புதிய அரசியலமைப்பு ஏன் அவசியம்?
எமக்குப் பல ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கலாம். அரசியலமைப்பிற்கு இவற்றில் ஒன்றையாவது சாத்தியமாக்க முடியுமா? நாம் எதிர்நோக்கும் ஒரு சில பிரச்சினைகள் பின்வருமாறு:
அரசியலமைப்பிற்கு எமக்கு சிறந்த உணவை வழங்க முடியுமா?
நோய்வாய்ப்படும்போது எம்மை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க முடியுமா?
பாடசாலைக்குச் சென்று பிள்ளைகளுக்கு கற்பிக்க முடியுமா?
ஒரு வீட்டைக் கட்டிக்கொடுக்க முடியுமா?
தகுதியான தொழில் ஒன்றை வழங்க முடியுமா?
உயிர்வாழ்வதற்குத் தகுதியான ஒரு சுற்றாடலை உருவாக்க முடியுமா?
அனர்த்தத்தின் போது உதவ முடியுமா?
கள்வர்களினதும் பகைவர்களினதும் தொந்தரவுகளில் இருந்து எம்மைக் காக்க முடியுமா? எதிர்கால பிள்ளைகளைப் பேணிப் பாதுகாக்க முடியுமா? வயோதிபர்களைப் பராமரிக்க முடியுமா?
வலதுகுறைந்தோரைப் பேணிப் பாதுகாக்க முடியுமா? பௌத்த கோயிலுக்கு இந்து கோயிலுக்கு தேவாலயத்திற்கு பள்ளிவாசலுக்குச் சென்று சமய வழிபாட்டில் ஈடுபட முடியுமா?
அரசியலமைப்பு எமக்கு உதவ முடியுமா? முடியாது! என்பது எமது நேரடியான பதிலாகும்.
ஆனால் உணவு உடைகள் வீடமைப்பு வசதிகள் சுகாதாரம் கல்வி கலாசாரம் என்பவற்றை நியாயமான முறையில் பெறுவதற்கு அவசியமான அமைப்பை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான அனைத்து அதிகாரங்களும் அரசியலமைப்பின் மூலமே கிடைக்கிறது. மேற்படிஅதிகாரம் அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு நியாயமாகவும் பக்கச்சார்பின்றியும் அரசாங்கம் வழங்க வேண்டும்.
அப்போது அதன் விளைவுகள் எவ்வாறு அமையும்?
ஓர் ஒழுங்குமுறையில் தயாரிக்கப்பட்ட அமைதியான சமூகம் உருவாகும்.
தனி நபரினதும் மக்கள் பிரிவினரதும் உரிமைகள் பேணப்பட வேண்டும்.
நாட்டின் வளங்கள் உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்படுவதன் மூலம் அதன் விளைவுகளை அனைவரும் உயர்மட்டத்தில் பயன்படுத்துவர்.
நாட்டின் பொருளாதாரத்தோடு மக்கள் வாழ்வு நன்றாக அமைய வேண்டும்.
மறுபுறம்
ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்கள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றனர். உடலுக்கும் உயிருக்கும் பாதிப்பு ஏற்படுதல் தடைசெய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களின் நல்வாழ்விற்குப் பதிலாக தனிநபர்கள் நன்மை பெறும் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராகச் செயற்படுவதற்கு குடிமகன் தூண்டப்படுகிறார்.
அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஒன்று உண்டு. அதாவது அரசு அரசாங்கத்திற்கு உரித்தான ஒரு சொத்து அல்ல. அது பொதுமக்களுக்கு உரித்தான
ஒரு கருவியாகும்.
அரச அதிகாரம் அரசாங்கத்திற்கு உரிய ஆயுதமல்ல. நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரித்தான ஒரு கருவியாகும். அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துகையில் அரசியலமைப்பு அது தொடர்பான அடிப்படை ஒழுங்கு விதிகளைக் குறித்துரைக்கிறது. அதிகாரம் கிடைக்கும் வழிமுறை அதிகாரத்தைப் பரிமாற்றம் செய்தல் மக்களுக்கு வகைப்பொறுப்புக் கூறுதல் என்பனவே அவை.
அரசியலமைப்பு தான்தோன்றித்தனமான ஆட்சியின் மறுபக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சமூகத்தை ஒடுக்குபவன் தானே சட்டமாக மாறுவதை அரசியலமைப்பு தடுத்து நிறுத்த வேண்டும்.
சகல அதிகாரங்களையும் கொண்ட ஓர் ஆட்சியாளன் உருவாவதை தடுக்க வேண்டும். ஆட்சியாளனுக்கு அடிபணியும் பாராளுமன்றம் உருவாதல். இராணுவ ஆட்சி உருவாவதை அரசியலமைப்பு தடுக்க வேண்டும்.
அதிகாரம் கொண்ட அனைத்து ஆட்சியாளர்களும் பொதுமக்களுக்கு வகைப்பொறுப்புக் கூற கடமைப்பட்டு உள்ளனர். மேற்கூறிய விடயங்கள் காரணமாக எமக்கு ஓர் அரசியலமைப்பு கட்டாயம் தேவை.
அரசியலமைப்பு என்றால் என்ன?
ஒவ்வொரு நாட்டிற்கும் ஓர் அரசு உண்டு. அந்த அரசைக் கொண்டு நடத்துவதற்கு ஒரு அரசாங்கம் நியமிக்கப்படுகிறது. அரசாங்கம் அமுலாக்க வேண்டிய கொள்கைகள் செயற்படுத்தும் முறை அதற்கான
நிறுவனங்கள் என்பவை விபரிக்கப்படுவதோடு மறுபுறம் மக்களின் உரிமைகளை எடுத்துக்கூறும் ஆவணம் அரசியலமைப்பாகும். அது நாட்டின் மிக உன்னதமான சட்டமாகும். ஆகையால் அதனை மாற்றியமைப்பதாயின் பாராளுமன்ற உறுப்பினர்களின் 2/3 வாக்குகள் மூலமும் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு மூலமும் அது அமுலாக்கப்படும். இந்த அடிப்படைச் சட்டத்தை அமுலாக்குவதற்கு சட்டரீதியான அரசியல் ஆணைகள் சட்டங்கள் ஒழுங்கு விதிகள் என்பனஅங்கீகரிக்கப்படுகின்றன.
மேற்படி அரசியலமைப்பை யார் அனுசரித்தல் வேண்டும்?
அனைவரும் அனுசரித்தல் வேண்டும். சட்டங்களை நிறுவும் நிறுவனங்கள் உட்பட ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் குடிமக்களும் அரசியலமைப்பை அனுசரித்தல் வேண்டும்.அரசாங்க நிறுவனங்கள் குடிமக்களின் உரிமைகள்அரசியற் கொள்கைகள் என்பன செயற்படுத்தப்படும் வழிமுறை இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி செயற்பாட்டிற்கான பரந்துபட்ட மக்கள்அங்கீகாரத்தைப் பெறுவதன்மூலம் அதற்கானசட்டபூர்வமான தன்மை கிடைக்கிறது. மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதன்மூலமும் மனித உரிமைகள் மூலமும் சர்வதேசக் கொள்கைகள்செயற்படுத்தப்படுகின்றன. அரசியலமைப்பின் மூலம் உள்நாட்டவர்கள் யார் நாட்டைச் சாராதவர்கள் யார் என விபரிக்கப்படுகிறது. நாட்டின் எல்லை பிரஜா உரிமை என்பன மூலம் அரசியல் மக்கள் சமூகம் அடையாளப்படுத்தப்படுகிறது.
நாட்டின் இறைமை யாருக்கு உண்டென குறித்துரைக்கப்படுகிறது. அனேகமாக பொதுமக்களுக்கே இறைமை உண்டு என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் அதிகாரமும் அதன் இயல்பும்
அடிப்படைக் கொள்கைகளும் பொதுவான அபிலாஷைகளும் குறித்துரைக்கப்படுகின்றன.
எம்மவர் எமது விழுமியங்கள் என்பன குறித்துரைக்கப்படுவதற்கான சின்னங்கள் உண்டு. அவை: தேசியக் கொடி தேசிய கீதம் என்பனவாகும். பொதுவான குணநலன்கள் வெளிப்படுத்தப் படுகின்றன. ஐக்கியம் பரஸ்பர நட்பு சமத்துவம் என்பனவே அவை. குடிமக்களின் உரிமைகளும் கடமைகளும் குறித்துரைக்கப்படும் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயமும் அது அமுலாக்கப்படும் வழிமுறையும் குறிப்பிடப்படுகின்றது.
அதேசமயம் மேற்படி உரிமைகளுக்கு உரிய மட்டுப்பாடுகள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றன. ஜனநாயக சமூகத்தில் இருக்க வேண்டிய சிவில் மற்றும் அரசியல் உரிமை பாதுகாக்கப்படுவது வெளிப்படுத்தப்படுகிறது. உதாரணம்: சிந்தனைச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், சங்கங்களை நடத்தும் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி வழிமுறை சட்டத்திற்கு எதிராக கைதுசெய்யப்படுதல் சட்டவிரோதமானதண்டனைகளில் இருந்து சுதந்திரம் சமூக பொருளாதார கலாசார உரிமைகள் என்பன.
அரசியலமைப்பில் குறித்துரைக்கப்படுகின்றன. சில உரிமைகள் குடிமக்கள் அல்லாதோருக்கும் உண்டு. அதாவது சித்திரவதைகளுக்கு ஆளாகாமை. மக்களின் அரசியற் செயற்பாட்டிற்கு அவசியமான சுதந்திரத்தைப் பாதுகாத்தல் அரச நிறுவனங்களின் செயற்பாடு அதிகாரத்தை எடுத்துரைத்தல் சட்டம் இயற்றும் அமுலாக்கம் வழிமுறை நீதித்துறையின் செயற்பாடு என்பனஅரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசியல் நேர்மையை எடுத்துக்கூறும் வகையில் தேர்தல் முறைமை என்பன ஆணைக்குழுவில் விபரிக்கப்பட்டுள்ளன. அதிகாரத்தைப் பயன்படுத்துவோரின் நேர்மை வகைப்பொறுப்பு கணக்காய்வுச் செயற்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழு ஒம்பட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி) எவ்வாறு உரிமைகளைப் பாதுகாக்கின்றார் என்பதும் குறித்துரைக்கப்படுகிறது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வோர் எவ்வாறு பதவியில் இருந்து நீக்கப்படுவர் எனவும் குறிப்பிடப்படுகிறது.
உதாரணம்: குற்றப்பிரேரணை அல்லது வேறு வழிமுறைகள் மூலம் அதிகாரம் எவ்வாறு பகிரப்படுகிறது என்பது மிக முக்கியமான அம்சமாகும். மாகாணங்களுக்கு பிரதேசங்களுக்கு எவ்வாறு அதிகாரம் கையளிக்கப்படுகிறது என விபரிக்கப்படுகிறது.
அதாவது மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கும் எவ்வாறு அதிகாரம் பகிரப்பட்டுள்ளது என்றும் விபரிக்கப்பட்டுள்ளது. மொழி இனத்துவம் கலாசாரம் என்பவற்றிற்கு அமைய பிரதேசங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அரசகரும மொழி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் முறையும் விசேட சமூக பொருளாதார இலக்குகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு ஒரு சட்ட ஆவணமாக நீதியை நிலைநாட்டுவதற்கு அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது எனக் குறித்துரைக்கப்படுகிறது. அதிகாரம் இதில் குறிப்பிட்டுள்ளவாறு மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும். அதாவது எல்லோருக்கும் பகிரங்கமாகத் தெரியக்கூடிய வகையில் தனிநபரைவிட சட்டத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பு ஒரு சமூகப் பிரகடனமாக சமூகத்தை வழிநடத்தும் முறை இங்கு களும் மக்களின் அபிலாஷைகளும் குறிப்பிடப்படுகின்றன. முகவாசகம் அணிந்துரை கொள்கைகள் கோட்பாடுகள் முதுமொழிசள் சத்தியப்பிரமாணம் செய்யும்போது அனுசரிக்க வேண்டிய வழிமுறைகள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. சமூக-பொருளாதார-கலாசாரக் கொள்கைகள் கல்வி சுகாதாரம் மொழிப் பயன்பாடு என்பவற்றின் மூலம் இவை வெளிப்படுத்தப்படுகின்றன.
அரசியலமைப்பு ஓர் அரசியல் உடன்படிக்கை என்ற வகையில் அதி உயர் அதிகாரம் மற்றும் தீர்மானங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் என்பன அறிமுகப் படுத்தப்படுகின்றன. அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டு
தீர்மானங்களை மேற்கொள்ளும் வழிமுறைகள் தொடர்ச்சியாக அரசியல் போராட்டம் நிலவும் வழிமுறை என்பனவும் குறித்துரைக்கப்படுகின்றன. எதிரக்கட்சிகள் மூலமும் அரசியற் கட்சிகள் மூலமும் இவை அமுலாக்கப்படும் அரச நிறுவனங்கள் பாராளுமன்றம் நிறைவேற்று அதிகாரம் நீதிமன்றங்கள் அரச தலைவர் பிரதேச அரசாங்கங்கள் சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் அவற்றிற்கு இடையே உள்ள உறவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் அரசியலமைப்பை ஒழுங்குபடுத்துகையில் பின்வரும் அடிப்படை அம்சங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
-
முகவாசகம்
ஆட்சியின்போது நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய மிகப் பரந்துபட்ட குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளைக் குறிக்கும் கூற்று. சிலசமயம் முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் ஒரு தேசம் என்ற வகையில் இருக்க வேண்டிய அடையாளங்கள் விழுமியங்கள் பற்றியும் குறிப்பிடப்பட வேண்டும். -
முதலில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்கள் முதலில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் அதாவது இறைமை அல்லது நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் யார்? (ஜனநாயக அரசியலமைப்புக்களில் பொதுமக்களே பிரதானமானவர்கள் என குறிப்பிடப்படும்) அரசின் பெயர் நாட்டின் எல்லை குறிப்பிடப்பட வேண்டும். பிரஜா உரிமை வாக்குரிமை என்பனவும் குறித்துரைக்கப்படும். அரசின் கண்ணோட்டம் விழுமியங்கள் குறிக்கோள்கள் என்பனவும் குறிப்பிடப்பட வேண்டும்.
-
அடிப்படை உரிமைகள்ஓர் பட்டியலில் அடிப்படை உரிமைகள் குறிப்பிடப்படவேண்டும். அவற்றை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டுமென்பதும் அவை செயற்படும் வழிமுறையும் அவசரகால நிலைமைகளின்போது அடிப்படை உரிமைகள் எந்த வகையில் இடைநிறுத்தம் செய்யப்படும் என்பதும் குறித்துரைக்கப்பட வேண்டும்.
-
சமூக – பொருளாதார உரிமைகள் மற்றும் கொள்கைகள் தொடர்பான பரிந்துரைகள் அனைவருக்கும் உணவு உடைகள் வீடமைப்பு வசதிகள் சுகாதாரம் கல்வி கலாசாரத் தேவைகள் என்பவற்றை நியாயமான முறையில் பெறக்கூடிய வகைகள் குறித்துரைக்கப்பட வேண்டும்.
-
பாராளுமன்றம் அல்லது சட்டவாக்கச் சபை பாராளுமன்றம் உருவாக்கப்படும் முறை அதன் உள்ளடக்கம். பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் சிறப்புரிமைகள் நடவடிக்கை முறைமை என்பன குறிப்பிடப்படும்.
-
அரசத் தலைவர் அரசத் தலைவர் தெரிவு செய்யப்படும் வழிமுறை அவருடைய அதிகாரங்கள் பதவிக்காலம் என்பன குறித்துரைக்கப்படும்.
-
அரசாங்கம் அரசாங்கம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது அதன்பொறுப்புக்கள் மற்றும் அதிகாரங்கள் பற்றிய விபரங்கள்.
-
நீதித்துறை நீதிமன்ற முறைமைகள் நீதிபதிகளை நியமிக்கும் முறை நீதித்துறையின் சுயாதீனம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் என்பன விபரிக்கப்படும்.
-
பிரதேச அரசாங்கங்கள்மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளின் அதிகாரங்கள் பற்றி விபரிக்கப்படும்.
-
அபிப்பிராய வாக்கெடுப்பு – அபிப்பிராய வாக்கெடுப்பு நடைபெறும் சந்தர்ப்பங்கள் மற்றும் நடைபெறும் வழிமுறை என்பன.
-
தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல்கள் ஆணைக்குழு ஒம்பட்ஸ்மன்,கணக்காய்வு நிறுவனங்கள் என்பன செய்ய வேண்டிய பணிகள் குறிப்பிடப்படுகின்றன.
-
பாதுகாப்பு அலுவல்கள் இராணுவ நடவடிக்கைகள் அல்லது படையினரிடம் ஒப்படைக்கப்படும் விடயங்களின் மட்டுப்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
-
விசேட குழுக்கள் – விசேட குழுக்கள் பற்றியது மொழிச்சட்டங்கள் விசேட நிறுவனங்கள் குறித்துரைக்கப்படுகின்றன.
-
திருத்தப்பட்ட நடவடிக்கைத் திட்டங்கள் திருத்தப்பட்ட நடவடிக்கைத் திட்டங்கள் அமுல்படுத்த வேண்டிய காலஎல்லை இடைக்கால சட்டதிட்டங்கள்குறிப்பிடப்பட்டுள்ளன. சில விடயங்கள் நேரடியாக அரசியலமைப்பில் குறிப்பிடப்படா விட்டாலும் அவை அரசியலமைப்பு ரீதியான கட்டளைகளைப் போலவே சத்திவாய்ந்தவையாக இருக்கலாம். ஒரு சில உதாரணங்கள் பின்வருமாறு:
தேர்தல் சட்டங்கள்
-
அரசியற் கட்சிகளின் வரவு-செலவுகள்
-
நீதிபதிகளை நியமனம் செய்வது பற்றிய ஒழுங்குவிதிகள்
-
நீதிமன்றங்களை ஏற்பாடு செய்தல்
-
சர்வதேச உடன்படிக்கைகளும் சமவாயங்களும்
-
பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள்
-
நீதிமன்றத் தீர்மானங்கள்இ இவை அரசியலமைப்பில் பொதுவில் உள்ளடக்கப்படும் விடயங்கள். இதற்கு மேலதிகமாக எமது நாட்டில் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்படுமேயாயின்
பின்வரும் துறைகளும் விரிவுபடுத்தப்பட வேண்டுமெனக் கருதுகிறோம்.
(அ) ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களை இல்லாதொழித்து பாராளுமன்ற நிறைவேற்று முறை உருவாக்கப்பட வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்கள் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்
கூறும் நிலைமை ஏற்பட வேண்டும்.
(ஆ) அதிகாரத்தைப் பகிர்வதற்குக் காரணமானஅர்த்த புஷ்டி உள்ள ஒரு வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்.
(இ) விருப்பு வாக்குமுறையை இல்லாதொழித்து புதிய தேர்தல் முறையை உருவாக்குதல் வேண்டும்.
(ஈ) மனித உரிமைகளை மேலும் வலுவ10ட்டி புதியதிருத்தங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் எவ்வாறு கருத்து தெரிவிக்க வேண்டும்? பொதுமக்கள் ஏற்கனவே அமுலில் உள்ள அரசியலமைப்பை வாசித்திருக்க வேண்டுமா? அதனை வாசித்திருத்தல் அல்லது தம்வசம் வைத்திருத்தல் அத்தியாவசியமாக மாட்டாது. அதனை கற்பவர்கள் கற்பதில் எதுவிதமான பிரச்சினையும் கிடையாது.
ஆனால் நாம் சிறந்த வாழ்க்கையை நடத்துவதற்கு அரசியலமைப்பு உதவுமென்பதை அறிந்திருத்தல் வேண்டும். அது சரியான முறையில் அமுல்படுத்தப்படுமேயானால் வாழ்க்கை இலகுவானதாக அமையும். தவறாக செயற்படுத்தப்பட்டால் அல்லது உரிய முறையில் செயற்படுத்தப்படாவிட்டால் அது பலரைப் பாதிக்கும். எதிர்கால சந்ததியினருக்கு அது ஆபத்தாகவே முடியும். இதனையே நாங்கள் அறிந்திருக்க வேண்டும்.
இவ் விடயங்களை நாம் எவ்வாறு அறிந்திருக்க வேண்டும்? நாடு பூராவும் பல விடயங்கள் தொடர்பானஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. நெல்லின் உத்தரவாத விலை, வீட்டு வசதிகள் இல்லாப் பிரச்சினை சுகாதாரப் பிரச்சி பாலங்களும் வீதிகளும் உடைந்து போனவர்களினதும் பகைவர்களினதும் தொந்தரவுகள் பிள்ளைகள்துஷ்பிரயோகத்திற்கு ஆளாதல் மனிதனுக்கும்
யானைகளுக்கும் இடையிலான மோதல்கள் நீர்ப்பிரச்சினை சுற்றாடலைப் பாதிக்கக் கூடிய பல்வேறு விடயங்களைப்பற்றி மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் அமைதியான எதிர்ப்பு இயக்கங்களை நடத்துகின்றனர்.
அவர்கள் அரசியலமைப்பை வாசித்து நன்கு உணர்ந்துகொண்டு செயற்படு வதில்லை. அரசியலமைப்பிற்கு ஏற்ப நடக்க வேண்டிய விடயங்கள் சரியான முறையில் இடம்பெறாமை காரணமாகவே எதிர்ப்பியக்கங்கள் நடைபெறுகின்றன. அரசியலமைப்பை உரியமுறையில் குறைவின்றி செயற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மேற்படி பொறுப்பு சரியான முறையில் செயற்படுத்தப்படாமை காரணமாகவே வீதிப்போராட்டங்கள் ஏற்படுகின்றன. எனவே அரசியலமைப்பு பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது மக்களின் பொதுவான தேவைகளை அறிந்து கருத்துத் தெரிவிக்க வேண்டும்.
கருத்துக்கள் எவ்வாறு தெரிவிக்கப்பட வேண்டும்?
பொதுக் கூட்டங்கள் கலந்துரையாடல்கள் சம்பாணைகள்எதிர்ப்பியக்கங்கள் உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள், பாத்திரமேற்று நடித்துக் காட்டல், கண்காட்சிகள் கட்டுரைகள் ஆவணங்கள்,சுவரொட்டிகள் பதாகைகள் துண்டுப்பிரசுரங்கள்நாடகங்கள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
இத்தகைய விடயங்களை அவதானித்துக் கொண்டிருப்பது கூட முக்கியமானது. இதன்மூலம் பொதுவான மனித உரிமைகளுக்காக ஒத்துழைத்தல் பங்குபற்றல் ஆகியவை பற்றி அரசியலமைப்புத் தொடர்பாக கருத்து தெரிவித்தல்.
இதற்கு மேலதிகமாக ஊடகங்கள் மூலம் அல்லது வேறு தொடர்பாடல் முறைமைகள் மூலம் கருத்துக்களைப் பெறமுடியும். அரசிலமைப்பைக் கட்டியெழுப்புதல் இன்று உலக பாடவிடயமாக மாறியுள்ளது. ஒவ்வொரு
நாட்டிலும் அரசியலமைப்பு பொதுமக்களுக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்று அதிக ஆர்வம் காட்டப்படுகிறது.
நாமும் இச் செயற்பாட்டின் பங்காளர்களாவோம். நாட்டில் முன்னர் நிலவிய பிரச்சினைகள் தொடர்ந்தும் நிலவினால் அல்லது புதிய பிரச்சினைகள்தோன்றுமேயானால் அரசியலமைப்பு புதுப்பிக்கப்பட வேண்டுமென்பதே கருத்தாகும். மறுபுறம் அதனை அமுல்படுத்துவோர் பழைய ஆட்களாக இல்லாமல் இருந்தால் அவர்கள் நற்பண்புகள் கொண்ட புதிய மனிதர்கள் என்றே பொருள்படும்.
எனவே புதிய அரசியலமைப்புக்கான எமது கருத்துக்கள் அத்தியாவசியமாகும். ஆனால் அது பழைய அரசியலமைப்பை புதிய சொற்களால் எழுதுவது அல்ல. எம்மைவிட சிறந்த வாழ்க்கையைப் பெறுவதற்கும் அமுல்படுத்தப்படும் சட்டதிட்டங்கள் மீது ஓர்அனுபவத்தைப் பெறுவதுமே இங்கு முக்கியமாகும்.
அரசியலமைப்பைத் தயாரிப்பது என்று சாதாரண மனிதர்கள் கருதுவது சாதாரண சட்டங்களை இயற்றுவதுஅல்ல. பொதுமக்களுக்குச் சார்பான தன்மையை அதன் குறிக்கோள்களாகவும் இயல்பாகவும் அமைய வேண்டும்.
அரசியலமைப்புப் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டுமென்பது அது தொடர்பாக இயற்றப்படும் சட்டங்களைப் பற்றியது அல்ல. அதன் குறிக்கோளும் இயல்பும் வித்தியாசமானவை.
இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஏன் அவசியப்படுகிறது?
உள்நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளும் உக்கிரமடைந்து சமூகம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றமைக்குக் காரணம்: ஆட்சியாளர்கள் அரசியலமைப்பையும் ஏனைய சில சட்டங்களையும் பயன்படுத்தி ஜனாதிபதி அதிகாரங்களை மேலும் அதிகரித்தமையினாலேயே ஆகும். தனிநபரின் அதிகாரம் கட்டியெழுப்பப்படும் அரசியலமைப்பு அவசியமில்லை. குடிமக்களை உருவாக்குவதே இதன் குறிக்கோளாக அமைதல் வேண்டும். அரசியலமைப்பில் குறிப்பிட்ட இனங்கள் அல்லது மதங்கள் அல்லது சிறுபான்மைக் குழுக்கள் என்பவற்றிற்கு குறைந்த அல்லது கூடிய கவனிப்பு செலுத்தக்கூடிய உறுப்புரைகள் இருக்கக் கூடாது.
இத்தகைய பாரபட்சமான கவனிப்பு 30 வருடகால யுத்தத்திற்கு பலம்வாய்ந்த காரணியாக அமைந்தது. மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் குறிக்கோளாக அமைய வேண்டும். அதேசமயம் அர்த்தபுஷ்டி உள்ள வகையில் அதிகாரத்தைப் பகிரும் ஒரு வழிமுறையை உருவாக்கி பாரபட்சமில்லாத வகையில் சிங்களம் தமிழ் முஸ்லிம் ஆகிய நாம் அனைவரும் சமாதானமாக வாழக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இன மத பேதங்கள் மோதல்கள் என்பவற்றைப் பயன்படுத்தி தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு இடமளிக்காத வகையில் புதிய தேர்தல் முறைமை சட்டமாக்கப்பட வேண்டும். அரச அதிகாரத்தை குவிமையப்படுத்துவதோடு தனி அதிகாரம் படைத்தவர் உருவானால் நாட்டின் அனைத்து மக்களினதும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. சர்வதேச சமவாயங்களை மீற முடியாதவகையில் மேற்படி உரிமைகள் இல்லாதொழிக்கப்படாதவாறு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாகவும் பொலிஸ் கட்டளைச் சட்டம் காரணமாகவும் மனித உரிமைகள் மீறப்படாத வகையில் அரசியலமைப்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். சிறுபான்மையினர் பெண்கள் சிறுவர்கள் வலதுகுறைந்தோர் மற்றும் வயோதிபர்கள் ஆகியோரின் உரிமைகளை உத்தரவாதம் செய்யக்கூடிய வகையில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பிற்கான தீர்மானம் எனக் கூறிக்கொண்டு எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கக் கூடாது. நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் ஏற்கனவே வாழ்ந்த வசிப்பிடங்களை பறிமுதல் செய்தல் அரச காணிகளை தமது தொழில் முயற்சிகளுக்காக ஈடுபடுத்துவதற்கு இருந்த வாய்ப்புக்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படக் கூடாது.
ஏற்கனவே அமுலில் உள்ள சட்டதிட்டங்கள் அதிகப்படியான வாக்குகள் காரணமாக மக்கள் மேலும் ஒடுக்கப்படுவதற்கான நடைமுறைகளாக குறித்துரைக்கும் நிலைமையை தடுக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்க வேண்டும்.இத்தகைய அரசியலமைப்பு உறுப்புரைகளை செயற்படுத்த முடியாத நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.
ஆக்கம்
எஸ்.ஜீ. புஞ்சிஹேவா
குழு அங்கத்தவர்கள்
பேராசிரியர் ஜயந்த செனவிரத்தன
ரோஹன ஹெட்டிஆரச்சி
கலாநிதி ஜெஹான் பெரேரா
கிறிஸ்டீன் பெரேரா
ஷான் விஜேதுங்க
நந்தன வீரரத்ன
மஹிந்த ரத்னாயக்க
விஷாகா தர்மதாச
கௌஷல்யா குமாரசிங்க
பீட்டர் ரசல்
நடேஷன் சுரேஷ்
பிரபாத் குமார
மனோரி களுகம்பிட்டிய
பிரபோத சிந்தக
லூவி கணேஷதாசன்
லஹிரு கித்தலகம
பிரியதர்ஷனீ ஆரியரத்ன
- https://www.vaaramanjari.lk/2017/07/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Leave a Reply
You must be logged in to post a comment.