1950 மில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலையம் துரித அபிவிருத்தி
பலாலி விமான நிலையத்தை 1950 மில்லியன் ரூபா செலவில் துரிதமாக அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுற்றுலா தொழிற்துறையின் மேம்பாட்டிற்கான விமான போக்குவரத்தை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைவாக நேர அட்டவணைக்கு அமைய சர்வதேச வர்த்தக பயணிகள் விமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தவதற்கும் பலாலி விமான நிலைய தேவையான அபிவிருத்தி பணிகளை 1950 மில்லியன் ரூபா முதலீட்டுடன் இலங்கை விமானப் படையின் மூலம் துரிதமாக மேற்கொள்வதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
இதற்கு அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.