கோட்டைக்கு அருகில் பண்ணைக் கடற்கரை முன்றலில் தனியார் ஐஸ்கிறீம் கடையொன்று திறந்து வைக்கப்பட்டது
பண்ணை கடற்கரை முன்றலில் தனியார் ஐஸ்கிறீம் கடையொன்று இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.குறித்த நிகழ்வின்போது முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஆதரவோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முகமாகவும் புலம்பெயர்ந்த தமிழர்களை கொண்டு தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் ஒரு சக்தியாக இந்த இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் குறித்த நிகழ்வில், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் முக்கிய அங்கத்தவர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
https://www.tamilwin.com/politics/01/221111?ref=home-latest
Leave a Reply
You must be logged in to post a comment.