இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்!
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அவற்றுக்கென்று இருபத்தியொரு நாடுகளும் உள்ளன. அதே எண்ணிக்கை உள்ள தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நாடும் சொந்தமானதாக இல்லை. ஐக்கிய நாடுகள் மன்றிலும் தமிழ் நாட்டுக்கென ஒரு நாற்காலியும் இல்லை. இது பற்றி எண்ணி வருந்திக் கொண்டிருப்பவர்கள் நம்மில் பலர்.
அதற்கான எண்ணங்களை கோடிக்கணக்கில் எண்ணினோம். பேச்சுகளை ஆயிரக்கணக்கில் பேசினோம். கொள்கைகளை நூற்றுக்கணக்கில் வெளியிட்டோம். திட்டங்களைப் பத்துக் கணக்கில் வகுத்தோம். ஆனால் செயலில் ஒன்றையாவது நாம் செய்யவில்லை.
கிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன்! வீரனிலும் ஒரு மாவீரன்!! அவனே ஈழத்தின் வீரமகன் பிரபாகரன்! ஆயுதங்களைச் சேகரித்தான். தன் வாழ்விடமாகிய தமிழீழத் தாயகத்தையும் தன் மொழியையும், தன் மக்களையும் காப்பாற்றிட ஆயுதப்போரைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தான். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினான். போரில் இறங்கி விட்டான். அவனுக்கு ஆரம்பத்தில் சில இளைஞர்கள் தோள் கொடுத்தனர். சிலர் பலராகி பல்லாயிரக்கணக்கினராகி விட்டனர். ஆயிரத்திக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் உயிரையும் உடலையும் விடுதலைக்காக அர்ப்பணித்தனர்.
போர் நடைபெற்றது, ஓராண்டு ஈராண்டல்ல பல ஆண்டுகள். அவனை எதிர்த்து அடக்க முயன்ற அரசுகள் ஒன்றல்ல, இரண்டு. பெரும்பான்மை மக்களைக் கொண்ட சிங்கள அரசு பிரபாகரனோடு போராடி வெல்ல முடிய வில்லை. இறுதியில் அவனோடு போர் நிறுத்தம் செய்ய வந்தது. பேச்சு வார்த்தைக்கு அழைத்ததே தவிர சிங்கள அரசினால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. இதனால் பிரபாகரன் அந்த அரசுக்குச் சரிசமமாக இன்று காட்சியளிக்கிறான்.
சீனாவையும் பாகிஸ்தானையும் போரிட்டு வென்ற இந்தியப் பேரரசு பிரபாகரனை அடக்க எழுபத்தி ஐயாயிரம் போர் வீரர்களைத் தமிழீழத்துக்கு அனுப்பியது. இறுதியில் அவனை அடக்கவோ பிடிக்கவோ முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி வந்தது.
இதில் ஒரு அழகு. இந்த இரு அரசுகளுக்கும் நாடு உண்டு. படையுண்டு. ஆயுதங்களுண்டு. தங்குவதற்கு இடமும் உண்டு. உணவுண்டு. உடையுண்டு. பொருள் மற்றும் போர்க் கருவிகளுமுண்டு, கப்பற்படையும், தரைப்படையுமுண்டு.
மேற்கூறியவற்றில் எதுவுமே இல்லாதது மட்டுமல்ல காலுக்கு மிதியடி கூட இல்லாது, உடம்பிற்கு நல்ல உடையுமில்லாது சிறுசிறு காடுகளிலும் புதர்களிலும் மறைந்து நின்று ஒரு நாள் அல்ல இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இரு அரசுகளோடும் போராடியிருக்கிறான் மாவீரன் பிரபாகரன்.
இத்தகைய வீரன், ஒருவன் புறநானூற்றுக்குப் பிறகு இரண்டாயிரமாண்டுகளாக எவனும் தோன்றியதில்லை.
தம்பி பிரபாகரனின் செயல் சரியா தவறா என்று ஐயப்பட்டவரும் அவனது நோக்கம் நல்லதா கெட்டதா என்று ஐயப்பட்டவரும் அவன் அடையப் போவது வெற்றியா தோல்வியா என்று ஐயப்பட்டவருமுண்டு. ஆனால் அவன் ஒரு மாவீரன் என்பதில் யாருக்கும் ஐயப்பாடு ஏற்பட்டதில்லை.
தம்பி பிரபாகரன் தமது இலட்சியப் பதாகையை ஏந்தியபடி போர் முனையிலிருந்து மீண்டு பன்னெடுங்காலம் நல்ல உடல் நலத்துடனிருந்து தமிழீழ நாட்டுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் நற்றொண்டுகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்கவென வாழ்த்துகிறேன்.
(1990ஆம் ஆண்டு மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி அறிஞர் கோவை மகேசன் அவர்கள் நடத்திய ‘வீரவேங்கை’ இதழுக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய கட்டுரை. இது அன்றைக்கு அனைத்து தமிழராலும் பாராட்டுப் பெற்ற கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது.)
https://www.youtube.com/watch?v=vYXrD1FADQE
Engal Thalaivan Prabhakaran – Eelam Song
Song : Engal thalaivan Singer : Nithyasree Lyrics: Arivumadhi Music : Tamilan |
TAMIL NATIONAL REMEMBRANCE DAY, 2017
On the 27th November, Tamils across the world mark the Tamil National Remembrance Day, in memory of the Tamil freedom fighters who sacrificed their lives in the struggle for freedom.
Thousands of fighters and civilians lost their lives in pursuit of freedom and justice to attain the political rights and protect the Tamils from genocide. The right to mourn and honour the sacrifice of those who fought for the common good, is a universally recognised right. This has been denied to Tamils in Sri Lanka for decades. Sustained international campaign by human rights organisations and Tamil diaspora organisations have forced the Sri Lankan government to allow small scale memorialisation events to take place. Tamil people in the homeland have taken upon themselves to recreate and recover the destroyed tombs of the fallen Tamils, despite the intimidation and threats by the Sri Lankan military. We salute the courage of the Tamil people in the homeland. The Tamil Diaspora’s sustained campaigns and international action can bring about changes on the ground, despite the oppressive nature of the occupying Sri Lankan military.
This gives us further hope to pursue our mission of creating and sustaining an international pressure mechanism through available human rights organisations throughout the world. Despite promising full implementation of the UNHRC resolution 30/1 (2015), no substantial changes have happened in Sri Lanka. The missing persons office has not been operationalised despite several promises to the international community, as highlighted by the UNHRC High commissioner in his speech at the last meeting in Geneva.
While saluting the immense sacrifices made by the fallen heroes and the Tamil civilians, we pledge to continue their struggle for the emancipation of the Tamil Nation.
BTF calls upon all Tamil diaspora organisations to unite against external and internal challenges and calls for the full implementation of the UNHRC resolution on Sri Lanka and expose the duplicity of the Sri Lankan government and the oppressive nature of its military occupation. We call upon the Tamil political parties in Sri Lanka to unite and follow the lead of the Tamil people to face the oppressor courageously and provide leadership for a mass political struggle to force the Sri Lankan government to implement fully the internationally recognized and accepted resolution on Sri Lanka. We call upon the international community to take decisive actions to ensure the Sri Lankan regime delivers on the promises made forthwith, as justice delayed is justice denied. (BTF)
Leave a Reply
You must be logged in to post a comment.