No Picture

குறள் எண் 0849

October 12, 2021 VELUPPILLAI 0

குறள் எண் 0849 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு.(அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:849)பொழிப்பு (மு வரதராசன்): அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பான் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான். மணக்குடவர் […]

No Picture

அண்ணாவின் ” வேலைக்காரி ” நாடகம் ஒரு பார்வை! –

October 8, 2021 VELUPPILLAI 0

அண்ணாவின் ” வேலைக்காரி ” நாடகம் ஒரு பார்வை! DECEMBER 5, 2019 கதாபாத்திரங்கள் :  வேதாசல முதலியார் – வட்டியூர் ஜமீன்தார் சரசா – வேதாசல முதலியாரின் மகள் மூர்த்தி – வேதாசல […]

No Picture

திரு அருட்பிரகாச வள்ளலார்

October 6, 2021 VELUPPILLAI 0

திரு அருட்பிரகாச வள்ளலார் ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், […]

No Picture

அண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன?

September 18, 2021 VELUPPILLAI 0

அண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 15 செப்டெம்பர் 2021 காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை 1909 செப்டம்பர் 15ம் தேதி […]

No Picture

பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:

September 13, 2021 VELUPPILLAI 0

பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’: நூற்றாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினின் 14 அறிவிப்புகள் பிரதிநிதித்துவப் படம் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு […]

No Picture

தமிழின் தொன்மை

August 17, 2021 VELUPPILLAI 0

தமிழின் தொன்மை உலகில் முதல், முதல் மக்கள் தோன்றிய நாடு தமிழகமும், அதனையடுத்திருந்த கடல் கொண்ட தென்னாடுமே என நில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.காவிரிப்பூம்பட்டிணத்தில் நிலத்து நின்று வாழும் தமிழ் மக்களை “பதியெழ அறியாப் பழங்குடியினர்” என இளங்கோவடிகள் கூறுகிறார், இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார் “படைப்புக் காலந்தொட்டே வாழுங் குடியினர்” எனக் கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்”என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தையக மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும். தமிழ் மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை, ஏனெனில் அது ஓரு காலங்கடந்த மொழி, அதற்கு வரலாறு இல்லை. எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை. எனினும் காவியமும், ஓவியமும், காவிரியும், வைகையும், கட்டிடமும், சிற்பமும்,கல்வெட்டும், புதை பொருட்களும் ஓருவாறு தமிழ் மொழியின் தொன்மையை உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் “தமிழ் மொழியே உலகின் முதல் மொழி” எனக் கூறுவர். இன்னுஞ் சிலர் “இலத்தின்”, “கீரிக்” மொழிகளுக்கு முந்திய மொழி” எனக் கூறுவர். இவற்றில் எது உண்மையாகவிருப்பினும் அது தமிழின் தொன்மைச் சிறப்பைக் காட்டுவதாகவே இருக்கும். முற்காலத்திய சீன யாத்திரீகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்திய ஜி.யு.போப், கால்டுவெல் வரையுள்ள வேற்று நாட்டினர், வேற்று மதத்தினர் வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றி பாரட்டப்பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு பாரட்டைப் பெற்ற ஓரு மொழி உலகின் பழைய மொழிகளில் எதுவுமேயில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப் பெற்றுவந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே அதன் மொழியின் தொன்மைக்கு சான்று. 1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமை கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பறி ஆண்ட செய்தியையும் இலக்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்ற உண்மைகளாகும். இதனால் தமிழ் மொழியானதுஅக்காலத்திலுமே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரியும் ஓரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கின்றது என்பது தெரியவருகிறது.2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன 2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 2400 ஆஅண்டுகளூக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயேதமிழில் “நற்றிணை” என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது 2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமோன் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்நாட்டுக் கப்பல்களில்,தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ் நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக்கொண்டு சென்று தமிழ் மொழியிலேயே விலை பேசி விற்று வந்திருக்கின்றனர்.அப் பொருட்களுக்கு இன்னும் தமிழ்ச் சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன.அரிசி “ரைஸ்” எனவும், மயில் தோகை “டோ கை” எனவும், சந்தனம் “சாண்டல்” எனவும், தேக்கு “டீக்கு”, எனவும் கட்டுமரம் “கட்டமாரன்” எனவும் , இஞ்சி “ஜிஞ்சர்” எனவும், ஓலை “ஒல்லா” எனவும் கயிறு “காயர்” எனவும் ஆயின. காலப்போக்கில் இத் தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்ச், ஆங்கில அகராதிகளிலும் புகுந்து கொண்டு விட்டன. 3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் “தொல்காப்பியம்” ஓன்றே.அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றியிருக்கின்றன.இவ்வுண்மையை “தோலென மொழிப தொன்மொழிப் புலவர்” என தொல்காப்பியரே தமது நூலில் கூறியிருப்பதால் நன்கறியலாம். 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாகப் நம்பப் பெறுகிற நூல்களில்“அகத்தியம்” எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. இதை 5000 ஆண்டுகளுக்குமுற்பட்டது என்று கூறுவோறும் உண்டு.தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றி கடல் நீர் நாட்டிற்குள்புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும்,இது நடந்த காலம் 3000-ம், 5000-ம், 9000-ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது.மேலை நாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும்அவை 5000 ஆண்டுகளுக்கு முன்பும், 7000 ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர். தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்?? அதற்கு முன்னே உரைநடை தோன்றிய காலம்? அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்??அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது? என்பதை எவர் அறிந்து கூற இயலும்? ஏதெனும் கூற வேண்டுமானல் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும்.மேற்கண்ட சில சான்றுகளே தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்தும்.

No Picture

“தன் இறுதிக்காலத்தை முன்பே உணர்ந்த சித்தர் பாலகுமாரன்”

July 9, 2021 VELUPPILLAI 0

“தன் இறுதிக்காலத்தை முன்பே உணர்ந்த சித்தர் பாலகுமாரன்” – நெகிழும் எழுத்தாளர்கள்! 16 May 2018 எழுத்து சித்தர் பாலகுமாரன் காலமாகிவிட்டார். இது அவரது வாசகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தனது எழுத்தின்மூலம் ஆயிரக்கணக்கான இதயங்களைக் […]

No Picture

அருண்மொழி-தமிழ்ச்செல்வி திருமணவிழா தமிழ்த் திருமண அழைப்பிதழ்

June 29, 2021 VELUPPILLAI 0

அருண்மொழி-தமிழ்ச்செல்வி திருமணவிழா தமிழ்த் திருமண அழைப்பிதழ்   அன்புடையீர் நிகழும் திருவள்ளுவராண்டு 2033, ஆவணித் திங்கள் 18 ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை  (18-08-2002) காலை 10 மணி முதல் 12 மணிவரையுள்ள  நல்வேளையில்,  எமது […]

No Picture

தமிழர் திருமணம்

June 29, 2021 VELUPPILLAI 0

தமிழர் திருமணம்நக்கீரன் பதிப்பு – பங்குனி 2000விலை – பத்து (கூ 10) டொலர் தமிழ்த் தெய்வ வணக்கம்(பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா) நீர் ஆடும் கடல் உடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும்சீர் ஆரும் வதனம் […]

No Picture

பொங்கல் புத்தாண்டு விழா தமிழர்களின் பண்பாட்டுக் கோலம்!

June 9, 2021 VELUPPILLAI 0

பொங்கல் புத்தாண்டு விழா தமிழர்களின் பண்பாட்டுக் கோலம்!நக்கீரன் பொங்கல் விழா இன்று முன்னையை காலங்களை விடப் பரவலாகத் தமிழ் மக்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இன்று தமிழ்மொழி, கலை, பண்பாடு […]