இணைப்பாட்சி முறைமை பிரிவினைக்கு வித்திடாது என உச்ச மன்ற நீதியரசர்கள் தீர்ப்பு
இணைப்பாட்சி எனப்படும் சமஸ்டி என்னும் ஆட்சி முறைமை பிரிவினைக்கு வித்திடாது என பிரதம நீதியரசர் டெப் தலமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தெரிவிக்கப்படும் இணைப்பாட்சி என்னும் சமஸ்டி என்னும் சொல்லானது பிரிவினைக்கு வித்திடுகின்றது என 2014 ஆம் ஆண்டில் 6 தனியாரால் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையிலான வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் பிரதம நீதியரசர் டெப் தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியானது பிரிவினைக்கு வித்திடுவதாக கூறி அரசியல் யாப்பு 157 ஏ இன் கீழ் தொடுக்கப்பட்ட இவ் வழக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அப்போதைய செயலாளர் மாவை. சேனாதிராசா எதிராளியாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் தற்போதைய செயலாளரான துரைராசசிங்கமும் இணைக்கக்பட்டிருந்தார்.
இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி ம.ஆ.சுமந்திரன் முன்னிலையாகி தமிழரசுக் கட்சி நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது, அக் கட்சியின் யாப்பு எழுதும்போதும் கட்சி ஆரம்பம் முதலே சமஸ்டிக் கொள்கையிலேயே உள்ளது. அந்த வகைநில் கட்சியின் யாப்பு 1981 ஆம் ஆண்டு திருத்தம் செய்தவேளையில் அதில் இருந்த சமஸ்கிருத சொற்கள் நீக்கப்பட்டு தமிழ்ச் சொட்கள் சேர்க்கப்பட்டவேளையில் சமஸ்டி என்னும் சொற்பதம் இணைப்பாட்சி என எழுதப்பட்டதனை அதன் கருத்தினைப் புரியாததால் இந்த வழக்குத் தொடுக்கப் பட்டுள்ளதாக தனது முதல் நிலை விளக்கத்தினை சட்டத்தரணி சுமந்திரன் வழங்கியிருந்தார்.
இவற்றின் அடிப்படையிலேயே குறித்த வழக்கின் தீர்ப்பினை நேற்றைய தினம் பிரதம நீதியரசர் தலமையிலான குழுவினர் வழங்கியுள்ளனர். (Thayalan)
Leave a Reply
You must be logged in to post a comment.