சிவராமின் கொலையுடன் தங்களின் பெயர் பேசப்படுவதனால் அமைச்சர் பதவிக்கு சிந்திக்க முடியவில்லை
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புளட் அமைப்பின் தங்களின் பெயர் ஊடகவியலாளர் சிவராமின் கொலையுடன் பேசப்படுவதனால் அமைச்சுப் பதவி தொடர்பில் சிந்திக்க முடியவில்லை என மாகாண சபை உறுப்பினர் https://www.viagrapascherfr.com/prix-viagra-en-suisse/ சிவநேசனிற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புளட் அமைப்பின் தங்களின் பெயர் ஊடகவியலாளர் சிவராமின் கொலையுடன் பேசப்படுவதனால் அமைச்சுப் பதவி தொடர்பில் சிந்திக்க முடியவில்லை என மாகாண சபை உறுப்பினர் சிவநேசனிற்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார். வட மாகாண அமைச்சர்களான குருகுலராயா , ஐங்கரநேசன் ஆகியோர் தமது அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகினர்.
இதனையடுத்து இரு அமைச்சர்களை நியமிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றவேளையில் முதலமைச்சருக்கும் உறுப்பினர் சிவநேசனிற்கும் இடையில் மின்னஞ்சல் மூலம் கடிதப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அமைச்சுப் பதவி தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதன்போதே வட மாகாண முதலமைச்சர் குறித்த விடயத்தினை நேரடியாகவே கடித்த்தினில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பில் அமைச்சுப் பதவி பரிசீலணை எனில் தங்களின் பெயர் ( சிவநேசன் ) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட முடியாத நிலமையே கானப்படுகின்றது அதற்கான காரணமாக ஊடகவியலாளர் சிவராமின் மரணத்துடன் தங்களிற்கும் தொடர்பு இருப்பதாக பேசப்படுவதே காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். (நமது யாழ்ப்பாண நிருபர்)
Leave a Reply
You must be logged in to post a comment.