடுகளை தந்து இன்னும் உலகத்தில் மிக பழைய மொழிகளில் ஒன்றாய் வீர நடை போடும் என் தாய் தமிழுக்கு ஈடு இணை ஏது ?

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆன்மீகத்தில் மிக்க அறிவு பெற்று அறிவியல் மெய்யறிவு பெற்ற தமிழர்களைப் போன்ற ஒரு அறிவார்ந்த சமூகம் நான் இதுவரை கண்டதில்லை. என் சமூகத்தையே நான் புகழ்கிறேன் என நீங்கள் தவறாக கருதக்கூடாது. இது நூற்றுக்கு நூறு உண்மை. ஆராய்ந்துபார்த்தால் மட்டுமே இதன் உண்மை புரியும். (தமிழர்களின் பெருமை மறைக்கப்பட்டதால் வெளியுலகிற்கு தெரியாமல் போனதுதான் மறைக்கமுடியாத உண்மை)23.2ஆ பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்பகிர்வுகளைப் பார்க்கவும்5855தொடர்புடைய பதில்Logu Venkatachalam10 மாதங்களுக்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது ·  M.Gowtham, தமிழ்நாடு, இந்தியா-இல் வசித்தார் மற்றும் Banu M, தமிழ்நாடு, இந்தியா-இல் வசிக்கிறார் (2019-தற்போது) ஆதரித்து வாக்களித்துள்ளனர் ·  எழுத்தாளர் 740 பதில்களையும் 742.2ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்தமிழகத்தில் தொடர்ந்து இந்துக்கள் நசுக்கபடுவது ஏன்?

எனக்கும் இந்தக் கவலை சில நாள்களாக உண்டு.

ஆம், இட ஒதுக்கீட்டில் கை வைத்து தமிழகத்தில் உள்ள நிறைய இந்துக்களை நசுக்கினார்கள்.

NEET கொண்டுவந்து மேலும் பல தமிழக இந்துக்களை நசுக்கினார்கள்.

புதியக் கல்விகொள்கை என்னும் பேரில் ஆரம்பக் கல்வி காலத்திலேயே தடுத்து வைத்து நிறைய இந்துக்களை நசுக்கி வருகிறார்கள்.

தமிழக இந்துக்களை ஆன்டி இண்டியன் அர்பன் நக்சல் என்றெல்லாம் கூறி அவமானப்படுத்தி அவர்களை நசுக்கினார்கள்.

தமிழ்க இந்துக்களோடு சகோதரர்களாக வாழும் இஸ்லாமியர்களைப் பற்றி தவறாக பேசி இந்துக்களின் மனதைப் புண்படுத்தி அவர்களை நசுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏன் கீழ்மட்டத்தில் உள்ள இந்து மக்கள் மேல் வர முடியாத அளவு திட்டங்களைக் கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டதற்கு எல்லோரும் படித்து விட்டால் கீழ் மட்ட வேலையை யார் செய்வார்கள் என்று கொழுப்பு பிடித்து பேசி இந்துக்களை தொடர்ந்து நசுக்குகிறார்கள்.

வண்ணான் மகன் வண்ணான் வேலைதான் செய்யவேண்டும் என்று திமிர் பிடித்து பேசி தமிழக இந்துக்களை தொடர்ந்து நசுக்கி வருகிறார்கள்.

பெண்களை அவமதிக்கும் மனுவைத் தூக்கிப்பிடித்து இந்து சகோதரிகளை தொடர்ந்து நசுக்கி வருகிறார்கள்.…

இப்படி பலப் பல இந்து விரோத செயல்களைச் செய்து தமிழகத்தில் தொடர்ந்து இந்துக்களை நசுக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள இந்துக்களையும் தொடர்ந்து நசுக்கி வருகிறார்கள் இந்த இந்து விரோதிகள்.

இது ஏன் என்று கேட்டீர்கள். இதற்கெல்லாம் எனக்குத் தெரிந்து ஒரே காரணம் இந்து விரோத கட்சியான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இது போன்ற பெரும்பான்மை இந்துக்கள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறார்கள்.

இவர்களை நாட்டை விட்டே துரத்த என்ன செய்யலாம்?1.9ஆ பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்பகிர்வுகளைப் பார்க்கவும்37தொடர்புடைய பதில்பழசெல்வராஜு, சாதித்த தமிழர்கள்.1 வருடத்திற்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது ·  எழுத்தாளர் 484 பதில்களையும் 804.1ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்பிராமணர்கள் தமிழர்களா? அவர்கள் யார்?

பிராமணர்கள் தமிழர்களா என கேட்பதற்கு பதில் இந்தியர்களா என கேட்டிருக்கலாம்.

இந்த வினவர் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் பற்றி கேட்டதாக கருதி பதில் சொல்லலாம். தமிழகத்தில் வாழும் ஐயர் ஐயங்கார் போன்றவர்களின் தாய் மொழி தமிழே. இந்த சாதிகளில் பிறந்த பலர் தமிழில் பல இலக்கியங்கள் படைத்துள்ளனர். அரசியல் காரணங்களுக்காக பலர் இவர்களைப் பற்றி தவறாக வந்தேறிகள், ஆரியர்கள் என தூற்றுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் இவர்களே அனைத்து பதவிகளிலும் இருந்தனர் என்பது உண்மை, இதுவே வேறு ஒரு சாதியினர் ஆங்கிலேயர்களுடன் நெருக்கமாக இருந்திருந்தால் அந்த சாதியினர் ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள். தங்களை தக்கவைத்துக் கொள்ள ஒவ்வொரு இனக்குழுவும் அதற்கு ஏதுவாக செயல்படுவது இயல்பு. அப்படியே இவர்களும் செயல்பட்டிருக்கின்றனர். தஞ்சை மாவட்டத்தில் சில கோவில்களுக்கு சென்று வந்தேன். முன்னாள் ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன் அவர்கள் ஊரில் உள்ள பெருமாள் கோவிலும் அதில் ஒன்று. அங்கு பூஜை செய்பவர்கள் இந்த அரசியல்களுக்கு அப்பாற்பட்டு – அரசியலே தெரியாமல் கோவில் பூஜை மட்டுமே தெரிந்தவர்களாக உள்ளனர். பழமையான அந்த கோவில்களை இவர்களே பராமரித்து வருகின்றனர். ஊர் மக்களுக்கு கோவில் மீது அக்கறை இல்லை. அந்த குருக்கள் வார்த்தை “அந்த ஆளு ஜனாதிபதி ஆகி என்ன பிரயோஜனம் சாமி, அவரோட முன்னோர்கள் (மற்றும் எனது உறவினர்களின் முன்னோர்களும் இணைந்து) கட்டிய கோவிலுக்கு ஒன்னுமே செய்யல, எங்களுக்கும் ஒன்னும் செய்யல”

இங்கு கோரா உட்பட சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பெரிதாக பேசப்படும் பிராமணர் பிராமணர் அல்லாதோர் அரசியல் சாதாரண மக்களை பாதிக்கவில்லை. அதில் ஒரு கோவிலுக்கு அருகிலேயே பூஜை செய்பவரின் வீடு அவர் வீட்டில் தான் காலை மதியம் எனக்கு உணவு. அங்கு அவரின் வறுமை நிலை அப்பட்டமாக தெரிந்தது. ஆனாலும் உபசரிப்பில் குறை வைக்க வில்லை.

எனது நட்பில் பல சாதியினரும் உள்ளனர், ஐயர் ஐயங்கார்களும் உண்டு. அனைவரும் வாடா போடா நட்பே.

சமூக ஊடகங்களில் சில ஐயர் ஐயங்கார்கள் அரசியல் கட்சிகளை எதிர்ப்பதற்கு பதிலாக ‘பிராமிண்ஸ் நாண் பிராமிண்ஸ் என்றும் சமஸ்கிருதமே சிறந்த மொழி’ என்றும் தமிழுக்கு எதிராக களமாடாமல் இருக்க வேண்டும். அதேபோல் இவர்களை வந்தேறிகள், ஆரியர்கள் என்றும் இன்னும் தரம் தாழ்ந்தும் விமர்சிக்காமல் இருக்க வேண்டும். தற்போதைய அரசியல் போக்கு ஒரு குறிப்பிட்ட சாதியினர் ஆதிக்கம் நிலை பெற அனுமதிக்காது. கிராமப்புற மக்களுக்கு இந்த பிராமணர் பிராமணர் அல்லாதோர் அரசியல் பாதிப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை. பூஜைக்கு ஐயர கூப்பிடு என்று எல்லா சாதியினரும் சொல்வதும் ——— (சாதிப் பெயர் சொல்லி) தோட்டத்தில வெளைஞ்ச காய்கறிகள வாங்கிட்டு வா என ஐயர் வீடுகளில் சொல்வதும் இயல்பான ஒன்று.

(நான் நகரத்திற்கு குடி பெயர்ந்த சமூக ஊடகங்களில் செயல்படும் ஒரு ————ன், நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. இருந்தாலும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்)

ராவ், சர்மா, சாஸ்திரி போன்ற பிற மொழிகளைக் தாய்மொழியாகக் கொண்ட பலரும் தமிழகத்தில் ‘பிராமணர்’ என்ற குடையின் கீழ் உள்ளனர். இவர்களுடன் ஐயர் அல்லது ஐயங்கார்கள் திருமண உறவு வைத்துக் கொண்டதை நான் கேள்விப்பட்டதில்லை. ஏன் ஐயர் ஐயங்கார்கள் திருமண பந்தம் கொண்டதாக கேள்விப்பட்டதில்லை. காதல் திருமணங்கள் விதிவிலக்கு.7.5ஆ பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும் பகிர்வுகளைப் பார்க்கவும்110தொடர்புடைய பதில்ஸ்ரீராம் சந்திரசேகரன்10 மாதங்களுக்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது ·  எழுத்தாளர் 105 பதில்களையும் 197.4ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்“தீபாவளி” இந்துக்கள் பண்டிகையா இல்லை தமிழர் பண்டிகையா?

“தீபாவளி” இந்துக்கள் பண்டிகையா இல்லை தமிழர் பண்டிகையா?


ரொம்ப புத்திசாலி தனமாக தமிழர் வேறு இந்துக்கள் வேறு என்று நிறுவ பார்க்கிறாராம் கேள்வி எழுப்பிய நபர். கேள்வியை படித்ததும் இந்த புஷ்பம் புய்பம் நகைச்சுவை நினைவுக்கு வந்தது. நீங்களும் கண்டு ரசிக்கலாம்

இவரின் ஆதர்ச தலைவர்கள் ஒன்று டிக்கெட் வாங்கா தட்சிணா மூர்த்தியாக இருக்க வேண்டும்…இல்லை ஈழ இனஅழிப்பில் தோன்றிய இசுசூ கார் ஓனராக இருக்க வேண்டும். இந்த பதில் இந்த இரண்டு பிரிவையும் தாண்டிய மீதம் உள்ளவர்களுக்கு மட்டுமே.

தீப வழிபாடு இமயம் முதல் குமாரி வரை இந்த மண்ணில் இருப்பதால் அது கலாசார ஒற்றுமைக்கு ஒரு சிறந்த ஆதாரமாக இருக்கிறது. இது இந்த உடன்பிறப்புகளுக்கும் தும்பிகளுக்கும் பிடிக்க வாய்ப்பில்லை. அவர்கள் என்ன சொன்னாலும் அவர்களுக்கு கசப்பான உண்மையை ஏற்க மாட்டார்கள். ஆகையால் மீதமுள்ள சுய சிந்தை உள்ளவர்களுக்கே இந்த பதில்


நாம் ஏற்கனவே தமிழர் என்பது ஒரு மாய பிம்பம். அப்படி தம்மை அழைத்து கொண்ட குழுவோ இனமோ வரலாற்றில் இருந்ததில்லை என்று பார்த்துவிட்டோம்.

“நான் 70 வருடமாக மட்டும் தான் இந்தியன். ஆனால் ஆயிரம் வருடங்களாக தமிழன்” என்று கூறும் என் சக தமிழர்களுக்கு, அப்படி கூறுவது தவறு என்று நான் எவ்வாறு சொல்லி புரிய வைப்பது? கேள்விக்கு ஸ்ரீராம் சந்திரசேகரன் (Sriram Chandrasekaran)-இன் பதில்

மொழிவழி மாநிலங்களாய் பிரிந்ததில் ஏற்பட்ட ஒரு விபத்தை அடையாளம் என்று பேசி நிறைய பேர் வயிறு வளர்த்தது அண்மை வரலாறு. சமசீர் கல்வி போன்ற மூளையை/சுய சிந்தனையை மழுங்கடிக்கும் கல்வி திட்டம் இல்லை என்றால் இந்த பொய் எப்போதோ காணாமல் போய் இருக்கும்.

இனி சங்க இலக்கியத்தில் தீபாவளி அல்லது தீப வழிபாடு பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பாப்போம்:

அமாவாசை அன்று தீபம் ஏற்றி வழிபடும் விழா பற்றி நக்கீரர் எழுதிய அகநானுற பாடல்

மழைகால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம!

(அகநானூறு – 141ம் பாடல்)

இதில் “அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்” எனும் வாக்கியம் அமாவாசை நாளையே குறிக்கிறது. அமாவாசையில் தீபம் ஏற்றி வழிபடும் பண்டிகை தீபாவளி. கார்த்திகை தீபம் பௌர்ணமி அன்று ஏற்றப்படும்.

தீபாவளி நாளின் சிறப்பு தீப வழிபாடு தான். தீப வழிபாடு என்பது தமிழர் மரபில் இன்றியமையா இடம் பெற்று இருக்கிறது. இது சங்க இலக்கியம் முதல் வள்ளளார் வரை சிறப்பு இடம் வகிக்கிறது.

தமிழ் கடவுள் முருகனின் தோற்றமே ஒளி பிழம்பாய் ஈசன் நெற்றிக்கண்ணில் இருந்து தான் துவங்குகிறது. ஆகையால் தான் முருகனை சிறப்பிக்கும் கார்த்திகை மாத வழிபாடும் தீபத்தை சுற்றியே அமையபெற்றுஇருக்கிறது.

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில், விளக்கு வழிபாட்டைக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.

இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது…
(நெடுநல்வாடை: 42-43)

இன்றும் தமிழகத்தில் கார்த்திகை தீப வழிபாடு, கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரமும் முழுமதியும் கூடிய நன்னாளில் நடந்து வருகிறது.

ஆக தீப வழிபாடும் சரி, அமாவாசையில் கொண்டாட படும் தீபாவளியும் சரி, சங்க தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்று இருக்கின்றன. ஆகையால் குழப்பம் வேண்டாம் இது தமிழர் பண்டிகை தான்.

தமிழர் தெய்வங்களான ஈசன், திருமால், முருகன், இந்திரன், வருணன், கொற்றவை. மற்றும் தமிழர் வழிபடு சூரியன் மற்றும் தீபத்தை தங்களை இந்துக்கள் என்று சொல்லி கொள்பவர்கள் தான் இமயம் முதல் குமாரி வரை. ஏன் வெளி நாட்டிலும் கடைபிடிக்கிறார்கள்.

தமிழர் மெய்யியலோடு ஒட்டி இருக்கும் ஒரே சமயம் ஹிந்து மதம் என்று அழைக்க படும் சனாதன தர்மம் மட்டுமே. இதை யார் எங்கே கையூட்டு வாங்கி மாற்றி பேசினாலும் குழம்பாமல் இருங்கள்.

நன்றி!!1.1ஆ பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும் 20தொடர்புடைய பதில்Cheran Pandian, பன்னாட்டு கணினி மென்பொருள் நிறுவனம்-இன் முன்னாள் கணினி வலைய பொறியாளர்2 வருடங்களுக்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது. தமிழ் கடவுள் முருகன் என்று கூறுகிறார்களே உண்மையா?

ஆம். நூற்றிற்க்கு நூறு விழுக்காடு உண்மை. முருகன் தமிழ் கடவுளே. இந்தியாவில் தமிழர்கள் மட்டுமே முருகன் என்ற பெயரில் தமிழ் கடவுள் முருகனை ஆண்டவனாக வழிபடுகின்றனர்.

தென்னிந்தியாவில் கேரளாவிலும் (பண்டைய தமிழகம்) முருகனை குல தெய்வமாக முருகன் என்றும் சுப்பிரமணியன் என்றும் இன்றளவும் வணங்கி வருகின்றனர்.

பண்டைய தமிழகத்தில் முருகெனுக்கென்று தனியொரு மதம் இருந்திருக்கிறது. முருகனை அல்லது குமரனை முழுமுதற்க் கடவுளாக வழிபடுபவர்கள் அம்மதத்தை  குமாரம்  அல்லது  கௌமாரம்  என்றழைத்தனர். பின்னர் சைவ மதத்துடன் அது இணைக்கப்பட்டது.

இன்றளவும் கேரளாவில் (பண்டைய சேரநாடு) குமாரநல்லூர் என்ற ஊர் இருக்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய முருகன் கோவில் அங்கு இருந்திருக்கிறது. பின்னர் பல கட்டுக்கதைகளை கூறி அந்த கோவிலுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது வரலாறு.

அய்யன் முருகனை தமிழகத்தில் சேயோன், ஆறுமுகன், குமரன், குகன், காங்கேயன், சரவணன், வேலன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், வடிவேலன், சுப்பிரமணியன், மயில்வாகனன், செவ்வேள், கடம்பன், வேலாயுதன், சிங்கார வேலன், ஆண்டியப்பன், கந்தசாமி, செந்தில்நாதன், வேந்தன், மலைஅரசன் , மலைவேந்தன் போன்ற பல பெயர்களால் அன்போடு தமிழர்கள் அழைக்கின்றனர்.

ஆனால் முருகனை வேறு பெயரில் உலகின் பல நாடுகளில் வேற்று மதத்தினரும் அவரவர் மொழிகளில் வணங்குகின்றனர். முக்கியமாக புத்த மதத்தினர்.

வட இந்தியா – ஸ்கந்தன், கார்த்திகேயன்
புத்தமதத்தில் – போதி சத்துவர்
இலங்கை – கதிர்காமர்
சீனா – வீய்த்துவோ தியான், வீய்த்துவோ பூசான்
ஜப்பான் – இதாத்தன்
கொரியா – விதா சேயோன்
மங்கோலியா – அர்வன் கோயோர் நூத்
தாய்லாந்து – பிராவத் போதிசத்துவா
திபெத் – தோங் துருக்
வியட்நாம் – விதா போதத்

இதெப்படி முருகன் பலநாடுகளுக்கு சென்றார் என்று பலருக்கும் தோன்றலாம். அதற்கு காரணம், முருகனை தமிழர்கள் எழுபதாயிரம் ஆண்டுகளாக தமிழ்குல ஆண்டவனாக வணங்கியிருக்கின்றனர். அதாவது மதங்கள் தோன்றுவதற்கும் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே. பின்னர் தமிழகத்தில் பல மதங்கள் தோன்றின. அவ்வாறு புத்த மதத்தை பின்பற்றிய தமிழர்கள் முருகனை புத்த மதத்திலும் ஆண்டவனாகவும் காப்பவனாகவும் வணங்கியிருக்கின்றனர். பின்னர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் புத்த மதத்தை பரப்புவதில் தமிழர்கள் பெரும் பங்கு வகித்தனர். (ஏழாம் அறிவு திரைப்படம் தமிழகத்தை சேர்ந்த போதி தர்மன் புத்த மதத்தை சீனாவில் பரப்பி குங்க்ஃபூ என்ற தற்காப்பு கலையையும் சீனர்களுக்கு பயிற்றுவித்தார் என்பதை குறிப்பிடுகிறது) அவ்வாறு தமிழர்கள் எங்கு சென்றாலும் கந்தனையும் அவர்களுடன் கொண்டு சென்றதால் முருகனை இன்று இந்த நாடுகளிலும் புத்த மதத்தை காக்கும் கடவுளாக வணங்குகின்றனர்.

https://en.m.wikipedia.org/wiki/Skanda_(Buddhism)6.9ஆ பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்பகிர்வுகளைப் பார்க்கவும்123தொடர்புடைய பதில்பிரவீன் குமார் ராஜேந்திரன், சென்னை-இல் வசிக்கிறார் 2 வருடங்களுக்கு முன் அன்று புதுப்பிக்கப்பட்டது ·  எழுத்தாளர்  222 பதில்களையும் 627.8ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்தமிழன் திராவிடனா, இந்துவா?

திராவிடம் என்பது ஒரு நிலப்பரப்பை குறிக்கும். அந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் திராவிடர்கள். திராவிட குடும்பத்தில் தமிழர்கள் ஒரு அங்கம். அதுமட்டும் இல்லாமல் தமிழர்கள் தான் மூத்த குடி. தமிழ் தான் திராவிட குடும்ப மொழிகளின் முதன்மையானது. அதுவே திராவிட மொழிகளின் தாய் மொழி. இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் ஆரம்பம் இப்போது இருக்கும் தமிழ் நாடு கிடையாது என்ற கூற்றும் உண்டு.

திராவிட நிலத்தில் வாழ்கின்றதால் திராவிடன் என்று கூறலாம். ஆனால் தமிழர்களுக்கு தமிழன் என்ற அடையாளம் தவிர வேறு எந்த அடையாளமும் கிடையாது என்பது தான் என் கூற்று. ஏன் என்றால், திராவிட நிலத்தில் வாழும் அனைவரும் தமிழர்கள் கிடையாது. வேற்று மொழி பேசுகின்றவர்களும் திராவிட நாட்டில் வாழ்கின்றனர்.

தமிழர்கள் மத பேதம் இன்றி வாழ்ந்து இருக்கின்றார்கள் என்று கீழடி அகழ்வு ஆராய்ச்சி கூறுகின்றது. கீழடி என்பது தமிழ் நாட்டின் பழமையான இடமாக கருதப்படுகின்றது. பழமையான இடத்தில வாழ்ந்த மக்கள் தமிழர்கள். அவர்கள் வாழ்ந்த இடத்தில மதம் தொடர்பாக எந்த ஒரு தகவல்களும் இல்லை. எனவே தமிழன் கண்டிப்பாக ஹிந்து கிடையாது.

அதும் மட்டும் இல்லை, ஹிந்து மதம் என்பது ஆரியர்களால் இந்தியாவிற்கு வந்த ஒன்று என்ற கூற்றும் உண்டு . ஆரியர்கள் என்பவர்கள் கிழக்கு ஆசியாவில் இருந்து வந்தவர்கள் என்று கூறுவார்கள். அவர்கள் கொண்டு வந்த மதம் தான் ஹிந்து மதம் என்று கூறுகிறார்கள். நான் கூறும் இந்த கூற்றுகளுக்கு பல ஆதாரங்கள் இணையத்தளத்தில் உள்ளது.

குறிப்பு: நான் ஒரு இந்து தான். உண்மையை உள்ளது உள்ளபடி சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று இந்த பதிலை எழுதுகின்றேன் .2ஆ பார்வைகள் ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்1தொடர்புடைய பதில்சிவகுமாரன் மணிவாசகம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்-இல் பணிபுரிந்தார் (1965-2001)1 வருடத்திற்கு முன் அன்று பதில் அளிக்கப்பட்டது · எழுத்தாளர் 79 பதில்களையும் 39.2ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்இந்துக்கள் ஏன் தங்கள் மதத்தை பரப்பவில்லை?

ஒற்றை நூல், ஒற்றைக் கடவுளைக் கொண்டு உருவாக்கப்பட்டதோ, அல்லது பிற மதங்கட்கு பின் பிறந்ததுவோ அல்ல இந்து தர்மம்.

இந்து தர்மம் பல கடவுள்கள்,பல வேத,உபநிஷத்துக்களைக் கொண்டது .ஆதிசங்கர்ரால்,தொகுக்கப்பட்டு ஷண்மதம் என்ற ஆறு தொகுப்பில் இயங்குவது.மனித மனதின் பல வழிகட்கும் இதன் தொகுப்பின்மூலம் வேறு வேறு பாதைகளைக் காட்டினாலும் இறுதியில் பிரம்மம் என்ற ஒன்றைச் சேர்வதோ அல்லது பிரம்மமாகவே மாறுவதையே குறிக்கோள் என கொண்டது. இந்த வழிகளை இன்னும் விரிவாக்க வேண்டும் என வந்த விழுதுகள் தான் பௌத்தமும்,சமயமும்.எனவே தான் அவைகள் அடுத்த நாடுகட்கு இடம் பெயர்ந்துவிட்ட ன.

இளைய மதங்களை உற்பத்தி செய்தவர்கள்,தங்கள் மதங்களை வளர்த்து,விரிவாக்க முன்பே உள்ள மத மக்களிடம் சென்று, மதமாற்றம் செய்யவேண்டிய கட்டாயமும் ,தேவையும் இருந்தது . இந்துமதம் ஆதிப் பழைய மதம் என்பதால் இந்து என்பவன் பிறப்பால் மட்டுமே இந்து ஆகிறான் என்று சொல்லியது. பின்பு ஏன் இங்கே மத மாற்ற முயற்சிகள் உள்ளன என்றால் பிற மதங்கட்கு மத மாற்றம் செய்யப்பட்ட ஆதி இந்துக்களை மட்டுமே,மீண்டும் தாய் மத்த்திற்கு அழைக்கிறோம்.அவர்கள் மட்டும்தான், இந்து மத்த்தில் நுழைய தகுதி உடையவர்கள்.பிற நாட்டில் உள்ள புற மத மக்களையும் அதனால் தான் இங்கு சேர்க்க முயற்சிப்பது இல்லை இதுதான் நாம் வேகமாக நமது மத்த்தை பரப்பாத்து போல ஒரு தோற்றத்தை தருகிறது.272 பார்வைகள்ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்தொடர்புடைய பதில்M Arumugam2 வருடங்களுக்கு முன் அன்று பதில்அளிக்கப்பட்டது · எழுத்தாளர் 1.1ஆ பதில்களையும் 1.3மி பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்தமிழர்களை இந்துக்கள் என்று அழைப்பது ஏமாற்று வேலைதானே?

இரண்டும் ஒரே கேள்வி ஆகையால் கீழ்கண்ட பதிலை காண்க

தமிழர்களை இந்துக்கள் என்று அழைப்பது சரியா?417 பார்வைகள்தொடர்புடைய கேள்விகள்தமிழர்களை இந்துக்கள் என்று அழைப்பது ஏமாற்று வேலைதானே?தமிழர்கள் ஏன் மதம் மாறினார்கள்? எப்போது?தமிழர்கள் இந்து மதத்திற்கு முன் என்ன மதங்களை பின்பற்றி வந்தனர்?யூதருக்கும் தமிழருக்கும் ஏதாவது பிரச்சனை உள்ளதா?தமிழன் திராவிடனா, இந்துவா?தமிழர்களின் வழிபாட்டு முறைக்கும் பார்ப்பன இந்து மத வழிபாட்டு முறைக்கும் உள்ள வேறுபாடு என்ன?அயோத்தியில் மசூதி கட்ட ராமர் கோவில் இடிக்கப்படும் போது, இந்துக்கள் செய்த போராட்டங்கள் என்ன?பிராமணரல்லாத இந்துக்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளதா?“தீபாவளி” இந்துக்கள் பண்டிகையா இல்லை தமிழர் பண்டிகையா?தமிழர்களின் மதம் ஆசீவகம் என்றால் இந்து மத கோயில்களில் எந்த மொழியில் பூஜை செய்தால் நமக்கு என்ன? பன்னிரு திருமுறைகளையும் தான் ஆராதனைக்கும் கல்வெட்டுகளிலும் பயன்படுத்துகிறார்களே?தமிழன் இந்துதான் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆனால், இப்போது உள்ளவர்கள் அதை ஏற்று கொள்ள மறுப்பது ஏன்?இந்துக்கள் அல்லாத மற்ற மதங்களை சார்ந்தவர்கள் திருமணங்களை நடத்துவதற்கு நல்லநேரம், ராகுகாலம், எமகண்டம் போன்றவைகளை பார்த்து முகூர்த்த நாளை தேர்வு செய்கிறார்களா?மாரியம்மாவை வழிபட்ட பலகிராம இந்துக்கள் தற்போது மேரியம்மாவை வழிபட முன் வந்துள்ளது எதைக் காட்டுகிறது?எப்பொழுது ஒருங்கிணைந்த இந்து மதம் தோன்றியது? தற்போது உள்ள இந்துக்கள் அனைவரும் உண்மையிலேயே இந்துக்களா?இலங்கையில் வியாபாரம் செய்த இந்திய தமிழர்களை இலங்கை தமிழர்கள் மதிக்கவில்லை ஏன்?

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply