Palaly Air Port Launches as Jaffna International Airport

யாழ்ப்பாண பலாலி சர்வதேச விமான நிலையம்

இலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் இன்று (17 ஆம் திகதி ஒக்டோபர்) உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பிரதிஅமைச்சர் அசோக் அபேசிங்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

03 2

palaliதமிழ்நாட்டில் சென்னையில் இருந்து முதலாவது விமானம் உத்தியோகபூர்வமாக பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் இந்திய சிவில் விமான சேவை அதிகாரிகள் வருகை தந்தனர். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

72337276 116069899806459 1410145880488542208 n

இதனை தொடர்ந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளாந்த விமான நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், முதல் கட்டமாக யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடி விமான சேவைகளும் இந்திய பிராந்திய விமான நிலையங்களான புது டில்லி, கொச்சின், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை, திருச்சிக்கும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

72529801 2722949424405976 428085046864248832 n

Air India Alliance விமான நிறுவனம் முதலாவது பரீட்சார்த்த விமன சேவையை மேற்கொள்ளவுள்ளது. வாரத்தில் 3 நாட்களுக்கு பலாலிக்கும் சென்னைக்கும் இடையில் இந்த விமான சேவை இடம்பெறும். தேவைகளின் அடிப்படையில் விமான சேவைகளை விஸ்தரிப்பதற்கும் Air India  Alliance விமான நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. இது தொடர்பாக இவர்கள் இலங்கை விமான அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

72837376 757260884695553 4749417137049698304 n 1

இந்த நவீனமயப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் விமான நிலையத்தின் ஓடுபாதை, 2.3 கிலோமீற்றர் வரை புதிதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கும் ஓடுபாதை விரிவுபடுத்தப்படவுள்ளது. மேலும், விமானக் கட்டுப்பாட்டு அறை மற்றும் பயணிகள் முனையமும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

jeno

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம், பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு 2,250 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இலங்கை அரசாங்கம் 1,950 மில்லியன் ரூபாவையும், இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவையும் வழங்கியுள்ளது. இந்த தொகை சுற்றுலா தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொகையை விட அதிகமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

72828912 1815573888586150 8974092710520553472 n

3 கட்டங்களின் கீழ் இந்த விமான சேவை அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலாவது கட்டத்தின் கீழ் விமான நெறிப்படுத்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடு பாதை 950 மீற்றர் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக 72 இற்கு குறைவான Bombardier – 100 ரக விமானங்களை பலாலி விமான நிலையத்தினால் கையாளக்கூடியதாக அமைந்திருக்கும்.

72722430 2550089728380562 3125911093910700032 n

பலாலி விமான நிலையம்…
பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கி 20 கிலோமீற்றர் தொலையில் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வான் படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் நாட்டின் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இலங்கை வான்படை இதனைக் கையகப்படுத்தியது. இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இவ்வானூர்தி நிலையத்தூடாக தென்னிந்திய நகரங்களுக்கும் கொழும்புக்கும் சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

பிரதேச விமான நிலையமாக இருந்து வந்த யாழ்ப்பாண பலாலி விமான நிலையம் பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணி கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமானது. 3 கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தின் குறியீட்டு இலக்கம் VCCJ மற்றும் சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் JAF ஆகும்.

நடுத்தர அளலான A-320 , B-337 விமானங்களை கையாளக்கூடிய வகையில் கூடிய வகையில் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றராக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. தொடர்ந்தும் அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் சர்வதேச விமான சேவை, 1967 ஆம் ஆண்டில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய நிர்மாணத்துடன் ஆரம்பித்ததுடன் அதுவரை விமான பயண நடவடிக்கைகள் இரத்மலான விமான நிலையத்துடன் ஊடாகவே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பலாலி விமான நிலையம் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அபிவிருத்தி செயற்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாணத்தில் பிரதேச அபிவிருத்தி ஏற்படுவதுடன் இதன் மூலம் இந்த பிரதேச மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு வணிக மற்றும் சுற்றுலா தொழில் துறையில் அபிவிருத்தி ஏற்படும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வட மாகாண இளைஞர்களின் தொழிலின்மை மற்றும் பொருளாதார பின்னணி போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வடக்கின் அபிவிருத்தியில் அரசாங்கம் உயர் முன்னுரிமை கொடுத்துள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமையப்பெற்றது பிராந்தியத்தில் பாரிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

யாழ்ப்பாணத்தில் இருந்து 400 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து தலைநகர் கொழும்பை வந்தடைவதற்கு 8 மணித்தியாலங்கள் தேவைப்படும் நிலையில் வெளிநாடுகளுக்கு தமது பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் இதுவரை இந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். தற்பொழுது பலாலி விமான நிலையத்தினூடாக வடக்கில் உள்ள மக்கள் கொழும்பு ஊடாக வெளிநாடு செல்லவேண்டிய அவசியம் இல்லாமையினால் வடக்கில் உள்ள மக்கள் தமது சொந்த இடத்தில் இருந்தே தென் இந்தியாவிற்கான பயணங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு மற்றும் குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் தமது பயணங்களை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நவீனமயமாக்கல் செயற்திட்டத்தின் ஊடாக வடக்கு மக்களுக்கு பல வசதிகள் எற்படுத்தப்பட்டுள்ளது. இது பிராந்திய விமான நிலையமாக மட்டுமன்றி சர்வதேச விமானங்களை கையாளக்கூடிய நிலையமாக அதாவது தெ14ன் இந்தியாவில் உள்ள நகரங்களை உள்ளடக்கியதான விமான சேவைகளை மேற்கொள்ளக்கூடிய நிலையமாக நவீன மயப்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் சுற்றுலா தொழிற்துறையில் பாரிய வளர்ச்சி ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பலாலி சர்வதேச விமான நிலைய நிர்மாணத்தின் நோக்கங்களாக: வடக்கு அபிவிருத்தி செயற்பாடுகளின் பிரதான செயற்பாடாக நிறைவேற்றுதல் மற்றும் வலயத்தின் விமான செயற்பாட்டில் அபிவிருத்தியில் சந்தைப் பங்கை கைப்பற்றிக்கொள்ளல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்று சர்வதேச விமான நிலையமொன்றாக செயற்படுதல். மற்றும் இலங்கைக்கு பொருளாதார மற்றும் முதலீட்டு சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதற்கு வசதிகளை வழங்கும் வழியொன்றாக செயற்படுதல் போன்றவை அமையும்.

சர்வதேச விமான நிலையத்தின் அண்மையில் தொழிற்சாலைகள் உருவாக்குவதன் மூலம் இலகுவாக சர்வதேச சந்தைக்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்யக்கூடிய இயலுமை காணப்படும். இதற்கு அருகாமையில் பாரிய அளவிலான தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கு போதியளவு காணி மற்றும் உழைப்பினை வழங்குவதற்கு முடியுமாக இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு இலகுவாக தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கும் உழைப்பினை பெற்றுக் கொள்வதற்கான இயலுமை காணப்படுவதுடன் மீள் ஏற்றுமதிக்காக சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு விமான நிலையம் அமையப்பெற்றமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

https://tamil.news.lk/news/media-releases/item/32402-2019-10-17-12-27-36

About editor 3085 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply