பத்து ஆண்டுகள்… எங்கே பாலகுமாரன், யோகி, புதுவை இரத்தினதுரை… சிங்களத்தின் தொடரும் கள்ள மவுனம்
வன்னிப் பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது அதாவது2009 மே 16,17,18 ஆகிய நாட்களில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை அரசாங்கம் எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தவில்லை. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதேபோன்று வன்னிப் பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது அதாவது2009 மே 16,17,18 ஆகிய நாட்களில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களில் பலர் காணாமல் போயுள்ளனர்.
சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை அரசாங்கம் எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தவில்லை.
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
இதேபோன்று சரணைடைந்த மட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஸ், இராணுவத்தினரின் சித்திரவதையின் பின்னர் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதார புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
இறுதிநாட்களில் சரணடைந்த பல போராளிகளை இதுவரை அரசாங்கம் உறவினர்களுக்கு காட்டாது இருப்பது, இவர்கள் இறுதி நாட்கள் பா.நடேசன், புலிதேவன், ரமேஸ் போன்று கொல்லப்பட்டுவிட்டார்களா? என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
விடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன் இறுதி நாட்களில் முதுகுப்பகுதியில் பலத்த காயமடைந்திருந்தார். இவரை இவரது மனைவியும் உறவினர்களும் முல்லைத்தீவு பகுதியில் வைத்தே இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால் அவரை இதுவரை அவரது உறவினர்களுக்கு காட்டவில்லை.
தளபதி லோறன்ஸ், கி.பாப்பா ஆகிய இருவரும் இணைந்து படையினரிடம் சரணடைந்திருந்தனர். லோறன்ஸ் இறுதியாக நீல நிற செக் சாரமும் பிறவுன் கலர் இரண்டு பக்கமும் பொக்கற் வைத்த சேட்டும் அணிந்திருந்திருக்கின்றார்.
அதேவேளை மெல்லிய நீலநிறத்திலான சேட்டும், நீல சாரமும் அணிந்திருந்த கி.பாப்பா கிலட்சஸ் ஒன்றின் உதவியோடு முல்லைத்தீவுப்பகுதிக்கு சென்றிருந்தார்.
இவர்களை இறுதியாக வன்னிச்செய்தியாளர் ஒருவர் படையினரால் காயமடைந்தவர்களை ஏற்றும் பகுதியான முல்லைத்தீவு பகுதியில் வைத்து, மிக அருகாமையில் கண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் விபரம்!!!
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:
ஆதவா ( செயற்பாடு தெரியாது)
அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
அம்பி ( செயற்பாடு தெரியாது)
அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),
ஆர்யன் (செயற்பாடு தெரியாது)
பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்)
பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் )
V. பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
Lt.Col. அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)
பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
பாலதாஸ் (சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )
பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),
பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)
பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )
Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)
எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
வண பிதா.பிரான்சிஸ் ஜோசப் (கத்தோலிக்க பாதிரியார் )
கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
கரிகரன் ( செயற்பாடு தெரியாது)இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)
இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
இசைப்பிரியா ( ஊடக பிரிவு)
ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)
ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
காந்தி (புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
கரிகாலன் (முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)
கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
குயிலன் (இராணுவ புலனாய்வு)
குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)
குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )
மலரவன் (நிர்வாக சேவை )
மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)
மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)
மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )
மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )
மோகன் அங்கிள் (கடற்புலிகள் )
முகிலன் (இராணுவ புலனாய்வு)
முகுந்தன் ( வட போர் முனையில் தீபனின் பிரதி )
நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)
நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )
நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )
நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )
நேயன் (புலனாய்வு)
நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )
நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய்
நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)
நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )
பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )
பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)
Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)
Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)
பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)
பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)
புலித்தேவன் (சமாதான செயலகம்)
புலிமைந்தன் (யோகியின் சாரதி)புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )
புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)
ரூபன் (ஏற்பாடுகள் பொறுப்பாளர்)ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )
ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)
புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)
Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)
Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)
ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)
ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )
ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)
S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)
சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)
சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)
செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )
சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)
சின்னவன் (புலனாய்வு)
சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)<br
Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)
Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)
திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)
திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )
துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)
வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)
வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)
Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)
Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)
வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)
வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)
வினிதா (நடேசனின் மனைவி )
வீமன் (கட்டளை தளபதி)விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)
யோகன் / சேமணன் (அரசியல் துறை)
யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)
அய்நா மனிதவுரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களின் வருகையின் எதிரொலியாக வடக்கு, கிழக்கில் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் 2 ஆயிரத்து 550 பேர் தொடர்பான விசாரணைகளை உடனடியாகத் தொடங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் என். பெர்ணான்டோ பயங்கரவாதப் புலனாய்வப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், காணாமல் போனவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய இரகசிய ஆவணத்தை நீதிமன்றத்தில் கையளித்தார். அதனை நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
காணாமல் போயுள்ள 2550 பேர் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை நடத்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை கவனத்தில் எடுத்து கொண்ட நீதவான் அதற்கான அனுமதியை வழங்கினார்.
அத்துடன் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை அய்யன்நா மனிதவுரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களின் வருகையின் நிமித்தம் எடுக்கப்படும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றே எண்ண வேண்டியுள்ளது.
இதே சமயம் இறுதிப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் திங்களன்று (ஓகஸ்ட் 26, 2013) நடைபெற்றுள்ளது. போரின் முடிவில் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த தமது உறவுகள் எங்கே என்று கண்டுபிடிக்கக் கோரி அவர்களின் உறவினர்கள் இந்த ஆட்கொணர்வு மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
2009 மே 18 ஆம் நாள், முல்லைத்தீவு செல்வபுரத்தில், சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த 800 பேர் பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் எங்கே என்பது இன்று வரை தெரியவில்லை என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, மேலும் புதிதாக 7 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஆட்கொணர்வு மனுக்களில் பல புதிய செய்திகள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்ருப்பதாக இந்த வழக்குகள் சார்பில் நீதிமன்றத்தில் தோன்றிய மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட்டவர்கள் சார்பிலான முதல் 5 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் எதிர் மனு தாக்கல் செய்வதற்கு எதிரணித் தரப்பினருக்கு கடைசி சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், இன்னும் இரண்டு நாட்களில் அந்த எதிர்மனு தாக்கல் செய்யப்படும் என்று அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்ததையடுத்து, நீதிமன்றம் இந்த வழக்குகளை வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு தள்ளிவைத்திருக்கின்றது.
இறுதிப் போரின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார். “இந்த மனுக்களை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களின் குடும்ப உறவினர்கள் தாக்கல் செய்துள்ளார்கள்” என்றார் சட்டத்தரணி இரட்னவேல்.
‘அது மட்டுமன்றி, கொத்துக்குண்டுகளும் இரசாயன குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள மனுதாரர்கள் தங்களின் கண் முன்னாலேயே இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய முகங்கள், உடல்கள் விகாரமடைந்து, துன்பமடைந்து அவர்கள் மரணமடைந்ததைக் கண்டதாகவும் முதன் முறையாகத் தெரிவித்திருக்கின்றார்கள்’ என்றும் சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவித்தார்.
இந்த வழக்குகள் யாவும் வரும் செப்தெம்பர் மாதம் 12 ஆம் நாளுக்கு நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
போர்க் காலத்திலும் போர் முடிந்த பின்னரும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளார்கள். இதில் யாதொரு தடயமும் இல்லாமல் காணாமல் போனவர்கள் இருக்கிறார்கள். இராணுவம் கைது செய்தபின்னர் காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.
காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 2,550 என்பது பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்குக் கொடுத்திருக்கும் தகவல். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும். பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் கொடுத்திருக்கும் பட்டியல் கூட இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அது பகிரங்கப்படுத்தினால் மட்டுமே யார் யார் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள், யார் யார் அந்தப் பட்டியலில் இல்லை என்ற உண்மை வெளிவரும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில் காணாமல் போனவர்களது பட்டியல் வவுனியாவில் வைத்து வெளியிடப்படும் என ஒருமுறைக்கு இருமுறை வாக்குறுதி அளிக்கப்பட்டது. ததேகூ மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் வவுனியாவில் குறித்த நாட்களில் காத்திருந்தார்கள். ஆனால் வாக்குறுதி அளித்தவாறு பட்டியல் வெளியிடப்படவில்லை. மக்கள் ஏமாந்தார்கள் அல்லது ஏமாற்றப்பட்டார்கள்.
முப்பது ஆண்டுகால ஆயுதப் போர் முடிவுக்கு வந்த போது இராணுவம் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளையும் போராளிகளையும் பொது மக்களையும் சரண் அடையுமாறு அறிவித்தது. இந்த அறிவித்தலை அடுத்து மே 16, 17, மே 18 நாட்களில் ஆயுதங்களை மவுனித்துவிட்டு விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரண் அடைந்தார்கள்.
மே 18, 2009 அதிகாலை அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தலைமையில் திருமதி நடேசன், தமிழீழவிடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் இரமேஷ், தமிழீழ காவல்துறையின் பொறுப்பாளார் இரமேஷ் (இளங்கோ), சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் சீவரட்னம் புலித்தேவன் மற்றும் 300 போராளிகள் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தார்கள்.
இவர்களது சரண் அய்யன்னா அதிகாரி விஜய் நம்பியாரின் மேற்பார்வையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விஜய் நம்பியார் சனாதிபதி மகிந்த இராசபக்சே மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராசபக்சே ஆகியோருடன் பேசினார். விடுதலைப் புலிகள் வெள்ளைக் கொடியுடன் சரண் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் உட்பட தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் இரமேஷ் அவர்களும் இலங்கை இராணுவத்திடம் மே 18 காலை சரணடைந்ததாக அன்றைய வெளியுறவுச் செயலாளர் பாலித கோஹன தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் அதனை அவர் மறுத்துவிட்டார்.
மே 18 காலை மக்களுடன் மக்களாக சரணடைந்த பா. நடேசன், கேணல் இரமேஷ், புலித்தேவன் போன்றோர் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்ற சர்ச்சை நீடித்துவந்த பின்புலத்தில் பா.நடேசன் ஆகியோருடன் இலங்கைப் படையினரது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சென்றதாக நம்பப்படும் கேணல் இரமேஷ் அவர்களை படையினர் தடுத்து வைத்து கடும் தொனியில் விசாரணை செய்யும் காணொளிகள் வெளிவரத் தொடங்கின.
கேணல் ரமேஷ் அவர்களை சிறீலங்கா இராணுவம் மே மாதம் 22 ஆம் நாள் விசாரணைக்கு உட்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட காணொளிகள் வெளியாகி இருந்தன. அதில் இரமேஷ் அவர்கள் சாதாரண உடையில் இருந்தார். ஆனால் விசாரணை நடைபெறும் வேளை அவரை சிறீலங்கா இராணுவம் இராணுவ உடையை போடச் சொல்கிறது. அதனை அடுத்து அவர் இராணுவத்தின் சீருடையை அணிகிறார். அக் காட்சிகள் தெள்ளத் தெளிவாக காணொளில் பதிவாகியுள்ளது. இராணுவத்தின் சீருடையை அவர் அணியும்போது அவரை “டேய்” என்று விளித்து இராணுவம் அவமானப்படுத்துகிற காட்சியும் பதிவாகியுள்ளது.
இராணுவம் தன்னை விசாரணை செய்யும் ஆனால் அடித்துக் கொலை செய்யும் என இரமேஷ் எதிர்பார்த்திருக்க மாட்டார். அதனால் தன்னைக் கொலை செய்ய இராணுவம் முடிவு செய்துவிட்டது என்பது இரமேஷ் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இராணுவம் ஏதோ அவரிடம் முழுப்பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதனை எழுதி விசாரணை நடத்துவது போல நாடகமாடியது. சரணடைந்த தன்னை இராணுவம் கொல்லாது என நினைத்த தளபதி இரமேஷ் அவர்களை சிறீலங்கா இராணுவம் கடுமையாக தாக்கி வதை செய்து கொலைசெய்தது. விசாரணையின் போது அவர் அணிந்த இராணுவ உடையில் தான் அவர் இறந்து கிடக்கும் புகைப்படம் வெளியானது. இந்தப் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ்நெட் இணையம் குறிப்பிட்ட படத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் அடையாளம் காட்டி உறுதி செய்திருப்பதாகவும் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து பா.நடேசன், சீவரட்னம் புலித்தேவன் தீக்காயங்களுடன் இறந்து கிடக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இவர்களும் இரமேஷ் போலவே சித்திரவதைக்குப் பின்னர் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.
பா.நடேசனோடு சிறீலங்கா இராணுவத்திடம் சரண் அடைந்த தமிழீழ காவல்துறையின் பொறுப்பாளார் இரமேஷ் (இளங்கோ) மற்றும் நடேசனின் துணைவியார் என்ன ஆனார்கள் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. அவர்களும் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.
போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக நிலவும் குழப்பத்தை, கோத்தபாய இராசபக்சே நிகழ்த்திய உரை தெளிவு படுத்தியுள்ளது.
ஓகஸ்ட் 08, 2012 அன்று கொழும்பு கலதாரி விடுதியில் நடைபெற்ற பாதுகாப்புக் கருத்தரங்கில் உள்நாட்டு, வெளிநாட்டு அதிகாரிகள் மத்தியில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய இராசபக்சே உரையாற்றும் போது போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிட்டார்.
புள்ளிவிபரங்களின் அடிப்படையில் போரின் முடிவில் 11,989 விடுதலைப் புலிகள் சரணடைந்ததாகவும் அவர்களுள் இதுவரை 10,965 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 636 விடுதலைப் புலிகள் இன்னமும் மருதமடு, கண்டகாடு, வெலிக்கந்த, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை விட மேலும் 383 விடுதலைப் புலிகள் சட்ட நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள, மற்றும் தற்போதும் தடுப்பிலுள்ள விடுதலைப் புலிகளின் மொத்த எண்ணிக்கை 11,984 பேர் மட்டுமேயாகும்.
இதனால், போரின் இறுதியில் சரணடைந்த 11,989 விடுதலைப் புலிகளில், 5 பேரின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் பலரது நிலை இன்னமும் அறியப்படாதுள்ள நிலையில், அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய இராசபக்சே அளித்துள்ள புள்ளிவிபரங்களே அந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
அடுத்து ஊடகவியலாளர் மேரி கொல்வின் பா.நடேசனும் புலித்தேவனும் தன்னோடு செய்மதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வி. புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடைய விரும்புவதாகவும் அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறு தன்னைக் கேட்டதாகவும் அதன் பின்னர் அது தொடர்பாகத் தான் எடுத்த முயற்சிகளை Sunday Times (UK) ஏட்டுக்கு எழுதிய கட்டுரையில் விபரித்திருந்தார். அதன் தமிழாக்கத்தை அடுத்துப் பார்ப்போம்.
முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே?
சண்டே ரைம்ஸ் செய்தி ஏட்டின் புகழ்பெற்ற போர்க்கள செய்தியாளரான மேரி கொல்வின் கடந்த 2012 பெப்ரவரி மாம் 23 நாள் சிரியாவின் நகரங்களில் ஒன்றான Homs நகர முற்றுகையின் போது ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலியானார். அவருக்கு அப்போது அகவை 55 ஆகும். அவரோடு பிரான்ஸ் நாட்டு படப்பிடிப்பாளரான Remi Ochlik (28) என்பவரும் இறந்து பட்டார். அதற்கு முன்னர் வன்னியை விட்டு 2001 ஆம் ஆண்டு 30 மைல்கள் காடுகள் ஊடாகக் களவாக வெளியேறிய போது எதிர்பாராத விதமாக பதுங்கியிருந்த சிறீலங்காப் படையினரால் சுடப்பட்டு ஒரு கண்ணை இழந்திருந்தார். இப்போது ‘புலிகள் சரண் அடைவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு என்னிடம் யாசித்தார்கள்’ (Tigers begged me to broker surrender – Marie Colvin , Times UK – May 24, 2009) என்ற தலைப்பில் மேரி கொல்வின் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கத்தை இப்போது பார்ப்போம்.
முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே?
வி.புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரித்தானிய செய்தித்தாள்கள் அம்பலப்படுத்தின! வெள்ளைக் கொடியோடு சரண் அடைந்த விடுதலைப் புலித் தலைவர்களை சிறீலங்கா இராணுவம் இயந்திரத் துப்பாகிகளால் சுட்டுப் படுகொலை செய்த செய்தியை பிரித்தானிய செய்தித்தாள்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன. British newspapers expose cold-blooded killing of LTTE leaders in Sri Lanka (வி.புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரித்தானிய செய்தித்தாள்கள் அம்பலப்படுத்தின) என்ற தலைப்பில் றொபேட் ஸ் ரீவன்ஸ் என்பவர் ஒரு விரிவான கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை த உலக சோசலிஸ்ட் இணையத்தில் (The World Socialist Website) யூன் 03, 2009 அன்று வெளியானது. அதன் தமிழாக்கத்தை இப்போது பார்ப்போம்.
கடந்த வாரம் பிரித்தானிய செய்தித்தாள்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் மே 18 அன்று ஸ்ரீலங்கா இராணுவம் சுட்டுக் கொல்வதற்கு சற்று முன்பதாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க இராசதந்திரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்ற செய்தியை வெளிப்படுத்தின. இந்தப் பேச்சு வார்த்தையில் அய்நா செயலாளர் நாயகத்தின் முக்கிய அதிகாரி விஜய் நம்பியாரும் (United Nations secretary generals chief of staff ) ஈடுபட்டிருந்தார்.
The Guardian and the Sunday Times நாளேடுகள் வி.புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் இருவரும் அய்நா செயலாளர் நாயகத்தின் முக்கிய அதிகாரி விஜய் நம்பியாரோடு ஒரு ஊடகவியாளர் மற்றும் பிரித்தானிய இராசதந்திரிகளது தூதுக்குழு ஆகிய இடையீட்டாளர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என செய்தி வெளியிட்டன.
The Guardian ஏடு இறப்பதற்கு முன்னர் வி.புலித் தலைவர்கள் நோர்வே நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் எரிக் சொல்கேய்ம் அவர்களோடும் தொடர்பில் இருந்ததாகக் கூறியது. ஸ்ரீலங்காவின் நீண்ட உள்நாட்டுப் போரில் 2002 இல் ஒரு அமைதி உடன்பாட்டை உருவாக்கும் முயற்சியில் ஒரு சிறப்புத் தூதுவராக கொல்கேய்ம் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The Sunday Times ஏட்டில் ஊடகவியலாளர் மேரி கொல்வின் (Journalist Marie Colvin) “புலிகள் சரண் அடைவதற்குரிய ஏற்பாட்டை செய்யுமாறு என்னிடம் யாசித்தார்கள்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் அவர் வி.புலிகள், மற்றும் பிரித்தானியா, அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அய்நா அதிகாரிகள் இடையில் தொடக்க தொடர்பு தன் மூலமாக இடம் பெற்றது என எழுதியிருந்தார்.
மேரி கொல்வின் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 5 இலட்சம் தமிழ்மக்களுக்கு உணவு மற்றும் மருந்து வழங்கலை அரசு முடக்கு வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை ஆராய வன்னிக்கு களவாகப் போயிருந்தார். உள்நாட்டுப் போர் பற்றி எழுதியவர்களில் மேரி கொல்வின் ஒருவராவர். அப்போது அவர் நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரையும் சந்தித்து இருந்தார்.
The Guardian ஏடு எப்படி நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரும் சிறீலங்கா அரசோடு கடைசிப் பொழுதில் – அவர்கள் சரண் அடைய இருந்த வேளையில் மே 18 காலை இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் – ஒரு போர் நிறுத்தத்தை கொண்டுவருவதற்கு முயற்சித்தார்கள் என விபரித்திருந்தது.
ஒரு பிரித்தானிய அதிகாரி பிரித்தானியாவின் ஈடுபாடு “பெரும்பாலும் நேரடியாக இல்லை” எனச் சொன்னார். ஆனால் குறித்த கட்டுரை நம்பியாரை மேற்கோள் காட்டி அவர் நியூ யோர்க்கில் இருந்த பிரித்தானிய இராசதந்திரிகளோடும் பெயர் குறிப்பிடப்படாத பிரித்தானிய அமைச்சரோடும் “நேரடித் தொடர்பில்” இருந்ததாகத் தெரிவித்தது. மேலும் நம்பியார் “நியூ யோர்க்கில் உள்ள அய்க்கிய இராச்சிய அலுவலத்தில் இருந்து செயலாளர் நாயகத்துக்கு முறையான முறையீடு இருந்தது” எனச் சொன்னார்.
நடேசன் மற்றும் புலித்தேவன் சிறீலங்கா இராணுவத்திடம் சரண் அடைய நினைக்கிறார்கள் என்ற முன்மொழிவை மேரி கொலினுக்கு நம்பியார் தெரிவித்தார். மேலும் சிறீலங்கா வெளியுறவு செயலாளர் பாலித கோகனாவோடும் அது பற்றிக் கதைத்தாகவும் சொன்னார்.
ஆனால் சிறீலங்கா அரசுக்கு போர்நிறுத்தம் செய்வதற்கான நோக்கம் இருக்கவில்லை. “சிறீலங்கா அரசு வி. புலிகள் சரண் அடைவதை ஏற்றுக் கொள்ளும் என்று சொல்லவில்லை. அதற்கான காலம் கடந்துவிட்டது” எனச் சொன்னதாக நம்பியார் The Guardian ஏடுக்குத் தெரிவித்தார்.
சரண் அடைவது பற்றி வி.புலிகள் எரிக் சொல்கேய்ம் அவர்களோடு தொடர்ப்பு கொண்டதை அடுத்து அவர் “செஞ்சிலுவைச் சங்கத்தோடும் சிறீலங்கா அரசோடும் தொடர்பு கொண்டார்.”
இதனைத் தொடர்ந்து பாலித கோகொன செஞ்சிலுவைச் சங்கத்துக்கு ஒரு செய்தி அனுப்பினார். அது பின்வருமாறு இருந்தது. “வெறுமனே படைகளுக்கு ஊடாக வெள்ளைக் கொடியோடு மெல்ல நடக்கவும்! தரப்படும் ஆணைகளுக்கு இணங்க கவனமாகச் செயல்படவும். இராணுவத்தினருக்கு தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றிப் பயம் இருக்கிறது.”
மேரி கொல்வின் எழுதிய கட்டுரையில் எப்படி வி.புலிப் போராளிகள் இராணுவத்தின் கடைசிப் படையெடுப்பின் போது ஒரு சிறிய காடு மற்றும் கடற்கரை ஓரமாக ஒரு இக்கட்டான நிலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் பெரும் மனவேதனைக்குரிய நிலைமைக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதையும் விபரிக்கிறார்: “அவர்களோடு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பொறிக்குள் அகப்பட்டுள்ளார்கள். அவர்கள் கையினால் தோண்டிய பதுங்கு குழிகளுக்குள் ஓயாத குண்டு மாரிக்கு இடையில் ஒளிந்துள்ளார்கள்.”
“சிறீலங்கா இராணுவம் வி.புலிகளைத் தோற்கடிப்பதற்கு தனது இறுதிப் படைநடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் வேளையில் பல நாட்களாக நான் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் அய்க்கிய நாடுகள் சபைக்கும் இடையில் ஒரு இடைத்தரகராக செயல்பட்டேன்” என மேரி கொல்வின் எழுதுகிறார். “நடேசன் என்னிடம் மூன்று அம்சங்களை அய்நா வுக்கு அறிவிக்குமாறு கேட்டிருந்தார். அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயார், அமெரிக்கா அல்லது பிரித்தானியாவிடம் இருந்து தங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரவேண்டும், சிறீலங்கா அரசு தமிழ்மக்களுக்கு அவர்களது அரசியல் தீர்வை வழங்கும் ஒரு ஏற்பாட்டிற்கு வாக்குறுதி தரவேண்டும்.”
உயர்மட்டத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள அய்நா சிறப்பு தூதுவர், அய்நா செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களது முக்கிய அதிகாரி விஜய் நம்பியார் ஆகியரோடு தொடர்பு ஏற்படுத்தி இருந்தேன். சரண் அடைவதற்கு வி.புலிகள் முன்வைத்த நிபந்தனைகளை விஜய் நம்பியாரிடம் சொன்னேன். அவர் அதனை சிறீலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாகச் சொன்னார்.
Guardian எழுதியிருந்ததை கொல்வின் சான்றுபடுத்துகிறார். மே 18 காலை தான் நம்பியாரோடு உரையாடியபோது சிறீலங்கா சனாதிபதி மகிந்த இராசபக்சே குறிப்பிட்ட இரண்டு தலைவர்களும் “வெள்ளைக் கொடியை உயரப்” பிடித்துக் கொண்டு சரண் அடைய முடியும் எனத் தனக்கு நம்பியார் சொன்னதாக கொல்வின் சொல்கிறார்.
கொல்வின் சொல்கிறார் “மறுமுறையும் நியூ யோர்க்கில் உள்ள அய்நாவின் 24 மணித்தியால கட்டுப்பாட்டு மையம் கொழும்பில் உள்ள நம்பியாரோடு திங்கட்கிழமை காலை 5.30 மணிக்கு என்னைத் தொடர்பு படுத்தியது. நான் அவரை நித்திரையில் இருந்து எழுப்பினேன்.”
“நான் சொன்னேன் வி.புலிகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டார்கள். சிறீலங்காவின் சனாதிபதி தனக்கு வாக்குறுதி அளித்துள்ளார். நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரும் பத்திரமாக சரண் அடையலாம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ‘வெள்ளைக் கொடியை உயரப் பிடிக்க வேண்டியதுதான்’ எனச் சொன்னார்.”
அதன்பின் கொஞ்ச நேரத்தில் நடேசன் அவர்களோடான செய்மதி தொலைபேசித் தொடர்பை கொல்வின் இழந்துவிட்டார். கொல்வின் தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு வி. புலிகளது தொடர்பாளரோடு தொடர்பு கொண்டு சரண் அடையப் போகும் போது வெள்ளைக் கொடியை உயரப் பிடிக்குமாறு சொல்லப்பட்ட கட்டளைகளைச் சொன்னார்.
கொல்வின் மேலும் சொல்கிறார் “கொலைக் களத்திலிருந்து ஒருவாறு தப்பிய ஒரு தொகுதியில் இருந்த ஒரு தமிழர் அங்கு என்ன நடந்தது என்பதை விளக்கினார். இந்த வட்டாரம், பின்னர் ஒரு தொண்டு நிறுவனத் தொழிலாளியிடம் பேசியவர், சொன்னார் நடேசன் மற்றும் புலித்தேவன் சிறீலங்கா இராணுவம் அணிவகுத்து நின்ற பக்கம் ஒரு வெள்ளைக் கொடியோடு ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண், பெண் குழு சகிதம் நடந்து போனார்கள். உடனே இராணுவம் யந்திரத் துப்பாக்கிகளால் அவர்களை நோக்கிச் சுட்டது. நடேசனது மனைவி, அவர் ஒரு சிங்களப் பெண், சிங்களத்தில் அந்த இராணுவத்தினரை நோக்கி சத்தம் போட்டார். “அவர் சரண் அடைய முயற்சிக்கிறார், நீங்கள் அவரைச் சுடுகிறீர்கள்” என்றார். அவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
இந்த சம்பவம் மே 18 காலை இராணுவம் வி.புலித் தலைமையை இரக்கமற்ற முறையில் விலங்குகளைக் கொல்லுமால் போல் கொன்று குவித்ததைக் கோடிட்டுக் காட்டியது. அநேகமாக உயர்மட்ட விடுதலைப் புலித் தலைவர்களும் இவ்வாறுதான் போதுமான விளக்கம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இறந்திருக்க வேண்டும். ஸ்ரீறீலங்கா அரசு பிரபாகரன் தப்பி ஓடும்போது ஒரு துப்பாக்கிச் சமரில் கொல்லப்பட்டார் எனச் சொல்லியது. ஆனால் அவருக்கும் நடேசன் மற்றும் புலித்தேவன் இருவருக்கும் ஏற்பட்ட இறுதி முடிவைப் போன்ற முடிவு ஏற்பட்டிருக்கலாம்.
இராணுவம் விடுதலைப் புலிகளின் கடைசி எதிர்ப்பு மையங்களையும் துடைத்தழித்தார்கள். போர் வலையத்தில் அகப்பட்டுக்கொண்ட இரண்டரை இலட்சம் மக்கள் பற்றி இராணுவம் அக்கறைப்படவே இல்லை. பெரும்பாலும் அவரும் நடேசன் மற்றும் புலித்தேவன் போல் மரணத்தை சந்தித்திருப்பார். இராசபக்சே பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான பொறுப்பை மறுத்துரைக்கும் போது அய்நா வின் மதிப்பீட்டின் அடிப்படையில் வெளியே கசியவிடப்பட்ட அறிக்கைகள் சனவரி (2009) தொடக்கம் 40,000 க்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டார்கள் எனச் சொல்கிறது.
http://punithapoomi.com/2019/05/88179/
Leave a Reply
You must be logged in to post a comment.