முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம்.. கமல், ரஜினி, வைரமுத்து, இந்து ராம் பங்கேற்பு!
சென்னை: முரசொலி பவளவிழாவின் வாழ்த்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில், நடிகர் கமல் ஹாசன், கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முரசொலியின் பவள விழாவின் வாழ்த்தரங்கம் சென்னை கலைவாரணர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல், கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் இந்து ராம், நக்கீரன் ஆசிரியர் கோபால், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், டெக்கன் கிரானிக்கல் ஆசிரியர் பகவான் சிங், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், ஆனந்த விகடன் மேலண் இயக்குநர் பா. சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில், முரசொலி ஆசிரியர் செல்வத்திற்கு மு.க ஸ்டாலின் நினைவு பரிவு வழங்கினார். மேலும், அமிர்தம், சொர்ணம், சண்முகநாதன், திருநாவுக்கரசு, கலாநிதிமாறன், தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ் பாரதி ஆகியோருக்கும் நினைவுப் பரிசை மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் பிரபு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/murasoli-75th-anniversary-celebration-starts-292404.html
முரசொலி விழா மேடையின் கீழே அமர்ந்திருந்த ரஜினியை அழைத்து மரியாதை செய்த ஸ்டாலின் Posted By: Veera Kumar Updated: Thursday, August 10, 2017, 19:57 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை: முரசொலி பவள விழா வாழ்த்தரங்கத்தில் பங்கேற்ற நடிகர் ரஜினிக்கு திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் மரியாதையும், நினைவு பரிசும் வழங்கினார். இந்த விழா அழைப்பிதழில் தனது பெயர் இடம்பெற வேண்டாம் என ரஜினி கேட்டுக்கொண்டதால் அதை தவிர்த்திருந்தது திமுக. அதேநேரம், நடிகர் கமல் பெயர் அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தது. இரு நடிகர்களுமே விழாவுக்கு வந்திருந்தனர். ஆனால் கமல் மேடையிலும், ரஜினி முன்வரிசையிலும் அமர்ந்திருந்தார். இருப்பினும் விழாவின் நடுவே, ரஜினிகாந்த்தை மேடைக்கு அழைத்தார் ஸ்டாலின். மேடைக்கு வந்த அவருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசும் வழங்கினார் ஸ்டாலின். அப்போது மேடையிலிருந்த கமலையும் உடன் வருமாறு அழைத்து ரஜினிக்கு கவுரவம் செய்தார் ஸ்டாலின்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-has-facilitate-actor-rajinikanth-292414.html
Leave a Reply
You must be logged in to post a comment.