About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. முழுப் பூசணிக்காயை எவ்வளவு காலத்துக்குச் சோற்றுக்குள் மறைக்க முடியும். தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்துக்குப் பின்புலமாக இருந்தவர்கள் புலம்பெயர் வி.புலிகளின் எச்சங்கள்தான். அவர்கள்தான் கஜேந்திரகுமாரை இரண்டாயிரத்துப் பத்தில் ததேகூ இல் இருந்து வெளியேற வைத்தனர். அவருக்கு அரசியலில் ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக ஆசை காட்டினர். அவர்தான் தமிழ்மக்களின் தலைவன் ஆக வருவதற்கு தேவையான கல்யாண குணங்கள் இருப்பதாக அவர் காதில் ஓதினார்கள். இந்த வஞ்சக வலையில் மாட்டிக் கொண்டவர்தான் கஜேந்திரகுமார்.
    கோகாதே போகாதே என் நண்பா பொல்லாத கனவொன்று கண்டேன் என்று அவருக்குச் சொல்லிப் பார்த்தேன். ஒரு முறை அல்ல பலமுறை மொத்தம் மூன்று நாட்கள் தொடர்ந்து சொல்லிப் பார்த்தேன். கெடு குடி சொல் கேளாது என்பது போல அவர் எனது புத்திமதியைக் கேட்கவில்லை.
    திருகோணமலையில் சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோரை தோற்கடிக்கப் போவதாக வானொலி, தொலைக்காட்சிகளில் ஒரு பாமரனைப் போல் பேசினார். தேர்தல் முடிவுகள் வந்தபோது யாழ்ப்பாணம், திருகோணமலை தேர்தல் மாவட்டங்களில் தமிழ்ச் காங்கிரஸ் கட்சி கட்டுக்காசை இழந்தது.
    மீண்டும் இரண்டாயிரத்து பதினைந்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலத்த ஆரவாரத்தோடு களம் இறங்கினார். புலம்பெயர் வி.புலிகளின் எச்ச அமைப்பான அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (ஐசெட்), மாற்றத்துக்கான குரல் அமைப்பு பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்தன.
    காங்கிரஸ் கட்சி பத்துப் பதினைந்து இடங்களில், குறைந்தது நாலு இடங்களில் வெற்றிவாகை சூடப் போவதாக பறை அறைந்தார்கள். பாவம் தேர்தல் முடிவுகள் வந்த போது தமிழ்க் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட எட்டு மாவட்டங்களில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் நீங்கலாக எஞ்சிய ஏழு மாவட்டங்களிலும் கட்டுக் காசை இழந்தது.
    யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஆறு வாக்குகளால் கட்டுப் பணத்தைக் காப்பாற்றிக் கொண்டது. காங்கிரஸ் கட்சிபோலவே இபிஎல்ஆர்எவ் சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட் ட சுரேஸ் பிறேமச்சந்திரன் முப்பதாயிரம் வக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.
    எனவே தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களே தமி்ழ் மக்கள் பேரவை என்ற முகமூடியை அணிந்து கொண்டு தேர்தலில் போட்டியிட கொடுக்கை இறுக்கக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்கள்.
    விக்னேஸ்வரனை விட்டால் வேறு கதி இல்லை என்பதால் அவர் காலில் விழுந்து அவரது ஆதரவைக் கேட்டுக் கெஞ்சுகிறார்கள். விக்னேஸ்வரன் ஒரு மண்குதிரை என்பது அவர்களுக்கு விளங்கவில்லை.
    எமது மக்களுக்கு தங்கம் எது பித்தளை எது என்ற வித்தியாசம் தெரியும். சூரனைப் போல மாமரத்தின் பின்னால் ஒளிந்திருந்து வந்தாலும் மக்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் என்பது நிச்சயம்.

Leave a Reply