உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பை அறியாதவர் மடத்திற் புகுந்த நாய் போன்றவர் என்கிறார் திருமூலர்
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின்றாரே. — திருமந்திரம் 2148
உடம்பின்றி உயிர் இயங்காது. உயிர் இன்றி உடம்பு இயங்காது. உடம்புக்கு உயிர் இன்றியமையாதது. உயிருக்கு உடம்பு இன்றியமையாதது. உடம்பும் உயிரும் ஒன்றியிருந்தால்தான் சிறப்பு.
கூட்டைவிட்டு பறவை பறந்துவிடுவது போல உடம்பைவிட்டு உயிர் பிரிந்துவிடகூடாது. உடலை உயிர் மறக்ககூடாது. உயிரை உடல் மறக்ககூடாது. உயிருறும். உடல் உடலுறும் உயிர் ஆகிய இரண்டுமே ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது காக்கப்பட வேண்டும்.
அருட்பிரகாச வள்ளல் பெருமான் இப்படி இறைவனிடம் வேன்டுகிறார்.
உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும்
அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி.
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றி சிவத்திற்கு சேர்வதே சித்தி இதையே திருமூலர்.
உடலும உயிரும் ஒழிவற ஒன்றிற்
படரும் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட்டு இந்த உயிர் எங்குமாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றுவதே உண்மை நட்பு. இந்த நட்பை உணர்ந்து உரிய சாதனங்களால் சுத்த.பிரணவ, ஞான தேகங்களை பெற்று முத்தி.சித்திகளை பெறவேண்டும்.. இஃது உணராது உடம்பு பிணமாக விழ உயிர் முத்தியடையும் என்போர் மூடர். அத்தகைய மூடரை நோக்கியே தாயுமானவர்.
உலக நெறிபோல் சடலம் ஒயஉயிர் முத்தி
இலகுமெனில் பந்த இயல்போ பராபரமே.
உரிய பக்குவமுடையார்க்கு இறைவன் உயிரில் மட்டுமன்றி உடலிலும் புகுந்து கலந்து அருள் புரிகின்றான்.
சுத்த வடிவம் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்க – சித்தெனும்ஓர்
ஞான வடிவம் இங்கே நான் பெற்றேன் எங்கெங்கும்
தான விளையாட்டியற்றத் தான்.
நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சித்தி நாட்டைந்தேன் – நானே
அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு – திருஅருட்பா
சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும் என்பது பழமொழி அதுபோல் உடம்பை வைத்துத்தான் நாம் முத்தி சித்திகளை பெற முடியும்.
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உருபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே. – திருமூலர்
இந்த பாடலில் உடம்பின் அருமையை அழகாக திருமூலர் கூறுகிறார். முத்தியடைவதற்கு இந்த இம்மானிட தேகமே ஏற்றதேகம் வேறு தேக்கத்தால் அதை அடை முடியாது ஆதலால், எவ்விதத்தால் ஆயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும் என வள்ளல் பெருமான் உபதேசித்துள்ளார்.
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
https://www.facebook.com/pages/தமிழ்-கடல்-Tamil-Blog-Site/623005831053615
கரு வளர்ச்சி – திருமூலர்
பன்னிய நாதம் பகர்ந்த பிருதுவி
வன்னியும் வாயுவும் ஆயுறுஞ் சுக்கிலம்
மன்னிச் சமனாய் வளர்க்கும் உதகமே.
உதகம் உதிரம் உறுங்கனல் வாயுவால்
சிதகுறும் அங்கங்கள் செய்து முடித்திடும்
பதகுறும் உரோமம் பகர்தசை அஸ்தியின்
நிதகுறும் ஒன்பது வாசலும் நீங்குமே.
பெண்ணின் கருப்பையில் அவளுடைய நாதத்துடன் அக்னி, வாயு போன்ற பூதங்களுடன் கூடிய சுக்கிலமானது (உயிர் நீர், விந்து) கலந்து நிற்கும். இக்கலப்பு விகிதமானது சரி அளவிலிருக்கும் கலந்த இந்த நாத விந்தை சுற்றி உதகம் என்ற நீரானது சூழ்ந்துகொண்டு குழந்தையை வளர்க்கும் உதகம், உதிரம் அக்னி, வாயு போன்றவைகள் ஒன்றாகக் கூடி நின்று அங்கங்கள், ரோமம், தசை, அஸ்தி போன்றவைகளை உண்டாக்கி ஒன்பது வாசல் கொண்ட தேகமாக வளரச் செய்யும்.
ஒன்பது வாசல் என்பது.
கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்குத் துளைகள் இரண்டு, வாய் ஒன்று, மூத்திரத் துளை ஒன்று மற்றும் மலத் துளை ஒன்று.
அப்படி கரு வளரும்போது, பத்து வகையான வாயுக்கள் மற்றும் ஒரு ஆன்மா கருப்பையில் செல்லும் என்கிறார். இவைகள் செல்லும் வரை அந்த கரு வெரும் சதை என்கிறார்.
பத்துவகையான வாயுக்கள்.
பிராணன், அபானன், வியானன். உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன்,
இந்த பத்து வகையான வாயுக்ளை இன்றய விஞ்ஞானத்தால் அறியப்பட முடியவில்லை ஆனால், நம் முன்னோர்களால் தோற்றிவிக்கப்பட்ட வர்மக்கலையில் இந்த பத்து வகையான வாயுக்களே முக்கிய பங்கு வகிக்கிறது.
நீங்கிட நீங்கிட நிமிர்ந்து வளர்ந்தோங்கும்
ஓங்கிட ஓங்கிட உறுகியாம் வாயுவும்
வாங்கிட வாங்கிட வன்னி தலைக் கொளும்
பாங்கிடப் பாங்கிடப் பத்தாகும் திங்களே.
திங்கள் பத்தாகி தேய்வோடு வாயு சேர்ந்து
அங்கி மலர்த்தி அமளியாக் கீழ் நோக்கி
பொங்கிப் பிறந்த நாள் புகழ்வார் வெறுவீணர்
தங்கிச் செனிக்கையில் தான்நோயும் உற்றதே.
நாளாக நாளாக கருப்பையினுள் உள்ள குழந்தையானது வாயுவில் உள்ள பிராண சக்தியை இழுத்துக் கொண்டு திடமானதாய் வளரும். திடங் கொண்டு வளரும் சமயத்தில் அக்கினியானது குழந்தையின் சிரசைத் தாக்கும். இத்தாக்குதலானது பத்தாவது மாதத்தில் அதிகமாகி இவ்வக்கினியானது அங்கு அடைப்பட்டுள்ள வாயுடன் கூடி குழந்தையை கீழ் நோக்கித் தள்ளும். கீழ்நோக்கித் தள்ளும் இந்நாளை மக்கள் பிறந்த நாளாக கொண்டாடுவர். இதே நாளில் குழ்ந்தையுடன் சேர்ந்து நோயும் பிறந்தது என்கிறார் திருமூலர்.
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
https://www.facebook.com/pages/தமிழ்-கடல்-Tamil-Blog-Site/623005831053615
தமிழ்
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு
Thursday, February 16, 2017
திருமந்திரம் – திருமூலர்
தானச்சிறப்பு
அவர் இவர் என்று எண்ணாமல் நாம் அனைவருக்கும் கொடுத்து உதவுதல் வேண்டும். எப்பொழுதும் விருந்தினர்களை எதிர்பார்த்திருத்தல், பழமையான உணவுப்பொருள்களை அறிந்து பாதுகாத்து வைத்தல் நன்று. உணவை விரும்பி உண்பதும் வேகமாக உண்பதைத் தவிர்த்தலும் நம் உடலுக்கு நல்லதாகும். காகமானது தனக்கு உணவு கிடைக்கும் பொழுது தன் கூட்டத்தைக் கரைந்து அழைக்கும். அதுபோல மனிதனின் தானச்சிறப்பு அமைய வேண்டும்.
அறச்சிறப்பு
இறைவனை ஒரு பச்சிலையைக் கொண்டு அனைவராலும் வணங்க முடியும்.பசுவினையுடைய பசியை ஒரு வாய் உணவினைக் கொண்டு அனைவராலும் போக்கமுடியும். நாம் உண்ணும் உணவில் ஒரு கைப்பிடி உணவைக் கொடுத்து உதவ அனைவராலும் முடியும். அதேபோல் சான்றோர் பெருமக்கள் சொல்லக்கூடிய நற்கருத்துக்களைக் கேட்க செவிமடுத்தல் என்பதும் அனைவரும் செய்யக்கூடிய செயலே.
அன்புடைமை
அறிவில்லாதவர் அன்பும் சிவமும் வேறுவேறு என்பர். அன்பும் சிவமும் ஒன்று என்று அறிய முற்படுபவர்கள் அதனை அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பார்கள். தம்முடைய உடலை துண்டு துண்டாக விறகுபோல் கறுக்கி தீயிலிட்டு இறைவனுக்குப் படைத்தாலும், அன்போடு உருகி இறைவனை வழிபடுபவருக்கே இறைவனுடைய அருள் கிட்டும்.
உடம்பினைப் பேணுதல்
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்பு கின்றேனே…
என்று தமது திருமந்திரத்தில் (725) தெளிவாக்குகிறார். உடம்பினை முன்னர் இழுக்கு என்று இருந்தேன். உடம்பினுள் இருக்கக்கூடிய உண்மைப்பொருளைக் கண்டேன். உடம்பினுள்ளே உத்தமனாகிய இறைவன் கோயில் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்து என் உடம்பினைப் போற்றுகின்றேன்.அண்ணலாகிய இறைவன் இருக்கும் இடத்தை யாரும் அறியவில்லை. அண்ணல் இருக்குமிடத்தை அறிந்து கொள்வார்க்கு தம் உள்ளே அழிவின்றி அமர்ந்திடும் அண்ணலைக் காணும் பொழுது அவன் இறைவனாகுவான்.
இறைவனைக் காணல்
நம்முடைய உள்ளம் பெரிய கோவில். ஊன் உடம்பானது ஆலயமாகும்.வள்ளல்பிரானைக் காணக்கூடிய வாயானது கோபுர வாசலாகும். தெள்ளத் தெளிந்தவர்க்கு உயிரே சிவலிங்கமாகும். உடலில் உள்ள ஐம்புலனும் தூங்காத மணி விளக்காக உள்ளது. கோயிலிலே வீற்றிருக்கும் இறைவனைத் தேடி கொண்டிருக்கும் நாம் நம்மிடையே நடமாடிக் கொண்டிருக்கும் அடியவர்களை அடையாளம் காண்பதில்லை. நம்மிடையே நடமாடும் அடியவர்களுக்குச் செய்யும் ஈகையானது கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப்போய் சேரும்.
வாழ்வின் பயன்
இந்த உலகத்தில் அனைவரும் ஒரே குலம். அனைவருக்கும் ஒரே இறைவன்.அதனை நன்கு நினைத்தோமெனில் நமக்கு எவ்வித துன்பமுமில்லை. நாம் கதியாகச் சென்று சேரக் கூடிய ஒரே இடம் இறைவனுடைய பாதமாகும். நாம் வாழ்வு நிலைபெற இறைவனை வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட யானையின் உருவம் மரத்தை மறைத்தது. அது மரமாகப் பார்க்கும்பொழுது யானை மறைந்த்து. அதுபோல் பரம்பொருளை உலகத்தில் உள்ள ஐம்பூதமும் மறைத்துக் கொண்டுள்ளது. அவை பரம்பொருளாகத் தெரியும் பட்சத்தில் பூதம் மறைந்திருக்கும்.
உயிரும் உடலும்
ஆன்மாவைப் பேணுவதற்கு இறை சிந்தையைக் கைகொண்டோர். ஆன்மா தங்கியிருப்பதான உடலை ஒரு பொருட்டாகக் கருதாத நிலையைம் உள்ளுறையாகச் சாடுவார் திருமூலர். அவரது ஒரு பாடலில்,
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்பு கின்றேனே…
என்று தமது திருமந்திரத்தில் (725) தெளிவாக்குகிறார்.
ஏன் உடலை நாம் பேணிக்காக்க வேண்டும்? பரம்பொருளாகிய அந்த உத்தமன் உறைவது இந்த உடலுக்குள்ளேதான் என்பதை நாம் உணர்ந்து கொண்டால், இறைவன் உறையும் ஆலயத்தை நாம் எப்படிக் காக்க வேண்டும் என்று நினைப்போமோ அவ்வாறு இந்த உடலையும் பேண வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்!
இந்த உடலை நாம் அழித்துக் கொண்டால், நம் உயிரை அழித்துக் கொள்வதற்குச் சமமாகும்! அதுமட்டுமல்ல, இறைவனின் ஆன்ம சம்பந்தத்தை அறுத்தவர் போலாவோம்! ஆகவேதான்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே…
என்று தெளிவான திருமந்திரத்தை நமக்கு அளித்தார்.
உள்ளமே பெருங் கோவில், ஊனாகிய உடம்பு ஆலயம், ஜீவனே சிவன், கள்ளங்கபடற்ற புலன் ஐந்தும் சுடர் மணி விளக்குகள் என்றார். உடலைப் பேண வேண்டும், சரி.. அந்த உடலின் ஆக்கமும், அதனைப் பாதுகாக்கும் முறைகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதனை திருமூலரே சில பாடல்களில் நமக்கு அளித்துள
Posted by SNRTAMIL
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
உயிர் வளர்க்கும் திருமந்திரம் 03: மயக்கம் தீர்க்கும் திருமூலன்
பலருக்கும் தேவாரம், திருவாசகம் தெரிந்திருக்கும் அளவிற்குத் திருமந்திரம் தெரிந்திருக்கும் என்பதற்கில்லை. சைவ வட்டாரம் அறிந்திருக்கலாமே ஒழிய, பொதுநிலையில் திருமந்திரம் பரவலாக அறியப்பட்ட நூல் என்று சொல்ல முடியாது. சைவ மரபுமேகூடத் தேவாரம், திருவாசகம், பெரிய புராணத்தைப் போற்றிய அளவிற்குத் திருமந்திரத்தைப் போற்றிற்று என்று சொல்லத் தயக்கமாகவே உள்ளது. நல்லது. என்ன வகையான நூல் இந்தத் திருமந்திரம்?
சைவத் திருமுறை நூல்கள் 12 இல், பத்தாம் திருமுறையாக வருகிறது திருமூலர் எழுதிய திருமந்திரம். 11-ம் திருமுறை 12 பேர் தனித்தனியாகப் பாடிய, திருமுருகாற்றுப்படையை உள்ளிட்ட, சிற்றிலக்கிய வகை நூல்களின் தொகுப்பாக, 12-ம் திருமுறை திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணமாகப் பன்னிரு திருமுறை வைப்பு நிறைகிறது.
பத்தாம் திருமுறையாகிய திருமூலர் திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது. திருமந்திரத்தை அறியாதவர்களும்கூடத் திருமந்திரப் பாடல் வரிகள் சிலவற்றை அறிந்திருப்பார்கள். அவற்றில் சில:
“ஒன்றே குலமும் ஒருவனே தேவன்,” “அன்பே சிவம்,” “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்,” “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே,” “உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்,” “உடம்பார் அழியில் உயிரார் அழிவர்,” “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”.
கலக உள்ளடக்கம்
இந்த வரிகளில் ஒரு கலக முழக்கம் உள்ளொடுங்கியிருப்பதைக் காண்க. குலங்களும் கடவுளரும் தர வரிசைப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை ஒன்றாக்கியதும், இறைவனுக்கு வடிவங்கள் வழங்கிப் பூசித்து வரும் நிலையில் பூசிக்க வகையற்ற அன்பு என்னும் உள்ளத்துணர்வைக் கடவுளாக்கியதும், வரிசை முறை பார்த்தும் வாங்குகிறவர்களின் கை பார்த்துமே வழங்கி வந்த நிலையில் வரிசைமுறை பாராமல் வையத்தில் உள்ளோர் எல்லாம் வந்து வாங்கிக் கொள்க என்று கடை திறந்ததும், என்னை நன்றாகப் படைத்த இறைவன் தன்னை நன்றாகப் படைப்பதற்குத் தமிழையே தேர்ந்துகொண்டான் என்று தமிழை நிறுத்தியதும், உடம்பும் பொய், உடம்பு வாழும் உலகமும் பொய் என்று வழங்கப்பட்ட நிலையில் உடம்பை உண்மை என்றதும் உடம்பு உயிரை வளர்க்கும் கருவி என்றதும் நிறுவப்பட்ட மரபுக்கு மாற்றுச் சொல்லும் முயற்சி அல்லவா?
திருமூலர் என்கிற ஆன்மிக அடியாரின் இந்த வரிகளை மக்கள் நாவில் புழங்கும் வரிகளாகப் பரப்பியவர்கள், மரபை மறுதலித்த சுயமரியாதை இயக்கத்தினரும் அவர்களைப் போன்ற பிறரும் என்பது, இந்த வரிகளில் இருக்கும் கலக உள்ளடக்கத்துக்குச் சாட்சி அல்லவா? மரபார்ந்த சைவம் திருமந்திரத்தை ஒரு திருமுறையாக அங்கீகரித்தாலும் பெரிதாகக் கொண்டாடாமல் விட்டதற்கும், திருமந்திரத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்ததற்கும் இவை போதுமான ஆதாரங்கள் இல்லையா?
அப்படியென்றால், திருமந்திரம் எதைப் பேசுகிறது? திருமூலர் வழங்கும் நெறி என்ன? குறிப்பிட்ட நெறி ஒன்றுக்கு உடன்பட்டு அதன் வழியாக உயிரை ஒழுங்குபடுத்திச் செலுத்துவதா? அல்லது நிறுவப்பட்டுவிட்டவற்றுக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டுவதா? எது திருமூலரின் மையக் கருதுகோள்?
பக்தி நூல் அல்ல
இறைவனுக்குப் போற்றி பாடுகிற பக்திப் பனுவல்களோடு சேர்த்து வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் திருமந்திரம் பக்திப் பனுவல் அல்ல. அது மெய்யியல் நூல். உண்மையை அறிவதும் அடைவதும் எப்படி என்பதுதான் திருமந்திரம் கருதும் கேள்வி. உண்மையைக் குறிப்பிட்ட நெறி ஒன்றின் வழியாக அறியலாம், அடையலாம் என்றால், மெத்தச் சரி. திருமூலருக்கு மறுப்பேதும் இல்லை.
பாதை இருக்கிறது; பாதைக்குப் பக்கவாட்டிலோ சில்லென்று பூத்த சிறுநெருஞ்சில் காடு இருக்கிறது. பாதை பிறழாமல் நடப்பீர்கள் என்றால் பாதங்களில், நெருஞ்சில் முள் பாயாது. பாதை பிறழ்ந்தால் பாயும். எனவே பாதை பிறழாது நடவுங்கள்.
நெறியைப் படைத்தான்;
நெருஞ்சில் படைத்தான்!
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)
‘இதுதான் பாதை, இதுதான் பயணம்’ என்று கொள்கை வகுத்துக்கொண்ட பின்னால் பாதை மாறக் கூடாது. மாறினால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பாயுந்தானே?
சரி. இதுவரையில் பாதைக்குத் தொந்தரவில்லாமல் பக்கவாட்டில் பூத்துக் கிடந்த நெருஞ்சில் முள் இப்போது பாதையிலேயே படரத் தொடங்கிவிட்டது என்றாலோ பாதையைப் பயன்படுத்தவே முடியாதபடி முற்றாக விழுங்கிவிட்டது என்றாலோ ஒன்று முள்ளை வெட்டிப் போட்டுப் பாதையைப் பண்படுத்த வேண்டும். அல்லது இதுவரை பயணித்து வந்த பாதை பண்படாப் பாதை, இனிப் பயன்படாப் பாதை என்று பாதையைக் கைவிட்டுவிட வேண்டும். புத்தியுள்ளவர்கள் செய்யக்கூடியன இவைதாமே?
அவற்றையே செய்கிறார் திருமூலர். அப்படியான முன்னெடுப்போடு சொல்லப்பட்டவைதாம் முன்னர் சொன்ன கலக வரிகள். திருமூலர் தன்னியல்பில் உடன்பாட்டாளர்; உடன்பட வாய்ப்பில்லை என்றால் கொஞ்சமும் தயங்காத மறுதலிப்பாளர்.
திருமூலரின் உடன்பாட்டைக் கவனியுங்கள்:
ஒன்றுஅவன் தானே;
இரண்டுஅவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்;
நான்கு உணர்ந் தான்; ஐந்து
வென்றனன்; ஆறு விரிந்தனன்;
ஏழுஉம்பர்ச்சென்றனன்;
தான்இருந் தான் உணர்ந்து எட்டே. (திருமந்திரம், 1)
அவன் ஒன்று. அவனோடு பிரிப்பற நிற்கும் சத்தியாகிய அவனது அருள் தனிக் கணக்கென்றால் இரண்டு. படைத்தல், காத்தல், அழித்தல் என்று அவன் நிற்கும் நிலை மூன்று; அறம், பொருள், இன்பம், வீடு என்று அவன் உணர்த்துவன நான்கு; புலன்கள் ஐந்தையும் வென்றவன்; மந்திரமாக, பதமாக, வன்னமாக, புவனமாக, தத்துவமாக, கலையாக என்று ஆறாகவும் விரிந்து நின்றவன்; பிரமவுலகம், விட்டுணுவுலகம், உருத்திரவுலகம், மகேசுரவுலகம், சதாசிவவுலகம், சத்தியுலகம், சிவவுலகம் என்று ஏழு உலகங்களையும் தாண்டி அப்பாலே சென்றவன்; அவனை உணர்ந்து எட்டு(க) என்று திருமூலர் இறைவனை ‘எண்ணிப்’ பாடுகிறார்.
‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் ‘ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமச்சிவாய என ஐந்தானவன், இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசைச் சுரங்களில் ஏழானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்’ என்னும் கண்ணதாசன் பாடலை திருமந்திரத்தின் இந்த முதற் பாடலுடன் ஒப்பிட்டுக்கொள்வார் ஒப்பிட்டுக் கொள்க.
எனவே, திருமூலர் முற்றாக மரபை மறுத்தவர் அல்லர். கலகத்தையே நெறியாகக் கொண்டவரும் அல்லர். மரபார்ந்த நெறிகளையே முன்வைக்க விரும்புகிறவர் அவர். அவற்றில் செல்ல முடிந்தவர்கள் செல்க. அதுவே நல்லது. ஏனெனில் மரபார்ந்த நெறிகள் ராசபாட்டைகள். நீங்கள் அடைய விரும்புகிற பதவிகளுக்கு அவை உங்களை இட்டுச் செல்லும். என்றாலும் நெறிகள் உங்களை அடிமைப்படுத்தும் பொறிகள் ஆகுமானால், நெறிகளை விட்டு நீங்குக. உங்கள் உள்ளத்தின்வழிச் செல்க என்று ஆபத்துக் கால ஒற்றையடிப் பாதை ஒன்றையும் காட்டி வைக்கிறார்.
ஐய மாக்கடல் ஆழ்ந்த உயிர்க்கெலாம்
கையில் ஆமல கம்எனக் காட்டுவான்
மையல் தீர்திரு மந்திரம் செப்பிய
செய்ய பொற்றிரு மூலனைச் சிந்திப்பாம்
-என்கிறது ‘பதி பசு பாச’ விளக்கம் என்னும் நூல். சந்தேகக் கடலில் ஆழ்ந்த உயிர்களுக்கு எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல உள்ளது விளக்குவான் —மயக்கத்தைத் தீர்க்கின்ற திருமந்திரத்தைச் செய்த திருமூலன்.
(அவனைச் சிந்திக்கலாம்.)
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
Leave a Reply
You must be logged in to post a comment.