பூ விழுந்தால் எனக்கு வெற்றி! தலை விழுந்தால் உனக்குத் தோல்வி! – கஜேந்திரகுமார் பாணி அரசியல்!
நக்கீரன்
குதிரையின் குணத்தை அறிந்துதான் கடவுள் அதற்குக் கொம்பு கொடுக்கவில்லை என்று சொல்வார்கள். அரசியலில் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் கஜேந்திரகுமாரின் குணத்தை அறிந்துதான் மக்கள் அவரைத் தேர்தலில் தொடர்ந்து தோற்கடித்து வருகிறார்கள். கடந்த 2010 இல் இரண்டு தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட்டு இரண்டிலும் கட்டுக் காசை இழந்தார். 2015 இல் எட்டு மாகாணங்களில் போட்டியிட்டு 7 மாகாணங்களில் கட்டுக்காசை இழந்தார். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 5 வாக்குகளால் கட்டுக்காசை காப்பாற்றிக் கொண்டார். இவை அவருடைய சாதனை!
இருக்கட்டும். கைப்பொம்மைகளாக இருக்கட்டும். அதில் என்ன பிழை? அதில் என்ன தவறு? உலக நாடுகளின் உதவியின்றிஇனச் சிக்கலைத் தீர்க்க முடியுமா? சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதாக இருந்தாலும்இந்த நாடுகளின் ஆதரவு வேண்டுமா? வேண்டாமா?
(2) 13 அம்ச ஆவணத்தைத் தயாரித்ததில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணி 2009 ஆம் ஆண்டிலிருந்து எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது என்று சொன்னகோட்பாடுகளை ஏற்று ஒரு ஆவணத்தைத் தயாரித்துள்ளதாகச் சொல்கிறீர்கள். அதாவது எல்லாப் பெருமையும் உங்களுக்கே! பின் எப்படி அந்த ஆவணம் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் விருப்பப்படி தயாரிக்கப்பட்டது என்று கூறுவீர்கள்? இதில் உள்ள முரண்பாடு உங்களுக்கு விளங்கவில்லையா?
(3) ஆவணம் மெத்த நல்லது ஆனால் அதில் இடைக்கால அறிக்கையை இந்த 6 கட்சிகளும் நிராகரிக்கின்றன என்ற கோரிக்கையை உள்ளடக்கப் படாததுதானே நீங்கள் கையெழுத்திட மறுத்ததிற்கு ஒரே காரணம்? உங்களது வெளிநடப்புக்கான ஒரே காரணம்? ஒரு சமயம்அதனை ஏற்றிருந்தால் எல்லாம் சுப மங்கலம் என லாலி பாடியிருப்பீர்களா? இல்லையா? இந்த இடைக்கால அறிக்கையோடு ஏன் தங்களுக்கு இத்தனை கோபம்? சுமந்திரனுக்கு அதன் உருவாக்கத்தில் பங்கு இருப்பதுதான் உங்கள் கோபத்துக்குக் காரணமா? இதற்கு முந்தியும் எத்தனையோ யாப்பு உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை இடையில் தடைப்படவில்லையா? மங்கள – முனசிங்க தெரிவுக்குழுவின் அறிக்கை, சந்திரிகா குமாரதுங்காவின் அரசமைப்புச் சட்டவரைவு, மகிந்த இராசபக்சவால் நியமிக்கப்பட்ட பல்லின நிபுணர்கள் குழுவின் அறிக்கை மற்றும் மகிந்த இராசபக்சவால் அங்கீகரிக்கப்பட்டதும் பேராசிரியர் திஸ்ஸ விதாரணயைத் தவிசாளராகக் கொண்டதுமான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை போன்றவைவரலாற்றில் இருப்பது போல இந்த இடைக்கால அறிக்கையும் இருந்துவிட்டுப் போகட்டுமே? இதனால் தமிழர் தரப்புக்கு என்ன இழப்பு?
(4) ஒரு வாதத்துக்கு இடைக்கால அறிக்கையை நிராகரிக்கிறோம் என்ற அம்சத்தையும் உள்ளடக்கி இருந்தால்இந்த ஆவணம் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் தூண்டுதலால் தயாரிக்கப்பட்டது என்று கூறுவீர்களா? கூறியிருப்பீர்களா? இந்த 5 கட்சிகளும் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் முகவர்கள், அடிமைகள் என அர்ச்சித்திருப்பீர்களா?
(5) கோத்தபாய இராசபக்ச –சஜித் பிரேமதாச இவர்களுக்கு இடையிலே வித்தியாசம் இல்லை. இருவரும் சிங்கள – பவுத்த பேரினவாதிகள் என்றால் மகிந்த இராசபக்ச ஆட்சிக்கும் (2005 -2015) சிறிசேனா – இரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லை என்று சொல்கிறீர்களா? இன்று மக்களாட்சி முறைமைக்குரிய இடைவெளி கூடியிருக்கிறதா இல்லையா? ஊடகவியலாளர்கள் கொலை, அரசியல்வாதிகள் கொலை, வெள்ளைவான் கடத்தல், கப்பம் மற்றும் கிறீஸ்பூதம் கடந்த நாலரை ஆண்டுகாலத்தில் இடம் பெற்றதா?
ஆட்சிமாற்றம் இடம்பெற்றிருக்காவிட்டால் கஜேந்திரகுமார் சுதந்திரமாக செய்தியாளர் மாநாட்டை நடத்த முடியுமா?
(6) கோத்தபாய – சஜித்இருவரும் சிங்கள – பவுத்த பேரினவாதிகள் என்றால் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்கிறீர்களா? தேர்தல் புறக்கணிப்பு என்று வரும்போது உங்கள் வசதிபோல புறக்கணிப்பீர்கள், உங்கள் வசதி போல் போட்டி போடுவீர்கள். அது சரி. தேர்தல் புறக்கணிப்பை கையில் எடுத்திருக்கும் நீங்கள் ஏன் நாடாளுமன்றத் தேர்தல்களைப் புறக்கணிப்பதில்லை? வாழ்த்துக்கள்! இஸ்லாம் இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முந்திய அரபு நாட்டு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மதமாகும்.
எடுத்துக்காட்டாக அரேபியர்கள் தலைக்கு 15-20 பெண்களை மணந்து கொண்டார்கள். மொகமது நபி இந்த எண்ணிக்கையை 4 ஆகக் குறைத்தார். பன்றிகள் பொதுவெளியில் காணப்பட்ட மனித கழிவுகளைச் சாப்பிட்டன. அதனால் அந்த மிருகத்தை உண்ணக் கூடாதென மொகமது நபி தடை விரித்தார். நடனக் கலை, இசைக் கலை போன்றவையும் அப்படியே. எனவே அதற்கும் தடை. பள்ளிக்கூடங்களில் நடனம், இசைக்கு தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது. அப்படி என்றால் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் அரேபிய நாடுகளுக்கு இடம் பெயர வேண்டும்! மாற்றுத் தலைமைக்கு ஊரூராகத் தேடி அலைந்தது என்னாயிற்று? தலைமை கடையில் வாங்கும் பொருள் அல்ல!
(7) விக்னேஸ்வரன் தலைமையில் செயற்படத் தயார் என்று அறிக்கை விட்ட நீங்கள் அவர் இந்த 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையெழுத்திட்டதால் அவர் இந்தியா – மேற்குலக நாடுகளின் கைப்பொம்மையாகஇரவோடு இராவாக மாறிவிட்டாரா?
(8) சரி இந்தக் கட்சிகளையும் கட்சித் தலைவர்களையும் விட்டுவிடுவோம். வடக்கு – கிழக்கு பல்கலைக் கழக மாணவ ஒன்றியப் பிரதிநிதிகளும் இந்திய – மேற்குலக நாடுகளின் அடிமைகளா? அவர்களும் மலசல கூடத்துக்கு போவதாக இருந்தால் இந்த நாடுகளைக் கேட்டுவிட்டா போகிறார்கள்?
(7) இந்த 13 அம்சங்கள் கொண்ட ஆவணம் தொடர்பாகஏன் நீங்கள் பெரும்பான்மை முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்தீர்கள்? மக்களாட்சி முறைமையில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? பூவிழுந்தால் எனக்கு வெற்றி! தலைவிழுந்தால் உனக்கு வெற்றி என்று எத்தனை காலம் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?
மொத்தத்தில் கஜேந்திரகுமார் கிணற்றுக்குள் விழிப்பாக இருப்பதையும், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதையும், எதிர்மறை அரசியல் செய்வதையும், சுயநல அரசியல் செய்வதையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். அவற்றை நிறுத்தி, அரசியலில் பரந்துபட்ட அறிவையும், தமிழ் மக்களுக்குப் பயனுள்ள யதார்த்தமான அரசியல் செய்யும் மனப்பாங்கையும், கட்சி நலனுக்கு மேலாக தமிழ்மக்களின் நலனை முதன்மையாக இருத்தி அரசியல் செய்யும் பக்குவத்தையும் பெறவேண்டும்.
அரசி்யல் என்பது ஒரு கலை. தத்துவம், வரலாறு, அறிவியல், மருத்துவம் போன்று அரசியலும் ஒரு கலைதான்.
“அரசியல் என்பது சாத்தியமான கலை, அடையக்கூடியது – அடுத்த சிறந்த கலை.“
“Politics is the art of the possible, the attainable — the art of the next best”
― Otto von Bismarck
இந்தக் கலையை நாம் சாணக்கியத்தோடு பயன்படுத்த வேண்டும்!
Leave a Reply
You must be logged in to post a comment.