அண்ணாவின் ” வேலைக்காரி ” நாடகம் ஒரு பார்வை!
DECEMBER 5, 2019
கதாபாத்திரங்கள் :
- வேதாசல முதலியார் – வட்டியூர் ஜமீன்தார்
- சரசா – வேதாசல முதலியாரின் மகள்
- மூர்த்தி – வேதாசல முதலியாரின் மகன்
- அமிர்தம் – வேலைக்காரி
- சொக்கன் – வேலைக்காரன்
- முருகேசன் – அமிர்தத்தின் தந்தை
- சுந்தரம்பிள்ளை – அவ்வூரில் வாழ்பவர்
- ஆனந்தன் – சுந்தரம்பிள்ளையின் மகன்
- மணி – ஆனந்தனின் நண்பன்
- முத்தாயி – அமிர்தத்தின் அம்மா
- பாக்கியம் – 55 வயது மாப்பிள்ளையின் தங்கச்சி
கதைச் சுருக்கம் :
வேதாசல முதலியார் வீட்டுக்கு சொக்கன் துணி பார்சல் கொண்டு வருகிறான். அதென்னது என வே கேட்க சரசம்மா மாதர் சங்கத்துல டான்ஸ் ஆட கேட்ருந்த துணி என சொல்கிறான் சொக்கன். அமிர்தத்திடம் சரசாவை அழைத்துவர சொல்கிறார் வேதாசலம்.
அமிர்தம் ஓடிவந்து சரசாவிடம் சொல்ல என்னடி ஓட்டமும் ஆட்டமும் என எரிந்து விழுகிறாள் சரசா. ஏன் எரிஞ்சு விழுற என மூர்த்தி கேள்வி கேட்க சரசா மூர்த்தியை பழித்து பேசிவிட்டு அப்பாவிடம் செல்கிறாள். அப்பா துணிக்கு காசு சங்கத்திலே வாங்கி தந்திடுமா என சொல்ல சரசா சரிப்பா என்கிறாள். சுந்தரம்பிள்ளை வாங்கிய கடன் என்ன ஆச்சு என சொக்கனிடம் வேதா கேட்க சொக்கன் அவனை அரஸ்ட் பண்ணிடலாம் என ஐடியா கொடுக்கிறான். வேதாசலம் சுபிள்ளையை அரஸ்ட் பண்ணிடுவேன் என மிரட்டி செல்ல… கையில் காசில்லாத சுபி தற்கொலை செய்துகொள்கிறார். சுபியின் மகன் ஆனந்தன் கையில் 2000ம் பணத்துடன் வெளியூர் வேலையிலிருந்து வருகிறான். வரும் வழியில் நண்பன் மணியை சந்தித்து பேசிக்கொண்டே வருகிறான். மணி கேடி ஆன கதையை ஆனந்தனிடம் கூறுகிறான்.
ஆனந்தன் வீட்டிற்கு வந்து பார்க்க அப்பா சுபி மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து அதிர்ந்த ஆனந்தன் அப்பா எழுதிய லட்டரைப் படித்து வேதாசலம் செய்த கொடுமைகளை சொல்லி ஒரே சொந்தத்த்தை இழந்துவிட்டேனே என அழுகிறான்.
மாதர் சங்கத்தில் சரசாவின் நடனம் அரங்கேறி முடிக்க அமிர்தத்தை மட்டம் தட்டிய சரசா தான் பெண் விடுதலைக்குப் போராடுவதாகவும் பெண்கள் அனைவரும் சமம் எனவும் பேசுகிறாள். சரசாவின் சேலையை அமிர்தம் மடித்து வைத்து அழகு பார்க்க சரசா அவளை திட்டுகிறாள், செருப்பை துடைத்து வை என வீசுகிறாள்… இதை பார்த்த மூர்த்தி சரசாவை பணத்திமிர் பிடித்தவள் என திட்டுகிறான்.
ஆனந்தன் வேதாவை வெட்டி பழிதீர்க்க முயல மணி அவனைத் தடுத்து கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு, எந்த ஊர் வேதாவை கொண்டாடுகிறதோ அதே ஊர் வேதாவை திட்ட வேண்டும் அழிக்க வேண்டும் அதற்கு யோசி என்கிறான். ஆனந்தன் யோசிக்கிறான்.
வேதாசலம் வீட்டில் முனியான்டி என்பவன் தர வேண்டிய கடன் பற்றி பேசுகிறார்கள். அமிர்தத்தின் தந்தை முருகேசன் அமிர்தம் மாப்பிள்ளைக்கு வயசாயிடுச்சு கட்டிக்க மாட்டேன் என்று சொன்னதை வேதாவிடம் கூறுகிறான். வேதா அமிர்தத்ததை அதட்டி அறிவுரை சொல்கிறான்.
அமிர்தம் சரசாவிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழ, நீ என்ன பெரிய மகாராணியா கிழவனை கட்டிக்க மாட்டியா தகுதிக்கு தகுந்தாப்ல ஆசைப்படு என்று அதட்டுகிறாள் சரசா. மூர்த்தியோ அமிர்தத்திற்கு ஆதரவாக பேசி கல்யாணத்தை நிறுத்த ஒரு ஐடியா கொடுக்கிறான்.
மாப்பிளை வீடு பெண் பார்க்க வருகிறார்கள். அமிர்தத்தை தனியே அழைத்து மாப் தங்கச்சி தனியாக பேச அமிர்தத்தின் முட்டாங்கண்ணையும் தெத்துப் பல்லையும் பார்த்து பயந்து அமிர்தத்தின் அம்மாவோடு சண்டை போட்டு பெண் வேண்டாமென கிளம்புகிறார்கள். நடந்ததை மூர்த்தியிடம் தெரிவிக்கிறாள் அமிர்தம். மூர்த்திக்கு அமிர்தம் மீது ஒரு கண். உனக்கு இந்த வீட்டில் யார் மேலயாவது ஆசை இருக்கா என கேட்க சரசா வர அமிர்தம் சரசாவிடம் வழக்கம்போல திட்டு வாங்கிக்கொண்டு கிளம்புகிறாள்.
மணி கடன் கொடுத்தவனிடம் காசு வாங்கவில்லை என காளி கோயிலில் அடித்து சத்தியம் செய்கிறான். ஆனந்தன் அதிர்கிறான். கடன் கொடுத்தவன் ஆனந்தனை மானக்கேடா திட்ட வேலை போக தற்கொலை முயற்சிக்குப் போகிறான் ஆனந்தன். அதைக்கண்டு மணி புத்திமதி சொல்லி வேதாசலத்துக்கு காளியின் அருள் கிடைத்துள்ளது ஜமீனாக வேதாசலம் உயர்ந்துள்ளான் என்றதும் காளி கோவிலுக்குச் செல்கிறான் ஆனந்தன். காளியிடம் நீதி கேட்டு காளியை அசிங்கப்படுத்துகிறான் ஆனந்தன். காளியை அவமானப் படுத்துகிறான், அவனை ஊர் துரத்துகிறது… வழியில் மணி மீது மோத இருவரும் ஒரு இடத்தில் ஒழிய அந்த இடத்தில் ஆனந்தனைப் போன்றவனின் பிணம் கிடக்கிறது, அவனுடைய டைரியைப் படித்துப் பார்த்து பரமானந்தன் தான் இறந்தவனின் பெயர், அவனுக்கு தாய் மட்டுமே தாய்க்கு கண்ணு தெரியாது என்ற தகவல்களை தெரிந்ததும் ஆள்மாறாட்டத்திற்கு ஐடியா கொடுக்கிறான் மணி.
பரமானந்தம் 10 வருடங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து கிளம்பி லண்டன் பாரீஸ் என சுற்றியவன், அவன் அம்மாவிற்கு கண் ஆப்ரேசன் என தெரிந்ததும் ஊர் திரும்பியுள்ளான், அவனிடம் அதிக வைர நகைகள் உள்ளதை நோட்டமிட்ட யாரோ அவனை போட்டு தள்ளி இருக்கிறார்கள். அதை மணியும் ஆனந்தனும் பயன்படுத்திக் கொண்டு பரமானந்தனின் தாயாரிடம் செல்கிறார்கள்.
பரமானந்தனின் தாயார் அவனை பார்த்து மகிழ்கிறாள். மணியை யார் என்று விசாரித்து பரமானந்தனின் நண்பன் என்றதும் சந்தோசம் என சொல்லி பரமானந்தனுக்கு வேதாசலம் மகள் சரசாவை கட்டி வைக்கலாம் என முடிவெடுத்துள்ளேன் என தாயார் சொல்ல மணி மகிழ்கிறான். தேனீர் விருந்துக்கு வேதாசலத்துக்கும் அவள் மகள் சரசாவுக்கும் அழைப்பு எழுதுகிறான் மணி. ஊரிலயே பணக்கார குடும்பம் பரமானந்தனின் குடும்பம் என்பதால் சம்மதிக்கிறான் வேதாச்சலம்.
தேனீர் விருந்தை ஆனந்தனும் மணியும் எப்படியோ சமாளிக்கிறார்கள். சில நாட்களில் பரமானந்தனுக்கும் சரசாவுக்கும் திருமணம் நடந்து முடிகிறது. வேதாசலத்தை பழிவாங்கும் படலங்களை ( திட்டங்களை ) பரமானந்தனிடம் எடுத்துரைக்கிறான் மணி.
சரசா அமிர்தத்தின் மூஞ்சியில் எச்சில் ஆப்பிளை தூக்கி வீசுகிறாள். பரமானந்தனின் கார் வருகிறது. திட்டம் போட்டது போலவே சரசாவை கொடுமைபடுத்துகிறான் பரமானந்தன்.
மூர்த்தி அமிர்தாவிடம் தன் காதலை தெரிவிக்கிறான். அடுத்த சில நேரத்தில் அமிர்தாவிடம் தவறாக பேசுகிறான் பரமானந்தன். அந்த இடத்திற்கு வந்த சரசா வழக்கம்போல அமிர்தாவை அதட்டுகிறாள். என்ன நடந்தது என வினவ அமிர்தா நடந்ததை சொல்ல சரசா அதற்கும் அமிர்தாவையே பழி சொல்கிறாள். மூர்த்தி பரமானந்தத்தை எச்சரிக்கிறான். மூர்த்தி அமிர்தா காதல் விவகாரத்தை வேதாவிடம் சொல்ல முற்படுகிறான் பரமு. வேதாவிடம் மூர்த்தியும் அமிர்தாவும் கொஞ்சி கொலாவும் காட்சியை காட்டுகிறான் பரமு. இதனால் பரமு திட்டம் போட்டபடி மூர்த்திக்கும் வேதாவுக்கும் சண்டை வருகிறது. அமிர்தாவை டச்சு கிச்சு பண்ணி இருந்தா சொல்லு காசு கொடுத்து ஊரைவிட்டு தொரத்திடலாம் என சொல்ல வாழ்ந்தா அமிர்தாவோடு தான் வாழ்வேன் என வீட்டைவிட்டு வெளியேறுகிறான் மூர்த்தி.
அமிர்தாவை பார்க்க செல்கிறான் மூர்த்தி. வேதாசலம் திட்டியதால் முருகேசன் அமிர்தாவை வெட்ட கிளம்புகிறான். மூர்த்தி சென்னை கிளம்பி நண்பர்கள் உதவியுடன் அமிர்தாவை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். அமிர்தா தன் வீட்டிற்குப் போக அங்கு கோபத்தோடு அமர்ந்திருக்கிறார் முருகேசன். நண்பர்கள் சொன்ன ஐடியாபடி இரவோடு இரவாக அமிர்தத்தை சொந்த ஜாதியை சேர்ந்தவனுக்கு கட்டி கொடுக்க முற்படுகிறான் முருகேசன். வீட்டை கொழுத்துக்கிறான். வீட்டிலிருந்த அனைவரும் எரிந்து சாம்பலாகிவிட்டதாக சென்னை நண்பர்களீன் உதவி கிட்டாத மூர்த்தியிடம் சொல்கிறார்கள். பிறகு மூர்த்தி குரு ஹரிஹரிதாஸ் ஆசிரமத்தில் சேர்கிறான்.
பரமு வேதாச்சலத்திடம் சண்டை போட்டுக்கொண்டு மேலும் கடுப்பேற்றிவிட்டு சரசாவை தன்னுடன் அழைத்துச் செல்கிறான். மூர்த்தி இருக்கும் ஆசிரமம் பெண்களுடன் கூத்தாடும் ஆசிரமம் எனத் தெரிந்ததும் ஹரியை கொன்றுவிட்டு ஆசிரமத்தாட்களிடம் சிக்கி கொள்கிறான் மூர்த்தி.
எரியும் வீட்டிலிருந்து தப்பி வந்த அமிர்தம் பழங்கள் உள்ள லாரியில் ஏற லாரிக்காரர் அவளுடைய கதையைக் கேட்டு பரிதாபப்பட்டு பழங்கள் விற்க அனுப்புகிறார்.
சரசாவை தனது குடிசை வீட்டுக்கு அழைத்துச் சென்று வேலை வாங்கி கொடுமை படுத்துகிறான் ஆனந்தன். தோட்டத்தில் உள்ள காய்கனிகளை பறித்து மார்க்கெட்டில் விற்று வா என சரசாவை அனுப்புகிறான்.
அமிர்தம் பழக்கூடையை எடுத்துக்கொண்டு வீதி வழியே விற்றபடி வருகிறாள். அமிர்தத்தை பாலு முதலியார் தூக்கிச் செல்கிறார். டாக்டரிடம் செல்கிறார்கள். பாலு முதலியார் தன் மகள் சுகிர்தத்தை இழந்த சோகத்தில் பைத்தியமானதால் அவருடைய பைத்தீயத்தை அமிர்தத்தை வைத்து சரி செய்கிறார் டாக்டர். அந்த பணக்கார முதலியார் அமிர்தத்தை தன் மகளாகவே வளர்க்கிறார். மணி வேதாவால் ஊரைவிட்டு போன ஒரு பெண் ஹரி ஆசிரமத்தில் சுந்தரகோஷாக இருந்ததை சொல்ல… பரமு சென்னையில் அமிர்தம் பணக்காரியாக இருந்ததை சொல்கிறான்… மூர்த்தி கைது செய்யப்படுகிறான்… வழக்கு கோர்ட்டிற்கு வருகிறது…
வடநாட்டு வக்கீலாக பரமுவும் அவனின் வேலையாளாக மணியும் மாறுகிறார்கள். சுந்தரகோஷ் பெண் வேடமிட்டு ஹரியுடன் உல்லாசமாக இருந்ததால் தான் இந்தக் கொலை நடந்தது என்று விளக்குகிறார் வடநாட்டு வக்கீல். பல வருடங்களுக்கு முன் ஜெயிலிலிருந்து தப்பிய பண்டாரி பக்கிரி தான் ஹரிஹரதாஸ் என தெரிய வருகிறது. இந்த வழக்கிலிருந்து விடுதலையான மூர்த்தியிடம் வடநாட்டு வக்கீல் பாலுவின் மகளை கல்யாணம் செய்துகொள்ள சொல்கிறார். அடையாளம் மாறிப் போன சுகிர்தமும் மூர்த்தியும் பாலு வீட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
மூர்த்திக்கும் சுகிர்தத்திற்கும் திருமணம் நடக்கிறது. ஆனந்தன் நடந்த அத்தனை உண்மைகளையும் கூறுகிறான். அனைவருடைய வேடமும் களைகிறது. வேதாசலம் மனம் திருந்துகிறார். ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்கிறார்…!
பிடித்த வரிகள் :
- நல்லவனுக்குத் தான் இந்தப் பொல்லாத உலகில் நாணயமாகப் பிழைக்க வழியில்லையே!
- ” மூட்டை சுமந்தவனுக்கல்லவா தெரியும் கழுத்து வலி… ”
” வலி இருக்கிறதென்று கருங்கல்லில் முட்டினால் வலி தீராது, மண்டை தான் உடையும்… ”
- தர்மம், கர்மம் எல்லாம் தலை முழுகி நெடுநாளாகிவிட்டது…
- பைத்தியக்காரன் உழைக்கிறான் மாடு போல… சம்பாதிக்கற காசையெல்லாம் கர்ப்பூரமாக வாங்கிக் கொளுத்துகிறான். ( சிகரெட் பிடித்தல் ).
- அதிர்ஷ்டம் வந்து அணைத்துக் கொள்ளும் போது அடிமுட்டாளாக இருக்காதே.
- எந்தப் பொருளும் ஒருவனிடம் இருக்கும் போது அது அவனுடையது, அதற்கு முன்பு அது வேறொருவனுடையது.
- பணக்கார உலகம் மிகவும் விசித்திரமானது. முட்டாள் புத்திசாலியாகப் போற்றப்படுவான். வீரன் கோழைப் பட்டம் பெறுவான். கோழை வீரன் படம் பெறுவான். அவலட்சணமாக இருந்தாலும் அழகனாகக் கருதப்படுவான்.
- அமாவாசையில் நிலவேது? காமவெறி பிடித்தவனுக்கு தர்மம் ஏது?
விமர்சனம் :
அண்ணாவின் இந்த வேலைக்காரி ஒரு நாடகம். 92 பக்கங்கள் 54 காட்சிகளை உடையது. முழுதும் படித்து முடிக்க வெறும் மூன்று மணி நேரம் போதும். அவ்வளவு சுவாரஸ்யமாகச் செல்கிறது நாடகம். குறிப்பாக ஆனந்தன் வழியாக வரும் டுவிஸ்ட்டுகள் எல்லாம் பக்கா மாஸ்… இந்த நாடகத்தை படித்து முடித்த பிறகு அண்ணாவை ” அட்டகாசம் அண்ணாத்துரை ” என்று பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்.
http://www.annavinpadaippugal.info/nadagangal/vaelaikari_7.htm
அறிஞர் அண்ணாவின்
https://tamil.trendingonlinenow.in/a-view-on-velaikkari-drama-by-c-n-annadurai/
அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி நாடகம் காட்சி 10 முதல் 13 வரை
……………………………………………………………………………………………………………….
வேலைக்காரி – அறிஞர் அண்ணா
ஒருமுறை அறிஞர் அண்ணாவை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றுமாறு கல்லூரி ஒன்றிலிருந்து அழைத்திருந்தார்கள். அழைத்தவர் அந்த கல்லூரி நிர்வாகத்தின் தலைவர். அந்தத் தலைவர் அறிந்திராத விஷயம் என்னவென்றால், அவர் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க யாரிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தாரோ அந்தக் குழுவினர் அரசியல் அல்லது பிற காரணங்களுக்காய் அறிஞர் அண்ணாவின்பால் அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவர்கள். அவர்களின் பின்னால் அந்தக் கல்லூரியில் பெரிய கூட்டமே இருந்தது.
அண்ணா பெரும்பாலும் எழுதி வைத்துக் கொண்டெல்லாம் பேசமாட்டாராம். மேடையேறி மைக்கைப் பிடித்தாரென்றால் மடைதிறந்த வெள்ளமெனத் தன்னால் வருமாம் பேச்சு.
அப்படிப்பட்ட அண்ணாவை அவமானம் செய்யவேண்டும் என்ற நோக்கில் அண்ணா பேசுவதற்கு மேடையேறியதும் அவரிடம் அழைத்த மக்கள் அவருக்குத் தந்த தலைப்பு, “செருப்பு”.
”நீ என்னதான் பேசுற பாப்போம்”, என்ற பார்வையோடு திரண்டிருந்த கூட்டத்திற்கு எதிரே ”செருப்பு” என்னும் தலைப்பில் பேசத்துவங்கிய அண்ணா பேசி முடித்தபோது மூன்று மணிநேரங்கள் முடிந்து போயிருந்ததாம். யாரெல்லாம் அண்ணாவை அவமானம் செய்ய நினைத்தார்களோ அவர்களெல்லாம் மந்திரம் போட்டுக் கட்டிப் போட்டாற்போல் அவர் பேச்சில் கட்டுண்டு கிடக்க மூன்று மணிநேரம் முடிந்ததும் அவர் போட்ட ஒற்றைச் சொடுக்கில்தான் நிகழ்காலத்திற்குத் திரும்பினார்களாம்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்தாபகர் (அல்லது ஸ்தாபகர்களுள் ஒருவர்), கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று காலங்காலமாக “திராவிட” என்ற வார்த்தையைக் கொண்ட எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் “தலைவர்” என்பவையெல்லாவற்றுக்கும் முன்னால் அறிஞர் அண்ணாவின் ஒரு பெரிய அடையாளம் அவர் ஒரு தலைசிறந்த எழுத்தாளர், பேச்சாளர் என்பதுவே. சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்னும் பெரிய அங்கீகாரத்தை மக்களிடையே கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை வென்று ஆட்சிமேடையைப் பிடிக்க திமுக’விற்கு உதவியது அண்ணா, கருணாநிதி போன்றவர்களின் பேச்சு, எழுத்து வன்மையேயன்றி வேறில்லை.
அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் எதனையும் இதற்குமுன் நான் வாசித்ததில்லை. சமீபத்தில் ஒரு பழைய பேப்பர் கடையில் வழக்கம் போல புத்தகங்களுக்காய்ப் போட்டுக் கொண்டிருந்த சொளையத்தில் சிக்கியதே இந்த “வேலைக்காரி” புத்தகம். அண்ணாவின் ஓர் இரவு மற்றும் வேலைக்காரி இரண்டு புத்தகங்களும் இன்றளவும் பேசப்படும் மிகப்பிரபலமானவை என்பது அனைவரும் அறிந்த சேதி.1947’ல் எழுதப்பட்ட, ஒரு நாடக வடிவில் கதாபாத்திரங்கள், காட்சி அமைப்புகள், வசனங்கள் என்று விவரிக்கும் ஒரு கதை. அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு ப்ளாட்.
பணக்கார முதலாளி. கடனுக்குப் பணம் தந்து ஊரைச் சுரண்டுபவர். அவர் வீட்டு வேலைக்காரி அமிர்தம். அவரிடம் பணம் வாங்கித் திருப்ப முடியாமல் தற்கொலை செய்து செத்துப் போனவரின் மகனான கதாநாயகன் ஆனந்தன் (எ) பரமானந்தன். அவன் அந்த பணக்கார முதலாளியைப் பழிவாங்கச் செய்யும் தந்திரோபாயங்கள். அதற்கு உதவி பண்ணும் மணி என்னும் சேட்டைக்கார நண்பன். அந்த வேலைக்காரி அமிர்தத்தைக் காதலிக்கும் பணக்கார முதலாளியின் மகன் மூர்த்தி. இரண்டு ரவுண்டு மாறுவேட நாடகங்கள் நடத்தி முதலாளிக்கு ஆனந்தன் கொடுக்கும் குடைச்சல்கள். பணக்கார முதலாளி க்ளைமாக்ஸில் திருந்திவிடுவதாக நிறையும் கதை.
ஒருபக்கம் பணம் படைத்தவர்களின் அதிகார ஆணவச் செயல்பாடுகள், மறுபுறம் ஜாதிரீதியான உயர்வு/தாழ்வு சார்ந்த செயற்பாடுகள். இரண்டையும் பிடிபிடியெனப் பிடிக்கிறார் அறிஞர் அண்ணா. சேட்டைக்கார மணி வழியே ஆத்திகர்களின் இடுப்பிலும் இடிக்கிறார்.
பஞ்சவர்ணக் கிளியைப் பிடித்துக் கொஞ்சி விளையாடலாம் என்று எண்ணிப் பனைமரம் ஏறும்போது பறந்தோடிவிட்டது, ஜாதிபேதமென்கிற கூண்டுக்கு; தரித்திரக் கம்பிகள் வேறு; என்ன உலகம் இது?
இப்படி அங்கங்கே வளையவரும் அடுக்குத்தொடர் வசனங்கள்.
காளியைப் பார்த்துக் கோபத்தில் கதாநாயகன் கொக்கரிக்கின்றான்
மாலை! உனக்கு மலர்மாலை! பாதகன் அளித்த பலவகையான பழங்கள்! அக்கிரமக்காரன் அளித்த பரிசு, வகைவகையான படைப்பு, வஞ்சகன் கொடுத்த நெருப்பு, என்னைப் போன்ற ஏழைகள் உன் பக்கத்தில் வருவதைத் தடுக்கும் பரம சத்ருக்கள். இதோ பார்! ஏழை அழுத கண்ணீர்! எளியோர்களின் துயர்! ஏமாந்தவர்களின் ரத்தம்.
பக்தா! நீயா இப்படிப் பேசுகிறாய் என்றா கேட்கிறாய் நீ? கேள், தைரியமிருந்தால்! இருதய சுத்தியுடன் பதில் கூறுகிறேன் கேள்…….
இப்படி உணர்ச்சிக் கொந்தளிக்கும் வசனங்கள். அந்தக் காலகட்டத்தில் நாடகத்திற்காய் எழுதப்பட்ட இந்தக் கதையானது பின்னர் திரைப்படமானதில் வியப்பொன்றுமில்லை.
முதற்பாதி கொஞ்சம் ரொம்பவே நாடகத்தனமாகத்தான் இருக்கிறது (அட, நாடகம்தானே இது?). இரண்டாம் பாதி ஆள்மாறாட்டம், கதாநாயகன் முதலாளியை வறுத்தெடுப்பது என்று சுவாரசியம் நிரம்பிச் செல்கிறது.
முதலாளியின் மகன் மூர்த்தியைக் கதாநாயகன் பரமானந்தன் வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறான்.
(இருவரும் சண்டை போடுகின்றனர். மூர்த்தி பரமானந்தனை உருட்டிவிட்டுப் போய் விடுகிறான்)பரமானந்தன்:
உருட்டிவிட்டானப்பா……..மணி (காமெடி நண்பன்): மீசையில் மண் ஒட்டவில்லையே?இப்படி அங்கங்கே தூவிவிட்ட அந்தக் காலகட்டத்துக் காமெடி வசனங்களும் உண்டு.
கதை எப்படிப் பயணிக்கிறது என்பதை நாம் எளிதாக யூகிக்க முடிந்தாலும் அண்ணாவின் எழுத்துநடையில் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவே இருக்கிறது புத்தகம். இந்தக் காலகட்டத்திற்கு இந்தக் கதை கொஞ்சம் (நிறையவே) வேடிக்கையாகத் தோன்றினாலும் இந்தக் கதையானது தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தது எனலாம்.
1947’ல் எழுதப்பட்ட இந்த நாடகத்தின்பால் பேரார்வம் கொண்ட ஜூபிடர் பிக்சர்ஸார் இந்த நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க விருப்பப்பட்டு அண்ணாவை அணுகினார்களாம். ஒன்றிரண்டு ரவுண்டுகள் விவாதத்திற்குப் பின்னர் திரைப்படத்திற்கு அண்ணாவே சிலப்பல மாற்றங்களை அங்கங்கே வைத்து திரைக்கதை எழுதித் தந்தார். சமுதாய ஏற்றத்தாழ்வு, சாதிமத பேதம் ஆகியவற்றுக்கு எதிராக சாட்டையடி தந்த இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி ஓடியிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் வெற்றியின் வாயிலாக, இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் தந்த ஆதரவின் வழியாக… சினிமாவைத் தங்கள் அரசியல் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும் என்றும் தங்கள் மதிப்பினை உயர்த்திக் கொள்ளும் உபகரணமாக சினிமாவைப் பயன்படுத்தமுடியும் என்றும் அண்ணாவும் அவரது தொண்டர்களும் முழுக்க நம்பினார்கள் என்று குறிப்பிடுகிறார் ராண்டார் கய்
அப்படி நம்பினது நம்பினபடிக்கு நடந்தது. அதன் பிறகு நடந்தவை கடந்தவை எல்லாவற்றையும்தான் இந்த உலகம் அறியுமே!
http://www.omnibusonline.in/2012/11/blog-post_27.html
——————————————————————————————————————–
சமுதாய நோக்கில் அண்ணாவின் “வேலைக்காரி”
முனைவர் க. தனலட்சுமி
தமிழ் விரிவுரையாளர், என்.ஜி.எம். கல்லூரி, பொள்ளாச்சி
அறிஞர் அண்ணா தமிழ் நாடக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். ஆண்டவனையும் அரசனையும் மையமாகக் கொண்டு நடிக்கப்பட்டு வந்த நாடக உலகில் சமுதாயத்திலுள்ள அநீதி, நேர்மையின்மை, கொடுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டி நாடகங்களை உருவாக்கியவர் இவர். அண்ணாவின் கருத்துள்ள வசனங்கள் மக்களின் மனத்தை ஈர்த்தன. அதனால்தான் “தமிழ் நாடகத்துக்கு அண்ணாவின் நாடகங்கள் புதிய வேகத்தையும் துரித எழுச்சியையும் ஊட்டின. தூங்கிக்கிடந்த தமிழுணர்ச்சி துள்ளி எழுந்தது. பதுங்கி இருந்த பகுத்தறிவு பாய்ந்து பெருகியது. அடங்கி இருந்த அகத்துணர்வு ஆறாகப் பாய்ந்தது” என்று கூறுகிறார் முனைவர் ஏ.என்.பெருமாள், அப்படிப் பகுத்தறிவூட்டிய நாடகங்களுள் ‘வேலைக்காரி’ குறிப்பிடத்தக்கது. அது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அண்ணாவின் “வேலைக்காரி”
கருத்துக்களைப் பரப்பும் கலைக்கருவிகளுள் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. அவற்றுள் அண்ணா எழுதிய “வேலைக்காரி” சிறப்பிடம் பெறுகின்றது. வீட்டுக்கு வரும் வேலைக்காரியை உணர்வுள்ள ஒரு ஜீவனாகப் பலரும் நினைப்பதே இல்லை. வீட்டைப் பெருக்கும் துடைப்பத்தைப் போல் வேலைக்காரியை நினைத்து வந்த காலத்தில் வேலைக்காரிக்கு மதிப்பைத் தேடித் தந்ததோடு அந்த இனத்திற்கே உயர்வையும் அண்ணா தேடித் தந்தார். வேலைக்காரிக்கு நடக்கும் சமுதாயக் கொடுமைகளைக் கூறவந்த அண்ணா அவற்றோடு ஏழையின் கண்ணீர், ஜாதி வேறுபாடு, போலி வழிபாடு, பணக்காரரின் ஆதிக்கம் ஆகியவற்றையும் குறிப்பிடுகின்றார். பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்திற்குச் சரியான அடியாக இந்நாடகம் விளங்குகின்றது.
நாடகக் கதாபாத்திரங்கள்
பணமே பிரதானம் என நினைக்கும் வேதாசல முதலியார், பணத்திமிரு படைத்த அவரின் மகள் சரசா, வேலைக்காரி மீது இரக்க குணமுள்ள அவரின் மகன் மூர்த்தி, வீட்டு வேலைக்காரி அமிர்தம், அவ்வூரில் வாழும் சுந்தரம் பிள்ளை, அவரின் மகன் ஆனந்தன், ஆனந்தனின் நண்பன் மணி ஆகியோர் இந்நாடகத்தின் முக்கியக் கதாபாத்திரங்களாகும்.
வேலைக்காரிக்கு சரசா செய்யும் கொடுமைகள் வேலைக்காரியைச் சக மனிஷியாக நினைக்காமல் அடிமையாக நினைக்கும் சமுதாயத்தை அறிஞர் அண்ணா சுட்டிக்காட்டுகிறார். வேலைக்காரி என்பவள் பிறருக்கு அடங்கியே நடக்க வேண்டும் என்ற பணக்காரர்களின் எண்ணத்தை “ஒரு வேலைக்காரிக்கு வேண்டிய அடக்கம், ஒடுக்கம் மட்டுமரியாதை ஒன்றுமே உன்கிட்டே கிடையாது” என்று சரசாவின் கூற்று வழி விளக்குகிறார். ஒடுக்குதல் என்பதற்குக் கதிரைவேற்பிள்ளை அகராதி “அடக்குதல், சுருங்கப் பண்ணுதல், வருத்தப்படுத்துதல், கீழ்ப்படியச் செய்தல்” போன்ற பொருள்களைத் தருகின்றது, வேலைக்காரியின் மனம் வருந்தும்படி கீழ்ப்படியச் செய்யும் கொடுமையினை இதனால் அறியலாம். சரசாவின் சேலையினை மடிக்கும் பொழுது ஆசையின் உந்துதலால் அமிர்தா தன் மீது போட்டுப் பார்க்கின்றாள். இதனைக் கண்ட சரசா, “அம்மாளுக்குப் பேஷனில்லே கேட்குது. ஏண்டி! உன் உடம்பில் இருக்கிற அழுக்குப்பட்டால் என்னத்துக்கடி ஆகும் சேலை” என்று வெடிக்கிறாள். சேலைக்குக் கொடுக்கும் மதிப்பைக் கூட சக மனுஷியாய்த் தனக்காக உழைக்கும் அமிர்தத்திற்குக் கொடுக்கவில்லை என்பதனை அறிஞர் அண்ணா கருத்துள்ள வசனங்களால் வெளிப்படுத்துகின்றார். தன் கணவன் பரந்தாமனிடம் வேலைக்காரியின் பெயரை அமிர்தம் என்று கூறாமல் ‘குப்பி’ என்று கூறுவது வேலைக்காரர்கள் என்றுமே தனக்குக் கீழேயே இருக்க வேண்டும் என்ற பணக்காரர்களின் எண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றது.
வேலைக்காரிக்கு உரிமை மறுக்கப்படுதல்
பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் ஏழைகளுக்கு ஒரு நீதியும் சமுதாயத்தில் உள்ளது. தன்னுடைய பெண்ணைப் பணக்காரனான பரந்தாமனுக்குக் கட்டிக் கொடுக்க நினைக்கும் வேதாசல முதலியார் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி அமிர்தம் வயதான மாப்பிள்ளையைக் கட்ட மறுக்கும் பொழுது, “இந்தா அமிர்தம்! கல்யாணங் காட்சியை முடித்து வைப்பது பெரியவங்க காரியம். வயசாயிடுத்து அது இது என்று என்னென்னவோ சொல்றியாமே” என்று அதட்டுகின்றார். ஏழைகளுக்குத் தன் திருமணத்தைத் தானே முடிவு செய்யும் உரிமை இருக்கின்றது என்று நினைத்துப் பார்க்காத பணக்கார வர்க்கத்தை அறிஞர் அண்ணா படம் பிடித்துக் காட்டுவதை உணர முடிகின்றது.
பணக்காரரின் ஆதிக்கம்
கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத பொழுது சுந்தரம் பிள்ளையைச் சிறைச்சாலையில் அடைப்பதாக வேதாசல முதலியார் கூறுகிறார். சுந்தரம் பிள்ளையை “இந்த நாயைத் தெருவழியாக இழுத்துக் கொண்டு போகச் சொல்லு ஜெயிலுக்கு” என்று ஆணையிடு
கிறார். பணமில்லாத மனிதனை ‘நாய்’ என்று கூறுவது வேதனைக்குரியது.
ஆறறிவு உடையவர்களெல்லாம் மனிதர்கள் ஆகிவிட முடியாது. ÔÔஆறறிவுடன் மன இரக்கத்தையும் பெற்றிருக்க வேண்டும். இதனை, ஆறறிவதுவே அவற்றோடு மனனே” என்று தொல்காப்பியம் மனித உயிர்களைக் குறிப்பிடுவதன் மூலமும் அறியலாம். கடனைத் திருப்பிக் கொடுக்கப் பணமில்லாத பொழுது ஆனந்தனுக்குக் கடன் கொடுத்தவர் “உங்க அப்பன மாதிரி தூக்குப் போட்டு சாகிறதுதானேடா…” என்று கூறுகிறார். பிற மனிதர்கள் இறந்தாலும் பரவாயில்லை. தனக்குப் பணம் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கின்ற பணக்காரர்களின் தன்மையை அறிஞர் அண்ணா இயம்புகின்றார்.
பணக்காரர்களின் நிலையினை, “அது பணக்கார உலகம்; முட்டாள் புத்திசாலியாகப் போற்றப்படுவான்; வீரன் கோழைப் பட்டம் பெறுவான்” என்ற பரமானந்தனின் கூற்றுவழியும் குறிப்பிடுகின்றார்.
ஏழைப் பெண்ணின் கற்பு
வேதாசலம், தன் மகன் மூர்த்தி வேலைக்காரியான அமிர்தத்தோடு நெருக்கமாகப் பூந்தோட்டத்தில் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டதும், “அந்தப் பொண்ணை டச்சி கிச்சி பண்ணியிருந்தா சொல்லுடா இப்பவே காசுபணம் கொடுத்துக் கழுதைங்களை ஊரைவிட்டு ஓட்டிவிடலாம்” என்று கூறுகிறார். ஏழைப் பெண்ணின் கற்பிற்குப் பணத்தை ஈடாகக் கொடுத்துச் சரியாக்கிவிட முடியும் என்ற பணக்காரர்களின் ஆதிக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் அறிஞர் அண்ணா.
உழைப்பின் உயர்வு
பணக்காரர்கள் பணம்தான் உயர்வைத் தரும் என்று நினைக்கின்றனர். ஆனால் உழைப்பே செல்வம் என்பதனை,
“ஏன் உழைப்பே செல்வம் உன் முகமே
இன்ப ஒளி”
என்ற மூர்த்தியின் கூற்று வழி அறிஞர் அண்ணா விளக்குகின்றார். வேலைக்காரி எந்த வகையிலும் இழிந்தவள் அல்ல என்பதனை,
“பூ விற்றால் பூக்காரி. பிச்சை எடுத்தால் பிச்சைக்காரி. சிங்காரித்துக் கொண்டால் சிங்காரி நீ வேலை செய்கிறாய் அதனால் வேலைக்காரி” என்ற பரமானந்தன் கூற்றுவழி எடுத்துரைக்கின்றார்.
ஏழையின் சொத்து உண்மையான சொத்து பணமல்ல உறவுகளே ஆகும். பணக்காரர்கள் தன் உறவுகளைக் காட்டிலும் பணத்தையே சிறந்த சொத்தாகக் கருதுவர். ஆனால் ஏழைகள் உறவைச் சொத்தாக நினைப்பதை,
“எனக்கிருந்த ஒரே ஆஸ்தி அப்பா”
என்ற ஆனந்தனின் கூற்று வழி அறியலாம்.
வழிபாட்டு எதிர்ப்பு
அறிஞர் அண்ணா காளி வழிபாட்டு எதிர்ப்பைப் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். காளியை வழிபடுபவனைப் பைத்தியக்காரன் என்றே கூறுகின்றார்.
“பைத்தியக்காரன். உழைக்கின்றான் மாடு போல; சம்பாதிக்கிற காசையெல்லாம் கர்ப்பூரமாக வாங்கிக் கொளுத்துகிறான்” என்று சிகரெட் பிடித்துக் கொண்டே தூப தீப நைவேத்திய சமர்ப்பியாமி என்று மணி, ஆனந்தனை ஏளனம் செய்கின்றான்.
வேதாசலத்தின் கொடுமைகண்டு கொதிக்கும் ஆனந்தன் காளி தேவியிடம். “நீ என்ன செய்வாய்! நான் தான் பித்தன். உன்னையே நம்பிக்கிடந்தேன். அது என் பைத்தியக்காரத்தனம். நயவஞ்சகத்தால் வேதாசல முதலி கொழுத்தால் அது உன் அருளால் வந்தது என்று எண்ணினேன். அதுவும் என் பைத்தியக்காரத்தனம். எனக்கு இருந்த போதை தெளிந்தது” என்று கூறுகிறான். கடவுளை நம்புவது பைத்தியக்காரத்தனம் என்று கூறுவதை இங்கு உணரலாம்.
போலி வழிபாடும் சாமியாரும்
பகலில் சாமியாராகவும் இரவில் காம இச்சை கொண்ட யோகியாகவும் இருக்கும் போலிச் சாமியார்கள் பற்றி 1947க்கு முன்பே அறிஞர் அண்ணா இந்நாடகம் வழி விளக்குகின்றார். காம இச்சைக் கொண்ட ஹரிஹரதாஸைக் கண்ட மூர்த்தி,
‘ஹா கபட வேஷதாரியே! காமுகா… பகலிலே யோகியாகவும் பாதி ராத்திரியிலே போகியாகவும் காட்சியளிக்கும் பேடிப்பயலே ஆசிரமமா ‘இது” என்று கொதிக்கிறான். மேலும்.
“பஞ்சமா பாதகத்தைப் பயமின்றிச் செய்யத்தான் இந்தப் பண்டார வேஷமா? பாவி! பகல் வேஷக்காரா! பாமரரை ஏய்த்துப் பிழைக்கும் பரம சண்டாளா நீ இருந்தால் என்ன? இறந்தால் என்ன? என்று கூறிய மூர்த்தி ஹரிஹரதாஸைக் கொன்றே விடுகின்றான். ஏழையை ஏய்க்கும் போலி ஆன்மீகவாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அண்ணாவின் சிந்தனையை இங்கு அறியலாம்.
ஜாதி ஒழிப்பு வேற்று ஜாதிப் பெண்ணான அமிர்தத்தை மூர்த்திக்குத் திருமணம் செய்து வைப்பதன் மூலம் ஜாதி ஒழிப்பையும் அண்ணா கூறியுள்ளதை அறியமுடிகின்றது. அமிர்தத்தை,
“காதலால் ஜாதியை வென்ற உத்தமி” என்று வேதாசலமே கூறுவது நாடகத்தின் கருப்பொருளை விளக்குகின்றது.
பணத்திமிரும், ஜாதித் திமிரும் இந்தச் சமுதாயத்தை ஆட்டிவைக்கும் கோரப்பிசாசுகள். அவற்றை ஒழிக்கவே இந்த நாடகம் என்ற அறிஞர் அண்ணாவின் எண்ணம் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று முடிவதால் அறிய முடிகின்றது. அறிவைக் காட்டிலும் பகுத்து அறியும் அறிவே சிறந்தது. அப்படிப்பட்ட பகுத்தறிவுவாதியான அண்ணாவைப் போற்றுவோம்!
http://www.arignaranna.net/annavin_vaelaikari.htm
——————————————————————————————————-
Description
அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி நாடகம் ரசிக்கக்கூடியது. நில்லுங்கள் யாரும் எங்கேயும் போக வேண்டாம்.இனி உங்களுக்கு வேறு உலகம். எனக்கு வேறு உலகமில்லை. ஆனந்தா,வா, சரசா, இந்தப் பாதகனை நல்வழிப் படுத்திய உன் புருஷன் ஆனந்தனோடு வாழ்ந்திடு,அமிர்தம், பலே ? நீ பெரிய யோகக்காரிதான் ? காதலால் ஜாதியை வென்ற உத்தமி, உன் புருஷன் மூர்த்தியோடு சுகமாக வாழ்ந்திரு பாலு முதலியாரே வாரும் புறப்படுவோம். பணத்திமிரும் ஜாதித் திமிரும் ஓழிய வேண்டும் என்றும் ஓன்றே குலம் ‘ ஒருவனே தேவன் ‘ என்றும் நாட்டு மக்களுக்கு உரைப்போம்.
————————————————————————————————————–
அண்ணாவின் புரட்சிப் படைப்பு – “வேலைக்காரி” …!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…
Posted on மே 3, 2020 by vimarisanam – kavirimainthan
…பேசும் படம் துவங்கிய காலகட்டத்திலிருந்து, தமிழ்த்
திரைப்படங்கள் பெரும்பாலும், இதிகாச, புராணக்கதைகளைஅடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டன.
இடையிடையே சில சரித்திர திரைப்படங்களும்,
அபூர்வமாக சில சமூகப் படங்களும் உருவாயின.——————–அறிஞர் அண்ணா….என்கிற சி.என்.அண்ணாதுரை….!!! ( பகுதி -13 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… – பார்க்க–——————-ஆனால், இவையெல்லாமே அடிப்படையில் –கதையை விட,
வசனத்தை விட,
பாடல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தன.கதாநாயகர்களுக்கு –
நடிக்கத் தெரிகிறதோ இல்லையோ,
முக லட்சணம் இருக்கிறதோ இல்லையோ,
ஏற்ற இறக்கங்களுடன், வசனம் பேச வருகிறதோ இல்லையோ –
நன்றாகப் பாடத் தெரிந்திருப்பது மட்டுமே
போதுமானதாக இருந்தது.இரண்டரை – 3 மணி நேர படங்களில் –
45 பாடல்கள், 50 பாடல்கள் என்று பெரும்பகுதியை பாடல்களே
ஆக்கிரமித்துக் கொண்டன. 53 இனிமையான பாடல்களைக்
கொண்ட படம் என்று ஒரு விளம்பரத்தைக் கூட பார்த்த
ஞாபகம் எனக்கு இருக்கிறது.இந்த நிலையை உடைத்தெறிந்து, தமிழ் சினிமாவின்
அடித்தளத்தையே அடியோடு மாற்றியது 1949-ல் வெளிவந்த
அண்ணாவின் “வேலைக்காரி” திரைப்படம்.“நல்லதம்பி” என்கிற மகத்தான தோல்விப்படத்தைத் தொடர்ந்து
வெளிவந்த மிகப்பெரிய வெற்றிப்படம் வேலைக்காரி…கதைக்கும், வசனத்திற்கும் முக்கியத்துவத்தை ஏற்படுத்திய
முதல் தமிழ் திரைப்படம் வேலைக்காரி.வேலைக்காரி-யை அண்ணா முதலில் நாடக வடிவில் தான் எழுதினார்… மேடை நாடக / திரைப்பட நடிகரான “நடிப்பிசைப் புலவர்” என்று திமுகவினரால் பட்டம் சூட்டப்பட்டகே.ஆர்.ராமசாமி “கிருஷ்ணன் நாடக சபா” என்கிற பெயரில்
ஒரு நாடக கம்பெனியையும் நடத்தி வந்தார்.முதலில், கே.ஆர்.ராமசாமி நாடகமாகப் போடுவதற்காகத்தான் வேலைக்காரி கதையை அண்ணா எழுதினார். அது நாடகமாக அரங்கேறி, மகத்தான வெற்றியையும் பெற்றது. அந்த நாடகம் பெற்ற புகழைப் பார்த்த, ஜூபிடர் பிக்சர்ஸ் முதலாளி சோமசுந்தரம், அதே கே.ஆர்.ராமசாமியையே கதாநாயகனாக
வைத்து, அதை திரைப்படமாக தயாரிக்க முன்வந்தார். ஒரு தனியறையில் உட்கார்ந்துகொண்டு, மூன்றே நாட்களில்,
வேலைக்காரிக்கான திரைப்பட, வசன வடிவை உருவாக்கித்
தந்தார் அண்ணா. ASA சாமி இயக்க, C.R.சுப்பராமன், S.M.சுப்பையா நாயுடு ஆகியோர் இசையமைத்தனர்.வேலைக்காரியில் அப்படி என்ன புதுமை…?அந்தக்கால வெற்றிகரமான ஆங்கிலப்படங்கள் சிலவற்றிலிருந்து (The Count of Monte Cristo, The Life of Emile Zola போன்றவை…) படத்திற்கான மையக்கருத்து எடுக்கப்பட்டு அதை அப்போதைய தமிழக சமூகச் சூழலுக்கேற்ப மாற்றி திரைக்கதை
உருவாக்கப்பட்டது.அந்தக்கால சமூக அவலங்களைச் சாடும் விதமாக,
பணக்காரர், ஏழை, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி மனிதர்கள்
என்று பிரிக்கப்பட்ட சமூகத்தைச் சாடும் சூடான வசனங்களைக்
கொண்டு உருவாக்கப்பட்டது இந்தப்படம்.படம் வெற்றி பெற – படத்தின் நாயகனாக நடிக்கும் கே.ஆர்.ராமசாமி, ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து, காளி கோவிலில் விக்கிரகங்களை அவமதிக்கும் விதத்தில்
செயல்படுவதும், பூஜை உபகரணங்களை தூக்கி எறிவதும்,
காளியை அவதூறான வார்த்தைகளால் ஏசுவதும் ஒரு
முக்கியமான காரணம். இந்தப்படம் வெளியானதும்,
இந்த காட்சிகளை எதிர்த்து, சில மத அமைப்புகள் படத்திற்கு தடை
விதிக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தின….
இவை படத்திற்கான கூடுதல் விளம்பரமானது.இந்தப்படத்திற்கு கூடுதல் விளம்பரமாக, கல்கி வார இதழின்
ஆசிரியர் ரா.கிருஷ்ணமூர்த்தியின் விமரிசனம் அமைந்தது.
“வேலைக்காரி” ஒரு மிகசிறந்த சமூக சீர்திருத்தப்படம் என்று
வரவேற்ற கல்கி, அண்ணாவை, அறிஞர் அண்ணா என்று
அழைத்து, பிற்காலத்தில் அண்ணா இதே முறையில் தொடர்ந்து
அனைவராலும் அழைக்கப்பட வழி வகுத்தார். வேலைக்காரியில் அண்ணா எழுதிய சில வசனங்கள்-வார்த்தைகள் மிகவும் புகழ் பெற்றன.” சட்டம் ஒரு இருட்டறை – அதில் வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு…
ஆனால், அது ஏழைக்கு கிட்டாத விளக்கு…” கத்தியை தீட்டாதே – புத்தியை தீட்டு…” ஒன்றே குலம்; ஒருவனே தேவன்…”– போன்றவை அவற்றில் சில. பிற்காலத்தில், கருணாநிதி உட்பட பலர் இதேபோல், கூர்மையான
சொற்களைக் கொண்டு, திரைப்பட வசனங்களை எழுத, இதுவே
முன்னோடி ஆனது.இந்தப்படத்தின் பாடல்கள் அந்தக்காலத்தில் பாராட்டப்பட்டன.
இன்றைய காலகட்டத்தில் இவற்றை ரசிப்பது கடினம்.
இருந்தாலும், மாதிரிக்கு சிலவற்றை கீழே தந்திருக்கிறேன்.————————————-
அந்தக் காலத்தில் -1949 – ஒரு திருப்புமுனையாக
அமைந்த படம் என்பதையும், இன்றைய சூழ்நிலையில் இதை ரசிப்பது கடினம் என்பதையும் மனதில் கொண்டு –
“வேலைக்காரி” திரைப்படத்தை பார்க்க விரும்புவோர்க்கு –
திரையும் தேர்தலும் 3 – அண்ணா எழுத்தில் ‘வேலைக்காரி’… புதுப்பாதை தொடங்கிய புள்ளி!
சினிமா,சிறப்புக் களம்
ptfree Published :28,Jan 2021 07:16 PM
ஜஸ்டிஸ் கட்சியில் 1944-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் கருத்து வேறுபாடுகளின் காரணமாக திராவிடர் கழகம் உதயமானது. அது உருவானதன் ஆரம்பப் புள்ளி பெரியாராக இருந்தாலும், உருவாக மிக முக்கிய காரணமாக அண்ணா திகழ்ந்தார். இதற்கிடையில் 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு “இந்த சுதந்திர நாளை நாம் துக்க தினமாக அனுசரிக்க வேண்டும்” என்று பெரியார் கருத்து தெரிவித்தார். ஆனால், அண்ணாவோ நாடு சுதந்திரம் பெற்றதைக் கொண்டாடினார். இதன் காரணமாக திராவிடர் கழகத்திற்குள் மனவருத்தங்கள் ஏற்பட்டன. அதே வருடத்தில் நடைபெற்ற திராவிட நாடு பிரிவினை மாநில மாநாட்டில் அண்ணா கலந்துகொள்ளவில்லை.
Advertisement
என்னதான் ‘ராஜகுமாரி’ படத்தில் வசனம் எழுதினாலும்கூட மு.கருணாநிதி பெயர் டைட்டிலில் இடம்பெறவில்லை. அடுத்ததாக ஜூபிடர் எடுத்த ‘அபிமன்யூ’ படத்திலும் இதே நிலைதான். ஏன் என் பெயர் போடவில்லை என்று காரணம் கேட்டபொழுது, “முதலில் உன் பெயர் பிரபலமாகட்டும். அதுவரை பொறு” என்கிற பதிலே ஜூபிடர் சோமுவிடமிருந்து கிடைத்தது.
ஆனால், கருணாநிதி 1942-லேயே திருக்குவளையில் ‘முரசொலி’ என்றொரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினார். உலகப் போரினால் காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இடையில் சிறிது காலம் ‘முரசொலி’ நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின் 1948-ல் இது வார இதழாக மாறியது. கருணாநிதியின் அரசியல் பிரவேசம் அவரது திரைப்பிரவேசத்திற்கு முன்பே நிகழ்ந்ததை நாம் இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.
Advertisement
திராவிடர் கழகத்தின் கடவுள் மறுப்பு கொள்கைகளும், மூடநம்பிக்கை ஒழிப்பு பிரசாரங்களும் திரையுலகில் பெரும் அலையை உண்டாக்கிக் கொண்டிருந்ததை பல உதாரணங்கள் மூலம் உணரலாம்.
“உற்சாகம் மிகுந்த கதையும், ஹாஸ்யம் ததும்பும் சம்பவங்களும், மாயக்குதிரையின் அற்புதச் செயல்களும் உங்களைக் குதூகலிக்கச் செய்யும்” என்கிற விளம்பர வாசகங்களுடன் ஜூபிடரின் ‘மோஹினி’ திரைப்படம் வெளிவந்தது. ஆனால், ‘மாயக்குதிரை’ என்பது மூடநம்பிக்கையை விதைப்பதாக இருக்கும் என்றெண்ணிய ஜூபிடர் நிறுவனத்தார், பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு ஏற்றதாக இருக்கும் வகையில், மரத்தால் செய்து, எந்திரங்களைப் புகுத்தி உருவாக்கிய குதிரையாகச் செய்து, கேமரா நுணுக்கத்தால் பறக்கவிட்டு வித்தை காட்டியிருந்தனர். அதை விளம்பரமும் செய்தனர்.
Advertisement
இப்படி வேறொரு தளம் நோக்கி தமிழ் சினிமா நகர்ந்து கொண்டிருக்கையில், 1948-ல் புதிய சென்சார் கொள்கைகள் வெளியிடப்பட்டன. அதன் சாராம்சங்கள் எல்லாம் என்னவென்று படித்தால், தலைசுற்றி மயக்கம் வந்துவிடும். உதாரணத்திற்கு ஒன்றிரெண்டு கூறுகிறேன் கேளுங்கள்.
1. சட்டம், நீதி இவற்றுக்கு எதிரான பிரசாரத்தையோ, மற்றவர்கள் கற்றுக்கொள்ளக் கூடியபடி சட்டம், நீதி இவற்றை மீறி நடப்பதையோ காட்டக்கூடாது.
2. பிறர் கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கொலை செய்யும் காட்சிகளை விஸ்தாரமாக காட்டக்கூடாது. பழிவாங்குதல் நியாயமானதாய் கருதப்படமாட்டாது.
3. பிக் பாக்கெட், இதர வகையான திருட்டு, கொள்ளையடிப்பது, பணப்பெட்டிகளை உடைப்பது, ரயில், பாலம், சுரங்கம், கட்டிடம் இவற்றிற்கு வெடிவைத்து தகர்ப்பது, தீ வைப்பது ஆகியவை எப்படிச் செய்யப்படுகிறது என்று திரையில் காட்டக்கூடாது.
4. சாராயம் முதலான மதுபானங்களைக் கள்ளத்தனமாக தயாரிப்பதைப் பற்றி பேசவே கூடாது.
5. மது அருந்தும் காட்சிகளுக்கு முற்றிலும் தடை. இதற்கு முன் சென்சார் செய்யப்பட படங்களிலிருந்தும் மது அருந்தும் காட்சிகள் நீக்கப்படவேண்டும். ஆனால், மதுவிலக்குப் பிரசாரப் படங்களில் மதுவின் தீமைகளை விளக்குவதற்காக காட்டப்படும் மதுபான காட்சிகளுக்கு அனுமதி உண்டு.
மேற்கண்டவை கூட கொஞ்சம் தடுமாறி ஏற்றுக்கொள்ளலாம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். கீழுள்ள விஷயங்களை கவனியுங்கள்.
1. திருமணம், குடும்பம் போன்றவை புனிதமாக கருதப்படும். கீழ்த்தரமான கள்ள நட்பு அனுமதிக்கப்படுவதாகவோ அல்லது அப்படி தொடர்புகள் வழக்கத்தில் இருப்பதாகவோ திரையில் சித்தரிக்கக் கூடாது.
2. கல்வி போதனைப் படங்களைத் தவிர மற்ற படங்களில் சிற்றின்பம், உடல்நலம், கர்ப்பத்தடை மற்றும் காம வியாதிகள் இவற்றைக் காட்டக் கூடாது.
3. எந்த ஒரு மதத்தையும் பழிப்பதான படமோ கட்சியோ அனுமதிக்கப்பட மாட்டாது. மதகுருக்களை நகைச்சுவை பாத்திரங்களாகவோ, வில்லன்களாகவோ அல்லது பரிகாசத்துக்குரிய வகையிலோ கட்டடவே கூடாது. எந்த மதத்தையாவது அல்லது புராணத்தையாவது பரிகசிப்பதாகவோ; பழிப்பதாகவோ; அவமதிப்பதாகவோ; பொதுமக்கள் அதன்மீது கொண்டுள்ள பக்தியையும், மதிப்பையும் குறைப்பதாகவோ உள்ள காட்சிகள், கதைகள், நடிப்பு இவை எதுவும் அனுமதிக்கப்படாது.
இவையெல்லாம் அந்த புதுக்கொள்கைகளின் ஒரு பகுதிதான். இப்படி மொத்த படைப்புச் சுதந்திரத்தின் கழுத்தையும் நெறிக்கும் வண்ணம் சென்சார் போர்டு நடந்துகொள்ள தொடங்கியது. எங்கெல்லாம் இப்படி அதிகார வர்க்கம் தனது கோர கைகளை நீட்டுகிறதோ அங்கிருந்தெல்லாம் புதுப் புரட்சி வெடிக்கும் என்பதே வரலாறு. அதேதான் இங்கும் நடந்தது. சென்சார் விதிமுறைகளுக்கு எதிராக வலுவான குரல்கள் எழுந்தன. இதனால், பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.
இந்த நேரத்தில்தான் 1948-ல் ஈரோடு நகரில் நடைபெற்ற திராவிடர் கழக தனி மாநில மாநாட்டில் மீண்டும் அண்ணா பங்கேற்றார். ஈரோடு நகரம் அதுவரை காணாத மக்கள் கூட்டத்தை கண்டது. “காங்கிரஸ் கட்சியை அடுத்த தேர்தலில் முறியடிப்போம்” என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியாரின் சொற்பொழிவோடு மாநாடு நிறைவடைந்தது.
1949-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அண்ணா கதை, வசனம் எழுதிய ‘நல்லதம்பி’ படம் வெளியானது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாயகன். அண்ணாவின் கதை, வசனமாகவே இருந்தாலும் கூட படம் என்னவோ கலைவாணரின் படமாகவே அறியப்பட்டது. அந்தளவிற்கு கலைவாணர் தனது சேஷ்டைகளால் திரையை நிறைத்தார். அடுத்ததாக 1949-ல் வந்தது ‘வேலைக்காரி’. அறிஞர் அண்ணாவின் முத்திரையை அழுத்தமாக பதித்தது மட்டுமின்றி, மேற்கண்ட சென்சார் போர்டின் அத்தனை விதிகளையும் தூள் தூளாக உடைத்த படமென்றும் இதைக் கூறலாம். படத்தின் வசனங்களில் தீப்பொறி பறந்தது.
“ஆஸ்ரமத்தைக் கண்டோம். கடவுள் அருளுக்கு வழிகாட்டப்படும் இடம் என்று பாமரர் நம்பும் அந்த இடம் காம வேள் நடன சாலையாக இருக்கக் கண்டோம். இளித்த வாயர்களுக்கு பகலிலே உபதேசம்! இன்பவல்லிகளுக்கு இரவிலே சரஸமாம். குருடனுக்கு கோல் தேவையாக இருப்பதுபோல ஊரை ஏமாற்ற குடிகெடுப்பவனுக்கு வேஷம் தேவைப்படுகிறது. வேஷமணியாத வேதாந்தி! மோசடி செய்யாத மாது! ஜோடி இல்லாத மாடப்புறா! சேடி இல்லாத ராஜகுமாரி இருக்கமுடியதாம். ஹரிஹரதாஸ் இத்தகையதோர் வேஷதாரி” என அனல் பறக்கும் வசனங்களை அள்ளித் தெளிந்திருந்தார் படம் முழுக்க.
இவ்வாறாக திராவிடக் கட்சியின் கடவுள் மறுப்பு கொள்கைகளின் நேரடி கருத்துக்கள் எல்லாம் வெள்ளித்திரையில் மக்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையில் முழங்கப்பட்டது. வெறும் சி.என்.அண்ணாதுரை, அறிஞர் அண்ணாவாக மாறியதே ‘வேலைக்காரி’ நாடகம் மூலமாகத்தான். நாடகம் பார்த்து ரசித்த ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, அண்ணாவுக்கு கொடுத்த பட்டமே ‘அறிஞர்’ என்பதாகும்.
1946-ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தபொழுது இந்தி கட்டாயப் பாடம் என்று ராஜாஜியால் அறிவிக்கப்பட்டு, அதை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றன. தமிழத்தில் உணவு நிலை பாதிக்கப்பட்டிருந்தது. ஆறு அவுன்ஸ் அரிசிக்காக மக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நிற்கவேண்டிய சூழ்நிலை. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. மொத்தத்தில் சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு ஒரு வெறுப்புணர்வு வளர்ந்துகொண்டே இருந்தது. காங்கிரஸ்காரர்களைக் கண்டாலே “அதோ பார் ஆரவுண்ஸ் கதர்ச்சட்டை” என்று பலரும் ஏளனம் செய்தார்கள்.
திரைக் கலைஞர்களுக்கும், காங்கிரஸுக்கும் பாலமாக விளங்கிவந்த சத்தியமூர்த்தி காலமான பிறகு அவரது பணியை மேற்கொள்ள, அவரது வெற்றிடத்தை நிரப்ப காங்கிரஸில் தலைவர்கள் இல்லாமலிருந்தார்கள். இதனால், 1943-க்கு பிறகு திரைப்படங்களில் தேசிய பிரசாரம் என்பது பெருமளவு குறைந்துவிட்டது. கே.சுப்பிரமணியம் போன்ற காங்கிரஸ் அபிமான திரைப்பட தயாரிப்பாளர்கள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக காங்கிரஸ் ஆதரவு படங்களை எடுத்துவந்தனர்.
இந்த வாய்ப்பைத்தான் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலமாக பற்றிக்கொண்டனர். என்னதான் கருணாநிதியின் ‘ராஜகுமாரி’யும், அண்ணாவின் ‘நல்லதம்பி’யும் திராவிட ஆதரவு கொண்ட வசனங்களை கொண்டிராவிட்டாலும் கூட, அந்த வசனங்களை எழுதியது திராவிட கட்சியை சேர்ந்தவர்கள்தான் என்று மக்கள் அறிந்தே இருந்தனர். அறிஞர் அண்ணாவின் ‘வேலைக்காரி’ முதன்முறையாக பகுத்தறிவுப் பிரசாரத்தை சுதந்திரத்திற்குப் பின் திரைப்படம் வாயிலாக பரப்பியது. பணக்கார எதிர்ப்பும், ஏழைகள் மீது இரக்கமும் திராவிடர் கழகத்தின் கொள்கைகள் என ‘வேலைக்காரி’ திரைப்படம் பிரகடனப்படுத்தியது. அந்தப் புள்ளியில் இருந்துதான் தமிழக அரசியல் மற்றும் சினிமா புதுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
(திரை இன்னும் விரியும்…)
– பால கணேசன்
முந்தைய அத்தியாயம்: திரையும் தேர்தலும் 2 – ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
Leave a Reply
You must be logged in to post a comment.