13ஆவது சட்டமூலத்தில் திருத்தத்தை ஏற்படுத்துவதில் மகிந்த பின்வாங்கியது ஏன்?

13 ஆவது சட்டமூலத்தில் திருத்தத்தை ஏற்படுத்துவதில் மகிந்த பின்வாங்கியது ஏன்?

June 26, 2013 

ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். இப்போது சிங்கத்துக்கு அடி சறுக்கியிருக்கிறது. மகிந்த சிந்தனைக்கு பலத்த அடி விழுந்துள்ளது. அரசியல் யாப்புக்கு அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தம் மகிந்த இராசபக்ச அரசினால் சடுதியாக கைவிடப்பட்டுள்ளது. யாப்புத் திருத்தத்துக்கான சட்ட வரைவு ‘அவசரச் சட்ட வரைவு’ என மகிடம் சூட்டப்பட்டு அது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு விட அரசு முடிவெடுத்திருந்தது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் தான் இந்த சட்டவரைவு கொண்டு வரப்பட இருந்தது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான 19 ஆவது திருத்தச் சட்டம் அவசர சட்டமூலமாக கடந்த யூன் 18 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய இரம்புக்வெல கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

ஆனால் பின்னர் யூன் 18 இல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பில் ஆராயப்படும் என்று சொல்லப்பட்டாலும் அப்படி எதுவும் ஆராயப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் யூன் 18 இல் நடைபெறும் கட்சித் தலைவர்கள் அடங்கிய கூட்டத்திலேயே சட்ட வரைவை எப்போது நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று ஏற்கனவே ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருந்தார்.  அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதன் அதிகாரங்கள் தொடர்பாகவும் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை முன்மொழிவது குறித்தும் எந்த விடயமும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவில்லை.

13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழு யூன் 18 இல் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு புதன்கிழமையே இயங்கத் தொடரும் என ஏற்கனவே அமைச்சர் கெஹெலிய இரம்புக்வெல கூறியிருந்தார். எனினும் அது தொடர்பாகவும் எதுவும் பேசப்படவில்லை.

அய்க்கிய தேசியக் கட்சியின் தலைவர் இரணில் விக்கிரமசிங்கி 19 ஆவது சட்ட திருத்தத்தை எதிர்த்து கடுமையாக பேசினார். ‘நாங்கள் பன்னாட்டு சமூகத்துக்குக் கொடுத்த கடப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த கடப்பாடுகளில் இருந்து நாம் பிறழ முடியாது. அரசு தான் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து ஒருதலைப் பட்சமாகப் பின்வாங்குவதோ அல்லது அவற்றை கைவிடுவதோ பெரிய பாவகாரியமாக இருக்கும்’ என இரணில் விக்கிரமசிங்கி பேசினார்.

இலங்கையில் சிங்களவர்கள் நிரந்தர பெரும்பான்மையாக (74.5 விழுக்காடு) இருக்கிறார்கள். ஆளும் கட்சியும் சிங்களக் கட்சிதான் எதிர்க்கட்சியும் சிங்களக் கட்சிதான். எனவே மகிந்த இராசபக்சே தான் நினைத்ததை எல்லாம் செய்து முடிக்கலாம் என நினைக்கிறார்.

இந்த நிரந்தரச் சிங்களப் பெரும்பான்மை தமிழர்களது குறைந்த பட்ச சுயாட்சிக்கு செவி சாய்க்க மறுத்ததே இனச் சிக்கல் உருவாகுவதற்கு முக்கிய காரணியாகும். இதுவே தமிழர்கள் இணைப்பாட்சி கோரிக்கையை முன் வைக்க காரணமாக இருந்தது. அதனை அலட்சியப் படுத்தியதன் காரணமாகவே முன்னிருந்து பின்னர் குடியேற்ற நாடுகளால் போர்முனையில் தோற்கடிக்கப்பட்ட இராச்சியத்தை மீள உருவாக்குவதற்கு முதலில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுதப் போராட்ட வழியிலும் தமிழர்கள் போராடினார்கள்.

போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு இராணவத் தீர்வு தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு என மகிந்த இராசபக்சே கொடுத்த வாக்குறுதிகள் இன்று மீறப்படுகின்றன.  ஏழு மாகாணங்களுக்குத் தேர்தல் இடம்பெற்ற போது வெளிப்படுத்தப்படாத அச்சங்கள் இப்போது வெளிப்படுத்தப் படுகின்றன. வட மாகாண சபைத் தேர்தலில் ததேகூ வென்றால் அது நாட்டுப் பிரிவினைக்கு வழிகோலும் என சிங்கள – பவுத்த பேரினவாதக் கட்சிகளான ஹெல உறுமய, தேதிய சுதந்திர முன்னணி, பொது பல சேனா, சிகல இராவய, இராவண சேனா தென்னிலங்கையில் பலத்த பரப்புரை செய்தன்.

பவுத்த தேரர்கள் தலைமை தாங்கும் பொது பல சேனா, சிகல இராவய, இராவண சேனா போன்ற கட்சிகளுக்கு நாட்டில் மிகக் குறைந்தளவு ஆதரவு இருந்தாலும் அவற்றின் பின்னால் இராசபக்சே குடும்பத்தின் ஆதரவு இருக்கிறது. இதனை அமைச்சர் இராஜித சேனரட்ண பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார்.

அண்மையில் காலியில் உள்ள பொது பல சேனாவின் தலைமையகத்தை கோத்தபாய இராசபக்சே திறந்து வைத்தார் என்பது மனங்கொள்ளத்தக்கது.

வட கிழக்கு இணைப்பு என்பது தமிழ்மக்களின் நீண்ட கால இலட்சியமாகும். காரணம் இந்த இரண்டு மாகாணங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பே தமிழ்மக்களின் தாயக பூமியாகும்.

1987 இல் கைச்சாத்திடப் பட்ட இந்திய – இலங்கை உடன்பாடு கீழ்வரும் முக்கிய அம்சங்களை உள்ளடக்கி இருந்தது.

சிறீலங்கா ஒரு பல்லின மற்றும் பன்மொழி பேசும் ஒன்றுக்கு மேற்பட்ட சமூகமாகும். அதில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் (ஆழழசள) மற்றும் பறங்கிகள் வாழ்கிறார்கள். (பிரிவு 1:2)

ஒவ்வொரு இனக் குழுவுக்கும் தனித்துவமான பண்பாடு மற்றும் மொழி அடையாளம் உண்டு. அவை கவனமாக பேணிவளர்க்கப்பட வேண்டும். (பிரிவு 1.3)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சிறீலங்காவின் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடமாக இருந்து வந்துள்ளது. அவர்கள் இந்த நிலத்தில் எப்போதும் மற்ற இனக் குழுக்களோடு ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். (பிரிவு 1.3)

கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்தோடு இணைப்பது பற்றி கிழக்கு மாகாண மக்களிடையே ஒரு நேரடி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சாதாரண பெரும்பான்மை மூலம் தீர்மானிக்கப்படும். (பிரிவு 1.4)

The key features in the Indo – Ceylon Accord signed between J.R. Jayawardena  president Sri Lanka and Rajiv Gandhi  Prime Minister of India contained the following core principles:

 •Sri Lanka is a ‘multi-ethnic and a multi-lingual plural society” consisting> inter alia> of Sinhalese> Tamils  Muslims (Moors) and Burghers (section 1.2)

•Each ethnic group has a distinct cultural and linguistic identity which has to be carefully nurtured (section 1.3)

•Northern and the Eastern Provinces have been areas of historical habitation of Sri Lankan Tamil speaking peoples  who have at all times hitherto lived together in this territory with other ethnic groups (section 1.4)

•Merger of Eastern Province with Northern Province will be decided by a simple majority of the people of Eastern Province (section 2.3)  conducting a referendum by the people.

மகிந்த இராசபக்சே பதவிக்கு வந்த பின்னர் முன்வைத்த காலைப் பின்வாங்கியது இதுவே முதற்தடவை. இதற்கு முன்னர் 2011 இல் பன்னாட்டு நிதியம் செய்த பரிந்துரையின் அடிப்படையில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்பவூதியம் கொடுப்பது பற்றிக் கொண்டு வரப்பட்ட சட்ட வரைவு தொழிற் சங்கங்களின் பலத்த எதிர்ப்புக் காரணமாக பின்வாங்கப்பட்டது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட தொழிலாளர் மீது காவல்துறை துப்பாகிப் பிரயோகம் செய்த போது ஒருவர் பலியானார். இருந்தும் அது தற்காலிக பின்வாங்கல் என அரசு அறிவித்தது.

மேலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான அமைச்சர் ராஜித சேனரட்ணவும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்யவேண்டாம் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் இரண்டு மாகாணங்கள் இணைவதை தடுப்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 37 ஆவது பிரிவை நீக்கிவிடுவதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும் ஆனால் அதனை 19 ஆவது திருத்தச் சட்ட மூலம் நீக்கக் கூடாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டிருக்கிறார்.

இது இவ்வாறு இருக்க 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழக திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்திய பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இப்படி கடிதம் எழுதுவது வழக்கமான சம்பவந்தான்.

ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியாவிடம் இருந்து ஏதாவது அழுத்தங்கள் வந்துள்ளனவா என்று கேட்டதற்கு பதிலளித்திருந்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான திருத்தங்களையும் செய்யவேண்டாம் என்று இந்தியாவிலிருந்து அரசாங்கத்துக்கு எவ்விதமான அழுத்தமும் வரவில்லை. எமது நாட்டு மக்களுக்குத் தேவையான வகையிலேயே தீர்மானம் எடுப்போம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை வலியுறுத்தும் 13 ஆவது திருத்தத்தின் பிரிவை நீக்கவும் மாகாண சபைகள் குறித்த சட்டமூலம் ஒன்றை கொண்டுவரும்போது அனைத்து மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தை பெறவேண்டும் என்ற பிரிவை நீக்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்தது.

முதலாவது திருத்தத்தை 19 ஆவது திருத்தச் சட்டமூலமாக கொண்டுவரவும் இரண்டாவது திருத்தம் குறித்து ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பது என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

13 ஆவது சட்ட திருத்தத்தில் மாகாணசபைகளுக்கு கையளிக்கப்பட்டு அதிகாரங்களை திருத்துவதற்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

1) அய்க்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சோசலீச முன்னணியில் உறுப்புரிமை வகிக்கும் அமைச்சர் திஸ்சா விதாரண தலைமையிலான லங்கா சமஜவாதக் கட்சி, டியூ. குணசேகரா தலைமை தாங்கும் கம்யூனிஸ்ட் கட்சி, வாசுதேவாவின் நவசமஜவாதக் கட்சி ஆகிய கட்சிகள். ஆளும் கட்சி அமைச்சர் இராஜித சேனரத்தினாவும் தனது கடுமையான எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிட்டிருந்தார். ஆனால் அவர் மாகாணங்கள் விரும்பினால் இணையலாம் என்ற சட்ட விதியை திருத்துவதை அவர் எதிர்க்கவில்லை.

2) இந்தியா, யப்பான் நாடுகள்.

இந்த இரண்டு தரப்பினரிலும் யாருடைய அழுத்தம் காரணமாக 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு கொண்டு வரப்பட்ட 19 ஆவது சட்ட திருத்தம் மட்டுமல்ல மேலதிகமாக தெரிவுக்குழு அமைத்து 13 ஆவது சட்ட திருத்தத்தில் காணப்படும் விதியின் கீழ் எல்லா மாகாணங்களது சம்மதம் பெறப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக பெரும்பான்மை மாகாண சபைகள் சம்மதம் தெரிவித்தால் போதும் என்ற திருத்தம், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைப் பறிக்கும் திருத்தம் ஆகியவற்றை இட்டு தெரிவுக் குழு தீர்மானிக்கும் என்ற முயற்சி ஏன் கைவிடப்பட்டது என்பது கேள்விக் குறியாக உள்ளது.

இடதுசாரிக் கட்சிகளது எதிர்ப்பு, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எதிர்ப்பு போன்றவற்றால் ஆளும் கட்சிக்கு 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடையாது என்ற காரணத்தால் சட்ட திருத்தங்கள் தற்போதைக்கு கைவிடப்பட்டதாக ஒரு சாரார் நினைக்கிறார்கள்.

ஆனால் மகிந்த இராசபக்சே தனது அரசுக்கு நாடாளுமன்றத்தில் எப்படி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவது என்ற வித்தை தெரியும் என்றும் தனது அரசு பதவிக்கு வந்த போது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்கவில்லை என்றும் அய்க்கிய தேசியக் கட்சியை உடைத்தே அதனைப் பெற்றதாகவும் இப்போதும் தன்னால் மேலும் பலரை அய்க்கிய தேசியக் கட்சியை உடைத்து தனது பக்கம் கொண்டுவர முடியும் என்று வீராப்புப் பேசியிருக்கிறார்.

எனினும் அரசியல் நோக்கர்கள் இந்தியாவின் அழுத்தமே மகிந்த இராசபக்சேயை பின்வாங்க வைத்துள்ளதாக எண்ணுகிறார்கள். இந்திய அரசின் அழைப்பின் பேரில் அவசர அவசரமாக ததேகூ புது தில்லி சென்று இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்திஷ் ஆகியோரைச் சந்தித்துப் பேசியதன் பின்னரே இந்தியா சிறீலங்கா மீது அழுத்தம் கொடுத்திருக்கிறது என்று சொல்வதே சரியாக இருக்கும். இந்திய அரசு – ததேகூ பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கை அதனை உறுதிப்படுத்துகிறது. வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் சிறீலங்கா அரசு 13 ஆவது சட்ட திருத்தத்தின் முக்கிய விதிகளை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கோடு எடுத்துவரும் முயற்சி பற்றி தான் மனக்கலக்கம் அடைந்திருப்பதாக தன்னைச் சந்தித்த ததேகூ இன் தூதுக்குழுவிடம் தெரிவித்தார். சிறீலங்கா அரசு மேற்கொள்ள இருக்கும் மாற்றங்கள் சிறீலங்காவில் இனச்சிக்கலுக்கு 13 ஆவது சட்ட திருத்தத்திற்கும் அப்பால் சென்று அரசியல் தீர்வு காணப்படும் என்று சிறீலங்கா அரசு அய்க்கிய நாடுகள் அவை உட்பட இந்தியா மற்றும் பன்னாட்டு சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகள் பற்றிய அய்யப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் இந்த மாற்றங்கள் சிறீலங்கா அரசே நியமித்த கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவல் செய்வதன் மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கும் ஒவ்வாததாகவும் இருக்கிறது.’

The statement noted that “The Prime Minister conveyed to the TNA delegation that he was dismayed by reports suggesting that the Government of Sri Lanka planned to dilute certain key provisions of the 13th Amendment to the Sri Lankan Constitution ahead of elections to the Northern Provincial Council. It was noted that the proposed changes raised doubts about the commitments made by the Sri Lankan Government to India and the international community including the United Nations on a political settlement in Sri Lanka that would go beyond the 13th Amendment. The changes would also be incompatible with the recommendation of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC)  set up by the Government of Sri Lanka  calling for a political settlement based on the devolution of power to the provinces.”

ததேகூ இன் தூதுக் குழுவைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் சிறீலங்காவில் வாழும் தமிழர்களின் நல்வாழ்வு பற்றி தான் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர்கள் கண்ணியத்தோடு சம உரிமை படைத்த குடிமக்களாக தன்மானத்தோடும் நீதியோடும் வாழ இந்தியா முயற்சி எடுக்கும் எனத் தெரிவித்தார்.

The Prime Minister stated that he was deeply concerned about the welfare and wellbeing of the Tamil community in Sri Lanka. He stressed on the expectation that the Sri Lankan Tamil community would lead a life of dignity  as equal citizens  and reiterated that India would make every effort to ensure the achievement of a future for the community marked by equality  justice and self-respect.”

13 ஆவது சட்ட திருத்தம் இந்திய – இலங்கை இரண்டுக்கும் இடையிலான ஒரு பன்னாட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்டது. அதனை ஒருதலைப் பட்சமாக சிறீலங்கா ஒழிக்க முடியாது. அப்படி ஒழிக்க முற்பட்டால் சிறீலங்கா கச்சதீவைப் பறிகொடுக்க நேரிடும் என சோசலீச முன்னணி அரசை எச்சரித்திருக்கின்றது.

சிறீலங்கா வழிக்கு வராவிட்டால் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாக நேரிடலாம். ஒரு சுண்டங்காய் நாடு இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதை காங்கிரஸ் அரசு அனுமதிக்காது.

வடக்கும் கிழக்கும் எந்தக் காலத்திலும் இணைய விடக் கூடாது என்ற பேரினவாத சிந்தனையே 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு கொண்டு வரப்பட இருந்த சட்ட திருத்தத்தின் நோக்கமாகும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராசபக்சே 13 ஆவது சட்ட திருத்தம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார். ‘இந்தியா அல்லது வேறொரு நாடு கோபப்படும் என்பதற்காக நாங்கள் இந்த நாட்டுக்கு (சிங்களவர்களுக்கு) செய்யும் நல்ல காரியங்களை நிறுத்திவிட முடியாது’ (“Just because India or some other country will get angry  we cannot stop doing what is good for our country  என சுடரொளி நாளேட்டுக்குக் கொடுத்த நேர்காணலில் திமிரோடு சொல்லியிருக்கிறார்.

இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமே சிங்களவர்கள் பெரும்பான்மையாக இல்லை. எஞ்சிய 7 மாகாணங்களில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இதுதான் கோத்தபாய இராசபக்சே போன்ற இனவாதிகளின் கண்களைக் குத்துகின்றன.

‘வட மாகாணம் தமிழர்கள் பெரும்பான்மையாக (93.7 விழுக்காடு) வாழும் நிலப்பரப்பாக இருக்க முடியாது, அங்கு எல்லா இன மக்களும் வாழ வேண்டும்’ என்கிறார் கோத்தபாய இராசபக்சே. அப்படியென்றால் 97.1 விழுக்காடு (526,414) சிங்களவர்கள் வாழும் அம்பாந்தோட்டை மாவடத்தில் எல்லா இன மக்களும் வாழ வேண்டும். இப்போது அங்கு வாழும் தமிழர்களின் விழுக்காடு வெறுமனே 0.4 (1,869) மட்டும்தான். மலைநாட்டுத் தமிழர்கள் 0.01 (424) மட்டுமே. இதனைக் கூட பொறுக்க முடியாத கோத்தபாய தான் சிறுபிள்ளையாக இருந்த போது அம்பாந்தோட்டையில் தமிழர்கள் மிகக் குறைந்தளவில் இருந்ததாகவும் இப்போது அவர்களது தொகை அதிகரித்துவிட்டதாகவும் சொல்கிறார். இப்படியான சிந்தனைக்குப் பெயர் பாசீசம்.

முழு இலங்கையிலும் சிங்களவர்களின் மக்கள் தொகை 74.5 விழுக்காடாகும். இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் சிங்களவர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

நுவரேலியா மாவட்டம் ஒன்றில் மட்டும் மலையகத் தமிழர்கள் 50.6 விழுக்காடு இருக்கிறார்கள். சிங்களவர்கள் 40.2 விழுக்காடு இருக்கிறார்கள். இலங்கைத் தமிழர் 6.5 விழுக்காடு இருக்கின்றனர். இதே சமயம் திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்கள் 23.4 விழுக்காடும் அம்பாரை மாவட்டத்தில் 39.9 விழுக்காடும் இருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் நடந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமே இதற்குக் காரணமாகும். தமிழர்கள் தென்னிலங்கையில் குடியேற எந்த சிங்கள அரசும் முயற்சிக்கவில்லை.

கொழும்பு மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்ற ஒரு பொய்ப் பரப்புரை செய்யப்படுகிறது. உண்மை என்னவென்றால் இந்த மாவட்டத்தில் சிங்களவர்கள் 76.6 விழுக்காடு இருக்கின்றனர். தமிழர்களது விழுக்காடு 11.0 மட்டுமே. மலைநாட்டுத் தமிழர் 1.1 விழுக்காடும் முஸ்லிம்கள் 9.0 விழுக்காடும் உள்ளனர்.

சனாதிபதி மகிந்த இராசபக்சே கடந்த பெப்ரவரி 4 ஆம் நாள் திருகோணமலையில் நடந்த சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் பேசும் போது ‘இன அடிப்படையில் வௌ;வேறு நிருவாகங்கள் சிறீலங்காவில் இயங்குவது நடைமுறைச் சாத்தியமில்லை. அதற்கான தீர்வு என்னவென்றால் இந்த நாட்டில் எல்லாச் சமூகங்களும் சம உரிமைகளுடன் ஒன்றாக வாழவேண்டும்’ குறிப்பிட்டார்.

President Rajapaksa has said that “it was not practical for Sri Lanka to have “different administrations based on ethnicity. The solution is to live together in this country with equal rights for all communities” (http://www.thehindu.com/news/international/rajapaksa-rules-out-tamil-autonomy/article4379232.ece)

அவர் சுற்றி வளைத்து என்ன சொல்ல வருகிறார் என்றால் தமிழர்களுக்கு மாகாண சபை மூலமாகக் கூட்ட அதிகாரப் பரவலாக்கல் கொடுக்கக் கூடாது என்பதுதான். பருத்தித்துறை முதல் தெய்வேந்திரமுனை வரை ஒற்றையாட்சியின் கீழ் சிங்களவர்களத ஆட்சி நடைபெற வேண்டும் என்ற மகிந்த சிந்தனையின் வெளிப்பாடே இதுவாகும். உண்மையில் இது பாசீச சிந்தனை. இட்லரும் இப்படித்தான் சிந்தித்தான். ஜெர்மனி ஆரியர்களது பூமி. அங்கு யூதர்களுக்கு இடமில்லை என்றான்.

‘இந்த நாட்டில் எல்லாச் சமூகங்களும் சம உரிமைகளுடன் ஒன்றாக வாழவேண்டும்’ என்ற எண்ணம் சரியானால் தமிழ்மக்களது வீடு காணிகள் மட்டும் பறிக்கப்படுவதேன்? திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஏன்? 90,000 மக்கள் தங்கள் சொந்த வீடு காணிகளில் மீள்குடியமர்தப்படாது இருப்பதேன்? பவுத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகள் நாட்டப்படுவது ஏன்?

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 74.5 விழுக்காடு மட்டும் இருக்கும் சிங்களவர்கள் நூற்றுக்கு 95 விழுக்காடு பொதுசேவையில் இருப்பது எப்படி? நூற்றுக்கு 95 விழுக்காடு இராணவத்தில் இருப்பது ஏன்? 54 முழு அமைச்சர்கள், 10 மூத்த அமைச்சர்கள், 27 அரை அமைச்சர்களில் எத்தனை பேர் தமிழர்கள்? அமைச்சு செயலாளர்களில் எத்தனை பேர் தமிழர்கள்? பெரும்பான்மை தமிழர்கள் வாழும் திருகோணமலை, வவுனியா, மன்னர் மாவட்டங்களில் சிங்கள அரச அதிபர்கள் நியமிக்கப்படுவது ஏன்? வடக்கு – கிழக்கு மாகாண சபைக்கு சிங்கள ஆளுநர்கள் ஏன் நியமிக்கப்பட்டுள்ளார்கள்? தமிழர்களில் எத்தனை பேர் வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்?

13 ஆவது சட்ட திருத்தம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்ட வரைவுகள் சரி, தெரிவுக் குழு சரி மாகாண சபைகளுக்கு இன்றுள்ள அற்ப சொற்ப அதிகாரங்களையும் பறித்து அதனை முற்றாக ஒழிப்பது. இல்லையேல் அதனை நீர்க்கச் செய்வது.

எதிர்வரும் பொதுநலவாய மாநாடு காரணமாகவே மகிந்த இராசபக்சே ஒரு அடி பின் எடுத்து வைத்துள்ளார். மாநாடு முடிந்ததும் 13 ஆவது சட்ட திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளை மகிந்த இராசபக்சே மீண்டும் முடுக்கி விடுவார் என நம்பலாம்.


JHU,  NFF not speaking for govt. – Vasu Call for abolishing 13-A:

June 24.  2013. 10:03 pm

By Chaminda Silva

 National Languages and Social Integration Minister Vasudeva Nanayakkara yesterday said that the Minster Champika Ranawaka’s Jathika Hela Urumaya (JHU) and Minister Wimal Weerawansa’s National Freedom Front (NFF) were opposing the elections to the Northern Provincial Council because those two parties did not have vote base in that province.

Addressing a press conference held at the Lanka Sama Samaja Party head office in Colombo Minister Nanayakkara said that the propaganda carried out by the JHU and the NFF was not the standpoint of the government with regard to the provincial councils or the 13th amendment.

Ministers Prof Tissa Vitarana, DEW Gunasekera, Dr Rajitha Senaratne, Reginald Cooray, Chandrasiri Gajadeera and several other politicians including Raja Kollure attended the press conference.


Delayed 19th Amendment highlights the root causes of the ethnic minority problem

June 24. 2013. 7:52 pm

By Jehan Perera

There has been an unexplained delay in the government’s plan to present the 19th Amendment to the constitution as an urgent bill to Parliament. As a result, there is speculation that the government might have postponed its presentation at least for the time being.  There had been opposition from both ethnic minority political parties and the government’s own left-wing parties to the passage of the 19th Amendment which seeks to weaken the 13th Amendment.  It is possible that internal dissension is the cause of the delay.  However,  President Mahinda Rajapaksa also declared he knew how to obtain a two-thirds majority in Parliament. He repeated this assertion at the Government Parliamentary Group last Monday at the Presidential Secretariat. He also added that if needed he would also be able to get some votes from the main opposition United National Party (UNP) parliamentarians.

These Indian concerns were also reflected in the strong stand taken by Opposition Leader Ranil Wickremesinghe in Parliament opposing the proposed 19th Amendment.  He said, “We have to stick to the commitments made to the international community and act on them.  We cannot deviate from such commitments.”  He also added that it would be a sin if the government were to unilaterally back off or renege on its promises.  He also pledged his party’s support to the government to stick to the promises it had made to the international community.  The strongly moral stance of the Opposition Leader’s speech is reflective of the breakdown of trust that needs to be rebuilt with both the international community and with the country’s own ethnic minorities.

He has gone further and has called for a repeal of the Thirteenth Amendment,  clarifying the government’s true intent as far as the Tamils’ aspirations were concerned. The government has already undone the merger of the northern and eastern provinces and has twice held elections in the eastern province> installing a government of its choice there. President Rajapaksa has said that it was not practical for Sri Lanka to have “different administrations based on ethnicity. The solution is to live together in this country with equal rights for all communities.” Obviously,  nothing special for the Tamils was ever in his reckoning. But by finally being honest about his policy, Rajapaksa has merely reaffirmed the majority Sinhalese community’s aversion to the Thirteenth Amendment,  historically looked upon in Sri Lanka as an Indian diktat influential Sri Lankan Defence Secretary,  Gotabaya Rajapaksa has said Sri Lanka should jettison the system of devolution contained in the India-inspired 13th Amendment of the country’s constitution,  irrespective of India’s reaction.

“Just because India or some other country will get angry,  we cannot stop doing what is good for our country, ” Gotabaya told the Tamil daily Sudar Oli on Sunday.

He was asked if his statements against the devolution of power to the provinces would not irk India> which was responsible for the promulgation of the existing devolution system through the India-Sri Lanka Accord of 1987 and the 13th constitutional amendment which followed it. Indian Foreign Minister Salman Khurshid had recently expressed displeasure over Lanka’s attempts to prune the 13th amendment to deny the provinces powers over land and police.

Gotabaya expressed the fear that if the Tamil majority Northern Province went into the hands of the pro-LTTE Tamil National Alliance (TNA) following the September 2013 elections to the Northern Provincial Council (NPC),  that province would demand power over land and police and jeopardize national integrity and security.

He recalled that the 13th amendment did not have the people’s support when it was enacted in 1987. The Janatha Vimukthi Peramuna had “set fire to the whole country>” and the LTTE leader Prabhakaran had rejected it, he pointed out.

“Why should we implement it merely because it meets India’s needs?” Gotabaya asked.


1) சிகல ராவய

The merger of the Northern and Eastern provinces has been a long-standing demand of the Tamil political parties and has become akin to an article of faith with most of the Tamil population in the two provinces.  It was also a demand of the Tamil militant organizations that engaged in violence for an independent state of Tamil Eelam.  Even today the EPDP which is a close ally in the government coalition continues to stand for the merger of the Northern and Eastern provinces.  In these circumstances, the prohibition on any two more provinces to merge in the future will not be a consensual decision.  On the other hand, the merger of the Northern and Eastern provinces is seen as dangerous by the government and most Sinhalese people as paving the way to the creation of a separate state of Tamil Eelam.  Due to this factor, the proposed 19th Amendment will be a popular one with the majority of the Sinhalese people.  Neither will it be opposed by any of the seven Sinhalese-dominated provincial councils as none of them has shown any interest in merging with each other. Therefore the passage of the 19th Amendment will be politically advantageous to the government in consolidating its support amongst the Sinhalese majority.

MINORITY CONCURRENCE

 The Muslim position in relation to the merger of the Northern and Eastern provinces is an ambiguous one.  They would not wish to be dominated by the Tamil majority in a merged North-East Province.  The SLMC has insisted that in the event of a merger the Muslim majority areas within the province should be given the status of a separate Muslim-dominated provincial council.  They have also stipulated that event those areas in the Northern and Eastern provinces that are not geographically connected should be brought under the ambit of the Muslim-dominated provincial council.   By implication, closing the door on the merger of the Northern and Eastern provincial councils will also preclude the possibility of a Muslim-dominated provincial council.  Although a member of the government coalition the SLMC has expressed its opposition to the 19th Amendment and its provision to prohibit the merger of any two or more provinces.  Therefore it is clear that if the 19th Amendment is passed it will be in opposition to the wishes of the ethnic minorities.

Shortly after the war ended President Mahinda Rajapaksa on behalf of the government promised the international community and the Sri Lankan people that a political solution would soon be found that had the backing of all communities.  This position was reiterated this week in a media interview given by the President’s brother and Defense Secretary Gotabaya Rajapaksa.  “When it was pointed out that President Rajapaksa had assured India as well as other countries that his government would offer 13th Amendment Plus  the Defense Secretary said that what the President had meant was that he would give a better solution acceptable to all communities.”   This provides the right understanding that any change in the constitution relevant to the ethnic conflict would be taken in consensus with the ethnic minorities and not unilaterally.  With the proposed 19th Amendment  Sri Lanka was once again taking the road of unilateral Sinhalese decision making over the objections of the country’s ethnic minorities.  It now appears that the possibility of an Indian boycott of the Commonwealth Heads of Government Meeting has motivated the government to postpone the introduction of the 19th Amendment.  The better path would be for the government to heed the words of the President after the end of the war and instead forge a solution that has the concurrence of the ethnic minorities also.

13′ஆவது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்காமல் மாகாணசபை முறைமையை மேலும் பலப்படுத்தி தமிழர்களின் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதைவிடுத்து ’13′ இல் கைவைத்து இந்தியாவை எதிர்த்தால் கச்சதீவு பறிபோய்விடும் என இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

’13′ ஆவது திருத்தத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஆளுந்தரப்பின் இடதுசாரி அமைச்சர்களின் விசேட ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள லங்கா சம சமாஜக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, டியூ குணசேகர, ராஜித சேனாரட்ண, ரெஜினோல்ட் குரே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அமைச்சர் திஸ்ஸ விதாரண கருத்து தெரிவிக்கையில், ‘போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து தமிழ் மக்களின் மனங்களை வென்று தேசிய நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அதற்கான தகுந்த சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், கடந்த 26 வருட காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாகாணசபை முறைமைய இல்லாதொழிக்குமாறு சிலர் வாதங்களை முன்வைக்கின்றனர்.
13வது திருத்துக்கமைய மாகாணசபைகளுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கியிருந்தால் நாட்டில் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. ஒரு தேசிய பொலிஸ் திணைக்களத்தின் கீழ், மாகாண பொலிஸ் திணைக்களங்கள் இருந்தால் பிரச்சினை இல்லை.

13வது திருத்தத்தினூடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து மாகாணசபை முறைமையை சக்திப்படுத்த வேண்டும்.

இதனூடாக சிறுபான்மையினருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து அவர்களுடன், இணைந்து நாம் செயற்படுகின்றோம் என்பதை நாம் சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் எமக்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் ராஜித சேனாரட்ன கருத்து தெரிவித்ததாவது,‘டொனமூர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டபோது தமக்குத் தனி இராச்சியம் வேண்டுமென உடரட்ட சிங்கள மக்கள் கோரினர். ஆனால் தமிழர்களோ நாட்டைப் பிரிக்க வேண்டாம் என்று கூறினர். 13ஆவது திருத்தம் நீக்கப்படவேண்டுமென்று பலர் கூறுகின்றனர்.

அத்துடன் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர். உலகில் எந்த நாட்டில் ஒரு அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு 26 வருடங்களின் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது?
அன்று மாகாணசபை அறிமுகப்படுத்தப்பட்டபோது அது தமிழீழத்திற்கு வித்திடும் என்றனர். ஆனால் அவர்கள்தான் இன்று மாகாணசபையில் அமர்ந்து சிறப்புரிமைகளை அனுபவிக்கின்றனர்.

வடக்கு மக்களுக்காக வழங்கிய உணவுக்கோப்பையைப் பறித்து எடுத்துவிட்டு, இப்போது அவர்களுக்கு கோப்பை அல்ல ஒரு பிடி சோறுகூட கொடுக்க முடியாது என்பது புதுமையான அரசியல். இது அரசியல் தார்மீகம் அல்ல.

சிங்கள இனவாதிகள்தான் தமிழ் இனவாதிகளைப் போஷித்தனர். புலிகள் இருந்தபோது அதிகாரங்களைத் தரமுடியாது என்றனர். இப்போது புலிகள் இல்லை அதிகாரங்ளும் இல்லை என்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, 13ஆவது திருத்தத்தினூடாக வடக்கு மக்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, மறுபுறத்தில் தேசிய பொலிஸ் திணைக்களத்தினூடாக அதைப் பறித்தெடுத்தார். அத்துடன், காணி அதிகாரத்தை வழங்கினார், ஆனால் தேசிய காணி திணைக்களத்தினூடாக அதையும் பறித்தெடுத்தார்.

இப்படியாக ஒரு கையில் கொடுத்து மறுகையில் பறித்தெடுத்தார்.

13ஆவது சட்டமூலத்தில் திருத்தத்தை ஏற்படுத்துவதில் மகிந்த பின்வாங்கியது ஏன்?


About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply