தென்னமரவடிப் பண்ணை காடு திருத்தல்

 

தென்னமரவடிப் பண்ணை – காடு திருத்தல்

தென்னன்மரவடி என்பது திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். இந்த ஊரின் குடியிருப்புகள் திருகோணமலை மாவட்டத்திலும் ஊர் மக்களது வயல்காணிகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அமைந்துள்ளன. எனவே, தென்னைமரவடி ஊரானது  திருகோணாமலை, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அமைந்துள்ள ஓர் ஊராகக் காணப்படுகின்றது.

Exif_JPEG_420

1984 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இன வன்செயல் காரணமாகத் தென்னன்மரவடி ஊர் முற்றாக எரியூட்டி அழிக்கப்பட்டது. பலர் கோரமாகக் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் உயிர்ப் பாதுகாப்புக் கருதித் தப்பியோடி முல்லைத்தீவு மாவட்டத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர்.  இடம்பெய்ர்ந்த தென்னன்மரவடி மக்களில் ஒரு பகுதியினர் அண்மைக்காலத்தில் ஊருக்குத் திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ளோர் இன்னமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். வந்து குடியேறிய மக்களுக்கு வருவாய் தரக்கூடிய தொழில்வாய்ப்பு இன்மையால் முல்லைத்தீவில் தங்கியிருக்கும் மக்கள் தென்னன்மரவடிக்கு வரத் தயக்கம் காட்டுகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்ட கனடாத் திருகோணமலை நலன்புரிச் சங்கம், கனடாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கனடாத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து 20 ஏக்கர் நிலப்பரப்பில் ஒன்றிணைந்த பண்ணை ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் பொருட்டாகத் திரு. சண்முகம் குகதாசன் கடந்த 10 மாதங்களாக களத்தில் நின்று பணிகளை ஆற்றிவருகின்றார்.

இப்பண்ணையை அமைப்பதற்கு இலங்கை வனத்துறை, இலங்கை வனவிலங்குத் துறை, இலங்கைத் தொல்பொருட்துறை, இலங்கை சூழல் சுற்றாடல் துறை, நகரத்திட்டமிடற் துறை, இலங்கை வேளாண்மைத்துறை, குச்சவெளிப் பிரதேச சபை, குச்சவெளிப் பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், கிழக்கு மாகாணக் காணி அமைச்சு, கிழக்கு மாகாண ஆளுநர், இலங்கை காணி ஆணையாளர் நாயகம், இலங்கைக் காணி அமைச்சு ஆகியோரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exif_JPEG_420

கடந்த ஒன்பது மாதக் கடின உழைப்பின் பின்பு மேற்படி துறைகளின் ஒப்புதல்கள் பெறப்பட்டு நிலத்தைத் துப்பரவாக்கும் பணிகள் 2018.09.03 ஆம் நாள் தொடக்கி 2018.10 30 ஆம் நாளோடு நிறைவடைதுள்ளன. நில அளவைத் திணைக்களம் நிலத்தை அளந்து எல்லைக்கல்லுப் போட்டுள்ளது. மரங்களின் வேர் பிடுங்குதல், நிலத்தை மட்டமாக்குதல், யானைவேலி அமைத்தல், எல்லை வேலி அமைத்தல், மின் இணைப்புப் பெறுதல் முதலிய பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளன. இவற்றை முடிக்க இன்னும் சில மாதங்கள் எடுக்கும். மேற்படி பணிகள் முடிந்த பின்பு கிணறு வெட்டுதல், பண்ணைக் கட்டடங்கள் அமைத்தல்  புல் வளர்த்தல், மாடு கொள்வனவு செய்தல் முதலிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  இதற்கான திட்ட மதிப்பீடு இக்கட்டுரையின் இறுதியில் உள்ளது.

இப்பண்ணை அமைப்புகளை மேற்கொள்வதற்காக கோயம்புத்தூர் வேளாணமைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் சிறப்பு பட்டம் பெற்ற ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அத்தோடு பண்ணைக் காவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மழை காரணமாக திருத்த வேலைகள் தாமதமடைந்துள்ளன.


                 

                                                                                                                                                                                    

About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply