Thai Pongal: Canvas of Rice and Devotion

January 15, 2024

The vibrant and sacred festival of Pongal is one of the most important festivals celebrated by Tamil people across the world.It is a magnificent festival of thanksgiving and appreciation for a bountiful harvest. It is celebrated most gloriously in the farming communities across Sri Lanka and India. The ancient rituals and cooking preparations appreciate every positive element associated with agriculture. The Pongal dish and the process of its preparation are part of the symbolism, both conceptually and materially.

It celebrates the joy of a rewarding harvest. The cooking transforms the gift of agriculture into nourishment for the gods and the community on a day that Tamils traditionally believe marks the end of the Winter Solstice and starts the Sun God’s journey northwards. The blessing of abundance by the Goddess Pongal (Uma/Parvati) is symbolically marked with the dish “boiling over”.

According to tradition, the festival marks the end of the winter solstice and the start of the Sun’s six-month-long journey northwards when the Sun enters the Capricorn. The festival is named after the ceremonial “Pongal”, which means “to boil” and refers to the traditional dish prepared from the new harvest of rice boiled in fresh milk with jaggery. To mark the festival, the Pongal sweet dish is prepared, first reverently offered to the Gods and Goddesses. It is traditionally an occasion for decorating rice-powder-based kolam artworks, offering prayers within the home, kovils, getting together with family and friends, and exchanging gifts to renew social bonds of solidarity.

Tracing the roots

Thai refers to the name of the 10th month in the Tamil calendar, while Pongal (from pongu) connotes “boiling over” or “overflow.” Pongal is also the name of a sweetened dish of rice boiled in milk and jaggery that is ritually consumed on this day. It is the succulent signature dish of this festival when the entire family gathers with a spirit of overwhelming gratitude. Pongal has its roots in the Sangam Period roughly identified from the sixth century BC to the second century AD. Legends say that the Pongal celebration is not less than 2,000 years old.

The principal theme of Pongal is thanking the Sun God (Surya), the forces of Nature, and the farm animals and people who support agriculture. It shows how important agriculture and dairy farming are, within the Tamil community. Agriculture feeds and sustains human life.

The history of the Pongal dish in a festive and religious context can be traced to the Chola period. It appears in numerous texts and inscriptions with various spellings. The festival’s most significant practice is the preparation of the traditional “pongal” dish. It utilises freshly harvested rice and is prepared by boiling it in milk and raw cane sugar (jaggery). Sometimes additional ingredients are added to the sweet dish; they are cardamom, raisins, green gram (split), and cashew nuts. Other ingredients include coconut and ghee (clarified butter from cow milk). Along with the sweet version of the Pongal dish, some cook other versions such as salty and savoury (venpongal).

In some communities, women take their cooking pots near a kovil of their choice and cook together as a social event. This is embellished with a spiritual aura and also to invoke greater divine blessings. I have witnessed this ritual in my travels to Jaffna, and the atmosphere is very friendly as people come together. The cooking is done in the morning’s sunlight, usually on a porch or courtyard and at times under the shade of a large tree. The Khomba tree is the desired tree as it also denotes purity due to its herbal charm. The cooking is done in a clay pot that is neatly garlanded with leaves or flowers, sometimes tied with a piece of turmeric root or marked with pattern artwork called kolam. It is either cooked at home or in community gatherings such as in Hindu kovils or village spaces.

The sweet Pongal dish is dedicated to the Sun God, Surya. Surya is one of the major five deities in Hinduism, considered as equivalent deities in Panchayatana puja and means to realize Brahman in the Smarta tradition. Surya is depicted with a Chakra, also interpreted as a Dharmachakra. Surya is the lord of Simha (Leo), one of the 12 constellations in the Zodiac system of Hindu astrology. Surya or Ravi is the basis of Ravivara, or Sunday, in the Hindu calendar. Major Hindu and Tamil festivals and pilgrimages in reverence for Surya include Makar Sankranti, Pongal, Samba Dashami, Ratha Sapthami, Chath puja and Kumbh Mela.

Diverse traditions

Tamil Hindus decorate their homes with banana and mango leaves and embellish the entrance space before homes, corridors and doors with decorative floral or geometric patterns drawn using coloured rice flour. This ancient design is known as kolam. Since the Tamil population is worldwide, the practice of kolam is found around the world, including Singapore, Malaysia, Indonesia, Thailand, Sri Lanka and a few other Asian countries.

A kolam is a geometrical line drawing composed of straight lines, curves and loops, drawn around a grid pattern of dots. In Tamil Nadu and Sri Lanka, it is widely practised by female family members in front of the main entrance to the residence.

In cities, the day marks the ritual visit to nearby Hindu kovils for prayers. Kovils and communities hold processions by parading icons from the sanctum of the temple in wooden chariots, drama-dance performances encouraging social gatherings and renewal of community bonds.

Community Pongal is an event where families gather at ceremonial worship. It becomes an important part of the worship, starting from selecting the pot, igniting the fire and other rituals. Sugarcane sticks, bananas and coconuts are also offered. Attukal Pongala is a 10-day religious festival celebrated at the Attukal Bhagavathy Temple in Thiruvananthapuram in the Indian state of Kerala. On the ninth day, there is a huge gathering of millions of women in the Kovil surroundings. These women prepare a divine food made of rice in earthen pots and offer it to the Attukal Amma (Goddess of the Temple). The pongala preparation starts with the ritual called ‘Aduppuvettu’. This is the lighting of the pongala hearth placed inside the temple by the chief priest. This is the earliest Pongala festival in Kerala.

Mattu Pongal is celebrated the day after Surya Pongal. Mattu refers to “cow, bullock, cattle”, and Tamil Hindus regard cattle as a source of wealth for providing dairy products, fertiliser, transportation and agricultural aid. On Mattu Pongal, cattle are respectfully adorned with flower garlands. Their robust horns are painted. After prayers, they are offered bananas, and fed with a special meal and venerated.

Canvas of Rice and Devotion

———————————————————————————————————-

தைப்பொங்கல் பண்டிகை இப்போது சமயங் கடந்த தமிழ்ப் பண்டிகை ஆகிவிட்டது. சங்க காலத்தில் இருந்தே தமிழர் வழக்கில் இருந்த பண்டிகை போலத் தைப்பொங்கல் தமிழர் அடையாளமாக உருவேற்றப்படுகின்றது. உண்மையில் சங்க காலம் தொட்டு வழக்கில் இருந்துவருகின்ற ஒரேஒரு தமிழர் பண்டிகை கார்த்திகை தீபம் ஆகும். இது சங்க இலக்கியங்களில்

“அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுவிளக்கு உறுத்து மாலை தூக்கி”

எனத் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இதையே 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் மயிலாப்பூரில் தாம் அக்காலத்தில் கொண்டாடப்படும் பல விழாக்களையும் பட்டியலிட்டுப் பாடிய பூம்பாவைப் பதிகத்தின் பதினொரு பாடல்களில்

“……… தொல் கார்த்திகை நாள்……..
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”

என்று ஆவணப்படுத்தியுள்ளார்.

ஆனால் தைந்நீராடல் பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும், தைப்பொங்கல் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலோ, அதற்குப் பின் வந்த ஐம்பெருங்காப்பி யங்களிலேயோ, பழந்தமிழ் இலக்கியங்களிலேயோ காணப்படவில்லை. பல விழாக்களையும் பட்டியலிட்ட சம்பந்தர்

“தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”

என்று தை மாதத்தில் கொண்டாடப்படும் விழாவாகத் தைப்பூசத்தைப் பற்றிக்குறிப்பிடும் சம்பந்தர் தைபொங்கல் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. பொது ஆண்டு 1310 இல் தென்னிலங்கையில் எழுதப்பட்ட தமிழ் நூலான சரசோதிமாலை சித்திரை வருடப்பிறப்பு, ஈழத்துச் சைவ மரபில் சித்திரா பௌர்ணமியில் மாதாவழி முன்னோருக்குச் செய்யும் பித்ருகடன், தீபாவளி முதலான பல விரதங்களையும் பண்ண்டிகைகளையும் பற்றிக்கூறுகின்றது. ஆயினும் இதிலேயும் தைப்பொங்கல் பற்றி எந்த விதமான குறிப்புகளும் இல்லை.

இன்றும் இஸ்லாமியத் தமிழர்கள் யாரும் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில்லை. கிறிஸ்தவத் தமிழர்களும் பொங்கல் கொண்டாடுதல் அவர்களின் மத நம்பிக்கைக்கு தகாது என்றே ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வரை அவர்களின் போதகர்களினாலும், திருச்சபைகளினாலும் அறிவுறுத்தப்பட்டு வந்தது வெளிப்படை. கடந்த சில ஆண்டுகளாத்தான் அவர்கள் தமது தேவாலயங்களிலும், வீடுகளிலும் பொங்கத் தொடங்கியுள்ளனர்.

ஆகவே தைப்பொங்கல் பண்டுதொட்டு வழமையில் இருந்துவரும் தமிழர் பண்டிகை எனப் பொதுமைப்படுத்தல் பொருந்தாது.

அதே சமயம் அது இந்தியாவிலே தமிழர் தவிர்ந்த ஏனைய சமூகங்களிடையிலேயும் வழக்கில் உள்ள மகர சங்கிராந்தி எனும் இந்து பண்டிகையாகவும் பொதுமைப்படுத்த முடியாது. மகர சங்கிராந்தியில் பல சமூகங்களிலும் பலவிதமான வழிபாடுகள் இருந்தாலும் அதை அறுவடையுடனும், உழவுத்தொழிலுடனும், சூரியனுடனும் தொடர்பு படுத்திக்கொண்டாடும் தமிழர் மரபு தனித்துவமானது.

இடையிலே அது சில வருடங்கள் வழிபாட்டுக் கூறுகளை நீக்கி, தைப் பொங்கல் என்பது உழவர் திருநாள் என்று விவசாயிகள் தமது நெல் விளைச்சலை, அறுவடையைக் கொண்டாடும் நாளாக திராவிட இயக்கங்களால் முற்படுத்தப்பட்டது. கனடா, அமெரிக்கா நாடுகளில் வாழும் புலர் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இதனால்தான் பொங்கலை அங்குள்ளோர் ஐப்பசி மாதம் அறுவடைக்குப் பின்னர் கொண்டாடும் நன்றி நவிலல் பண்டிகையுடன் ஒப்பிடுகின்றனர். அங்குள்ள அரசியல்வாதிகளும், சமூகப் பிரமுகர்களும் அவ்வாறே பொங்கலைப் புரிந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தும் பிரசாரம் செய்தும் வருகின்றார்கள்.

உழவர் திருநாளாக இருந்தாலும் அது வெறுமனே அறுவடைக்கு நன்றி சொல்வதாக இல்லாமல் அதற்கு காரணமான சூரியனுக்கு நன்றி சொல்லி வெளியில் சூரியனுக்காகப் பொங்கிப் படைத்து வழிபடும் மரபே தைப்பொங்கல் ஆகும்.

ஆனாலும் அரசியல் நோக்கத்துக்காகவும், தாம் தாம் பின்பற்றும் அரசியல் சமயக் கொள்கைகளுக்காகவும் பொங்கலின் மையக்கருவான சூரிய வழிபாட்டையும், சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்லுதலையும் மறைத்தும், மறுத்தும் இருட்டடிப்புச் செய்து வருகின்றனர். இளம் சிறார்களின் பிஞ்சு உள்ளங்களிலும் அவ்வாறே பதிய வைக்கின்றனர்.

சூரியனை வழிபடும் மரபு உலக நாகரிகங்கள் பலவற்றிலும் காணப்படும் மிகவும் தொன்மையான மரபாகும்.

”ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!!

என்றான் இளங்கோ சிலப்பதிகாராத்தில்.

”பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டா ஆங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி”

என்பது சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படை வரிகள்.

“மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர் புகழ் ஞாயிறு”

என்று தொடங்குகின்றது மெய்கண்டார் எழுதிய சைவத்தின் முதன்மை நூலாகிய சிவஞானபோதம் நூலின் ஆரம்பத்தில் உள்ள சிறப்புப் பாயிரம்.

இதற்கு உரை செய்த சிவஞான சுவாமிகள்.

”ஒன்றோடு ஒன்று ஒவ்வாத எல்லாச் சமயத்தாராலும் புகழப்படுதலில் பலர் புகழ் ஞாயிறு என்றார்”. என உரை எழுதியுள்ளார்.

இவ்வாறு சூரியன் அனைவர்க்கும் பொதுவானவன் எனும் கருத்து சைவர்களின் பிரதான வேதப் பகுதியாக உள்ள யசுர் வேதத்தின் ஸ்ரீ ருத்திரத்திலும் பின்வருமாறு கூறப்படுகின்றது.

“எவர் நீல கண்டத்தை உடையவராக விளங்குகின்றாரோ அவரே சிவந்த வண்ணம் உடையவராக இந்த சூரியனாக வெளிக் கிளம்புகின்றார். சூரிய வடிவினனாகிய இந்த உருத்திரனை இடையர்களுங்கூடக் காண்கின்றனர்; தண்ணீர் அள்ளி வரும் பெண்களும் பார்க்கின்றனர்; இந்த உருத்திரனை அனைத்துப் பிராணிகளுங்கூடக் காண்கின்றன. அங்ஙனம் அனைவராலும் தரிசிக்கப்படும் இந்தச் சூரியன் நம்மை இன்புறச் செய்யட்டும்”.

இதனையே

”தென்னாடுடைய சிவனே போற்றி
எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

என்கின்றது தமிழ் மறையாகிய திருவாசகம். ”தென்னாடாகிய தமிழ் நாட்டுச் சைவர்கள் சிவன் என்று போற்றி வழிபடும் சிவனே, எந் நாட்டவர்களாலும் கொண்டாடி வழிபடப்படும் இறைவனும் ஆவான்” என்பது இதன் பொருள் ஆகும்..

சிவாகம முறைப்படி செய்யும் தனிப்பட்ட பூசையான அன்மார்த்த சிவலிங்க பூசையில் முதலில் சூரிய பூசையின் பின்னரே சிவலிங்க பூசை செய்யப்படுவதும் இக்காரணம் பற்றியே. முதலில் அனைத்து சமயத்தினருக்கும் பொதுவான கடவுளை சூரியனாக

வணங்கி, அவ்வச் சமயங்களின் ஊடாகவும் இறையடி சேர்ந்த ”அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்களை” தேசுச் சண்டர் எனும் ஒளிச் சண்டரின் சண்டேசுர பூசையாலும் வணங்கியே எமது சிவனை வழிபடத் தொடங்குகின்றோம்.

இவ்வாறு சமய பேதங்கள் கடந்து அனைவராலும் கொண்டாடப்படும், போற்றப்படும், நன்றியோடு நினையப்படும், வழிபடப்படும் சூரியனைத் தமிழர்களாகிய நாம் போற்றிக் கொண்டாடி நன்றியோடு நினைந்து வழிபடும் திருநாளே தைப் பொங்கல் திருநாள் ஆகும்.

www.knowingourroots.com

Be the first to comment

Leave a Reply