மயிலிட்டி துறைமுகம் + 54.6 ஏக்கர் காணி விடுவிப்பு

மயிலிட்டி துறைமுகம் + 54.6 ஏக்கர் காணி விடுவிப்பு

Published by RasmilaD on 2017-07-02

வலி­காமம் வடக்கு மயி­லிட்டி மீன்­பி­டித்­து­றை­மு­கமும் அதனை அண்­டிய சுமார் 54 ஏக்கர் காணியும் நாளை காலை இரா­ணு­வத்­தி­னரால் விடு­விக்­கப்­பட்டு யாழ்.மாவட்ட அர­சாங்க அதி­ப­ரிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை ஏனைய பகு­தி­க­ளை யும் விடு­விக்­கக்­கோரி மயி­லிட்டி துறை­மு­கத்­திற்கு முன்னால் கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக  வலி.வடக்கு மீள்­கு­டி­யேற்ற புனர்­வாழ்வு சங்கத் தலைவர் அ.குண­பா­ல­சிங்கம் தெரி­வித்தார்.

இத தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

யுத்தம் கார­ண­மாக குறிப்­பாக 1990 ஆம் ஆண்டு இடப்­பெ­யர்­வுக்கு பின்னர்  27 ஆண்­டுகள் கடந்த நிலையில் பலத்த எதிர்­பார்ப்பின் மத்­தியில் திங்­கட்­கி­ழமை காலை 9 மணிக்கு  இரா­ணு­வத்­தினர் மயி­லிட்டி மீன்­பி­டித்­து­றை­மு­கத்­தையும் அதனை சூழ­வுள்ள 54 ஏக்கர் மக்கள் குடி­யி­ருப்பு காணி­க­ளையும் விடு­வித்து யாழ்.மாவட்ட அரச அதி­ப­ரிடம்  ஒப்­ப­டைக்­க­வுள்­ளனர்.

இதே­வேளை ஏனைய விடு­விக்­கப்­ப­டா­துள்ள காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி கவ­ன­யீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்­ளதால் அன்­றைய தினம் இடம்­பெ­யர்ந்து வாழும் மயி­லிட்டி மக்­க­ளையும் நலன்­பு­ரி­நி­லை­யங்­களில் தங்­கி­யுள்ள மக்­க­ளையும் தவ­றாது கலந்­து­கொள்­ளு­மாறு அவர் வேண்­டுகோள்  விடுத்­துள்ளார்.

இதே­வேளை வலி­காமம் வடக்கு மயிலிட்டி துறைமுகமானது இலங்கையில் மொத்த மீன்பிடியில் மூன்றில் ஒரு பங்கை தன்னகத்தே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21413

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply