வடக்கு – கிழக்கு சிங்களமயமாக்கல்: கொக்கிளாய்

வடக்கு – கிழக்கு சிங்களமயமாக்கல்: கொக்கிளாய்

பாரம்பரிய தமிழர் தாயகத்தில் அரச அனுசரணையுடன் சிங்களமயமாக்கல் குடியேற்றத்தின் நோக்கம் மற்றும் அதன் தாக்கம் பற்றிய விமர்சன மதிப்பீடு

Location Map

அறிமுகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதி பல தசாப்தங்களாக அரச அனுசரணையுடன் சிங்களக் குடியேற்றங்களுக்கு இலக்காகி வருகின்றது. புல்மோட்டை போலவே, முல்லைத்தீவின் கொக்கிளாய்ப் பிரதேசமும் பாரம்பரிய தமிழர் தாயகத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடையிலான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த எல்லையில் அமைந்துள்ளது, மேலும் அரச அனுசரணையுடன் சிங்களக் குடியேற்றங்களுக்கு இலக்காகியுள்ளது. இப்பகுதியின் பெரும்பகுதி மக்கள்தொகை குறைவாகவோ அல்லது முற்றாகவோ இல்லாது இருக்கிறது. 1948 ஆம் ஆண்டில், பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க “பாரம்பரியமாகவும் அரசியல் வழியிலும்” தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகமாக” ஒப்புக்கொண்ட பகுதிகளில் காணி குடியேற்ற செயல்முறையைத் தொடங்கினார். இது முக்கிய பகுதியையும் பாதித்தது. 1948 இல், பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா “தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தமிழர் தாயகத்தில் பாரம்பரியமாகவும் அரசியல் வழியிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகளில் காணி குடியேற்றத் திட்டங்களை முன்னெடுத்தார். இது, இந்த முக்கிய பகுதியையும் பாதித்தது. ¹

தமிழ்க் கிராமங்களான அலம்பில், செம்மலை, நாயாறு, கணுக்கேணி, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் ஆகியவை இந்தியப் பெருங்கடலுக்கும் கொக்கிளாய் மற்றும் நாயாறு ஆகிய கடற்பரப்புகளுக்கும் இடையில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இப்பகுதி பல தசாப்தங்களாக.²  தீவின் மேற்குக் கடற்கரையிலிருந்து பருவகால சிங்களக் குடியேற்றத்தைக் கண்டது. கடந்த காலங்களில், ஒரு சில சிங்களக் குடும்பங்கள் வந்து தமிழ் மீனவர்களுடன் தொழில்செய்து, பரவகாலம் முடிந்ததும் அவர்களது மேற்குக் கரையோர ஊர்களுக்குத் திரும்புவார்கள்.³சுதந்திரத்திற்குப் பிந்தைய தொடக்க ஆண்டுகளில் புலம்பெயர்ந்த நடைமுறைகள் தமிழ் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

எனினும் 1970 களில் இருந்து, அரசாங்கம் சிங்களக் குடியேற்றவாசிகளை⁵  நிரந்தரமாகக் குடியேற ஊக்குவித்து, அவர்களுக்கு நிலம் மற்றும் உதவிகளை வழங்க (அரசாங்கம்) உறுதியளித்தது. மேலும் பெரிய படகுகளின் உரிமையாளர்கள் உட்பட, நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சிங்கள மீனவர்களும் வந்தனர். இது உள்ளூர் தமிழ் மீனவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கியதோடு  சமூகங்களுக்கு இடையில்

பதட்டங்களை அதிகரித்தது.⁶Signboard for the Guru Kanda Rajamaha Vihara, built on the site of a Hindu shrine.

எண்பதுகளில் ஜனாதிபதி ஜெயவர்த்தன “பாரம்பரிய தமிழ் தாயகங்களின் இனக் கட்டமைப்பை இடையூறு விளைவிக்க  மாட்டோம்”என்று உறுதியளித்த போதிலும், கட்டமைப்பு உண்மைகள் வேறுபட்டன.⁷ 1984 ஆம் ஆண்டில்,  தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி தண்டனை பெற்ற குற்றவாளிகள் போன்ற குழுக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 200,000 சிங்களவர்களை வடக்கில் குடியமர்த்துவதன் மூலம் அரசாங்கம் “பயங்கரவாத”  சிக்கலைத் தீர்க்கும் என்று அறிவித்தார்.⁸ 1984 டிசம்பரில், உள்ளூர் மக்களால் இனச் சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை என அழைக்கப்படும் ஒரு செயலில்,,⁹  கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருனாட்டுக்கேணி, நாயாறு,  செம்மலை, குமுழமுனை மற்றும் அலம்பில் என்ற பழைய தமிழ் ஊர்களில் வாழ்ந்த அனைத்துத் தமிழர்களையும்  தங்கள் வீடுவாசல்களை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் கட்டாயப்படுத்தியது.¹⁰  தமிழர்கள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று இராணுவம் தனது வாகனங்களில் நகர்ந்தபடி ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் செய்தது. ¹¹

பல மாதங்கள் மற்றும் பல ஆண்டுகளாக நடந்த போரின் போது தமிழர்கள் மீது இராணுவத்தால் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.¹²   இதன் விளைவாக நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். தமிழர்கள் தங்கள் வயல்களுக்குத் திரும்பியபோது தாக்கப்பட்டனர். இதன் மூலம் அவர்களது  மீள்குடியேற்றத்தைத் தடுத்தனர். பதிலுக்குத்  தமிழ்ப் போராளிகள் இலங்கை இராணுவம் மற்றும் சிங்கள குடியேற்றவாசிகளைத் தாக்கினர். இதில் பலர்   கொல்லப்பட்டனர்.  மற்றும் பலர் இடம்பெயர்ந்தனர்.  பெப்ரவரி 1985 நிலவரப்படி, கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், அலம்பில், நாயாறு, செம்மலை, குமுழமுனை, ஆண்டாங்குளம், ஆறுமுகத்தான்குளம், முறிப்பு, தென்னைமரவாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 10,000 தமிழ் மற்றும் முஸ்லிம் அகதிகள் முல்லைத்தீவில்¹³உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அந்தக் காலத்துப்  பத்திரிகைச்  செய்திகள், சிங்களக்  குடியேறிகளுக்கு, குறிப்பாக கொக்கிளாய் மற்றும் நாயாறுவில் இடமளிப்பதற்காக,  அவர்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறின.¹⁴

மிழர்கள் தமது வரலாற்றுத் தாயகம் என்று உரிமை கொண்டாடும் வடக்கு மற்றும்  கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்களின் இருப்புக் குறைந்துவிடக் கூடாது என்பதில் சிறிலங்கா அரசு உறுதியாக உள்ளது.  உண்மையில் தென்னிலங்கைச்  சிங்களவரின் புதிய குடியேற்றங்களை நிறுவுவதன் மூலம் இப்பகுதியில் சிங்களவர்களின் சதவிகிதத்தை  அதிகரிக்க அவர்கள் முன்மொழிகின்றனர். புதிதாகக் குடியேறுபவர்களுக்கும் ஆயுதம், ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்படும். அவர்கள் அநேகமாகச் சிறைச்சாலைகளில் இருந்து கொண்டுவர வாய்ப்புள்ளது. ஈழம் என்ற பெயரில் சுதந்திரம் பெற விரும்பும் பகுதிகளின்  ஒருமைப்பாட்டுக்கு இது ஒரு அச்சுறுத்தல் என்பதை உணர்ந்துள்ள தமிழர்கள், இந்த முன்மொழிவுகளை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக உள்ளனர்.

The Times, 13 February 1985

“டிசெம்பர் 28, 29: கொக்குத்தொடுவாய் மற்றும் கொக்கிளாய் ஆகிய இடங்களைச் சேர்ந்த ஆறு தமிழ்ப் பெண்கள் முல்லைத்தீவு அகதி முகாமை அடைந்தனர். இராணுவத்தினரால் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக முறைப்பாடு அளித்தனர். முல்லைத்தீவுக் பகுதியில் 21 தமிழ் அகதிகள் முகாம்கள் உள்ளன. அவை அனைத்தும் பாதுகாப்புப் படைகளால் தங்கள் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டவர்கள்.

Tamil Times, February 1985

தென்னிலங்கை  மீனவர்களும் அவர்களது குடும்பங்களும் கரையோரத்தில் குடி யமர்த்தப்பட்ட நிலையில், சிங்கள மீனவர்களில் சிலருக்கு கடந்த காலத்தில் விவசாய நோக்கங்களுக்காக தமிழ் விவசாயிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. 1985 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி ஜெயவர்தனவிற்கு அமைச்சர் தொண்டமான் எழுதிய கடிதத்தின்படி, இது கடற்றொழில் அமைச்சு  மற்றும் பாது காப்புப் படைகளின் அறிவுறுத்தல்களின் பேரில் இது நடந்தது. ¹⁵   மேலும், நாயாறு மற்றும்  கொக்கிளாயில் உள்ள சிங்கள மீனவர்களுக்கு நீர்கொழும்பில் உள்ள பாதுகாப்புப் படையினரால் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டது. 1985 ஜனவரி 15 அன்று அமைச்சர் லலித் அத்துலத்முதலி இந்தக் குடியேற்றங்களுக்கு பயணம் மேற்கொண்டு இந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு இப்பகுதிகளில் குடியேறியவர்வர்களுக்கு மேலும் நிதி மற்றும் பொருள் ஊக்குவிப்புகள் வழங்குவதற்கு வழி வகுத்தார். ¹⁶

2009 ஆம் ஆண்டு ஆயுத மோதல் முடிவுக்கு வந்ததிலிருந்து, இடம்பெயர்ந்த பின்னர் திரும்பிய தமிழர்களுக்கும் சிங்கள குடியேற்றக்கார்களுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. அவர்களில் சிலர் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்து தங்கள் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.   உள்ளூர் தமிழர்கள் முக்கியமாக பவுத்த கட்டமைப்புகளின் பெருக்கம், அதிக இராணுவ பிரசன்னம், சிங்கள மீனவக் குடும்பங்கள் தமது காணிகளில் அரசால் நிரந்தரமாகக் குடியமர்த்தப்படுவது குறித்து உள்ளூர்த் தமிழர்கள் முக்கியமாகப் புகார் கூறுகின்றனர். பெரும்பாலும் சட்டவிரோதமாக தமிழ் நிலங்களை ஆக்கிரமிப்பது அந்த இடத்தின் சமூக அமைப்புகளை கணிசமான மாற்றத்திற்கு கொண்டு ஆக்கியுள்ளது. தமது சொந்த நிலங்களில்  மீள்குடியேற்றப்பட்ட அந்தத்  தமிழர்கள்  அடிப்படை வசதிகளான வீடு, சுகாதாரம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு வழியில்லாமல் தவித்தனர். ¹⁷  கூடுதலாக, இராணுவத்தின் ஆதரவுடன் சிங்கள பவுத்த துறவிகளால் நடத்தப்படும் மத அடக்குமுறை, மக்கள் மத்தியில் கோபத்தை அதிகரித்துள்ளது. (

அலம்பிலுக்கும் கொக்கிளாய்க்கும் இடையில் குறைந்தது ஏழு இராணுவ முகாம்களும் ஐந்து கடற்படை முகாம்களும் உள்ளன.

அலம்பிலில்  விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் நினைவு இல்லம் இருந்த இடம் தற்போது இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர் இது நிலத்தகரி (bulldozer)  மூலம் இடிக்கப்பட்டது. இன்று அந்த இடம் சிங்க படைப்பிரிவின்  24 ஆவது படையணியின் தலைமையகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  மேலும் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்ட ஒரு “பலசரக்குக் கடை”  படையினரால் நடத்தப்படுகிறது. முகாமுக்கு வெகு தொலைவில் உள்ள கடற்கரையில், படையணி “Green Jackets Resort” என்ற விடுமுறை விடுதியை நடத்தி வருகிறது.

மேலும் கரையோரமாக, நாயாறு கிராமத்தில், கெமுனு கண்காணிப்பகத்தின் 19 ஆவது படையணிகளின்  இரண்டு முகாம்கள் உள்ளன.  ஒன்று உள்ளூர் தமிழ் மக்களால் சர்ச்சைக்குரிய ஒரு பவுத்த கோயில் இடத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது (பவுத்தமயமாக்கலைப் பார்க்கவும்.)  (See Buddhisization). 593 ஆவது படையணி இங்கும் ஒரு பெரிய பகுதியை ஆக்கிரமித்துள்ளது, அதன் வளாகத்தில் ஒரு புத்தர் சிலை உள்ளது.

கொக்குத்தொடுவாய் வடக்கில் மணல் ஆறு / வெலிஓயா மற்றும் முல்லைத்தீவு/கொக்கிளாய் செல்லும் வீதிகள் சந்திக்கும் சந்தியில் பாரிய இராணுவ வளாகம் ஒன்று காணப்படுகின்றது. இங்கு கெமுனு கண்காணிபகத்தின் 19 ஆவது படைப்பிரிவு அதன் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.  மற்றும் ஒரு கேன்டீன் மற்றும் எரிபொருள் நிலையத்தை இயக்குகிறது. சிறப்புப் படையின் 2 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அருகிலேயே உள்ளதுடன், பயிற்சிப் பள்ளியையும் நடத்தி வருகிறது.

கருநாட்டுக்கேணியில் கெமுனு கண்காணிப்பகத்தின் 19 ஆவது படையணி முகாம் ஒன்றை நடத்தி வருகின்றது. கிராமத்தின் முக்கிய வீதியில் இராணுவ முகாம்களும் அமைந்துள்ளன. செம்மலை, நாயாறு, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தது 5 கடற்படைப் பிரிவுகளும், கொக்கிளாய் பகுதியில் 2 கடற்படைப் பிரிவுகளும் உள்ளன.

பவுத்தமயமாக்கல்

கொக்கிளாய் தனியார் தமிழர் காணியில் அழிக்கப்பட்ட இந்து ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பவுத்த  விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் இப்பகுதியில் தமிழர்கள் அடிக்கடி வந்து செல்லும் வழிபாட்டுத் தலமாக விளங்கியது. செம்மலைக்குச் செல்லும் தமிழர்கள் பயணம் செய்வதற்கு முன்பு அந்த ஆலயத்தில் நின்று பிரார்த்தனை செய்வார்கள்.

ஆயுதப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து செம்மலை, நீராவியடியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு, அதன் பின்னர் பவுத்த சிலை ஒன்றும் நிறுவப்பட்டது. இடம்பெயர்ந்த தமிழர்கள் 2012 ஆம் ஆண்டில் செம்மலைக்குத் திரும்பியபோது,  இந்த இந்து ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். பவுத்த விகாரையின் நிர்மாணப் பணிகளைத் தொடங்குவதற்கு இராணுவத் தளபதிகளினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 593 ஆவது படைப்பிரிவின் தளபதி பவுத்த  விகாரையை நிறுவுவதற்கு  அனுமதியளித்ததுடன் அதற்கு குரு கந்த இரஜமஹா விகாரை எனப் பெயரிட்டார். 

கொக்கிளாய் தனியார் தமிழர் காணியில், அழிக்கப்பட்ட இந்து கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் பவுத்த  கோவில்.
கொக்கிளாய் தனியார் தமிழர் காணியில், அழிக்கப்பட்ட இந்து கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் பவுத்த  கோவில். 

நீராவீயடிப் பிள்ளையார் சன்னதியானது இப்பகுதியில் தமிழர்கள் அடிக்கடி வந்து செல்லும் வழிபாட்டுத் தலமாக விளங்கியது. செம்மலைக்குச் செல்லும் மற்றும் திரும்பும் தமிழர்கள் பயணம் செய்வதற்கு முன்பு ஆலயத்தில் நின்று பிரார்த்தனை செய்வார்கள்.¹⁸

பவுத்தம்

கொக்கிளாய் தனியார் தமிழர் காணியில் அழிக்கப்பட்ட இந்து ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பவுத்த  விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
கொலம்ப மேதாலங்கார தேரர் என்ற பவுத்த  பிக்கு, முதலில் தமிழ் இந்து ஆலயம் இருந்த இடத்தில் தற்போது வாழ்ந்து வருகிறார். ¹⁸ இந்த இடம் முதலில் ஒரு பெரிய பவுத்த வளாகத்தின் தாயகமாக இருந்ததாகவும், அதன்மேல் தமிழ் ஆலயம் கட்டப்பட்டதாகவும் தேரர் கூறுகிறார். எவ்வாறாயினும், 2018 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு கடல்சார் பற்று பிரதேச செயலகத்தின் பதில், அந்த இடத்தில் பவுத்த  விகாரைகள் எதுவும் இல்லை என்றும், இந்தப் பகுதியில் பவுத்தர்கள் யாரும் வசிக்கவில்லை என்றும் காட்டுகிறது. பவுத்த விகாரையை நிர்மாணிப்பதற்கு முன்னர் எவ்வித அனுமதியும்  கேட்கப்படவில்லை என பிரதேச செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.²⁰

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, 2019 மே மாதம் இரண்டு மத வழிபாட்டுத் தலங்களும் நம்பிக்கை அடிப்படையிலான நடவடிக்கைகளில் சமமாக பங்கெடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ²¹  எனினும் இந்த முடிவை சிங்கள பவுத்த  தேரர் ஏற்கவில்லை.  யூன் மாதம் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க சிங்கள பவுத்த  பக்தர்களை அழைத்து வந்தார். இதன் எதிரொலியாக இந்த ஆண்டு யூலை மாதம் நடைபெற்ற நீராவியடி ஆலயத்தின் “எதிர்ப்புத் திருவிழாவில்” கலந்து கொள்வதற்காக தமிழர் தாயகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடினர்.²²

தற்போது பிள்ளையார் சன்னதி பவுத்த  வளாகத்தின் வெளிப்புறத்தில் ஒரு சிறிய இடத்தில் அமைந்துள்ளளது. தமிழர்கள் இருப்பிடத்தை அணுக முடியும் என்றாலும் பவுத்த தேரர் மற்றும் இராணுவத்துடனான பதட்டங்கள் தொடர்கின்றன. உள்ளூர் சமூகம் தொடர்ந்து காணிகளை மீள வழங்குமாறு தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்து வருகிறது.²³

A Buddhist temple under construction on the site of a destroyed Hindu temple, on private Tamil land in Kokkilai.

கொக்கிளாய்²⁷  பகுதியில் அமைந்துள்ள அரசடிப் பிள்ளையார் இந்து ஆலயம் யுத்தத்தின் போது அழிக்கப்பட்டது. அதன் இடம் – உள்ளூர் மருத்துவமனைக்கும் தபால் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள நிலத்தில் – ஒரு பவுத்த கோயிலை அமைக்கப்  பயன்படுத்தப்பட்டது.²⁴  2015 ஆம் ஆண்டில் சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராக நிலத்தின் உரிமையாளர் டி.மன்னிவனதாசன் வழக்குத் தொடர்ந்தார், இது 2015 இல் உறுதி செய்யப்பட்டது. சட்டவிரோத நிர்மாணத்தின் பின்னணியில் உள்ள பவுத்த பிக்குவுக்கு எழுதிய கடிதத்தில், ²⁴ இந்த வழக்கு தீர்க்கப்படும் வரை அனைத்து கட்டுமானங்களையும் நிறுத்துமாறு பிரதேச செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். இருந்தபோதிலும், பவுத்த  விகாரையின் நிர்மாணப் பணிகள் இடையிடையே தொடர்கின்றன.²⁵

Sinhala fishing settlement in Kokkilai

சிங்களக் குடியேற்றங்கள்

எண்பதுகளில் கொக்கிளாய் பகுதியில் இருந்து தமிழர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின்னர், தெற்கில் இருந்து குடியேறிய சிங்கள குடியேற்றவாசிகள் மேலும் நிரந்தரக்  குடியேற்றங்களை ஏற்படுத்தினர். 2011 ஆம் ஆண்டில், ஆயுத மோதல்கள் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மக்கள் திரும்பி வந்தபோது, கொக்கிளாய் முனையில் அமைந்துள்ள  முகத்துவாரம் பகுதி முற்றிலும் சிங்களவர்களால் குடியேற்றப்பட்டிருப்பதைக் கண்டனர். தமிழ் மீனவர்கள் தமது வியாபாரத்தில் ஈடுபட முற்பட்ட போது,  சிங்கள மீனவர்கள், தேரர்கள்  மற்றும் காவல்துறையினால் அவர்களின் உபகரணங்களை அழித்தது உள்ளிட்ட துன்புறுத்தலுக்கு முகம் கொண்டனர்.

2018 ஆம் ஆண்டில், கொக்கிளாய் கரையோரப் பகுதிக்கான சிங்கள மீனவர்களின் கோரிக்கையை தோற்கடித்து, தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளைத்  திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.²⁷ நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், உள்ளூராட்சி மன்றங்களை விட அதிக அதிகாரங்களைக் கொண்ட மகாவலி அதிகாரசபையும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் தொடர்ந்து அனுமதிகளை வழங்கி சிங்கள மீனவக் குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டங்களை வழங்கி வந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் த. இரவிகரன் உள்ளிட்ட உள்ளூர் தமிழ் அரசியல்வாதிகள் இந்த நகர்வுகளைக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.²⁷ இதற்கிடையில், குடியேற்றங்களுக்கான மேலதிக நிலங்களை அபகரிக்கும் அரசாங்க நகர்வுகளை தமிழர்கள் தொடர்ந்தும் தடுத்து வருவதால், சிங்கள பவுத்த பிக்குகள் இப்பகுதியை சிங்கள மயமாக்குவதற்கு தொடர்ந்தும் அழைப்பு விடுத்து வருகின்றனர். ²⁹

உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, அண்ணளவாக 500 சிங்களக்  குடும்பங்கள் தற்போது இப்பகுதியில் குடியேறியுள்ளன. கொக்கிளாய் முகத்துவாரம் மிகப் பெரிய சிங்களக் குடியேற்றமாக இருந்தாலும், நாயாறு, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட கரையோரங்களில் மேலும் நிரந்தரக் (சிங்கள) குடியேற்றங்கள் உள்ளன. இருப்பினும் பருவகால இடம்பெயர்வு இன்னும் நிகழ்கின்றன.³⁰

முடிவுரை

“எந்தவொரு தலையீடும் இல்லை என்றால், சேதம்… மீளமுடியாததாகவும், சரிசெய்ய முடியாததாகவும் இருக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் 2014 இல்

 பேசும்போது³¹ “கொக்கிளாய் பிரதேசம் பல தசாப்தங்களாக இரு இனங்களுக்கும்  இடையில் இழுபறி நடந்து  வருகிறது. சிங்கள மீனவக் குடும்பங்களின் பருவகால இடம்பெயர்வு சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பல சிக்கல்கள் இல்லாமல் நிகழ்த்தாகத்  தோன்றினாலும், குடியேற்றத் திட்டங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட அரசின் அதிகரித்து வரும் அடக்குமுறைக் கொள்கைகள் இந்தப்  பகுதியை வடகிழக்கில் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாக மாற்றியுள்ளன. சிங்கள மீனவக் குடும்பங்கள் பெரும்பாலும் அண்மைக்காலத்தில் குடியேறியவர்களாக இருந்தாலும், பல தசாப்தங்களாக இப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் இதில் அடங்குவர். 

எண்பதுகளில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ஆயுதப் படைகளால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு மற்றும் படுகொலைகள், மதத் தலங்களின் தற்போதைய ஆக்கிரமிப்பு, இப்பகுதியை பவுத்த மயமாக்குதல் மற்றும் நடந்து வரும் நில அபகரிப்புகள் வரை, இலங்கை அரசு இந்தப் பிராந்தியத்தை சிங்களமயமாக்கும் தனது திட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது – இது வெற்றி பெற்றால், அருகிலுள்ள தமிழ் பேசும் பகுதிகளுக்கு இடையில் ஒரு பிளவை ஏற்படுத்தும்.  எவ்வாறாயினும், பாரம்பரியமாக தமிழர் தாயகம் என்று உரிமை கொண்டாடப்படும் தமிழ் பேசும் பகுதிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும்.  எவ்வாறெனினும், உள்ளூர் தமிழ் சமூகம் இந்த நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் தயாராக இருப்பதை மீண்டும் மீண்டும் எண்பித்துள்ளது.

சிங்களமயமாக்கல் முயற்சிகளை நிறுத்துவதற்கான அவர்களின் அழைப்பின் அவசரம் செவிசாய்க்க வேண்டும். அண்டைய கிராமமான புல்மோட்டையுடன் இணைந்து, இப்பிரதேசம் தமிழ் பேசும் மக்களுக்கு மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பொருளாதார அடிப்படையில் சாத்தியமான பிரதேசமாகும். சிங்கள மயமாக்கலின் அழுத்தம் இங்கு கூர்மையாக உணரப்படுகிறது. அந்தச் சிங்களக் குடியேற்றக் குடும்பங்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தமிழர்களின் குறைகளுக்கு அர்த்தமுள்ள தீர்வு இல்லாமல், மேலும் மோதல் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்  தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. (முற்றும்)

(இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் Pearl என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. அதனை  https://pearlaction.org/sinhalization-of-the-north-east-kokkilai/ என்ற இணையதள முகவரியில் படிக்கலாம். தமிழாக்கம் நக்கீரன்)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply