முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா?
கூட்டமைப்புக்கு விரோ தமாகச் சகல வகையிலும் செயற்பட்டுக்கொண்டு, நான் அந்த அமைப்புக்கு எதிரானவன் அல்லவென வடக்கு முதலமைச்சர் கூறுவதைக் கேட்டு அழுவதா? அல்லது சிரிப்பதா? எனத் தெரியவில்லை. இவர் இனியும் ஒன்றுமறியாத அப்பாவிபோன்று வேடம் புனைவது தேவையற்ற ஒன்றாகும். ஏனென்றால் , அவரது இரட்டை வேடம் ஏற்கனவே அம்பலமாக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவர், ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்பதென்பது அவருக்குக் கௌரவக் குறைவான தொன்றென நீதித்துறையுடன் தொடர்புபட்டவர்கள் கூறு கின்றனர். ஆனால் சி.வி.விக்னேஸ்வரன் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், வடக்கு மாகாண முதலமைச்சரின் கதிரையில் வந்து அமர்ந்து கொண்டார். அமர்ந்துகொண்டார் எனக் கூறுவதற்குப் பதிலாக அமர்த்தப்பட்டார் எனக் கூறுவதுதான் சரியானது.
வெளியில் தெரிய வந்த முதலமைச்சரது உண்மையான முகம்
முதலமைச்சரது உண்மையான முகம் தற்போது மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. தமிழர்களிடையே குழப்பத்தையும், பிளவையும் ஏற்படுத்துவதற்காகவா இந்த முன்னாள் நீதிபதி கொழும்பிலிருந்து வடபகுதிக்கு அழைத்து வரப்பட்டார்? என்ற கேள்விகூடத் தற்போது எழுந்து நிற்கின்றது. அந்த அளவுக்கு மக்களின் நம்பகத் தன்மையைவடக்கு முதலமைச்சர் இழந்து நிற்கின்றார்.
தாமே அமைத்த விசாரணைக் குழுவின் பரிந்துரைகளைக் குப்பைக் கூடைக்குள் வீசிய அவ ரது செயல் நகைப்புக்குரியது. ஆனால் ஊழல் புரிந்தவர்க ளைக் காப்பாற்றுவதற்கு உறுதுணையாக இருப்பவர்களும் குற்றவாளிகள்தான் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது.
இதேவேளை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற நான்கு கட்சி களில் பெரிய கட்சியான தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய சிறிய கட்சிகள் மூன்றும் முதலமைச்சருக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே முதலமைச்சரால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடிகின்றது. இதைவிடத் தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களில் சிலரும் முதலமைச்சருக்குப் பின்னால் நிற்கின்ற னர். முண்டு கொடுத்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் அமைச்சராகிவிட்டார்.
இவர்கள் அனைவரும் கூட்டமைப் பின் எதிர்காலம் தொடர்பாக ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தாம் பதவிச் சுகத்தை அனுபவிப்பதற்கு கூட்டமைப்பு காரணமா? அல்லதுவேறு எவராவது காரணமா? என்பதையும் அவர்கள் ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். தம்மைக் கௌரவமான மனிதர்களாய் உலவுவதற்கு உதவிய அந்த அமைப்பைக் கூறுபோடுவதற் குச் சிலர் முயற்சி செய்யும்போது அதை ஆதரிப்பதும், வேடிக்கை பார்ப்பதும் இவர்களுக்கு நியாயமானதாகத் தெரிகின்றதா?
பதவியேற்ற நாள்முதல் கூட்டமைப்புக்கு விரோதமான போக்கை கையாளுகிறார்முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரன் தாம் முதலமைச்சராகப் பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரை, கூட்டமைப்புக்கு விரோதமான வராக, தம்மையொரு மக்கள் தலைவனாக உயர்த்திக் காட்டும் வகையிலும் தமது செயற்பாடுகளை வகுத்துக் கொண்டுள்ளார். ஆனால் இவற்றையெல்லாம் மற்றவர்கள் புரிந்து கொள்ளாதவாறு நடந்து கொள்கிறார். அவரது இத்தகைய செயற்பாடுகளை நாம் இனியும் அனுமதிக்க வேண்டுமா? என்பதைத் தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
சரியாகவும், நேர்மையாகவும் செயற்படுகின்ற ஒருவரை எவருமே ஆதரிக்கலாம். அவருக்கு முரண்டு கொடுக்கலாம். ஆனால் தவறான பாதையில் செல்கின்ற ஒருவரை ஆதரிப்பதும், அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்தவர் – ஒரு மூத்த சட்டத்தரணி. கூட்ட மைப்பின் தலைமைக்கு மிகவும் வேண்டியவர். விக்னேஸ்வரன் முதலமைச்சராக வருவதற்குப் பெரும் பங்காற்றியவர். ஆனால் முதலமைச்சரின் தவறான செயற்பாடுகளை கூட்டமைப்பின் தலைமைக்கு முதலில் சுட்டிக் காட்டியவரும் இவர்தான். ஆனால் அப்போது இவர் வெளியிட்ட கருத்துக்கள் மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. விக்னேஸ்வரனை முற்று முழுதாக நம்பியவர்கள் இவரைத் தூற்றவும் செய்தனர். கூட்டமைப்பின் தலைமைகூட இவரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
அன்று விக்னேஸ்வ ரன் மீதான மயக்கம் அனைவரையும் கட்டிப் போட்டிருந்தது. சுமந்திரன் அன்று கூறியவை மிகச் சரியானவை என்பது இன்றுதான் பலருக்கும் புரிகின்றது. சுமந்திரன் கூறியது போன்று முதலமைச்சருக்கு எதிராக அப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று உருவாகியுள்ள மிக மோசமான நிலைமை உருவாகியிருக்க மாட்டாது.
கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டே அதனை விமர்சிப்பது தவறு
சி.வி.விக்னேஸ்வரனுக்குத் தனித்துநின்று அரசியல் செய்வதற்கான சகல உரிமைகளும் உண்டு. அவரது அரசியல் பயணத்தை எவருமே தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனால் கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டு அதற்கு எதிராக அவர் அரசியல் செய்வதை எவர்தான் ஏற்றுக்கொள்வார் கள்?
இன்று தமிழ் அரசுக்கட்சிக்கும், கூட்டமைப்புக்கும் விரோதமான சக்திகள் யாவும் வடக்கு முதலமைச்சரின் கடைக்கண் பார்வைக்காகக் காத்து நிற்கின்றன. நடந்து முடிந்த தேர்தல்
களில் மக்களால் நிராகரிக்கப் பட்டவர்களும் முதலமைச்ச ரால் பாவவிமோசனம் கிடைக்கா தாவெனக் காத்துக் கிடக்கின்ற னர். ஆனால் பாவப்பட்டவர்கள் மற்றவர்களுக்குப் பாவவிமோசனம் வழங்குவதென்பது நடக்கக் கூடிய காரியமாகத் தெரியவில்லை.
கூட்டமைப்பும், தமிழ் அரசுக் கட்சியும் இனியும் பொறுமை காப்பது, அவற்றின் ஆதரவாளர்களை வெறுப்படையச் செய்து விடும். இங்கே இடம்பெறுகின்ற சம்பவங்களையெல்லாம் அவர்கள் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே ஒழிய அவற்றை ஏற்றுக் கொண்டவர்களல்ல. ஆகவே, இனியும் முதலமைச்ச ரின் நாட கத்தை வேடிக்கை பார்க்காது அதற்கொரு முற்றுப்புள்ளி இடப்படல் வேண்டும்.
நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கெடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம். முதலமைச்சர் என்ற பதவிக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவர் விக்னேஸ்வரன். எந்தக் கட்சியின் ஆதரவோடு முதலமைச்சர் ஆகினாரோ அந்தக் கட்சிக்கே துரோகம் செய்பவர். ஏறிய ஏணியை எட்டி உதைப்பவர். பாலியல் சாமி பிரேமானந்தாவின் தலைமைச் சீடர். அவரிடம் இருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது.