தமிழீழத்தை சிங்கள பூமியாக மாற்றத் துடிக்கும் ஸ்ரீலங்கா அரசு!

தமிழீழத்தை சிங்கள பூமியாக மாற்றத் துடிக்கும் ஸ்ரீலங்கா அரசு!

ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும், இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பிரதேசங்களை புனித பிரதேசங்களாக்குவதன் மூலம் அவைகள்மீதான ஆக்கிரமிப்பை தடுக்க முடியும். அத்துடன் ஈழத்தின் தொன்மையான சைவ ஆலயங்கள் பலவற்றையும் புனித பிரதேசமாக்கி, சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் பரவலான குரல்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

ஈழத்தை சிவபூமி என்று அழைத்திருக்கிறார் திருமூலர். கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் மூவாயிரம் வருடங்களாக வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவரது இக் கருத்து ஈழத்தின் தொன்மையை எடுத்துரைக்கும் முக்கிய சான்றாக கொள்ளப்படுகிறது. சிவபூமி என சிறப்பிக்கப்படும் அளவிற்கு தொன்மையான சிவன் ஆலயங்களால் நிறைந்து காணப்பட்டிருக்கிறது ஈழம். இதுவே ஈழம் தமிழர்களின் பூர்வீக நாடு என்பதற்கு சாட்சியாகும்.

ஈழத்தின் இன்றைய நிலமையோ பெரும் கவலையையும் ஆத்திரத்தையும் தரும் விதமாக காணப்படுகின்றது. சிங்கள இராணுவம் ஒருபறம், சிங்கள பௌத்த பிக்குகள் ஒரு புறம், இலங்கை அரசாங்கம் ஒரு புறம், இலங்கை அரச திணைக்களங்கள் ஒரு புறம் என சுற்றிச் சுற்றி ஈழத்தை சிங்களமயமாக்கும் முயற்சிகள் நடந்தேறிவருகின்றன.

ஈழத் தீவின் நான்கு பக்கங்களிலும் சிவன் ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அத்துடன் ஈழத்தின் மையத்திலும் சிவாலயம் ஒன்று அமைந்திருக்கிறது. வடக்கில் நகுலேச்சரம். மேற்கில் திருக்கேதீச்சரம். கிழக்கில் திருக்கோணேச்சரம் மற்றும் கொக்ககட்டிச்சோலை தான்தோன்றீச்சரம். தெற்கில் தொண்டீச்சரம். (இந்த ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டு, தற்போது விஷ்ணு கோயிலாக காணப்படுகின்றது) மையத்தில் முன்னேச்சரம் காணப்படுகின்றது. இதனால்தான் ஈழம் சிவபூமியானது.

இது மாத்திரமல்ல, ஈழத்தில் மிகவும் தொன்மை மிகுந்த பல ஆலயங்கள் காணப்படுகின்றன. பல ஆலயங்கள் தென் தமிழகத்துடன் தொடர்புபட்டவை. உதாரணத்திற்கு வன்னிப் பெருநிலப் பரப்பில், முள்ளிவாய்காலை அண்மித்த நந்திக் கடற்கரையில் இருக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய ஆலயம்.

மதுரையை எரித்த கண்ணகி, தனது வெம்மையை தணிக்க ஈழம் வந்தாளாம். ஈழத்திற்கு வந்து பத்து இடங்களில் அவள் உறைந்திருக்கிறாள். அந்தப் பத்து இடங்களும் இன்று கண்ணகி ஆலயங்களாக உள்ளன. அத்துடன் பத்தாவது இடமாக வற்றாப்பளையில் நந்திக்கடல் அருகே ஆறியிருக்கிறாள். பத்தாவது இடம் என்பது பத்தாப்பளை ஆகி பின்னர், வற்றாப்பளை ஆகியிருப்பதாக வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன.

இப்படி தமிழும் சைவமும் அதன் தொன்மங்களும் நிறைந்த ஈழத்தை சிங்கள பூமியாக்க முடிக்கிறது சிங்கள அரசு. இதற்காக பல்வேறு ஆக்கிரமிப்பு நடவடிக்கையிவ் ஈடுபடுகிறது அரசு. ஏற்கனவே, சிங்கள அரசு ஆக்கிரமித்து வைத்திருந்த இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகளையும் புத்தர்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. போர் முடிவடைந்ததும் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் அவசர அவசரமாக விகாரைகள் கட்டப்பட்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா என ஈழத்தின் முக்கியமான நகரங்களில் எல்லாம் பௌத்த விகாரைகள் எழுப்பட்டு பௌத்த நகரம் போல காட்சி அளிக்கின்றன. மேலே குறிப்பிடப்பட்ட பஞ்ச ஈச்சரங்களையும் சிங்கள பௌத்த இடமாக்க சிங்கள அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த ஆலயங்களின் அருகில் விகாரைகளும் புத்தர் சிலைகளும்ம் நிர்மாணிக்கப்படுகின்றன.

திருகோணமலையில், இராணுவனன் தன்னுடைய தாயின் ஈமக் கிரியைகளுக்காக, தன் வாளை உருவி, கிண்டிய ஏழு கிணறுகள் கன்னியா வெந்நீறூற்று எனப்படுகின்றது. இயற்கையான அந்த வெந்நீறூற்றை இன்று சிங்கள பௌத்த பேிரனவாதிகள் ஆக்கிரமித்து, அவை சிங்களமயமாக்கப்பட்டுள்ளன. சைவ ஆலயங்களில் உள்ள கடைகள் எல்லாம் சிங்களவர்களின் கைகளில் உள்ளன. திருகோணேச்சரம் ஆலயம் செல்லும் வழி சிங்களமயமாக்கப்பட்டுள்ளது.

இப்போது, போர் நடந்த முல்லைத்தீவு பகுதிகளில் உள்ள மலைகளில் புத்தர் சிலைகளை வைக்க பௌத்த பிக்குகள் தினமும் முயன்று வருகின்றனர். அண்மையில் புத்தர் சிலை ஒன்றை வைக்க முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு வந்த சிங்களப் பிக்குவை அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விரட்டியடித்தனர். அதைப்போலவே வெடுக்குநாறி மலையில் உள்ள சிவன் ஆலயத்தை அகற்றி அங்கு புத்தர் சிலயை வைக்கவும் சிங்களர்கள் முயன்று வருகின்றனர்.

தற்போது சிங்கள அரசு தனது உத்தியோகபூர்வ பத்திரிகையான வர்த்தமானி இதழ் மூலம் மற்றொரு அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது. தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் பௌத்த விகாரைகள் முன்பு காணப்பட்டதாகவும் அந்த தொல்லியல் முக்கியத்துவமான இடங்களை அடையாளம் காணவுள்ளதாகவும், வடக்கில் பாரிய விகாரைகளை அமைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் மக்கள் நெஞ்சில் இடியாய் தாக்கியுள்ளது.

தமிழீழத்தை சிங்கள பூமியாக மாற்றிவிடுவதன் மூலம், தமிழீழக் கோட்பாட்டை அழித்துவிடலாம் என்று சிங்கள அரசு நினைக்கிறது. தமிழர்களின் தொன்மங்களை அழித்து அவர்களை இன அழிப்பு செய்துவிடலாம் என்று சிங்கள அரசு எண்ணுகிறது. தமிழர்களின் தாய் மண் முழுவதும் பௌத்த விகாரைகளை கட்டி, புத்தர் சிலையை வைப்பதை இனியும் தமிழர்கள் அனுமதிப்பார்கள் என சிங்கள அரசு மனப்பால் குடிக்கிறது.

முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு முதலிய மாவட்டங்களில் தமிழ் இளைஞர்கள் சிங்கள, இஸ்லாம் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக கிளர்ந்து விட்டார்கள். இது ஏனயை மாவட்டங்களிலும் பரவப்போகிறது. இனி புத்தர் சிலைகளுடன் எவராவது வந்தால் விரட்டி அடியுங்கள் இளைஞர்களே. அரசோ, இராணுவமோ, பிக்குகளை அடித்து விரட்டுவதில், இனி எங்கள் நிலத்தில் கால் அடியே வைக்கக்கூடாது.

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
06.10.2018

http://eelamnews.co.uk/2018/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply