ஊடகப் போராளி தராக்கி சிவராம் பிறந்த நாள் இன்று!

ஊடகப் போராளி  தராக்கி சிவராம் பிறந்த நாள் இன்று!

தமிழீழ போராட்டமும் தமிழர் சார்ந்த அரசியல் செயற்பாடுகளையும் மிகவும் துணிவுடன் பேனையின் மூலம் வெளிப்படுத்திய இலங்கையின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் தர்மரத்தினம் சிவராம் (தராக்கி சிவராம்) தனி இடம் வகிக்கிறார்.

ஊடகத்துறை வரலாற்றில் மிகவும் சவால் நிறைந்த காலகட்டத்தில் துப்பாக்கி முனைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனது கருத்துக்களின் ஊடாக உண்மைகளை உரக்கச் சொன்ன, துணிச்சல் மிக்க ஊடகப் போராளியாக திகழ்ந்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் பிறந்த நாள் இன்று ஆகும்.Image result for தராக்கி சிவராம்

இவர், மட்டக்களப்பில் மகேஸ்வரி மற்றும் புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவரின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

சிவராம் 1989ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.

அத்துடன், சிவராம் தனது ஆரம்பக்கல்வியை புனித மிக்கேல் தேசிய பாடசாலையில் கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் படிப்பை தொடர்ந்தார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார்.

செப்டம்பர் மாதம் 1981 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சென்ற அவர் ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினாலும் 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரங்களினாலும் பல்கலைக்கழகக் கல்வியை கைவிட்டார்.

பின்னர் 1983ஆம் ஆண்டு தராகி என்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் வெயிவரும் The island பத்திரிகையில் தனது முதலாவது கட்டுரையை வெளியிட்டார்.

இந்த நிலையில் அரசியல், பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக பல கட்டுரைகளை எழுதுவதற்கு ஆரம்பித்ததுடன், உள்நாட்டில் இவரது கட்டுரைக்கு பெரும் வரவேற்பு இருந்தது.

இதேவேளை தமிழீழத்தின் கிழக்கு மாகாண பகுதிகளில், தமிழீழ விடுதலை புலிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவராமிற்கு கிழக்கு மாகாணம் அமைவிடம் தொடர்பாக நன்கு அறிந்து இருந்தமையினால் தாக்குதலில் ஏற்படும் சாதகம், பாதம் குறித்து கூறுவதில் திறமை வாய்ந்தவர்.

மேலும் கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழினத்தின் விடுதலை பற்றி நன்கு அறிந்த சிவராம் அதற்காக முழு மூச்சாக பாடுபட்டவர்.

மட்டக்களப்பு மண்ணில் பிறந்து சிறந்து விளங்கிய ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் சிங்கள அரசினால் கொழும்பில் வைத்து கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி கடத்தி செல்லப்பட்டு மறுநாள் ஏப்ரல் 29 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

ஈழத்தில் சிறந்து விளங்கிய ஊடகவியலாளர் சிவராம், தமிழீழ விடுதலைக்காக உழைத்தது மட்டுமின்றி தனக்கென ஒரு சிறப்பிடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இனி நாம் செத்தாலும் பரவாயில்லை என ஒரு காலகட்டத்தில் கூறினார் சிவராம். இவரைக் கொலை செய்து விட்டார்கள் சிங்கள பேரினவாதிகள்.

இவருடைய படுகொலை செய்தி கேட்டு தமிழீழத் தாயகமே கலங்கி நின்றது.

இவருடைய தேசியப்பற்றை கௌரவிக்கும் வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் “மாமனிதர்” என்ற கௌரவத்தை வழங்கியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

http://www.tamilwin.com/special/01/154892?ref=home-feed

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply