கனடா நாடாளுமன்றத் தேர்தல் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை!

கனடா நாடாளுமன்றத் தேர்தல் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை!

நக்கீரன்

நாளை விடிந்தால் (ஒக்தோபர்  21, 2019) கனடாவின்  43 ஆவது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

1867 இல் இயற்றப்பட்ட கனடாவின் அரசியல்மைப்புச் சட்டத்தின்படி ஐந்து  ஆண்டுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும்.  ஆனால் 2007 இல் ஹார்ப்பர் அரசாங்கத்தின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட  சி – 16  சட்டத்தின் படி தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓக்தோபர் மாதத்தில் வரும் மூன்றாவது திங்கட் கிழமை தேர்தல் நடை பெறவேண்டும்.

கடந்த செப்தெம்பர் 11, 2019 அன்று பிரதமர் ரூடோ அவர்களது ஆலோசனைப்படி 42 ஆவது நாடாளுமன்றம் ஆளுநர் Julie Payette அவர்களால் கலைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் மற்றும் மாகாண நாடாளுமன்றங்களுக்கான தேர்தல் முன்கூட்டிக் கணிக்கப்பட்ட நாளில்தான் நடைபெறுகின்றன. இந்த ஏற்பாட்டின் கீழ் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் குறுகிய கால அரசியல் அநுகூலத்துக்கு நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு திடீர்த் தேர்தலுக்குப் போக முடியாது. அனைத்துத் தரப்பினருக்கும் ஆடுகளம் சமன் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும்,  பிரதமருக்கு எந்த நேரத்திலும் தேர்தலைக் கோருவதற்கு சுதந்திரம் இருக்கிறது.

பொதுத் தேர்தல் பரப்புரை எந்தப் பரபரப்பும் இல்லாது அமைதியாக முடிந்து இருக்கிறது.தேர்தல் பரப்புரையின் காலவரை மாறுபடலாம்.  ஆனால் தேர்தல் சட்டத்தின் கீழ்,  பரப்புரையின் நீளம் குறைந்தபட்சம் 36 நாட்கள் அதிகபட்ச நீளம் 50 நாட்கள் என நிருணியகப்பட்டு இருக்கிறது.நாடாளுமன்றத்துக்குக் கடந்த முறை போலவே  338 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.   பெரும்பான்மையை  எண்பிக்க ஒரு கட்சி 170 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். கடந்த முறையை விட இம்முறை வாக்காளர் தொகை 27.4 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது 10 விழுக்காடு அதிகரிப்பாகும். கடந்தமுறை  வாக்களித்தவர் விழுக்காடு 68.3 ஆகும். 2011 இல் இந்த விழுக்காடு 61.1 ஆக இருந்தது.  2015 ஆண்டைவிட இம்முறை முன்கூட்டியே வாக்களித்தவர்களின் விழுக்காடு அதிகரித்துள்ளது.

2015 இல் பொதுத் தேர்தல் முடிவு பின்வருமாறு-

அட்டவணை 1

2015 இல் பொதுத் தேர்தல் முடிவு   ஒக்தோபர் 19, 2015

கட்சி தலைவர் % இருக்கை + –
லிபரல் யஸ்ரின் ரூடோ 39.56 184 +148
பழமைவாதக் கட்சி ஸ்ரீபன் காப்பர் 31.9 99 -60
புதிய சனநாயகக் கட்சி ரொம் மல்கெயர் 19.7 44 -51
புளக் கியூபெக்வா கையில்ஸ் டுசெப்பே 4.7 10 +8
பசுமைக் கட்சி எலிசபெத் மே 3.5 1 -1

இம்முறை கருத்துக் கணிப்பின் அடிப்படையில் முடிவுகள் அமையலாம் என நம்பப்படுகிறது. பொதுவாக கனடாவில் நடத்தப்படும் கருத்துக் கணிப்புக்கள் பிழைப்பதில்லை.

அட்டவணை 2    

கருத்துக் கணிப்பு முடிவுகள் ஒக்தோபர் 19, 18, 2019

Polling firm Last date
of polling[1]
Link LPC CPC NDP BQ GPC PPC Margin
of error
Sample
size
Polling method Lead
Ipsos October 19, 2019 HTML 31 33 18 7 6 3 ±2 pp 3,108 online/telephone 2
Abacus Data October 19, 2019 HTML 34 32 16 8 8 2 ±2.1 pp 2,000 online 2
Nanos Research October 19, 2019 PDF 31.0 31.5 18.8 7.0 9.5 1.8 ±2.4 pp 1,600 (1/2) telephone (rolling) 0.5
Campaign Research October 19, 2019 HTML 31.7 31.4 17.4 6.6 9.1 2.7 ±1.6 pp 1,554 online (rolling) 0.3
Leger October 18, 2019 PDF 33 33 18 8 6 2 ±2.13 pp 2,117 online 0
Mainstreet Research October 18, 2019 HTML 32.8 31.9 18.3 7.2 5.5 3.3 ±2.11 pp 2,134 (1/3) IVR (rolling) 0.9
Nanos Research October 18, 2019 PDF 32.6 30.3 18.4 7.1 9.3 1.9 ±2.8 pp 1,200 (1/3) telephone (rolling) 2.3
Campaign Research October 18, 2019 HTML 31 31 18 7 9 3 ±2.2 pp 1,987 online

இந்தக் கருத்துக் கணிப்பின்படி எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. தேர்தலுக்குப் பின் லிபரம் – புதிய சனநாயகக் கட்சி இரண்டும் சேர்ந்த ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறத.

தொலைக்காட்சி விவாதத்தில் பசுமைக் கட்சி, புளக் கியூபெக்குவா, பழமைவாதக் கட்சி, லிபரல் கட்சி மற்றும் புதிய சனநாயகக் கடசி பங்கு கொண்டிருந்தன. இம்முறை கனடா தேர்தல் திணைக்களத்துக்குப் பதில் சுயாதீனமான ஆணையர் இந்தத் தொலைக்காட்சி விவாதங்களை நடத்தினார்.

இம்முறைத் தேர்தலில் எந்த ஒரு சிக்கலும் முக்கிய பேசு பொருளாக இருக்கவில்லை. வழக்கம்போல அரசியல் கட்சிகளின் நல்வாழ்வுத்  திட்டங்களுக்கே அதிகபட்சமாக 35  விழுக்காடு மக்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். அதற்கடுத்து, பருவநிலை மாற்றம், வாழ்க்கை செலவு அதிகரிப்பு, வருமான வரி, நாட்டின் பொருளாதாரம், வீட்டுவசதி, கல்வி உள்ளிட்ட விடயங்களுக்கு  மக்கள் முக்கியத்துவம் அளிப்பது தெரியவந்துள்ளது.

வேலையில்லாத் திண்டாட்டம், வீட்டு விலை மற்றும் வீட்டுத்தட்டுப்பாடு பற்றி வாக்காளர்கள் பெரிதும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. கனடாவின் பொருளாதாரம் பேரளவு திருப்தியாக இருப்பது முக்கிய  காரணமாகும்.

கனடாவின் அல்பேட்டா மாகாணத்திலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு குழாய் வழியாக கச்சா எண்ணெய்யை கொண்டு செல்லும் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி ஜஸ்டினின் அரசு அனுமதி அளித்துள்ளது இந்த தேர்தலில் எதிரொலிக்கக் கூடும். (https://www.bbc.com/tamil/global-50096207)

இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ற மனப்பான்மையில் பெரும்பாலான வாக்காளர்கள் இருக்கிறார்கள். பார்க்கப் போனால் முக்கிய 3 கட்சிகளுக்கு இடையே கொள்கை அளவில் பெரிய வேற்றுமை இல்லை. பழமைவாதக் கட்சி குடிவரவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோட்பாடு உடைய கட்சி. லிபரல் கட்சி இதில் கொஞ்சம் தாராள மனப்பான்மையோடு நடந்து கொள்கிறது. புதிய சனநாயகக் கட்சி பருவ மாற்றம்  தொழிலாள வர்க்க நலன்களுக்காக குரல் கொடுக்கிற கட்சி.  லிபரல் கட்சி இவற்றில் எந்தப் பக்கமும் சாராமல் நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறது.

அரசியலில் ஜாம்பவன்களாக இருந்த மல்றோனி, கிரச்சியன், லெய்ட்டன் போன்றவர்கள் இப்போது இல்லை. விளையாட்டில் இரண்டாம் தரம் விளையாடுவது போல இன்றைய அரசியல் தலைமைகள் இருக்கின்றன.

கனடாவில்  வாழும் மக்களில் 22 விழுக்காட்டினர் புலப்படும் சிறுபான்மையினர் (visible minorities) . ஆனால் இந்தத் தேர்தலில் 15 விழுக்காட்டினர் மட்டுமே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்கள். மொத்தம் 15 க்கும் மேலான முஸ்லிம் வேட்பாளர்கள் போடியிடுகிறார்கள்.

கனடா பொதுத் தேர்தலில்  மூன்று கட்சிகளின் சார்பில் நான்கு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். லிபரல் கட்சியின் சார்பில் கரி ஆனந்தசங்கரி, பழமைவாதக் கட்சி சார்பாக குயினரஸ் துரைசிங்கம் என நான்கு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.  இவர்களில், கடந்த தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பாகப்  போட்டியிட்டு வெற்றிபெற்ற கரி ஆனந்தசங்கரி மீண்டும் அதே ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் களமிறங்குகிறார். மற்றவர்களை விட ஆனந்தசங்கரி மிக எளிதாக கரைசேருவார் என எதிர்பார்க்கலாம்.

மூன்றாவது உலக நாடுகளில் நடைபெறும் தேர்தல் போலல்லாது கனடா போன்ற நாடுகளில் தேர்தல் மிக மிக அமைதியாக நடந்தேறுகிறது. பொதுக் கூட்டங்கள், பேரணி, வீடு வீடாக வாக்குச் சேகரிப்பு, அடி தடி, குத்து வெட்டு, பணப்பட்டுவாடா, குவாட்டர், பிரியாணி என ஒன்றும் கிடையாது.

இலங்கையில் நொவெம்பர் 16  நடைபெறும் சனாதிபதி தேர்தலில  ஆயிரக்கணக்கான பொலீஸ் மட்டுமல்ல இராணுவமும் கடமையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. இதுவரை தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 1, 148 யை எட்டியுள்ளது.

தமிழ் நாட்டில் நாளை (ஒக்தோபர் 21) நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத் தேர்தலில்  நடைபெறுகிறது. பாதுகாப்புக்காக உள்ளூர் பொலீஸ் பட்டாளங்களை விட தில்லியில் இருந்தும் துணை இராணுவம் கடமையில் ஈடுபடுத்தப் படவுள்ளது. சொந்தச் செல்வாக்கு, கட்சி ஆதரவு, பணத்தை தண்ணீர் போல் செலவழிக்கக் கூடிய வேட்பாளர்களே தேர்தலில் வெல்லுகிறார்கள்.

கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே அமெரிக்க ஒன்றியமும் மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.

கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. 1999ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும்.

கனடா,  நாடாளுமன்ற மக்களாட்சி முறைமையுள்ள நாடுகளில் முதல்த் தர நாடாக விளங்குகிறது!  அது உலக நாடுகளில் 8 ஆவது இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பில்லை.

கனடா நாடாளுமன்றத் தேர்தல் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை!

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply