விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகப் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் – அமைச்சர் சுவாமிநாதன்

விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகப் பகுதிக்கு    அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் – அமைச்சர் சுவாமிநாதன்

மயிலிட்டித் துறைமுகப் பகுதியில் மீனவர்கள் உடனடியாக தொழிலில் ஈடுபடுவதற்கான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வழங்குவதோடு இப் பிரதேசத்தில் இருந்து அழிவடைந்த 4 ஆலயங்களின் புனரமைப்பிற்கும் நிதி வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.Image result for மயிலிட்டிக் கிராமம்

வலி.வடக்குப் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டித்துறைமுகப் பகுதியில் கடற்றொழிலாளர்களிற்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மயிலிட்டித் துறைமுகப் பகுதியில் மீனவர்கள் உடனடியாக தொழிலில் ஈடுபடுவதற்கான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வழங்குவதோடு இப் பிரதேசத்தில் இருந்து அழிவடைந்த 4 ஆலயங்களின் புனரமைப்பிற்கும் நிதி வழங்கப்படும் . அதாவது உடனடியாக மீனவர்கள் கடலிற்கு இறங்குவதற்காக ஓர் வாடிவசதி அவர்களிற்கான கழிப்பறைகள் 5 என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இந்த மயிலிImage result for மயிலிட்டிக் கிராமம்ட்டித் துறைமுகமானது இலங்கையிலேயே இரண்டாவது பெரிய வருமானத்தை ஈட்டிய மீன்பிடித் துறைமுகம் 1990ம் ஆண்டிற்கு முன்பே இங்கே 1500 மீனவர்கள் நேரடியாகவும் 3 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் மறைமுகமாகவும் நன்மை பெற்ற ஓர் துறைமுகம். இதனை அபிவிருத்தி செய்ய வேண்டிய  கடப்பாடு அரசுக்கு உண்டு . இதேநேரம் இவர்களிற்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பிலும் ஆராயப்படுகின்றது. அதேநேரம் இப்பகுதியில் இருந்து 4 சைவ ஆலயங்களிற்கும் ஓர் கிறிஸ்தவ ஆலயத்தின் புனரமைப்பிற்கு உதவுமாறு கோரிக்கை விடப்பட்டது. அதில் 4 சைவ ஆலயங்களிற்கும் எனது அமைச்சின் ஊடாக உதவ முடியும்.

இருப்பினும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் பிறிதொருவர் அதற்கு சிபார்சு செய்யமுடியும். இதேநேரம் இங்கே தொழில் புரிவதானால் மீனவர்கள் குடியேறவேண்டும் எனவும் அதற்கான வசதிவாய்ப்புக்கள் தொடர்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனால் உட்கட்டுமான அபிவிருத்திகள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்படும் அதேவேளை இந்த ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மீன்பிடி அபிவிருத்திப்படிகளிற்காக மட்டும் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை இந் நிகழ்வில் அமைச்சருக்கு முன்பு உரையாற்றிய மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தனதுரையில் ,Image result for மயிலிட்டிக் கிராமம்

27 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட இத்துறைமுகமானது கடந்த 27 ஆண்டுகளும் எந்த அபிவிருத்தியும் இன்றிக் கானப்பட்டதனால் அப்பகுதியில் பல அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ளவேண்டியுள்ளதாக மீனவர் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டுகின்றனர். குறித்த கோரிக்கை நியாயமானது . அதேபோன்று தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 54 ஏக்கர் நிலப்பகுதியில் உடனடியாக குடியமர்வதற்கு 249 குடும்பங்கள் முன்வந்துள்ளனர். அதனால் அவர்களிற்கான வீட்டு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இதேநேரம் வீட்டு வசதி, துறைமுக அபிவிருத்தியுடன் இப்பகுதிக்கான உட்கட்டுமான வசதிகளும் ஏற்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது. எனவே இவை தொடர்பிலும் மீள்குடியேற்ற அமைச்சர் விசேட கவனம் செலுத்தி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டால் இப்பகுதியினை முழுமையாக அபிவிருத்தி செய்வதோடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தேசிய வருமானத்திலும் பங்களிப்புச் செய்ய முடியும். என்றார்.

இதேநேரம்  மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத் தலைவர் குணபாலசிங்கம் உரையாற்றுகையில் ,

இங்கே மயிலிட்டிக் கிராமத்தில் துறைமுகம் உள்ளிட்ட 80 ஏக்கர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியில் 249 குடும்பங்கள் மட்டுமே குடியமரமுடியும். ஆனால் அந்த 249 குடும்பங்களையும் தவிர்த்து மேலும் ஆயிரம் குடும்பங்கள் காத்திருக்கின்றனர். அவர்களின் பிரதேசங்கள் விடுவிக்கப்படவேயில்லை. அவ்வாறு அவர்களின் பிரதேசங்களும் விடுவிக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே உண்மையான மீள்குடியேற்றைத்தையும் முழுமையான தேசிய உற்பத்தியையும் எதிர்பார்க்கலாம்.Image result for மயிலிட்டிக் கிராமம்

இதேநேரம் மயிலிட்டியை சேர்ந்த மக்கள் அதிகம் பருத்தித்துறைப் பகுதியில் வாழ்வதனால் பருத்தித்துறை வீதி திறக்கப்படவேண்டும். எமது கிராமத்தின் 3 கிராம சேவகர் பகுதி உட்பட வலி வடக்கின் எஞ்சிய பிரதேசங்களும் விரைவில் விடுவிக்கப்படவேண்டும். இவற்றோடு இப்பகுதியில் மீள்குடுயேறும் மாணவர்களிற்கான பாடசாலைகளை உடனடியாக விடுவிப்பதோடு வைத்தியசாலை வளாகமும் விடுவிக்கப்பட்டே ஆகவேண்டும்  என்றார். (தயாளன்)

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply