தொலைந்து போன தென்னமரவடி!

வணக்கம்,

தென்னமரவடி, மட்டக்களப்பு பண்ணை அமைப்புக்கான  நிலத்தை அரசிடம் பெறும்  பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற்ன.திருகோணமலை,மட்டக்களப்பு  அரசாங்க அதிபர்கள் காணிகளைத்தந்தாலும் புதைபொருள் துறை , வனத்துறை, வனவிலங்குத்துறை,சூழல் துறை உள்ளிட்ட 7 துறைகளின் ஒப்புதல் பெறவேண்டும்.5 துறைகள் ஒப்புதல் அளித்துவிட்டன.2 துறைகள் தரவேண்டும்.வனத்துறை கொமரங்கடவையிலும் சூழல் துறை கந்தளாயிலும் உள்ளன.இவையிரண்டின் ஒப்புதல்கள் கிடைக்க வில்லை.இரண்டு இடங்களுக்கும் அலைத்து கொண்டிருக்கின்றேன்.

 அடுத்தது தமிழரசுக் கட்சியின் பின்னடைவுக்கான காரணங்களை கண்டறியும் பணிக்காக அம்பாறை , மட்டக்களப்பு , முல்லைத்தீவு , வவுனியா ஆகிய இடங்களுக்குச் சென்றுவந்துவிட்டேன். இன்று மன்னார்செல்கின்றேன். நாளை யாழ்ப்பாணம் செல்கின்றேன் . யாழ்ப்பாணத்திலும் பருத்தித் துறையிலுமாக இரண்டுநாட்கள் நடைபெறும் . அதற்குப்பின்  கிளிநொச்சி யில் நடைபெறும்.

இவ்வாறு பல்வேறு பணிகளுக்கும் போய்வருவதற்கு வாகனம் இன்மை பெரிய சிக்கலாக உள்ளது. பொதுப் பேருந்துகளில் சென்று இப்பணிகளை முடிக்கவியலாது.  வாகனம் ஒன்று இருந்தால் மட்டுமே இப்பணிகளை செய்யலாம். வாகனம் வாங்குவதற்கு குறைந்தது 35 இலட்சம் தேவை.இந்தப் பணிகளுக்கு 60 இலட்சம் வாகனம் தான் பொருத்தமானது எனத் திரு  சுமந்திரன் கூறுகின்றார். உங்களால் எதுவும் செய்யமுடியுமா?என எண்ணிப்பாருங்கள். நன்றி

ச குகதாசன்


தொலைந்து போன தென்னமரவடி!

தென்னமரவடி ‘ என்பது தொன்மையான வரலாறு  படைத்த  ஓர் ஊராகும். இது,வடக்கு   மற்றும் கிழக்கு மாகாணங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்து உள்ளது. இவ்வூரானது  தென்னன் மரபு அடி, அதாவது பாண்டியனின் மரபில் வந்தவர்கள் என்ற காரணப்பெயர் கொண்டது . தென்னன் மரபு அடி என்ற சொற்கள் புணர்ந்து  தென்னமரபடி என்று ஆகிப்  பின்னர்  தென்னமரவடி எனத்  திரிந்து வழங்கி வருகின்றது.

1984 ஆம் ஆண்டுக்கு முன் இவ்வூரில் 1625 உறுப்பினர்  கொண்ட 242 குடும்பங்கள் வளமோடு வாழ்ந்து வந்தன.வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் கடற் தொழிலும்  இவர்களது முதன்மையான தொழில்களாக விளங்கின. பாடசாலை,  கோவில்கள் , நூலகம்  மருத்துவமனை , பேருந்துப் போக்குவரத்து  என்ற அடிப்படை வசதிகளைக் கொண்டதாக இவ்வூர்  தன்னிறைவோடு  விளங்கியது.Search results for "தென்னமரவடி"

 1983 இனக்கலவரத்தைத்  தொடர்ந்து 1984 ஆம் ஆண்டில்  ஓர் இரவில்  இவ்வூர் முழுமையாக எரியூட்டி அழிக்கப்பட்டது. பலர்  வெட்டிக் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் உயிர்ப் பாதுகாப்புக்கருதி அயலில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்துக்குத் தப்பி ஓடி அங்கு  இடம்பெயர்  வாழ்க்கை  வாழ்ந்து வந்தனர்.  அங்கு வாழ்க்கையில் 2009 போர்  இடம்பெற்றது. அதில் சிக்கி  மேலும் பலர் இறந்து போயினர்.

.ஏறத்தாழக் கால் நூற்றாண்டு காலம்   இவ்வூர் மக்கள் தமது ஊருக்கு வர முடியாத சூழல் நிலவியது. அண்மைக்  காலத்தில்  வரக்கூடிய சூழல் உருவாக்கி உள்ளது. 230 உறுப்பினரைக்  கொண்ட 82 குடும்பங்கள்  திரும்பி வந்துள்ளன. 279 குடும்பங்கள் இன்னும் வரவேண்டி உள்ளது. இவர்களில் 817 உறுப்பினர்களைக் கொண்ட 260 குடும்பங்கள்   முல்லைத்தீவு மாவட்டத்திலும் 40 உறுப்பினரை கொண்ட 19 குடும்பங்கள்    வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில்  இடம்பெயர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றன.

தென்னமரவடிக்கு வந்து குடியேறியோர்  வாழ்வதற்கு ஒழுங்கான வீட்டு வசதி இல்லை ,  மருத்துவ வசதியில்லை, போக்குவரத்து வசதி இல்லை, தொழில் வாய்ப்பு  இல்லை,  யானைத் தொல்லை எனப்    பல்வேறு சிக்கல்களோடு வாழ்க்கையைக்  கழித்து வருகின்றனர். இவர்களுடைய வாழ்க்கை சீராகுமிடத்து வெளியிடங்களில் வாழ்வோர் திரும்பி வருவதாகக்  கூறி உள்ளனர்.  28 குடும்பங்களுக்கு  வீடு அமைக்கப்பட்டுள்ளது. தென்னமரவடி கிராமம்                                                                             எஞ்சியோருக்கு வீடமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.Image Search Results

 “மறு பிறப்பிற்கு ஒரு வாய்ப்பு”

தென்னமரவடி மக்களின் மறுவாழ்வுக்கு  உதவும் நோக்கோடும்  அவர்களைப்  பொருளாதார அடிப்படையில் வலுவூட்டும் இலக்கோடும்,   கால்நடை வளர்ப்பு , தென்னைப் பயிர்ச்செய்கை, ஊடு பயிர்ச்செய்கை  ஆகியன ஒன்றிணைந்த  பண்ணை ஓன்றை  $100,000 கனடியன் செலவில்  அமைக்கத் திட்டமிடபட்டுள்ளது . இந்தப் பண்ணையில் 10 குடும்பங்கள் உடனடியாகக் குடியமர்த்தப்பட்டு  வேலை வாய்ப்பைப் பெறுவர். மேலும்,  அனைத்துத்  தென்னமரவடி  மக்களும்  பொருளாதார அடிப்படையிலான   நன்மைகளைப்  பெறுவர். இந்தத் திட்டத்தை   முறையாகச் செயற் படுத்தினால் மேலும்  இறால் வளர்ப்பு , மீன் வளர்ப்பு  முதலீடுகள்  தென்னமரவடி  நோக்கிச்  செல்வதற்கான வாய்ப்புகள்  உள்ளன.

தென்னமராவடிக் கிராம அபிவிருத்திச் சங்கம் இப்பண்ணைத்திட்டத்தைச்  செயற்படுத்தும். NEEDS என்றழைக்கப்படும் வடகிழக்கு அபிவிருத்தி நடுவம் இத்திட்டச் செயலாக்கத்தைக்  கண்காணிக்கும். திருகோணமலைக் நலன்புரிச் சங்கமும் இதற்கு உதவும்.

 செப்டெம்பர் 10 ஆம் நாள்  இசுகாபுரோவின்  தோம்சன் பூங்காவில் (Thomson Memorial Park – Brimley/Lawrence) காலை 8:30 மணிக்கு கனடாத் தமிழர் பேரவை நடத்தவுள்ள   நிதிசேர் நடையின்  பொழுது    திரட்டப்படும் பணம் முழுமையும் கால்நடை வளர்ப்பு , தென்னைப் பயிர்ச்செய்கை, ஊடு பயிர்ச்செய்கை  ஆகியன ஒன்றிணைந்த  பண்ணையை அமைக்கும் திட்டத்தின் ஊடாகத்    தென்னமரவடி  மக்களின் மறுவாழ்வுக்குச் செலவிடத் திட்டமிடப் பட்டுள்ளது.

இந்த நிதி சேர் நடையில் கலந்து கொள்வதன் மூலம் எங்களால் முடிந்த நிதி உதவியும்  வழங்கி       தொன்மையான தென்னமரவடி    ஊரைக் காப்பாற்ற எமக்கும் ஒரு அரிய வாய்ப்பு உண்டு.

ஒரு இனத்தின் வெற்றியான வளர்ச்சி, அதன் பொருளாதார வளர்சியில் தங்கியுள்ளது. அதற்கான ஒரு முதல் படியே இந்தப் பண்ணைத் திட்டம். அதில் நாம் இணைந்து எமது மக்களுக்கு புதுவாழ்வு சமைப்போம்.


தொலைந்து போன தென்னமரவடியை மீள்கட்டியெழுப்ப நிதிசேர் நடை

 க. குகதாசன் / பிரகல் திரு

தென்னமரவடி கிராமம்  நம் தாயகத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சந்திக்கும் கேந்திர முக்கியத்துவம் கொண்ட இடத்தில் அமைந்து உள்ளது.  இந்தத் தென்னமரவடியானது தொன்மையான வரலாறு  படைத்த ஊருமாகும். இவ்வூர் ‘தென்னன் மரபு அடி’, அதாவது பாண்டியனின் மரபில் வந்தவர்கள் என்ற காரணப்பெயரைக் கொண்டது எனச் சொல்லப்படுகிறது. ‘தென்னன் மரபு அடி’ என்ற சொற்கள் புணர்ந்து ‘தென்னமரபடி’ என்று ஆகிப் பின்னர் இன்று ‘தென்னமரவடி’ எனத்  திரிந்து வழங்கி வருகின்றது.

1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் இவ்வூரில் 1625 உறுப்பினர்  கொண்ட 242 குடும்பங்கள் வளமாக வாழ்ந்து வந்தன. வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் கடற் தொழிலும் இவர்களது முதன்மையான தொழில்களாக அப்போது விளங்கின. பாடசாலை, கோவில்கள், நூலகம், மருத்துவமனை, பேருந்துப் போக்குவரத்து  என்ற அடிப்படை வசதிகளைக் கொண்டதாக இவ்வூர்  அன்று தன்னிறைவோடு  விளங்கியது. ஆனால் 1983 இனக்கலவரத்தைத்  தொடர்ந்து, 1984 ஆம் ஆண்டில்  ஓர் இரவில்  இவ்வூர் முழுமையாக எரியூட்டி அழிக்கப்பட்டது. பலர்  வெட்டிக் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் உயிர்ப் பாதுகாப்புக்கருதி அயலில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்துக்குத் தப்பி ஓடி அங்கு  இடம்பெயர்  வாழ்க்கை  வாழ்ந்து வந்தனர். 2009 போர் இடம்பெற்றது. அதில் சிக்கி  மேலும் பலர் இறந்து போயினர். ஏறத்தாள சுமார் கால் நூற்றாண்டு காலம்  இவ்வூர் மக்கள் தமது சொந்த ஊருக்குள் திரும்பி வர முடியாத அசாதாரண சூழல் நிலவியது.

மிக அண்மைக் காலத்தில்தான் தென்னமரவடி மக்கள் திரும்பி வரக்கூடியதொரு சூழல் உருவாக்கி உள்ளது. இதுவரை 230 உறுப்பினரைக்  கொண்ட 82 குடும்பங்கள்  திரும்பி வந்துள்ளன. 279 குடும்பங்கள் இன்னும் வரவேண்டி உள்ளது. இவர்களில் 817 உறுப்பினர்களைக் கொண்ட 260 குடும்பங்கள்   முல்லைத்தீவு மாவட்டத்திலும் 40 உறுப்பினரை கொண்ட 19 குடும்பங்கள் வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில்  இடம்பெயர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றன. Thennamaravady

இந் நிலையில், தென்னமரவடிக்கு திரும்பி வந்து குடியேறியோர் பல்வேறு சிக்கல்களோடு வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். வாழ்வதற்கு ஒழுங்கான வீட்டு வசதி இல்லை, மருத்துவ வசதியில்லை, போக்குவரத்து வசதி இல்லை, தொழில் வாய்ப்பு  இல்லை, யானைத் தொல்லை எனப் பல்வேறு சிக்கல்களோடு அவர்கள் தம் வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். இவர்களுடைய வாழ்க்கை சீராகுமிடத்து மட்டுமே வெளியிடங்களில் வாழும் மற்றவர்கள் தாங்களும் திரும்பி வருவது சாத்தியம் எனக் கூறி வருகின்றனர்.  இதுவரை 28 குடும்பங்களுக்கு மட்டும்தான் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியோருக்கும் வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்து, தென்னமரவடியின் மறு பிறப்பிற்கு ஒரு வாய்ப்புத் தேடும் முயற்சிகள் கனடாவில் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. தென்னமரவடி மக்களின் மறுவாழ்வுக்கு  உதவும் நோக்கோடும், அவர்களைப்  பொருளாதார அடிப்படையில் வலுவூட்டும் இலக்கோடும் கால்நடை வளர்ப்பு, தென்னைப் பயிர்ச்செய்கை, ஊடு பயிர்ச்செய்கை ஆகியன ஒன்றிணைந்த  பண்ணை ஓன்றை 100,000 கனடியன் டொலர்கள் செலவில்  அமைக்கத்  திட்டமிடபட்டுள்ளது. இந்தப் பண்ணையில் 10 குடும்பங்கள் உடனடியாகக் குடியமர்த்தப்பட்டு வேலை வாய்ப்பைப் பெறுவர். மேலும், அனைத்துத் தென்னமரவடி மக்களும்  பொருளாதார அடிப்படையிலான பல்வேறு நன்மைகளையும் பெறுவர். இந்தத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்தினால் இறால் வளர்ப்பு, மீன் வளர்ப்பு முதலீடுகள் தென்னமரவடி நோக்கிச்  செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தென்னமராவடிக் கிராம அபிவிருத்திச் சங்கம் இப்பண்ணைத்திட்டத்தைச் செயற்படுத்தும். NEEDS என்றழைக்கப்படும் வடகிழக்கு அபிவிருத்தி நடுவம் இத்திட்டச் செயலாக்கத்தைக் கண்காணிக்கும். திருகோணமலை நலன்புரிச் சங்கமும் இதற்கு உதவும்.

இவற்றின் தொடர்ச்சியாக,  செப்டெம்பர் 10 ஆம் நாள்  ஸ்காபரோவின்  தொம்சன் பூங்காவில் (Thomson Memorial Park – Brimley/Lawrence) காலை 8:30 மணிக்கு  நிதிசேர் நடை ஒன்றினை நடத்த கனடியத் தமிழர் பேரவை திட்டமிட்டுள்ளது. இந்த நிதிசேர் நடையின்போது திரட்டப்படும் பணம் முழுமையும் கால்நடை வளர்ப்பு, தென்னைப் பயிர்ச்செய்கை, ஊடு பயிர்ச்செய்கை ஆகியன ஒன்றிணைந்த பண்ணையை அமைக்கும் திட்டத்தின் ஊடாகத் தென்னமரவடி மக்களின் மறுவாழ்வுக்குச் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிதி சேர் நடையில் கலந்து கொள்வதன் மூலம் – எங்களால் முடிந்த நிதி உதவியும் வழங்கி – தென்னமரவடி என்ற நம் தொன்மையான ஊரைக் காப்பாற்ற எமக்கும் ஒரு அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. ஒரு இனத்தின் வெற்றிகரமான முழுமையான வளர்ச்சியானது, அதன் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் தங்கியுள்ளது. அதற்கானதொரு முதற்படியே இந்தப் பண்ணைத் திட்டமாகும். ஆகவே இணைவோம்! தொலைந்து போன தென்னமரவடியின் மறு பிறப்பிற்கு உதவிடுவோம்.

Dear All

 

The 9th Annual Tamil Canadian Walk, hosted by Canadian Tamil Congress will be held on September 10th at Thomson Memorial Park in Scarborough. Proceeds raised will help with the resettlement efforts and build sustainable economic opportunities in the village of Thennamaravadi located in the northern tip of the Eastern Province in the Trincomalee District.

The ancient Tamil village of Thennamaravadi was destroyed in 1984, as a result of the armed conflict in Sri Lanka, causing the total displacement of the local population. After decades of displacement, villagers were only allowed to return to their ancestral lands in 2010.  The few families who were able to return to Thennamaravadi have faced tremendous hardships in resettling and rebuilding their village due to decades of neglect.

Proceeds from the 2017 Tamil Canadian Walk will support the development of a 10 acre self-sustaining farm, including corps and livestock that will be managed by the Thennamaravadi Rurual Development Society while creating economic opportunities for families.

More details to follow on this project, but for now three ways you can help:

1)     SAVE THE DATE! Sunday, Sept 10th – 8:30 a.m.

2)     Spread the message by sharing the attached image through your social media channels.

3)     Pick up a pledge form at CTC office by calling 416-240-0078 or drop by the Walk-A-Thon booth at Tamil Fest –  Aug 26 & 27

On-behalf of Tamil Canadian Walk team,
Piragal Thiru 


9th Annual Tamil Canadian Walk raises $85,000 for Village Resettlement project in Sri Lanka 

On September 10th, 2017, the Canadian Tamil Congress organized the 9th annual walk-a-thon from Thomson Memorial Park in Scarborough. This year’s Tamil Canadian Walk raised funds to help resettle a village abandoned due to the war in Sri Lanka.

The ancient Tamil village Thennamarawady was destroyed in 1984, as a result of the war in Sri Lanka, causing the total displacement of the local population, who fled to other parts of the country for their safety. After decades of displacement, these villagers were allowed to return to their ancestral lands in 2010.  

Many families who were displaced from Thennamarawady, still continue to live in other parts of the Northern and Eastern provinces of Sri Lanka. The few families who were able to return to Thennamarawady, have faced tremendous hardship in resettling and rebuilding their village due to decades of neglect. The challenges they face include living in temporary shelters, unemployment, an ageing population and a lack of medical, educational and other basic services. 

Proceeds from the 9th annual Tamil Canadian Walk will support the development of a 10-acre self-sustaining farm, including crops and livestock that will be managed by Thennamarawady Rural Development Society. The establishment of the farm will create income opportunities for families and profits will be reinvested into this village.

The project will be monitored by local authorities and independently audited by the North East Economic Development Centre. The project is estimated to be fully implemented by May 2018. 

With the support of walkers and other well-wishers, 9th Annual Tamil Canadian Walk was able to raise more than $85,000 up to now and hopes to reach the target of $100,000 before the end of this year. The Annual Tamil Canadian Walk has collected over half a million dollars in the last eight years.  

In attendance at the walk-a-thon were elected officials from Canada and Sri Lanka, community organizations, volunteers, community leaders, business associates and supporters. Toronto Mayor John Tory,  Ontario Minister for Education Hon. Mitzie Hunter, Canadian Members of Parliament Gary Anandasagaree, Salma Zahid, Garnett Genius, City of Toronto Councillors Neethan Shan, Michael Thompson, Toronto District School Board Trustee Parthi Kandavel and York Region School Board Trustee Juanita Nathan spoke at the event.

 Mr Mavai Senathirajah Member of Sri Lankan Parliament. Eastern Province Agricultural Minister Thurairajasingham and Northern Provincial Councillor Emmanuel Arnold participated and spoke in this year’s walk-a-thon.

 Tamil National Alliance Canada and Trincomalee Welfare Association Canada made significant contributions towards the success of this year’s walk-a-thon.

Tamil Canadian Walk 2017 Photos

http://www.imaginedigitally.com/p997114668

__._,_.___

Attachment(s) from Danton Thurairajah dantont@canadiantamilcongress.ca [CTC_Online] | View attachments on the web

2 of 2 Photo(s)


 

——– Original message ——–
From: Thanga <athangav@sympatico.ca>
Date: 2017-09-06 5:22 PM (GMT-05:00)
To: Cheran Rudhramoorthy <cheran@uwindsor.ca>
Subject: Rebuilding Thennanmaravadi

Thiru Cheran

On coming Sunday the CTC is organizing their 9th Walk-0- Thon to raise funds ($50,000) for the Thennamaravady project.

Mavai will attend this event and on the following day, he is returning to Ceylon.

You can meet him if you attend the Walk – a – Thon on 10th at Thomson Park in the morning.

Can you give me your brother’s email pl.?

 

VT

 

From: Cheran Rudhramoorthy [mailto:cheran@uwindsor.ca]
Sent: Wednesday, September 06, 2017 4:56 PM
To: athangav@sympatico.ca
Subject: Re: The lost Thennanmaravadi

 

Anpin Nakkeeran,

Many thanks for the mail.  The term has begun and I am in Windsor. I will be returning to Toronto on Saturday morning to attend the Tamil Studies Symposium.

However, I would like to contribute and meet with Mavai. I will be in Toronto from September 9- 13. Please let me know if this possible.

Warmly

 

Cheran

 

— ———————————-

Dr. R. Cheran

Associate Professor

|Department of Sociology-Anthropology and Criminology

University of Windsor

401 Sunset Avenue

Windsor, Ontario, Canada

Tel: (519) 253 3000 ext. 2194

Fax: (519) 971 3621

Email:cheran@uwindsor.ca

 

Senior Research Fellow (2017/18)

Project on Political Conflict, Gender and People’s Rights

Centre for Race and Gender

University of California, Berkeley.

From: Thanga <athangav@sympatico.ca>
Reply-To: athangav@sympatico.ca” <athangav@sympatico.ca>
Date: Wednesday, September 6, 2017 at 4:38 PM
To: Cheran Rudhramoorthy <cheran@uwindsor.ca>
Subject: The lost Thennanmaravadi

 

Thiru Cheran

Vanakkam

TNA is holding a  dinner to honour of Thiru  Mavai Senathirajah, MP who turned 75 this year.

Place – Anjappar Restaurant, 3090 Eglinton Ave E, Scarborough, ON M1J 2H1.

Date  – September 8, 2017 (Friday)

Time 6.30 pm.

Your presence will be much appreciated.

Donation $100 pl.

 

Thangavelu

 

https://nakkeran.com/index.php/2017/08/22/the-lost-village-of-thennamaravadi/

 


கரைத்துறைப்பற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரைதுறைபற்று
ஒரு தோற்றம்.

Gislanka locator.svg

Red pog.svg
கரைதுறைபற்று
மாகாணம்
– மாவட்டம்
வட மாகாணம்
– முல்லைத்தீவு
அமைவிடம் 9.271°N 80.817°E
பரப்பளவு
– கடல் மட்டத்திலிருந்து உயரம்
728.6 சதுர KM  ச.கி.மீ
– 0-10 மீட்டர்
கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை
(2014)
12742 குடும்பங்கள்
பிரதேச செயலாளர் திரு.எஸ்.குணபாலன்
குறியீடுகள்
– அஞ்சல்
– தொலைபேசி
– வாகனம்
– 40000
– +021
– NP

கரைதுறைபற்று வரலாறு[தொகு]

வன்னித் தேர்தல் மாவட்டமானது கரையோரப பிரதேசங்களான மன்னார் (மாந்தை), வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது இதில் கிழக்கு கரையில் முல்லைத்தீவுகரையோரப் பகுதிகள் இருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் Maritime Pattu என்று பதியப்பட்டுள்ள பெயரின் மொழிபெயர்ப்பாக கரைதுறைபற்று என்று முல்லைத்தீவு பிரதேசம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. கரைதுறைபற்றுப் பிரிவின் எல்லைகள் அடிக்கடி மாற்றப்பட்டுள்ளன. தற்போது கரைதுறைபற்று பிரதேச செயலகமானது முல்லைத்தீவுமுள்ளியவளைதண்ணீரூற்றுகுமுழமுனைதண்ணிமுறிப்புஅளம்பில்செம்மலைகொக்கிளாய்கொக்குத்தொடுவாய்வட்டுவாகல்முள்ளிவாய்க்கால்அம்பலவன் பொக்கணைமாத்தளன்கேப்பாபுலவுவற்றாப்பளைகொண்டமடு போன்ற கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.[1]

கரையோரப்பிரிவுகள்[தொகு]

அடங்காப்பற்று – வன்னி என்றழைக்கப்பட்ட பிரதேசத்தின் கரையோரப்பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரிவுகள் முழுவதும் புராதன காலத்தில் கமங்கள் அல்லது பண்ணைகளாக பிரிக்கப்பட்டிருந்தன என்று ஆங்கிலக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. பாணன்காமம், அம்பகாமம், மற்றும் தம்பகாமம் போன்ற பெயர்கள் இதற்கு ஆதாரங்களாகின்றன. பின்னர் பெருநிலப்பரப்பு மூலைகளாக பிரிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மூலைகளாக பிரிக்கப்பட்டிருந்தமைக்கு மேற்குமூலை, கிழக்குமூலை, மற்றும் கரிக்கட்டுமூலை போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.

இந்தப் பிரதேசத்தில் கிழக்குமூலை என்று பிரிக்கப்பட்டிருந்த பிரதேசம் முல்லைத்தீவும் அதனை அண்டிய பிரதேசங்களுமேயாகும். மேற்குமூலை என்ற பிரிவு மன்னாரும் மாந்தையுமாக அமைந்திருக்கவேண்டும். ஆனால் கிழக்குமூலை என்பது வன்னிப்பிரதேசத்தின் மத்திய பகுதியிலும், அதற்கு அடுத்து மேற்குமூலை அமைந்திருப்பதற்கும் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட புராதன காரணங்கள் இருக்கின்றன. அதுபற்றி நீண்ட வரலாற்று ஆய்வுசெய்யப்பட வேண்டியது அவசியம்.

மூலைகள்[தொகு]

போர்த்துக்கேயரின் படையெடுப்பின்போது வன்னிப் பிரதேசத்தின் உட்பிரதேசங்களை கைப்பற்ற முடியாமல் போகவே இந்தப் பகுதிகளில் வன்னியனார்களின் நிர்வாகம் இடம்பெற்ற காரணத்தினால் வன்னியர்களுடைய நாடு என்ற பெயர் சூட்டினர் என்பதை ஒல்லாந்தரான பலூட்ஸ் அவர்களது வரைபடத்தில் தெரியவருகின்றது.

காலப்போக்கில் ஒல்லாந்தர்ஆங்கிலேயர் ஆகியோர் தமது நிர்வாகத் தேவைகளிற்காக வன்னிப்பிரிவு என்று பதிவுசெய்து வைத்துள்ளனர். மேல்ப்பற்று வடக்கின் சில பிரிவுகளும் வன்னி எனஅழைக்கப்பட்டுள்ளன.

வன்னித் தேர்தல் மாவட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைவரும் கரையோரப் பிரதேசங்களையும் சேர்த்து வன்னி என்று அழைப்பது பாரம்பரியமாகிவிட்டது. ஆனால் வன்னி என்றழைக்கப்பட்ட பிரிவிற்குள் கரையோரப்பிரதேசங்கள் அடங்கவில்லை என்பது வரலாறு கூறும் உண்மையாகும்.

கரிக்கட்டுமூலை[தொகு]

 குமுழமுனை கிராமம்

புராதன காலத்தில் கிழக்குப்பிரதேசங்களில் பிடிக்கப்படும் யானைகளை கொண்டுவந்து கட்டப்படும் பகுதி யானை கட்டும் மூலை என்ற அர்த்தத்தில் கரிக்கட்டுமூலை என்ற பெயரைப் பெற்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு கரையோர கரிக்கட்டுமூலைப் பிரதேசத்தின் தெற்குமுனையில் குமுழமுனைக்கிராமத்தில் யானைகட்டும் தளம் அமைந்திருந்தது.

கரிக்கட்டுமூலை நிலப்பரப்பு மிகவும் பெரிதாக இருந்த காரணத்தினால் வடக்கு தெற்கு என்று பிற்காலத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. குமுழமுனைக் கிராமம் கரிக்கட்டுமூலை தெற்கில் அடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலப்பகுதி அதிரியங்கோடு என்றும் அழைக்கப்பட்டுள்ளது. மதம்கொண்ட யானைகளைபிடித்துக் கட்டியதும், அந்த யானைகளின் பிளிறல் சத்தம் அந்தப்பகுதிகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியதனால் இந்தக் காரணப்பெயர் வந்ததாக செவிவழிக் கதைகள் தெரிவிக்கின்றன.

கடல் வாணிபம்[தொகு]

வெட்டுவாய்க்கால் தொடுகடல்

அடங்காப்பற்று-வன்னிப் பிரதேசத்தின் கிழக்கு கடலை அண்டிய பதியிலுள்ள முல்லைத்தீவு கடற்கரையோரமாகவும் மேற்கு கரையோரத்திலிருந்த மாந்தை கடற்கரையோரமாகவும் அமைந்திருந்த இயற்கைதுறைமுகங்கள் ஊடாக புராதன காலம் தொடக்கம் கடல் வாணிப நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. கிழக்கு கடற்கரையோரமாக இருந்த முல்லைத்தீவு, அளம்பில், செம்மலை, வட்டுவாகல், கொக்கிளாய், கொக்குதொடுவாய், தென்னமரவடி போன்ற குடாக்கள் ஊடாக யானைகள், யானைதந்தங்கள், கருங்காலி மரங்கள், பாக்குநெல்லு மற்றும் கடல்படுதிரவியங்கள் ஆகியன புராதன காலம் தொடக்கம் – ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலம்வரை தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை வரலாற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடல்வாணிபமும் நாணயங்களும்[தொகு]

முல்லைத்தீவு கடற்கரையோரத்திற்கு தெற்கேயிருந்த கொக்கிளாய், கொக்குதொடுவாய், தென்னவன்மரவடி, புல்மோட்டை, திரியாய் போன்ற இயற்கைக் குடாக்கள் ஊடாக தென்னிந்தியாவிற்கான பயணிகள் போக்குவரத்தும் கடல் வாணிபங்களும் இடம்பெற்றன என குறிப்புக்கள் காணப்படுகின்றன. வன்னிப்பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளிற்காக நாணயப் புழக்கம் இருந்துள்ளமைக்கு பல சான்றுகள் இருக்கின்றன. புராதன காலத்தில் நாணயங்கள் வணக்கத்திற்குரிய இறைவனுக்கு சமமானதாக மதிக்கப்பட்டுள்ளது. இதனால் வணக்கத்தலங்களில் புராதன நாணயங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு நாணயங்கள்[தொகு]

ஆங்கிலேயரான எச்.பார்க்கர் அவர்கள் இலங்கையிலுள்ள குளங்களைப்பற்றி ஆய்வுசெய்தவர் தனக்கு கிடைத்த பல தகவல்களை ஒன்றாகத் தொகுத்து 1909ம் ஆண்டு Ancient Ceylon என்ற வரலாற்று நூலை வெளியிட்டுள்ளார். அதில் முல்லைத்தீவு நாணயங்கள் என்ற பிரிவு தனியாக எழுதப்பட்டுள்ளது.[2]

இங்கிருந்த நாணயங்கள் இரண்டு வகையாகும். ஒன்று புராணாஸ் (Puranas) என்று அழைக்கப்பட்டுள்ளது. மற்றயது வட்ட வடிவமான (Coins) நாணயங்கள் என்று ஆய்வாளர் எச்.பார்கர் (H.Parker)அவர்கள் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[3]ஆனால் நாணயங்கள் பற்றி எழுதப்பட்ட பகுதிகள் ஒரு முழுமையான ஆய்வல்ல. அதனால் இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளோடு சேர்த்து நீண்ட ஆய்வு செய்யப்படவேண்டியது அவசியம்.

புராணா அல்லது புர்ணா (Purna) : புராணா அல்லது புர்ணா என்பது ஜயனாரின் மனைவியைக் குறிப்பதாகும். Purana or Purna : wife of Ayiyanar –p-688. ஜயனார் என்பவர் காவல் தெய்வமாகும். சிவபெருமானின் மற்றுமொரு அவதாரம் (மகன்) என்பது குறிப்பிடத்தக்கதாகும். அநேகமான இடங்களில் ஜயனார் காவல்தெய்வமாக அனைத்து சமூகத்தினராலும் வழிபடப்பட்டுள்ளார். பிற்காலத்தில் பௌத்த சமயத்தை பின்பற்றியவர்களும் ஜயனார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு சான்றுகள் பல இருக்கின்றன. ,ந்த வழிபாட்டை உறுதிப்படுத்த பாளிமொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஜாதகக் கதைகள் பல இருக்கின்றன. குருந்தன் குளம் என்றழைக்கப்படும் இடங்களில் ஜயனார் வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் பல இருக்கின்றன.

வரலாற்றின் அடிப்படையில் புராணாஸ் என்று ஒருவகையான நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை வரலாற்றுக்கு முந்திய புராதன காலத்தில் இடம்பெற்ற வர்த்தகத்தின் அடையாளங்களாகும். Puranas : Proof of early trade M.Parker “Ancient Ceylon” 1909.688 [4]

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட புராணாஸ் நாணயங்கள் செவ்வக வடிவிலுள்ளவை. வட்டவடிவிலுமான நாணயங்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவை செப்பு வெள்ளி போன்ற உலோகங்களினால் ஆனவை. அதிலுள்ள சின்னங்கள் பாதுகாப்பை குறிப்பனவாகும்.

‘Coins oblong: date of burial from Mullaitivu, Coins copper and silver of one scale large circular symbols were protective”. Ancient Ceylon, Mr.Parker, p-678.

1985ம் ஆண்டு இதுபோன்ற பல நாணயங்கள் முல்லைத்தீவில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அன்றய சூழ்நிலையில் இதன்மீது மிகுந்த அக்கறை காட்டப்பட்டது. முல்லைத்தீவு நகரத்திற்கு வடக்கே இருந்த சிறிய தென்னந்தோட்டத்தின் உரிமையாளர் ஒருவர் வெள்ளை களிமண் இருந்த இடத்தை துப்பரவு செய்தபோது அதிலிருந்த நீரூற்றின் கீழ்பகுதியிலிருந்து இந்த நாணயங்களை கண்டுபிடித்தார்.

இந்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரங்கள் அல்லது யுத்த நடவடிக்கைகள் காரணமாக நாணயங்களை சேகரித்து வைத்திருந்தவர்கள் அவற்றை தமது கிணற்றில் மணலை இட்டு அதன்மேல் நாணயங்களை புதைத்துள்ளமை தெளிவாகின்றது. அதன்பின்னர் கிணற்றை மூடி அடையாளத்துக்காக மேலேயும் கட்டடம் அமைத்தனர். இந் நாணயங்கள் புதைக்கப்படுவதற்கு 2000 வருடங்களிற்கு முன்னர் பாவனையில் இருந்தவையாகும். இதுபோன்ற நாணயங்கள் கி.மு முதலாம், இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளிற்கு உரியவை vன்று மதிப்பிடலாம். Ancient Ceylon, Mr.Parker, p-461-463.[5]

சமய வழிபாடு[தொகு]

பெருநிலப்பரப்பு முழுவதும் சைவ சமயத்தின் இலிங்க வழிபாடு பரவியிருந்தது. துரதிஸ்டவசமாக பின்வந்த ஆங்கில மற்றும் தமிழ் வரலாற்றாசிரியர்கள் இலிங்க வழிபாட்டின் புராதனத்தை தவிர்த்தும், அதிகாரிகள் பற்றிய தவறான கருத்துக்களை கற்பனையாகவும் எழுதி அதனை உண்மையாக்க முற்பட்டமையினால் வரலாற்றில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளமை தெழிவாகின்றது.

 வற்றாப்பளை அம்மன் ஆலயம்
அனேகமாக சிங்கள, ஆங்கில மற்றும் தமிழ் வரலாற்றாசிரியர்கள் மகாவம்சம், சூளவம்சம் போன்ற சிங்கள வரலாற்றுக்களினால் ஈர்க்கப்பட்டு சைவசமய இலிங்க வழிபாடு, பௌத்தத்திற்கு பின்வந்த வழிபாடு என்ற கருத்துப்பட குறிப்பிட்டுள்ளனர். இலிங்க வழிபாட்டின் தொன்மையை தவறாகக் குறிப்பிட்டிருப்பது ஏற்றுக்கொள்ளகூடியதல்ல. முக்கியமாக வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஆய்வுகளை செய்தபோது பௌத்த துறவிகளால் எழுதப்பட்டு பேணப்பட்டு வந்த மகாவம்சம்சூளவம்சம் போன்ற வரலாற்று ஏடுகளின் மொழிபெயர்ப்புக்களை ஆதாரம் காட்டி பௌத்த சமயமும் அதன் வளர்ச்சியும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு உரியதெனவும், அதுவே இலங்கையிலிருந்த புராதன சமயம் எனவும் ஆதாரமாக்க முற்பட்டுள்ளமை தெழிவாகத் தெரிகின்றது.

இது போன்ற ஆய்வுகளுக்கு 7ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் எழுதப்பட்ட திருமுறைகளில் குறிக்கப்பட்டுள்ள இராவண மகாராசா பற்றிய விபரங்களைச் சேர்க்காமல் விட்டமைக்கு அmந்த தகவல்கள் கிடைக்காமல் போனமையும் காரணமாக இருக்கலாம். அனைத்து ஆய்வு நூல்களிலும் பௌத்தம் பற்றிக் குறிப்பிடும்போது அது சிங்கள மொழி பேசுபவர்களிற்குரிய சமயம் என்று குறிப்பிட்டு எழுதியிருப்பது சைவத்திற்கும் பௌத்தத்திற்கும் உள்ள அடிப்படை உறவுகள் பற்றி தெரியாமல் இருந்தமையே காரணமாகும். இதனால் இரண்டு சமயத்தினருக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் நிலவுவதற்கு வெளிநாட்டவர்களின் ஆய்வுக்குறிப்புக்கள் காரணமாக இருந்துள்ளன.

பிற்கால வரலாற்றாசிரியர்களும் தொடர்ந்து இதனையே எமுதியமையினால் இரண்டு இனத்தவர்களிற்கிடையே இடைவெளி அதிகரித்துவிட்டது என்று கூறலாம். பாளி மொழியில் எழுதப்பட்ட இந்த வரலாற்று ஏடுகளில் தென்னிந்தியாவிலிருந்து வந்த தமிழ் அரசர்களின் பெயர்கள், மற்றும் இடங்களின் பெயர்கள் அந்த மொழிக்கேற்ப எழுதப்படடிருந்த காரணத்தினால் அவர்கள் சிங்கள அரசர்கள் என்று வாதிடுபவர்களும் இருக்கின்றார்கள்.

படையெடுப்புக்களும் வன்னியர்களும்[தொகு]

காலத்திற்கு காலம் தென்னிந்தியாவிலிருந்து பல படையெடுப்புக்கள் இடம்பெற்றிருந்தன. அவர்களுடன் வந்திருந்த வன்னியகுலத்தவர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். கி.பி 5ம் நூற்றாண்டளவில் குளக்கோட்டை மன்னன் திருக்கோணேச்சரத்தை திருத்தியும், தம்பலகாமத்தில் சிவன் கோவிலைக் கட்டியும் அவற்றை பராமரிக்க வன்னிய குலத்தவர்களைக் கொண்டுவந்தும் குடியேற்றினார் என்பது வரலாறு. யானைகளை பிடிப்பதற்கு பணிக்கர் குலத்தைச் சேர்ந்தவர்களும் தென்னிந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு குடியேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 5ம் நூற்றாண்டு தொடக்கம் 13ம் நூற்றாண்டு வரைக்குமான காலப்பகுதி ஆய்வுக்குரியதாகும்.

கி.பி 14ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்த வன்னியர்கள் பாணன்காமத்தில் வன்னியனார் என்ற பெயரில் அதிகாரிகளாக கடமையாற்ற நியமிக்கப்பட்டனர். இவர்களை குறுநில மன்னர்கள் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளமை தவறான விடயமாகும். அரச நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு திறை சேகரிக்கும் அதிகாரிகளாக மட்டும் இவர்கள் இருந்துள்ளனர்.

குமுழமுனை ஒரு புராதன வரலாற்றுக் கிராமம்[தொகு]

நாயாறு

வன்னிப் பிரதேசத்தின் மத்தியில் உற்பத்தியாகும் பல ஆறுகள் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் பாய்ந்து பெருங்கடலில் சங்கமிக்கின்றன. இவற்றில் ஒன்றான நாயாறு கிழக்கு நோக்கிப் பாய்ந்து தண்ணிமுறிப்புக் குளத்துக்கு நீர் வழங்கி தொடர்ந்து சென்று செம்மலை குடாவில் பெருங்கடலுடன் சங்கமிக்கின்றது. இந்த ஆறு பெருங்கடலில் கலப்பதற்கு முன்னர் பரந்து பாய்ந்து சிறு பரவைக்கடல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த பரவைக் கடலின் வடக்கே அமைந்திருப்பது குமுழமுனை பிரதேசமாகும்.

இந்த பரவைக்கடல் தண்ணீர் தேங்கி நின்ற பள்ளங்கள் வரட்சிக் காலத்தில் வற்றிவிடும். அந்த பள்ளங்களை தோண்டி தண்ணீர் எடுப்பது வழக்கம். இந்தப் பள்ளங்கள் பூவல் என்று அழைக்கப்படும். வரட்சிக் காலத்தில் காட்டு மிருகங்களும் வெளியே வந்து அந்த பரவலான இடங்களில் கிடங்கு கிண்டி தண்ணீர் குடிப்பதால் அப் பகுதி கரடிப் பூவல் கிராமம் என்று அழைக்கப்பட்டதாகவும் வாய் வழி வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்தக் கிராமமும் குமுழமுனைக்கு அடுத்திருக்கின்றது.

தென்னவன்மரவடி[தொகு]

பாண்டிய மன்னனுடைய மரக்கலங்கள் வந்து கிழக்கு கரையில் கட்டப்பட்ட இடம் தென்னவன் மரவடி என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் தென்னமரவடி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. குமுழமுனை பிரதேசத்தில் கட்டப்படும் யானைகள் செம்மலை குடாவின் ஊடாகவும், தென்னமரவடி ஊடாகவும் தென்னிந்தியாவிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

தென்னமரவடியில் ஒரு புராதன இராஜதானி இருந்துள்ளது. தென்னிந்தியாவில் பிரபலமான வைத்தியர்கள், பிராமணர்கள் மற்றும் பல குலத்தவர்கள் இங்கு குடியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுடைய பரம்பரையினர் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் முள்ளியவளைகணுக்கேணிகுமுழமுனை ஆகிய இடங்களில் வாழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குமுழமுனைக்கு அடுத்திருக்கும் கரடிப்பூவல் என்ற கிராமத்தில் இருந்த வைத்திய பரம்பரையினர் தஞ்சாவுர், மற்றும் வேதாரணியம் ஆகிய இடங்களில் இருந்து வந்து குடியேறியதாக பரம்பரைக் குறிப்புக்கள் கூறுகின்றன.

போர்த்துக்கேயர் காலம்[தொகு]

முல்லைத்தீவு கோட்டையின் இன்றய எச்சங்கள்

அந்நிய நாட்டவர்களான போர்த்துக்கேயர் 1505 களில் இலங்கையை கைப்பற்றிய பின்னர் 1544 களில் யாழ்ப்பாணத்தில் தமது அதிகாரத்தை செலுத்த முற்பட்டனர். 1590களில் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் கோட்டையை கட்ட முற்படடபோது அங்கிருந்த பரராஜசேகர மன்னனுடைய இரண்டு புதல்வர்களிற்கிடையே போட்டி ஏற்பட்டது. பரராசசேகரனின் மூத்த மனைவியின் மக்கள் இருவரும் இறந்துவிட பரநிருபசிங்கன் பட்டத்துக்கு உரியவன் ஆனான். ஆனால், பரராசசேகரனின் இளைய மனைவி அல்லது வைப்புப் பெண்ணின் மகனான சங்கிலி அரசாட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் பிற்காலத்தில் சங்கிலியைப் பதவியில் இருந்து இறக்கி யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றுவதற்காகப் பரநிருபசிங்கம், அக்காலத்தில் இப் பகுதியில் செல்வாக்குப் பெற்று வந்த போத்துக்கீசரின் உதவியை நாடினான். போத்துக்கீசரின் மதமான கத்தோலிக்க மதத்தையும் தழுவிக்கொண்டான். போத்துக்கீசரும் இவனுக்கு அரசுரிமையைப் பெற்றுத்தர வாக்களித்தனர் ஆயினும் அது ஒரு போதும் கைகூடவில்லை. 1600களில் யாழப்பாணத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக பரராசசேகர மன்னன் முள்ளியவளைக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

வரலாற்று ஆதாரங்கள்[தொகு]

குழப்பங்கள் நிறைந்த அக்காலத்தில் பரராஜசேகர (பண்டாரம்) மன்னன் முள்ளியவளையில் வந்திருந்ததாக வரலாறுகளிலும் வையாபாடலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வன்னிப் பிரதுசத்திற்கும் யாழ்ப்பாண இராஜதானிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமை தெழிவாகின்றது. பரராஜசேகரன் முள்ளியவளையில் இருந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி செய்யுட்களாக வகைபாடல் என்ற நூலில் எழுதப்பட்டுள்ளன. ஏற்கனவே முள்ளியவளையில் ஒரு புராதன இராஜதானி இருந்தமையும் வகைபாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரராஜசேகர மன்னன் முள்ளியவளையில் இருந்த காலத்தில் காட்டுப் பிள்ளையார் (விநாயகர்) கோவிலையும் காட்டுக்கந்தசுவாமி கோயிலையும் பராமரித்து வந்துள்ளார். தற்போது காட்டுவிநாயகர் கோவில்இருக்கும் பகுதியில் பரராஜசேகர மன்னனுடைய இராஜதானிக்கான அரண்மனையும் தேரோடும் வீதியும் இருந்துள்ளது. இராஜதானிக்கான கட்டடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்ததை அங்கிருந்த செங்கல் குவியல்களை ஆதாரம் காட்டி முல்லைமாமணி உட்பட பல அறிஞர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

Jump up கரைதுறைபற்று பிரதேச செயலகத்தினால் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கை 2015

Jump up Ancient Ceylon– எச்.பார்க்கர்

Jump up Ancient Ceylon– H.Parker

Jump up Proof of early trade M.Parker “Ancient Ceylon” 1909.688

Jump up Ancient Ceylon, Mr.Parker, p-461-463

[1]

Jump up கலாசாரப்பேரவை, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தினால் வெளியிடப்பட்ட சிலம்போசை 2016 (ISBN 978-955-7232-00-3) நூலிலிருந்து ”அருணா செல்லத்துரை” அவர்களது கட்டுரை.

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply