போருக்குப் பின்னரும் நிமிர்ந்து நிற்கும் திருவையாறு கிராமம்

போருக்குப் பின்னரும் நிமிர்ந்து நிற்கும் திருவையாறு கிராமம்

நடராசா லோகதயாளன்

வடக்கு மாகாணத்தில் இருந்து வாராந்தம் 500 பார ஊர்தி விவசாய உற்பத்திகளைத் தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்த ஓர் விவசாயக் கிராமம்.  இன்று மிழிர்ந்து நிமிர்ந்து நின்றாலும் விவசாய உற்பத்திக்கு அடுத்த கிராமத்தை திரும்பிப் பார்க்கும் நிலமைக்குச் சென்றுகொண்டிருப்பதனை வெளிக்கொண்டுவர விரும்பி குறித்த கிராமத்திற்குள் நுழைகின்றேன்.

ஆம் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் திருவையாறு விவசாயக் கிராமத்தினை அன்று விவசாயிகள் எவ்வாறு உருவாக்கி இன்றைய கம்பீரத்தை ஏற்படுத்தினார்கள்? நகரின்மத்தியில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள இக்கிராமம் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் படித்து வேலையற்ற இளையர்களை அழைத்துச் சென்று காடுவெட்டி ,கட்டை பிடுங்கி , வேலிகள் அமைத்து இக்கிராமம் உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட இக்கிராமம் இன்று திருவையாறு 1ஆம் , 2ஆம் , 3ஆம் , 4ஆம் பகுதிகள் என மிகப்பெரிய கிராம்மாகவுள்ளது.Image result for கிளிநொச்சி திருவையாறு கிராமம்

இவ்வாறு கானப்படும் இப்பெருமைமிகு கிராமத்தினை முதன் முதல் உருவாக்கிய காலம் முதல் இன்றுவரை அக்கிராமத்தில் உள்ள சில நூறுபேரில் ஒருவரும் அக்கிராமத்தின் வரலாற்றை அறிந்தவர்களில் ஒருவரும் ஓய்வு பெற்ற கூட்டுறவுப் பொதுமுகாமையாளரும் மூத்த விவசாயியுமான 71 வயது  சுப்பிரமணியம் – கணபதிப்பிள்ளையை இக்கிராமத்தில் இருந்து வயல்சார்ந்த வாழ்வும் அதனால் இந்த நாட்டிற்கு உவர்ந்தளித்த நெல் மற்றும் விவசாய உற்பத்திகள் தொடர்பில் கேட்டேன்.

திருவையாறுக் கிராம் 1967 ஆம் ஆண்டு டட்லி சேணாநாயக்காவின் ஆட்சிக் காலத்தில். முதன் முதலாக ஒருவருக்கு 3 ஏக்கர் என்ற விகித்த்தில் 100 பேருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்பு 2ஆம் பகுதி 1972ஆம் ஆண்டிலும் 3 ஏக்கர் விகிதம் 267 காணிகள் வழங்கப்பட்டன. அதன் பின்பு 1973ல் 164 காணிகள் 2 ஏக்கர் விகிதம் 3ஆம் பகுதியென வழங்கப்பட்டது. இது கிராமிய விஸ்தரிப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிற்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் 176 படித்த வேலையற்ற 176 பெண்களிற்கு 1.5 ஏக்கர் விகிதம் வழங்கப்பட்டதே 4ஆம் பகுதியாகும்.Image result for கிளிநொச்சி திருவையாறு கிராமம்

இவ்வாறு 4 பகுதிகளிலும் மொத்தமாக 707 குடும்பங்களிற்கே முதன் முதலாக காணிகள் அரசினால் நேரடியாக வழங்கப்பட்டது. இவ்வாறு குடியேறிய மக்களில் நெடுந்தீவில் இருந்து வந்த  நானும் ஒருவன் என்றவகையில் பெருமை கொள்கின்றேன். அந்த வாழ்வு எனக்கு இப்பவும் ஞாபகம் உள்ளது. இந்த மண்ணில் இருந்த காட்டில் நான் கால் வைக்கும்போது எனக்கு 24 வயது. இளமைக் காலம் நான் 2ஆம் பகுதி குடியேற்றத் திட்டத்தில் வந்தவன். நானே காடுவெட்டி எனது கையால் கட்டையும் புடுங்கி இங்கே வெட்டிய காட்டில் இருந்தே வேலி அமைத்தேன். அதன் பின்பே ஒரு கிணற்றையும் ஓர் கொட்டிலையும் அமைத்துத் தங்கினேன்.

அவ்வாறு நாம் அடர்ந்த  காட்டைச் சீர் செய்து விவசாயத்தின் மூலம் வாழலாம்  என்ற நம்பிக்கையை தந்தது இரணைமடுக்குளம் மட்டும்தான். அந்த இரணைமடுக் குளத்தின் மூலம் எமக்கு ஏற்று நீர்ப்பாசண வசதி ஏற்படுத்தி நீர் வசதி செய்து கொடுக்கப்பட்டபோதும்   எமக்குத் தந்த 3 ஏக்கரில்  ஒரு ஏக்கரில் வீடும் வான் பயிர்களும் , ஒரு ஏக்கர் நிலத்தில் ஏற்று நீர்ப்பாசண நீரில் விவசாயமும் மற்ற ஒரு ஏக்கர் நிலத்திற்கு கிணற்று நீரில் விவசாயமும் மேற்கொள்ளவேண்டும்  என்பதே நிபந்தனை. இவ்வாறு நாம் காடுவெட்டிக் குடியிருப்பு அமைக்க சில மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் சில மாதங்களுக்கான உலர் உணவும் மட்டுமே வழங்கப்பட்டது.Image result for கிளிநொச்சி திருவையாறு கிராமம்

அவ்வாறு வழங்கப்பட்ட எமது  காணியில் அந்தநேரம் அதிகாலை 5 மணிக்கு எழுந்து தோட்டச் செய்கையிலும்  ஈடுபட ஆரம்பித்தோம். அந்த நேரம்  தொடக்கத்தில்  சந்தைப்படுத்தல் பிரச்சணையாக இருந்தபோதும் பின்னர் வாரத்தில் இருநாள் சந்தையின் மூலம் அதனை நிறைவான முறையில் சந்தைப்படுத்த  தொடங்கினோம். இவ்வாறு இயங்கும் சந்தை வெள்ளி இரவு  தொடங்கி  சனிக்கிழமை இரவு வரைக்கும் இடம்பெறும். அதேபோன்று புதன் கிழமையிலும் இடம்பெறும். இதில் சனிக்கிழமை சந்தைக்கு கிளிநொச்சியில் இருந்து 350ற்கும் மேற்பட்ட பார ஊர்திகளில் தெற்கிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் மரக்கறிகள் மற்றும் வாழைக் குலைகள் ஏற்றப்படும். அதேபோன்று புதன் கிழமைகளில் 150ற்கும் மேற்பட்ட பார ஊர்தியுமென வாராந்தம் 500ற்கும் மேற்பட்ட பாரா ஊர்திகளில்  சந்தைப்படுத்திய மாவட்டம் எமது மாவட்டம்.

ஆனால் இன்று வாராந்தம் 100 பார ஊர்திகளிற்கு மேல் மரக்கறி தம்புல்லையில் இருந்து எதிர்பார்க்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் எமக்கு ஏற்று நீர்ப்பாசண நீரில் தடங்கல் ஏற்பட்டதனால் எமது கிராமத்தில் 15 தொடக்கம் 20 அடிக்குள் காணப்பட்ட நிலத்தடி நீர் 35 தொடக்கம் 40 அடிக்கு கீழ் சென்றது. இவ்வாறு நிலத்தடி நீர் ஆழத்திற்குச் சென்றதனால் தேங்காய் விளைச்சலும் குறைவடைந்தது. இதனால் 1983ற்குப் பின்னர் மாற்றுத் திட்டங்களையும் கைக்கொண்டோம். இதன்போது அயல் கிராமங்களான மகிழங்காடு, மருதநகர், முரசுமோட்டைப்பகுதிகளில் நெற்செய்கைகளிலும் ஈடுபட்டோம்.Image result for கிளிநொச்சி திருவையாறு கிராமம்

இவ்வாறு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நாம் கால் நடை விவசாயத்திலும் ஈடுபட்டோம். அதிகமான வீடுகளில் தமது தேவைக்கும் மற்றும் வயல்கள் உழவுகளிற்கும் எனக் கால் நடைகளும் வளர்க்கப்பட்டதோடு 300 , 400 மாடுகள் வளர்த்த 6 பெரும் பட்டிகளும்  தொடக்கத்தில்  இருந்தன. இவ்வாறு கானப்பட்ட மாடுகளிற்கு இரணைமடுக்குளத்தின் அலைகரைப்பகுதிகளே மேச்சல்த் தரைகளாக விழங்கியது. இந்த மாடுகளைத்தேடி இப்பகுதிகள் தோறும் தினமும் கால் நடையாகவும் துவிச்சக்கர வண்டிகளிலுமே பயணித்தோம்.

இந்தக் காலத்திலேயே திருமணமாகி 3 பிள்ளைகளையும் வளர்க்க உதவிய பூமியிது.

திருவையாறு அப்போது எம்மிடம் இருந்த மாடுகளாக சிந்து, கந்தாயம், காங்கி, தர்ப்பகார், கிளாறி, இனங்களும் உள்ளுர் இனங்களும்  காணப்பட்டன. அதன் பின்னர் பால்த் தேவை அதிகரிக்கவே தற்போது ஜே.சி , கிறேசியஸ் , கிறீன்டன் இனங்கள் காணப்படுகின்றது. இவ்வாறு அல்லும் பகலும் உழைத்துக் கட்டியெழுப்பிய எமது கிராமம் போர்க்காலத்திலும் பல்லாயிரக்  கணக்கானோரின் அடைக்கல பூமியாகவும் திகழ்ந்தது. இறுதிப்போரில் பாரிய அழிவுகளையும் சந்தித்தது.

இன்று இந்த மண்ணின் வருமானத்தில் இந்த கிராமமே நிமிர்ந்து நிற்கின்றது. அவ்வாறு அன்று காடுவெட்டி குடியேறியபோதும் எனது ஒரு மகன் பொறியியலாளராகவும்  ஒருவர் வெளிநாட்டிலும் உள்ளதோடு மகள் அஞ்சல் அதிபராக பணியாற்றுகின்றார் எனத் தெரிவித்தார்.

இதேநேரம் குறித்த கிராமத்தில் தற்போது திருவையாறு 1ஆம் பகுதி மட்டும் சுமார்  500 காணிகளாகவும்  இரண்டாம் பகுதி 1200 காணிகளாகவும்   3 ஆம் பகுதி 1100 வரையிலான காணிகளாகவும் பிரிந்துவிட்டன. அதாவது 531 குடும்பங்களிற்கு வழங்கப்பட்ட நிலப்பகுதிகள் 2 ஆயிரத்து 800 காணிகளாகிவிட்டன.  இதனால்  அதிகமானோர் விவசாயத்தை கைவிட்டபோதும் இன்னும் அழியவில்லை. இதேநேரம் இந்தக் கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் மட்டும் இன்று  நாட்டில் மட்டுமன்றி உலகின் பல பாகங்களில் வாழ்கிறார்கள். அவர்களில்  40 பேர் மருத்துவர்களாக உள்ளனர். அதேபோன்று 30ற்கும் மேற்பட்ட பொறியியலாளர்களும் ஏனைய அரச பணிகளில் 400ற்கும் மேற்பட்டோரும் பணியாற்றுகின்றனர்.

இதேநேரம் இக் கிராமத்தின் 3 ஆம் பகுதியில் தொடக்கத்தில் குடியமர்ந்து விவசாயத்தின் மூலமும் ஆசிரியர் தொழிலின் ஊடகவும் வாழ்ந்ததோடு தனது 3 பிள்ளைகளை  மருத்துவர்களாக உருவாக்கிய மற்றுமொருவரான ஓய்வு பெற்ற அதிபர் க.இராசேந்திரத்தை அணுகி ஏனைய விபரங்களை அறிய முற்பட்டேன்.

அதாவது நீங்கள்  தொடக்க காலத்தில் மேற்கொண்ட விவசாயத்தினை மீளக்கட்டி எழுப்பவும் அதே வளத்தினை இப்ப உள்ளவர்களும் பெருக்க என்ன நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும் என உங்களின் அனுபவம் ஊடாக கூறுவீர்களா எனக் கேட்டபோது ,

அன்று நாம் குடியமர்ந்ந காலத்தில் எந்தவிதமான வசதிகளுமே கிடையாது. 1973 ஆம் ஆண்டு குடியேறியபோதும் 1980 ஆம் ஆண்டிலேயே மின்சாரத்தினை முழுமையாகக் கண்டோம். அதேபோன்று 1985ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டம் தனி மாவட்டமாக பிரியும் வரையில்  யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கே செல்ல வேண்டும். இருப்பினும் சிறப்பான பொருளாதார ஈட்டம் கிடைத்தது.  இன்று  முயற்சி இருந்தாலும் பழைய நிலமை கிடையாது.

மின்சாரத்தை பார்த்த காலத்தைவிட மின்சாரம் இன்றியும் எரிபொருள்  இன்றியும்  வாழ்ந்தகாலமே அதிகம். இன்று திருவையாறில் 1ஆம் பகுதியில் 400 குடும்பங்களும்  2ஆம் பகுதியில் 300 குடும்பங்களும்  3 ஆம் பகுதியில் 265 குடும்பங்களுமே வசிக்கின்றதோடு 4 ஆம் பகுதியில் 40 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இருப்பினும் தற்போது வசிக்கும் குடும்பங்களுக்கு விவசாயம் மேற்கொள்ள  நிலம்  போதுமானதாக இல்லை. அதாவது காணிகள் பங்கீட்டால் குறைவடைந்து விட்டன. அதேபோன்று வான்பயிர்களும் அதிக இடங்களை பிடித்து விட்டன.

இதேநேரம் கிளிநொச்சியை மீண்டும் விவசாய , சிறுதானிய , தோட்டImage result for கிளிநொச்சி திருவையாறு கிராமம்ச் செய்கையில் தன்னிறைவான மாவட்டமாக மாற்றிப் பழைய சந்தை வாய்ப்பினையும் பெறுவதற்கு முயற்சி மட்டுமின்றி விவசாயிக்கான தன்னிறைவும் வேண்டும். அதில் முதலாவதாக காணியே தற்போதைய பெரும் கேள்விக்குறியாகவுள்ளது என்றார்.

இதேநேரம் இக்கிராமத்திற்கு மிக அருகில் வீதியோரமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு படையினரின் விவசாயத் தேவைக்காக வல்வளைப்புச் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply