சாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்?

சாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்?

By Hemavandhana  October 20, 2019

சென்னை: கல்கி சாமியாரைத் தொடர்ந்து மேலும் சில சாமியார்களுக்கு குறி வைக்கப்பட்டிருப்பதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

வரலாறு காணாத அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதால் இவர்களையும் அள்ள வருமான வரித்துறை திட்டமிட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது. கல்கி பகவான் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சாமியார். இவரை ஒரு காலத்தில் தீவிரமாக பின் தொடர்ந்தவர்கள் பலர். பல்துறைப் பிரபலங்களும் இவர் பின்னால் அணிவகுத்தனர். ஆனால் அவரது ஆசிரமத்தில் ஏகப்பட்ட மோசடிகள், மோசமான வேலைகள் நடப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து கல்கி சிக்கலில் மாட்டினார்.கல்கி ஆசிரமம்

கல்கி ஆசிரமம் அதன் பிறகு பல வருடம் அவரைப் பற்றிய தகவலே இல்லை. அமைதியாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் இப்போது கல்கி ஆசிரமத்தை பிரித்து மேய்ந்து கொண்டுள்ளனர் வருமான வரித்துறையினர். 500 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். ரியல் எஸ்டேட் கல்கி ஆசிரமம் பெயருக்குத்தான் ஆசிரமம் என்று உள்ளது. ஆனால் உண்மையில் ரியல் எஸ்டேட்தான் மிகப் பெரிய அளவில் தொழிலாக செய்து வந்துள்ளனர் கல்கி குடும்பத்தினர். அப்பாவி பக்தர்கள் கொண்டு வந்து கொட்டும் பணத்தையெல்லாம் எடுத்து தங்களது தொழிலை அபிவிருத்தி செய்துள்ளனர்.ஊர் ஊராக நிலங்களை வாங்கி விற்று தொழில் செய்துள்ளனர்.

தப்பி ஓட்டம்?ரியல் எஸ்டேட்

மிகப் பெரிய அளவில் சொத்துக்கள் குவிந்ததால் வெளிநாட்டில் செட்டிலாகும் திட்டமும் இவர்களிடம் இருந்துள்ளது. கல்கி பகவானும், அவரது மனைவியும் கூட கடந்த 2 வருடமாக ஊரிலேயே இல்லையாம். வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாக ஒரு தகவல் உள்ளது. என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை. ஆனால், மிகப் பெரிய மோசடிக் கூட்டமாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இதற்கிடையே, தமிழகத்திலும் சில ஆசிரமங்கள், சாமியார்கள் மீது வருமான வரித்துறையின் கண் பார்வை விழுந்துள்ளதாம். குறிப்பாக பாஜகவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வோரின் பட்டியலை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாம்.

தப்பி ஓட்டம்? ஆசிரமங்கள்

Read more at https://tamil.oneindia.com/news/chennai/it-raid-in-ashrams/articlecontent-pf407176-366048.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply