‘சனாதன தர்மம்’ என்பது வர்ண தர்மத்தினையும் ( சாதி வேறுபாட்டினையும்) சேர்த்தே குறிக்கின்றது- திருத்தப்பட்ட வழக்காடு மன்றத் தீர்ப்பு.
அண்மையில் வழக்காடு மன்ற நடுவர் அனிதா சுமந்த் ( நீதிபதி) சனாதனம் குறித்த வழக்கொன்றில் வழங்கிய தீர்ப்பு பெரியளவில் வாதமாகி இருந்தமை தெரிந்ததே ( அது குறித்து நானும் ஒரு முகநூல் பதிவு போட்டிருந்தேன்). அந்தத் தீர்ப்பின் நகல் வழக்காடு மன்றத்தின் இணையத் தளத்திலும் கடந்த 7 ஆம் திகதி வெளியாகி இருந்தது. அதிலுள்ள சில கூறுகள் பலத்த வாத – எதிர் வாதங்களைத் தோற்றுவித்திருந்தன. ‘நாட்டாமை தீர்ப்பினை மாற்றி எழுது’ எனப் பலரும் பொங்கி எழுந்தனர். அதனையடுத்து, அடுத்த நாள் இணையத்தளத்திலிருந்த அத் தீர்ப்பு நீக்கப்பட்டது. மீண்டும் மறுநாள் , அதாவது ஒன்பதாம் திகதி (09-03- 2024) பல மாற்றங்கள் செய்யப்பட்டு, மீண்டும் தீர்ப்பு இணையத்தில் வெளியிடப்பட்டது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களில் ஒன்று ‘சனாதன வரைவிலக்கணம் ‘ தொடர்பானது அதனையே இங்கு பார்க்கப் போகின்றோம்.
முதலில் தீர்ப்பில் சொல்லப்பட்டது:
#”” சனாதனம் தொடர்பாக குப்புசாமி சாத்திரிகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (KSRI) பேராசிரியர்களிடம் வழக்காடு மன்றம் கருத்துக் கேட்டபோது பின்வருமாறு விளக்கம் அளிக்கப்பட்டது.’சனாதனம் என்பதற்கும் பிராமணிய- சூத்திர என்ற வருணாச்சிரம தர்மத்துக்கும் தொடர்பில்லை ‘.
திருத்தப்பட்ட தீர்ப்பு : ” சனாதன தர்மம் பிராமண- சூத்திர என்ற வர்ண வேறுபாட்டினை மட்டும் ( only) பேசவில்லை, அது வேறு விழுமியங்களையும் பேசுகின்றது “.
ஆக இப்போது வழக்காடு மன்றமே சனாதன தர்மம் வர்ண வேறுபாட்டினையும் பேசுகின்றது என்பதனை ஏற்றுக் கொண்டு விட்டது. இந்து மதத்தின் உலகத் தலைவரான ( ஜகத்குரு) சங்கராச்சாரியார் சனாதன தர்மம் என்பது வர்ண தர்மமே என தெய்வத்தின் குரல் நூலில் அடித்துக் கூறியிருந்தமையும் தெரிந்ததே!
எனவே சனாதன தர்மம் என்றால் அது வர்ண வேறுபாட்டினையும் சேர்த்தே ( பிராமண- சூத்திர வேறுபாடு) குறிக்கின்றது என்பது தெளிவாகின்றது
அதைத் தானே கிருஸ்ணர் போரிட மறுத்த அருச்சுணனுக்குப் போதிக்கிறார். ‘” நீ போரிடாவிடின் நாம் தோற்றால் எம் பெண்களை பல வர்ண ஆண்கள் மணம் புரிந்து வர்ணசம நிலை குலைந்து விடும். ஆகையால் நீ போர் புரி. இந்த வர்ணத்தை நானே தோற்றுவித்தேன். இனி இதை யாருமே அழிக்க முடியாது ” என்கிறார்.
அப்படியானால் நடைபெற்ற போர் நீதிக்காக நடை பெறவில்லை , வர்ணத்தைக் காக்கவே என்றாகின்றது ?.
கடவுளே அவதாரமாக வந்தாலும் மக்களிடம் பாகுபாடு கற்பிக்கப் படுகின்றது ?. அந்தக் கடவுள் தேவைதானா ????.
Rani Raja `தர்மம் அழியும் போது மீண்டும் நான் அவதாரம் எடுப்பேன்` எனக் கிருசுணர் சொன்னதனைப் பலரும் பிழையாக அறத்தினைக் காக்க வருவார் என விளங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் நீங்கள் சொன்னதுதான் சரி. அவர் சொன்னது வர்ண தர்மம் அழியும் போது அதனைக் காக்கவே நான் வருவேன் என்றார்.
1616
வர்ணாச்சிரம் பிறப்பினடிப்படையில் உருவாக்கப்படவில்லை, தொழிலின் அடிப்படையில் உருவானது?
கீழுள்ள தீர்ப்பினைப் பாருங்கள் ( படம் காண்க).
# “சாதியமைப்பு கடந்த நூற்றாண்டில்தான் உருவானது”# எனச் சொல்லப்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டுக்கு முன் சாதியமைப்பு இருக்கவில்லையா! நந்தனார் எத்தனையாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்? பகவத்கீதையிலேயே சாதி (ஜாதி) என்ற சொல் உள்ளதே!
# ” வர்ணாச்சிரம் பிறப்பினடிப்படையில் உருவாக்கப்படவில்லை, தொழிலின் அடிப்படையில் உருவானது” # . வர்ணாச்சிரமத்தில் தொழில்களே பிறப்பினடிப் படையில் தானே உருவாக்கப்படுகின்றன. பகவத்கீதையின் 9 ஆவது இயலின் 32 ஆவது பாடலில் ‘ பாவயோனியில் பிறந்த பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள் கூட என்னிடத்தில் பற்று வைத்தால் அவர்களையும் உயர்த்துவேன்’ என கிருசுணர் கூறுகின்றாரே! அங்கு பிறப்புப் பற்றிப் பேசப்படவில்லையா? ரிக் வேத புருச சூத்திரம் பத்தாவது பாடலில் வர்ணங்கள் பிறப்பதே ( சூத்திரன் காலில் இருந்து, பிராமணன் தலையிலிருந்து…) பிறப்பினடிப்படையில்தானே! வர்ணங்கள்தான் மேலும் உடைந்து சாதிகள் ஆகின. இங்கு ‘ஜாதி’ என்ற சொல்லின் வேர்ச் சொல்லான ‘ஜா’ என்பதே பிறப்பினைத்தானே குறிக்கின்றது ( காட்டு : வனஜா = வனத்தில் பிறந்தவள், கிரிஜா = மலையில் பிறந்தவள்). இப்படியிருக்க வர்ணாச்சிரமம் பிறப்பினடிப்படையிலானது அல்ல என எவ்வாறு கூற முடியும்!
வழக்காடு மன்ற நடுவர்களாகவே ( மிகப் பெருமளவுக்கு) குறித்த ஒரு வர்ணத்தில் பிறந்தோர் மட்டுமே வர முடியும் என்கின்ற மறைமுக ஏற்பாடுள்ள நாட்டில் வழங்கப்படும் தீர்ப்புகளில் இத்தகைய கருத்துகள் வருவது ஒன்றும் வியப்பானதல்ல, எனினும்
‘ முழுப் பூசணிக்காயினைச் சோற்றுக்குள் மறைக்க முடியாது’ .
Leave a Reply
You must be logged in to post a comment.