”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில தகவல்கள்
October 21, 2016
”இராவணனின் மனைவி மண்டோதரி”பற்றி யாருமறியா அரிய சில தகவல்கள்.
”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில தகவல்கள்.
இராமாயணத்தில் ”இராவணனின் மனைவி மண்டோதரியை” பற்றிய சில ஆச்சர்யமான
தகவல்கள். ராமாயணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியை பற்றி தெரியாதவர்களே கிடையாது எனலாம்,, மண்டோதரியை பற்றி குறிப்பிடுகையில், அவள் பேரழகி, தெய்வீக சக்தி கொண்டவள் ,மிகவும் ஒழுக்கமுள்ளவள் என்று மண்டோதரி குறிப்பிடப்படுகிறாள். பாவங்களைப் போக்கும் சக்தியைக்கொண்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருவராகவும் இவள் கருதப்படுகிறாள். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ’ மண்டோதரியினை” பற்றி சில சுவாரஷ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இந்து சாஸ்திரங்களில் அசுரர்களின் சிற்பக்கலை வல்லுனராக மயன் என்பவரைப் பற்றி சொல்லப்படுகிறது. இவரை மயா, மயாசுரன், என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த அசுரக்குல சிற்பி மயனின் ஒரே மகள்தான் மண்டோதர, இவரது பெயர் மந்தோதரி என்றுதான் முதலில் அழைக்க பட்டதாம். சிவன்பால்கொண்ட பேரன்பினால், தன் மகளையும் சிவ நாம த்தினால் அனைவரும் உச்சரிக்கவேண்டும் என்பதால் மந்தோதரி என்று பெயர் வைத்தானாம் மயன், ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் மந்தோதரி என்றால் மெல்லிடையாள் என்று கருத்து செல்கின்றனர். பிற்காலத்தில் சிறந்த சிவபக்தையாக திகழ்ந்த மண்டோதரி அழகியாகவும், செல்வ வள ம் பொருந்தியவளாகவும் வளர்க்கப்பட்டாள்.
தனக்காக ஒரு நகரத்தை நிர்மாணிக்கும் பொருட்டு மயனை சந்திக்க வந்த இராவணன், அங்கே மண்டோதரியை கண்டதும் அவள் அழகில் மயங்கினான். அவ்வளவு பெரிய பேரழகியை தன்னுடைய மனைவியாக அடைய விருப்பபட்டு மயனிடம் தன் விருப்பத்தைக் கூறினான். மயனும் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். ஏனெனில், இராவணனு டைய பராக்கிரமம் உலகறிந்த ஒன்றாக இருந்தது. இராவணன் வீரமிக்க அரசனாக மட்டு மல்லாமல், சிறந்த சிவப்பக்தராகவும் இருந்தான். அது போல மயனும் சிறந்த சிவபக்தன், சிவாய நம என்ற மந்திரத்தை தினமும் உச்சரிப்பவன், ஆகையால் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்.
ஆனால் மரபுவழிகதைகளில் இராவணன் ஒருமுறை காட்டுக்கு வேட்டை யாட சென்றப்பொழுது ,வேட்டையை முடித்து சிறிது ஒய்வெடுத்தானாம். அப்பொழுது, இசைபிரியனான இராவணன் வீணையை மீட்டி பாடிய சிவ கீதம், வீணையின் சப்த நாளங்களோடு சேர்ந்து, மண்டோதரியின் செவி வழியில் புகுந்தது, காமன் விடு தூதாக கன்னி மனதை பறித்து காதல் வய ப்படவைத்துவிட்டது எனவும், அவள் உடனே தந்தையே! இந்த இன்னிசை நாதம் எங்கே இருந்து வருகிறது என கேட்டாளாம், இசை வந்த திசை நோக்கி சென்ற மயன் அங்கே இராவணனை கண்டு அழைத்து வந்தாராம் மண்டோதரியின் அழகில் மயங்கிய ராவணன் ,மயனிடம் தன விருப்பத் தை சொன்னானாம், ஏற்கனவே, இராவணனை நன்கு அறிந்த மயன், இந்த திருமணத்திற்க்கு உடனே சம்மதம் தெரிவித்து மண்டோதரியை இராவ ணனுக்கு மணமுடித்து வைத்தார் என்று சொல்லப்படுகிறது.
இருவருமே சிவப்பக்தர்களாகவும், இசையை ரசிப்பவர்கள் ஆகவும் இனி மையாக வாழ்ந்து வந்தார்கள். பதிவிரதத்திற்காக பெயர்பெற்ற மண்டோ தரி, தன்னுடைய கணவன்மேல் மிகவும் பக்தி கொண்டவளாக இருந்தா ள். இவளுடைய பதிவிரதத்தின் காரணமாகத் தான் அசுரகுணம் கொண்ட இராவணன், பல்வேறு தவறான செயல்களைச் செய்தபோதும் அதற்கான தண்டனைகளில் இருந்து காப்பாற்றபட்டான். அச்சமயத்தில் இராவணனு க்கு மண்டோதரியைத்தவிர, வேறுசில மனைவிகளும் இருந்தார்கள். ஆ னாலும அவன் மண்டோதரியிடமே அதிகஅன்பும், பாசமாய் இருந்தான்.
இப்படி இருக்கையில் தன்னுடைய மனைவி அல்லாத வேறு ஒரு பெண் ணிடம் இராவணன் மையல் கொண்டான். அவள் பெயர் வேதவதி. இதை யெல்லாம் தெரிந்து கொண்ட மண்டோதரி அவனை நல்வழிபடுத்த பல அறிவுரைகளை எடுத்து கூறினாள். அப்பொழுதும் இராவணனுக்கு உண் மையானவளாகவும், நம்பிக்கைக்கு உரியவளாகவும் இருந்தாள் மண் டோதரி. இந்த வேதவதிதான் ராவணனுடைய அழிவுக்கு காரணமாக இருந்தாள் என கூறபடுகிறது.
யார் இந்த வேதவதி? பிருகஸ்பதியின் புத்திரரான, பிரம்ம ரிஷி குஸத்வ ஜரின்குசத்துவ முனிவர், வேதம் ஓதிக்கொண்டிருக்கும் சமயத்தில் குழந் தை பிறந்ததால் அவளுக்கு ‘வேதவதி’ என பெயரிட்டு வளர்த்தார். அவள் வளர்ந்து பருவமடைந்தபோது, அவளது அழகில்மயங்கி தேவர்கள், அசுரர்கள் முதலானோர் அவளை மணந்துக் கொள்ள விரும்பினார்கள். முனிவரோ, தம் மகளுக்குத் தகுந்த வரன் திருமால்தான் என்று எண்ணி னார். அவளை மணந்துக் கொள்ள விரும்பி சம்பு என்னும் அரக்கன் தன் விருப்பத்தைத் முனிவரிடம் தெரிவித்தான். முனிவர் அவனுக்குப் பெண் தர மறுத்ததால் இரவில் தூங்கிக் கொண்டிருந்த முனிவரை கொன்று விட்டான் சம்பு, இதனால், துக்கப்பட்டுத் வேதவதியின் தாயார் முனிவரு டன் சிதை ஏறிவிட்டார். தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண் டி ஸ்ரீநாராயணரை நோக்கித் தவம் புரிந்துகொண்டிருந்தாள் வேதவதி.,
அப்போது திக்விஜயம் மேற்கொண்ட இராவணன் காட்டில் தவம் செய்து வந்த வேதவதியைக் கண்டு அவள் அழகில் மயங்கி, அவளை மணந்துக் கொள்ள ஆசைப்பட்டான். அவள் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் இராவணன், அவளை வலியத் தீண்டினான். அப்பொழுது வேதவதியோ தான் விஷ்ணுவை மணாளனாக அடைய தவம் செய்கிறேன், என்னைத் தீண்டாமல் விலகி செல்வாயாக என சாந்தமுடன் கூறினாள். மதி மயங்கி இருந்த இராவணன், யார் அந்த விஷ்ணு? என்று ஏளனமாகக் கூறியவா றே வேதவதியின் கூந்தலைப் பிடித்துத் தூக்கினான் இராவணன், அப் பொழுது வேதவதி, தன் கையைத் தூக்கி அதை வாளாக மாற்றி தன் கூந்த லை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, நான் இனியும் உயிர்வாழ ஆசைப் படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டால், என் தபோவலிமையை இழக்கவேண்டியதிருக்கும். ஆக வே அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத் தில் பிறக்காதவளாக) மீண்டும்வருவேன் என கூறி அக்னியில் புகுந்தாள்.
பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரில் அழகிய பெண்குழந்தையாய் அவ தரித்தாள். அவளை, தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரி யிடம் காண்பித்தான் இராவணான். அவளது சாமுத்ரிகா லட்சண த்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் கார ணமாவாள் என்று கூறினார். இதனால் இராவணன் அவளைக் கடலில் தூக்கி எறிந்தான். கரையைநோக்கி வந்த அவள் ஒரு யாக பூமியை அடை ந்தாள். அங்கு ஜனக மஹாராஜன் உழும்போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள். உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள். கிருத யுகத்தி ல் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதை தான் ராவணனை கொல்ல அவதாரம் எடுத்து இருக்கிறாள் என மண்டோ தரி இராவணனை எச்சரித்தாள் .
இதைவிட சுவாரஸ்யம் என்னனா சீதாதேவியின் தாய் மண்டோதரியா? இப்படியும் சில மரபு வழி கதைகள் உண்டு. வால்மீகி ராமாயணத்தில் மண்டோதரியை சீதையின் தாயாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை, ஆனால், அதன் பிறகு வந்த சில ராமாயண படைப்புக்களில் மண்டோதரி யை சீதையின் தாயாகவோ அல்லது சீதையின் பிறப்பிற்குக் காரணமான பெண்ணாகவோ குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், இராவணனின் அரண் மனையில், இராவணனால் கொல்லப்பட்ட முனிவர்களின் ரத்தத்தை ஒரு பெரிய பானையில் சேகரித்து வைத்திருந்தார்களாம், அதே சமயம், கிரிட்சமாடா என்ற முனிவர் இலட்சுமி தேவி தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று தவம் செய்துக்கொண்டு இருந்தார். அவர் தர்ப்பை புல்லின் பாலை தன்னுடைய மந்திரங்களினால் சுத்திகரித்து வைத்திருந்தார்.
இலட்சுமி தேவி அதில் வாசம் செய்வாள் என முனிவரது நம்பிக்கை. ஒரு முறை அந்த முனிவரைக் காணச் சென்ற இராவணன் அந்த புண்ணிய மான பாலை தன்னுடயை ரத்தம் நிறைந்த பானைக்குள் ஊற்றிவிட்டான். இராவணனின் இந்த தகாதச் செயலைக் கண்டு மனம் வெறுத்த மண்டோ தரி, மிகவும் கொடிய விஷமான அந்த ரத்தத்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது, கிரிட்சமாட முனிவரின் தவ வலிமை யால் காப்பாற்றப்பட்டு இலக்ஷ்மி தேவியின் அவதாரத்தை குழந்தையாக பெற்றேடுத்தாள் எனச் சொல்லப்படுகிறது. இராவணனிடம் இருந்து அக் குழந்தையைக் காப்பாற்ற அந்த குழந்தையை குருஷேத்திரத்திற்கு அரு கில் அவர் புதைத்து வைத்தார். அந்த பெண் குழந்தையைக் கண்டெடுத்த ஜனகர் அவளுக்கு சீதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் எனவும் மரபுவழி கதைகளில் சொல்லபடுவதுண்டு.
ஆனால்,. வாசுதேவஹிந்தி, உத்தர புராணம் மற்றும் பிற சமண வகை இராமாயணங்களில் சீதையானவள் இராவணனுக்கும், மண்டோதரிக்கு ம் பிறந்த குழந்தையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மண்டோதரி யை மணந்துக்கொள்ளும் விருப்பத்தை மயனிடம் இராவணன் கேட்டுக் கொண்டபோது, இராவணனுடைய ஜாதகத்தை கணித்த மயன், இந்த தம்பதியருக்கு பிறக்கும் முதல் குழந்தை ராவணனின் வம்சத்தை அழித்து விடும். ஆகவே, அக்குழந்தையைக் கொன்றுவிடவேண்டும் என்று எச்சரி க்கை விடுத்தார் மயன், அவர் அறிவுரையைக் காதில் கேட்காத இராவ ணன், திருமணதிற்கு பிறகு மண்டோதரிக்குப் பிறந்த முதல் குழந்தை யான சீதையை ஜனகரின் நகருக்கு அருகில் ஒரு கூடையில் வைத்து புதைத்து விட்டான் என்றும் சொல்லபடுகிறது.
இந்த இதிகாசத்தின் ஆதாரப் பூர்வமான எழுத்து வடிவங்கள் மட்டும் இன்றி செவிவழிக் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் கூடத் தங்களு க்கு உரிய பாணியில் மிகவும் சுவாரஸ்யமாக கூறப்பட்டுள்ளது. உத்தர புராணத்தில், அஹகாபுரியின் இளவரசியான மணிவதியின்மீது இராவணன் தவறாக ஆசைக்கொண்டு இருந்தான், ஆகவே அவனை பழி வாங்கவே இராவணன் மற்றும் மண்டோதரிக்கு மகளாக பிறந்தாள் மணி வதி எனவும், அந்த குழந்தையால் இராவணனின் சாம்ராஜ்யம் பேரழிவை சந்திக்கும் என அரசவை ஜோதிடர்கள் குறிபிட்டதிதால இராவணன் அந்தக் குழந்தையைக் கொன்றுவிடுமாறு தன்னுடைய மெய்க் காவலனு க்கு உத்தரவிட்டதாகவும் ஆனால், அக்காவலன் குழந்தையைக் கொல் லாமல், மிதிலாவில் பெட்டியில் வைத்து மண்ணில் புதைத்து விட்டதாக வும் அங்கே ஜனகமகாராஜா சீதையைக் கண்டெடுத்ததாகவும் சொல்லப் பட்டு இருக்கிறது.
சமணர்களின் இராமாயணக் கதைப்படி, சீதை இராவணனின் மகளாகப் பிறந்தார். எனினும், இராவணனின் சாம்ராஜ்யத்தை அந்தக் குழந்தை அழி த்துவிடும் என்று சோதிடர்கள் கூறியதால், இராவணன் தன்னுடைய பணியாட்களை அழைத்து சீதையை தொலைதூரத்தில் உள்ள நிலப்பகு திக்கு கொண்டுச் சென்று புதைத்து விடுமாறு கட்டளையிட்டார். அப்பொ ழுதுதான் சீதை, ஜனகரால் கண்டெடுக்கப்பட்டாள் என்றும் கூறப்படுகிற து. மேலும், சமணர்களின் இராமயணத்தில், இராவணன், ஒரு தந்தை யாக மட்டுமே சீதையின் மேல் அன்பு வைத்திருந்தார் என்றும் கூறப்படு கிறது. மண்டோதரியின் வயிற்றில் சீதை பிறந்த போது, இராவணன் அளவிலா சந்தோஷத்தைக் கொண்டிருந்தார் எனவும், இந்தக் குழந்தை சாம்ராஜ்யத்தை அழித்து விடும் என்று சோதிடர்கள் அறிவுருத்தியதால், தன்னுடைய பணியாட்களிடம் சீதையைக் கொண்டு போய் தொலை தூரத்தில் விட்டு விடச் சொல்லியிருக்கிறார்.
ஆனால், விட்டுட்டு வந்த குழந்தை எங்கிருக்கிறாள் என்பதை அவ்வப்போது இராவணன் தன் ஒற்றர்கள் மூலம் தெரிந்துக்கொண்டு வந்துள்ளான் எனவும் ,சீதையை ஜனக மகராஜா இளவரசியாக தத்தெடுத்துக் கொண்டதை அறிந்தவுடன் இராவணன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் எனவும், சீதைக்கு திருமணம் நடந்த சமயத்தில் கூட அந்த சுயம்வரத்தில் இராவணனும் கலந்து கொ ண்டான் எனவும், அங்கே அயோத்தி நகரத்தைச் சேர்ந்த ஆரிய இளவரசர் இராமர் சீதையை மணமுடித்ததைக் கண்டு இராவணன் மகிழ்ச்சியடை ந்தான் எனவும் இராமரை 14 ஆண்டுகள் காட்டுக்குள் வனவாசம் அனுப் பும் வரை அனைத்தும் நல்லபடியாகவே இருந்தது என சமணர்களின் இராமாயண குறிப்புகளில் சொல்லப்பட்டு இருகின்றன .
தொடர்ந்து சீதையை கண்காணித்து வந்த இராவணன் இராமர் வன வாசம் சென்று வனாந்திரங்களில் துன்பப்பட்டு வந்தபோது, சீதாதேவியும் இராமருடன் சேர்ந்து துன்பத்தை அனுபவிக்கிறார் என்பதை இராவணன் அறிந்து கொண்டான், எனவே, தன்னுடைய மகளை கடத்திக் கொண்டு வருவதன் மூலமாக அவளுடைய துன்பத்தை முடிவுக்கு கொண்டு வரலா ம் என்று இராவணன் நினைத்தார் என்றும், ஆகையால்தான், சீதாதேவி யை இராவணன் கடத்திக்கொண்டு வந்து இலங்கையில் வைத்தார். இதனை பழிவாங்கும் செயலாகப் புரிந்துக் கொண்ட இராமரும், இலட்சுமணரும், இராவணனின் மீது போர் தொடுத்தனர் என்றும், ஆனால், இராவணன் செய்தது தன்னுடைய மகளை துன்பத்திலிருந்து பாதுகாக் கும் செயல்தான் எனவும், இராவணன் தூங்கும் போதும்கூட சீதையின் பெயரைச்சொன்னதால், அவனுடைய மனைவியான மண்டோதரியும் கூட தவறாக நினைத்துவிட்டாள் என சமண ராமாயண குறிப்புகள் கூறுகி ன்றன. சீதை இராவணனுடைய மகளா?! இல்லையா?! என்பது நமக்குத் தெரியாவிட்டாலும் இராவணனின் அழிவுக்குக் காரணம் சீதைதான் எனபது மட்டும் உண்மை.
இதேப்போல, நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும், கற்றுணர்ந் த இராவணனுக்கு பெண் பாவத்தை பற்றி தெரியும், ஆதலால் அவன் சீதையை கடத்தவில்லை, சீதை லட்சுமிதேவியின் அவதாரம். சிறந்த ஆட்சியாளனான, இராவணன் உலகத்தின் செல்வங்களைலாம் இலங் கைக்குக் கொண்டு சென்றுவிட்டான். அதேப்போல் உலக இயக்கமும் இல ங்கையில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்பதற்காக சிவனையும் இலங்கைக்கு கொண்டு சென்ற போதுதான் அவன் விநாயகரால் தடுத்து நிறுத்தப்பட்டு தரையில் வைத்த சிவலிங்கத்தை எடுக்கமுடியாமல் தோல்வியுற்றான். அவன், உலகத்தின் செல்வதையும், உலகத்தின் இயக் கத்தையும், இலங்கைக்குக் கொண்டுச் சென்றால் அவனை யாருமே அழி க்கமுடியாத வல்லமை பெற்று இருப்பான், என இன்னொரு செவிவழி கதையும் உண்டு.
இதைபோல் மரபுவழி கதைகளில் இன்னொரு ஒரு கதையும் சொல்லப் படுவதுண்டு, பத்து திசைகளில் தேர் செலுத்தும் வல்லமை உடைய தசர தனுக்கும் கோசல நாட்டு அரசன் பானுமந்தன் மகள், கோசலைக்கும் திரு மணம் நிச்சயமாகி இருந்தது. இதை நிச்சயம் செய்தவர், நம்முடைய கலக முனி நாரதர். நாரதர்வந்தாலே கலகம் வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இங்கும் அதுபோலவே நாரதர் திருமணத்தை நிச்சயம் செய்துவிட்டு, இராவணனிடம் வந்து இத்திருமணம் நடந்தால் கோசலை க்கு பிறக்கும் பிள்ளையால் உனக்கு அழிவு நிச்சயம் என்று சொல்கின் றார். அதேவேளை, கோசலநாடு சென்று இராவணனால் இந்த திருமணம் நிறுத்தபடலாம் என்று பத்தவைத்து விட்டு போகிறார்.
உடனே தசரதன், பத்து கிரீடத்துக்கு அரசனான இராவணனோடு போர் புரிந்து வெற்றி பெறமுடியாது என, கோசல நாட்டில் திருமணத்தை வைக் காமல் கடல்நடுவில் யாருக்கும்தெரியாமல் திருமணத்தை நடத்துகிறார். கோசலையை தேடி இராவணன் கோசல நாடு சென்று அங்கும் கோசலை இல்லாதது கண்டு தன் நாடு திரும்பினான். வரும் வழியில் கடல் நடுவில் ஒருநகரத்தில் கோசலை இருப்பதை காண்கின்றான். பெண்களை வீரர் கள் தாக்கக் கூடாதது என்பதால் உயிருடனேயே கடத்தி வருகின்றான். தன் தேசம் வந்ததும் அவளைக் கொலை செய்யும்படி கட்டளை இடுகின் றான்.
ஆனால், எல்லா சாஸ்திரங்களையும் கற்ற மண்டோதரி, பெண்ணை கொலைசெய்வது அழிவுக்கு ஒப்பானது ஆகும், எனசொல்லி கோசலை யை காப்பாற்றுகிறாள். ஆனால், தன் கணவன் உயிருக்கும் அவளுக்கு பிறக்கும் மகனால் ஆபத்து வர கூடாது என்பதற்காக தசரதனு க்கு புத்திர பாக்கியம் ஏற்படாதவாறு சாபம் இடுகின்றாள். விதியை மாற்றி அமைக்க விரும்பாத பார்வதி, பரமேஸ்வரர், .மண்டோதரிக்கும், இராவணனுக்கும் பிறக்கும் பெண் குழந்தையாலேயே உங்களுக்கு அழிவு என்று சாபம் இடுகின்றார்கள். அதனால் தான் மண்டோதரிக்கும் இராவணனுக்கும் பிறக்கும் மூத்த பிள்ளையான சீதையை ஜனகன் வயல் பூமியில் கொண்டு போய் விட்டுவிட்டதாக மரபுவழிகதைகள் கூறுகின்ற ன .
மண்டோதரி-இராவணன் தம்பதிகளுக்கு மேகநாதன், அதிகயா மற்றும் அக்சயகுமாரர் ஆகிய மூன்று மகன்கள் பிறந்தனர். விஷ்ணுவின் அவதார மான இராமபிரான் வனவாசம் சென்றிருந்த வேளையில் சீதாதேவியை கடத்தினான் இராவணன். மண்டோதரி சீதாதேவியை உடனடியாக இராம னிடம் திருப்பி அனுப்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தாள். ஆனா ல், இராவணன் எதையும் கேட்கவில்லை. சீதா தேவியின் தலையை துண் டிப்பதற்காக தன்னுடைய வாளை ஓங்கினான் இராவணன். ஆனால், ஒரு பெண்ணைக் கொலை செய்வதென்பது கொடும் பாவச்செயல். ஆகவே, சீதா தேவியை இராவணன் கொல்லக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டு இராவணனின் கையைப் பிடித்து அந்த பாவச்செயலைத் தடுத்து நிறுத்தினாள் பேரழகியான மண்டோதரி. இது, இராவணனுக்கு அழிவைக் கொண்டு வரும் என்று மண்டோதரி நன்கு அறிந்திருந்தாள் என வால்மீகி ராமாயணத்தில் குறிபிடப்பட்டுள்ளது.
மண்டோதரி, சீதையை சாக்கி மற்றும் ரோகிணி ஆகிய கடவுளர்களுடன் ஒப்பிட்டு இராவணனிடம் முறையிட்டாள். மண்டோதரியை விட சீதா தேவி அழகில் குறைந்தவராக இருந்தாலும், இராமன் மீது சீதை கொண்டி ருந்த பக்தியை மிகவும் மதித்திருந்தாள். சீதாதேவியைத் தேடிவந்த அனுமன் கூட இராவணனின் அந்தப்புரத்தில் மண்டோதரியைப் பார்த்தவு டன் இவர்தான் சீதாதேவி எனத் தவறாக எண்ணிக்கொண்டான் என வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப் படுகிறது. அமைதியான முறையில் சீதையை திரும்பப் பெறச் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த பின்னர், இராமர்… இலங்கையின்மீது போர் தொடுப்பதை அறிவி த்தார். இராமனுடனான இறுதிப் போருக்கு முன்னர் கூட மண்டோதரி இராவணனிடம், சீதாதேவியை திரும்ப அனுப்புமாறு கேட்டுக் கொண்டா ள், ஆனால், அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. இறுதியாக, தன்னு டைய கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாக இறுதிக்கட்டப் போரில் இராவணனுக்குத் துணை நின்றாள். மேலும், இந்திரனை வென்று இந்திரஜித் என்ற பட்டத்துடன் இருந்த, தன் மகன் மேகநாதனையும் கூட, இராமருடன் சண்டையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.
மேலும் வால்மீகி இராமாயணத்தில், யுத்த காண்டத்தில், மண்டோதரியி ன் அழிவு சொல்லப்பட்டு இருக்கிறது. இராவணனுடைய அனைத்து மகன் களும், வீரர்களும் போரில் இறந்து விட்ட பின்னர், தன்னுடைய வெற்றி யை உறுதி செய்யும்படியாக ஒரு அக்னி யாகத்தை நடத்த விரும்பினான் இராவணன். இதை அறிந்த இராமர், உடனே அனுமனையும், வானர இளவரசரான அங்கதனையும் கொண்ட வானர வீரர்களின் படைகளை அனுப்பி அந்த யாகத்தைக் கலைக்க ஆணையிட்டார்.
இராவணனின் அரண்மனையில் பெரும் சேதத்தை வானரங்கள் ஏற்படுத்தினாலும், இராவணன் தன்னுடைய யாகத்தைத் தொடர்ந்து செய்து வந்தான். இந்தச் சமயத்தில், அங்கதன் மண்டோதரியின் தலைமுடியைப் பற்றி அவளை இராவணன் முன் இழுத்து வந்தான். மண்டோதரி தன்னைக் காப்பாற்றும் படியும், இதே செயலைத் தான் இராவணன், இராமனின் மனைவிக்கு செய்து கொண்டிருப்பதையும் நினைவுப்படுத்தினாள். இதனால், கோப முற்ற இராவணன் தன்னுடைய யாகத்தை நிறுத்தி விட்டு, அங்கதனுடன் சண்டையிடுவதற்காக தன்னுடைய வாளால் பாய்ந்தான். பலம் பொருந்திய இராவணனை யார் எதிர்க்க முடியும்?!
எனினும், வந்த காரியத்தை முடித்து விட்டத் திருப்தியுடன், மண்டோதரி யை விட்டு விட்டு அங்கதன் தப்பிச் சென்றான். மண்டோதரி மீண்டும் சீதையை இராமனிடம் சேர்ப்பிக்கும்படி கேட்டாள், அப்பொழுதும் இராவ ணன் மறுத்து விட்டான்.
மண்டோதரி கணவனுடையை நன்மைக்காக இழக்கக்கூடாதவற்றை எல்லாம் வாழ்வில் இழக்கின்றாள். சீதையைத் தேடி வந்த அனுமன் கையால் தன் ஆசைமகன் அக்சயகுமாரன் இறந்தப்பொழுது கூட இராவணன் மேல் அவள் கோபம் கொள்ளவில்லை. இந்திரனை வென்று சிறைப் பிடித்து வந்த தன் வீர மகன் இந்திரஜித் லட்சுமணனால் கொல்லப் பட்டப் பொழுது கூட அவள் இராவணன் மீது கோபம்கொள்ளவில்லை. கணவன் வாழ்வுக்காகவே கடைசிவரை துணை இருந்த மண்டோதரி இ ன்னொரு பெண்ணுக்காக இரங்கி கோசலையை விடுத்ததால், தன் னால் உயிர்பிச்சை பெற்றுவாழ்ந்த கோசலைக்கு, யாகத்தின்மூலம் பிற ந்த பிள்ளையால் தன் குலமே அழிந்துவிட்டதை எண்ணி வருந்தினாள்.
இராவணனுக்கு எப்போதும் நல்வழிகளையே போதித்து வந்த மண்டோத ரி, சீதாதேவியை சிறைப் பிடித்து வந்தது தவறு என்றும், சீதாதேவியைக் கவர்ந்து வந்தது அறத்துக்குப் புறம்பானது எனவும் சீதாதேவியை விட்டு விடுமாறு ராவணனுக்கு பலமுறை அறிவுறுத்தினாள். ஸ்ரீராமன் குறித்து எச்சரித்தும், மாரீசனின் வார்த்தையை நம்பி ஏமாற வேண்டாம் என அறி வுரைக் கூறி பலமுறை திருத்த முயன்றாள். மேலும், அறத்துடன் இணை ந்தவருக்கு ஆறறிவற்ற உயிரினங்களும் கூடத் துணை நிற்கும். ஆனால், அறத்திலிருந்து விலகியவரை, உடன்பிறப்புகள் கூட விலக்கி வைக்கும் என்பதை உணர்த்தினாள். அதேச்சமயம் இராமன் சாதாரண மனிதன் அல்ல என்றும், அவர் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம் என்பதையும் மண்டோ தரி நன்கு அறிந்திருந்தாள். ஆனால் பெண்ணாசைக் கொண்ட தனது கணவர் இராவணனை அழிக்கவே, இராமன் அவதாரம் எடுத்திருப்பதை மண்டோதரி உணர்ந்திருக்கவில்லை.
இராவணனுக்கும், இராமனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தில் இராமபாணம் பாய்ந்து இராவணன் மண்ணில் வீழ்ந்ததும், தனது கணவரின் உடல் மேல் விழுந்து கதறி அழுதாள். பலவாறு புலம்பி அழுது ஏக்கம் கொண்டு எழுந்து பொன் அணிகலன்கள் பொருந்தியிருக்கும் இராவணனின் மார்பி னைத் தன்னுடைய தளிர் போன்ற கைகளால் தழுவி அவன் மீது வீழ்ந்து உயிர்நீத்தாள் மண்டோதரி. எண்ணற்ற சிறந்த நற்குணங்கள் கொண்டிரு ந்தும் தனது கணவரின் தீய குணத்தினால் மிகத் துயர முடிவை அடைந்தா ள். இவள் சீதைக்கு நிகராக இருந்தாலும், மண்டோதரியின் நற்குணங்க ளை அறியாமல் போனது இராவணின் துரதிர்ஷ்டம். இது புராண இதிகாச க் கதையாக இருந்தாலும் தற்போதைய பல்வேறு சம்பவங்களுக்கும், பதில் அளிக்கும் விதத்திலேயே உள்ளது.
ஆனால் நாம் இராவணனை பற்றி நினைக்கும் போதே , ஒரு கொடுரமான அசுரன் பல்வேறு அநியாயங்கள் செய்தவன் பிறன்மனை கவர்ந்தவன் என அறியபட்டலும்,இராவணன் ஒரு சிறந்த கலைஞன், இசையை இரசிப் பதிலும், பாடுவதிலும், வீணையை மீட்டுவதிலும் இராவணனுக்கு இணையாக யாரும் இல்லை எனச் சொல்லலாம். மேலும், இராவணன் எதிர்காலம் அறிந்தவன் என்றும் சொல்லப்படுபவன். ஒருவேளை இராம, லட்சுமணன் வெறும் மனிதர்களாக இருந்தால், அவர்களை வெல்வது எனக்கு எளிது. ஆனால், அவர்கள் அவதாரங்களாக இருந்தால் அவர்களி ன் அம்புகளுக்கு பலியாகி முக்தி / மோட்சம் அடைவேன் என்றும் அறிந்திருந்தான் என்றும் சொல்லப்படுவதுண்டு.
இராவணனுக்கு உண்மையிலேயே பத்து தலைகள் கிடையாது. இராவ ணனின் தந்தை வைச்ரவ மகரிஷி ஓர் அணிகலனை இராவணனுக்கு பரிசளித்தார். அதை அணியும் போது, ஒளியின் எதிரொளியாக பத்து தலைகள் உள்ளது போலத் தெரியுமாம். உண்மையில் இராவணனுக்கு எண்ணற்ற தலைகள் இருக்கிறது என்பதை போன்ற தோற்றத்திற்கு இது தான் காரணம் என செவிவழி கதைகளில் சொல்லப்படுவதுண்டு. அதே போல் அட்புத்தா இராமாயணதில் (Adbhuta Ramayana), இராவணனுக்கு அண்ணன் ஒருவன் இருந்ததாகவும், அவன் பெயரும் இராவணன் தான் என்றும் அவன் ஆயிரம் தலை இராவணன் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இது எந்த வகையில் உண்மை என்று தெரியவில்லை. இராவண ன் ஆயுர்வேத மருத்துவம் நன்கு கற்றுணர்ந்தவன் எனவும், அதைப்பற்றி பல புத்தகங்கள் எழுதியதாவும், மாமிசம் மற்றும் மாட்டிறைச்சி இவை களை உண்பதால் மனிதர்களுக்கு ஏற்படும் 98 வகையான நோய்களை பற்றியும் இராவணன் ஒரு நூல் எழுதியுள்ளான் எனவும், மேலும் மண் டோதரி கர்ப்பிணியாக இருந்த போது, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் கள் குறித்தும், அதற்கான மருத்துவம் குறித்தும் கூட இராவணன் புத்தகம் எழுதியிருந்தானாம். எது எப்படியோ ஒரு நல்ல மனிதனும், அவன் மனை வியும் அவனின் தீய குணத்தால் அவனும் அழிந்து அவன் குலமும் அழிந்து நாசமானது.
Leave a Reply
You must be logged in to post a comment.