ஈழத்துப் பழைய நூல்கள்
இனித் தென்னாட்டு மக்களின் (இந்தியா, ஈழம்) மிகப் பழைய வரலாற்றினை அறிவதற்கு 3 பெரு நூல்கள் கிடைத்துள்ளன. அவை கந்தபுராணம், இராமாயணம், பாரதம் என்பன. இவற்றுள் கந்தபுராண வரலாறே இன்று நாம் அறியக்கூடிய வரலாற்றில் ஆதி வரலாற்றைக் கூறுவது. புராணம் என்றால் புனர் கதை எனக்கூறுவர் சிலர். அவர் அறியார். நாம் நம்பமுடியாதனவற்றைப் புனர் கதை எனக் கூறுதல் முறையன்று இராணவன் ஆகாயமாக்கமாக சீதையைக் கொண்டு சென்றான் என்பதை இன்று நாம் வானவூர்தியைக் கண்ணால் காண்பதற்கு முன் புனர்கதை என்றே எண்ணினோம். இப்பொழுது அதுவும் உண்மைதான் என நம்புகிறோம். ஆதலின் நம் அறிவுக்கும் அனுபவத்துக்கும் எட்டாதவற்றை புனர்கதை எனக்கூறி வாளாவிடுதல் மாபெரும் இழுக்காகும். புராணம் என்றால் பழைய வரலாறு என்பது பொருள். நாம் இப்பொழுதுகலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புராணம் என்ற பெயரால் சுட்டப் படும் நூல்கள் யாவும் சென்ற யுகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி வரலாறுகளையே கூறுவன. ஆனால் இன்று சில நூற்றாண்டு கடந்த வரலாறுகளையும் புராணம் என்னும் பெயரால் நூல் செய்வராயினர். உதாரணமாக, திருவாதவூரடிகள் புராணம், திருத்தொண்டர் புராணம் முதலியன. கந்தபுராண வரலாறு முழுமையும் துவாபரயுகத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளேயாகும். அன்றி அதற்கு முந்திய வரலாற்று நிகழ்ச்சிகளிற் சிலவும் அமையலாம்.
ஆனால் இம் மூன்று நூல்களின் வரலாறுகளும் முதன் முதலாக ஆரியர் வாயினின்றும் வடமொழி நூல்களாகவே வெளிவந்தன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன் கந்தபுரண, இராமாயண வரலாறுகள் தமிழர் மத்தியில் கர்ணபரம்பரைக் கதையாகவும் செவிவழிக்கல்வியாகவும், கற்றோர் மத்தியில் உதாரண எடுத்துக் காட்டுக்களாகவும் இருந்து வந்தன. கந்தபுராணத்தில் சூரன், சிங்கன், தாரகன் ஆகிய முடியுடை மன்னர் மூவர் வரலாறு காணப்படுகின்றது. இவர்கள் மூவரும் ஒரு தாய் மக்கள். இவர்கள் நாடு தென்னாடாகிய ஈழ நாடாகும். சூரனது ஆட்சி நகர்தற்போது காணப்படும் ஈழநாட்டுக்குத் தெற்கே ஈழநாட்டின் ஒரு பகுதியாய் இந்துமாக் கடலுள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அதன் பெயர் வீரமகேந்திரம் என்பது, இது வடமொழியாளர் வழங்கிய பெயராகும். சிவதருமோத்தரத்தில் மகேந்திரம் எனப்படுவது குமரிமலையே, எனத்தொல்காப்பியம் எழுத்ததிகார முகவுரையில் திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள். எனவே பரந்துபட்ட குமரிமலையின் தென்கோடியிலேயே சூரனது ஆட்சி நகர் அமைந்திருந்தது என்பது பெறப்படும். சிவதருமோத்தரக் கூற்றின்படி மகேந்திரமலையின் அடிவாரத்திலே கனக மயமான இலங்கை இருந்ததென அறிகின்றோம்.
எனவே மகேந்திரமலையைத் தன்னகத்தே கொண்டிருந்ததே ஈழம் என அறிக. சூரன் காலத்துக்கு முற்பட்ட வரலாறே சிவதருமோத்திரம் கூறுவது. ஆனால் சூரன் காலத்துக்கு முன் ஓர் பெருங் கடல் கோள் நடைபெற்று அதனால் மகேந்திர மலையின் பல பகுதிகள் கடலுள் அமிழ்ந்தி குமரிநாடு அழிந்துவிட அதன் அதி; உயர்ந்த பாகமாகிய வீரமகேந்திரம் உட்பட ஈழநாடே எஞ்சியிருந்ததாகும். இதனால் குமரிநாடு கடலுள் அமிழ்த்திய பெரிய கடல்கோள் சூரன் காலத்துக்கு முன் நிகழ்ந்ததென்பது துணிபு. அன்றியும் குமரிநாடு நாடாய் இருந்த காலத்து ஒன்றாய் இருந்த ஈழமும், இந்தியாவும் சூரன் ஆட்சி;காலத்தில் கடலால் பிரிக்கப்பட்டு வேறு வேறு நாடாயினமையே போதிய சான்றாகும். கந்தபுராணக் காலத்தில் இராமர் காலத்து அணை கட்டிச் சென்ற கடற் பகுதி காலால் நடந்து செல்லத்தக்க வகையில் இருந்ததன்றோ? ஏன் வீரவாகு தேவர் தூது சென்றபோது கந்தமாதனத்தில் இருந்தே கடலைத் தாண்டி வீரமகேந்திரம் சென்றார் எனக் கூறப்படுவதால் அறிக கந்தமாதனம் இராமர் அணை கட்டிச் சென்ற கடற்பகுதிக்கு அப்பால் தென்பாலுள்ளது.
எனவே குமரிநாடு கடலுள் அமிழ்ந்தியபின் உள்ள ஈழத்தின் ஆதிக் குடிகளே சூரன் ஆதியோர் என்பது துணிபாம் இக்குலத்தினர் அசுரர்என்றும், அவுணர் என்றும் வடமொழி நூல்கள் கூறுகின்றன. அக்கூற்றில் ஓர் வியப்பும் இல்லை@ வடமொழியாளராகிய ஆரியர்தம்மின்வேறாக அவர்களைச் சுட்டி அறியவேண்டி ஓர் காரணத்தை அடிப்படையாக வைத்து பெயரிட்டு அழைக்கலாயினர். ஆரியர்கள் தம்மைச் சுரர்எனக் கூறுவர். ஆகவே இவர்கள் தம்மின் வேறானவர் என்னும் கருத்தமைய அண்மைப் பொருள் தரும். “அ”வைத் தம் பெயரின் முன் நிறுவி அசுரர் என வழங்கலாயினர். ஆதலின் அஃது உயர்வு, தாழ்வு கருதி இடப்பட்ட பெயரன்று. ஆனால் வடமொழி நூல்களில் அவர்களின் மொழி பற்றியோ, இனம் பற்றியோ குறிப்பிடப்படவில்லை.
இனி அவுணர் என்ற சொல்லுக்கு வருவோம். இஃது ஓர் தூய தமிழ்த் தொடர். அ – உணர் எனப் பிரியும் உணர் என்பது உணர்வு என்னும் சொல்லின் கடைக் குறை. உணர்வு என்றால் அறிவு உணர்ச்சி என்பது பொருள். ‘அ’ அண்மைப் பொருள்தரும். ஆகவே அவ்வுணர் என்னும் தொடர் அறிவில்லாதவர்கள், உணர்ச்சியில்லாதவர்கள் எனப்பொருள் தருவதாகும். இவ் வழக்கு தமிழ் மக்களிடையே வாழ்ந்த அறிவுடைப் பெரியோரால் அவர்களது இரக்கப் பண்பில்லாத கொடூரத் தன்மையை உணர்ந்து இவர்கள் அறிவில்லாதவர்கள், உணர்ச்சி இல்லாதவர்கள் என்னும் கருத்தமைய அவுணர் என அழைக்கப்பட்டார்கள் அன்றோ? இன்றும் இவ் வழக்கு சாதாரண மக்களிடையே வழக்கில் நிலவி வருவதைக் காணலாம்.
சூரன் ஆதியோர் அகில உலகையும் ஒரு குடைக்கீழ் தனியரசு செய்த பெரு மன்னர் என்பது கந்தபுராண வரலாற்றில் இருந்து அறிகிறோம். அவர்களை அக்காலத்தில் எதிர்க்கக் கூடிய வேறு மன்னர் யாரும் இருக்கவில்லை என்பதும் வரலாற்றால் அறியலாம். ஆகையினால் அன்றோ கடவுளே மனித உருவில் தோன்றி அவர்களை அடக்கி ஏனையோர் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் வாழ வகை செய்தாரன்றோ? உலகம் முழுமையும் தனியரசு செய்யும் பெருமன்னர் தோன்றுவது வியப்பன்று. 18ம் 20ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் பிரித்தானிய அரசு உலகில் எதிர்ப்பார் யாரும் இன்றி உலகின் பெரும்பகுதியை ஆட்சி புரிந்து உலகத்திலே தலைமை தாங்கியமை நிகழ்காலச் சான்றாகும் அன்றோ?
இனிச் சூரன் ஆதியோர் வரலாறு ஆரியர் வாயினின்றும் வடமொழியில் காப்பிய ரூபமாக வெளிவந்த காரணத்தால் அக்காலத்து மக்கள் பெயர், மன்னர் பெயர், இடப் பெயர், குலப்பெயர் முதலியன யாவும் வடமொழி உருவில் திரியலாயின. இன்னும் அம்மன்னர்கள் மக்களது விருப்பம், ஆசாரம், பண்பாடு கலைச்;சிறப்பு, உருவ அழகு ஆதியன உள்ளவாறு கூறூமலும். திரித்தும் மறைத்தும் கூறுவராயினர்.
இறைவனே மனித உருவில் அவர்கள் நேரில் முன்னின்று அறப்போர் செய்து ஈற்றில் அவர்களுக்குத் தம்மை யாரென்று உணரச் செய்து தாமே அவர்களை ஆட்கொண்டார் என்றால் அவர்கள் தம் பெருமைதான் என்னே? ஈழம் உட்பட தமிழ்நாடெங்கணும் அன்று தொட்டு இன்றும் சூரன்போர் விழாக் கொண்டாடப்பட்டு வருதல் அவர்களின் பெருமைக்கோர் எடுத்துக்காட்டன்றோ? அவர்களே ஆதிகாலத்து வீரத் தமிழர்கள் என்பதும். சிவநெறிக்கோட்பாடு உடையவர்கள் என்பதும், உண்மையான சமயிகள் என்பதும் நன்குபுலனாகிறதன்றோ? அவர்களே தமிழ் மூதாதைகள் என்பதற்கு அவ்விழா ஈழ நாட்டிலும் தமிழ் நாட்டிலுமே நடைபெற்று வருதலே தக்க சான்றாகும் அன்றே? தமிழர் வாழும் நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் எங்கேனும் இவ்விழா கொண்டாடப்படுகின்றதா? இல்லையே. ஆதலின் ஈழநாட்டின் உலகப்பெரு மன்னர்களாய் ஆட்சி புரிந்தவர்கள் அவர்களே யாவர். இன்றைய தமிழ்க்குடிகளின் சமய ஒழுக்கங்களிலும், வாழ்க்கை நெறிகளிலும் பண்டைய சங்க இலக்கியங்களிலும் சூரன் ஆதியோர் வரலாறு புலப்படுத்தப்பட்டும் கர்ணபரம்பரையாகப்பேசப்பட்டு வருகின்றதன்றோ?
இன்னும் உலக மக்களிடையே எங்கும் இல்லாத ஒரு செய்தற்கரிய தனிச்சிறப்பு வாய்ந்த வழக்கம் தமிழ்ப்பெருங் குடி மக்களிடையே நிலவி வந்திருக்கின்றது. அது தான் உடன்கட்டை ஏறும் வழக்கம் அஃதாவது கணவன் உயிர் நீத்த காலத்து அவனது உடல்வேகும் ஈமத்தியிலே மனைவியானவள் தனது கணவன் உடலைக் கட்டித் தழுவி உடன் எரிந்து ஈருயிரும் ஒன்றுகூடி வாழ்தலாகும்.
இவ்வழக்கத்தைச் சூரன் ஆதியோர் வரலாற்றில் காண்கிறோம். சூரன், சிங்கன், தாரகன் இறந்ததும் அவர்தம் அன்பிற் கனிந்த கற்பின் மயமாக வாழ்ந்த பதுமகோமளை, விபுதை, சௌரி ஆகிய மூவரும் உடன்கட்டையேறித் தத்தம் கணவரைக் கூடினர்.
ஆகவே சிறிதேனும் ஐயத்துக்;கிடமின்றி நாம்தெளிவாக அறியக்கிடப்பது சூரன் முதலாம் முடியுடை மன்னர் மூவரும் அவர்தங் கிளையினரும் அவர்கள் காலத்து ஏனைய மக்களும் தொன்மை மிக்க தமிழ்ப் பெருங்குடிகள் என்பதே. ஆகவே அவர்கள் நாடு ஈழ மாதாவின் ஈழமே ஆதித் தமிழ்நாடு என்பதற்கு யாதேனும் ஐயப்பாடு உண்டா?
இதனால் ஈழநாட்டிற்கு உலகில் வேறெந்த நாட்டிற்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்புண்டு என்னை? ஒரு காலத்தில் ஈழநாடு சூரன் ஆதியோரின் தாய் நாடாகவும், ஆட்சி நகரும். புறநகருமாய் இருந்து உலகம் முழுமைக்கும் தலைமைதாங்கி விளங்கியதாகும்.
தமிழரும், திராவிடரும்
இனி வடநாட்டார் தமிழரைத் திராவிடர் எனவும் அழைத்தனர். இவ்வழக்கு மிகப்பிற்பட்ட கால வழக்காகும். திராவிடர் திராவிடம் என்றசொல் வழக்கு தமிழ் மொழியிலோ அன்றிப் பண்டைத் தமிழ் நூல்களிலே இருந்ததில்லை. திராவிடம் என்ற சொல் செந்தமிழ்நாடு, கொடுந்தமிழ் நாடு இரண்டையும் உள்ளடக்கிய பெயராகும். ஆனால் இச் சொல் எவ்வாறு உருப்பெற்றது என்பதற்குப் பலரும் பலவாறு கூறுப. பேச்சு மொழியால் வேறுபட்ட மக்கள் ஒருவர்மொழியை ஒருவர் உச்சரிக்குமிடத்து உச்சரிப்பில் ஒலியில் மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனால்தமிழ் என்ற சொல்லைத் தெளிவாக வடமொழியாளர் உச்சரிக்கமாட்டார்கள். இதுபற்றி முன்னர் பல இடங்களில் விளக்கியுள்ளேன். தமிழ் என்ற சொல்லை வடமொழியாளர் தமிளம் என்பர். தமிடம் எனவும் கூறுவர். அவ்வொலியே த்ரமிளம், த்ரமிடம் என வரலாயிற்று. அவ்வொலியை சீர்செய்வான் கருதிய வடமொழி வல்லுநர் வடமொழி மரபிற்கேற்ற திராவிடம் என அமைத்தனர் என்றே கொள்ளவேண்டும்.
ஆனால் ஓர் வியப்புக்குரிய விடயம்@ அஃது திராவிடம் என்னும் சொல்லே ‘தமிழ்’ என மருவி வரலாயிற்று என்பதே. திராவிடம் என்ற சொல் ஆரியர் வருகைக்குப் பின்னரே அவர்களால் வழங்கப்பட்டு வழக்கில் வந்த சொல்லாகும். தமிழ் என்னும் சொல்லோ வரலாற்றுக்கு எட்டாத காலம் தொடக்கம் தமிழர் இந்நாட்டில் உள்ள காலம் தொடக்கம் வழக்கில் இருக்கும் சொல்லாகும். அரியர்வருகைக்கு முன்னரே இந் நாட்டின் ஆதிக் குடிகளாக வாழ்ந்தவர்கள் தமிழர்களே என்பது முன்னர் விளக்கப்பட்டது. ஆதலின் திராவிடம் என்ற சொல்லே மருவித் தமிழ் என வந்தது எனக் கூறுதல் எவ்வாற்றானும் பொருந்தாத தொன்றாகும். திராவிடம் என்றசொல் தமிழர்வாய்வழியாகத் தமிழ் என மருவுமா? சிந்தியுங்கள். திராவிடம் என்ற சொல்லைத் தமிழர் நன்கு சொல்லும் ஆற்றல் உடையார். ஆதலின் அஃது எப்படித் தமிழ் எனத் திரியும். தமிழ் என்னும் சொல் ஆரியர் வாயில் மாற்றம் அடைதல் இயல்பு இவ்வாறு கூறுவார் கூற்று மகனுக்குத் தந்தை பிறந்தான் என முறை பிறழக் கூறும் முரண்பட்ட கூற்றாகும்.
திராவிடம் என்ற சொல் வழக்கு ‘குமாரில்பட்டர்’ என்பவரால் எடுத்தாளப்பட்டு அவர் காலத்தில் இருந்தே வழக்கில் வரலாயிற்று எனக்கூறுவாரும் உளர். குமாரில் பட்டர் என்பவர் “மரத்தின் கீழ் துதிப்பவர்கள்” என்னும் கருத்தை உள்ளடக்கி ஆக்கிக்கொண்ட வடமொழி எனக்கூறுப. அவ்வாறு அமையினும் அமையலாம். அவ்வாறாயின் குமாரில்பட்டர் காலத்துக்குப் பின்னரே அச் சொல் வழக்கில் வந்தாக வேண்டும்.
அஃதாவது எவ்வாறாயினும் இன்று தமிழர்களையும், தமிழ் நாட்டையும் திராவிடர், திராவிடம் எனக் கூறுவது அகில உலக வழக்காக மாறிவிட்டதன்றோ? இ14து அண்மைக்கால நிகழ்ச்சி. சேய்மைக்கா நிகழ்ச்சிகள் உருமாறுதலும், வலியிழத்தலும் நூதனம் அன்று.
எனவே ஆதித் தமிழ்ப் பழங்குடி மக்களை ஆரியர்கள் பின்னாடி வந்து தமிழ்ப் பகுதிகளில் குடியேறியும், நூல்கள் யாத்தும் தமிழ் இடங்களுக்குத் தம் மொழியில் புனைபெயர் சூட்டியும் தமிழினத்தாருக்குக் காலத்துக்குக் காலம் தன் மனம் போனவாறு புனை பெயர்களைச் சூட்டியும் இழிவுபடுத்தினர். ஆதலின் வடமொழியாளரால் தமிழ் இனத்துக்கோ, தமிழ் மொழிக்கோ தமிழ் நாட்டுக்கோ சூட்டப்பட்ட பெயர்கள் யாவும் பிற்கால வழக்காகும்.
சூரன், சிங்கன், தாரகன்
இனி அம் முடியுடை மன்னர் மூவரினதும் வரலாற்றையும், பெயர்களையும், துருவி ஆராயுமிடத்துச் சில உண்மைகளை அறிய முடியும். இவர்கள் வரலாற்றிலும், பெயர்களிலும் வடமொழி உருவில் திரிபுகள் ஏற்பட்டிருப்பினும் அவற்றை நுணுகி ஆராயுமிடத்து உண்மைகள் வெளிப்படாமல் இல்லை.
தாரகன் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இஃது ஓர் தூய தமிழ்மொழி. தார், அகன் ஆகிய இரு சொற்களாலாகிய தொடர் இவை தமிழ்மொழி ஆதலின் அவர்கள் தமிழர்கள். தமிழ் மொழியாளர் என்பதற்கு யாதேனும் ஆட்சேபனை இல்லை. தார் – என்பது மாலை. அகன் – என்பது மார்பை உடையவன் என்பது பொருள் – எனவே மாலையுடைய மார்பையுடையவன் என்பது தாரகன் என்ற சொல்தரும் பொருள் ஆதலின் அக்காரணம் பற்றி ஏற்பட்ட பெயர் ஆகலாம். ஆனால் அம் மலை ஒருவருக்கு இயற்கையாகவோ அன்றிச் செயற்கையாகவோ அமையலாம். கழுத்தின் கீழாக மார்பில் தோள்வரையும் வளைந்து மாலை போன்று மூன்று வரிகள் அமைந்திருப்பது உத்ம ஆடவரின் சாமுத்திரிகா லட்சணம். அவ்வகையில் இயற்கையாக மாலை போன்று மூன்று வரிகள் விளக்கமுற்ற மார்பினனாய் இருந்திருக்கலாம். இதற்குச் சான்றாக “வரையகன் மார்பிடை வரிகள் மூன்றுள” என்றும் “செம்பொறி வாங்கிய மொய்ம்பில்” என்றும் புலவர் பெருமக்கள் புகழ்ந்து எடுத்துக் கூறியிருப்பது காண்க.
அன்றி எப்போதும் பூமாலை மார்பில் அணிந்து கொள்ளும் அவாவினனாய் மார்பில் அணிந்திருக்கும் வழக்கமுடையவன் ஆன காரணத்தால் அப்பெயர் ஏற்பட்டிருத்தலுங் கூடும். இனி சிங்கன் என்ற பெயர்கள் வடமொழி உருவில்காணப்படினும் தமிழ் மரபை ஒட்டிய பெயர்கள் இருந்திருக்க வேண்டும். சிங்கமுகன் என்ற பெயர் அரிமுகன் என்று இருந்திருக்கலாம். அரி – என்றால் சிங்கம். சிங்கம் – வடமொழி, அரி – தமிழ்மொழி. அரி என்ற சிங்கத்தைக்குறிக்கும் சொல் வடமொழியில்இல்லை. வடமொழியில் கரி (ஹரி) என்ற சொல் உண்டு. அச்சொல் சிங்கத்தைக் குறிக்காது. திருமாலையே குறிக்கும். ஆதலின் அரி என்ற சொல்லை வடமொழியாளர் சிங்கம் எனக் கொண்டு சிங்கமுகன் என்றனர். அத்தோடு அவர்கள் குலப் பெயராய அசுரர் என்ற சொல்லையும் சேர்த்துச் சிங்க முகாசுரன் என அழைக்கலாயினர். இது அவர்களது மொழி பெயர்ப்பாகும்.
சூர் என்னும் அடியாகச் சூரன் என்னும் பெயர் வரலாயிற்று. சூர் என்பது அச்சம். எனவே இயல்பாகவே எவரும் அஞ்சத்தகுந்த எவர்க்கும் அச்சத்தை விளைவிக்கும் இயல்புடையவன் என்னும் கருத்தில் அப் பெயர் அமைந்துள்ளது. ஆதலின் எவ்வாற்றானும் அவர்கள் தென்னாட்டுப் பழங்குடி மக்கள் என்பதும் அவர்கள் தமிழர்களே என்பதும் ஐயமின்றித் தெளிவாம்.
இனி ஈழநாடே இவர்கள் தாய் நாடென்பது கண்டாம். இவர்களது ஆட்சி முடிவில் ஒரு பெருங்கடல் கோள் நடைபெற்றதாக வரலாறு கூறுகின்றது. ஆகவே சூரனது ஆட்சி நகர் வீரமகேந்திரமும், ஈழநாட்டில் வேறு சில பகுதிகளும் கடலுள் அமிழ்ந்தி மறைய ஏதுவானது. பின்னரும் அவர் கிளையினர் எஞ்சியிருந்தேயாக வேண்டும். இதனை சுதேசன் அவன் மகன் மாலியவான், குபேரன். இராவணன். விடணன் ஆகியோர் வரலாறு வலியுறுத்துவதாகும் சூரன் ஆட்சி;க்குப் பின்ஈழநாட்டைச் சுதேசன் ஆட்சி புரிந்தான். பின் மகன்மாலியவான் ஆட்சி செய்ததாக வரலாறு கொண்டு அறிகிறோம். இடையே வரலாற்றுக்குட்படாத மன்னர்களும் இருந்திருக்கலாம். மாலியாவன், மாலியவந்தன் எனவும் கூறப்படுவான். இவனை வெற்றி கொண்டு குபேரன் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தான். குபேரனை இராவணன் வென்றுஆட்சி புரியலாயினன். இவ்வாறுபுலோலி சதாவதானி நா. கதிரவேற்பிள்ளை அவர்கள் கூறுவர்.
ஆதலின் சூரன் ஆட்சி முடிவடைந்து நாடு அழிவெய்திய பின்னர் அவர் கிளையினர் இனப் பெருக்கமுற்றோ. பொருள் வளம் பெற்றோ, கலையறிவு பெற்றோ அவர்கள் வாழ்க்கையும், நாகரீகமும் வளர்வதற்குச்சில பல நூற்றாண்டுகள் சென்றிருக்கலாம். அவ்வாறு சென்றது போக இடையே ஒரு சில அரசர்களோ, சிற்றரசர்களோ வரலாற்றுக்கு அகப்படாமலும் ஆட்சி புரிந்திருக்கலாம்.
இவர்கள் பெயரையும் கவனத்துக்கு எடுப்போம். சுதேசன், மாலியவான், குபேரன், இராவணன் என்பன வடமொழிச் சொற்களா? தமிழ் மொழி;ச் சொற்களா? அன்றி இவை இரண்டும் அல்லாத வேற்றுமொழிச் சொற்களா? அறிமின்! இவை தமிழ்ச் சொற்களே என்பது சகசம். ஆதலின் தமிழ் மொழிப் பெயர்பூண்ட அவர்கள் தமிழரே யன்றி வேறு யார்?
பிற்காலத்தில் இவர்களையும், இவர்கள் கிளையினரையும் இயக்கர். நாகர் எனப்பெயர் சூட்டி அழைத்தார்கள். அல்லவா? இயக்கர், நாகர் என்ற இருசொற்களும் தமிழ் சொற்;கள் அன்று. இவை வடமொழிச் சொற்களேயன்றோ? ஆதலின் ஆரியர்களால் சூட்டப்பட்டு வழங்கிய காரணக்குறியே அவை என்பதில் ஆட்சேபனை இன்று. ஆதலின் ஆரியர் வருகைக்குப்பின் தென்னாட்டுப் பூர்வீகத் தமிழர்களைப் பற்றி இருவகையான வழக்கு இருந்திருக்கிறது. ஒன்று அசுரர் என்பது. மற்றையது இயக்கர். நாகர் இராக்கதர், தாசர் என்பது. சூரன் ஆதியோரை அசுரன் என்றழைக்கி;ன்றனர். இது முற்பட்ட வழக்கு. மாலியவான், குபேரன், இராவணன் ஆகியோரை இயக்கர் நாகர், இராக்கதர் என அழைத்தனர். தாசர் என்றது மிகப் பிற்பட்ட வழக்காகும். தமிழ்க்குடும்பங்களில் ஆரியருக்குப் பணி புரிந்தவர்களைத் தாசர் என அழைத்தனர். எனவே பெரிய கால இடைவெளிக்குப்பின் இம் முத்திறப் பெயர்களும் வௌ;வேறு காலகட்டங்களில் ஆரிய மக்களால் சூட்டப்பட்டு வழக்கில் வந்தனவாகும்.
ஆகவே இயக்கர், நாகர், இராக்கதர் என்னும் பெயர்கள் இராமாயண காலத்திலும், புத்த பிக்குகள் இலங்கைக்கு வந்த பின்னருமே வழக்கில் வலுவடைந்தனவாகும். புத்த பிக்குகள் இலங்கைக்கு வந்தபின் இலங்கையின் வரலாற்று ஆசிரியர்கள் பிக்குகளே.
இராமாயணம் முதன் முதல் காப்பிய உருவமாக வடமொழியில் பாடியவர் வான்மீகி முனிவர். இவரது காலம் கி. மு. 3ம் நூற்றாண்டு. புத்த மதமும் இலங்கைக்கு வந்த காலம் கி.மு. 307 ஆகும். இக்காலத்துக்கு முன் அப்பெயர்கள் வழக்கில் வந்திருக்குமானால் அவை வடநாட்டில் குடியமர்ந்த ஆரியர்கள் வழக்காதல் வேண்டும். எனவே ஆரியர் வருகைக்கு முன்இயக்கர், நாகர், இராக்கதர் என்ற வழக்கு இருக்கவே முடியாது.
எனவே இராமாயண காலத்தில் முதன்முதலாக ஆரிய மக்களால் ஈழநாட்டு மன்னன் இராவணனுக்கும் அவன் கிளையினருக்கும், மக்களுக்கும் இயக்கர், நாகர் என்ற பெயர்கள் சூட்டப்பட்டன என்பதே வலுவுடைத்து. அவ்வழக்கைப் பின்பற்றி இராமாயணநூல் செய்தாரும், பிற்காலம் இலங்கைப் பி;க்குகளும் அப்பெயர்களை வழங்கலாயினர் என்பதே உண்மை. ஆதலின் இப் பெயர்கள் ஆரியர் வருகைக்குப் பிற்பட்ட வழக்காகும்.
இனிஅவர்களை அவ்வாறு அழைத்தமைக்குரிய காரணத்தை ஆராய்வாம். ஈழநாட்டுப் பழங்குடி மக்களில் ஒரு குழுவினர் மந்திர வித்தையிற் தேர்ந்தவர்களாயும் மாயவத்தையிற் தேர்ந்தவர்களாயும், மாயவித்தைகள் செய்வதில் வல்லுநராயும் வாழ்ந்தனர். அக் காரணம்பற்றி அவர்கள் இயக்கர் எனப்பட்டனர் இவர்கள் அதர்வண, சாம வேதம் கூறும் மந்திரவித்தைப் பயிற்சியில் கைதேர்ந்தவர்கள் என்பது இராவணன் வரலாற்றில் இருந்தே அறிய முடிகின்றது.
மற்றக் குழுவினர் பாம்புவழிபாடு உடையவர்களாய் இருந்தார்கள். இவ்விரு இயல்புகளும் இன்றும் தமிழ் மக்களிடையே பாரம்பரியமாக நிலவி வருதலை அறிவோம். பாம்பு வழிபாடு பற்றி அது காரணமாக அவர்கள் நாகர் என அழைக்கப்பட்டார்கள. இயக்கர் பேய் வழிபாட்டுக்காரர் என்றும், நாகர் பாம்பு வழிபாட்டுக்காரர் என்றும் அவர்கள் கருதினார்கள். பண்டைத் தமிழ்மக்கள் சிவநெறிக்கோட்பாடு உடையவர்கள். அதனால் மறைமந்திரப் பயிற்சியும், செபதவமும் உடையவராயும், சிவனது பூணாரம் பாம்பாதலினாலும், குண்டலினி சத்தியே பாம்பாக உருவகம் செய்தனர் ஆதலினாலும் அத்தகைய சிவ வணக்கம் உடையவராயும் இருந்தார்கள். அதனை வெளிநோக்கில் பேய் ஆட்டம் என்றும், பாம்பு வணக்கம் என்றும் ஆரியர் கருதினர்.
இனி வியாசரால் வகுக்கப்பட்ட வேதவழக்கு இராவணன் காலத்தில் இருந்ததா? அப்படியாயின் வடமொழிப் பயிற்சி அவர்களிடம் இருந்ததா? என ஆசங்கை எழலாம் அல்லவா? ஆம், அவர்கள் வடமொழி தெரிந்தவர்களும் அல்லர்: வடமொழி வேதம் பயின்றவர்களும் அல்லர். தமிழ் மொழியிலேயே கடவுட் கொள்கை நூல்கள் இருந்தன. குரு சிஷ்ய முறைக்கல்வி நிலவியது. அவை மறை என அழைக்கப்பட்டன. ஆனால் தமிழ் மறை வடமொழி வேதங்களின் மொழிபெயர்ப்பு என எண்ணுதல் தவறு. மறைகள் செவிவழிக் கல்வியாகவே குரு, மாணவ பரம்பரையாகவே போற்றப்பட்டு வந்தன. அதனாலேயே அதனை எழுதாமறை எனத் தமிழர் கூறிவரலாயினர். அவற்றின் கருத்துக்கள் பண்டைத் தமிழ் நூல்களுள் பரவியுள்ளன. வடமொழி வேதமும், தமிழ்மறையும் ஒன்றில் இருந்து ஒன்று மொழி மாறினவல்ல. இரண்டும் இறைவன் திருவாக்கே. வேதத்தில் இருந்துதான் தமிழ்மறை பிறந்ததென்பதை வேதம் என்ற சொல்லின் மூலமும், மறை என்ற சொல்லின் மூலமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருத்தலைக் கொண்டு அப்படியல்ல எனத் துணியலாம். வேதம் என்ற சொல்லின் மூலம் ‘வித்’ என்பது வித் என்னும் சொல் அடியாகவே வேதம் என்ற சொல் பிறந்தது. மறை என்னும் சொல் மறைவு என்னும் சொல்லடியாகப் பிறந்தது. சூரன் காலத்தில் மாய வித்தைகள், மந்திர வித்தைகள், செப தவம் இருந்தனவே. அக்காலத்தில் வகுத்தளிக்கப்பட்ட வேதங்கள் இருந்ததில்லை. முத்தமிழ் நூல்கள், யோக நூல்கள், மந்திர நூல்கள், தத்துவ நூல்கள், மருத்துவ நூல்கள், சோதிட நூல்கள் ஆதியன இருந்தனவே. தொல்காப்பியம் இதனைத் தெளிபடுத்துகின்றது. அன்றி அகத்தியர் செய்த நூல்கள் பல இருந்தனவாகவும் அறிகிறோம். எனவே இவற்றிற்கெல்லாம் முத்து நூல் ஆகிய மறைகள் இருந்தன என்பது உண்மையே.
“மன்னமாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும்
உற்ற ஐம் முகங்களாற் பணித்தருளியும்”
எனக் கூறும் மாணி;க்கவாசகப் பெருமான் வாக்கை அறிந்து தெளிக. ஐந்து முனிவர்களாவர்: அகத்தியர், காசிபர் கௌதமர், பரத்துவாசர், கௌசிகர் ஆவர். இனி.
“நந்தம் பாடியில் நான்மறையோனாய்
அந்தமில் ஆரியனாய் அமர்ந்தருளியும்”
எனவும், “மகேந்திரமாமலை மகேந்திர கெற்பன்” என்றும் “மூவா நான்மறை முதல்வர்” எனவும் “மந்திரமாமலை மேயாய் போற்றி” எனவும் வரும் மாணிக்கவாசகர் பெருமான் அருள் வாக்கை அறிக.
மகேந்திரமலையாவது குமரி மலை என முன்னர் விளக்கினோம். எனவே இந்நிகழ்ச்சிகள் ஆரியர் வருகைக்கு முற்பட்;ட நிகழ்ச்சிகளாகும். வேதகாலத்துக்கு அப்பாற்பட்டது. எனவே குமரிநாடு கடல் கோட்படமுன் குமரிநாடு நிலைபெற்றிருந்த காலமாகும். ஆதலின் துவாபரயுக முற்பகுதியில் இவை நிகழ்ந்திருக்கலாம். ஆதலின் ஆகமத்தின் முற்பட்டனவாகிய மறைகளும், தமிழில், தமிழ் வழக்கில் இருந்தன என்பது உண்மையன்றோ?
ஆதலின் சூரன், மாலயவான், குபேரன், இராவணன் ஆகிய தொன்மை மிக்க தமிழ்ப் பெருங்குடி மக்கள் தமது கடவுட் கொள்கை நூலாகிய மறைவழி மந்திர சாமர்த்தியமும், பாம்பு வழிபாடும் உடையவர்களாய் வாழ்ந்துவந்தனர் என்பது இயல்பே, இன்னும் அவர்கள் ஒரே சிவவழிபாடு உடையவர்களாய் இருந்தமையும், அவர்களது தூய கடவுட் கொள்கையும் புலப்படுவதாகும். அவர்களைப் பின் வந்த ஆரியர்கள் ஏளனமாகப் பெயர் சூட்டி அழைத்தும் அவர்களுடைய திறமைகளையும், உயர்ந்த பண்புகளையும், குழிதோண்டிப் புதைத்தும், மிகமிகக் கீழான நிலையில் வைத்தும் விட்டார்கள்.
இனிக் குபேரன், மாலியவான், இராவணன், வீடணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை, மண்டோதரி ஆகிய இப் பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயர்கள் அன்றோ. இவைகள் யாவும் காரணக் குறிகளாகவே அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது.
குபேரன் என்பது கு + பேரன் எனப் பிரியும். ‘கு’ என்றால் பூமி. பேரன் என்பது பூமிக்கு உரிமை உடையவன் என்ற பொருளில் வந்தது. எனவே உலகாளும் அரசரைக் குறி;த்த அக்கால அரச மரபுப் பெயராக அமையலாம். அன்றி இயற் பெயராதலும் கூடும். இந்த இடத்தில் “பூபாலன்” என்ற சொல்லை நோக்குக. அது திருமாலைக் குறிக்கும் பெயராகும். திருமால் காத்தற் கடவுள், உலகத்தைக் காப்பவன். குபேரன் ப+மிக்குப் பேரன் என்றால் திருமால் உலகுக்குப் பாலன் என்றும் கூறப்பட்டதல்லவா? ஒப்புமை அறிக. இங்கே நாம் குவேனியை நினைவு கூருதல் வேண்டும். இப் பெண்மணி பற்றிப் பின்னர் விபரிப்போம்.
இனி. இராவணன் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இச் சொல் இரவு – வண்ணன் எனப் பிரியும். இதன் பொருள் இரவு வண்ணம் உடையவன் என்பது. எனவே கரிய நிறம் உடையவன் என்பது பொருள். இஃது இயற்பெயராதல் வேண்டும். அடுத்தவன் கும்பகர்ணன் என்பவன். இச்சொல் கும்பம் + கண்ணன் எனப் பிரியும். முதுகுப் புறத்தைக்கும்பம் எனக் கூறும் வழக்குண்டு. எனவே முதுகுப்புறம் மேலாகவும். கண்புறம் (முகம்) கீழாகவும் வைத்து நித்திரை செய்பவன் என்பது பொருள். அக் குறிகாரணக் குறியே. கும்பகர்ணனை நித்திரைப் பிரியன் என்றே அவன் வரலாறு கூறுகின்றது. அதிகம் நித்திரை செய்யும் சுபாவம் உடையவர்கள் நித்திரைப் பிரியர்கள். இவர்கள் முகங் குப்புறப்படுத்தே நித்திரை செய்தல் இயல்பல்லவா?
இனி வீடணனுக்கு வருவாம். இப்பெயர் வீடு + அணன் எனப் பிரியும் . எனவே வீட்டை அணவு பவன் என்பது பொருள். அஃதாவது வீடுபேற்றை வீட்டு நெறியை அணுகுபவன் ஆகும். ஆகவே கடவுட் கொள்கையைக் கடைப்பிடித்து இந்நெறி தவறாது வாழ்பவன் என்பது பெறப்படும். அவன் அறம் பேணி வாழ்ந்து மறம் புறங்கண்ட உரவோன். அவன் வரலாறு அஃதே.
இனிச் சூர்ப்பனகை என்ற பெயரை நோக்குவோம். இப் பெயர் சூர் – பல் – நகை எனப் பிரியும். இங்கு சூர் அச்சத்தைக் குறிப்பதாகும். பல், பல்வரிசையைக்குறிக்கும். நகை என்பது பல்வரிசையினின்றெழும் ஒலிச் சாயலைக்குறிக்கும். எனவே அச்சந்தரும் சிரிப்பினை உடையவள் என்பது அப்பெயர் தரும்பொருள். அவள் வரலாறும் அஃதே. இன்றும் சிலருடைய சிரிப்பு அதனைப் பார்ப்பவருக்கு அச்சத்தைத் தோற்றுவிக்கும் அன்றோ?
இனி, இராவணன் மனைவி கற்பின் செல்வி மண்டோ தரியின் பெயரை நோக்குவோம். இப் பெயர் மண்டு – ஒது – அரி எனப் பிரியும். மற்று மண்டு – உதரி எனவும் பிரியும். இஃது வடமொழித் தொடர்பு ஆதலின் இராவணன் காலம் ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலம் ஆதலினாலும் மண்டோதரி மாதோட்ட நாக அரசர் பரம்பரையில் உள்ள அரச கன்னிகை ஆனதினாலும் அவர்கள் தமிழ்ப் பெருங் குடிகள் ஆனதினாலும் முன்னைய பொருளே உண்மையானதாகும். அதன் பொருள் நெருங்கி ஒலிக்கும் சிலம்புகளை உடையவள் என்பது. காலில் பெண்கள் சிலம்பணியும்வழக்கம் தமிழ் இனத்தாருக்கே உரிய ஓர் தனிப்பட்ட வழக்காகும்.
இவ்வாறான தனித் தமிழ்ச் சொற்கள் பல வடமொழியாளர் வாயிற்பட்டுப் பலபடத் திரிந்து தமிழ் உருவம் மாறி வழங்கி வரலாயின. அன்றியும் இராவணனுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் இருந்த இயக்க, நாக அரசர் பெயர்களையும் ஒப்புநோக்கி அறிக. அவை வாணன், அவன் மகன் வழைவணன், அவன் மனைவி வாசமயிலை, மகன் பீலிவளை, விசயன் மனைவி குவேனி என்பன. இவற்றின் விளக்கம் வரிவஞ்சிவிடுகின்றோம். இவையனைத்தும் தமிழ்ப் பெயர்களே.
ஆதலின் சூரன் ஆட்சி;காலம் தொடக்கம் மாலியவான், குபேரன் இராவணன் காலம், அடுத்துக் குவேனி காலம், இறுதியாக ஈழ நாட்டைத் தாயகமாகக்கொண்டு உலகம் முழுமையும் ஓர் காலம் ஆட்சி செலுத்தியும், பின் நலிவெய்தித் தமது தாய்நாட்டை மாத்திரம் ஆட்சி புரிந்தும் வரலாயினர்.
பின்விசயன் வருகிறான். ஈழநாட்டு அரச பரம்பரையினரோடு மண உறவு கொண்டு ஒரினமாக வாழ்கிறான். அரசுரிமை பெற்று அரசாட்சி புரிகிறான். ஏனைய ஈழநாட்டு அரச பரம்பரையினர் ஆங்காங்கு சிற்றரசர்களாக ஆட்சி புரிந்தார்கள். எனவே கலிங்கநாட்டுத் தமிழரசர் பரம்பரையும் ஈழநாட்டுத் தமிழ் அரசர் பரம்பரையும் கலந்த கிளையினரே பேரரசாக ஈழநாட்டை ஆட்சிபுரியலாயினர் என்பதே வரலாற்றுண்மையாகும்.
இனி, இராவணன் காலத்தில் வரலாற்றில் மறைந்து கிடக்கும் சில விடயங்களைத் தெளிவுபடுத்துவோம். முதன் முதலாக இராமாயணத்தைக் காப்பியமாகப்பாடியவர் வான்மீகி முனிவர். அவர் பாடிய அந்நூலில் இராவணன் தசக்கிரீவன் எனப்படுகின்றான். இதனால் வான்மீகி முனிவர்பத்துத்தலை என்பதை விடுத்து பத்து முடியென முடிமேல் ஏற்றித் தசக்கிரீவன் என்றார். அதன் உண்மையான வரலாறு பத்து முடிகளை உடையவன் என்பதே. ஈண்டு யாம் உய்த்துணர்ந்து ஆராய வேண்டியது இராவணனது பத்துத் தலைகளிலும் பத்து முடிகள் இருந்தனவா? அன்றிப் பத்து முடிமன்னருக்கு இராவணன் தலைமை பூண்டிருந்தானா? என்பதே. நடுநின்று ஆராய்ந்து உண்மை கண்டு தெளிவாம்.
ஒருவன் பத்துத் தலைகளை உடையவனாய் இருந்தான் என்றால் உலகில்மக்கள் வரலாற்றுக்கு முரண்பாடான நிகழக் கூடாத பொருத்தமற்ற வியப்புக் கிடமான கூற்றாகும். மக்கள் வரலாற்றில் இராவணன் ஒருவனே அன்றி உலகில் எந்நாட்டிலாவது, எக்காலத்திலாவது மனிதன் ஒரு தலையைவிடப் பத்துத் தலைகளை உடையவனாய் இருந்தான் எனப் பேசப்பட்டதும் உண்டா? இல்லையே. அதனால் அக் கூற்று ஒர் புனைந்துரையாவதன்றி வேறல்ல. ஆதலின் தசக்கிரீவன் என்ற பெயருக்குத் தலையாகப் பொருள்கொள்வது தவறானதும், முரண்பட்டதும் நிகழக்கூடாததுமாகும். வான்மீகியார் தலைமேல் ஏற்றிக் கூறாது முடிமேல் ஏற்றிக்கூறியது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது. உண்மையறியாது. சிந்திக்காது சாதாரண மக்களிடையே ஏற்பட்ட வழக்கே பத்துத் தலை என்பது. எனவே தசக்கிரீவன் என்ற பெயர் காலப்போக்கில் சாதாரண மக்களிடையே பத்துத் தலைகளும் 20 கைகளும் உடைய ஒர் இராவணன் தோன்றினான். இனி இராவணனின் உண்மை வரலாற்றை அறிவாம்.
தசக்கிரிவம் – பத்து முடிகள், தசக்கீரீவன் – பத்து முடிகளை உடையவன். அஃதாவது தனது ஆணையின் கீழ் பத்து முடிமன்னர்களை அல்லது பத்து முடிமன்னர் நாடுகளை உடையவன் என்பதாம். இத்தகையோரை வடமொழி வழக்கில் சக்கரவர்த்தி எனக்கூறுவர். தமிழர் வழக்கில் சக்கரவர்த்தி எனக் கூறுவர். தமிழர் வழக்கில் மன்னாதி மன்னன் எனக்கூறுவர். ஒர் அரசன் பிறநாட்டு முடிமன்னரோடு போர் தொடுத்து வாகை சூடி அம்மன்னர் நாடுகளைத் தன் ஆணைக்கு உட்படுத்துதல் உண்டு. அப்படி எத்தனை மன்னர்களைத் தன் ஆணைக்கு உட்படுத்துகிறானோ அவன் அத்தனை முடியுடை மன்னன் எனப் பட்டப்பெயர் சூடுவான். இஃது தமிழ் மன்னர்மரபில் பண்டைக்காலத்தில் நடைபெற்ற வந்ததோர் வழக்குஅன்றியும் தன் ஆணைக்குள் அடங்கிய அரசர் எத்தனை பேரோ அத்தனை முடிகளைப் பொன்னாற் சமைத்து மார்பில் மாலையாக அணிந்து பட்டப் பெயர்தாங்குதலும் உண்டு.
எனவே இராவணன் பத்து முடி மன்னர்களைத் தன் ஆணைக்கு உட்படுத்தி தான் ஒப்பற்ற மன்னாதி மன்னன் ஆக ஆட்சி புரிந்த காரணத்தால் பத்து முடி இராவணன் ஆனான். அன்றிப் பத்து முடிகளின் பகுப்புஅமையச் செய்த ஒரே முடியினை இலச்சினையாக அணிந்திருத்தலும் சாலும். இவ்வுண்மையைப் பிற்காலத் தமிழ்நாட்டு அரசர் வரலாற்றில் காணலாம். பிற்காலச் சோழர்களில் 2ம் இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியில்,
“கங்கை கொண்ட சோழனைப் பொங்கிகல்
இரு முடிச் சோழன் என்றும் பெரு முரண்
தன் திருத் தம்பியர் தம்முள் வென்றிகொள்
மும்முடிச் சோழனைத் தெம் முனையடுதிறல்”
என வரும் கல்வெட்டுப் பகுதியினால் தமிழ் மன்னரிடையே இவ்வழக்கு இருந்தமை புலனாகும்.
கங்கைகொண்ட சோழனாகிய 1ம் இராசேந்திர சோழன் பாண்டி நாட்டையும், ஈழநாட்டையும் வென்று தன்னாணைக்குட்படுத்திய காரணத்தினால் இரு முடி மன்னருக்கு மன்னன் என்னும் கருத்தில் அவன் இருமுடிச் சோழன் என்னும் பட்டப்பெயர் பூண்டான். அன்றி அவனுக்கு இருதலைகளும் நான்கு கரங்களும் இருந்தனவா? இன்னும் இவன் தந்தை இராசராச சோழன், பாண்டிநாடு, சேரநாடு, ஈழநாடு மூன்றையும் வென்று தன்னாணை செலுத்திய காலத்தில் அவ்விருவரும் (தந்தையும், மகனும்) மும்முடிச் சோழர் எனப் பெயர் பூண்டனர். அக்காலத்தில் ஈழநாடு மும்முடிச் சோழ மண்டலம் எனவும் அழைக்கப்பட்டது.
இன்னும் 2ம் இராசேந்திரசோழன் ஆட்சிக் காலத்தில் மும்முடிச் சோழமண்டலம் எனப்பட்ட ஈழநாட்டை ஆட்சி புரிவதற்குத் தனதுதம்பி ஒருவனை அரச பிரதிநிதியாக அனுப்புகிறேன். அப்பொழுது அவனுக்கு மும்முடிச் சோழன் என்றே பட்டப்பெயர் வழங்கப்பட்டது.
எனவே உண்மை வரலாறு இப்பொழுது தெளிவாகிறது. இராவணன் பத்து முடிமன்னர்களை வென்று தனதாணைக்குட்படுத்தி ஆட்சிபுரிந்த காரணத்தால் பத்துத் தலை இராவணன் என்றும், தசக்கிரீவன் என்றும் பட்டப் பெயர் தாங்கி வீறுற்று, விழுப்பம் உற்று விளங்கினான் என்பதே தெளிவான உண்மையான சந்தேக விபரீதம் அற்ற வரலாறு ஆகும்.
இராவணன் சூரன் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்குப்பின் இடைச்சங்க காலத்தில் ஈழநாட்டை உலகில் ஒர்தனி நாயக நாடாக ஆட்சி செலுத்தி வந்தான் என அறியக்கிடக்கின்றது. இராவணன் தமிழ் நாட்டில் ஆதிக்கம் செலுத்தாதவாறு அகத்தியர் அடக்கினார் என வரலாறு கூறுகின்றது. அகத்தியரே இராமருக்கு காட்சி கொடுத்து அருள் செய்தார் என்றும் வரலாறு கூறுகின்றது. இராமர் இராவணன் காலத்தில் ஈழம் ஒர் தனித் தீவாக கடலால் பிரி;க்கப்பட்டிருந்ததாகும். எனவே குமரி நாடு கடல்வாய்ப்பட்டதன் பின்னரும் கடல்கோள்கள் நடைபெற்ற பின் உள்ள காலம் இராம இராவண காலமாகும்.
இங்கு அரசன் சண்முகனார் கூற்று ஒப்புநோக்கற் பாலது. அஃதாவது, “அனுமான் முதலிய குரங்கு வீரர் தெற்குநோக்கி வரும்போது கபாடபுரத்தைக் கண்டு போயினர் என வான்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டிருத்தலால் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. தலைச்சங்கத்தில் என்றும், இராமன் இலங்கை வந்தது இடைச் சங்கத்தில் என்றும் என்பது. இதனால் இராம, இராவண யுத்தம் நடைபெற்ற காலம் இடைச்சங்க காலமே என்பது தெளிவு. ஆதலின் இராவணன் காலமும் இடைச்சங்ககால முற்பகுதி யாகலாம். இறையனார் களவியிலுரையின் படி இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் நிலைபெற்றது. கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் நிலைபெற்றது. ஆகவே கடைச்சங்கம் கி. மு. 1600 ஆண்டுகள் (1850 – 250 கி.பி) நிலைபெற்றதாகும். அதற்குமுன் 3700 ஆண்டுகள் இடைச்சங்கம் ஆதலின் கி. மு. 3700 + 1600 – 5300 ஆண்டுகளாகும். இதில் கடல் கோளினால் அழிவெய்தி நாடு நன்னிலையடைய சில நூற்றாண்டுகள் செல்லலாம்.
இடைச்சங்கம் ஆரம்பிப்பதற்கு முன் நடைபெற்றது ஓர் கடல்கோள். கடைச்சங்க ஆரம்பத்துக்கு முன் நடைபெற்றது ஒர் கடல் கோள். ஆதலின் 5300 ஆண்டுகளில் 300 ஆண்டுகளையும் அழிவு ஆக்கத்தில் கழிந்த காலமாகக் கொண்டால் கி. மு. 5000 ஆண்டுகள்வரையில் இராம, இராவண காலம் எனக் கொள்ளலாம். அஃது கலியுக முற்பகுதியாகும் வரலாற்றாசிரியர்கள் கி.மு 2300 – 1950 என்பது ஐதீகம் என்பர்.
இராவணன் சிவன் ஒருவனையே முழுமுதற் கடவுளாக வணங்கிய ஓர் சிவபக்தன். தூய சைவ சமயக் கோட்பாடுடையவன். சிவபூசை செய்து வணங்கும் இயல்புடையவன். மரகதமலயனைய அவனது திருமேனியில் வெண்ணீற்றுப் பூச்சு எப்போதும் ஒளிவீசிப் பிரகாசிக்கும். திருநீற்றுப் பூச்சு அவனுக்கொரு அழகு சி;ன்னமாகும். இத்தகைய இராவணனுக்குப்பல ஆயிரம் வருடங்கள் பின்வந்த திருஞானசம்பந்த சுவாமிகள் அவனது சிவபக்தியையும் வீபூதிப் பூச்சையும் வியந்து “இராவணன் மேலது நீறு” எனப் பாராட்டினார் அன்றோ? இதனால் இராவணன் புகழ் தமிழ் நாட்டில் மங்கி மறையாது எல்லார் உள்ளத்தும் நிலவியது என்பது புலனாகிறது அன்றோ? அன்றியும் அவன் ஓர் யாழ் வல்லுநன்@ இசைப்பிரியன்@ வீரம் படைத்த திறலோன்@ அஞ்சா நெஞ்சம் படைத்தவன். ஆகா! இவன் தானா ஏழு மொழிபேசிய இயக்கன்? உணர்மின்!! குமரி மலையின் அடிவாரத்தில் உள்ளது ஈழம். அந்நாட்டுப் பூர்வீக அரசர்கள் சூரன், மாலியான். குபேரன், இராவணன், வீபீடணன் என்போர். மகேந்திரமலை உள்ள நாடு தமிழ் வழங்கும் நாடு. மகேந்திரமலை என்பது குமரிமலை. இதனைத் தொல்காப்பிய முகவுரை ஆசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே தமிழ் நாடாகிய ஈழநாட்டுத் தமிழ் மன்னர் வடமொழியாளரால் எலு பாஷையாளர் என்றும் இயக்கர், நாகர், அசுரர் என்றும் ஆரியரால் இருட்டிக்கப்பட்டனர். அன்றியும் அவர்கள் அவர்களை எவ்வளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ, அவர்கள் திறமையை மறைக்கமுடியுமோ அத்தனையும் செய்துள்ளார்கள். இதன் உண்மையறியா நம்மவர் சிலரும் அவர்கள் தமிழர் அல்லாத வேறோர் இனத்தினர் என்றும் தமிழ் மொழி அல்லாத எலுமொழி பேசினார்கள் என்றும் கருதும் அவர் அறியாமைக்கு நாம் இரங்காமல் இருக்கமுடியுமா? உணர்மின்! தெளிமின்!
3. விசயன் வருகை
விசயன் வருகையும், ஸ்ரீலங்காவும்:
ஈழநாட்டில் பூர்வகாலம் குவேனி காலத்தில் விசயன் வருகை ஆரம்பிக்கிறது. விசயன் வருகை இலங்கை வரலாற்றில் ஓர் தனிச் சிறப்புடையது. தற்கால இலங்கைக்கு அடிகோலியவன் அவனே. விசயனும் அவனுடைய நண்பர்களுமாக இலங்கைக்கு அகதிகளாக வந்து சேர்ந்தார்கள் என மகாவம்ச வரலாறு கூறுகின்றது. விசயனும் கூட்டாளிகளும் புத்தளத்துக்கணித்தாகவுள்ள தம்பண்ணை என்னும் இடத்திலேயே முதல் வந்து இறங்கினார்கள் என்றும் அவ் வரலாறே கூறுகின்றது. தட்சிண கைலாயபுராணம் புத்தளங் கரையில் தம்பன் (தம்பண்ணா) என்னும் பட்டணத்தைக் கட்டி, கோட்டையையும் கட்டினான் எனக் கூறும். த~;ண கைலாயபுராணம் பாடப்பட்டது. யாழ்ப்பாண அரசர்காலம் மகாவமிசக் கூற்றும் த~;ணகைலாயக் கூற்றும் ஒன்றாகவே அமைகின்றன. எனவே அவன் இறங்கிய இடத்தின் பெயர் தம்பண்ணை என்றும் அவ்விடத்திலேயே தம்பன் நகரை அமைத்தான் என்றும் அறியலாம்.
இனி யாழ்ப்பாண வைபவமாலை விசயன் வரலாறு கூறும்போது அவன் வந்திறங்கிய இடம் மாந்தை அல்லது கீரிமலை அல்லது சிங்கை நகர்என வழங்கும் வல்லிபுரத்திலுமாய் இருக்கலாம் எனக் கூறுகின்றது. அவ்வாறானால் சிங்கபுரத்திற்குத் தெற்கே 2, 2½ கல் தொலைவில் வரணிக் கிராமத்தில் தம்பான் என அழைக்கப்படும் ஒரு வட்டாரம் உண்டு. வல்லிபுரத்துக்கணித்தாயுள்ள சிங்கைநகர் என அழைக்கப்பட்ட இடமே விசயனுடன் வந்த ஏனையோர் தமக்கு உறைவிடமாக அமைத்துக்கொண்ட இடமாகும். இச் சிங்கைநகர் ஆட்சியும், பிரபல்யமும் கி. பி. 8ம் நூற்றாண்டுவரை இருந்திருக்கிறது. பின்னர் கலிங்க மாநகரில் இருந்து உச்சநிலையடைகிறது. எனவே சிங்கை நகர் ஆட்சி கலிங்கநாட்டுத் தமிழருடையது. அவர்கள் தமது தாய்நாட்டின் தலைநகர் சிங்கபுரத்தை நினைவுகூர்ந்து அமைந்த இடமே அதுவாகும். இதனால் விசயனும் கூட்டாளிமாரும் சிங்கபுரத்துக்கு மிகவும் அணித்தான துறைமுகமாகவுள்ள கற்கோவளக்கரையில் இறங்கியிருக்கலாம் என்பது பலவற்றானும் பொருத்தமுடைய தாகும். அன்றேல் வல்லிபுரத்துக்கணித்தாகச் சிங்கை நகரை அமைத்தமைக்கு வேறோர் காரணமும் கூறமுடியாது. புத்தளக்கரையில் இறங்கியது உண்மையானால் பல நூறு மைல்களுக்கப்பால் மேல் கரையினின்றும் கீழ்க்கரைக்கு வரவேண்டியதேன்? அங்கே சிங்கை நகரை அமைக்கவேண்டியதன் காரணம் என்ன? ஆதலின் புத்தளத்துக்கணித்தாய் இறங்கினர் என்;;பது அவர்களின் பின் உள்ள அவர்கள் வரலாற்றுக்கு முரண்பாடாகிறது. அன்றி விசயன் மாதோட்டப் பகுதியில் தம்பன்னா நகரைக் கட்டி ஆட்சி புரிந்தான் என்பதினாலும் அவ்வுண்மை புலப்படுகின்றது.
இனி வரணிக்கிராமத்திலுள்ள தம்பான் என்ற இடம் இன்றுபாரிய மேடாகவும், செம்மண்ணாகவும் இருக்கிறது. இவ்விடம் பிற்காலத்தில் சன்னாரிக்காடு என்றும், சங்கிலியாதிடல், சங்கிலித் தோட்டம் என்றும் வழங்கப்படுகின்றது. இவ்விடம் வரணிக் கிராமத்தில் ஓர் தனி வேறுபாடான இயற்கை அமைப்பைக் கொண்டுள்ளது. விஸ்தீரணம் சுமார் 15 ஏக்கர் வரையில் இருக்கும். ஆகையால் விசயன் அமைத்த நகர் இத் தம்பானோ எனவும் எண்ண இடமுண்டு சிங்கை நகருக்குத் தென்புறமாக 2, 2½ கல்தொலைவில் இத்தம்பான் என்ற இடம் உள்ளதால் விசயன் தனது ஆட்சி நகரை அங்கே அமைத்திருக்கலாம் அல்லவா? ஆதலின் இத் ‘தம்பான்’ என்ற பெயர் விசயன் தான் அமைத்த நகருக்குச் சூட்டிய பெயர் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.
இத் தம்பானின் மேற்குப்புறம் பரந்த வயல்வெளி, வயல் நிலப்பகுதியைப் பண்ணை என வழங்குதலும் உண்டு. ஆதலின் தம்பாணின் அயலில் உள்ள பண்ணை தம்பண்ணை எனப்படலாம். அத் தம்பாண்ணை என்னும் சொல் அக்காலத்தில் தம்பணை, தம்பளை என மருவி வழக்கில் வந்திருக்கலாம் தற்போது அவ் வயல்வெளி தம்பளை என்றே அழைக்கப்படுகின்றது.
ஆதலின் விசயனும் கூட்டாளிகளும் கற்கோவளத்தில் இறங்கி முதல் எல்லோரும் சிங்கை நகரை உறைவிடமாகக்கொண்டார்கள் என்றும் பின்னர் விசயன் தான் நகர் அமைத்தற்குரிய இடத்தைத் தெரிவு செய்து தம்பான் நகரை அமைத்தான் என்பதுமே பொருத்தமான வரலாறாகும். அன்றியும் விசயன் மணம்முடித்த பின்னரே, அரசுரிமை பெற்ற பின்னரே நகரமைத்தல் சாலும் எனவேதாம் முதற்றங்கிய வதிவிடமான சிங்கபுரத்துக்கு அண்மையிலேயே இவ்விடம் இருத்தல் அக்கொள்கைக்குச் சாலவும் பொருத்தமானதன்றோ?
இனி வரணியில் உள்ள தம்பான் என்ற இடமே விசயன் உறைவிடமாகக்கொண்டு அரசதானி அமைந்த இடம் என்பதற்கு இன்னும் பிற ஆதாரங்கள் உள.
இவ்வரணிக்கிராமத்துக்கு வடக்கேயும், தெற்கு தென்கிழக்கேயும் இயக்கர் எனப்படும் கிளையினர் வாழ்ந்தமைக்குச் சான்றுகள் உள. வடக்கே தற்போது அல்வாய் என அழைக்கப்படும் இடத்தில் ‘மாயக்கை’ என அழைக்கப்படும் ஓர் குறிப்பிட்ட இடம் உண்டு. மா – யக்கா – மாயக்கா. அது காலத்தில் மாயக்கை என வழங்கலாயிற்று. இவ்விடத்துக்கும் தம்பான் என்ற இடத்துக்கும் 4 கல் தொலைவு இருக்கும். மகாயக்கா என்பான் ஒருவன் அப்பகுதியில் ஓர் சிற்றரசனாய் இருந்திருக்கலாம். அங்கேஷ மகாயக்கா வாழ்ந்தமைக்குப் பல அறிகுறிகள் இன்றும் உள. வெள்ளம் தேங்கி நிற்கும் ஓர் பாரிய அகழி அது கடலைச் சென்றடைகிறது. அஃது தற்பொழுது தூர்ந்த நிலையில் தரிசாய்க் கிடக்கின்றது. மாரியில் வெள்ளம் தேங்கி நிற்கும். அவ்வகழியின் தென் அந்தம் பாரிய மலைப் பாறைகள் உள்ளே மேடையும், அம்மேட்டுப்பகுதியின் கீழ் ஒர் குகை வழியும் சிதைவுற்ற நிலையில் காணக் கிடக்கின்றன. இக் குகைவழி கீரிமலையைச் சென்றடைவதாகப் பேசிக்கொள்கிறார்கள். அம் மேட்டுப் பகுதியில் பல காவல் தெய்வங்களின் இருக்கைகள் பல இன்றும் காணக் கிடக்கின்றன. அவற்றிற்கு இன்றும் தீபமேற்றி தூபமிட்டு வணங்கும் வழக்கம் இருந்து வருகிறது. இனி அந்த அகழியின் ஓரமாக கிழக்குப் பாகமாக ஆச்சரியப்படத்தக்க கிணறு ஒன்று இருக்கிறது. அதன் மேற்பகுதி தற்காலம் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. எவ்வளவு நீர் வெளியே இருந்து உட்சென்றாலும் நீர்மட்டம் அணுவளவேனும் வேறுபடாது. இறைத்தாலும் அப்படியே. இத்தகைய பழமையை உணர்த்தும் இயல்புகள் பல அம்மாயக்கை என்னும் இடத்தில் இன்றும் காணலாம். அகழியின் ஓரத்தில் ஒர் விநாயகர் ஆலயமும் உள்ளது. அது மாயக்கைப் பிள்ளையார் கோயில் என்றே வழங்கப்பட்டு வருகிறது. இம் மாயக்கை என்னும் இடம் சிங்கை நகருக்கு மிக அண்மையில் உள்ளது.
இனித் தம்பான் என்ற இடத்துக்கு சுமார் 10 கல் தொலைவில் தென் கிழக்கே பளைக்கு அண்மையில் கண்டிறோட்டு ஊடறுத்துச் செல்கின்ற இயக்கச்சி என்னும் ஓர் இடம் இருக்கின்றது. மேற்கூறிய மாயக்கைக்கும் இயக்கச்சி;க்கும் இடையில் தான் தம்பான் என்ற இடம் இருக்கின்றது. இயக்கச்சி என்பது ஓர் இயக்கர் குலப் பெண்ணரசியின் ஆட்சிக்குட்பட்ட உறைவிடமாக இருக்கலாம். அப்பெண்ணரசி குவேனி தானோ எனவும் இடமுண்டு. எனவே தம்பான் என்ற இடமே விசயன் நிருமாணித்த நகராகலாம் என எண்ண இடம் உண்டாகிறது. மற்று அவ்விடத்துக்கு தம்பான் என்று வருவதற்கு காரணம் காண முடியவில்லை.
எவ்வாறாயினும் விசயன் புத்தளத்துக்கணித்தாகவோ அன்றி வல்லிபுரத்துக் கணித்தாகவோ இறங்கிக் கரைசேர்ந்தான் என்பதும், இயக்கர் குல அரச கன்னிகையாகிய குவேனியை மணம் முடித்தாள் என்பதும், அதனால் ஈழநாட்டை ஆளும் அரசுரிமையைப் பெற்றான் என்பதும் அதன்பின் தம்பான் நகரை ஆட்சி நகராக அமைத்துக்கொண்டான் என்பதும், இங்குவாழ்ந்த இயக்கர், நாகர் எனப் பிற்காலத்தில் அழைக்கப்பட்ட தமிழர்களோடு தானும் தமிழனாய் வாழ்ந்தான் என்பதும், அவர்கள் பண்பாடுகளையும், சமயக் கோட்பாடுகளையும் வேறுபாடின்றிக்கைக்கொண்டு வாழ்ந்தான் என்பதும் நாம் சந்தேக விபரீதமறத் தெரிந்து கொள்ளும் வரலாற்று உண்மைகளாகும் விசயனும் கலிங்க நாட்டுத் தமிழனும் சிவனெறிக் கோட்பாடுகளை உடையவனும் என்பதை மறுக்கமுடியாது. அன்றேல் விசயன் நாடாளும் உரிமை பெறுதற்கும் இங்குள்ளவரோடு கலந்து உறவாடி ஒரே சமயத்தினராய் வாழ்ந்து ஒரே கிளையினராய் வாழ்வதற்கும் வேறெந்தக் காரணமோ தொடர்போ கூறமுடியாது. போர் செய்து ஆளும் உரிமை பெற்றான் என்பதற்கு யாதுமொரு சான்றும் இல்லை. அப்படியொரு வரலாறே இல்லை. அன்றியும் அகதியாய் வந்த விசயனுக்கு ஆற்றல் ஏது?
விசயன் இலங்கைக்கு வந்த காலம் கி. மு. 543, 483, 445 எனப் பலபடக் கூறுவர். மகாவமிச வரலாறு கி. மு. 453 என்றே கூறும். ஆனால் அவனது வருகை ஆண்டும், ஆட்சியாண்டும் ஒரே ஆண்டாக இருப்பது பொருத்தம் அற்றதே அஃது 543 எனக் கொண்டால் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னாகும். சரியாகச் சொன்னால் இற்றைக்கு 2531 ஆண்டுகளாகும். கலியாண்டு 2533ம் ஆண்டாகும்.
இக்காலத்தைத் தென்இந்திய தமிழ்ச் சங்கங்களோடு இணைத்து ஒப்புநோக்கும்போது அது கடைச்சங்கம் இருந்த காலமாகும். கடைச்சங்கம் முடிபெய்தியது கி. பி 250. விசயன் வந்தது கி. மு. 543 ஆகவே கடைச்சங்கம் முடிவதற்கு முன் 793 வருடங்களுக்கு முன் வந்தவனாகும். ஆனால் கடைச்சங்கம் நிலவிய காலம் 1850 ஆண்டுகள் ஆகும். குவேனி வாழ்ந்த காலமும் அதுவேயாகும்.
இனிக் குவேனி என்ற பெயர் பற்றிச் சிந்திப்பாம். இவர்கள் பரம்பரையில் முன்னோன் ஒருவன் குபேரன் என்னும் பெயரோடு பேரரசனாய் ஆட்சி புரிந்தான் என்பது அப் பெயர்பற்றியும் முன்னர் விளக்கப்பட்டது. குவேனி என்னும் சொல் கு – வேனி எனப் பிரியும். ‘கு’ என்றால் பூமி. வேன் என்பது அதிகம் என்ற பொருளில் வரும். எனவே பூமியை அதிகம் உடையவள் குவேனி என்றாகும். அதனால் பூமி ஆளும் அரச பரம்பரையினள் குவேனி என்பது பெற்றாம். ஆதலின் அவள் ஈழநாட்டு அரசகன்னிகையே என்பது சங்கையறத் தெளிவாகிறது. இதற்குச் சான்றாக ‘வெனன்’ என ஒர் ஆண்பாற் பெயர் உள்ளது. அவன் ஒர் அரச பரம்பரையைச் சேர்ந்த அரசன் ஆவான். அவன் யார்? பிருது சக்கரவர்த்தியின் தந்தையாவான். எனவே வேனன் என்ற ஆண்பாற் சொல்லுக்குரிய பெண்பாற் சொல் ‘வேனி’ அல்லவா? ஆதலின் வேனன், வேனி என்ற பெயர்கள் அக்காலத்தில் அரச பரம்பரையினரிடத்தே வழக்கில் இருந்த பெயர்கள் என அறியக்கிடக்கின்றது. இச் சொற்கள் தற்போது வழக்கொழிந்தன.
குவேனி அரச பரம்பரையில் உள்ளவள் என்பது அகதியாக வந்த விசயனுக்கு அரசனாகும் உரிமை கிடைத் மையே சான்றாகுமன்றோ? அன்றியும் விசயன் ஓர் அரசிளங் குமாரன். விசயன் வந்த காலத்தில் ஈழநாட்டில் அரசும் இருந்தே ஆகவேண்டும். அரச பரம்பரையினரின் உறவும் உதவியும் இன்றி விசயன் அரசனாகவோ ஒரு முதல்வனாகவோ முன்னுக்கு வருதல் நிகழக்கூடியதா? அன்றியும் விசயன் ஓர் சாதாரண குடும்பத்தில், ஓர் ஏழைக்குடும்பத்தில், ஓர் அநாகரிகமான குடும்பத்தில் பெண்கொள்ள விரும்புவானா? அப்படியானால் அவன் பிரசைகள் குடும்பத்தில் ஒருவனாகவன்றோ இருப்பான். அவன் அரசனாவது எப்படி? சிந்தியுங்கள்.
அக்காலத்தில் இலங்கையின் சரித்திர கருத்தாக்களாக இருந்த பிக்குகள் ஈழநாட்டுத் தமிழரையும், அவர்கள் குல முறைகளையும், குவேனி ஆகிய பெண்மணியையும் இழித்துரைக்க வேண்டி அவர்கள் பெருமைகளை எல்லாம் மறைத்துரைக்கலாயினர் என்றே கொள்ளலாம். அல்லாமலும் விசயன் இலங்கைக்கு வந்து சுமார் 250 ஆண்டுகளின் பின்னரே பிக்குகள் முதன் முதல் இலங்கைக்கு வரலாயினர். இனி அவர்கள் மகாவமிச சரித்திரம் எழுதிய காலமும் மிகப் பிற்பட்டதே. அதனால் விசயன் வரலாறு அவர்களுக்குப் பழமையானதே. அதனாலும் வரலாற்றில் மாற்றம் ஏற்பட்டிருத்தல் கூடும். இனி அவர்கள் வரலாற்றையும் செவி வழிச் செய்தியாகவே அறிந்திருப்பார்கள் அன்றோ? அதில் மாற்றங்கள் ஏற்படுதல் சகசம்.
ஆதலின் ஈழநாட்டு அரச பரம்பரையினள் ஆகிய குவேனியை அரசிளங் குமாரனாகிய விசயன் மணம் முடித்தே அவர்களோடு உறவாடிக் கலந்தே ஈழநாட்டு அரசுரிமையைப் பெற்றான் என்பதே வரலாற்றுக்குப் பொருத்தமான நிகழக்கூடிய உண்மையாகும்.
இனி ஈழநாடும் இந்தியாவும் பூர்வகாலம் தொடக்கம் கலை, கலாசாரம், பண்பாடு கடவுட்கொள்கை என்பவற்றில் ஒரே தன்மையாகவே, ஒன்றாகவே இருந்து வருவதை வரலாறு கூறுகின்றது. நிகழ்காலமும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அதுவும் புத்தம் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலங்கையும் இந்தியாவும் ஒரே இனம், ஒரே மொழி, ஒரேமதம் உடையதாகவே இருந்தன. ஆகவே தமிழர் கலை, கலாச்சாரம் சிறந்தோங்கிய நாகரீகம் படைத்த கடைச்சங்கத்தில் அதுவும் பிற்கூறாகிய கி. மு. 543ல் தென்னாட்டில் அண்டை நாடாகிய ஈழநாட்டில் அநாகரீகமான காட்டுமுராண்டிகளாகவோ, வேறு மொழி பேசிய மக்களாகவோ இருக்கமுடியுமா? ஈழத்துப் பூதந்தேவனார் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் கடைச்சங்க காலத்தில் இருந்தவர் அன்றோ? அவர் பாடிய பாடல்கள் இன்றும் உள்ளன. ஈழநாட்டுப் புலவர் தமிழ்ச்சங்கததில் இருந்து செய்யுள் செய்தார் என்றால் அவர் எந்த இனத்தவரோ? இயக்கர், நாகர் என அழைக்கப்பட்ட ஈழநாட்டுத் தமிழர்களின் வேறானவரா? உண்மை அறிமின்!
இப்புலவர் பாண்டியன் பசும்பூட்சேய் என்பவனைப் பாடியுள்ளார். இப்பாண்டியன் கி. மு. 180 – 125 வரையில் இருந்தவன் இக்காலம் இலங்கையில் எல்லாளன் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றான். எனவே விசயன் வந்த காலத்தில் ஈழநாட்டு மக்கள் நாகரீகம் படைத்தவர்களும், அறிவுடைச் சான்றோரும், கவி பாடும் புலவர் பெருமக்களும், நாடாளும் அரசபரம்பரையினரும் ஆகச் சிறப்புடன் வாழ்ந்தார்கள் என்பது பெறப்படும். கல்வீடு கட்டி உப்பரிகைகளில் சகல சுகபோகங்களையும் அலுபவிக்கின்ற இக்காலத்திலும் குடிசைவீட்டில் வாழும் அநாகரீகமான அறிவில் குறைந்த மக்களும் இருக்கிறார்கள் அல்லவா?
ஈழநாட்டு மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாரதத்தில் நாகரீகம் படைத்த மக்களாகவே இருந்தார்கள் என்பதைப் பாரத வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. அருச்சுனன் ஈழநாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்த நாக கன்னிகை சித்திராங்கதை (அல்லிராணி)யைக் கண்டதும் அவள்மீது காதல்கொண்டு மணம் முடித்தான். அவள் வயிற்றில் பிறந்த மகன் சித்திராங்கதன். இவன்; ஈழநாட்டில் அரசனாயிருக்கும் போது அருச்சுனன் திக்கு விசயம் செய்கிறான். அப்பொழுது ஒருவரை ஒருவர் அறியாது போர் தொடுத்தனர். அப் போரில் சித்திராங்கதனே வெற்றி யீட்டுகிறான். இது ஈழநாட்டின் பாரதகால நிகழ்ச்சி. இது விசயன் வருகைக்குப் பலநூறு வருடங்களுக்கு முன்னாகும். இராவணன் காலத்துப் பின்னாகும். பாரதப்போர் நடைபெற்ற காலம் கி. மு. 1400 – 1500 இற்கும் இடையிலென ஆராய்ச்சியாளர் கூறுவர். இக்காலம் கடைச்சங்கத்தின் ஆரம்பகாலமாகும் எனலாம். விசயன் வருகைக்கு 1000 ஆண்டுகள் முன்னாகும்.
எனவே அக்காலத்தில் ஈழநாட்டு நாககன்னியை நாகரீகத்தில் சிறந்த வில்வீரனாகிய புருடோத்தமன் அருச்சுனன் கண்டு காதல் கொண்டு மணம் முடித்தான் என்றால் ஈழநாட்டு அருச்சுனனையே கவரத்தக்க உயர்நிலையில் இருந்ததென்பது அங்கை நெல்லி. அவள் ஓர் அரச கன்னிகை. அவள் பெயர் அல்லி என்பது. வடமொழியாளரால் பெயர்கள் உருத்திரிந்தன.
இவ்வாறு விசயன் வருவதற்கு 1000 ஆண்டுகள் முன்னதாக இத்துணைச் சிறப்புடன் வாழ்ந்த ஈழநாட்டு மக்கள் விசயன் வந்த காலத்தில் நாட்டு வேடரிலும் கேவலமாக வாழ்ந்தார்கள் எனக் கூறுவது உண்மையாகுமா? ஆதலின் அக்காலத்து வரலாறு எழுதிய புத்த பிக்குகள் இழித்துரைக்கும் நோக்கமாகவோ, அன்றி உண்மை அறியாமலோ கேள்வி மூலம் எழுதினார் என்றே கொள்ள வேண்டும்.
இயக்கர் என்றும் நாகர் என்றும் அழைக்கப்பட்ட தமிழ்ப் பழங்குடி மக்கள் ஈழநாடு முழுமையும், ஈழநாட்டின் வடமுனை தொடக்கம், தென்முனை ஈறாக வாழ்ந்த ஒரே இனத்தவர்களே ஆவர். அவர்களைத்தவிர அக்காலத்தில் வேறு எந்த இனமோ வாழவில்லை என்பது துணிபு. வடபகுதியில் வாழ்ந்தவர்கள் நாகர் எனப்பட்டார்கள். ஏனைய பகுதியில் வாழ்ந்தவர்கள் மிகுதியும் இயக்கர் எனப்பட்டார்கள்.
இனி இதற்கு ஆதாரமாக இருக்கிறது முஸ்லீம்கள் வரலாறு முதன் முதல் பந்துகாபயன் காலத்தில் அராபியர் ஆகிய முஸ்லீம்கள் வியாபார நோக்கமாக வந்து ஈழநாட்டில் குடியேறினார்கள். பின் தொடர்ந்து அராபியர் ஈழநாட்டில் குடியேறுவாராயினர். அவர்கள் தமது வியாபாரப் போக்குவரத்துக்கு வசதியாக ஈழநாட்டின் கரையோரப் பகுதிகளில் குடியேறினார்கள். மிகுதியும் யாழ்ப்பாணம், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை ஆதியாம் இடங்களில் குடியேறினார்கள். இவர்களுடைய சொந்தப் பேச்சு மொழி ‘அராபிக்’ ஆகும். ஆனால் இலங்கையில் குடியேறிய முஸ்லீம்கள் இன்று பேசும்மொழி தமிழ். இன்று அவர்களது தாய்மொழி தமிழே. என்ன காரணம்? ஈழநாடு முழுமையும் அவர்கள் வந்த காலத்தில் வழக்கில் இருந்த மொழி தமிழே. ஆதலின் அதனையே கற்று பேச ஆரம்பித்தனர் அல்லவா? அக்காலத்தில் சிங்களம் என்ற சொல்லே பிறக்கவில்லையன்றோ?
ஆதலின் சிங்களவர் என்ற ஓர் இனம் தோற்றுவதற்குரியவர்களாய் இருந்தவர்கள் இயக்கர். நாகர் எனப்பட்ட ஈழநாட்டுத் தமிழர்களேயாவர். விசயனும் அவனோடு வந்த 700 கூட்டாளிகள் மாத்திரம் அல்லர். அவர்கள் மணமுடித்துக் கொண்டது ஈழநாட்டுத் தமிழ்ப் பெண்மணிகளையே. சுருங்கக்கூறின் விசயனும் கூட்டாளிளும் ஈழநாட்டு மக்களோடு சங்கமமாயினர்.
இனி விசயன் காலம் தொடக்கம் சேர, சோழ, பாண்டி நாட்டு மக்களின் மணமுறைக் கலப்பும் குடியேற்றமும் நடைபெற்றமைக்கு வரலாறு உண்டு. இலங்கையின் கண்டி இரச்சியத்தின் கடைசி மன்னன் ஸ்ரீ வி;க்கிரம இராசசிங்கன் சேரநாட்டுப் பரம்பரையைச் சேர்ந்த தமிழனே. 1ம் கசபாகுவால் கி. பி. 2ம் நூற்றாண்டில் சிறையாகப் பிடிக்கப்பட்டு அழுத்தூர்க் கோறளை, அரிஸ்பற்று ஆகிய இடங்களில் குடியேற்றப்பட்டவர்கள் 12000 சோழநாட்டுத் தமிழர்கள். அன்றிக் காலத்துக்குக்காலம் இந்தியாவில் இருந்து தமிழர்கள் படையெடுப்புக் காலங்களில் ஈழநாட்டில் வந்து குடியேறியுள்ளார்கள். எனவே ஈழநாட்டில் இருந்த தமிழர்களும் கலிங்க நாட்டுத் தமிழர்களும், சேர, சோழ, பாண்டி நாட்டுத் தமிழர்களுமே இலங்கைவாழ் தமிழர்களாவர். முஸ்லீம்களை விட வேறு இனத்தினர் இலங்கையில் வாழ்ந்ததில்லை. ஆதலின் வட கீழ் மாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் இருந்த தமிழர்களே சிங்களவர் என அழைக்கப்பட்டார்கள். வரலாறு இதுவே.
எனவே சிங்களம் என்றோர் மொழியையும், அது காரணமாகச் சிங்களவர் என்றோர் இனத்தையும் தோற்றுவித்ததற்குக் காரணமாய் இருந்தது புத்த மதமேயாகும். புத்த மதம் இலங்கையில் வேரூன்றாது இருந்தால் இன்று இலங்கை முழுமையும் ஒரே தமிழ்இனமும், ஒரே இந்துமதமுமே இருக்கும். உதாரணமாகப் புத்த மதம் நிலை பெறாத வட கீழ்ப் பகுதியை எடுத்துக்கொள்வோம். இன்றும் தமிழும் சைவசமயமுமே நிலவுகின்றதன்றோ?
சிங்கள மொழியின் சொற்கள் யாவும் தமிழும் பாளி மொழிச் சொற்களுமேயாகும். பிற்காலத்தில் வேறுமொழிச் சொற்களும் அற்பமாக விரவியிருக்கலாம். சிங்களம் ஓர் கலப்புமொழி. ஓர் தனித்துவமான இயற்கை மொழியன்று. இடையில் ஆக்கப்பட்டமொழி. அஃது இருபாஷையாளரின் பேச்சுக் கலப்பால் ஏற்பட்ட மொழியாகும். உலகில் சிங்களம் என ஓர் மொழியோ, இனமோ கிடையாது. இலங்கையிலும் புத்த சமயம் வந்துசில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே தோன்றி வழக்கில் வரலாயிற்று. இம் மொழியின் ஆக்கத்துக்குக் காரணகருத்தாக்கள் புத்தபிக்குகளே யாவர்.
இனி விசயன் வருகையில் இருந்து மேற்போந்த உண்மைகளை அறிவாம்.
விசயன் கி;. மு. 543ல் ஈழநாட்டிற்கு வந்தான். ஈழ நாட்டுப் பெண் குவேனியை மணம் முடித்தான். தம்பன்னா அல்லது தம்பான் என்னும் நகரை அமைத்தான். எங்கே? ஈழநாட்டின் வடபகுதியில் அஃது புத்தளத்துக்கு அணித்தாக எனவும் கற்கோவளத்துக்கு அணித்தாக எனவும் வரலாறு கூறும். விசயன் கலிங்கநாட்டுத் தமிழன். ஈழநாட்டுத் தமிழ் மக்களோடு மண உறவு கொண்டு உறவாடிக் கலந்து ஓர் இனம் ஒரே கிளையினராக வாழ்ந்தான். 35 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவன் பேசிய மொழி தமிழே. கைக்கொண்டு ஒழுகிய சமயம் இந்து சமயமே. சிங்கள வரலாற்றின்படி பாண்டிநாட்டுப் பெண்ணை இரண்டாவதாக மணந்தான். என்றாலும் பேசிய மொழி தமிழே. விசயன் காலத்தில் சிங்களம் என்ற ஒரு சொல்லே இல்லை.
புத்த மதம் இலங்கைக்கு வந்தது தேவநம்பியதீசன் காலத்தில் கி;. மு. 307ல் இவன் மூத்த சிவனின் மகன். மூத்த சிவன் விசயனின் தம்பி ஆகிய சமித்து என்பவனின் மகன் பரந்துவாசனின் மகள் உன்மாத சித்திரையின் மகன் பந்துகாபயனின் மகனாவான். தீசன் விசயனுக்கு சுமார்236 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தான்.
பந்துகாபயன் காலத்தில் அவன் பரமசமயிகள் 500க்கு அதிகமானோருக்கு இல்லிடம் கொடுத்து உதவினான் என வரலாறு கூறுகின்றது. அந்த 500 பேரும் முஸ்லீம்களாகவே இருக்க வேண்டும். அக்காலம் கிறீஸ்தவம் உதயமாகவில்லை. புத்த மதமும் இலங்கைக்கு வரவில்லை. அப்போது ஈழநாட்டுச் சமயம் சிவசமயமே. ஆதலின் முஸ்லீம்களே அக்கால வியாபாரிகள் ஆதலின் அவர்களே குடியேறியவர்கள் ஆதல் வேண்டும். சங்க இலக்கியங்கள் அவர்களை யவ்வனர் எனக் கூறும்.
அனுராதபுரியை முதன் முதல் அரசதானி ஆக்கியவன் பந்துகாபயன் என்பவனே. எனவே அவனுக்கு முன்னுள்ளோரின் ஆட்சி நகர்மன்னார், யாழ்ப்பாணப் பகுதியை அடுத்தே இருந்ததாகும். பந்து காபயன் ஆட்சித் தொடக்கத்துக்கு முன் 106 ஆண்டுகள் காலம் ஈழநாட்டின் ஆட்சி வடபகுதியிலேயே இருந்திருக்கின்றன.
புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியவன் அசோக மன்னன் ஆவான். அசோகனின் மகன் மிகுந்தனே புத்தபிக்குவாக இலங்கைக்கு வந்தவன். அசோகன் காலம் கி. மு. 272 – 232 ஆகும். 274 – 237@ 264 – 226 என்றும் கூறுவர். இது எவ்வாறாய் இருப்பினும் கி;. மு. 272 – 232 என வைத்துக்கொள்ளலாம். அசோகன் அரசனானதும் மண்ணாசை மேற்கொண்டு பல போர்களை நடத்தி வெற்றியீட்டிய பின்னர் போரில் இறந்தவர்களை நினைத்து மனதில் இரக்கம் மேலிட்டவனாய் போரை வெறுத்து மனமாற்றங் கொண்டான். அப்பொழுதுதான் அன்பு வழியை அடிப்படையாகக்கொண்ட புத்தர் கோட்பாட்டில் ஆர்வங்கொண்டு அம் மதத்தைத் தழுவி நாடு முழுமையும் பரப்பினான். இது அசோகன் வரலாறு. அப்படியானால் அவன் ஆட்சி ஆண்டு 40ல் பின் உள்ள 20 ஆண்டுகளே அவன் புத்த மதம் தழுவிய, பரப்பிய காலம் எனக் கொள்ளலாம்.
எனவே அசோகன் கி. மு. 272ல் ஆட்சிக்கு வருகிறான். அவன் ஆட்சி பிற்பகுதி கி. மு. 250 வரையில் ஆகும். ஆனால் மகாவமிசம் கி.; மு. 307ல் மிகுந்தன் இலங்கைக்கு வந்தான் எனக் கூறுகிறது. இக் கூற்று அசோகன் ஆட்சிக்கு முன்னரே மிகுந்தன் வந்தான் எனக் கொள்ளக் கிடக்கின்றது. இதற்கு மகாவமிசக் கூற்றே அன்றி வேறுஆதாரம் இல்லை. கி.மு 307 – கி மு 207 என இருக்குமானால் எவ்வாற்றானும் பொருந்துவதாகும்.
விசயன் இலங்கைக்கு வந்த காலம் கி. மு. 543. அவனது ஆட்சியாண்டின் ஆரம்பம் கி. மு. 543ஆகும். இதுவும் வரலாற்றுப் பொருத்தமற்ற கூற்றேயாகும். ஏன்? அகதியாய் வந்த விசயன் தான் வந்த ஆண்டிலேயே நகர்அமைத்து ஆட்சி தொடங்குகிறான் என்பது நிகழக் கூடியதா? ஆதலின் விசயன் ஆட்சிக்காலம் கி. மு. 543க்குப் பிற்பட்டதாக வேண்டும். கி.; மு. 443 ஆதல் பொருத்தமுடையதாகும். அவன் மணம் முடித்து உறவாடி அரசுரிமை பெற காலம் வேண்;டும் அல்லவா? விசயன் வருகை கி. மு. 483, 445 எனவும் கூறுவர். ஆதலின் கி. மு. 483 என்பது சாலவும் பொருத்தமுடைய கூற்றாகும்.
இனித் தேவநம்பியதீசனுக்கு முன் 17 ஆண்டுகள் ஆட்சியின்றி இருந்த காலமாகும் என மகாவமிசம் கூறும். இக் கூற்று விசயன் பரம்பரையினது ஆட்சி இன்மையையே குறிப்பதாகும். அஃதாவது பேரரசு இன்றி இருந்த காலம் எனக் கொள்ளலாம். எனவே ஆங்காங்கு நாக அரச பரம்பரையினரின் சிற்றரசுகள் இருந்தே ஆகவேண்டும்.
இனி விசயன் பரம்பரையினரின் ஆட்சி வரலாறு மகாவமிசம் என்றும் சுலு வமிசம் என்றும் இரு பகுதிகளாகக் கூறப்பட்டுள்ளது. மகாவமிச மன்னர்கள் விசயன் தொடக்கம் மகாசேனன் முடிய ஐம்பத்திருவர்ஆவர். அவர்களது ஆட்சிக்காலம் கி. மு. 543 – கி. பி 304 வரையுள்ள 847 ஆண்டுகளாகும். இக்காலத்தில் அரசின்றி இருந்த காலம் 17 ஆண்டுகள். இக்கால எல்லையுள் தமிழர்கள் ஆட்சியும் இடையிடையே நடைபெற்றுள்ளது. அஃது வருமாறு:
1. சேனன், கூத்திகன் இவர்கள் இருவரும் சேரநாட்டுத் தமிழர்கள். இவர்கள் சூரத்தீசன் காலத்தில் துரகவீரருக்குத் தலைவராய் இருந்து அரசைக் கைப்பற்றினர். 22 வருடம் இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தனர். கி. மு. 237 – 215 வரை.
2. எல்லாளன். இவன் சோழநாட்டு அரசகுமாரன். கி. மு. 205 தொடக்கம் 161 வரையுள்ள 44 ஆண்டுகள் இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தான். இவன் புத்தபிக்குகளாலும் போற்றப்பட்டவன். நீதி தவறாது செங்கோலாட்சி புரிந்தான். இவனை வென்று ஆட்சி செய்தவன் துட்டகைமுனு என்பவன். எல்லாளனின் நீதி தவறாமையையும் மொழி, இன, மத வேறுபாடற்ற நடுநிலைமையையும் பாராட்டி அவனது உடலை சகல இராச மரியாதைகளோடும் அடக்கஞ் செய்துஅவ்விடத்தில் எல்லாளன் சமாதி ஒன்று கட்டுவித்தான். சமாதி களுக்கு முன்பாகப் போக்குவரத்துச் செய்பவர்கள் உரிய மரியாதையும் வணக்கமும் செய்ய வேண்டுமென்று ஆணை பிறப்பித்தான்.
3. சோழநாட்டுத் தமிழர் எழுவர். அவர்கள்: புலகத்தான், பாகியன், பனைய மாறன், பிலியமாறன். தாட்டியன் முதலியோர் இருவர் பெயர் வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை. இவர்கள் ஒருவர் பின் ஒருவராய் கி. மு. 103 – 89 முடிய 14 ஆண்டுகள் இலங்கை முழுமையும் ஆட்சி புரிந்தனர். பெயர்குறிப்பிடாத இருவரும் புத்தரின் பாத்திரத்தைக் கையாடிக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றனர் என வரலாறு கூறும்.
4. சுப்பன்: இவன் தத்தன் என்பவனின் மகன். இவன் இலங்கைத் தமிழன். கி. பி. 60 – 66 வரை 6 வருடம் ஆட்சி புரிந்தான்.
5. கி.பி. 113ல் சோழியர் படை இலங்கையின் வடமேற்குப் பகுதியில் இறங்கி (இது மாதோட்டமாக இருக்கலாம்) எதிர்பார் யாருமின்றி நாட்டைக் கொள்ளை அடித்து 12000 சிங்களவரையும் சிறைப்பிடித்துச் சென்றனர். இக்காலத்திலேதான் சிங்களவர் என்ற நாமம் பெறப்படுகின்றது.
எனவே மகாவமிச ஆட்சி 830ஆண்டுகள் நடைபெற்றுள்ளது. அதில் 86 ஆண்டுகள் தமிழர்கள் ஆட்சி நடைபெற்றுள்ளது. அரசின்றி இருந்த காலம் 17 ஆண்டுகள். ஆகவே மகாவமிச மன்னர் ஆட்சி 727 ஆண்டுகளே நடைபெற்றுள்ளது.
இனி மகாவமிச மன்னர்களின் வரலாற்றை ஆதாரமாகக்கொண்டு சில வரலாற்றுண்மைகளை அறிவாம். விசயனுக்குப்பின் அவனது பெருமகன் பந்துவாசன் ஆட்சி புரிந்தான். விசயன் அரசதானி தம்பன்னா, பந்துவாசன் மகன் அபயனது அரசதானி உபத்தீசனு வரை இதை முதல் அரசதானியாக்கியவன் விசயனின் முதன் மந்திரி உபத்தீசன் என்பவன். இவன் பந்துவாசன் வருவதற்று இடையில் விசயன் காலஞ்சென்றமையால் மாதோட்டத்தில் உபத்தீசநுவரையென தனது பெயரில் அரசதானியை அமைத்தான். இவன் கி. மு. 504 – 474 வரை ஆட்சி புரிந்தான். உபத் தீசன் ஆகிய இவன் ஈழநாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்த நாகர் குலத்தவன் ஆதல் வேண்டும்.
பந்துவாசன் மகள் உன்மாதசித்திரையின் மகனே பந்துகாபயன். இவன் தந்தை, பந்துவாசனின் மைத்துனன் திக்காமன் என்பவனின் மகன் திக்காமினி என்பவன். இவனே முதன் முதல் அனுராதபுரத்தை அரசதானி ஆக்கியவன். எனவே கி. மு. 543 தொடக்கம் பந்துகாபயன் ஆட்சி யெய்திய காலம் (கி. மு. 437) வரை 106 ஆண்டுகள் இலங்கையின் அரசதானி வட பகுதியிலேயே இருந்தது பின்னர் காலக்கிரமத்தில் இலங்கையின் அரசதானி தெற்கே நகரத் தொடங்கியது. இன்னும்விசயனின் பெறாமகன் பந்து வாசன் பரம்பரையில் வந்த அபயன், மூத்தசிவன், மகாசிவன், திரிகண்டசிவன், மகாநாதன், மகாநாமன். தீசன், உத்தியன், மகாசிவன், சூரத்தீசன், சிங்கவல்லி, ஈழநாகன், குலநாகன், குடநாகன், ஸ்ரீநாகன், அபயநாகன், இந்துவிசயன், மகாசேனன் என்னும் மகாவமிசமன்னர்களின் நாமாவளியே அவர்களும் ஈழநாட்டு அரச பரம்பரையினரும்ஒன்று பட்டு ஒரே கிளையினராய் வாழ்ந்தார்கள் என்பதை வலியுறுத்துவதாகும்.
புத்தமதம் தீசன் காலத்தில் வந்தபோதிலும் மகாவமிச மன்னரின் தமிழ் வழக்கும் இந்து சமயக் கோட்பாடும் மாறவில்லை என்பதே உண்மை. மகாவமிச காலம் தமிழும் இந்துமதமும் போற்றப்பட்டே வந்திருக்கிறது.
இன்னும் மகாநாகன் என்பவன் உறுகுணைப்பகுதிக்குச் சிற்றரசனாய் இருந்த காலத்தில் தான் புதிதாக அமைத்துக் கொண்ட நகருக்கு மாகமம் என்றே பெயரிட்டான் அன்றே: மாகமம் என்பது தமிழ் மொழி. மகாநாகனின் மகன் இயற்றால் தீசன் என்பவன் அரசனானபோது தான் அமைத்த நகருக்கு கழனியா எனப் பெயரிட்டான். கழனி தமிழ் மொழியன்றோ? அப்பகுதியை நீர்ப்பாய்ச்சும் ஆறும், களனியாறு என்றே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விடங்கள் தென்னிலங்கையிலேயே உள்ளன. இனித் தென்னிலங்கையின் தென்கோடியில் காலவரையறைக்கெட்டாத கந்தன் ஆலயம் உள்ளது. இது விசயன் வருகைக்குப் பின் வந்ததா? புத்த மதக் கோட்பாட்டில் முருக வணக்கம் உள்ளதா?
மகாநாகன் மூத்தசிவனின் மகன். தேவநம்பியதீசனின் உடன் பிறந்த தம்பி. இவன் மரபில் வந்தவனே துட்டகைமுனு. மகாநாகன் மகன் இயற்றால்தீசன் அவன் மக்கள் கோதாபயன், கழனிதீசன் என்போர். கோதாபயன் மகன் கவந்தீசன். கவந்தீசன் மக்களே துட்டகைமுனுவும், சதாதீசனும், துட்டகைமுனு காலம் கி. மு. 161 – 137 ஆகும். புத்த பிக்குகள் வந்த காலம் கி. மு. 307 ஆகும். புத்த பிக்குகள் வந்த காலம் கி. மு. 307 ஆகும். எனவே புத்த சமய வருகைக்கும், துட்டகைமுனு ஆட்சிக்கும் இடைப்பட்ட காலம் 146 ஆண்டுகளாகும். துட்டகைமுனு காலத்திலேயே சிங்களவர் என்ற வழக்கும். தமிழர், சிங்களவர் என்ற துவேஷ உணர்ச்சியும் ஏற்பட்டதை அறிகிறோம். அதற்குக் காரணகர்த்தா துட்டகைமுனுவே. எனவே புத்த மதம் வந்த சுமார் 100 ஆண்டுகளில் ஓர் புதுமொழி ஆக்கம் பெற்று வழக்கில் வருதல் கூடும். அது பேச்சிலும், எழுத்திலும் வலுவடைய இன்னும் காலம் வேண்டும். இலங்கையின் இனப் பிளவுக்கு மூல காரணம் புத்த மதமே.
வாலகம்பாகு மன்னன் காலத்தில் கி. மு. 103ல் தமிழர்படை எழுச்சி நடைபெற்றது. அப்போழுது அரசன் குடும்பத்தோடு தமிழருக்கு அஞ்சிக் காட்டில் ஒளித்தான் என்றும், அப்பொழுது தனசிவன் என்னும் தமிழ்ப் பிரபு அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்குப் பேருதவியாக இருந்தான் என்றும் மகாவமிச வரலாறே கூறுகின்றது. எனவே வாலகம்பாகு காலத்தில் கி. மு. 103ல் அனுராதபுரத்துச் சூழல் முழுமையும் தமிழர்களே பேசப்படுகிறார்கள். வாலகம்பாகுவுக்கு ஒருசிங்களவன் உதவி கிடைக்கவில்லையே. சிங்களச் சூழலில் புகலிடம் பெறவில்லையே? ஏன்? காரணம்; என்ன? அக்காலத்தில் புத்த மதம் வந்த பின் சிங்களம் என்ற பெயர் ஆக்கப்பட்டு அச் சொல் அரசர்களிடையேயும், பிக்குகளிடையேயும் நாம ரூபத்தில் இருந்ததென்றே கொள்ள வேண்டும். மக்கள் இடையே இனவேறுபாடு தோற்றாத காலம் என்றே கொள்ள வேண்டும். எனவே மக்கள் தமிழர்கள் ஆகவே வாழ்ந்தார்கள்@ தமிழ் மொழியையே பேசினார்கள். அதுவே வழக்கில் இருந்தது என்பது பெறப்படும்.
இனி, மாதகல் மயில்வாகனப்புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலைக் கூற்றின்படி விசயன் அரசனானதும் ஈழநாட்டின் நான்கு திக்குகளிலும் சைவ ஆலயங்களைப் புதிதாகக் கட்டுவித்தும் பழைய ஆலயங்களைப் புதுப்பித்தும் திருப்பணி வேலைகள் செய்வித்தான் என அறிகிறோம். அவன்செய்த திருப்பணி வேலைகள் வருமாறு:
குணதிசையில் அமைந்திருந்த பழமைவாய்ந்த திருக்கோணேஸ்வரத்தைப் புதுக்குவித்தான். குடபால் மாதோட்டத்தில் பழுதுற்றுக் கிடந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தைப் புதுக்குவித்தான். தென்பால் மாத்துறையில் சந்திரசேகரேஸ்வரன் கோயிலை எழுப்பினான். வடபால் கீரிமலையில் திருத்தம்பலேஸ்வரன் – திருத்தம்பலேஸ்வரி கோவில்களையும் கட்டுவித்தான். கதிரை ஆண்டவன் கோயில் இருந்த இடம் இன்று கோயிற்கடவை என வழங்கப்பட்டு வருகிறது. அதுவே மாருதப்புரவீகவல்லிக்குப் பின்னர் மாவிட்டபுரம் என்னும் பெயரைப் பெற்றது.
வடபால் அமைந்த கோயில்களுக்குப் பூசை செய்தவற்காக காசியில் இருந்து நீலகண்ட ஆசிரியன் மகன் வாமதேவாசிரியனையும், மனைவி விசாலாட்சி அம்மாளையும் அழைப்பித்துப் பூசைக்கு வைத்தான் என அவ் வரலாறு கூறும். இதனாலும் விசயன் சிவநெறிக் கோட்பாடுடையவன் என்பதும், தமிழன் என்பதும் புலப்படுகின்றதன்னறோ?
சிவநெறிக் கோட்பாடுடையவர்கள் தமிழர்கள். எக்காரியமும் ஆரம்பிக்கும் பொழுது தாம் வழிபடும் கடவுளை வணங்கியும், கடவுட் பணிகள் செய்தும் ஆரம்பிப்பது கடவுள் நம்பிக்கைக்குப் பாத்திரமான பாரம்பரிய மரபு. இனிப் புதியவனாய் வந்து அரசுரிமை பெற்ற விசயனுக்கு மக்களைத் தம்வசப்படுத்த வேண்டியது முக்கியமானது ஆதலினாலும் அவ்வாறு ஆலயத் திருப்பணியைச் செய்வித்தான் என்பது பொருத்தமானதே வேறோர் இனமோ, மதமோ அக்காலத்தில் இருந்தன என்பதற்கு ஓர் வரலாறோ வேறு எந்தவிதமான சான்றுகளோ யாதும் இல்லை. இருக்குமாயின் உரைமின்!
யாழ்ப்பாண வைபவமாலைக்குப் பின்னர் எழுதப்பட்ட யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர் முதலியார் அவர்கள் கூற்றும் ஒருசில வேறுபாடுகளைத் தவிர ஒன்றாகவே அமைந்துள்ளன.
ஆனால் அரசைப் பெற்று, ஆலயத் திருப்பணிகள் செய்து அதன் பின்னர் விசயன் குவேனியை மணம் முடித்தான் என்ற முதலியார் கூற்று நடைமுறைக்கு எட்டுணையும் பொருத்தமற்றதாகும். அதற்குத் தகுந்த ஆதாரமும் இன்று.
அகதியாய் வந்த அரசிளங் குமரனாகிய விசயன் ஈழநாட்டு அரச பரம்பரையில் உள்ள அரச கன்னிகை குவேனியை மணம் முடித்து அதனால் அரசுரிமை பெற்று அதன் பின்னர் ஆலயத்திருப்பணிகள் செய்தான் என்பதே எவ்வாற்றானும் பொருத்தமுடைய வரலாறாகும். இதனால் விசயன் பரம்பரையில் வந்த பின்னுள்ள அரசர்களும் புத்த சமயம் வந்த பின்னரும் சிவ சமயக் கோட்பாடுகளைக்;;; கைவிட்டதில்லை. இன்றும் புத்த சமயிகளாய் இருக்கும் சிங்கள மக்களிடையே பிள்ளையார் வணக்கம், முருகவணக்கம், கண்ணகி வணக்கம் காணப்படுகின்றதன்றோ?
1ம் கசபாகு மன்னனின் வரலாறு அதனை உறுதிப்படுத்துகின்றது. இவன் துட்டகைமுனுவின் தம்பி சதாதீசன் மகனான லஜ்ஜீதீசன் பரம்பரையில் வந்தவன். கி. பி 113ல் ஆட்சிக்கு வந்தவன். 22 வருடம் ஆட்சி புரிந்தான். இவன் காலத்திலே இந்தியாவில் சேர நாட்டை ஆட்சி புரிந்தவன் சேரன் செங்குட்டுவன் ஆவான். இவன் காலத்திலேயே கண்ணகி வரலாறு நிகழ்ந்தது. கண்ணகியின் கற்பின் மகிமையை புலவர் சீத்தலைச் சாத்தனார் வாயிலாக அறிந்து கண்ணகிக்குக் கோயில் எடுக்கக் கருதினான். அதனால் வடநாட்டு கோயில் எடுக்கக் கருதினான். அதனால் வடநாட்டு ஆரிய நகரை வென்று இயமம் சென்று இமயத்தில் கல்லெடுத்து கங்கையிலே நீராட்டி ஆலயம் எழுப்பி கண்ணகி சிலையைப் பிரதிட்டை செய்து விழாக் கொண்டாடினான்.
அப்போது 1ம் கசபாகுவும் சேரநாடு சென்று விழாவிற் கலந்து கொண்டான் எனச் சிலப்பதிகாரம் வரந்தரு காதையில் ‘கடல் சூழிலங்கைக் கயவாகு வேந்தனும்’ எனக் கூறப்பட்டிருத்தலைக் கொண்டு அறியலாம். பின் கயவாகு தன்னாட்டில் கண்ணகிக்கு ஆங்காங்கு ஆலயம் எழுப்பி விழாவெடுத்த வரலாற்றை சிலப்பதிகாரம் உரைபெற கட்டுரை தெளிவாகக் கூறுகின்றது. அது வருமாறு:
“அது கேட்டு கடல்சூழிலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்டம் முந்துறத் தாங்கு, அரந்தை கெடுத்து வரம் தரும் இவளென ஆடித் திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக் கோள் பன்முறை எடுப்ப மழை வீற்றிருந்து வளம் பல பெருகிப் பிழையா விழையள் நாடாயிற்று” என்பது, இலங்கையில் இன்று நிலவி வரும் கண்ணகி கோவில்கள் கயபாகு காலத்திலேயே அவன் விருப்பப்படி ஆரம்பிக்கப்பட்டு அன்று தொட்டு விழாக் கொண்டாடி வணங்கப்பட்டு வருகின்றன என்பது புலனாகும்.
சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் புத்தபிக்குகள் ஆனதினாலே விசயன் வரலாற்றில் அவன் செய்த ஆலயத் திருப்பணி வேலைகளைக்கூறாது மறைத்தும், குவேனியின் வரலாற்றை இழித்தும் கூறியதோடு கயவாகுவின் வரலாற்றில் அவன் சேரநாடு சென்று கண்ணகி விழாவிற் கலந்து கொண்டமையும் இலங்கையில் கண்ணகி வணக்கத்தை ஏற்படுத்தியமையையும் மூடிமறைக்கலாயினர். இப்போ நாம் அறியக்கூடிய வரலாற்றுண்மைகள் பின்வருவனவாகும்.
அவை விசயன் வருகைக்கு முன் ஈழநாட்டு அரச பரம்பரையினரே ஆட்சிபுரிந்தனர் என்பது விசயன் ஈழநாட்டு அரச பரம்பரையில் மணம் முடித்து அரசுரிமை பெற்று அட்சி செய்தான் என்பதும், விசயன் பரம்பரையும் ஈழநாட்டு அரச பரம்பரையும் கலந்த கிளையினரே இலங்கையின் பேரரசாக முறையே ஆட்சிபுரியலாயினர் என்பதும் ஈழநாட்டின் அரசபரம்பரையில் அவர்கள் கலப்பில்லாத ஏனையோர் சிற்றரசர்கள் ஆகவும், மந்திரிகள் ஆகவும் வேறு உயர் பதவி உடையவர்கள் ஆகவும் இருந்து ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள் என்பதுமாகும்.
4. படை எழுச்சிகளும் விளைவும்
புத்த மதம் வந்து வலுப்பெற்ற பின்னர் சிங்களம் என்றொரு மொழியும் வழக்கில் வந்தபின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்கள் காலக்கிரமத்தில் வேறோர் தனி இனமாக மாறினர். அவர்களே சிங்களவர் என்போர்.
புத்த மதத்தை ஏற்காது தமது பாரம்பரியமான இந்து மதத்தையே தழுவியர்கள் இந்துக்கள் என்றும், தமிழர்கள் என்றும் வேறாகப் பிரித்துக் காணப்பட்டனர். எனவே ஈழம் முழுமையும் பரந்திருந்து வாழ்;ந்த தமிழர். தமிழர்என்றும், சிங்களவர் என்றும் இரு பிரிவாயினர். இனி புத்த மதத்தினர் ஆகிய சிங்களவர் மத்தியில் வாழ்ந்த இந்து சமயத் தமிழர்களும் காலப்போக்கில் சிங்களவராக மாறிவிட்டார்கள். அதனால் வட கீழ்ப் பகுதி தவிர்ந்த இலங்கையின் ஏனைய இடங்களில் வாழ்ந்தோர் அனைவரும் ஒரே சமுதாயம் ஆயினர் சிங்கள மொழியும், புத்த மதமும் ஈழநாட்டில் அனுரதபுரி தொடக்கம் தெற்கு, தென்மேற்கு நோக்கியே வளர்வதாயிற்று. வரலாறே சான்று. அங்ஙனம் அப்பகுதிகள் வளர்ச்சியடைந்தமைக்குக் காரணம் வடகீழ்ப்பகுதி தவிர்ந்த இடத்தில் வாழ்ந்;த மக்கள் அக்காலத்தில் நாகரீகத்தில், கலாச்சாரத்தில் உறுதியான நிலைப்பாடின்மையே. அதனால் பிக்குகள் தம் எண்ணப்படியே ஓர் புதிய மொழியையும் புத்த மதத்தையும், அவர்களிடையே நிலைக்கச் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. அன்றியும் அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்றவாறு மக்கள் பின்பற்றுவாராயினர்.
வடகீழ்ப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கலை, கலாச்சாரம், மொழிப்பற்று, மதப்பற்று உடையவர்களாய் இருந்ததினால் புத்த பிக்குகளின் ஏமாற்றம் பலிக்கவில்லை. அன்றியும் தாய் நாடாகிய இந்தியாவின் உறவு வடக்குக் கிழக்குப் பகுதி மக்களுக்குத் தவிர்க்க முடியாததாக இன்றியமையாது வேண்டப்பட்டது. இதனாலும் இப்பகுதி மக்களின் மொழி, மதம், கலை, கலாச்சாரம், பண்பாடு என்பவை போற்றிப் பாதுகாக்கப்பட்டன. எனவே பூர்வகாலம் தொட்டு இன்றுவரையும் ஈழநாட்டின் வடகீழ்ப் பகுதிகளே ஒரே நிலையில் மாற்றம் இன்றித் தமிழும் மதமும் நிலவிவரும்பகுதிகளாகும்.
இவ்வாறு ஈழநாட்டு மக்கள் இரு வேறினமாகப் பிரிந்ததினாலும், ஆட்சி அதிகாரம் புத்த மதத்தினர் பால் இருந்ததினாலும் காலக்கிரமத்தில் போட்டிப் பூசல்கள் ஏற்படலாயின. பாரம்பரியமாகத் தமிழ் இந்து மதக் கோட்பாடே உள்ள இந்தியாவுக்கும், ஈழநாட்டில் பிறிதோர் மொழியும் பிறிதோர் மதமும் வளர்ச்சியடைவதும். தமிழ் மொழிக்கும், இந்து மதத்துக்கும் இடையூறு விளைவிப்பதும் சகிக்கமுடியாத வெறுப்பு உணர்ச்சியை உண்டாக்கியது. இலங்கையின் வட கீழ்ப்பகுதி மக்களுக்கு அதிகமான வெறுப்புணர்ச்சி யையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியது.
அதனால் அடிக்கடி இந்தியப்படை எழுச்சிகளும், ஆட்சியும் நிகழ்வதாயிற்று. ஆனால் இந்தியப் படையெழுச்சிகளுக்கு அடிகோலி வைத்தவனும் சூரத்தீசன் என்னும் மன்னனே. இவ்வரசன் புத்த சமய கருமங்களில் ஈடுபட்டானே ஒழிய அரச கருமங்களில் கருத்தும் செயற்பாடும் இல்லாதவனாய் இருந்தான். அதனால் ஆங்காங்கு சிற்றரசுகள் தோன்றலாயின. இந்நிலைமையை மாற்றி தனது ஆட்சியை உறுதிப்படுத்த எண்ணினான். அதனால் இந்தியாவில் இருந்து சேரநாட்டுத் தமிழர் சேனன், கூத்திகன் இருவரையும் அழைத்து துரக சேனைக்குத் தளபதியாக வைத்திருந்தான். அவர்கள் இலங்கை அரசின் பலவீனத்தை அறிந்து சூரதீசனைக் கொன்று ஒருவர்பின் ஒருவராக 22 வருடம் இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தார்கள். இங்கே கூறப்பட்ட சேனன், கூத்திகன் இருவரும் சாதரண தமிழ் மக்கள் எனக் கருத முடியாது. இவர்கள் சேர அரசர் பரம்பரையில் உள்ளவர்கள் ஆதல் வேண்டும். அன்றேல் ஆளுமை ஆற்றல் எவ்வாறு உண்டாகும்? இவர்களது 22 வருட ஆட்சிப் பெறுபேறு யாதும் கூறாமை ஒர் இருட்டிப் பேயாகும். இவர்கள் இருவர் ஒரு அரசனைக் கொன்ற ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என்றால் இவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்திருக்க வேண்டும். ஆதலின் மிகுதியும் தமிழர் ஆதிக்கம் அக்காலத்தில் இருந்ததென்பது புலனாகிறது. இத்தகைய ஆதரவே படை எழுச்சிகளுக்கு எல்லாம் சாதகமாக இருந்ததென்பது வெளிப்படை. படை எழுச்சிகள் யாவும் சிங்கள நாட்டையும். அரசையும், மதத்தையும், சிங்கள மக்களையுமே பாதித்ததென்பது வரலாறு கொண்டே அறியலாம்.
எனவே இந்தியப் படையெழுச்சிகளுக்கு இலங்கைவாழ் தமிழர்கள் சாதகமாக இருந்தார்கள் என்பதும், இந்தியப் படை எழுச்சியாளர்களும் இலங்கைவாழ் தமிழர்களுக்குச் சாதகமாகவே இருந்தார்கள் என்பதும் வரலாறு உணர்த்தும் உண்மை. இனி. இந்தியர்களின் ஒரு நோக்கம் இலங்கையில் குடியேறுவதுமாகும்.
சேனன், கூத்திகன் ஆட்சி, புத்தமதம் இலங்கைக்கு வந்து 70 வருடங்களின் பின்னரே கி. மு. 237 தொடக்கம் ஆரம்பிக்கிறது. இவர்களது ஆட்சி முடிவில் 10 வருடம் நீங்கலாக 1ம் படையெழுச்சி நடைபெறுகிறது. இப்படையெழுச்சிக்கு மூலகாரணம் சேனன். கூத்திகன் ஆட்சி முடிபே. அசேலன் சேனன், கூத்திகனைக்கொன்று அரசைக் கைப்பற்றுகிறான். பின்னர் மலையாளத் தமிழர் (சேர நாட்டினர்) எல்லாளன் என்னும் சோழ அரச குமாரனைத் தலைமையாகக் கொண்டு பெரும்படை திரட்டி அசேலனைக்கொன்று அரசைக் கைப்பற்றினர். எல்லாளன் கி. மு. 205 தொடக்கம் 161 வரை 44 வருடம் இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தான். எனவே கி. மு. 237 தொடக்கம் கி. மு. 161 வரை 76 வருடங்களில் 10 வருடம் கழிய மிகுதி 66 வருடம் இந்தியத் தமிழர் ஆட்சி நடைபெற்றிருப்பதை அறியலாம். இந்த 66 வருடம் இந்தியத் தமிழர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து தமிழர்கள் இலங்கையில் குடியேறாமல் இருக்க முடியுமா? அவர்கள் ஆட்சி நகர் அனுராதபுரமே ஆதலின் அனுராதபுரத்திலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் இந்தியத் தமிழர்களே வாழ்ந்தார்கள் என்றே கருத வேண்டும். இராசரட்டை முழுமையும் இலங்கை இந்தியத் தமிழர் ஆதிக்கமே வேரூன்றி இருந்தது. இதனை உறுதிப்படுத்துகிறது சிங்கள மக்களின் வரலாறு. என்ன? சிங்கள மக்களின் ஆட்சியும், வாழ்க்கையும் அனுராதபுரத்தை விடுத்து தெற்கு, தென்மேற்கு நோக்கித் தமக்குப் பாதுகாப்புக் கருதி மலை சூழ்ந்த பகுதிகளுக்கு நகர ஆரம்பித்தனர் அன்றோ?
எனவே அனுராதபுரத்திலும் சுற்று வட்டாரங்களிலும் ஏன்? இராசரட்டை முழுமையும் அன்று வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இவர்கள் பரம்பரையினர் இன்று எங்கே? எல்லாளன் ஆட்சிக்குப்பின் கி. மு. 161 முதல் கி. பி 726 வரை அனுராதபுரி ஆட்சி நிலவியுள்ளது. இக் காலத்தில் வடகீழ்ப் பகுதி தவிர்ந்த இராசரட்டைப் பகுதியில் வாழ்ந்த இலங்கை இந்தியத் தமிழர்கள் புத்த சமயத்தை மேற்கொண்டு புத்த சமயிகளாக மாறி ஏனைய புத்த சமய மக்களோடு ஒன்றி இணைந்து சிங்களப் பெயர் பெற்றனர் என்றேகருத வேண்டும். அன்றேல் அவர்கள்நிலை என்ன? குடி பெயர்ந்தமைக்கு வரலாறு இல்லை.
புத்த மதம் இலங்கையில் உதயமானது கி. மு. 307 ஆகும். விசயன் பரம்பரையினரின் ஆட்சி பிணக்கின்றி நடைபெற்ற காலம் சூரதீசன் ஆட்சிமுடிபு கி. மு. 237 வரையில் ஆகும். இக்கால இடைவெளி 70 ஆண்டுகள். புத்த மதம் வருவதற்கு முன் விசயன் ஆட்சி கி. மு. 543 தொடக்கம் புத்த மதம் இலங்கையில் உதயமாகிய கி.மு 307 வரை உள்ள காலம் 236 ஆண்டுகளும் தமிழ் நாட்டு மொழியாகவும், சிவ நெறியே மக்களாலும், அரச பரம்பரையினராலும் கைக்கொள்ளப்பட்டு வந்த மதமாகவும் இருந்தது. இதற்குச் சான்று தேவையில்லை. அப்போது சிங்களம் என்று ஒரு மொழியோ, பெயரோ பிறக்கவேயில்லை. உலக அகராதியில் கி. மு. 307க்கு முன் அப்படியொரு சொல்லே இல்லை. அப் பெயரில் ஒரு இனமும் கிடையாது.
இனி, சூரத்தீசன் ஆட்சி முடிபு கி. மு. 237க்குப் பின் இடையே ஒர்பத்தாண்டு இடைவெளி போக கி. மு. 161வரை 66 ஆண்டுகள் இந்தியத் தமிழ் மன்னர் ஆட்சியே நடைபெற்றிருந்தது. எனவே விசயன் ஆட்சி கி. மு. 543 தொடக்கம் தமிழ் மன்னர் ஆட்சி முடிபு கி. மு. 161 வரையுள்ள 382 ஆண்டுகள் இலங்கையின் ஒரே மொழி தமிழே@ சமயம் சிவ நெறியே.
கி. மு. 307க்குப்பின் புத்த மதம் வந்தபின்னர் துட்டகைமுனு காலம் கி;. மு. 137 வரையுள்ள காலம் சிங்களம் என்னும் ஒர் பெயரும், மொழியும் கருக் கொண்டு வளர்ந்த காலமாகக் கொள்ளலாம். சுமார் 25 ஆண்டு காலம். எனவே துட்டகைமுனு காலம் வரையிலும் தமிழே நாட்டு மொழியாக நிலவியதாகும். இக் காலத்தில் புத்த மதத்தைக் கைக் கொண்டவர்களும் இந்து மதத்தையும் கைவிட்டிருக்க முடியாது. எனவே விசயன் தொடக்கம் துட்டகைமுனு வரை தமிழ் மொழியும். சிவநெறியுமே மேலோங்கி இருந்ததென்பது வெளி;ப்படை. வரலாற்றுக் கண்ணுள்ளோர் யாவரும் இதனை நன்குணர்வர்.
இனி உறுகுணைப் பகுதியின் சிற்றரசனாய் இருந்த கவந்தீசன் மகன் துட்டகைமுனு என்பான் படைதிரட்டிப் போர் தொடுத்து, எல்லாளனது 44 ஆவது ஆட்சியாண்டில் கி. மு. 161ல் அரசைக் கைப்பற்றினான்.
புத்த மதம் வேரூன்றித் தழைக்கவும், சிங்களம் என்றொரு மொழி சீருற்று வளர்ந்து ஈழநாட்டை மாற்றியமைக்கவும், சிங்களவர் என ஒரு இனம் வலுவடையவும், அவர்கள் ஆட்சி உறுதி பெறவும் செய்த மாபெருந் தலைவன் துட்டகைமுனுவேயாவான். தற்கால இலங்கைக்கு அவனே மூல கருத்தாவெனக் கூறலாம். அவனது துணிவையும், ஆற்றலையும் எவரும் வாயாரப் போற்றியே புழக வேண்டும். “தோன்றிப் புகழொடு தோன்றுக” என்னும் வள்ளுவர் வாக்குக்கு இலக்கியமாகப் போற்றப்படத்தக்கவன்,
ஆனால் ஈழநாட்டின் (இலங்கையின்) சீர்கேட்டுக்கும், அழிவுக்கும் ஏதுவாக பிரிவினையாகிய ஒரு பெரும் மதிலை எழுப்பி நாட்டைக் கூறுபோட்டமைக்கும் துட்டகைமுனுவே மூலகருத்தா எனக் கூறவேண்டும். இனி, இப்பிரிவினை நீங்கி வேறுபாட்டுணர்ச்சியற்று இலங்காதேவியின் மக்கள் நாமெல்லாம் ஓர் இனம் எனும் பான்மையில் சகோதரத்துவமாக தமிழும், சிங்களமும் எல்லோர் நாவிலும் பயில, அதனால் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து வாழ. இலங்கை சீரும்செழிப்பும் உற்று மறுமலர்ச்சி அடையச் செய்வதே இன்றுள்ள அரசியல் பெரியாரின் முதற் கடமையாகும்.
அடுத்தது தமிழரின் இரண்டாவது படை எழுச்சியாகும். இப்படை எழுச்சி வாலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயன் ஆட்சிக்கு வந்த 5ம் மாதம் கி. மு. 103ல் நடைபெற்றது. இப்படை எழுச்சி துட்டகைமுனுவுக்கு 34 ஆண்டுகளின்பின் நடைபெற்றது. இப்படை எழுச்சியை நடத்தியவர்கள் இந்தியத் தமிழர்எழுவர். அவர்கள் புலகத்தன், பாகியன், பனையமாறன், பிலியமாறன், தாட்டியனோடு இன்னும் இருவர் என வரலாறு கூறும். இவர்கள்சோழ நாட்டினின்றும் படை திரட்டி வந்தார்கள் என்றே வரலாறு கூறுகி;ன்றது. எனவே இவர்கள் எழுவரும் சோழ நாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பது துணிபு. சாதாரண குடியான பிரசை படை திரட்டுதலும், பிறிதோர் நாட்டு அரசை எதிர்த்தலும், நாடு பிடித்தலும், ஆட்சி புரிதலும் நிகழக்கூடியதா?
இவர்கள் ஒருவரின் பின் ஒருவராக கி. மு. 103ல் தொடக்கம் கி. மு. 89 வரை 14 ஆண்டுகள் ஈழநாடு முழுமையும் ஆட்சி புரிந்தனர். எனவே எல்லாளன் ஆட்சிக்குப் பின் (161 – 103) சுமார் 58 வருட இடைவெளிக்குப்பின் தமிழர் ஆட்சி மறுபடியும் நிலவுகிறது.
ஆகவே கி. மு. 237 தொடக்கம் கி. மு. 89 வரையுள்ள காலப்பகுதியில் 80 ஆண்டுகள் இந்தியத் தமிழர் ஆட்சியும், 68 ஆண்டுகள் சிங்கள அரசர் ஆட்சியும் நடைபெற்றிருப்பதை அறிக எனவே இக்காலப்பகுதியில் 68 வருடகாலமே அதுவும் இடையிடையே புத்த மதமும், சிங்கள மொழியும் தவழ்ந்து வளர்ந்த குழவிப்பருவமாகும். இக்காலப்பகுதியிலும் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது புலனாகிறது. ஏன்?
இக்காலப்பகுதியில் ஆட்சி புரிந்த இந்தியத் தமிழர்களின் அரசதானி அனுராதபுரமேயன்றோ? அப் பகுதியில் அவ்வரசர்களும் மக்கள் ஆதரவு இருந்தேயாக வேண்டும். இக்காலப்பகுதி14யில் சிங்களமும், புத்தமும் தவிழ் நடைபோட்டுக் கொண்டிருந்த காலம். அதனால் தமிழும், சிவநெறியும் வலுப்பெற்றிருந்த காலமேயாகும்.
அன்றியும் இவ்வுண்மையை வாலகம்பாகு வரலாற்றில் வெள்ளிடைமலையெனக் காணமுடிகிறது. இங்குள்ள தமிழர்கள் அனைவரும் காலப்போக்கில் புத்த சமயிகளாய் சிங்கள மொழியைப் பயின்று சிங்களவர்களாய் மாறினர் என்பதே துணி பொருள். வாலகம்பாகு நாட்டைவிட்டு ஒடிக் காட்டில் வசித்த காலத்து அவனையும் அவனைச் சேந்தவர்களையும் பாதுகாத்து உயிர்உதவி செய்தவன் தனசிவன் என்னும் ஓர் தமிழனே. அன்றியும் வாலகம்பாகுவின் மனைவி சோமாதேவியும் தமிழர் கைப்பட்டு அடைக்கலம் புகுந்தாள். அதலின் அனுராதபுரச் சூழலில் எங்கே பார்த்தாலும் தமிழர்களாகவே பேசப்படுகிறார்கள். அன்றோ?
இனி மூன்றாவது படை எழுச்சிக்கு வருவாம். இஃது வசபாவின் மகன் வங்கநாசிகன் ஆட்சிக்காலத்தில் கி. பி. 113ல் நடைபெற்றது. இப் படை எழுச்சியின் நோக்கு நாடாளும் கருத்தன்று. இவர்கள் அரசதானியில் அகப்பட்ட பொருட்களை எல்லாம் வாரிக் கொண்டு 12000 சிங்களவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர் என வரலாறு கூறுகின்றது. இவர்கள் சோழ அரசராவர். வரலாற்றில் சோழியர் என்றே பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. இக் காலம் இந்திய வரலாற்றில் கடைச்சங்க காலப் பிற்பகுதியாகும். இந்திய தமிழ் நாட்டு அரசர்களின் படையெழுச்சிகள் யாவும் புத்தமதம், சிங்களம் என்ற வேறுபாட்டினின்றும் ஏற்பட்ட போட்டிப் பூசலால் உண்டான பகைமையை அடிப்படைக் காரணமாகக் கொண்டவை என்பது தெளிவாகப் புலப்படுகிறது. 12000 சிங்களவரைச் சிறைப்பிடித்தவர்கள் ஒரு தமிழனையேனும் சிறைப்பிடியாமை சி;ந்திக்க வேண்டியது. இப்படையெழுச்சி நடைபெற்ற காலம் கி. பி 113ல் நடைபெற்றது. இரண்டாவது படையெழுச்சிக்கும் இதற்கும் இடைப்பட்ட கால இடைவெளி 216 ஆண்டுகளாகும். இக்காலப்பகுதியில் புத்தமதமும், சிங்களமும், வளர்ச்சி அடைந்து நடந்தோடித் திரியும் பருவத்தை அடைந்ததெனக் கூறலாம். எனவே இக்காலப்பகுதியில் புத்த மதக் கொள்கையைப் பின்பற்றிய சிங்களம் என்னும் கலப்பு மொழி பேசிய மக்கட் கூட்டம் அதிகரித்திருந்தமை புலனாகிறது. இதனை எதிர்க்கும் நோக்குடனேயே இப்படையெழுச்சி நடைபெற்றதாக வேண்டும் என்பது புலப்படுகின்றது. அன்றேல் 12000 சிங்களவரைச் சிறைப்பிடிக்க வேண்டிய காரணம் வேறொன்றும் இல்லை இக்காலத்தில்; கண்ணகிக்குக் கோயில் எழுப்பிய சேரன் செங்குட்டுவன் சேரநாட்டை ஆட்சிபுரிகின்றான். இலங்கை வாழ் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும்ஒரே இனம். ஒரே மொழி, ஒரே மதக்கோட்பாடுடையவர்கள். அதனால் இனம், மொழி, மதப் பாதுகாப்புக் கருதியே இந்தியப் படையெழுச்சிகள் நிகழலாயின என்பது உள்நோக்கில் நன்கு புலப்படுவதாகும். இதனாலன்னறோ இலங்கை வாழ்தமிழர்களுக்கும், இந்தியத் தமிழர்களுக்கும் இடையே ஒரு போதும் பிணக்கு ஏற்பட்டதே கிடையாது சிங்கள வரலாறே சான்று.
இனி, வங்கநாசிகன் மகன் 1ம் கசபாகு அரசனானதும் பழிக்குப்பழி வாங்க எண்ணினான். அதனால் சோழ நாட்டின் மீது படை கூட்டிச் சென்று சிங்களவரைச் சிறை மீட்டதோடு 12000 தமிழரை சிறைப்பிடித்து வந்தான் என சிங்கள வரலாறு கூறுகின்றது. ஆனால் இந்திய வரலாற்றில் இவ்விடயம் பேசப்படவில்லை. இது நிகழ்ந்தது கி. பி. 113க்குப் பி;ன்னாகும் இவன் கி. பி 113 தொடக்கம் 135 வரை ஆட்சி புரிந்தான். கி. பி 2ம் நூற்றாண்டு தொடக்கம் சுமார் 7ம், 8ம் நூற்றாண்டுவரை சோழர் நலிவுற்றிருந்த காலமாகும். அக்கால இடைவெளியில் தொடக்க காலம் மிகவும் கீழ் நிலை அடைந்திருந்த காலமாகும். இக்காலத்தில் சோழர்கள் குறுநில மன்னராய் ஆங்காங்கு சிற்றரசராய் இருந்தனர். அதனால் கசபாகுவின் படையெழுச்சி வெற்றியீட்ட வாய்ப்புக் கிடைத்தது. ஆதலின் அந்நிகழ்ச்சி உண்மையானதே.
இக் கசபாகு மன்னன் காலத்திலேயே இவனால் கண்ணகி வணக்கம் ஈழநாட்டில் பரப்பப்பட்டது. இது இவன் ஆட்சியின் பிற்பகுதியில் ஏற்பட்டிருக்கலாம். இதனைப் பின்வரும் இந்திய வரலாறு தெளிவுபடுத்துகின்றது.
கண்ணகிக்கு இமயத்துக் கல்லெடுத்து கங்கையில் நீராடிக் கோயில் எழுப்பி விழாக் கொண்டாடிய பெரு மன்னன் சேரன் செங்குட்டுவனாவான். இவன் காலம் இந்திய வரலாற்றின் படி கி. பி. 180 வரையிலாகும். இக்காலப்பகுதி சோழ அரசு நலிவுற்றிருந்த காலமாகும். அஃதாவது கடைச்சங்கம். 3ம் நூற்றாண்டில் முடிவெய்திய காலம்தொடக்கம் சோழன் விசயாலயன் ஆட்சி தொடங்கிய காலம்வரை (கி.பி 846) யுமாகும். இக்காலப்பகுதியில் சோழர் அரசு சீர்குலைந்தது@ சி;ற்றரசுகள் தோன்றின@ பல்லவர் ஆட்சி உதயமானது. ஆதலின் கசபாகு மன்னன் படை கூட்டிச் சென்று சிங்களவரைச் சிறைமீட்டதும். தமிழரைச் சிறைப்பிடித்து மீண்டதும் நிகழக்கூடியதே.
எனவே இக்காலப்பகுதியில் சேர நாட்டைச் சேரன் செங்குட்டுவனும், பாண்டிநாட்டை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும் இவன் தம்பி வெற்றிவேற் செழியனும் சோழ நாட்டைப் பெருங்கிள்ளி (மரவண்கிள்ளி) யும் ஆட்சி புரிந்து வந்தனர். இதனைக் கண்ணகி வரலாறு கொண்டும் மகாவமிச வரலாறு கொண்டும் அறியலாம். எனவே கசபாகு சோழநாட்டின்மீது படை எடுத்த போது ஆட்சி புரிந்த சோழன் பெருங்கிள்ளி ஆதல்வேண்டும்.
இனி கசபாகுவினால் சிறைப்பிடிக்கப்பட்ட 12000 சோழியத் தமிழர்களும், அழுத்தூர்க் கோறளை, அரிஸ்பற்று என்னும் இடங்களில் குடியேற்றப்பட்டனர்என இலங்கை வரலாறே கூறுகின்றது. அப்படியானால் அவ்விடங்களில் இன்று தமிழர்கள் வசிக்கின்றார்களா? 12000 தமிழர் பரம்பரை என்னவாயிற்று? அத் தமிழர் பரம்பரையினர் காலக்கிரமத்தில் சிங்கள மக்களோடு உறவாடிக் கலந்து ஒன்றுபட்டும், புத்த சமயத்தைக் கைக்கொண்டும், சிங்கள மொழியைப் பேசியும் இன்று சிங்கள இனம் ஆயினர் அன்றோ? 12000 தமிழர்கள் பரம்பரை இற்றைக்கு சுமார் 1800 வருடங்களாக எத்தனை ஆயிரம் மக்களாகப் பெருகியிருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள். இப் பன்னீராயிரம் தமிழர்களும் அந்நாடுகளை விட்டுக் குடிபெயர்ந்தமைக்கு வரலாறே கிடையாது. இனிக் கசபாகு இத்தகைய செயற்கரும் செயல்செய்த வெற்றி கொண்டாடும் முகமாவே பெரகரா விழாக் கொண்டாடப்பட்டுள்ளதென வரலாறு கூறுதலினால் அவ்விழா இன்றுநடைபெற்று வருவதால் அது உண்மையே. எனவே சிங்களத் தோற்றமும் சிங்களப் பரம்பலும் எவ்வாறு ஏற்பட்டதென உய்த்துணர்மின்!
அடுத்தது நாலாவது படையெழுச்சியாகும். இது நிகழ்;ந்தது கி. பி. 436ல் ஆகும். மித்தசேனன் அல்லது கறல் சோரன் ஆட்சிக் காலத்தில் தமிழர் சேனா சமுத்திரமாய்த் திரண்டு அனுராதபுரத்தை அடைந்து அரசனைக் கொன்று 25 வருட காலம் இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தனர் என மகாவமிசம் கூறுகின்றது. இக் கூற்றின்படி “சேனாசமுத்திரமாய்த்திரண்டு” எனக் கூறுவதால் ஈழநாட்டுத் தமிழர்களும் சேர்ந்து சிங்க அரசை வீழ்த்தினர் என்றே கோடல்வேண்டும். இப்படை எழுச்சியின் தலைவர்கள் இந்தியத் தமிழர் அறுவராவார்கள். அவர்கள் பாண்டு அவன் மகன் பாரிந்தன், தம்பி குட பாரிந்தன், திரிகரன், தாட்டியன், பித்தியன் என்போராவர் இவ்வறுவரும் இந்திய அரசபரம்பரையைச் சேர்ந்தவர்களே. இவர்கள் முறையே 5, 9, 11 ஆண்டுகள் ஆட்சிபுரியலாயினர். ஆட்சிக் காலம் கி.பி. 436 – 461 ஆகும்.
கி.பி 436ல் குளக்கோட்டன் என்னும் இந்திய அரசகுமாரன் ஒருவன் இலங்கைக்கு வந்தான் என்றும், அவன் மனுநீதி கண்ட சோழன் மகன் என்றும், அப்பொழுது பண்டு என்பவன் அனுராதபுரத்தில் இருந்து அரசு செய்தான் என்றும், யாழ்ப்பாண வைபவமாலை கூறும் இக்கூற்றில் வேறுபாடு காணப்படினும் பெரிதும் ஒப்புமை இருத்தலையும் காணக்கூடியதாய் இருக்கிறது. என்னை? கி.பி. 436ல் பண்டு என்பான் அனுராதபுரத்தில் இருந்து அரசு செய்தமையை மகாவமிசம் கூறுகின்றது. இவனே மேற்படி படையெழுச்சியின் தலைவர்களின் முதல்வன் (தலைவன்) ஆவான். வைபவமாலையாரும் பண்டு என்பவனைக் கூறுகின்றார். எனவே குளக்கோட்டன் என்னும் பெயருடையான் ஒருவன் வந்தான் என்பதும் அவன் மனுநீதிகண்ட சோழன் மகன் என்பதும் அதாரமற்ற வரலாற்றுக்கு முரண்பாடான கூற்றாகும். ஏன்? மனுநீதிகண்ட சோழன் சோழர் பரம்பரையின் முன்னோன். அவன் காலத்துக்கும் கி.பி 436 பாண்டு காலத்துக்கும் இடைவெளி பல ஆயிரம் ஆண்டுகளாகும். அன்றியும் கி.பி 436ல் இந்திய வரலாற்றில் மனுநீதி கண்ட சோழன் என்ற நாமாவளி கிடையாது. ஆதலின் அஃது செவிவழிச் செய்தியே அன்றி உண்மை வரலாறாகாது. அவன் மனுநீதி கண்ட சோழன் பரம்பரையினன் என்பதே உண்மையாகும். மகனல்லன்.
இனி, கி. பி436ல் பாண்டு என்பவன் தானே ஆட்சி புரிகிறான். அப்படியானால் குளக்கோட்டன் என்ற பெயர் வரலாறு என்னே? என ஆசங்கை உண்டாகிறதல்லவா. ஆம்.
குளக்கோட்டன் என்னும் பெயர் இவன் இயற்பெயர் அன்று, அஃதோர் காரணப்பெயர். குளம் தொட்டுக் கோட்டம் அமைத்தவன் குளக்கோட்டன் எனப்பட்டான். கோட்டம் – அணை, கந்தளாய்க் குளத்தைக்கட்டுவித்துக் கோணேசர் ஆலயத் திருப்பணி நிர்வாகம் செய்தமையால் ஏற்பட்ட பெயராகும் அது. எனவே அதை யார் செய்திருக்கலாம் என்பது கேள்வி? அப்பொழுது அனுராதபுரத்தில் இருந்து இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்த பாண்டு மன்னனேயாவன் என்பது வெளிப்படை.
இலங்கையில் ஒர் அரசன் ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும்போது பிறிதொரு அரசகுமாரன் வந்து அவன் அனுமதி, ஆதரவு இன்றிக் குளம் கட்டினான் என்றலும், கோணேசர் ஆலயத் திருப்பணி, பூசை ஒழுங்குகள் செய்தான் என்றலும், இந்தியாவினின்று மக்களை வரவழைத்துக் குடியேற்றினான் என்றலும் முரண்பாடான, பொருத்தமில் கூற்றாகும். அப்பொழுது அரசனாய் இருந்த பாண்டுவும், அவன் மக்களுமே அக் காரியங்களைச் செய்தார்கள் என்பதே வரலாற்றுண்மையாகும். பாண்டுவே குளக்கோட்டன் எனப்பட்டான்.
இனி, இக்காலம் கி. பி 436 இந்திய வரலாற்றில் சேர, சோழ பாண்டியர் வலி குன்றிய காலம். களப்பிரர் ஆட்சி முடிவும் பல்லவர் ஆட்சியின் ஆரம்ப காலமுமாகும். இதனால் மனுநீதிகண்ட சோழன் என்பதும் அவன் மகன் குளக்கோட்டன் என்பதும் ஒர் ஆதாரம் அற்ற செவிவழிச் செய்தியேயாகும். மனுநீதிகண்ட சோழன் பரம்பரையினன் என்பதே உண்மையாகும்.
பண்டு முதலியோர் தாய்நாட்டில் தம்வலி குன்றிய காலமாதலின் தமது செந்தப் படையோடு ஈழநாட்டுத் தமிழர் உதவியையும் பெற்றே சேனா சமுத்திரமாகப் படை யெடுத்தனர் என்பதும் பொருத்தமானதே. பண்டு முதலியோர் இவர்கள் யார் என இலங்கை வரலாறு சுட்டிக் கூறாமையினால் இவர்கள் சேர, சோழ, பாண்டியர் பரம்பரையில் ஒன்றைச் சார்ந்தவர்களாதல் வேண்டும். பாண்டு என்னும் பெயரே சிங்கள வரலாற்றில் பண்டு எனக் குறிப்பிடப்பட்டதென்றே கொள்ள வேண்டும். அவன் பெயர் பாண்டுவேயாகும். இனி இவர்கள் வரலாற்றை நோக்கும் போது இவர்கள் சோழர் பரம்பரையினர் என்றே கொள்ளக்கிடக்கின்றது.
இனி, 5ம் படைஎழுச்சிக்கு வருவோம். இது 1ம் சேனன் அல்லது சீலமேகசேனன் காலத்தில் நடைபெற்றது. இவனது ஆட்சி;க்காலம் கி.பி 846 – 866 ஆகும். இவன் தமிழருக்கு அஞ்சிப் பொலநறுவையை அரசதானியாக்கினான் என மகாவமிசம் கூறுகின்றது. இலங்கை அக்காலத்தில் இராசரட்டை, உறுகுணை, மாயரட்டை என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இராசரட்டை. அனுராதபுரம், நீர்கொழும்பு, பொலநறுவையை உள்ளடக்கிய வடபகுதி முழுமையும் ஆகும். “இவ்வரசன் தமிழருக்கஞ்சிப் பொலநறுவையை அரசதானி ஆக்கினான்” எனவே இராசரட்டைப் பகுதி முழுமையும் பெரும்பான்மையாகத் தமிழர் வசித்தமையும், அவர்கள் வலுப்பெற்று ஆதிக்கத்தோடு இருந்தமையும் தெளிவாகிறது. இதனாலேயே அரசன் பொலநறுவையை நாடினான் என்பது தோற்றம்.
இவ்வரசன் காலத்தில் படையெடுத்தவன் சீமாறன் அல்லது சீவல்லபன் என்னும் பாண்டிய அரசனாவான். இவன் ஈழநாட்டுபோந்து ‘மகாபலகம’ என்னும் இடத்தில் ஒர் கோட்டையைக் கட்டி அரண் செய்தான். அப்போது ஈழத் தமிழர்கள் அனைவரும் அவன் பக்கம் சேர்ந்து கொண்டனர். பாண்டியன் சி;ங்கள மன்னனோடு போர் தொடுத்து வெற்றியீட்டி ஈழநாட்டைத் தனக்குத் திறைசெலுத்துமாறு செய்தான். என மகாவமிசமே கூறுகின்றது. இப்பாண்டியன் ஈழநாட்டை வெற்றி கொண்ட செய்தி சின்னநமனூர் செப்பேடுகளாலும் அறியக்கிடக்கின்றது. எனவே 1ம் சேனன்ஆட்சியாண்டு 20 வருடமும் ஈழநாடு பாண்டி நாட்டுக்குத் திறை நாடாக இருந்திருக்கின்றது. இவனை அடுத்து அரசுக்கு வந்தவன் 2ம் சேனன் என்பவன் இவன் 1ம் சேனனின் தம்பியும், காசியப்பன் என்பவனின் மகனும் ஆவான். இவன் காலத்தில் மேற்கூறிய சீவல்லபனின் மகன் தனது தந்தையோடு போர் செய்தான் என்றும் அப்போரில் தனக்குதவுமாறு 2ம் சேனன் படை பாண்டிநாடு சென்று சீவல்லபனைக்கொன்று மகனுக்குப் பட்டம் சூட்டி மீண்டான் என்றும் அங்கிருந்து பொருட்களைச் சூறையாடி வந்தான் என்றும் மகாவம்சம் கூறுகின்றது.
இக்கூற்றுக்கு வேறு யாதொரு ஆதாரமும் இல்லை. பொருத்தமான கூற்றாகவும் இல்லை. ஏன்? பாண்டியன் வரலாற்றின்படி சீவல்லபனுக்கு 2ம் வரகுணவர்மன், பராந்தக பாண்டியன் இருவர் மக்களே இருந்தனர். சீவல்லபனுக்குப் பின் முறைப்படி அரசேற்று ஆட்சி புரிந்தவன் 2ம் வரகுணவர்மன். இவனுக்குப்பின் இவன் தம்பி பராந்தகபாண்டியன் அரசன் ஆகிறான். 2ம் வரகுணபாண்டியன் ஓர் ஆற்றல் படைத்த பேரரசன். இவன் சோழர், கங்கர், பல்லவன் என்பவர்களோடு போர் தொடுத்து பல முறை வெற்றி மாலை சூடியவன். இவனைப்பற்றிச் சின்னமனூர்ச் செப்பேடு கூறுகின்றது.
“குரைகழற் காலரசிறஞ்சக்
குவலயத் தலம் தனதாக்கின
வரைபுரையும் மணி நெடுந்தோள்
மன்னர் கோன் வரகுண வர்மன்”
எனப் புகழ்ந்துரைக்கின்றது. அன்றியும் சீவல்லபன் வரலாற்றில் “சீவல்லபன் தனது தந்தையிடம் இருந்து பெற்ற அரசை அஞ்சாமற் காத்துத் தன் மகன் வரகுணவர்மனுக்கு அளித்தான்” எனக் கூறப்படுகிறது. ஆதலின் மேற்கூறிய மகாவமிசக் கூற்று வெறும் புனைந்துரைப் புகழுரையேயன்றி உண்மையன்று.
இனிச் சீவல்லபன் வரலாற்றில் மாயபாண்டியன் என்றொருவன் தனக்கு அரசில் உரிமையுண்டெனக் கூறி சீவல்லபனோடு முரண்பட்டிருந்தான் என்றும் 2ம் சேனன் அரசுக்கு வந்ததும் பழிக்குப்பழி சாதிக்க எண்ணிய சேனன் மாயாவாண்டியனைத் தன்பக்கம் சேர்த்துக் கொண்டு பாண்டிநாட்டின் மேற் படையெடுத்தான் என்றும் சீவல்லபன் அவர்கள் இருவரையும் போரில் புறங்கட்டி ஒடச் செய்து நாட்டைவிட்டோடச் செய்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியையே மகாவமிசம் திரித்துப் புனைந்து புகழ்ந்து கூறியது என்பதே உண்மையாகும்.
இனிவருவது 6வது படையெழுச்சியாகும். இப் படைஎழுச்சி 3ம் உதயன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது. இவன் ஆட்சி;க்காலம் கி.பி. 964 – 972ல் முடிசூடிய பராந்தகச் சோழனே படையெடுத்தான். பராந்தகச் சோழனுக்கும், பராந்தகப் பாண்டியன் மகன் இராசசிம்ம பாண்டியனுக்கும் இடையில்போர் மூண்டது. அப்போரினால் நாட்டை இழந்த இராசசிம்ம பாண்டியன் இலங்கையை அடைந்து அப்பொழுது இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த 9ம் தப்புனாவின் பால் உதவி நாடி அங்கேயே வசித்து வந்தான். அப்பொழுது சிங்களப் பிரதானிகளுக்கிடையே கலகம் மூண்டதால் பாண்டியன் தனது எண்ணம் பலிக்காதெனக் கண்டு தான் கொண்டுவந்த மணிமுடி முதலாம் பொருட்களைத் தப்புனாவிப்பால் அடைக்கலமாக வைத்து விட்டு தனது தாயின் நாடாகிய சேரநாட்டுக்குப் போனான். இதனைக் கேள்வியுற்ற 1ம் பராந்தகச் சோழன், பாண்டியன் விட்டுப்போன மணிமுடி முதலாம் பொருட்களைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு அப்பொழுது ஆட்சி செய்து கொண்டிருந்த 3ம் உதயனுக்குத் தூதனுப்பினான். இலங்கை அரசன் அதனை அசட்டை செய்தான்.
அதனால் சீற்றங்கொண்ட பராந்தகச்சோழன் படையை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். சோழன் படை அனுராதபுரத்தைச் சுற்றி வளைத்து நகரைக் கைப்பற்றிக் கொண்டது. உதயன் உறுகுணைக்குச் சென்று படைதிரட்டி வந்து எதிர்த்ததினால் அவ்வெதிர்ப்புக்கு முன் நிற்கமுடியாமல் சோழன் படை அனுராதபுரத்தை விட்டு நாடு திரும்பியது என மகாவமிசம் கூறும்.
இதனை இந்திய வரலாறு அனுராதபுரத்தைச் சோழன் படை கைப்பற்றியதும் இலங்கை அரசனாகிய உதயன் பாண்டியன் விட்டுப்போன பொருட்களையும் கொண்டு உறுகுணைக்கு ஓடி ஒளித்தான் என்றும் உறுகுணை மலைநாடு ஆதலின் சோழன்படை அண்டிச் செல்ல முடியாமையால் நாடுதிரும்பின் எனக் கூறுகின்றது.
இங்கே இவ்விரு கூற்றையும் ஒப்புநோக்கும் போது மகாவமிசக் கூற்றுப் பொருத்தம் அற்றதாகக் காணப்படுகின்றது ஏன்? தலைநகரைச் சுற்றி வளைத்துக் கைப்பற்றிக் கொண்ட சோழர்படை தாம் தேடிவந்த பொருட்களையே தேடிக் கைப்பற்றி இருப்பார்கள். போரின் நோக்கம் அப்பொருட்களைக் கைப்பற்றுதலே. 2ம் முறை உதயன் படைதிரட்டி எதிர்த்தான் என்பதால் முதற்போரில் உதயன் நகரைவிட்டு உறுகுணைக்கு ஓடினான் என்பதும், அப்பொழுது பாண்டியன் விட்டுப்போன பொருட்களையும் உடன் கொண்டு சென்றான் என்பதும். அதனாலேயே சோழர் படை அப் பொருட்களை அபகரிக்க முடியாமல் போனதென்பதுமே உண்மையாகும். அன்றேல் 2ம் முறை படைதிரட்டி எதிர்க்க வேண்டிய நிலைமை ஏற்படாது. 1ம் எதிர்ப்பில்உதயன் தோல்வியே கண்டான் என்பது உண்மை. இனி முதலாவது எதிர்ப்பில் உதயன் எதிர்த்துப் போரிட்டதாக வரலாறு இன்மையின் அவன் நகரை விட்டு ஒடினான் என்பதே உண்மையாகும். ஆகவே இந்திய வரலாறே உண்மையானது என்பதை மகாவமிசக் கூற்றே வலியுறுத்துகின்றது.
அடுத்த படைஎழுச்சி ஏழாவது படை எழுச்சியாகும். இது 5ம் மிகுந்தனின் ஆட்சிக்காலத்தில் கி. பி. 1001 – 1037 கால இடைவெளியில் நடைபெற்றது. இவனது அரசதானி அனுராதபுரமும் கப்புக்கல்நுவரையுமாகும். இவனது ஆட்சியில் 10ஆவது ஆண்டு இவனது படையாட்களாய் இருந்த தமிழர்கள் கலகம் விளைத்ததினால் அதனை அடக்க முடியாதவனாய் அஞ்சி உறுகுணைக் கோடி அங்கிருந்து அரசு செய்தான் என்பது இலங்கை வரலாறு. இந்நிலையை அறிந்த சோழ அரசன் 1ம் இராசராசன் என்பவன் ஒரு பெருஞ் சேனையை இலங்கைக்கு கி. பி. 991ல் அனுப்பி வைத்தான். சோழர்படை யாதொரு தடையுமின்றி வடபகுதி முழுவதையும் கைப்பற்றி பொலநறுவையை அரசதானியாக்கி இராசராசனின் ஆணையின் கீழ் ஓர் அரசுப் பிரதி அதிபதி ஒருவனையும் நியமித்தது. எனவே இராசராசன் படைக்கு அஞ்சி மிகுந்தன் உறுகுணைக் கோடி அங்கிருந்து ஆட்சி புரிந்தான். இராசராசன் பொலநறுவையை அரசதானியாக்கி சன்னாதபுரம் எனப் பெயர் சூட்டி அரசுப் பிரிதிநிதிமூலம் உறுகுணை தவிர்ந்த இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தான். இலங்கை முழுமையும் சோழர் ஆட்சிக்குட்பட்டது. இந்திய வரலாற்றின்படி 1017ல் ஆகும்.
அப்பொழுது உறுகுணையில் இருந்த 5ம் மிகுந்தன் சோழரை நாட்டை விட்டு அகற்றும் உபாயங்களையும் ஆயத்தங்களையும் சிந்தித்துச் செயலாற்றிக் கெண்டேயி ருந்தான். இப்படி 25 ஆண்டுகள் கழிந்தன. ஈற்றில் 5ம் மிகுந்தனின் எண்ணம் செயற்படத் தொடங்கும் நேரம் 26வது வருடம். இந்திய வரலாற்றின் படி கி. பி. 1017ல் 1ம் இராசேந்திரசோழன் ஒர் சிரேஷ்ட தளபதியின் கீழ் ஒர் பெரும் படையை ஈழநாட்டுக்கு அனுப்பி வைத்தான். இராசேந்திர சோழன் படைகள் உறுகுணைக்குச் சென்று 5ம் மிகுந்தனையும் மனைவியையும் சிறைப்பிடித்து அவர்களது இராச கிரீடங்களையும் 3ம் இராசசிம்ம பாண்டியன் விட்டுப்போன மணிமுடி, முத்தாரம் முதலிய பொருட்களையும் கைப்பற்றிக் கொண்டு சோழநாட்டுக்கு மீண்டது. இலங்கை அரசன் 5ம் மிகுந்து 12 வருடம் சோழநாட்டிலேயே இருந்து உயிர் துறந்தான். எனவே கி. பி 1017 தொடக்கம் ஈழநாடு முழுமையும் சோழர் ஆட்சிக்குட்பட்டது. இதற்குமுன் இராசசோழன் காலத்தில் இந்திய வரலாற்றின்படி கி. பி 981முதல் 1017வரை உறுகுணை தவிர்ந்த ஈழநாடு முழுமையும் சோழர் ஆட்சிக்குட்பட்டு மும்முடிச் சோழமண்டலம் என ஈழநாடு அழைக்கப்படுவதாயிற்று. உறுகுணை தவிர்ந்த ஈழநாடு முழுமையும் 981 – 1017 வரை 25 ஆண்டு இராசராச சோழன் ஆட்சி.
இராசராசனது மெய்க் கீர்த்தியில் “முரட்டொழிற் சிங்களர் ஈழ மண்டலமும், திண்டிறல் வெற்றித் தண்டாற் கொண்ட தேசுகொள்கோ இராசகேசரிவர்மரான் உடையார் ஸ்ரீ இராசராசர் தேவர்க்கு” எனக் கூறப்பட்டுள்ளது. அன்றியும் கொழும்பிலுள்ள பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ள கருங்கற் பாறை ஒன்றில் “சோழமண்டலத்துச் ~த்திரியசிகாமணி வளநாட்டு வேளாநாட்டுச் சிறுகூற்ற நல்லூர்க் கிழவன் தாழிக்குமரன், ஈழமான மும்முடிச் சோழமண்டலத்து மாதோட்டமான இராராசபுரத்து எடுப்பித்த இராசராசேஸ்வரத்து மகாதேவர்களுக்குச் சந்திராதித்தவல் நிற்க” எனக் கூறும் ஒர்கல்வெட்டும் காணப்படுகின்றது. இக் கல்வெட்டு 1ம் இராசராச சோழனின் ஈழநாட்டு ஆட்சியை அங்கைநெல்லியென தெளிவுபடுத்துகின்றதன்றோ? இதனால் இராசராச சோழன் ஆட்சிக்காலத்தில் ஈழம் மும்முடிச் சோழ மண்டலம் எனவும் மாதோட்டம் இராசஇராசபுரம் எனவும் வழங்கப்பட்டிருத்தல் காண்க.
ஈழநாட்டின் சோழ அரசரது அரசதானியாய் இருந்த பொலநறுவையில் சிவாலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அக்கோயிலுக்கு “வானவன் மாதேவீச்சரம்” எனப் பெயர்ரிடப்பட்டது. இராசராச சோழனின் தாயார் “வானவன் மாதேவி” எனப்படுவர். எனவே தாயாரை நினைவு கூருதல் காரணமாக இராசராசசோழன் அக் கோயிலைக் கட்டுவித்து தாயாரின் பெயரையே அக்கோயிலின் திருப்பெயராக வைத்தான் என்பது பெறப்படும். சோழர்கள் பொலநறுவைக்கு சனநாதபுரம் எனப் பெயர் சூட்டி ஆட்சிபுரியலாயினர்.
இனி 5ம் மிகுந்தன் சிறைப்பட்டதன் பி;ன்னர் கி.பி. 1017க்குப்பின் இந்திய வரலாற்றி;ன்படி 1060ல் இலங்கை வரலாற்றின்படி கி.பி 1080 வரையும் இலங்கை முழுமையும் 1ம் இராசசேந்திர சோழனின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. எனவே கி. பி. 991 தொடக்கம் கி.பி 1060 வரையும் 69 வருடம் இந்திய அரசர்களின் பொலநறுவை ஆட்சி நடைபெற்றதாகும்.
இக்காலச் சிங்களவர் உறுகுணையைப் புகலிடமாகக்கொண்டு காலத்துக்குக் காலம் சோழரின் பொலநறுவை ஆட்சியை எதிர்க்கலாயினர் 5ம் மிகுந்தனின் மகன் காசியப்பன் என்பவன் 12ஆவது வயதில் இறந்துவிட்டான் என இலங்கை வரலாறு கூறுகின்றது. ஆனால் 5ம் மிகுந்தன் இறந்ததும் அவன் மகன் காசியப்பனை மக்கள் தம் அரசனாக ஏற்று வி;க்கிரமவாகு என்னும் பட்டப் பெயருடன் கி. பி. 1029ல் அவனுக்கு முடிசூட்டினார்கள் என்றும், சோழர்களுக்கு எதிராக உறுகுணைப் பகுதியைக் கைப்பற்றி 1041 வரை 12 வருடம் உறுகுணையில் இருந்து ஆட்சி செய்தான் என்றும் இலங்கை வரலாறே கூறுகின்றது. இதனை ஒப்புநோக்கும்போது 5ம் மிகுந்தன் இறந்ததும் கைக்குழந்தையாய் இருந்த காசியப்பனுக்கு முடிசூட்டி மக்கள் அரசைப் புரந்தார்கள் என்பது போதரும். தந்தை இறந்தது கி.பி. 1029ல். மகனுக்கு முடிசூட்டப்பட்டதும் அதேயாண்டாகும். 12வது வயதில் காசியப்பன் இறந்தான் என்றால் 1041ல் இறந்தான். அவனது ஆட்சிக்காலமும் முடிபும் அஃதே.
இஃது இவ்வாறிருக்க 5ம் மிகுந்தனின் ஆட்சி முடிந்தபின் அவன் மந்திரியாய் இருந்த கித்தி என்பவன் அரசுக்கு வந்தான். இவன் அரசெய்திய 8ஆவது நாளில் மகாலன கித்தி என்பவன் அவனைக்கொன்று தான் ஆட்சி செய்தான். இவன் ஆட்சி எய்திய 3வது வருடத்தில் சோழரால் தோற்கடிக்கப்பட்டு உயிர் துறந்தான். இவன் ஆட்சிக்காலம் 1044 – 1047 ஆகும். 5ம் மிகுந்தனின் மனக் காசியப்பனின் ஆட்சி முடிபாகிய 1041 தொடக்கம் மகாலனகித்தியின்ஆட்சி ஆரம்பமான 1044 வரை சோழர் ஆட்சியே தனித்து இருந்தது. சோழர் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக மகாலனகித்தி இருந்த காரணத்தினாலேயே அவன் சோழரால் கொலையுண்டான்.
இதன்பின்னர் விக்கிரமபாண்டியன் என்பானொருவன் களுத்துறையை அரசதானியாக்கி இவனும் சோழர் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக அரசாளத் தொடங்கினான். இவனை அயோத்தியினின்றும் வந்தவனான சக்தபாலன் என்பானொருவன் கொன்று தான் ஆட்சி புரியத் தொடங்கினான். முன்கூறப்பட்ட விக்கிரமபாண்டியன் என்பான் சோழன் இராசாதிஇராசனால் தோற்கடிக்கப்பட்டு தனது பாண்டிநாட்டை இழந்து ஈழநாட்டை அடைந்து ஆட்சி செய்யத் தொடங்கினான் என இராசாதிஇராசன் மெய்க் கீர்த்தி உணர்த்துகின்றது.
ஆனால் மகாவம்சம் மகாலனகித்தியின் மகன் விக்கிரமபாண்டு என்பவன் தந்தை சோழரால் இறந்த பின்னர் கி.பி. 1044 – 1047 வரை உறுகுணை நாட்டை ஆட்சி புரிந்தான் எனக் கூறும். இராசாதி இராசன் மெய்க்கீர்த்தியையும் மகாவமிசக் கூற்றையும் ஒப்புநோக்கும்போது வி;க்கிரம பாண்டியனும். விக்கிரம பாண்டுவும் ஒருவனே என்பதும் அவன் ஓர் பாண்டியமன்னனுக்கும் இலங்கை அரசன் மகளுக்கும் பிறந்தவனாதல் வேண்டும் என்பதும் தந்தைவழிப் பாண்டி நாட்டை இழந்தமையால் தாய்வழி நாடி மகாலனகித்தி இறந்ததும் இலங்கை ஆட்சியை நாடினான் என்பதும் ஊகித்தறிய வேண்டிய உண்மையாகும்.
பத்துப் பதினோராம் நூற்றாண்டில் பாண்டியரும் சேரரும் வலி குன்றி இருந்த காலம். இக்காலம் சோழர் வலுப்பெற்றிருந்த காலம். இதனால் பாண்டியரும் சேரரும் இலங்கை அரசர்களும் நட்பு முறையினராய் இருந்தது மன்றி மணவினைத் தொடர்பும் உடையவர்களாக இருந்தார்கள். இவர்களுக்கு பகைவர்களாய் இருந்தவர்கள் சோழர்களே. அப்பொழுது அவர்கள் தமது நாட்டை ஆட்சி புரிய முயன்று வந்தனர். இதுவரலாறு கூறும் உண்மை.
இனி, வி;க்கிரமபாண்டியனை அயோத்தி அரசிளங் குமாரன் சக்தபாலன் என்பவன் கொன்றான் என மகாவம்சம் கூறுகின்றது இராசாதி இராசன் கல்வெட்டு, கன்னியா குப்தத்தைச் சேர்ந்த வீரசலாமேகன் கொன்று ஆட்சிபுரியலாயினான் எனக் கூறுகின்றது.
வி;க்கிரம பாண்டியனுக்குப்பின் பறக்கு என்னும் பெயரையுடைய பாண்டிய அரசிளங்குமாரன் இரண்டு வருடம் ஆட்சி புரிந்தான். இவன் சோழரால் கொலையுண்டான். இவனுக்குப்பின் பறக்குவின் மந்திரி லோகேஸ்வரன் என்பவன் 1059ல் கதிர்காமத்தை அரசதானியாக்கி ஆட்சி புரிந்தான். இவனை 5ம் மிகுந்துவின் பௌத்திரன் கீர்த்தி என்பவன் கொன்று விசயபாகு என்னும் பட்டப் பெயரோடு கதிர்காமத்திலிருந்து ஆட்சி புரிந்தான். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1065 – 1120 ஆகும்.
விசயபாகு கதிர்காமத்திலிருந்து ஆட்சி புரியும் தருணம் காசியப்பன் என்றொருவன் உறுகுணைக்குத் தானே தலைவன் எனக் கூறி ஆட்சி செய்யத் தொடங்கினான். இதனை அறிந்த சோழர் உறுகுணைக்குப் படையெடுத்துச் சென்றனர். அங்கே எதிர்பார் இன்மையால் சோழர்படை கதிர்காமத்தை நோக்கிச் சென்றது. எனவே காசியப்பன் சோழர் படைக்கு அஞ்சி உறுகுணையைவிட்டு ஓடி ஒளித்தான் என்பது பெறப்படும். விசயபாகுவும் சோழர் படைக்கு அஞ்சிக் கதிர்காமத்தை விட்டு உறுகுணைக்கு ஓடினான். அப்பொழுது உறுகுணையில் வைத்து காசியப்பனை விசயபாகு கொன்றான். சில நாள் உறுகுணையில் இருந்தே விசயபாகு ஆட்சி புரிந்தான். உறுகுணையில் சோழர் படை எதிர்ப்பில் விசயபாகு வெற்றி கண்டான். ஆனால் பொலநறுவையில் சோழர் ஆட்சியைக் கைப்பற்றமுடியாதவனாய் இருந்தான்.
இந்நிலையில் விசயபாகு அரமனா நாட்டரசன் அனுரதவின் உதவியை நாடினான். அவ்வுதவி (அந்தஉதவி) கிடைக்கவே சிங்களச் சமூகமும் பொலநறுவை ஆட்சியை எதிர்த்து சோழரை எதிர்க்கும் நோக்கோடு வரி கொடாது மறுத்தனர். அப்பொழுது சோழருக்கும் சிங்களவருக்கும் இடையே பெரும் போர் மூண்டது. அதனால் சோழர் படை இராசரட்டையில் சிங்களவரை எல்லாம் மழுங்கடித்து அவர்களைப் புறங்காட்டி ஒடச் செய்தனர். அதன் பின் சோழர்படை உறுகுணை நோக்கிச் சென்று விசயபாகு வோடு சமர் தொடுத்தனர். விசயபாகு இப்போரில் சோழரைப் புறங்கண்டு வெற்றியீட்டினான்.
இவ்வெற்றியினால் உந்தப்பட்ட விசயபாகு அனுராதபுரத்தைச் சுற்றி வளைத்துச் சோழரை எதிர்த்தான். இப்போரில் விசயபாகு தோற்;றுப் புறங்காட்டி ஓடினான். பின்னர் வாதகிரி மலையைப் புகலிடமாகக் கொண்டு 3 மாத காலமாகச் சோழரை எதிர்த்துப் போராடி அனுராதபுரத்தைக்கைப்பற்றினான்.
இதன் பின்னர் விசயபாகு பொலநறுவையை நோக்கிச் சென்றான். அங்கே சோழரை எதிர்த்து ஒன்றரை மாதகாலம் போராடிப் பொலநறுவையைக் கைப்பற்றினான். இது நிகழ்ந்தது இலங்கை வரலாற்றின்படி கி. பி 1080ல் ஆகும். இந்திய வரலாற்றின்படி விசயபாகுவின் ஆட்சிக் காலம் கி.பி. 1065 – 1120 வரையாகும்.
சோழரின் பொலநறுவை ஆட்சி தொடங்கி முடியும் வரையும் உள்ள காலப்பகுதி கி.பி. 991 – 1060 ஆகும். இந்திய வரலாற்றின்படியும் இலங்கை வரலாற்றின்படியும் கி.பி 1011 – 1080 வரையுள்ள காலமாகும். இக்காலப் பகுதிகளில் இலங்கை முழுமையும் சோழர் ஆட்சியில் இருந்தகாலம். இலங்கை வரலாற்றின்படி 1037 – 1065 ஆகும். இந்திய வரலாற்றின்படி 1017 – 1045 ஆகும். 28 ஆண்டுகள் ஆகும்.
ஆனால் இலங்கை வரலாற்றின்படி 1011 தொடக்கம் 1080 வரை சோழர் ஆட்சி நடைபெற்றது. பொலநறுவை சனநாதபுரம் என்னும் பெயரோடு அரசதானியாக விளங்கியது. அக்காலத்தில் 5ம் மிகுந்தனுக்குப்பின் விசயபாகு வரையில் உள்ளோர் அனைவரும் கலகக்காரராகச் சோழரை எதிர்த்து அரசைக் கைப்பற்ற முயன்றார்கள். எனவே சோழர் ஆட்சி 69 வருட காலம் நடைபெற்றதாகும்.
கலிங்கமாகன் படை எழுச்சி
கலிங்கநாட்டு அரசகுமாரனான மாகன் என்பவன் 20000பேர் கொண்ட ஓர்பெரும் படையோடு ஈழநாட்டை அடைந்தான். அப்பொழுது ஈழநாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தவன் பராக்கிரமபண்டு என்பவன். மாகன் படை பராக்கிரமபண்டுவைக் கொன்று அரசைக் கைப்பற்றியது. இது நிகழ்ந்தது 1225 ஆகும். அதன்பின் மாகன் 1246 வரை யப்பாகு, தம்பதெனியா தவிர்ந்த இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தான். வட கீழ்ப்பகுதியும் அவனது ஆட்சியே நடைபெற்றது. ஆதலின் 1225 தொடக்கம் யாழ்ப்பாண அரசனும் அவனே என்பதைக் கருத்தில் பதித்தல் வேண்டும். புத்த மதத்தினர் பலரைச் சிவ மதத்தவர் ஆக்கினான். புத்த மதத்தினருக்குப் பல விதமான இடையூறுகளையும் விளைத்தான். மாகனால் கொல்லப்பட்டவனான பராக்கிரமபண்டு என்பவனும் பாண்டிய வம்ச வழியினன் ஆவான். இவன் முன் ஆட்சியில் இருந்த லீலாவதி என்பவளைத் துரத்திவிட்டு அரசைக் கைப்பற்றி 1222 – 1225 வரை ஆட்சி புரிந்தான். இனி கலிங்கநாடு தமிழ்நாடே என்பதும், அந்நாட்டினர் சிவமதத்தினர் என்பதும் மாகன் தமிழனே என்பதும், அவன் சிவநெறிக் கோட்பாடு உடையவன் என்பதும் மாகன் வரலாறு காட்டும் உண்மை.
மாகன் ஆட்சிக்குப்பின்னர் கி.பி. 1246ல் 3ம் விசயபாகு என்பவன் ஆட்சிக்கு வந்தான். இவனது அரசதானி தம்பதெனியா. இவன் காலத்தில் பாண்டி நாட்டை ஆட்சி புரிந்த சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பான் இலங்கை மீது படையெடுத்து 3ம் விசயபாகுவை வென்று கப்பங்கட்டுமாறு செய்தான் என இந்திய வரலாறு கூறும். இலங்கை வரலாற்றிலும் 3ம் விசயபாகு வடபகுதியில் தமிழர் பெரும்பான்மையினராய். அவர்கள் ஆதிக்கமே மேலோங்கி இருந்த காரணத்தினால் அவர்களை எதிர்த்து வெல்லுதல் வல்லை என்று அஞ்சித் திறைகொடுப்பதற்குச் சம்மதித்து உடன்படிக்கை செய்துகொண்டான் என இலங்கை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. எனவே சுந்தரபாண்டியனால் வென்று அடக்கப்பட்டு கப்பங்கட்டுமாறு செய்யப்பட்ட இலங்கை அரசன் 3ம் விசயபாகுவே என்பது தெளிவு. 3ம் விசயபாகு வடபகுதித் தமிழருக்கு அஞ்சிக் கப்பங் கட்டச் சம்மதித்தான். எனவே சுந்தரபாண்டியன் படை எழுச்சி ஈழநாட்டுத் தமிழருக்குச் சாதகமாகவும், புத்த சிங்கள மதத்தினருக்குப் பாதகமாகவுமே நடைபெற்றதென்பதை வாசகர்கள் உய்த்துணர வேண்டும்.
3ம் விசயபாகுவுக்குப்பின் அரசுக்கு வந்தவன் 2ம் பராக்கிரமபாகு என்பவன். இவன் தமிழருக்குத் திறைகட்டுவதை நிற்பாட்டி ஆட்சி புரிந்தான். எனவே வடபகுதித்தமிழருக்கு அஞ்சிக் கப்பம் செலுத்திய காலம் கி.பி. 1246 – 1250 வரையாகும். 1246க்குப் பின் மாகன் வட பகுதியில் இருந்து ஆட்சி புரிகின்றான் என்பது கவனத்திற்குரியது.
2ம் பராக்கிரமபாகுவுக்குப் பின் 1ம் புவனேகபாகு என்பான் ஆட்சிக்கு வருகிறான். 450 வருடகாலமாக அரசதானியாக இருந்த பொலநறுவையின் காலமும் அதன் புகழும் அவ்வரசனோடு முடிபெய்தியது. இவன் குருநாகலை அரசதானியாகக் கொண்டு ஆட்சி புரிந்தான். இந்நகர் இடைக்காலத்தில் அத்திசைபுரம் எனவும் அழைக்கப்பட்டது. பொதுவாக பொலநறுவையை முதன் முதல் அரசதானி ஆக்கியவன் 7ம் அக்கிரபோதி என்பவன். காரணம் வடபகுதித் தமிழர்மீது கொண்ட அச்சமே. எனவே கி.பி. 781 தொடக்கம் கி.பி. 1303 வரையும் பொலநறுவை இலங்கையின் அரசதானியாகப் பெரும்புகழ் பெற்று விளங்கியது. இக்காலத்தில் 69 வருட காலம் தமிழ் அரசர் ஆணைக்குரிய அரசதானியாக விளங்கியது. விளக்கம் இராசராசசோழன் பொலநறுவையை அரசதானியாக்கியது. 991ல் சோழர் ஆட்சி முடிபு 1060 க்கு இடைப்பட்ட காலம் 69 ஆண்டுகள்.
1ம் புவனேகபாகுவுக்கு 68 ஆண்டுகளின் பின்னர் ஆட்சிக்கு வந்தவன் 3ம் பராக்கிரமபாகு என்பவன். இவன் மலையில்இருந்து ஆட்சி புரிந்தான். இது கங்காஸ்ரீபுரம் எனவும் அழைக்கப்பட்டது. இவன் மந்திரியாக இருந்தவன் அழகோன் நரன் என்பவன். இவனை அழகேஸ்வரன் எனவும் அழைப்பர். இவன் 5ம் புவனேகபாகு என்னும் பெயரோடு கோட்டைக்காட்டை அரசதானி ஆக்கினான்.
இவ்வாறு சிங்கள மன்னர்கள் தமிழருக்கு அஞ்சி அனுராதபுரத்தை விடுத்து தெற்கு, தென்மேற்கு நோக்கித் தமக்குப் பாதுகாப்புத்தேடி மலைநாட்டுப் பகுதிகளில் இராசதானிகளைக் காலத்துக்குக்காலம் மாற்றியமைத்துக் கொண்டனர். இ14லங்கையின் வடபகுதியாகிய இராசரட்டைப் பகுதி முழுமையையும் சுமார் 3ம் விக்கிரமபாகுவரை தமிழர் குடிப்பரம்பலும் தமிழர் ஆதிக்கமும் நிலவியதென்பது அங்கை நெல்லி.
ஏழாவது படையெழுச்சியில்இருந்து மாகன் படையெழுச்சியைத் தொடர்ந்து யாழ்ப்பாண அரசு சங்கிலியன் ஆட்சி முடிபு வரையும் வடகீழ்ப் பகுதியில் முக்கியமாக இராசரட்டைப்பகுதியின் பெரும் பகுதி தமிழர் குடிப் பரம்பலும் ஆதிக்கமுமே நிலவிய காலமாகும்.
3ம் பராக்கிரமவாகு காலத்தில் கி.பி. 1371 – 1378ல் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த தமிழரசன் ஆரியச் சக்கரவர்த்தி என்பான் தென்முகமாகப் படை திரட்டிச் சென்று கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய இடங்களைக் கைப்பற்றி சிங்கள அரசனைத் தமக்குக் கப்பம் கட்டுமாறு செய்தனன் என இலங்கை வரலாறே கூறும். இதனாலும் 14ம் நூற்றாண்டிலும் இராசரட்டைப் பகுதி தமிழர் ஆதிக்கத்தில் இருந்தமை புலனாகிறது. ஏன் ஆரியச் சக்கரவர்த்தி போர் தொடுத்துக் கைப்பற்றிய இடம் மாயரட்டைப் பகுதியாகும். இராசரட்டைப் பகுதி சிங்களவர் ஆதிக்கத்துள் இருந்திருக்குமானால் ஆரியச் சக்கரவர்த்தியின் படைகள் மாயரட்டைக்குப் போகும் வழியில் அனுராதபுரச் சூழலில் எதிர்ப்புக்கு ஆளாயிருப்பர். ஆதலின் இராசரட்டைப் பகுதியைக் கடந்து மாயரட்டைப் பகுதிக்கு ஆரியச் சக்கரவர்த்தி படைநடத்திச் சேறலும் திரும்ப வெற்றியோடு மீளுதலும் முடியாத காரியம்.
இனி அழகோன்நரன் ஆட்சிக்கு வந்ததும் தமிழர்களை எதித்துப் போராடி அவர்களை வடபகுதிக்குப் பின்வாங்கச் செய்தான். கப்பங் கட்டுதலையும் நிறுத்தி விட்டான் என இலங்கை வரலாறு கூறுகின்றது. இங்கே வட பகுதியென இலங்கை வரலாறு குறிப்பிடுவது இராசராட்டைப் பகுதியே என உணரலாம். அழகேஸ்வரன் ஆட்;;சி;க்காலம் கி. பி. 1378 – 1398 ஆகும். இவனது பட்டப் பெயர் புவனேகபாகு.
3ம் விக்கிரமவாகுவோடு போர்தொடுத்த ஆரியச் சக்கரவர்த்தி செயவீரசிங்கையாரியனாவான். இலங்கை வரலாற்றில் செயவீரசிங்கையாரியன் இலங்கையின் தென்பகுதியைத் திறைகொடுத்து ஆளும்படி பராக்கிரமபாகுவுக்குக் கொடுத்தான் என்றும் செயவீரசிங்காரியனோடு சண்டைசெய்த சிங்கள அரசன் புவனேகவாகு என்றும் கூறப்பட்டுள்ளது. செயவீரசிங்காரியன் என்பான் சிங்களவரோடு சமர் புரிந்துசில கிராமங்களைப் பறித்தெடுத்து அவற்றிலே தமிழரைக் குடியேற்றினான் எனவும் இலங்கை வரலாறே கூறுகின்றது.
இலங்கை வரலாற்றில் 3ம் பராக்கிரமவாகு காலத்திலேயே செயவிக்கிரமசிங்காரியன் போர் தொடுத்து வெற்றியீட்டினான் என்றும் கூறப்பட்டிருப்பதினாலும் 3ம் விக்கிரமபாகுவின் மந்திரியாய் இருந்த அழகோன்நரன் என்பவனே புவனேகவாகு எனப் பெயர் சூட்டி அவனுக்குப்பின் அரசனாக ஆட்சி புரிந்தமையினாலும் இலங்கை வரலாற்றில் செயவீரசிங்காரியன் போர் தொடுத்த சிங்கள அரசன் புவனேகவாகு எனக் கூறப்படுவது மேற்போந்த புவனேகவாகுவேயாகும். இவன் 5ம் புவனேகவாகு.
இனி, 6ம் வி;க்கிரமவாகு வடபகுதியில் உள்ள தமிழரை அடக்கி ஒடுக்கக் கருதி தனது மகன் சபூளவன் அல்லது சம்பூமளவன் தலைமையில் ஓர் படையை அப்பகுதிக்கு அனுப்பி வைத்தான். 6ம் விக்கிரமபாகுவின் ஆட்சிக்காலம் கி.பி. 1410 – 1462 ஆகும்.
சம்பூமளவன் வட பகுதிக்குச் சென்று அங்கு ஆட்சி புரிந்துகொண்டிருந்த அப்பகுதியில் அரசனைக் கொன்று பலரைச் சிறைப்படுத்தி அப்பகுதியை ஆட்சி புரிந்தான் என இலங்கை வரலாறு கூறுகின்றது. இந் நிகழ்ச்சி கி.பி. 1410 – 1462 க்கு இடையில் நடந்திருக்கலாம்.
இக்காலத்தில் வடபகுதியை ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவன் கனகசூரியசிங்காரியன் என்பவன். இவன் போரில் பின்வாங்கி மனைவி இரு பி;ள்ளைகளுடனும் ஒளித்து இந்தியாவுக்கு ஓடினான் என இலங்கை வரலாறே கூறுகிறது. 17 வருடகாலம் இந்தியாவிலேயே வாழ்ந்தான். பின் தனது இரு மக்களாகிய பரராசசேகரம், செகராசசேகரம் என்பவர்களோடு மதுரையரசனின் படை உதவி பெற்று யாழ்ப்பாணம் வந்து சிங்கள அரசனோடு போர் தொடுத்தான். அப்போரில் சிங்கள தேசப் படைத்தலைவன் விசயபாகுவைக் கொன்று அரசைக் கைப்பற்றினான். இலங்கை வரலாறே கூறுகின்றது. ஆதலின் சம்பூமளவன் யாழ்ப்பாண அரசனைக் கொன்றான் என்பது, வரலாறு எழுதியோரின் தவறாகும்.
ஆதலின் சம்பூமளவனின் யாழ்ப்பாண ஆட்சிக்காலம் கனகசூரியசிங்காரியன் இந்தியாவில் வசித்தது 17 வருட காலமேயாகும். சம்பூமளவனின் தந்தை 6ம் பராக்கிரமவாகு 1410 – 1462 வரை தென் இலங்கை அரசனாக ஆட்சி புரிந்துள்ளான். இக்கால இடைவெளியின் பிற்பகுதியே சம்பூமளவனும் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்தவன் ஆவான். சம்பூமளவன் தென்னிலங்கை அரசனாக ஒரு போதும் இருக்கவில்லை@ வரலாறில்லை. ஆதலின் 17வருடம் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்தான் என்பதே வரலாற்றுண்மை 6ம் பராக்கிரமவாகுவின் மகன் இருக்கப் பேரன் அரசனாக வந்தமைக்குக் காரணம் இருக்கவேண்டும். ஆம் அச்சமயம் சம்பூமளவன் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்து கொண்டிருந்தமையே காரணம் ஆக வேண்டும். ஜயபாகு சம்பூமளவனின் மகனாக இருத்தல் கூடும்.
ஜயபாகு தென்னிலங்கை அரசனாக இருக்க சம்பூமளவன் யாழ்ப்பாண அரசனாக இருக்கிறான். இக்கால கட்டத்திலேயே கனகசூரிய சிங்காரியன் படையெடுப்பு நிகழ்கின்றது. இப்போரில் சம்பூமளவன் பின்வாங்க கனகசூரியன் அரசைக் கைப்பற்றுகிறான்.
ஜயவாகு ஆட்சிக்கு வந்து 2 வருடத்தால் அவனை 6ம் புவனேகபாகு என்பவன் கொன்று தென்னிலங்கை அரசன் ஆகின்றான் எனவே யாழ்ப்பாணப் போரும் தென்னிலங்கை ஜயபாகு போரும் ஒரே காலத்தில் நடைபெற்றதாகக் கருத இடமுண்டு. ஏனெனில் சம்பூமளவனும், ஜயபாகுவும் ஒருவருக்கொருவர் உதவி புரிய முடியாத நிலையில் இரு போர்களும் நடைபெற்றிருப்பதனால் அவ்வாறு கருத இடமுண்டு ஜயவாகு ஆட்சிக்காலம் 1462 – 1464ஆகும். எனவே ஜயபாகுவைப்போரிற் கொன்று அரசு கைப்பற்றியது 1764ல். அப்பொழுதே சம்பூமளவன் போரும் நடைபெற்றிருந்தால் சம்பூமளவன் அரசு கைப்பற்றிய காலம் (1464 – 17) 1447ல் ஆகும். எனவே கனகசூரிய சிங்காரியன் படை எடுத்து சம்பூமளவனை வென்று ஆட்சி கைப்பற்றிய காலம் 1463 – 1464 ஆகும்.
பின்னர் 6ம் புவனேகபாகுவின் சகோதரன் ஆட்சி புரிந்தான். இவனது அரசதானி கோட்டைக்காடு. இவனுக்கு தர்ம பராக்கிரமபாகு, விசயபாகு, றைகம்பண்டாரம், இராசசிங்கன் என்போர் மக்களாவர். இவனுக்குப்பின் அரசுக்கு வந்தவனே மூத்த மகனாகிய தர்மபராக்கிரமவாகு என்பவன். இவன் ஆட்சிக்கு வர இவன் காலத்தில் இலங்கைக்கு ஓர் புதுயுகம் உதயமானது. இவனது ஆட்சிக்காலம் 1505 – 1527 ஆகும். கி.பி. 1505ம் ஆண்டு மேலைத் தேசத்தவர்களாகிய போர்த்துக்கீசர் இலங்கை மண்ணில் காலடி வைத்த ஆண்டாகும். அவர்கள் வருகையோடு சிங்களவர் ஆட்சியும், யாழ்ப்பாணத் தமிழர் ஆட்சியும், இலங்கை அரசியலும் ஒர் புதிய திருப்பம் பெற்றது.
அனுராதபுரத்தை இராசதானி ஆக்கியவன் பந்துகாபயன். கி.மு 437 ஆகும். அன்று தொட்டு தொடர்ந்தும் இடையீடுபட்டும் 1250 ஆண்டுகள் அனுராதபுரி இராசதானியாக விளங்கியது. என்றாலும் மகாவமிசகாலமே அதன் உச்சமான காலமாகும். மகாவமிசத்தில் தமிழும், இந்துமதமும் ஈழநாட்டு மக்களிடையே அற்றுப் போகவில்லை சிங்கள இனம் என ஒன்று தோன்றி வலுவடைந்த காலத்திலும் தர்ம பராக்கிரமபாகு காலம்வரையில் இராசரட்டைப் பகுதி பெரும்பாலும் தமிழர்கள் பெருக்கமாகவும் வலுவுடனும் வாழ்ந்தார்கள்.
எக்காலத்திலாயினும் வடபகுதியில் சிங்கள மன்னர் ஆட்சி தொடர்ந்து செவ்வனே நடைபெற்றதெனக் கூறமுடியாது. நாகர் பரம்பரையினரே ஆட்சி புரிந்து வரலாயினர். அவர்கள் பேரரசோடு இணைந்தும் எதிர்த்தும் ஆட்சிபுரிந்து வந்தனர். கி.பி. 785 வரை ஈழநாட்டு அரசபரம்பரையினர் வரலாற்றுக்கு எட்டாத காலம் தொடக்கம் ஆட்சி புரிந்துவந்தனர். இராசரட்டைப் பகுதியில் மேலும்மேலும் தமிழர்களின் குடிப்பரம்பல் அதிகரிக்கப்பட்டமைக்குக் காரணம் இந்தியப்படை எழுச்சிகளே மகாவமிச காலம் 847 ஆண்டுகளில் 80 ஆண்டுகள் இந்தியத் தமிழ் மன்னர்களே ஆட்சி செய்துள்ளார்கள். எனவே இந்திய மக்களின் குடியேற்றம் கி. மு. 237 க்கும் கி. மு. 84 க்கும் இடைப்பட்ட இந்தியர் ஆட்சியில் மிகுதியும் நடைபெறுவது சகசமே.
5. ஈழமும் தமிழர் ஆதிக்கமும்.
இப்போது நாம் அறியக்கூடிய உண்மைகள் பல. விசயன் வருவதற்கு முன்னர் ஈழநாட்டில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே. அவர்கள் வடமொழியாளரால் இயக்கர், நாகர் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சிவநெறிக் கோட்பாடு உடையவர்கள். தமது நாடாகிய ஈழத்தைத் தாமே ஆட்சிபுரிந்து வந்தனர். விசயன் அவர்கள் பரம்பரையில் மணம் செய்து உறவாடியே அரசுரிமை பெற்றான். விசயன் முதலியோர் கலிங்கநாட்டுத் தமிழர்களே. ஆரிய வகுப்பினர் அல்லர். புத்த பிக்கு மிகுந்தன் ஈழநாட்டில் காலடி வைக்கும் வரையும் ஈழநாட்டில் வாழ்ந்த மக்கள் ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, கலாச்சாரம் உடையவர்களாகவே இருந்தார்கள். வேறோர் இனம், வேறோர் மதம் இருந்ததா? கூறுமின்!
இனி விசயன் முதல் அபயன் ஆட்சி முடியும்வரை அவர்களது இராசதானி ஈழநாட்டின் வடபகுதியிலேயே இருந்தது. தமிழர் நெருக்கமாகக் குடியமர்ந்து நாகரீகமாக வாழ்ந்த பகுதி அதுவே. விசயனின் இராசதானி தம் பன்னா. பந்துவாசன் இராசதானி உபத்தீசநுவரை. இவை மாதோட்டத்துக்கு அணித்தாக இருந்தன. எனவே விசயன் ஆட்சி தொடக்கம் (கி. மு. 543) கி. மு. 454 வரை 89 ஆண்டுகள் வடபகுதியில் விசயன் பரம்பரையினரின் ஆட்சி நிலவிய காலமாகும்.
அக்காலத்தில் ஈழநாடு மூன்று பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை இராசரட்டை, மாயரட்டை, உறுகுணை என்பன. இராசரட்டை மகாவலிகங்கைக்கும், தெதுறுஓயாவுக்கும் வடபால் உள்ள பகுதியாகும். மாயரட்டை வடக்கே தெதுறுஓயாவையும், கிழக்கே மகாவலி கங்கையையும், தெற்கே கலுகங்கையையும், மேற்கே கடலையும் எல்லையாக உடைய பகுதியாகும். உறுகுணை கிழக்கேயும், தெற்கேயும் எஞ்சிக்கிடந்த கரை நாட்டை அடக்கிய பகுதியாகும். வரலாற்றுக் கண்கொண்டு நோக்கும்போது அக்காலத்தில் இராசட்டைப் பகுதியே குடிப்பரம்பல் உள்ள பகுதியாகவும், நாகரீக வளர்ச்சியுடைய பகுதியாகவும், அரச பரம்பரையினர் வாழ்ந்த, ஆட்சி புரிந்த இடமாகவும் இருந்தமை புலனாகும்.
அனுராதபுரத்தை இராசதானி ஆக்கியவன் பந்துகாபயன். கி. மு. 437 ஆகும். அபயனுக்குப்பின் கி; மு. 454 தொடக்கம் 17 வருடம் அரசின்றி இருந்த காலமாகும். அன்றுதொட்டு தொடர்ந்தும் இடையீடுபட்டும் 1250 ஆண்டுகள் இராசதானியாக விளங்கியது. என்றாலும் மகாவமிச காலமே அதன் உச்சமான காலமாகும். மகாவமிச காலத்தில் தமிழும், இந்துமதமும்; ஈழநாட்டு மக்களிடையே அற்றுப் போகவில்லை. சிங்கள இனம் என ஒன்று தோன்றி வலுவடைந்த காலத்திலும் தர்மபராக்கிரமவாகு காலம் வரையில் இராசரட்டைப் பகுதி பெரும்பாலும் தமிழர்கள் பெருக்கமாகவும் வலுவுடனும் வாழ்ந்தார்கள்.
எக்காலத்திலாயினும் வடபகுதியில் சிங்கள மன்னர் ஆட்சி செவ்வனே நடைபெற்றதெனக் கூறமுடியாது. நாகர் பரம்பரையினரே ஆட்சி புரிந்து வரலாயினர். அவர்கள் பேரரசோடு இணைந்தும் எதிர்த்தும் ஆட்சிபுரிந்து வந்தனர். இராசரட்டைப் பகுதியில் மேலும் மேலும் தமிழர்களின் குடிப்பரம்பல் அதிகப்பட்டமைக்குக் காரணம் இந்தியப்படை எழுச்சிகளே. மகாவமிசகாலம் 847 ஆண்டுகளில் 80 ஆண்டுகள் இந்தியத் தமிழ் மன்னர்களே ஆட்சி செய்தார்கள். இந்திய மக்களின் குடியேற்றம் கி;. மு. 237க்கும். கி. மு. 84க்கும் இடைப்பட்ட 80 வருட காலமாகும். இன்று இவர்கள் பரம்பரையினர் அனுராதபுரம், புத்தளம், சிலாபம், நீர்கொழும்புச் சூழலில் குடியேறியவர்கள். இன்று சிங்களவர் புத்த சமயிகளாய் இருத்தல் வியப்பல்ல. பிற்பாடு இந்தியத் தமிழர்களின் குடியேற்ற காலம் கி. பி 9ம்நூற்றாண்டுக்கும் 16ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகும். இக்காலம் சிங்கை நகர் ஆட்சியின் பிற்பகுதியும் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலமும் ஆகும்.
இனி, ஈழநாட்டுத் தமிழர்கள் வரலாற்றுக்கு எட்டாத காலம் தொடக்கம் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பழைய வரலாற்று நூலாகிய பாரதத்திலும் ஈழநாட்டு நாகர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பாரத காலம் கி. மு. 1500 என்பர். இக்காலத்தில் யாழ்ப்பாணம் என அழைக்கப்படுவது ஒரு காலத்தில் மணிபுரம் என அழைக்கப்பட்டது. இங்கே தீர்த்த யாத்திரை காரணமாக பாண்டவருள் ஒருவனான அருச்சுனன் என்பான் நகுலகிரிக்கு வந்தான் என்றும், அப்போது மணிபுரத்தில் ஓர் பூங்காவில் அந்நாட்டு அரசன் மகளாகிய சித்திராங்கதை என்பவளைக் கண்டான் என்றும், கண்டதும் அவள் மீது தணியாத காதல் கொண்டு அவளை மணம் முடித்தான் என்றும், இவர்கள் இருவருக்கும் சித்திராங்கதன் என்னும் ஓர் ஆண் மகன் பிறந்தான் என்றும், பின் சித்திராங்கதன் அரசனாய் இருக்கும் காலத்தில் தந்தையாகிய அருச்சுனன் திக்கு விசயமாக ஈழநாட்டுக்கு வந்தான் என்றும், அப்பொழுது சித்திராங்கதன் தந்தையென்று அறியாது போர் தொடுத்து அருச்சுனனை வென்றான் என்றும். சித்திராங்கனது கொடி சிங்கக்கொடியும், பனைக்கொடியும் என்றும் பாரதம் கூறும். ஈழநாட்டுத் தமிழர் சிவனெறிக் கொள்ளை உடையவர்கள் ஆதலின் சக்தியின் வாகனமாகிய சிங்கத்தைத் தமது கொடியாகக் கொண்டனர். பனை ஈழநாட்டின் இயற்கைத் தாவரம் ஆனதினாலும் வருடம் முழுமையும் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உறையுள், எரிபொருள் கொடுத்து உதவுவதினாலும் அதனைக் கற்பகத்தருவெனவே அழைக்கலாயினர். ஆதலின் அதனையும் தமது கொடியுள் ஒன்றாகக் கொண்டனர்.
இனி, பாண்டவருள் ஒருவனும், அழகு, ஆற்றல் படைத்தவனும். கல்வி கேள்வி நிறைந்தவனும் ஆகிய அருச்சுனன் ஈழநாட்டு கன்னிகையைக் கண்டதும் மோகம் கொண்டு காதலித்து அவளைப் பிரிய மனம் இல்லாதவனாய் மணம் முடித்தான். இதனால் அக்கன்னிகை பேரழகும், நாகரீகமும், பண்பாடும் உடையவளாய் இருந்தாள் என்பது புலப்படும், பாரத வரலாறு முதன் முதல் வடமொழிக் காப்பியமாக வெளிவந்தால் பெயர்கள் வடமொழி மரபில் மாற்றம் பெற்றன.
இன்னும் இதற்கு முற்பட்ட வரலாறுகளாவன கந்தபுராண, இராமாயண வரலாறுகளில் பேசப்படும் சூரன், குபேரன், இராவணன் ஆதியோர் ஈழநாட்டின் பண்டைத் தமிழ் மன்னாதி மன்னர்களே. இவர்கள் மனைவியர் ஆகிய பதுமகோமளை, சித்திரரேகை, மண்டோதரி ஆகியோர் மாதோட்டத்தில் இருந்து அரசோச்சிய ஓவியத்திலும், கட்டிடக் கலையிலும் திறமைபடைத்த அரச பரம்பரையினர் ஆகிய நாகர் எனப்பட்ட பண்டைத் தமிழ் மன்னரின் அரச கன்னிகைகளேயாவர். இவ்வரச குலத்தினர் புட்பகவிமானம், ஆகாய ஊர்தி, காந்தக் கோட்டை ஆதியன அமைத்து புகழுடனும். பேராற்றலுடனும் வாழ்ந்தார்கள் என பண்டைப் பனுவல்கள் பறைசாற்றுகின்றன. அவையாவன: புறநானூறு, சிலப்பதிகாரம், பழமொழி, சிறுபாணாற்றுப்படை, கலிங்கத்துப்பரணி, சீன யாத்திரிகள், கியூன்திசங் எழுதிய நூல், அரபிக் கதைகள், மாந்தைப் பள்ளு என்பன.
இராமர் காலம் கி. மு. 2300 – 1950 என ஆய்வாளர் கூறுவர். எனவே இராவணன் காலம் அஃதே. இராவணனுக்குப் பின் வீடணன் ஆட்சி செய்ததாக இராமாயணம் கூறும். வீடணனுக்குப் பின்னர் ஈழநாட்டாட்சி ஆங்காங்கு சிற்றரசுகளாக ஒவ்வோர் பகுதியாக அரச பரம்பரையினர் ஆட்சி புரியலாயினர்.
பிற்காலத்தில் ஓர் நாக அரசன் வளைவணன் என்பவன் பேசப்படுகிறான். இவன் மனைவி வாசமயிலை என்பவள். இவர்களின் மகள் பீலிவளை என்பவள். இவளையே சோழ அரசன் நெடுங்கிள்ளி என்பவன் கண்டு காதலித்து மணந்தான். இதற்குப் பழைய சங்க இலக்கியங்கள் சான்று. இச்சோழ மன்னனுக்கும் பீலிவளைக்கும் மகனாகப் பிறந்தவனே தொண்டமான் இளந்திரையன் என்பவன். இத்தொண்டமான் இளந்திரையன் காலம் கி.; மு. 220 – 200 என ஆய்வாளர் கூறுவர். இக்காலம் கடைச்சங்கத்து இறுதிக்காலமாகும். எனவே தந்தை நெடுங்கிள்ளி காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டாகும்.
ஆகவே நாக அரசன் வளைவணன் காலமும் கி. மு. 3ம் நூற்றாண்டை அண்மியதேயாகும். இவ்வாறு மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது. எனவே ஈழநாட்டை வளைவணன் ஆட்சிபுரிந்தது விசயன் வருகைக்கு சுமார் 200 ஆண்டுகள் பின்னாகும். இவன் ஆட்சி புரிந்த இடம் ஈழநாட்டின் வடபகுதியில் உள்ள முக்கிய தலைநகராய் இருந்த கதிரமலைப் பகுதியாகும். கதிரமலை தற்போது கந்தரோடை என வழங்கப்படுகின்றது.
இனி, கி. மு. 3ம் நூற்றாண்டிலே தீசன் என்னும் நாக அரசன் ஒருவன் கல்யாணியில் இருந்து அரசாண்டதாகவும் அப்போது ஓர் கடல்கோள் நடைபெற்றதாகவும் முதலியார் எழுதிய யாழ்ப்பாண வரலாறு கூறுகிறது. இத் தீசனும் அக்காலத்தில் ஈழநாட்டை ஆட்சிபுரிந்த குறுநில மன்னருள் ஒருவனாவான். எனவே வளைவணனும். சோழ நாட்டரசன் நெடுமுடிக்கிள்ளியும், தீசனும் ஆகிய மூவரும் ஏறக்குறைய சம காலத்தவர் என்பது தெளிவு. கல்யாணி என்பது கழனிப்பகுதியாகும்.
பீலிவளைக்கும் நெடுமுடிக் கிள்ளிக்கும் பிறந்த மகனை, சிறுவயதிலே தாயாகிய பீலிவளை என்பாள் பிள்ளைக்கு அடையாளமாகத் தொண்டைக்கொடி அணிந்து கப்பல் மார்க்கமாகத் தந்தையாகிய நெடுமுடிக்கிள்ளியிடம் அனுப்பி வைத்தாள். கடற்கொந்தளிப்பினால் கப்பல் கவிழ்ந்து பிள்ளை கடற் திரையால் கரையில் ஒதுக்கப்பட்டது. இது வரலாறு. இதனை அப் பிள்ளைக்கு இட்டு வழங்கிய பெயரே சான்றாகின்றது. என்னை? தொண்டைக் கொடி அணிந்தமையால் “தொண்டமான்” என்றும் சிறுபிள்ளை ஆனதால் “இளம்” என்றும், கடற் திரையால்கரை சேர்க்கப்பட்டதனால் ‘திரையன்’ என்றும் அழைக்கப்பட்டான் அல்லவா?
இதனால் ஓர் வரலாற்றுண்மை புலனாகிறது. வளைவணன் நெடுமுடிக்கிள்ளி, தீசன் ஆகியோர் காலத்தில் ஓர் கடற்பெருக்கு ஏற்பட்டதென முன்னர் கூறப்பட்டது. இக் கடற்பெருக்கு அப்பிள்ளை வந்துகொண்டிருந்த காலத்தில் நடைபெற்றதாக வேண்டும். அக் கடற் பெருக்கின் கொந்தளிப்பினால் கப்பல் கவிழ்ந்தது. கடற்றிரை எற்றிப் பிள்ளையை கரையில் ஒதுக்கியது என்பது உய்த்துணரக் கூடியவை.
இனி, இடையிடையே ஆட்சி செய்த அரசர் பெயர் வரிசை அறிய முடியாத இடைக்காலங்கள் பல உள. அவையாவன:
1. சூரன் ஆட்சிக்குப்பின்னர் மாலியவான் ஆட்சி வரையுள்ள காலத்து அரசர்கள்.
2. வீடணன் ஆட்சிக்குப்பின்னர் சித்திராங்கதன் ஆட்சி வரையுள்ள காலத்து அரசர்கள்.
3. சித்திராங்கதன் ஆட்சிக்குப்பின்னர் வளைவணன் ஆட்சி வரையுள்ள காலத்து அரசர்கள்.
4. வளைவணன், தீசன் ஆட்சிக்குப் பின்னர் கலிங்க அரச குமாரன் உக்கிரமசிங்கன் ஆட்சி வரையுள்ள காலத்து அரசர்கள்.
சித்திராங்கதன் பாரத காலத்தவன். பாரத காலம் 1500 வரை என ஆய்வாளர் கூறுவர். வளைவணன் கி. மு. 3ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். கி. மு. 3ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் சுமார் 1200 ஆண்டுகளாகும். இக்காலத்தில் இயக்க நாக அரச பரம்பரையினர் ஆட்சி செய்தார்கள் என வரலாறு கூறுகின்றது. ஆனால் அவர்கள் பெயர் வரலாற்றில் அகப்படவில்லை. இக்கால இடைவெளியிலேயே விசயன் கலிங்க நாட்டில் இருந்து ஈழநாட்டிற்கு வருகிறான். அஃது கி. மு. 543 விசயன் வந்த ஆண்டே அவனது ஆட்சி ஆண்டாகவும் இலங்கை வரலாறு கூறுகின்றது. எவ்வாறாயினும் அவன் வருகையும், ஆட்சியும் ஒரேயாண்டில் நிகழ்ந்ததாகக் கூறுவதுபொருத்தம் அற்ற கூற்றாகும். இதுபற்றி முன்னர் விளக்கம் கூறப்பட்டது. எனவே அவன் வருகைக்கும், ஆட்சிக்கும் இடையே சில பல ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும். விசயன் வந்த காலத்தில் ஈழநாட்டை ஆட்சி புரிந்த அரசர்களின் பெயர்களையும் அறிய முடியவில்லை. ஆனால் நாக பரம்பரையினரின் ஆட்சி நிலவிய தென்பதை மகாவமிச வரலாறே கூறுகின்றது. புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வந்தார் என்றும், இரண்டாவது வருகையில் மணிபல்லவத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த இரு நாக அரசர்களின் பிணக்கைத் தீர்த்தார் என்றும்கூறுகின்றது. இவர்கள்விசயன் வருகைக்கு முன்னதாக ஆட்சி புரிந்தவர்கள் ஆவர். ஏன்? புத்தர் நிருவாணம் அடைந்தது கி. மு. 543. அதற்கு முன்னரே அவரது ஈழநாட்டு வருகை நடைபெற்றிருக்கிறது.
இனி இயக்கர், நாகர், அசுரர். இராக்கதர் என அழைக்கப்பட்ட சூரன் ஆதியோர் மங்கோலிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கிருந்தே வந்து ஈழநாட்டில் குடியேறினார்கள் என்றும் முதலியார் இராசநாயகம் அவர்கள் தாம் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரத்தில் காட்டியுள்ளார்கள். அஃது எவ்வாற்றானும் பொருத்தமற்ற முரண்பாடான தப்பான கூற்றாகும். சிறிதும் ஆதாரமற்ற வரலாற்றுக்கு முரணான வெற்றுரையாகும். தமிழரின் தொன்மை பற்றியும் உலகின் முதன் முதல் தோன்றிய மக்கள் உற்பத்தியும் பற்றி ஆங்காங்கு விளக்கியுள்ளமை அறிக.
இவர் கூற்று உண்மையானால் குமரிக் கண்டத்தில் மக்கள் இனம் தோன்றவில்லையா? ஈழமும் இந்தியாவும் குமரிக்கண்டத்தில் சேராத வேறு நாடுகளா? அன்றி ஈழமும் இந்தியாவும் மக்கள் இனம் இல்லாத வெறும் மணற் பாறையாக இருந்ததா? தமிழ் என்னும் மொழி மங்கோலியரின் மொழியா? சிவ வழிபாடும். கற்பு மாண்பும் மங்கோலியரிடம் இருந்து புகுந்ததா? உணர்மின்!
இனி, கல்யாணியில் இருந்து அரசு செய்த தீசன் என்பவனும், கதிரமலையில் இருந்து ஆட்சி புரிந்த வளைவணனும் அவன் மகன் பீலிவளையும், அவளை மணந்த சோழின் நெடுங்கிள்ளியும், அனுராதபுரத்தில் இருந்து ஆட்சிபுரிந்த தேவநம்பியதீசனும், சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி புரிந்த நெடுங்கிள்ளி மகன் தொண்டமான் இளந்திரையனும் ஆகிய இவர்கள் ஏறக்குறைய சமகாலத்தவர்களே. அஃதாவது 3ம் நூற்றாண்டின் முன், பின் பகுதியைச் சேர்ந்தவர்களேயாவர். தேவநம்பியதீசன் தம்பி மகாநாகன், அவன் மகன் யற்றாலதிசன் இருவரும் அக்காலப்பகுதியைச் சேர்ந்தவர்களே. யற்றாலதீசன் வரலாற்றில் ஒர்பெருங் கடற்பெருக்கு ஏற்பட்டதென்றும், அதனால் 979 கிராமங்களும். 470 குறிச்சிகளும் கடல்வாய்ப்பட்டதென்றும் மகாவமிசம் கூறுகின்றது. இக்கடற் பெருக்கின் போது தனர் நெடுங்கிள்ளி மகன் (தொண்டைமான் இளந்திரையன்) கப்பல் கவிழ்ந்து கரையில் ஒதுக்கப்பட்டான் ஆதல் வேண்டும். முன்னர் இதுபற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இக்காலம் இந்திய வரலாற்றில் கடைச்சங்கத்து இறுதிக்காலம் ஆகும்.
எனவே, ஈழநாட்டு மக்கள் விசயனுக்கு முன் வரலாற்றுக்கு எட்டிய காலம்வரையும். பின் கி. பி. 1505ல் ஆட்சி புரியத் தொடங்கிய தர்மபராக்கிரமவாகு காலம் வரையிலும் ஈழநாட்டில் அரசியல், கல்வி, சீர்திருத்தம். சிவநெறிக்கோட்பாடு, கலை கலாச்சாரம், நாகரீகம் உடையவர்களாய் தனித்துவமாகத் தலைசிறந்து உலகில் பேரும், புகழும்பெற்று வாழ்ந்தார்கள் என்பது வெள்ளிடை மலைபோல் தௌ;ளிதில் உணரக்கிடக்கின்றது.
முற்றிற்று.
நன்றியுரை
நம்நாட்டின் உண்மை வரலாற்றை உள்ளவாறு எல்லோரும் அறிந்திருக்க வேண்டும். “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனி சிறந்தனவே” ஆதலின் தாய் நாட்டில் அன்புரூக வாழ்வு அமைய வேண்டும் என்னும் சிந்தனையின் இயல்பாக “ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு” என்னும் இந்நூலை உலகுக்கு அளிக்க முன்வந்தேன்.
நூலை வெளியிடுவதற்கு உதவியாக பல பெரியோர்கள் மனமுவந்து நன்கொடை வழங்கியுள்ளார்கள்.
இந்நூலைப் பதிப்பதில் ஆர்வமுடன் ஊக்கமாக அச்சகத்தார் பணியாற்றிக் கௌரவித்தார்கள்.
வரணி முத்தமிழ் மன்றம் இந்நூல் வெளியீட்டு விழாவை மிகவும் பெருமை பாராட்டி சிறப்புற நடத்த முன்வந்து நடத்தினார்கள்.
மதிப்புக்குரிய யாழ்பல்கலைக் கழகத்தினரும், ஏனையோரும் மனம் உவந்து விழாவிற் பங்கு கொண்டு விழாவைப் பாராட்டிக் கௌரவித்தார்கள்.
இவர்கள் அனைவரையும் உலகம் போற்றிப் புகழ்ந்து நன்றி பாராட்டுவதுடன் எனது உளங்கனிந்த நன்றியைப் புலப்படுத்தி எல்லோரும் நன்று வாழ எல்லாம் வல்ல இறைவன்திருவருளை வேண்டுகின்றேன்.
ஆசிரியர்: பண்டித வித்துவான்
ஆ. சின்னத்தம்பி
பிழைதிருத்தம்
பக்கம் பிழை திருத்தம்
56 ஈழநாட்டை ஈழநாட்டுக்கு
58 கிறீஸ்தசகாமதத்துக்கு கிறீஸ்தசகாப்தத்துக்கு
59 இடையிலும் இடையிலே
63 வந்தது வந்து
64 சிகரம் விஹளம்
,, சிகழம் சிஹளம்
,, சிகழம் சிஹளம்
,, சிகழம் சிஹளம்
91 கலிங்க மாநகரில் கலிங்க மாகன்
94 எனவும் இடமுண்டு எனவும் எண்ண இடமுண்டு
95 தமிழனும் தமிழரும்
,, உடையவனும் உடையவர்கள்
,, என்பது என்பதும்
125 தப்புனாவின்பால் தப்புளுவின்பால்
133 பாண்டியவனான பாண்டியனான
Leave a Reply
You must be logged in to post a comment.