வள்ளுவனின் வாரிசு! நீலகேசியின் தொடர்ச்சி! சித்தர்களின் சீர்மிகு வளர்ச்சி! பாரதிதாசனின் வார்ப்பு !
உதயநிதியைக் கொண்டாடுவோம்!
இரண்டாயிரம் ஆண்டு சித்தாந்தப் போர்.
சனாதன எதிர்ப்பு போர் என்பது தமிழகத்தில் குறைந்தபட்சம் 2000 ஆண்டுகள் வரலாறு கொண்டது.
1)திருவள்ளுவர்!
2000 ஆண்டுகளுக்கு முன்பே
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
எனக் கூறி பிறப்பின் அடிப்படையான சனாதன தர்மத்தை மிகவும் தெளிவாக, எந்த சந்தேகமும் இல்லாமல் எதிர்த்தவர் திருவள்ளுவர் என்பது நாம் அறிந்ததே!
2)நீலகேசியிலிருந்து ஒரு துளி.
சமண சமய நூலான இது ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல்.
இதன்காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி என கணிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள வேத வாத சருக்கத்தில் இருந்து ஒரு பாடல்.
எல்லா மக்களும் (இறைவன்) நான்முகனிடமே பிறந்ததாகக் கூறும் நீங்கள்
உயர்வு தாழ்வு கற்பிப்பதேன்! தலையில் பிறத்தல் உயர்வும் காலில் பிறத்தல்
இழிவும் எனின், கடவுளாகிய நான்முகன் உடலிலே உயர்வு தாழ்வு ஏற்படுமோ?
உங்கள் நூல்களிலேயே விஷ்ணு தலையில் பிறந்த வியர்வை தீயதாகவும்
காலில் பிறந்த கங்கை தூயதாகவும்; உந்தியிற் பிறந்த நான்முகன் தெய்வமாகவும், காதுகளில் பிறந்த மது கைடபர் தீயோராகவும் கூறப்பட்டிருக்கிறேதே?
3)சித்தர்கள்.
கிட்டத்தட்ட நீலகேசி காலத்தில் உருவான சித்தர் பாடல்களில் சில.
பார்ப்பனர்கள் கட்டிய பாழான வேதத்தைச் சோதித்துத் தள்ளடி குதம்பாய், சோதித்துத் தள்ளடி!
– குதம்ப சித்தர்.
சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரங்கள் பல
தந்திரம்,புராணங் காலை சாற்றும் ,ஆகமம்
விதம் விதமான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடுபாம்பே!
– பாம்பாட்டி சித்தர்.
ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி,
வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
வீண்சாதி மற்றவெல்லாம்.
குதம்பை சித்தர்.
4)வள்ளலார்.
“சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே”
– என்றும்
“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே.’‘
எனப் பாடியவர்.
“நான்கு வருணங்களும், நால்வகை ஆசிரமங்களும் (பிரமச்சரியம், கிருகத்தம், வானப் பிரகத்தம், சந்நியாசம்) ஆசாரங்களும் (சாதி, மத, குல, ஒழுக்கங்கள்) சொன்ன சாத்திர சரிதங்கள் எல்லாமே பிள்ளை விளையாட்டு என்றும், மேல் வருணம், தோல் வருணம் கண்டு அறிவார் இல்லை என்றும் 1870களின் தொடக்கத்தில் துணிந்து எழுதியவர் இராமலிங்கர்.
5) பெரியார்.
பெரியாரின் சனாதன எதிர்ப்பு, செயல்பாடு அனைவரும் நன்கு அறிந்ததே.
6)பாரதிதாசன்.
பார்ப்பனன் உயர்வு என்கிறீர்கள், சத்திரி யனை இரண்டாம் என்கிறீர்கள், வைசியர் அவன் அண்டைபடி என்கிறீர்கள், சூத்திரன் கடைசி என்கிறீர்கள். “பஞ்சமன்” என்கிறீர்கள்
இந்த நிலையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவைகள் உமது இதயத்தில் இடம் பெறுவது எவ்வாறு?
“முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே
தோளில் பிறப்பதுவும் உண்டோ தொழும் பனே
இடையில் பிறப்பதுவும் உண்டோ எருமையே
காலில் பிறப்பதுவும் உண்டோ கழுதையே
நான்முகன் என்பான் உளனோ நாயே
புளுகடா புகன்றவையெலாம் போக்கிலியே”
பாரதிதாசன்.
இவ்வாறு தமிழ் மண்ணின் சனாதன எதிர்ப்பு என்பது நீண்டநெடிய வரலாறும், பாரம்பரியமும் கொண்டது.
அதன் தொடர்ச்சி தான் தமுஎகச நடத்திய “சனாதான ஒழிப்பு மாநாடும், அங்கு உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய பேச்சும்.
தேவ்தத் பட்நாயக்
நான் இவர் குறித்து கேள்விப் பட்டிருக்கிறேன் அனால் எதுவும் வாசித்ததில்லை . இந்த சனாதனம் விவகாரம் வந்த போது வடக்கில் ஊடகங்களை இதை எப்படி எழுதும் என்று ஊகிக்திருந்தேன் . ஆனால் அறிவார்ந்த தரப்பில் இது குறித்து யாராவது பேச முன்வருவார்களா என்ற ஐயம் இருந்தது . அவ்வாறான குரல்கள் இடது சாரி தரப்பில் இருந்து எழும் ஆனால் மரபார்ந்த தரப்பை மனதில் கொண்டு அவர்களால் பேச முடியாது .
ஆனால் இந்து மத வரலாறு , தத்துவம் போன்ற விஷயங்களில் பரீட்சையம் உள்ள யாரும் இப்படி பேசி கேட்டதில்லை .இது குறித்து தேவ்தத் பட்நாயக் பேச கேட்டது ஆச்சரியமாக இருந்தது . மரபார்ந்த கோணத்தில் இருந்து பேசினாலும் சனாதனம் என்ன என்பதை தெளிவாக போட்டு உடைக்கிறார் ஹிந்தியில் பேசுகிறார் , ஆங்கில சப்டைட்டில் உண்டு .
இந்து மதம் பெயர் வந்த விதம் , சனாதனம் என்பது என்ன , அதில் ஆட்சேபகரமாக என்ன உள்ளது , பிற மதங்கள் , இந்துத்துவம் , சாதி அமைப்பு , தீண்டாமை என்று அனைத்து தலைப்புகளையும் தொடுகிறார்.
தமிழர்கள் சனாதனம் பேசுவதில் சிலருக்கு பெரிய ஒவ்வாமை உண்டு அவர்களுக்கு தேனில் தடவித் தருவது போல பேசியிருக்கிறார் தேவ்தத்.தமிழ் தெரியாதவர்களுக்கு இவரின் இந்த காணொளியை பரிந்துரைக்கலாம் . குறிப்பாக மரபான நம்பிக்கை உடையவர்களுக்கு .
இந்த உரை தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய ஒன்று.
இவரின் வேறு உரைகளோ புத்தகங்களோ நான் வாசித்ததில்லை .இந்த பரிந்துரை இந்த உரைக்கு மட்டுமே . காணொளிக்கான சுட்டி கமெண்டில். 5 நிமிடத்தில் ஆரம்பிக்கும்.
Leave a Reply
You must be logged in to post a comment.