ஓகஸ்ட் மாதத்தில் ஒன்றுக்கு இரண்டு நிலா மறைப்புக்கள் அச்சம் அடையத் தேவையில்லை!

ஓகஸ்ட் மாதத்தில் ஒன்றுக்கு இரண்டு நிலா மறைப்புக்கள் அச்சம் அடையத் தேவையில்லை!

 நக்கீரன்

இந்த ஆண்டு வானியலாளர்களுக்கு பெருவிருந்தாக அமைந்துள்ள ஆண்டு. இந்த ஆண்டில் 4 நிலா மறைப்பு நிகழயிருக்கிறது. ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 2 நிலாமறைப்பு இடம் பெறும்.

யூலை 03, ஓகஸ்ட் 01 இந்த இரண்டு நாட்களிலும் நிலா மறைப்பு  நிகழ்வு  முடிந்துவிட்டது. ஓகஸ்ட் 30, ஒக்தோபர் 28 நாட்களில் நிலா மறைப்பு நிகழ்வு நடக்க இருக்கிறது. முழு நிலா, பகுதி நிலா, புற நிழல்  என நிலா மறைப்பு என்று மூன்று வகையான நிலா மறைப்புக்கள் இடம்பெறுகின்றன. நிலா மற்றும்  ஞாயிறு மறைப்புக்கள் தொடர்பாக பல கதைகள் சொல்லப்பட்டாலும் அறிவியல் அடிப்படையில் இது இயற்கை வானியல் நிகழ்வுகளாகும். நிலா மறைப்பு எப்போது தெரியும் என்பது ஒருவர் இருக்கும் இடத்தைப் பொறுத்தது.

2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மே 5 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது பகுதி நிலா மறைப்பாக நிகழ்ந்தது. நிலா மறைப்பு முழுநிலா (பவுர்ணமி)  நாளிலும் சூரிய மறைப்பு  புதுநிலா (அமாவாசை)  நாட்களிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு நிலா மறைப்பும் இரண்டு ஞாயிறு  மறைப்பும் நிகழும். இந்த ஆண்டு நிகழ்ந்த மற்றும் நிகழவிருக்கிற நிலா மற்றும் ஞாயிறு மறைப்புக்கள் பின்வருமாறு.

ஏப்ரில்  20         – முழு ஞாயிறு மறைப்பு

மே 5                 –  பகுதி நிலா மறைப்பு

ஓகஸ்ட் 01        – பெருநிலா மறைப்பு

ஓகஸ்ட்  30       –  பெருநிலா மறைப்பு

ஒக்தோபர் 14   – வளைவு ஞாயிறு மறைப்பு

ஒக்தோபர் 28  –  பகுதி நிலா மறைப்பு

அடுத்த நிலா மறைப்பு 2024 ஆம் ஆண்டு மார்ச் 25  இல் நிகழ இருக்கிறது.  

முழு நிலா மறைப்பு (total eclipse) புவியின் நிழல்,  நிலாவின் முழு மேற்பரப்பிலும் வீசப்படுகிறது. பகுதி நிலா மறைப்பின் (partial lunar eclipse)  போது, நிலாவின் ஒரு பகுதி மட்டுமே புவியின் நிழலுக்குள் நுழைகிறது. இது நிலா மேற்பரப்பில் இருந்து ஒரு “கடியை” எடுப்பது போல் தோன்றலாம். புவியின் நிழல் நிலவின் புவிக்கு நேர் பக்கத்தில் இருட்டாகத் தோன்றும். நாசாவின் கூற்றுப்படி, சூரியன், புவி மற்றும் நிலா எவ்வாறு சீரமைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்துத்தான் எவ்வளவு “கடி” யை பார்க்கிறோம் என்பது தீர்மானிக்கப்படும்.  அரைநிழல் நிலா மறைப்பு (penumbral lunar eclipse) புவியின் நிழலின் மெல்லிய வெளிப்புறப் பகுதி நிலாவின் மேற்பரப்பில் வீசப்படுகிறது. இந்த வகை மறைப்பு மற்ற இரு கிரகணங்களைப் போல வியக்கத்தக்கதாக இருக்காது, அதைப் பார்ப்பதும் கடினம்.

ஓகஸ்ட் 01 இல் இடம்பெற்ற நிலா மறைப்பை பெருநிலா (super moon)  என அழைக்கப் படுகிறது. ஓகஸ்ட் 30 இல் இடம்பெற இருக்கும் நிலா மறைப்பு 2023 ஆம் ஆண்டிற்கான மிக நெருக்கமான பெருநிலாவாக இருக்கும்.  மேலும் இது ஒரு மாத நீல நிலவு ஆகும். ஏனென்றால் இது ஒரு நாள்காட்டி  மாதத்தில் இரண்டாவது முழு நிலவு ஆகும். அடுத்த நீல நிலா 2026 மே 31 வரை இல்லை.   முழு நிலவு அதன் சுற்றுப்பாதையில் புவியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் போது ஏற்படும், ஆண்டின் மங்கலான நிலாவை விட 17 விழுக்காடு  பெரியதாகவும் 30 விழுக்காடு  பிரகாசமாகவும் தோன்றுகிறது. 17 விழுக்காடு  கண்டறியக்கூடிய அளவில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், முழு பெருநிலா  ஆண்டு முழுவதும் மற்ற நிலவுகளை விட சற்று பிரகாசமாக இருக்கும். பொதுவாக ஒரு நிலா மறைப்பு 3 மணித்தியாலங்கள் நீடிக்கும்.( https://youtu.be/qZaxqMyP9tU)

ஒக்தோபர் 28 அன்று இடம்பெறும் நிலா மறைப்பு அய்ரோப்பா, ஆசியா,  அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, வடக்கு/கிழக்கு தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், வட துருவம் மற்றும் தென்துருவம்  ஆகிய பகுதிகளில் காணப்படும். சூரியன் மற்றும் நிலாவுக்கு இடையில் புவி இருக்கும்போது நிலா மறைப்பு ஏற்படுகிறது. நிலாவின் மேற்பரப்பில் ஒரு நிழல் வீசப்படுகிறது. அவை முழு நிலாவின் போது மட்டுமே நிகழக்கூடியவை,

நிலா மறைப்பின் போது ஞாயிறும் நிலாவும் புவியின் எதிர் பக்கங்களில் உள்ளன, மேலும் நிலாவின் ஒளிரும் பக்கம் புவியின் இரவு பக்கத்தை எதிர்கொள்கிறது.  நிலா மறைப்பு முழுநிலா நாளிலும் ஞாயிறு மறைப்பு புதுநிலா (அமாவாசை) நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு நிலா கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் நிகழும் நிலா கிரகணமும் பகல் நேரத்தில் நிகழும் சூரிய கிரகணமும்தான் இந்தியாவில் தெரியும்.

இந்துமத புராணங்களில் நிலா மறைப்பு என்பது நிலாவுக்கு  உள்ள இரண்டு எதிரிகளான இராகுவும் கேதுவும் நிலாவை பிடித்துக் கொல்ல முயற்சி செய்கின்றன எனவும் ஒவ்வொரு முறையும் நிலா அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறறு  என்பதாக புராணிகர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த இராகுவும் கேதுவும்  நிலப்பரப்பினைக் கொண்ட உண்மைக் கோள்கள் அல்ல.  புவியை நிலா சுற்றும் போது அதன் சுற்றுப்பாதை மேலும் கீழுமாக இரண்டுமுறை புவியின் பாதையை வெட்டுகின்றன. இந்த வெட்டுப் புள்ளிகளையே சோதிடர்கள் இராகு, கேது என அழைக்கிறார்கள்.

ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிலாமறைப்பு காலத்தில்  அல்லது ஞாயிறுமறைப்பு காலத்தில்   பொது மக்களிடம் ஒருவித  அச்சம் இருந்தது. மறைப்பு முடியும் வரை நீர் அருந்தகூடாது, உணவு உண்ணக்கூடாது, கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது, மனநலம் பாதிக்கப்படும், தோசங்கள் உண்டாகும் எனச் சோதிடர்களும் கோயில் பூசாரிகளும் மக்களைப் பயமுறுத்தி வைத்துள்ளார்கள். இதனால் சமைக்காமல் இருப்பது, பின் மறைப்பு முடிந்ததும் குளித்துவிட்டுச் சமைத்துச் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் கிரகணத்தின் போது கோயில் நடை சாத்தும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.   அறிவியல் வளர்ச்சி காரணமாக  நிலா – ஞாயிறு மறைப்பு வந்து போவதையிட்டுப்  பெரும்பான்மையோர் கவலைப்படுவதில்லை.

அறிவியல் அடிப்படையில் நிலா மறைப்பின் போது அதே நிலா, அதே ஞாயிறுதான் வருகிறது. ஒரேயொரு வேறுபாடு. மறைப்புக் காலத்தில் ஞாயிறு, புவி மற்றும் நிலா ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. ஞாயிறு, நிலா, புவி  நேர்க் கோட்டில் வரும் போது  சூரிய மறைப்பு ஏற்படுகிறது.  இந்த மூன்றில்  நட்சத்திரமான சூரியனுக்கு மட்டுமே சுய ஒளி உண்டு.

மேலும் புவி ஞாயிறைச் சுற்றி வரும் பாதை வட்ட வடிவமாக இல்லை. அது சற்றே ஒரு நீள்வட்ட வடிவில் (ellipse) இருக்கிறது. இதனால்  2018  ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதியன்று புவியானது (ஒப்புநோக்குகையில்) சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும். அன்றைய தினம் சூரியனுக்கும் புவிக்கும்  உள்ள தூரம் 14 கோடியே 70 இலட்சம் கிலோ மீட்டராக இருக்கும். இதோடு ஒப்பிட்டால் 2018 யூலை 6 ஆம் தேதியன்று புவியானது (ஒப்புநோக்குகையில்) மிகத் தொலைவில் இருக்கும். அன்றைய தினம் ஞாயிறுக்கு உள்ள தூரம் சுமார் 15 கோடியே 20 இலட்சம் கிலோ மீட்டராக இருக்கும். இத்தூரத்தை ஒளி 499 நொடிகளில் (8.32 நிமிடங்கள்) கடக்கின்றது. வேறு விதமாகச் சொன்னால் ஞாயிற்றின் ஒளி புவியை வந்தடைய 8.32 நிமிடங்கள் எடுக்கிறது.

புவியின் சுற்றுப்பாதை மட்டுமல்ல, புவியைச் சுற்றி வருகிற நிலாவின் சுற்றுப்பாதையும் இப்படி நீள் வட்டமாகத்தான் இருக்கிறது. நிலா புவிக்கு மிக அருகாமையில் இருக்கும்போது நிலாவுக்கு உள்ள தொலைவு 3,56,509 கிலோ மீட்டர். மிகத் தொலைவில் இருக்கும்போது நிலாவுக்கு உள்ள தூரம் 4,06,662 கிலோ மீட்டர். சராசரி தூரம் 384,475 கிமீ (238,900 மைல்கள்). நிலா தனது அச்சில் 5 பாகை சாய்ந்துள்ளது.

சூரியனுக்கு உள்ள தூரத்துக்கும் புவியில் குளிர்காலம், வெயில் காலம் ஏற்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. குளிர்காலமும் வெயில் காலமும் புவியின் சாய்மானத்தால் (tilt) ஏற்படுவதாகும். புவியானது தனது அச்சில் 23.5 டிகிரி சாய்ந்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது. அந்த அளவில் சூரியனின் கிரணங்கள் செங்குத்தாக விழுகிற பகுதிகளில் கோடைக் காலம் ஏற்படுகிறது. ஏப்ரில் முதல் யூலை, ஓகஸ்ட் வரையிலான மாதங்களில் புவியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் ஞாயிற்றின் கதிர்கள் ள் செங்குத்தாக விழுகின்றன. எனவே அந்தப் பகுதிகளில் கோடைகாலம் நிலவுகிறது. அதே பகுதிகளில் டிசெம்பர், சனவரி,  பெப்ரவரி மாதங்களில்  ஞாயிறு மறைப்புகள் மிகவும் சாய்வாக விழுகின்றன. எனவே அந்த மாதங்கள் குளிர்காலமாக உள்ளது.

Earth at center with view of moon and sun around, crossing paths twice.

ஒரு காலத்தில் பல்லி சொல்வதைக் கேட்டு தமிழ் மக்கள் பதறினார்கள். ஏதோ கெட்டது நடக்கப் போகிறது எனப் பயந்தார்கள். பஞ்சாங்கத்தில் பல்லி சொல் பயன் பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள்.

பெற்றோர்கள்  நிலா மறைப்பு சரி,  ஞாயிறு மறைப்பு சரி, அவை இயற்கை நிகழ்வுகள் என்பதையும் அவற்றைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதையும்  அவற்றால் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதையும்  தங்கள் பிள்ளைகளுக்கு  கற்றுக்  கொடுக்க வேண்டும்.

  14 கோடியே 70 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும். இத்துடன் ஒப்பிட்டால் 2018 ஜூலை 6-ம் தேதியன்று புவியானது ஒப்புநோக்குகையில் மிகத் தொலைவில் இருக்கும். அன்றைய தினம் சூரியனுக்கு உள்ள தூரம் சுமார் 15 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும்.

உங்கள் நேர மண்டலத்தைப் பொறுத்து, கிரகணத்தின் போது நிலா சிவப்பு நிறமாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள். இது “ரத்த நிலவு” என்று அழைக்கப்படுகிறது.

“ரத்த நிலவு” என்பது அறிவியல் சொல் அல்ல. நிலா முழுமையாக மறையும் போது அது சிவப்பு நிறத்தில் காணப்படும்.

பூமியானது சூரியனைச் சுற்றிச் சுற்றிவருகிறது. ஆனால் புவி சுற்றும் பாதையானது கன கச்சிதமான வட்டமாக இருப்பது இல்லை. மாறாக அது சற்றே நீள் வட்டமாக (ellipse) உள்ளது. இதன் விளைவாக புவியிலிருந்து ஞாயிறு உள்ள தூரம் ஆண்டில் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply