சித்தர் பாடல்கள் – பட்டினத்தார் – ஊரும் சதம் அல்ல
பட்டினத்தாரின் தமிழ் பாடல்கள் மிக மிக எளிமையானவை.
நிலையாமை, பெண்கள் மேல் கொள்ளும் அதீத ஆசை, ஏழைகளுக்கு
உதவுவது, போன்ற கருத்துகளை மிக எளிய தமிழில் பாடியிருக்கிறார்.
உறவுகள் எல்லாம் பொய் என்று சொல்ல வந்த பட்டினத்தார்,
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேருஞ்
சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல,
தேசத்திலேயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே. 13
சதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது
என்று பொருள் .
ஊரும் சதம் அல்ல – எனக்கு சொந்த ஊரு மதுரை அப்படின்பாங்க்ய ..என்னமோ அதை இவருகாசு போட்டு வாங்கின மாதிரி. அங்க பொறந்து வளர்ந்து இருப்பாரு, மிஞ்சி மிஞ்சி போனா ஒரு வீடு இருக்கும். கேட்டா அந்த ஊரே “சொந்த ஊரு” அப்படின்னு சொல்ல வேண்டியது.
உற்றார் சதம் அல்ல – அவனவன் அவன் பொண்டாட்டி புள்ளை, வேலை வெட்டினு
அலைஞ்சுகிட்டு இருக்கான். நம்மள பார்க்க அவனுக்கு எங்க நேரம் இருக்கு ? அது எல்லாம் நிரந்தரம் கிடையாது
உற்று பெற்ற பேரும் சதம் அல்ல – பேரும் புகழும் நிரந்தரம் இல்லை. பேரும்
புகழும் ஒரே நாளில் போய் விடலாம். “அவனா இப்படி செஞ்சான் ? நல்லவன்னு நினைச்சேனே” என்று சொல்லும்படி ஆகிவிடலாம்.
பெண்டீர் சதம் அல்ல – கொட்டி முழக்கி அழுதிடுவார் மயானம் குறுகி எட்டி அடி
வைப்பாரோ கச்சியேகம்பனே என்பார் பட்டினத்தார்..
பிள்ளைகளும் சதம் அல்ல – படிச்சு முடிஞ்சு, கல்யாணம் ஆனவுடன் பிள்ளைகள்
அவர்கள் வாழ்க்கையை பார்க்க போய் விடுவார்கள்.
சீரும் சதம் அல்ல – சொத்து பத்து எல்லாம் நிரந்தரம் அல்ல.
செல்வம் சதம் அல்ல – செல்வம் என்றாலே “செல்வோம்” என்று தானே அர்த்தம். நேற்று
இருந்தது, நாளை போகும். அதுவும் நிரந்தரம் இல்லை.
தேசத்திலே யாரும் சதம் அல்ல – நண்பர்கள், உறவினர்கள், மனைவி, மக்கள், அண்டை
அயல் , யாரும் சதம் அல்ல.
நின் தாள் (பாதங்கள்) சதம் – பின்ன எது தான் நிரந்தரம் என்று கேட்டால், இறைவன் திருவடிகள் தான் நிரந்தரம். கச்சி ஏகம்பனே = காஞ்சி புரத்தில் உள்ள ஏகாம் பரேஸ்வரனே
இரண்டு முறை பாடலை படித்துப் பாருங்கள்.
மனப்பாடம் ஆகிவிடும்.
http://interestingtamilpoems.blogspot.com/2012/03/blog-post_2338.html
Leave a Reply
You must be logged in to post a comment.