சர்ச்சைகளின் ‘நாயகன்’ ஜெயேந்திர சரஸ்வதி

சர்ச்சைகளின் ‘நாயகன்’ ஜெயேந்திர சரஸ்வதி

1 மார்ச் 2018

ஜெயேந்திர சரஸ்வதி: சர்ச்சைகளின் நாயகன்

காஞ்சி ‘சங்கரமடத்தின்’ 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் அரசியல் செல்வாக்கோடு விளங்கியவர் இவர்.

அதே நேரம் கொலை வழக்கில் கைது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கியவர்.

ஜெயேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் (பூர்வாசிரமப் பெயர்) சுப்ரமணியன். இவரது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர்.

ஆறு ஆண்டுகள் சங்கரமடத்தின் வேதபாட சாலையில் பயின்ற சுப்ரமணியன், 1954ல் ஜெயேந்திர சரஸ்வதி எனப் பெயர் மாற்றம் பெற்று சங்கர மடத்தின் பீடாதிபதியானார்.

சர்ச்சைகளின் 'நாயகன்' ஜெயேந்திர சரஸ்வதி

தொடக்க காலத்தில், பெரிதாக செய்திகளில் அடிபடாத ஜெயேந்திர சரஸ்வதி, 80களிலிருந்தே மடத்தின் சமயச் செயல்பாடுகளுக்கு மாறான செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டவர்.

குறிப்பாக தமக்கு முந்தைய மடாதிபதியான சந்திரசேகர சரஸ்வதி இருக்கும்போதே, தமக்கு இளைய பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதியை இவர் நியமித்தார்.

ஜெயேந்திர சரஸ்வதி சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சர்ச்சை 1987ல் வெடித்தது.

அந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி யாரிடமும் சொல்லாமல், மடத்தைவிட்டு வெளியேறினார் ஜெயேந்திரர்.

சங்கராச்சாரியார்

சங்கராச்சாரியாராக இருப்பவர்கள் எப்போதும் தன் தண்டத்தை (சங்கராச்சாரியார் கையில் வைத்துள்ள ஒரு புனிதக் கழி) பிரியக் கூடாது என்பது மரபு.

ஆனால், ஜெயேந்திரர் மடத்தைவிட்டு வெளியேறியபோது, தன் தண்டத்தையும் கமண்டலத்தையும் விட்டுவிட்டே வெளியேறினார்.

சாதுர்மாஸ்ய பூஜை காலத்தில் பீடாதிபதிகள் வெளியேறக்கூடாது என்ற விரதத்தையும் மீறி அவர் வெளியேறியது மடத்தின் பக்தர்களுக்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து மூத்த சங்கராச்சாரியாரான சந்திரசேகர சரஸ்வதி, மடத்தின் பூஜைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக புதிய மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதியை நியமித்தார் (அதற்கு முன்பே, விஜயேந்திர சரஸ்வதி ஜெயேந்திர சரஸ்வதிக்கு அடுத்த நிலையில் இருந்துவந்தார்.).

மூன்று நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கர்நாடக மாநிலத்தின் தலைக்காவிரியில் ஜெயேந்திர சரஸ்வதி கண்டுபிடிக்கப்பட்டார்.

தண்டத்தைவிட்டு வெளியேறியது குறித்து அந்தத் தருணத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, தண்டத்தின் சக்தியை தன் உடலில் ஏற்றிக்கொண்டதாக பதிலளித்தார் ஜெயேந்திரர். விஜெயேந்திரர் பொறுப்பேற்றுக்கொண்டதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு செப்டம்பர் 17ஆம் தேதியன்று காஞ்சி மடத்திற்குத் திரும்பிய ஜெயேந்திரர், மீண்டும் மடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கு அடுத்த இரு வாரங்களிலேயே, அதாவது அக்டோபர் 2ஆம் தேதியே ஜன கல்யாண், ஜன ஜாக்ரண் என்ற புதிய இயக்கங்களை ஆரம்பித்தார் ஜெயேந்திரர்.

சங்கராச்சாரியார்

மக்களுக்கு சேவை செய்வதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இதன் இரண்டு நோக்கங்கள் என்று இதன் துவக்கவிழாவில் பேசினார் ஜெயேந்திரர்.

இந்த இயக்கத்திற்கும் மடத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் சந்திரசேகர சரஸ்வதியின் ஆசிகள் இதற்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அந்த இயக்கத்தை பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்லவில்லை.

காஞ்சி சங்கர மடத்திற்கு குடியரசுத் தலைவர் போன்ற உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள் வருவது வழக்கம்தான் என்றாலும் 1998ல் மத்தியில் பா.ஜ.க. அரசு ஏற்பட்ட பிறகு இது பெரிய அளவில் அதிகரித்தது.

மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பல பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்கள் காஞ்சி மடத்திற்கு வந்து ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்துச் சென்றனர்.

2001-2006 காலகட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியின் துவக்க ஆண்டுகளில் தமிழக அரசில் பெரும் செல்வாக்குடன் ஜெயேந்திர சரஸ்வதி விளங்கினார்.

கோவில் தொடர்பான எல்லா அரசு விழாக்களுக்கும் அவர் அழைக்கப்பட்டார். கோவில் சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பான மாநில அளவிலான குழுவின் தலைவராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார்.

2002ல் தமிழக அரசு கொண்டுவந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் பின்னணியிலும் ஜெயேந்திரர் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்த காலகட்டத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலின் வழிபாட்டு நடைமுறைகளில் சில மாற்றங்களை பரிந்துரைத்தார் ஜெயேந்திர சரஸ்வதி.

இதற்கு வைணர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. சங்கராச்சாரியார் ஸ்ரீவைஷ்ணவ மரபைச் சார்ந்தவர் இல்லை என்பதால், வைஷ்ணவ விவகாரங்களில் தலையிட வேண்டாமென த்ரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் தெரிவித்தார்.

ஜெயேந்திரரின் இந்த செயல்பாடுகள், இந்து மதம் முழுமைக்கும் ஒரு தலைவரைப்போல ஆக அவர் விரும்புகிறாரோ என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தியது.

விஜயேந்திர சரஸ்வதி
படக்குறிப்பு,விஜயேந்திர சரஸ்வதி

கூதிரம்பாக்கத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள், கிராமத்துக் கோவிலுக்குள் நுழைவதற்கு தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் ஜெயேந்திரர் அதற்கு உதவ வேண்டுமென்றும் கேட்டபோது, குளித்து, சுத்தமாகிவிட்டு கோவிலுக்குள் நுழையும் அனுமதியைக் கோர வேண்டுமென ஜெயேந்திரர் அந்தத் தருணத்தில் கூறியதாகச் சொல்லப்பட்டது.

இதனை எதிர்த்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

2004ல் கொலைவழக்கில் சங்கராச்சாரியார் கைதுசெய்யப்பட்டதும், அவர் மீது பாலியல் ரீதியான புகார்களும் சொல்லப்பட்டன. சில பெண்கள் வெளிப்படையாக, அவர் மீது புகார்களை முன்வைத்தனர்.

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், பத்திரிகையாளர்களைச் சந்தித்து சங்கராச்சாரியார் தன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டினார்.

சங்கரமடத்தின் சார்பில் பத்திரிகை ஒன்று துவங்கப்போவதாகக் கூறி, தான் அழைக்கப்பட்டதாகவும் அப்போது தனிமையில் தன்னிடம் பேசிய ஜெயேந்திர சரஸ்வதி முறைகேடாக நடக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்தபோது, ஜெயலலிதாவின் அகங்காரமே அதற்குக் காரணம் என்று ஜெயேந்திரர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்தப் பேட்டிக்குப் பிறகுதான் ஜெயேந்திரருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான விலகல் துவங்கியது.

ஜெயேந்திரர் மீதான சர்ச்சைகளின் உச்சகட்டமாக, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலின் மேலாளராகப் பணிபுரிந்த சங்கரராமன் என்பவர், அந்தக் கோவில் வளாகத்திலேயே 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதியன்று கூலிப்படையினரால் வெட்டிக்கொல்லப்பட்ட விவகாரத்தில், அவர் தொடர்பு படுத்தப்பட்டார்.

இதையடுத்து, நவம்பர் 11ஆம் தேதியன்று ஆந்திராவில் முகாமிட்டிருந்த ஜெயேந்திர சரஸ்வதியும், விஜயேந்திர சரஸ்வதியும் தமிழகக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையை அடுத்து, சங்கர மடத்தின் மடாதிபதிகள் இருவர் மீதும் பல்வேறு பாலியல் புகார்கள் கூறப்பட்டன.

சங்கரராமன் கொலை வழக்கு 2005ல் புதுவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நடந்துவந்த காலகட்டத்தில், வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பணம் கொடுத்து சங்கராச்சாரியார் தீர்ப்பை மாற்ற முயல்வதாக 2011 ஆகஸ்டில் ஒரு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.

சங்கராச்சாரியாரும் நீதிபதியும் பேசுவதாகக் கூறப்பட்ட ஒலிநாடாக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

2013ல் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட திலிருந்து அரசின் உயர் மட்டத்தில் மடத்தின் செல்வாக்கு குறைய ஆரம்பித்ததாகவே கருதப்படுகிறது.

பிற செய்திகள்

அனுராதா ரமணனிடம் ஜெயேந்திரர் ஆபாசம்!

October 8, 2015,

ஆன்மீகவாதியாக திகழ்ந்த ஜெயேந்திரர் என்னிடம் மிகவும் ஆபாசமாக பேசினார், கையைப் பிடித்து இழுத்து மிகஅநாகரீகமாக நடந்து கொண்டார், தனது ஆசைக்குப் பணியுமாறு கேட்டுக் கொண்டார் என்று ஜெயேந்திரர்குறித்து பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் பரபரப்புப் புகார் கூறியுள்ளார். காவல்துறையிடம் ஒரு பெண் எழுத்தாளர் புகார் கூறியிருப்பது குறித்து தகவல்கள் கிடைத்தவுடன், அது அனுராதாரமணன் தான் என்றும் தெரியவந்தது. ஆனால், அவரது பெயரைக் கெடுக்க வேண்டாம் என்பதால் நிருபர்கள்அனைவருமே பெயரைச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்தனர். இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்.. 73.27% வாக்குகள் பதிவு.. இந்த மாவட்டத்தில்தான் மிக குறைவு! பல ஆண்டுகளுக்கு முன் அனுராதா ரமணனிடம் ஜெயேந்திரர் ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து கொண்டதாககடந்த ஆண்டு தான் அரசல் புரசலாக பேச்சு எழுந்தது. ஜெயேந்திரரின் அந்தரங்க அசிங்க வாழ்க்கை குறித்து குமுதம் வார இதழில் அவர் தொடராக எழுத ஆரம்பித்தார்.இதில் தமிழகத்தைச் சேர்ந்த சில பிரபல பாஜக தலைவர்களின் இருண்ட முகங்கள் குறித்தும் அவர் எழுதினார்.ஆனால், பல்வேறு தரப்பு பிரஷர்களால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கு நேர்ந்தஅவமானத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் அனுராதா. சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைஅவர் சந்தித்தார்.

இப்படித்தான் இருக்கணும்..தமிழக அரசை பாராட்டி தள்ளிய உயர்நீதிமன்றம்.. எதுக்கு தெரியுமா? பேச்சின்போது பலமுறை உடைந்த அழுதார். அவரது பேட்டி விவரம்: சில ஆண்டுகளுக்கு முன் சங்கர மடத்திலிருந்து என்னை அழைப்பதாக சங்கர மடத்திற்கு நெருக்கமான ஒரு பெண்என்னை அழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களை தெய்வமாக நினைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள் நான். தமிழகத்தில் வேகமாக குறையும் கொரோனா.. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! எனவே தெய்வமே என்னை அழைத்துள்ளதாக எனது தந்தை சந்தோஷப்பட்டார். உடனே செல்லுமாறு என்னைஅனுப்பி வைத்தார். நானும் மிகவும் சந்தோஷமான மன நிலையில் அந்தப் பெண்மணியுடன் காஞ்சிபுரம் சென்றேன். சங்கர மடம்சார்பில் தொடங்கப்படவுள்ள அம்மா என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றுவது தொடர்பாகஎன்னுடன் ஜெயேந்திரர் பேசினார். அவர் பேசியவற்றில் சிலவற்றை எனது குறிப்பேட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நான்நிமிர்ந்து பார்த்தபோது, என்னை அழைத்து வந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் ஜெயேந்திரர்.அவர்கள் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு செய்த அசிங்கம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அதிலிருந்து நான் சுதாரிப்பதற்குள், ஆன்மீகவாதியாக பேசிக் கொண்டிருந்த ஜெயேந்திரர் ஆபாசமாக பேசத்தொடங்கினார். அறுவறுப்பான சிரிப்புடன் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் மிகவும் அநாகரீகமானவை. அந்தப் பெண்மணியைப் போலவே என்னையும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அதிர்ந்து போன நான் சட்டென எழுந்து விட்டேன். சீ, நீயும் ஒரு மனுஷனா என்று வேகமாக கேட்டவாறேஅங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். உடனே அதிர்ந்த ஜெயேந்திரர், முன் கூட்டியே இவளிடம் (என்னிடம்)எல்லாவற்றையும் கூறவில்லையா என்று அந்தப் பெண்ணிடம் ஆவேசமாக கேட்டார். அவர் இல்லை என்றவுடன், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் அந்தப் பெண்மணியை திட்டினார். பின்னர் அதே வேகத்தில் என்னிடம் திரும்பி, என்னுடன் ஒத்துழைத்துப் போனால் நல்லது. இங்கு நடந்தவற்றைவெளியில் கூற நினைத்தால், உனக்கும் 10 ஆண்களுக்கும் தொடர்பு உள்ளதாக கதை கட்டி உன் வாழ்க்கையையேசீரழித்து விடுவேன் என்று மிரட்டினார். புருசனை இழந்த நீ என்ன விதவைக் கோலத்திலேயே இருக்கே… பூவும் பொட்டுமாகத்தானே இருக்கே என்றுகூறியவாறே என் உடலை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த அசிங்கத்தில் கூனிக் குறுகிப் போன நான் அங்கிருந்து எப்படியோ திரும்பி விட்டேன். மறுநாள் என்னைசங்கர மடத்துக்கு அழைத்துப் போன பெண் தன் கணவருடன் என் வீட்டுக்கு வந்தாள். இருவரும் குடித்திருந்தனர்.இருவரும் சேர்ந்து மடாதிபதியை எதிர்த்துப் பேசுறியா என்று கேட்டபடி அடித்து உதைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் நான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் அதிர்ந்து போனேன். அடுத்து உடல் நலமும்பாதிக்கப்பட்டது. இந்தத் தகவலை அப்போது உயர் பதவியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியை தனியே சந்தித்துக் கூறினேன்.அவர் உடனே புகார் கொடுங்க.. அவனை உள்ளே வைக்கிறேன் என்றார். ஆனால், சங்கர மடத்தின் பலம் அறிந்தவள் நான். இதனால் புகார் கொடுக்க நான் தயாராக இல்லை என்றேன்.அவரிடம் கதறி அழுதபடியே எழ முயன்றேன்.

அப்போது எனக்கு ஒரு கால் வரவில்லை, தொடர்ந்து ஒரு கையும் வரவில்லை. பக்கவாதம் தாக்கியிருந்தது. சரிந்துவிழுந்த என்னை அந்த அதிகாரி தான் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்கு வைத்து என்னைக் கொலை செய்யவும் முயற்சிநடந்தது. சங்கர மடத்து ஆட்கள் இருவர் விஷ ஊசியுடன் அங்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அதிர்ஷ்டவசமாகநல்லவர்கள் சிலரின் துணையால் தப்பிவிட்டேன். ஒரு வழியாய் பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்தேன். ஆனால், மடத்தில் எனக்கு நடந்த ஆபாசம் என் மனதைபுண்படுத்தியிருந்தது.

இதனால் ஒரு வருடம் எழுதுவதையே கூட நிறுத்திவிட்டேன். அப்புறம் நடந்து சென்றபோது லாரி ஏற்றிக் கொல்லவும் அவர்கள் முயற்சித்தார்கள். அதிலிருந்தும் நான்மீண்டேன். ஆனால், இதை போலீசில் சொல்லவில்லை. என்னையும் என் இரு மகள்களையும் அவர்கள் அழிக்கும் சக்திபடைத்தவர்கள் என்பதை நான் உணர்ந்திருந்தேன். என் மகள்கள் மீது ஆசிட் வீசப் போவதாகவும் மிரட்டினார்கள். கணவர் இல்லாத நான் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வரையிலாவது உயிரோடு இருக்க வேண்டுமேஎன்பதற்காக அனைத்தையும் எனக்குள்ளேயே புதைத்துக் கொண்டேன். என் மகள்களுக்கு மணமுடித்த பின்னர் என் ஒட்டுமொத்த மன பலத்தையும் திரட்டிக் கொண்டு வார இதழ் ஒன்றில்மடத்தில் நடந்த ஆபாச சம்பவத்தை தொடராக எழுத ஆரம்பித்தேன்.

இதையடுத்து எனக்கு மடத்திலிருந்து மிரட்டல்கள் வந்தன. அந்தப் பத்திரிக்கைக்கும் பல வகையில் மிரட்டல்கள்வந்தன. இதனால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுவிட்டது. பின்னர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னை கூப்பிட்டு அனுப்பியது மடம். இந்த முறை சிலரது துணையுடன்அங்கு போனேன். அப்போது நடந்த சம்பவத்தை அப்படியே மறைத்துவிட வேண்டும், என்னை மன்னிக்கவேண்டும், இதை யாரிடமும் சொல்லக் கூடாது. எவ்வளவு பணம் வேண்டும் என்று பேரம் தொடங்கினார்சங்கராச்சாரியார். ஆனால், உன்னை நானும் கடவுளும் மன்னிக்க வேண்டும் என்றால், உன் காவி உடையை உடனே நீகலைந்துவிட்டு மடாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும். அது தான் நீ செய்துள்ள பாவங்களைப் போக்கஒரே வழி என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். லட்சக்கணக்கான குடும்பங்களில் கடவுளாக பூஜிக்கப்படும் ஒரு மனிதரின் மறு பக்கம் எனக்குத் தெரியவந்தபோது நான் மிகவும் அதிர்ந்து போனேன். அவர் தற்போது செய்திருக்கும் செயல்கள் கடவுளால் கூடமன்னிக்க முடியாதது. அந்த கருப்பு மனிதரின் முகத் திரையை கிழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனக்கு நேர்ந்த அவமானத்தைஇப்போது வெளியிட்டுள்ளேன்.

மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. மேலும் என் பெயரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பல செய்தி ஊடகங்களும் எழுத ஆரம்பித்துவிட்ட நிலையில்,இனியும் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்பதால் வெளியில் சொல்கிறேன் என்றார். பேசும்போது பல முறை மூத்த எழுத்தாளரான அனுராதார ரமணன் உடைந்து போய் அழுததும், தனக்கு நேர்ந்தஅவமானங்களை கண்ணீருடன் அவர் சொன்னதும் மனதை பெரிதும் வருத்தியது. பேட்டியின்போது இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பைச் சேர்ந்த சுதா சேஷய்யன் உள்ளிட்ட மகளிர்அமைப்புகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

அனுராதாவின் சார்பில் மடத்துக்கு எதிராக வழக்கை நடத்தவும்அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. அனுராதாவிடம் போலீஸ் விசாரணை: இந் நிலையில் அனுராதா ரமணன் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் சுமார் 4 மணி நேரம்விசாரணை நடந்துள்ளது. மடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியிடம் விளக்கினார். இதை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/2004/11/30/anuradha.html?story=1

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply