வினைத்திறனற்ற விக்னேஸ்வரனை தாங்கோ தாங்கு என்று தாங்கிப் பிடிக்கும் நிலாந்தன்
நக்கீரன்
பதின்மூன்று மொட்டுக்களை கசக்கிப் பிழிந்த கற்பழிப்புக் குற்றம், ஆச்சிரமத்தில் இருந்த ரவி என்ற பொறியாளரை அடித்துக் கொன்று ஆச்சிரமத்துக்குள்ளேயே புதைத்த கொலைக் குற்றம் இரண்டுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற செக்ஸ் சுவாமி பிரேமானந்தாவின் சீடன் விக்னேஸ்வரனை தாங்கோ தாங்கி ஏந்தி எடுத்து வருபவர்களில் பத்தி எழுத்தாளர் நிலாந்தன் இன்று முதல் இடம் பிடித்துள்ளார். அவரது பிந்திய கட்டுரைக்குத் தலைப்பு ” விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்?” என்பதாகும்.
வான்கோழியை வண்ண மயிலென்றும் கூழாங்கல்லை வயிரம் என்றும் சுண்ணாம்பை வெண்ணெய் என்றும் சிட்டுக்குருவியை பருந்தென்றும் நோஞ்சானை பயில்வான் என்று சொல்வது போல விக்னேஸ்வரனை பெரிய ஜனவசியம் உள்ள தலைவர் என்றும் காட்ட இந்த பத்தி எழுத்தாளர் மெத்தப் பாடுபடுகிறார்.
இருக்கும் அமைச்சர்கள் நான்கு பேர், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 (தமிழரசு – ததேகூ) இவர்களை அன்போடு, நா நயத்தோடு, நல்ல ஆசிரியர் போல், நல்ல நண்பன் போல் வழிநடத்த முடியாத ஒரு அரைவேக்காடு விக்னேஸ்வரனை தலையில் வைத்து சதிராடுகிறார் நிலாந்தன்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இவரே விக்னேஸ்வரன் ஒரு வினைத் திறனற்றவர், நிருவாக அனுபவம் அற்றவர், வருத்தக்காரர் என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார். பின் எதற்காக “விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்? என்று அவருக்கு பூபாளம் பாடுகிறார்? குடை பிடிக்கிறார்? இது வடக்கு மக்களுக்கு செய்யும் இரண்டகம் இல்லையா?
தமிழரசுக் கட்சிக்கு எதிரான மாற்றுத் தலைமைக்கு ஆசைப்படுபவர்கள் எல்லோரும் நொண்டிக் குதிரைகள், வெள்ளை வேட்டி, நெற்றியில் பட்டை, குங்குமப் பொட்டு அணிந்த விக்னேஸ்வரன்தான் உள்ளதில் வள்ளிசு என நிலாந்தன் நினைக்கிறார். விக்னேஸ்வரனுக்கு பாமாலை பாடி புகழ்மாலை சாத்துவதற்கு அதுதான் காரணம்.
நிலாந்தன் ஒரு கற்பனைவாதி. யதார்த்தத்திற்கும் அவருக்கும் வெகு தூரம். இவர் கனடாவுக்கு வந்த போது அங்கு 300,000 மக்கள் வாழ்கிறார்கள் என அறிந்து கொண்டு அவர்கள் எல்லோரும் சேர்ந்து கனடாவில் ஒரு வங்கி திறக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார். இவரது கணிப்பில் ஒரு வங்கியை சில மில்லியன் முதலீட்டில் தொடங்கி விடலாம் என நினைக்கிறார். அதற்கு பில்லியன் கணக்கில் முதலீடு தேவை என்றும் பில்லியன்களில் புரளுகிறவர்களே புதிதாக ஒரு வங்கியை திறக்க முடியாமல் இருக்கும் போது தமிழ் முதலீட்டாளர்கள் எப்படி வங்கியை திறக்க முடியும்.?
இங்குள்ள அங்காடிகளைப் பார்த்துவிட்டுத்தான் அவருக்கு இந்த விபரீத யோசனை அல்லது ஆசை தோன்றியிருக்க வேண்டும்.
விக்னேஸவரன் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறுவது நிச்சயம் என்று அறிந்து கொண்ட அவர் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்துக்கு சென்று சமாதானம் பேசினார். இல்லை சமாதானம் பேசுவதுபோல நடித்தார்.
யார் யாரை அமைச்சர்களாக போடலாம் என யோசனை கேட்டார். “குருகுலாராசா தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர். அவரது இடத்துக்கு தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த மாகாண உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்டை ப் போடலாம் என அவருக்குச் சொல்லப்பட்டது. விவசாய அமைச்சைப் பொறுத்தளவில் அதனை அவர் விரும்பியவாறு நிரப்பிக் கொள்ளலாம் என்று பெருந்தன்மையோடு சொல்லப்பட்டது.
கல்வி அமைச்சரை நியமனம் செய்யும் யோசனையை எழுத்தில் தருமாறு ஒருமுறைக்கு இருமுறை கேட்கப்பட்டது. அப்படியே எழுத்தில் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் துரைராசசிங்கம் நேரடியாகச் சென்று விக்னேஸ்வரனிடம் கையளித்தார்.
ஆனால் வேதாளம் மீண்டும் முருக்க மரத்தில் ஏறப் போகிறது என்பது தமிழ் அரசுக் கட்சித் தலைமைக்குத் தெரியாமல் போய்விட்டது! நந்தவனத்து ஆண்டி தோண்டியை போட்டுடைக்கப் போகிறது என்பது விளங்காமல் போய்விட்டது.
சிலரை சிலகாலம் ஏமாற்றலாம். பலரை பலநாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது.
Leave a Reply
You must be logged in to post a comment.