கருத்தியல் இதயத்தில் ஒரு ஈட்டி

கருத்தியல் இதயத்தில் ஒரு ஈட்டி (1)

திசாராணி குணசேகரா

(முழுச் சிங்கள சமூகமும் தமிழர்களுக்கு எதிரானது அல்ல. சிங்கள அறிவுப்பிழைப்பார்கள் மத்தியில் நியாயத்தைப் பேசுபவர்களும் , நீதியைக் கடைப்பிடிப்பவர்களும்கடைப் பிடிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இக்கட்டுரையாளர். Colombotelegraph இணைய தளத்தில் அவர் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையை https://www.colombotelegraph.com/index.php/a-stake-through-the-ideological-heart/comment-page-1/?unapproved=2408930&moderation-hash=19e840286504054d4ee667c05aa61834#comment-2408930p;pmnp  என்ற முகவரியில் படிக்கலாம். தமிழாக்கம்  நக்கீரன்)

“போதுமான இறப்பு ஏற்பட்டுள்ளது.” ~ Colm Tóbín  (House of Names)

சனாதிபதி பதவியை இழந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, மகிந்த இராசபக்ச தனது மூதாதையர் வீட்டில் ஒரு சன்னல் மீது ஏறி, துக்கத்தில் இருந்த தனது ஆதரவாளர்களுக்கு “அவர்கள் ஈழத்தில் இருந்து பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

மெதமுலான பிரகடனம் மைத்திரிபால சிறிசேனவினால் மகிந்த இராசபக்ச தோற்கடிக்கப்பட்டதை சிங்கள – பவுத்த இலங்கையை தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தோற்கடித்தாக மகிந்த இராசபக்சா சித்திரித்தார். இந்த   மறுவாசிப்பில், சிறுபான்மையினர் வாக்காளர்கள், குடிமக்கள் ஆனால் அந்நியர்.  சிங்கள- பவுத்த பிறப்புரிமையின் ஒரு வெளிப்பாடாக, அவர்கள் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கும் எந்தவொரு தேர்தல் முடிவும் வரையறையின் மூலம் சட்டவிரோதமானது. இந்தப் பொய்யான கதைக்கு ஒற்றைக் குறிக்கோள் இருந்தது – இராசபக்சாக்கள் சிங்கள – பவுத்த வாக்குகளால் மட்டுமே அதிகாரத்தை மீண்டும் பெற முடியும். ஆனால் இது சனாதிபதி முறையின் கீழ் சாத்தியமற்றதாகக்  கருதப்பட்டது.

பெரும்பான்மை மக்களது மனக்குறை அரசியல் மட்டுமே என்பது  இராசபக்சாவின் உத்தியாக மாறியது. மகிந்தா சுலங்காவில் தொடங்கி, இராசபக்ச தலைமையிலான எதிர்க்கட்சிகள் சிங்கள பவுத்த சுனாமியால் இலங்கை சனநாயகத்தை மூழ்கடிக்கத் திட்டமிட்ட பரப்புரை மேற்கொண்டன. இந்தச் செயற்பாட்டில், இராசபக்சவுக்கும் பெரும்பான்மை சமூகத்துக்கும் இடையே ஒரு மத – இன உடன்படிக்கை  உருவாக்கப்பட்டது.  அதுவே இராசபக்ச அதிகாரத்திற்கு ஈடாக சிங்கள – பவுத்த மேலாதிக்கம். சிறுபான்மையினருக்கு இனிச் சலுகைகள் அல்லது  சகாயங்கள் இல்லை; இந்தியா அல்லது மேற்கு நாடுகளை இனித்திருப்திப்படுத்த முடியாது. அரசியல் பிக்குகளின் இராணுவம் இந்தப் பேரத்தின் உத்தரவாத தாரர்களாகவும் – விற்பனையாளர்களாகவும் செயல்பட்டது.

இந்தச் சூதாட்டம் வேலை செய்தது. 2019  உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் தீவிரவாதிகள் சுமார் 270 அப்பாவி மக்களைத் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொன்றார்கள்.  இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு முஸ்லீம் மத வெறியர்களின் குழுவின் சிறிய உதவி இருந்தது.  மெதமுலானாவில் தொடங்கிய பிளவுபட்ட பயணம் மகத்தான வெற்றி பெற்றது.  கோட்டாபய இராசபக்ச அவர்களை சிங்கள – பவுத்த வாக்காளர்கள் அதிபர் பதவியில் அமர்த்தினார்கள்.

இராசபக்சாக்கள் கருத்தியல் சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் ஒரு சித்தாந்தத்தின் முழுமையான பயனர்கள். சிங்கள – பவுத்த மேலாதிக்கவாதம் அவர்களின் வாள் மற்றும் கேடயம் ஆகும்.   அவர்களின் அதிகாரத்திற்கான பாதை மற்றும் எதிர்ப்பிற்கு எதிரான அவர்களின் பாதுகாப்பு ஆகும்.  மற்ற அனைத்தும் தோல்வியடையும் போது  சிங்கள – பவுத்த  மேலாதிக்கவாதம் தலைதூக்கும்.

சிங்கள – பவுத்தத்தின் மீதான இராசபக்ச விசுவாசம் ஷி ஜின்பிங்கின் சோசலிசத்தின் மீதுள்ள  விசுவாசத்திலிருந்து வேறுபட்டதல்ல. ஆனால் பக்தியின் காட்சிகள் மற்றும் அறநெறி பற்றிய அறிவிப்புகள் மூலம் இடைவெளிகளை மறைக்க எண்ணலாம். இலங்கை ஒரு தூய சிங்கள-பவுத்த இராச்சியம் ஆகும்.  இது சிறுபான்மையினரைப் பற்றிக் கவலைப்படாத மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பயப்படாத ஒரு தடித்த குடும்பத்தினால் வழிநடத்தப்படுகிறது. அந்தக்  கற்பனாவாதத்தில், ஏழ்மையான சிங்கள – பவுத்தர்கள் கூட பணக்காரத் தமிழ், முஸ்லீம் அல்லது கிறிஸ்தவர்களை விட அதிக அரசியல் அதிகாரம் படைத்தவர்கள் என்பதை அறிந்து திருப்தி அடைகிறார்கள். சில பொருளாதார அப்பத்துண்டுகளை வீசினால்  இராசபக்ச ஆட்சி சிங்கள – பவுத்த கைகளில் இளம் நாமல் வரை, ஒருவேளை அதற்கு அப்பாலும்  பாதுகாப்பாக இருக்கும்.

இப்போது அந்த கற்பனாவாதம் சிதறுண்டு கிடக்கிறது. ஒரு குழந்தையின்  பால் பவுடருக்காக வரிசையில் மணிக்கணக்கில் செலவிட வேண்டியிருக்கும் போது, யாரையும் விட  தாங்கள் உயர்ந்தவர்கள் என உணர்வது கடினம். அல்லது வெற்று எரிவாயு சிலிண்டருடன் ஒரு கடையிலிருந்து இன்னொரு கடைக்கு  விரைந்து செல்லவேண்டும்.  இராசபக்ச உருவாக்கிய, தொற்றுநோய் – மோசமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு இணையாக விரக்தி புதிய உச்சத்தை எட்டும்போது, ஆட்சிக்கு இருக்கும் ஒரே வழி சிங்கள- பவுத்த கோபத்தை பொருத்தமான எதிரியை நோக்கி மடமாற்றுவதாகும்.

“இஸ்லாம் பாகிஸ்தானிலும் மற்றும் பிற முஸ்லீம் நாடுகளிலும் பலவீனமான மற்றும் கேவலமான ஆட்சிகள் மற்றும் நவீன காலங்களில் தலைவர்களுக்கான புகலிடமாக உள்ளது” என்று  இக்பால் அகமது (Eqbal Ahmed) எச்சரித்துள்ளார். “அவர்கள் தாங்கள் அச்சுறுத்தப் படுவதாகவும் தனிமைப்படுத்தப் பட்டதாகவும் உணரும்போது – மற்றும் அவர்களின் பிடியை இழந்து, புகழ் இழந்து, மக்களின் ஒருமித்த உணர்வை இழந்து – அவர்கள் இஸ்லாமை மறைவிலிருந்து வெளியே கொண்டு வந்து அதை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்” (பேரரசை எதிர்கொள்வது). இந்த வாசிப்பு இன்றைய இலங்கைக்கு  மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஏனெனில் இராசபக்சாக்கள் தேய்ந்து வரும்  தங்கள் புகழில் ஒட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

சிங்கள-பவுத்தர்களின் இருப்புக்கான புதிய மற்றும் பயங்கரமான அச்சுறுத்தல்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படும். இன்னும் பயங்கரமான போர்வையில் பழக்கமான எதிரிகள் நிலப்பரப்பில் பரவி இருப்பார்கள். அச்சத்துடனும் பீதியுடனும் சிங்கள – பவுத்த  வாக்காளர்கள் அப்பாச்சி மகிந்த, கோட்டாபய, பசில் மற்றும் நாமல் ஆகியோரை வெற்றுப் பைகளில் மற்றும் வெற்று வயிற்றில் கூட ஒட்டிக்கொள்வார்கள்.

பவுத்த பிக்கு கலகொட – அத்தே ஞானசாரரை திடீரென வெளியில் கட்டவிழ்த்துவிடப்பட்டது, அவர் முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்களுக்கு எதிராகப்  புண்படுத்தும் வார்த்தைகளை வீசுவது, அந்த எதிர்காலத்தை முன்னறிவிக்கிறது.

தீவிரவாத நரகங்களிலிருந்து வெளவால்கள்

கடந்த பத்தாண்டுகளில் இரண்டு முஸ்லீம் எதிர்ப்புக்  கலவரங்களை இலங்கை சந்தித்தது. இரண்டிற்கும் முன்னால் முஸ்லீம் விரோத வெறி, அலுத்கமவில் இடம்பெற்ற ஹலால் பற்றிய பயம் மற்றும் திகனாவுக்கு முன்னால் வாந்தி பேதி பற்றிய பைத்தியம் இடம்பெற்றது. அவை காரணமாக எழுந்த பயம் மற்றும் வெறுப்புச் சூழ்நிலை போன்ற தற்செயலான சம்பவங்கள் எதிர்காலத்தில் வன்முறையை கட்டவுழ்க்கப் பயன்படுத்தப்படலாம்.

2014 இல் அளுத்கமவில், அது ஒரு பவுத்த பிக்கு மற்றும் மூன்று முஸ்லீம் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட ஒரு தகராறு இடம்பெற்றது. பவுத்த பிக்கு கலகொட – அத்தே ஞானசார தலைமையிலான பொதுபலசேனா அந்த நகரத்தில் இறங்காமல் இருந்திருந்தால் அது நடந்திருக்காது.  “இந்த நாட்டில் இன்னும் சிங்களக் காவல்துறை, சிங்கள இராணுவம் உள்ளன. இன்றைக்குப் பிறகு ஒரு ஒற்றை முஸ்லீம் அல்லது வேறு சில வேற்றுகிரகவாசிகள் ஒற்றைச் சிங்களவர் மீது கை வைத்தால், அல்லது பவுத்த தேரர் மீது கை வைத்திருந்தால் இந்த அனைத்து உயிரினங்களின் முடிவாக இருக்கும்” என அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் ஞானசார பிக்கு இடிபோல் முழங்கினார். இதனால் வன்முறை வெடித்தது, கலவரக்காரர்கள், பெரும்பாலும் வெள்ளை உடை அணிந்த முஸ்லீம் மக்களது சொத்துக்களை தண்டனை கிடைக்காது என்ற துணிவில் தாக்கினர்.

திகனாவும் இது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது.  பெப்ரவரி 20, 2018 அன்று, ஒரு சிறிய சாலை விபத்தைத் தொடர்ந்து, நான்கு முச்சக்கரவண்டிப்  பயணிகள் பாரவண்டி ஓட்டுநரை கடுமையாகத் தாக்கினர். தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லீம்கள்.  ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்களவர். தாக்குதல் நடத்திய முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.  பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மார்ச் 3 ஆம் நாள்  இறந்தார்.  அநியாயமாக நடந்த  உயிர்ச்சேதம் பற்றி வருத்தம் இருந்தது, ஆனால் மார்ச் 4 அன்று மாலை பிக்கு  கலகொட – அத்தே ஞானசாரார் இறுதிச் சடங்குக்குச் செல்லும்வரை கோபமோ அல்லது முஸ்லிம்களைக் குறிவைத்த எந்தக்  கோபமும்  இருக்கவில்லை.  ஆனால் ஞானசேரர்  சென்றவுடன் கலவரம் தொடங்கியது.

பகுத்தறிவுயின்மை என்பது மத வெறியரின் பகுத்தறிவு ஆகும். உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை படுகொலை அளுத்கம மற்றும் திகானா இல்லாவிட்டாலும் கூட நடந்திருக்கலாம், ஏனென்றால் தற்கொலைக் குண்டுவெடிப்பாளர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிஜ உலகில் இல்லாத ஒரு மன வெளியில் வாழ்ந்தனர். ஆனால் அலுத்கம மற்றும் திகானா சஹ்ரான் ஹாஷிமின் கொடிய தற்கொலைத் தாக்குதலை எளிதாக்கியிருக்கும். ஆட்சேர்ப்புக்கு அவர் சொல்ல வேண்டியதெல்லாம்,  அலுத்கம மற்றும் திகானா இரண்டையும் பாருங்கள் என்பதாக இருக்கும்.

இப்போது பிக்கு  ஞானசாரர் தனது வழக்கமான – கீழ்த்தரமான விளையாட்டில் மும்மரமாக  ஈடுபட்டுள்ளார். இந்த முறை, அவருக்கு அரசுக்குச்  சொந்தமான ரூபவாஹினி மூலம் ஒரு மேடை கொடுக்கப் பட்டுள்ளது. மகிந்த இராசபக்ச பொலக்னா (Bologna) இல் மத நல்லிணக்கத்தைப் பேசிக்கொண்டிருந்தபோது, கோட்டாபய இராசபக்ச நியூயோர்க்கில் நல்லிணக்கத்தைப் போதித்துக்கொண்டிருந்தபோது, கொழும்பில், பிக்கு  ஞானசாரர் அரச தொலைக்காட்சியில் மற்றொரு மத வன்முறைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருந்தார்.

இந்தக் கிழமை இலங்கை, இந்தியாவிடம் எரிபொருளை வாங்குவதற்கு 500 மில்லியன் டொலர் கடன் கேட்டது  நமது பொருளாதாரத்தின் நிலையற்ற நிலைமையின் மற்றொரு அறிகுறியாகும். கலகலப்பைத் தூண்டும்  இராசபக்சவின் பினாமிகள்,  சிறுபான்மையினருக்கு எதிராக மற்றொரு வன்முறையை கட்டவுழ்த்து விட்டால், அது ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட பொருளாதாரத்திற்குக் கொலைகார அடியாக இருக்கும். பேரம் பேசும் அடித்தள விலைகளிலும் முதலீட்டாளர்கள், பிரதான சொத்துக்காக வாங்குபவர்கள் இருக்க மாட்டார்கள்,  மிகக் குறைவான சுற்றுலாப் பயணிகளே இருப்பார்கள்.  பொருளாதாரம் நொறுங்கும், ரூபாய் வீழ்ச்சியடையும், பசியும்  தேவையும் நாட்டைப் பீடிக்கும். இதில் பாதிக்கப்பட்டவர்களின் இனம் அல்லது மதம் பற்றிய கவலை இருக்காது.

இராசபக்சாக்கள் தங்கள் சிங்கள – பவுத்த அடித்தளத்தின் குருதிக் கசிவை நிறுத்துவதற்காக  அரசியல்-பொருளாதாரத்தின் மீது ஒரு தவறான இன/மத முரண்பாட்டை மிகைப்படுத்த முயற்சிக்கின்றனர். குடும்பத்தின் அரசியல் பிழைப்புக்கு சிறுபான்மை எதிர்ப்புவெறி மற்றொரு அலை அவசியம். ஆனால் அது முழு இலங்கைக்கும் மற்றும் அனைத்து இனத்தவருக்கும்  மதத்திற்கும் ஆபத்தானது. இராசபக்சாக்கள் தங்கள் சொந்தப் பிழைப்புக்காக செய்ய வேண்டியவை  இலங்கை ஒரு தேசிய அரசா நிலைத்து இருத்தலை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

“அரசியல் என்பது ஒரு மனிதனின் வித்தியாசமான வழிபாட்டைப் பற்றியது அல்ல” என்று அமெரிக்க மேலவை உறுப்பினர்  பென் சாஸ் ( Ben Sasse) ட்ரம்ப் தேர்தல் அவதூறுகளின்  பின்னணியில் தனது சக குடியரசுக் கட்சியினருக்கு நினைவுபடுத்தினார் (CNN – 15.2.2021).

இராசபக்சவின்  பிரபஞ்சத்தில், அரசியல் என்பது ஒரு குடும்பத்தின் வித்தியாசமான வழிபாடு தவிர வேறில்லை. உடுவே தர்மாலோக தேரர் (ஒரு முறை அவர் ஒரு காலை வேளையில் இரண்டு யானைக் குட்டிகளைத்  தனது கோவில் வாசல்களுக்கு வெளியே வீசப்பபட்டதாகக் கூறினார்) அண்மையில் இரசபக்சாக்களை அழித்ததை இலங்கையை அழித்ததோடு ஒப்பிட்டார். உண்மையில் அதற்கு எதிர்மாறுதான் உண்மை. இராசபக்சே சித்தாந்தத்தின் மையத்தில் பொய்யான கதைக்கூற்றின் மூலம் ஒரு ஈட்டியைச் சொருகினால்  மட்டுமே இலங்கைக்கு எதிர்காலம் இருக்க முடியும்.  இராசபக்சவை தோற்கடிப்பது போதாது; அவர்களின் சூழ்ச்சி வெளிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தோற்கடிக்கப்பட  வேண்டும். அல்லது அவர்கள் மற்றொரு சுற்று இரத்தக் கசிவுக்குத் திரும்புவார்கள். (மிகுதி அடுத்த கிழமை)

——————————————————————————————————————–

கருத்தியல் இதயத்தில் ஒரு ஈட்டி (பாகம் 11)

திசாராணி குணசேகரா

(முழுச் சிங்கள சமூகமும் தமிழர்களுக்கு எதிரானது அல்ல. சிங்கள அறிவுப்பிழைப்பார்கள் மத்தியில் நியாயத்தைப் பேசுபவர்களும் , நீதியைக் கடைப்பிடிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இக்கட்டுரையாளர். Colombotelegraph இணைய தளத்தில் அவர் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையை https://www.colombotelegraph.com/index.php/a-stake-through-the-ideological-heart/comment-page-1/?unapproved=2408930&moderation-hash=19e840286504054d4ee667c05aa61834#comment-2408930p;pmnp  என்ற முகவரியில் படிக்கலாம். தமிழாக்கம்  நக்கீரன்)

இராசபக்ச இராச்சியம்  அல்லது இலங்கை?

2011 ஆம் ஆண்டில், இராசபக்ச ஆட்சி சூரியவேவா 1,435 ஏக்கர் விளையாட்டுக் கிராமத்தை  உருவாக்க 6 குளங்களை நிரப்பிக் கட்டும்  திட்டத்தை கொண்டு வந்தது.  இது ஒரு உலர் மண்டலத்தில், நீர் இழப்பு வாழ்வாதாரங்களை மட்டுமல்ல, உயிர்களையும் அழிக்க வழிவகுக்கும். இத்தகைய குளங்களை நிரப்புவதால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்கள – பவுத்தர்கள் மற்றும் அடிமட்ட இராசபக்சா ஆதரவாளர்களாக இருந்தனர். இந்தத் திட்டம் பேரழிவு மற்றும் ஆபத்து நிறைந்தது என்பதால்  சாமல் இராசபக்சா கூட அதனை எதிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேறவில்லை.  ஆனால் அதன் கருத்தாய்வு  இராசபக்ச அரசியலின் உண்மையான மக்கள் எதிர்ப்புத்  தன்மையை அம்பலப்படுத்துகிறது.

ராஜபக்ச குடும்ப நிறுவனமாக மாறி வருகிறது இலங்கை அரசு! - நியூயோர்க் டைம்ஸ். |  Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil  news,tamil breaking news,tamilclassifieds ...

இராசபக்சா ஆட்சியின் முழுத் துயரத்தையும் இரண்டகத்தையும் ஒரு அண்மைச் சம்பவம் விளக்குகிறது. இணையத்தில் பரவி வரும் ஒரு காணொளி, அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையினரின் ஒரு குழு, பத்தேகமவில் ஒரு மெதுவோட்டப் பாதை (jogging track) அமைக்க  ஒரு பெண்ணைத்  தனது நிலத்தை கொடுக்கக்  கட்டாயப்படுத்தப் பட்டதைச் சித்தரிக்கிறது. அந்தப் பெண் தனது காணியை அரசுக்கு எழுதித் தருமாறு அந்த அதிகாரி பலமுறை வற்புறுத்துகிறார். அவரது காணியின் பெறுமதிக்கு ஈடாக  எதுவும் கொடுக்கப்படவில்லை. முழு இழப்பீடு இல்லாவிட்டாலும் குறைந்தளவு இழப்பீடு தருவதாகக்கூட எந்த வாக்குறுதியும் வழங்கப் படவில்லை. அந்தப் பெண் – நிச்சயமாக ஒரு சிங்களவர் – காணியை எழுதிக் கொடுக்க மறுக்கிறார்.

தனக்கு இருக்கும் ஒரே சொத்து இந்தக் காணி மட்டுந்தான் என்கிறார். அவருக்கு செல்ல வேறு இடமில்லை.  வாழ்வாதாரம் இல்லை. அவர் முன்னர் ஒருமுறை தனது காணியின்  ஒரு பகுதியைச் சாலைத் திட்டத்திற்குக் கொடுத்துவிட்டார். ஆனால் அவர் இன்றுவரை  ஒரு சல்லிக்காசைக் கூட இழப்பீடாகப் பெறவில்லை.  மீதமுள்ள காணியை மெதுவோட்டப் பாதைக்காகக் கொடுக்க அவர் அணியமாக இருக்கிறார். ஆனால் தனக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்கிறார். நியாயமான இழப்பீடு அல்லது வேறொரு காணி தரப்பட வேண்டும் என்கிறார். சனாதிபதியிலிருந்து கீழ்மட்டத்திலுள்ள (அதிகாரிகள்) அனைவருக்கும் கடிதங்கள் எழுதினேன் ஆனால் எந்தவிதமாமான பலனும் இல்லை என்று அவர் கூறுகிறார். (News 19 Alerts – ඇවිදින මංතීරුවක් හදන්න ඉඩම් ගන්න හැටි | Facebook).

2011 இல், இராசபக்சா ஆட்சி புனித பூமிகள்  சட்டத்தை கொண்டு வந்தது.  அந்தச் சட்டம் இயற்றப்பட்டிருந்தால், புத்தசாசனம் மற்றும் மத வழக்காரங்கள் துறை அமைச்சர் ஒரு  காணி அல்லது கட்டிடத்தைக் கையகப்படுத்த எளிய அதிகாரம் கொண்ட ஒரு அரசிதழ்   மூலம் – ஒரு பாதுகாப்பு பகுதி, ஒரு  சேமிப்பு பகுதி, ஒரு கட்டிடக்கலை அல்லது வரலாற்றுப் பகுதி அல்லது ஒரு புனித பகுதி எல்லா வற்றையும் பவுத்த சாசன அமைச்சர் கையகப்படுத்தலாம். இந்தச்  சட்டம் ஏற்கனவே நாடாளுமன்ற ஒழுங்கு ஆவணதில் (order paper) இருந்தது. உச்ச நீதிமன்றம்  மாற்றுக் கொள்கைக்கான மையம் (Centre for Policy Alternatives (CPA) தொடுத்த வழக்குக்குப் பதிலளிக்கும் போது, 13 ஆவது திருத்தத்தின் கீழ் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்ட பொருள் என்பதால் அனைத்து மாகாண சபைகளின் ஒப்புதல் தேவை என்று தீர்ப்பளித்தது. கிழக்கு மற்றும் வட- மத்திய மாகாணங்கள் சம்மதிக்க மறுத்து, சட்டத்தைத் திரும்பப் பெற அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தின. (இந்தத் தீர்ப்பு தலைமை நீதியரசர் சிஜே ஷிராணி பண்டாரநாயக்கவின் சட்டவிரோத குற்றச்சாட்டுக்கு (illegal impeachment) வழிவகுத்தது.

இலங்கையில் வரலாற்று சாதனை படைக்க தயாராகும் ராஜபக்ச குடும்பம் – Puthusudar

புனித பூமிச் சட்டம், சட்டமாக மாறியிருந்தால், பத்தேகமவில் உள்ள அந்தப் பெண்ணும், அவரைப் போன்ற இலட்சக்கணக்கானவர்களும், இழப்பீடு இல்லாமல் தங்கள் சொத்தை இழந்திருப்பார்கள். கொடி பிடித்தல் மற்றும் முழக்கம் எழுப்புவதற்குப் பின்னால் உள்ள இராசபக்சாவின்  உண்மைத் தோற்றம் இதுதான்.

வறுமை, வேலையின்மை மற்றும் அநீதி அதிகரிக்கும் போது, மேலும், மேலும் அதிகமான சிங்கள – பவுத்தர்கள் (6.9 மில்லியன் வாக்காளர்களில் பலர் உட்பட) இராசபக்சா அவர்களின்   பைத்தியக்காரத்தினைக் கண்டு கொள்வார்கள்.  சிறுபான்மையினரைப் பேய்களாக மாற்றுவதன் மூலமே இராசபபக்சாவின் மக்கள் செல்வாக்கின்மையை சமாளிக்க முடியும். அத்தகைய ஒரு மூலோபாயம் செயல்படும் ஆபத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடாது.  இராசபக்சா அவர்களின்  திட்டத்தின் உண்மைத் தன்மையைத் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். சிங்கள- பவுத்தர்கள் எவ்வாறு பெரும்பான்மை மேலாதிக்கவாதத்தை கீழறுத்தது என்பதைப்  புரிந்து கொள்ளச் செய்வது மட்டுமே ஒரே வழி – மற்றும் அவர்களின் சொந்தப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைத்  தொடர்வதே நமக்கு இருக்கும் ஒரே வழி ஆகும்.  சிங்கள-பவுத்தர்கள் எவ்வாறு பெரும்பான்மை மேலாதிக்கத்தை கீழறுத்தது  அவர்களின் சொந்தப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை குறைமதிற்புக்கு உட்படுத்தியது போல்  – தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும். 

இராணுவத்தை முகாம்களுக்குத் திருப்பி அனுப்பாத வரை இலங்கையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியாது (மதம் மற்றும் அவர்களின் உத்தியோகபூர்வ  பூசாரிகளும்) அரசியலில் இருந்து  அகற்றப்படாது விட்டால், இராணுவமயமாக்கல் மற்றும் அரசியல் மதங்கள் இராசபக்சாவுக்குப் பிந்தைய எதிர்காலத்தைக் கூட நச்சுப்படுத்தும்.  அவற்றின்  மிதமிஞ்சிய தன்மை,  கருத்து வேறுபாடு சகிப்புத்தன்மையின்மை  மற்றும் வன்முறைத் தீர்வுகளுக்கான நாட்டம் அதிகரிக்கும்.

எடுத்துக்காட்டாக, இராணுவம் தனது சொந்த அரசியல் மற்றும் நிதி நலன்களைப் பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் இராசபக்சாவுக்கு எதிரான  இயக்கத்தின் தலைமையைக் கைப்பற்ற முடியும்.  இராசபக்சாவின் அதிகாரப்  பசியைப் போக்க புத்தரின் பிம்பத்தையுயும் போதனைகளையும் தவறாகப் பயன்படுத்த முடியும். கிட்டத்தட்ட  எழுபது இலட்சம்   இலங்கையர்களை ஏமாற்றுவதற்கு உதவிய அதே அரசியல் பிக்குகள், இப்போது இராசபக்சாவிற்குப் பிந்தைய இலங்கையில் வாழவும் வளரவும் வழிகளைக்  கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற்றால், அந்த எதிர்காலத்திற்கும் இந்த நிகழ்காலத்துக்கும் ஒரே குறிப்பிடத்தக்க வேறுபாடு இராசபக்சாக்கள் இல்லாததுதான். 

இராசபக்சாவை மட்டுமல்ல, அவர்களின் சித்தாந்தத்தையும் வரலாற்றின் சாம்பல் மேட்டுக்கு ஒப்படைக்க, எல்லா வகையான தீவிரவாதத்திற்கும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை தேவைப்படுகிறது. தீவிரவாதியின் நம்பிக்கைகள் முக்கியமற்றது. நல்ல தீவிரவாதிகளும்  இல்லை, நல்ல இனவெறியர்களும் இல்லை.

அதேபோல பாகுபாட்டிற்கு எதிரான போராட்டம் பாரபட்சமாக இருக்கக்கூடாது. அனைத்துக் குடிமக்களும் ஒரே அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் இலங்கையாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக முஸ்லீம் ஆண்கள்,  தாங்கள் சிங்களவர்களால் சமத்துவமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள் என முறைப்பாடு செய்ய முடியாது. (சிங்கள பவுத்தத்தின் அடிப்படையில் தங்கள் பாகுபாட்டை நியாயப்படுத்துபவர்கள்), அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தங்கள் சொந்தப் பெண்களை சமமற்ற முறையில் நடத்தப்படுவதைத் தொடர்ந்து நியாயப்படுத்துகிறார்கள்.  

இலங்கையின் எதிர்காலம் அதன் கடந்த காலத்தை விட சிறந்ததாக இருக்க வேண்டுமானால், தீவிரவாதிகள் தேசிய நிகழ்ச்சி நிரலை வடிவமைத்து தேசியப் பாதையை அமைக்கும் வழக்கம்  முடிவுக்கு வரவேண்டும். இராசபக்சாக்களை வீழ்த்துவது அதற்கு அவசியமான ஒரு நிபந்தனையாகும். அது ஒரு தொடக்கம்தான். (முற்றும்)

—————————————————————————————————–

COMMENT

Mahila / September 28, 2021
7 1

“Land grab to house the oversized 300,000 + military and to make sure they are kept busy to grow agricultural products (prevent their fertile minds from straying into thoughts of power hungriness and weariness!) in those lands in the North and East of SL supplanting those whom they displaced even after 12 years of the end of the LTTE menace.”

Even before independence, the Sinhalese politicians have contrived a master plan to colonize the Northeastern provinces with Sinhalese settlers. As a result, the Tamils are a minority in 2 out of 3 districts in the Eastern province The Sinhalese population increased exponentially so much so the Sinhalese carved out a separate district in 1960.
Year Tamil Muslim Sinhalese Other Total

No. % No. % No. % No. %

1946 Census 136,059 48.75 109,024 39.06 23,456 8.40 10,573 3.79 279,112
1981 Census 410,156 42.06 315,436 32.34 243,701 24.99 5,988 0.61 975,251
2012 Census 617,295 39.79 569,738 36.72 359,136 23.15 5,212 0.34 1,551,381

Today, Sinhalese are able to elect not less than 4 MPs in the East out of 16 seats ( 25%). This is ample proof of the change in demography due to State-aided Sinhala colonization since independence in 1948. There is only one word to explain this drastic change -ethnic cleansing!

When the war officially ended on 19 May 2009 a total of 118,253 acres of land were under armed forces occupation. Between May 2009 and 2015, 41,659 acres (35.20%) of land was released. Between 2015 – 2019 a further 47, 604 acres (62.15%) of land were released leaving a balance of 28,999 (37.85%).

During the last 23 months, only about 200 acres of land has been released. The army has undertaken large scale vegetable cultivation selling the excess in markets. This is while the war-displaced Tamil families are living in refugee camps and friends homes for the last 12 years! Rajapaksa family rule simply doesn’t care tuppence. The family boasts of their Buddhist heritage, but do not live up to Buddhist principles of compassion (Karuna),

According to Buddhism, compassion is an aspiration, a state of mind, wanting others to be free from suffering. It’s not passive — it’s not empathy alone — but rather an empathetic altruism that actively strives to free others from suffering. Genuine compassion must have both wisdom and loving-kindness. That is to say, one must understand the nature of the suffering from which we wish to free others (this is wisdom), and one must experience deep intimacy and empathy with other sentient beings (this is lovingkindness).” (Dalai Lama).

Am I crying in the wilderness or hoping for some miracles that will open the hearts of the Rajapaksa dynasty? Thanga

—————————————————————————————————————

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply