தாயகத்திலும் புலம் பெயர் தேசத்திலும் மாவீரர்களிற்கு அஞ்சலி

தாயகத்திலும் புலம் பெயர் தேசத்திலும் மாவீரர்களிற்கு அஞ்சலி

நடராசா லோகதயாளன்.

NOVEMBER 27, 2022

விடுதலைப் போரில் தமது இன்னுயிரை ஆகுதியாகிய உன்னதர்களை இன்றைய தினம் தமிழ் மண் உணர்வெழுச்சியுடன் நினைவு கூர்ந்தது.

ஆம் ஆண்டு முதல் இறுதிப்போர் வரை விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை தியாகம் செய்தவர்களை தாயகத்திலே வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும் நினைவேந்தியதோடு புலம் பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் உணர்வெழுச்சியோடு கடைப்பிடித்தனர்.

m

யாழ்ப்பாணத்திலே கோப்பாய், கொடிகாமம், சாட்டி, உடுத்துறை எள்ளங்குளம்  துயிலுமில்லங்களிலும் பல்கலைக் கழகம், நல்லூர் வீதி , தீருவில், தமீழ் அரசுக் கட்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சியில் கனகபுரம், முழங்காவில் துயிலுமில்லங்களில் மிகப் பிரமாண்டமான மக்கள் எழுச்சியுடன் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில், முள்ளியவளை, ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், அலம்பில்,  உள்ளிட்ட இடங்களிலிலும் வவுனியாவில் ஈச்சங்குளம் துயிலுமில்லத்திலும் நகர சபை உள்ளக மண்டபத்திலும் இடம்பெற்றதோடு மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலுமில்லங்களிலும் இடம்பெற்றதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, வாகரை, கண்டலடி துயிலுமில்லங்களில் இடம்பெற்றதோடு தாண்டியடியிலும் இடல்பெற்றது.

இதேபோன்று திருகோணமலை ஆழங்குளம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லங்களிலும் நடைபெற்றன.

இவ்வாறு இடம்பெற்ற நினைவேந்தலில் கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் மிக அதிக உறவுகள் கலந்துகொண்டிருந்தனர். இதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தகாலத்தில் அதிக துயிலுமில்லங்கள் ஏற்பட்ட நிலையில் அனைத்து இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

தாயகத்திலும் புலம் பெயர் தேசத்திலும் மாவீரர்களிற்கு அஞ்சலி – படங்கள் இணைப்பு – LNW Tamil (lankanewsweb.net)

About editor 3015 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply